ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

அண்ணல் அம்பேத்கரின் இறுதி நாட்கள்


அண்ணல் அம்பேத்கரின் இறுதி நாட்கள்!

பத்து ஆண்டுகளாகவே பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உடல் நல்ல நிலையில் இல்லை. சிறிது காலம் குடல் அழற்சியினாலும், இரத்தக் கொதிப்பினாலும் வேதனைப் பட்டார். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் உடல் நிலையை மிகவும் பாதிக்கும் வகையில் நீரிழிவு நோயும் உருவாகியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவரின் நீண்ட நாள் போராட்டங்களும் படிப்பும், எழுத்தும் அவரின் உடல் நிலையை வெகுவாகப் பாதித்தன.
டாக்டர் அம்பேத்கர் நடத்திய இயக்கத்தை அவருக்குப் பிறகு வழிநடத்திச் செல்லுவார்கள் என்று அவர் நம்பியிருந்த துணை நிலைத் தலைவர்களின் நம்பிக்கையற்ற செயல்களினாலும், அவர்களுக்குள் தலைமைப் பதவிக்கு நடந்த போட்டிகளாலும், அவரது போராட்டங்களினால் கிடைத்த அரசு உயர் பதவிகளில் அமர்ந்தவர்களின் வெட்கக்கேடான நடத்தைகளினாலும் அவர் மனம் உடைந்து போனார். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, அவரது அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களின் நடத்தைகளினால் அவருடைய உடல்நலக் குறைவு இன்னும் தீவிர மடைந்தது.
அவருடைய மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகள், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. சனவரி 1955 முதல் அவர் உடல்நிலை மேலும் கவலையை உருவாக்கியது. அவர் எடை குறைந்து தளர்ச்சியுற்று, சுருங்கிக் காணப்பட்டார். அவரது கோடை மற்றும் பனிக்கால உடைகள், இப்போது அவருக்குப் பெரிதாக இருந்ததால் சுருக்கித் தைக்கப்பட்டன. அவரது கம்பீரமான உடம்பை அவரது மெல்லிய கால்கள் தாங்க முடியாமல் போனதால் உடம்பின் எடை குறைந்தது.
அவரது மிகப் பெரிய நூலகத்தில் நடமாடும் போதும், தோட்டத்தில் உலவும் போதும், காரில் ஏறி அமரவும் - இறங்கவும், நாடாளுமன்றத்திற்குச் செல்லவும், வேறு எங்கேயும் செல்வதற்கும், குளிப்பதற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும், எழுவதற்கும், உடையணிந்து கொள்வதற்கும் அவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டது. சில சமயங்களில் சாப்பிட மனமில்லாமல் அவர் படுக்கையில் படுத்திருப்பார். அப்போது அவருக்கு நான் உதவ வேண்டியிருந்தது.
டாக்டர் அம்பேத்கரின் மகிழ்ச்சியற்ற வாழ்நிலை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் அழுவது, எனக்கு மிகப் பெரும் வேதனையாக இருந்தது. அவரது அழுகைக்கானக் காரணத்தை அறிய நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எதிர் கொள்ள முடியாத எரிமலையின் சீற்றம் போன்ற அவரது கோபத்திற்குப் பயந்து நான் அதுபற்றி கேட்கத் தயங்கினேன்.
சூலை 30 ஆம் நாள், என் அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே அம்பேத்கர் மாளிகைக்குச் சென்றேன். அன்றையச் செய்தித்தாள்களையும், நான் கொண்டு வந்திருந்த மாலை நேரச் செய்தித்தாளையும் படித்து எனக்குச் சில குறிப்புகளை அம்பேத்கர் கொடுத்தார். பிறகு கையால் எழுதப்பட்ட, சில புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டிருந்த 50 பக்கங்களைக் கொடுத்துக் கொண்டே “இந்த ஆவணங்கள், புத்தரும் காரல் மார்க்சும், பழைய இந்தியாவின் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் மற்றும் இந்து மதத்தின் புதிர்கள் ஆகிய நூல்களுக்காகத் தயாரிக்கப்பட்டவை. என் வாழ்நாளில் இந்தப் புத்தகங்களை என்னால் வெளியிட முடியாது என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். அப்போது அவர் கண்களில் நீர் திரண்டிருந்தது.
மேலும், அவர் என்னைப் பார்த்தபடியே, “நீ எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்காக நிறைய இழந்திருக்கிறாய். வேதனைகளையும் சந்தித்திருக்கிறாய். உனது நலத்தைப் பற்றிக் கூட அக்கறைப்படாமல் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலைத் தட்டச்சு செய்ததற்கு சிறிதும் பலன் எதிர்பாராமல் முடித்துக் கொடுத்ததையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து துடிப்புடனும், தியாகத்துடனும் செயல்பட வேண்டியிருக்கிற எனது சூழ்நிலையை நீ புரிந்து கொள்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.
அடுத்த நாள் செவ்வாய் சூலை 31, 1956. 26, அலிப்பூர் சாலைக்கு மாலை 5.50 மணிக்குச் சென்று வழக்கம் போல, அன்று வந்திருந்த அனைத்துக் கடிதங்களையும் எடுத்துக் கொண்டு அவரிடம் சென்றேன். என் அறைக்கு எதிரே உள்ள நடைவெளியில் நாற்காலியின் மேல் உள்ள சிறு மெத்தையில் காலை வைத்துக் கொண்டு அமர்ந்தவாறு குறிப்புகள் சொல்ல ஆரம்பித்தார்.
ஆனால், இடையிலேயே கண்களை மூடி, தலையை நாற்காலியில் சாய்ந்தவாறு கண்ணயர்ந்து விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்து அவரது களைத்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவர் எழுந்தார். கடிதங்களை நான் வாசிக்க, விரைவாக அடுத்தடுத்து பதில் குறிப்புகள் கொடுத்தார். அதன் பின்னர் என் தோள் மேல் கை போட்டுக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றார். மறுகையில் உள்ள புத்தகம் கீழே விழ படுக்கையில் படுத்துக் கொண்டார். சிறிது நேரம் அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. அதற்குள் நான் அவரது தலையையும் காலையும் பிடித்து விட்டேன். அது அவருக்கு ஓரளவு தெம்பைக் கொடுத்தது.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அவரிடம் கேட்பதற்கு நான் தயக்கப்பட்ட அந்தக் கேள்வியை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரது படுக்கைக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்த படியே அந்தக் கேள்வியைக் கேட்டேன். “அய்யா, கொஞ்ச நாட்களாக ஏன் நீங்கள் அதிக வருத்தத்துடன் இருக்கிறீர்கள். சில சமயங்களில் அழுகிறீர்களே ஏன்? இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பணிவுடன் அவர் பாதத்தைத் தொட்டு கொண்டே கேட்டேன்.
கொஞ்ச நேரத்திற்கு அவர் எவ்வித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து, எனது கேள்வியால் பாதிக்கப்பட்ட அவர், உணர்ச்சி வயப்பட்ட குரலில் கைகளை உயர்த்தி, அவரது நெற்றியில் வைத்துக் கொண்டு சொன்னார். “இந்தப் பையன் பிடிவாதக்காரனாய் இருக்கிறான், ரொம்பப் பிடிவாதக்காரனாய் இருக்கிறான்”
அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் முற்றிலும் அமைதி நிலவியது. நான் அவரது முகத்தை ஆராய்ந்தேன். கண்களை வெறித்தபடி அவர் கூறினார், “நீங்களோ அல்லது வேறு யாருமோ எனது வருத்தத்தைப் பற்றியும், எனது வேதனைகளைப் பற்றியும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கிருக்கும் முதல் கவலை, என் வாழ்க்கையில் நான் எடுத்துக் கொண்ட சேவையை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. என் மக்களை ஆளும் வர்க்கமாக, அரசியல் அதிகாரங்களை மற்ற வகுப்பினரோடு சமமான முறையில் பகிர்ந்து கொள்ளும் நிலையில் பார்க்க வேண்டும் என ஆசைப் பட்டேன்.
நான் இப்போது எனது உடல் நலமின்மையால், ஊனமாகிப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறேன். நான் எனது போராட்டங்களினால் சாதித்துக் காட்டியவற்றையெல்லாம் அனுபவித்து வரும் படித்தவர்கள், தங்களது இரக்கமற்றத் தன்மையாலும், வஞ்சகத்தாலும், தங்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று மெய்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு, ஒடுக்கப்பட்ட அவர்களது சகோதர்கள் மேல் எவ்வித இரக்கமும் இல்லை. நான் எண்ணியிருந்ததை விட அவர்கள் கேடு கெட்டவர்களாய் இருக்கிறார்கள்.
அவர்கள் முழுவதும் தங்களது தன்னலத்திற்காகவே வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட சமுகத் தொண்டில் அக்கறை காட்டவில்லை. அவர்களை அழித்துவிடும் பாதையில் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போது நான், கிராமங்களில் மாற்ற முடியா வறுமையில் தொடர்ந்து உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவற்ற என் மக்களுக்காகப் பாடுபட விரும்புகின்றேன். ஆனால், என் வாழ்நாள் குறுகியதாய் இருக்கிறது.
என் வாழ்நாளில், தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து யாரேனும் ஒருவர் முன்னேறி வந்து அம்மக்களுக்காக நடத்தப்படும் இயக்கத்தில், பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இப்போது வரை அச்சூழ்நிலைக்கு யாரும் வரவில்லை. இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் நம்பிக்கைக்குரியவராகவும், உண்மையானவராகவும் யாரையெல்லாம் நினைத்தேனோ, அவர்களெல்லாம் பதவிக்காகவும், தலைமைக்காகவும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவர்களின் மேல் விழுந்த அந்த மிகப் பெரும் பொறுப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், அப்படி நடந்து கொள்கிறார்கள்” என்றார். இப்படி அவர் பேசுகிற போதெல்லாம் அவரது கண்கள் கோபத்தில் கனன்று கொண்டிருந்தன.
மேலும் அவர் “என் வாழ்நாளுக்குள் எனது எல்லா புத்தகங்களையும் வெளியிட்டு விட வேண்டும் என எண்ணுகிறேன். வரலாற்று முக்கியத்துவமிக்க எனது “புத்தரும் கார்ல் மார்க்சும்”, பழைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்” மற்றும் “இந்து மதத்தின் புதிர்கள்” போன்ற புத்தகங்களை வெளியிட எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை. எனக்குப் பிறகு இவற்றை யாரும் வெளியிடப் போவதுமில்லை என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று மிகவும் உணர்ச்சி பொங்கக் கூறினார். நான் இடையில் பேச முற்பட்ட போதும் அவரே தொடர்ந்து பேசினார்.
அவரது கண்கள் வெறித்த படியிருந்தது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் என்னைத் திரும்பிப் பார்த்த போது, நானும் அழுது கொண்டு அவரைப் பார்த்தேன். இதற்கு முன்னால் பலமுறை அவர் கவலையோடு அழுது கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் பார்த்தவை, என் கற்பனைகளையும், கடந்த கால அனுபவங்களையும் தாண்டியதாக இருந்தது.
நான் எழுந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, களங்கமற்ற முகத்தில் வேதனைகளை வெளிப்படுத்தியபடி, கம்மிய குரலில், “தைரியமாக இரு. மனம் தளர்ந்து விடாதே. ஒரு நாளில்லை ஒருநாள், வாழ்க்கை ஒரு முடிவுக்கு வரும்” என்றார். நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏன் அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெறுமையோடு அவரை உற்றுப் பார்த்தேன்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னார், “என் மக்களுக்குச் சொல் நானக்சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவைகளெல்லாம், தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும், முடிவற்ற சிரமங்களையும் கடந்து எல்லா பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இந்துப் பத்திரிக்கைகளிடமிருந்து வந்த அவதூறுகளுக்கு எதிராகவும், என் எதிரிகளுக்கு எதிராகவும் என் வாழ்நாளெல்லாம் போராடிப் பெற்றவையே. என்னோடு சேர்ந்து போராடிய சிலரும் இப்போது தங்களது தன்னலத் தேட்டங்களுக்காக என்னை ஏமாற்றத் துணிந்து விட்டனர்.
ஆனால் என் வாழ்நாளின் இறுதி வரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன். என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும். மாண்புடனும், மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். என் மக்களும், என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால், அது இப்போது எங்கே நிற்கிறதோ அங்கேயே அதனை விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியைப் பின்னோக்கித் தள்ளிவிட வேண்டாம். இதுவே என் செய்தி.
உண்மையில் எல்லா வகைகளிலும் தீவிரம் மிகுந்த எனது இந்தக் கடைசிச் செய்தி நிச்சயமாக கவனிக்கப்படாமல் போகாது. போய் என் மக்களுக்குச் சொல்; போய்ச் சொல்; போய்ச் சொல்”. என்று மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறினார். இவ்வாறு சொல்லிக் கொண்டே, கண்ணீர் திரண்டு முகத்தில் வழிய தேம்பித் தேம்பி அழுதார். பெரிதும் நம்பிக்கை இழந்து காணப்பட்டார். அவரது தாங்க முடியாத அந்தத் துயரத்தை, கசப்பு மிகுந்த நோயின் தீவிரத்தை வெளிக்காட்டிய அவரது முகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அழுகையுடனும் பெரு மூச்சுடனும், தனது ஒடுக்கப்பட்ட சகோதரர்களுக்காக அவர் கூறிய, நெஞ்சை உலுக்கக் கூடிய அவரது கடைசிச் செய்தியைக் கேட்டுத் திகைத்து நின்றேன். அதற்குப் பிறகுதான் அதுவே டாக்டர் அம்பேத்கரின் கடைசிச் செய்தி என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
- நானக்சந்த் ரட்டு
- தமிழில்: அகன் கிளாடிஸ்
(நன்றி: தலித் முரசு)

சனி, 18 ஆகஸ்ட், 2018

அறிவுப்பெட்டகத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


2005 ம் ஆண்டு, பழங்குடி இருளர் சமூகத்தவர் ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள், அத்தீர்மானத்தின் முக்கியமான அறிவிப்பு "தேர்தல் புறக்கணிப்பு". 2006 ம் ஆண்டு நடக்கவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அந்த தீர்மானத்தின் நகல்கள் துண்டறிக்கைகளாய் விநியோகிக்கப்பட்டது. தேர்தலை புறக்கணிக்கும் அந்த தீர்மானத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு அம்சம் இருந்தது.

அது, "தேர்தல் புறக்கணிப்பு, ஆனால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு விதிவிலக்கு"

ஆம், விடுதலை சிறுத்தைகளை தவிர வேறெந்த கட்சிக்கும் வாக்களிக்கப் போவதாகயில்லை என்று அந்த தீர்மானம் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சட்டங்களும் பாதுகாப்பும் தேர்தல் அரசியலின் மூலம் ஆட்சிக்கு வந்த கட்சிகளால் ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் பழங்குடி இருளர் சமூகத்தவரின் அந்த அறிவிப்பின் பின்னணியில் இருக்கும் நியாயத்தை அவர்களாகவே இருந்து உணர்ந்தாலொழிய, இந்த பொதுசமூகத்தால் அந்த வலியை உணரவே முடியாது. அந்த போராட்டங்கள் இன்று வரை தொடர்கிறது, நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இனச்சான்று இல்லாமல் கல்வியை தொடர முடியாத ஒரு தலைமுறைக் கனவு குழியில் தோண்டி புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

2005 ம் ஆண்டுக்கு முன்பிருந்து, ஜீன் 2018 தலைவர் தொல். திருமாவளவன் அவர்களது தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரை, பழங்குடி சமூகத்துவருக்கான பாதுகாப்பு அரணாகவும், களத்தில் நிற்கும் வீரர்களாகவும் ஒரு நெடிய வரலாறு திருமா அவர்களின் வழிகாட்டுதலின் படி விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தாருக்கு உண்டு. அதன் காரணமாகவே, அந்த பற்றுதலின் வெளிப்பாடாகவே நாம் விடுதலை சிறுத்தைகளை தவிர்த்து வேறு யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்கிற பழங்குடி மக்களின் அறக் கோவத்தை அணுக வேண்டும்.

அரசியல் அதிகாரத்திலிருந்து சிந்திய கிளை அதிகாரத்தை கூட இன்னும் நுகர்ந்தும் பார்த்திடாத ஒரு இயக்கத்தை, அதன் தலைவரை நோக்கி "நீ தலித் மக்களுக்கு என்ன செய்தாய்?" என்கிற கேள்வியே அபத்தம். ஆனாலும் அந்த கேள்விகளுக்கு பதிலில்லாமல் இல்லை.

எந்தவொரு சமூகத்தையும் அரசியல் ரீதியாக தயார் செய்வதற்கு முன், அவர்களை பண்பாட்டு ரீதியாக தயார் செய்வது முதற்கடமையாகிறது. அதிலும் பிளவு பட்டுக்கிடக்கும் இந்திய தலித் சமூகத்தை ஒருங்கிணைப்பது பிரசவ வலியை விட நூறு மடங்கு வலியும் வேதனையும் கொடுக்கக்கூடிய அயற்சியான முயற்சி என்றால் அது சத்தியமாக மிகையல்ல. தமிழக தலித் சமூகத்திற்கென ஒரு போராட்ட வரலாறு உண்டு. அயோத்திதாசப் பண்டிதர், தாத்தா ரெட்டமாலை ஸ்ரீனிவாசன், LC குருசாமி, எம்.சி.ராஜா என்று இந்த பட்டியல் தொடர்கிறது. பண்பாட்டு தளத்திலும் அறிவு / அரசியல் தளத்திலும் தலித்துகளின் பங்களிப்போடு கூடிய போராட்டம் காலம் காலமாக நடந்துக் கொண்டு தானிருக்கிறது என்றாலும், அடக்குமுறைக்கு எதிராக "அடங்கு மறு, அத்து மீறு, திமிறி ஏழு" என்று வீறுகொண்டு எழுந்த குரலொன்று தமிழகத்தையே தன் பக்கம் திருப்பியது. எந்தவித அரசியல் அதிகாரமும் இன்றி, ஊடகத்துணையும் இன்றி, தனக்கான இடத்தை தானே நிறுவியது, தவிர்க்கப்பட முடியாத தலைவனாய் வளர்ந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான எந்த அநீதி அரங்கேறினாலும் தன் முதல் தடத்தை பதித்து "உங்களுக்கு நான் இருக்கிறேன், நீங்கள் அநாதையல்ல" என்றது அந்தக் குரல். கொடி பிடிக்கவும், ஆள் சேர்க்கவும் சிதறிக்கிடந்த தலித் சமூகத்தை இந்த நூற்றாண்டில் ஒருங்கிணைக்க துணிந்து, அதில் கணிசமான வெற்றியும் கண்டுள்ள இந்தச் சாதனையை தவிர வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள் திருமாவிடம்? இதை வேறு யார் இங்கே சாத்தியப்படுத்திக்காட்டினார்கள்?

இதன் காரணமாகவோ என்னவோ, திருமா அவர்கள் தலித் தலைவராக அறியப்பட்டார். தலித் தலைவராக அறியப்படுவதில் சிக்கலேதும் இல்லை, ஆனால் தலித்தாய் பிறந்ததனாலவே அவர் தலித்துகளுக்கான தலைவராக மட்டுமே அறியப்படுவது இந்த சாதியச் சமூகத்தின் தோல்வி. அவர் தலித் தலைவராக அறியப்பட்டார், காரணம்; தலித்துகளுக்கு ஒன்றென்றால் வேறெந்த தலைவனையும் விட அவர் முன் வந்து களத்தில் நிற்கிறார், வேறெந்த தலைவனையும் விட அவர் தலித் பிரச்சனைகளை அதிகம் பேசுகிறார், வேறெந்த தலைவனையும் விட தலித் விடுதலை குறித்து அதிகம் சிந்திக்கிறார், அதனாலவே அவர் தலித் தலைவராக அறியப்படுகிறார், இதற்காக அவர் தலித் தலைவராக அறியப்படுவாரெனில் "ஆம் அவர் தலித்துகளின் தலைவர்"

ஈழத்தில் தொடங்கி, அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு செய்யும் கொடுமைகளுக்கு எதிராக கண்டனக்குரல்களை பதிவு செய்வதில் நீண்டு, எல்லா மக்களுக்குமான பிரச்சனைகள் என்று உருவகப்படுத்தப்பட்ட அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் என்று, திருமாவின் பங்களிப்பை வேறு எந்த இயக்கத்தோடும் ஒப்பிட்டு கூட குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஊடகங்கள் கண்டும் காணாமல் விட்ட எட்டுவழிச் சாலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமே சமீபத்திய அத்தாட்சி.

நாடு முழுக்க இந்துத்துவ பாசிச அரசாங்கங்களின் கோரப்பிடியில் சிக்கி சிதிலமாக, 2017 ல் மாநில சுயாட்சி மாநாட்டின் மூலம், வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான அனைத்து தோழமை சக்திகளையும் ஒருங்கிணைத்து, 2019 ம் தேர்தலில் இந்த வகுப்புவாத சக்திகளை விரட்டியடிப்பதற்கு நாம் ஒருங்கிணைவது அவசியம் என்று இந்தியாவிலேயே முதல் அறைகூவல் விடுத்தது தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் தான்.

திருநங்கைகளும், பெண்களும், சிறுபான்மை மதத்தவரென இம்மண்ணில் ஒடுக்கப்படும் அனைவருமே தலித்துகள் தான் என்று, ஆதிக்கத்துக்கு எதிராய் ஒருங்கிணைக்கும் தலைவன் தலித் தலைவனா அல்லது முற்போக்குச் சமூகத்தை அடையத்துடிக்கும் மானுட விடுதலைக்கான தலைவனா? மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் என இந்தசித்தாந்த கோட்பாட்டின்படி தேசியம் அமைக்காமல் போனால், அது சமத்துவத்துக்கு எதிரான தேசமாகத்தான் இருக்குமென தமிழ் தேசியம் பேசும் தொல். திருமாவளவன், தமிழ் தேசியத்தின் தலைவராக அறியப்படாமல் போவதற்கு தகுதியற்ற நிலையிலிருப்பது இந்த தமிழகமா? தலைவர் திருமாவளவனா?

தலித்துகளை இந்துத்துவ அரசியலை நோக்கி நகர்த்தும் வேட்டையில் வடஇந்திய இந்துத்துவ சக்திகளால் குறிவைக்கப்பட்டவரில் முதன்மையானவரும், முக்கியமானவரும் திருமா தான். அவர் பிடிகொடுக்காமல் விரட்டியதனாலவே அவ்விடத்தை யாரை கொண்டு நிரப்பினார்கள் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ள தேவையில்லை. ஒரு வேளை அவர் அதற்கு இசைந்திருந்தால்,  தலைமுறை தாண்டி பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்ளுமளவு பின்புலமும், அதிகாரத்தில் பகிர்வும் கிடைத்திருக்கும்.

மாறாக இந்துத்துவ பார்ப்பன சக்திகளுக்கு எதிரான அணித்திரட்டலை மேற்கொண்டார், அதனாலே தான் என்னவோ, பாபர் மசூதி இடிப்பு நாளான அன்று அவர் பேசியதை திரித்துக் கூறி, தலைக்கு விலை வைத்தது தமிழக பாசிசம்.

விசிக வின் வெளிச்சம் தொலைக்காட்சியை நடத்த மாதாந்திர செலவை கூட சமாளிக்க இயலாமல் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஒரு இயக்கமும் அதன் தலைவரும், இந்தியாவை ஆளும் நிகழ்கால வர்ண வர்க்கத்தோடு இணைந்தால்  இப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்பதையறிந்தும்,வேறந்த தலைமையை காட்டிலும் இந்துத்துவத்தின் முகத்தை தோலுரித்து வருவதிலிருந்து, அவரின் கொள்கைப் பிடிப்பிற்கு வேறெந்த சான்றை சமர்ப்பிப்பது?

"என்னால் முதல்வர் ஆக முடியாதென" தலைவர் திருமா சொல்லியிருப்பது fact அல்ல, நம் நாட்டின் fate . அதை சொல்வது அவர் பெருந்தன்மையல்ல, நம் சமூக அமைப்பின் யோக்கியதை.

பேரன்பு மிக்க தலைவர் தொல். திருமா அவர்களே, உங்களின் அந்த கூற்று பொய்ப்பிக்க வேண்டுமென்பது தான் என் போன்றோரின் ஆசை, ஒருவேளை நீங்கள் சொல்வது போலவே முடியாமல் போனால், தலைமுறைகள் தாண்டி அது சாத்தியப்படும் போது,  சாதியை மிதித்து அரசியலுக்கான தளம் அமைத்துக்கொடுத்த உங்கள் தோள்களில் இருந்து தான் அந்த வெற்றி சாத்தியப்பட போகிறது, அமைப்பாத் திரட்டிய நீங்கள் தான் அதற்கும் தாய் மண்ணாக இருக்கப்போகிறீர்கள், போராட்ட வரலாற்றில் மகத்தான போராளியாக உன்னை வரலாறு குறிப்பெடுத்துக் கொள்ளும், சந்தேகமின்றி உன் பக்கங்களை புரட்டிப்பார்க்கும், அதிலிருந்து அறிவுச்சமுகம் வீறு கொண்டு எழும்,

எங்கள் அறிவுப்பெட்டகத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்❤️💙

சுதந்திரதின செங்கோல் சிறப்பு


தேசியமும் தெய்வீகமும்

சுதந்திரதின செங்கோல் சிறப்பு

*1947 ஆகஸ்டு 15 முறைப்படி நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம் தெரியுமா ?*

மௌன்பேட்டன் நேருவை அழைத்து உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கபோகிறோம் அதை எப்படி கொடுப்பது என்று கேட்க நேருவுக்கு குழப்பமாக இருந்தது

 எதை அடையாளமாக வைத்து பெறுவது உடனே மூதறிஞர் ராஜாஜியை அனுகி எனக்கு இந்த நடைமுறைகள் தெறியாது அதனால் தாங்கள் தான் தீர்வுகூற வேண்டும் என்றார்.

 உடனே ராஜாஜி கவலை வேண்டாம் எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது *ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதியமன்னருக்கு குடுத்து ஆட்சிமாற்றம் செய்வர்.*

நாமும் அந்நியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட குருமகானின் கையால் செங்கோலை பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம் என்றார்.

 நேருவும் நேரம் குறைவாக உள்ளது உடனே ஏற்பாட்டை செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு  விசயத்தை சொல்ல அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம்அவர்கள்

உடனே முறையாக செங்கோல் தயாரித்து தங்க முழாம் பூசி
*இளையஆதீனம் தம்பிரான்பண்டார சுவாமிகளிடம்* பொறுப்பை ஒப்டைத்து கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் (தேவாரத்தில் இருந்து கோளறுபதிகம் பதினோரு பாடல்களை குறித்து கொடுத்து இந்த பாடல்களை பாடவேண்டும்.)உடன் அனுப்பிவைத்தார்.

 ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் டில்லி போய் சேர்ந்தனர். அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைதலையில் இருந்து  பாரதத்தின் விடுதலை பெரும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர்

அந்த சுதந்திர வைபவ தினத்தில் *மௌன்பேட்டனிடம் இருந்து செங்கோலை குருமகாசண்ணிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று*

 செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து ஓதுவார்மூர்திகள் வேயிறுதோளிபங்கன் என்று துவங்குகிற தேவாரதிருப்பதிகத்தை பாட பதினோராவது பாடலின் கடைசி வரி. " அடியார்கள் வானில் அரசால்வர் ஆணை நமதே."  இந்தவரி பாடி முடிக்கும் போதுதான்

*சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்.*

அந்த நிகழ்வை தான் நாம் சுதந்திர தினமாக கொணடாடுகிறோம்.

*அது மட்டுமல்ல செங்கோல் வழங்கும் போது ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் இசைத்தார்.*

இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை

   திருவாவடு துறை ஆதீனமடத்தில் செங்கோல் வைபவ கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது .

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

திரு.அடல்பிகாரி வாஜ்பாய்


திரு.அடல்பிகாரி வாஜ்பாய்

தங்கத்தை
இங்கிலாந்தில் அடமானம் வைத்து அரசாங்கம் நடத்திய இந்தியாவில் நீங்கள் பிரதமராக பதவியேற்ற பின்தான்...

இந்தியா முழுவதும் நாங்கள் விபத்தில்லா நான்கு வழி சாலை கண்டோம்..

சர்வசிக்ச அபியான் மூலம் நாங்கள் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி கற்றோம்.

பிரதான்மந்திரி கிராம்சடக் யோஜனா மூலம் நாங்கள் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கண்டோம் ..

உங்கள் ஆட்சியில்தான்  வங்கிவீட்டு கடன் வட்டி குறைந்து வீடு நாங்கள்  கட்டினோம்..

வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்ப்பட்டு  வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த வாகனங்கள் வாங்கினோம்..

விறகுஅடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய நாங்கள் உங்கள் ஆட்சியில்தான் பெரும் செல்வாந்தர்கள் மட்டுமே பயன்படுத்திய கேஸ் (சமையல் எரிவாயு ) தாராளமாக வாங்கினோம்..

உங்கள் ஆட்சியில் தான் அதிகப்படியாக  இருளில் இருந்த எங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது ..

உங்கள் ஆட்சியில்தான் போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான
தேசிய
நெடுஞ்சாலைகள் கிடைத்தது .
அதில் தமிழகத்தில்
NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி
NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை 
NH 208 மதுரை to கொல்லம்
 NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம்
NH 206 ...NH 67 திருச்சி to  ராமேஸ்வரம் 
NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to தின்டுக்கல்  மற்றும்
NH 45B ஆகியவை  கன்டோம்.

உங்கள் ஆட்சியில்தான் தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைய கண்டோம் ..

உங்கள் ஆட்சியில்தான்4.5 ஆண்டுகள் உயராத விலைவாசி கண்டோம்

உங்கள் ஆட்சியில்தான் உயராத பெட்ரோலிய பொருட்கள் கண்டோம் ...
petrol 36/- rs per litre rate.

உங்கள் ஆட்சியில்தான் செல்வந்தர்கள் மட்டுமே 3000O/- 0YT 3மாதம் 15000/- 6மாதம் கழித்து கிடைத்த  தொலைபேசி இனைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்கள் நாங்கள் பெற்றோம்...
வனிகத்தை அதன் மூலம் பெருக்கினோம்..

உங்கள் ஆட்சியில்தான் 250/- ரூபாயும் 2ரூபாயும் செலுத்தி செல்லுலார் தொலைபேசி சாமானிய மக்கள் நாங்கள் பெற்றோம்..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது..

அய்யா உங்கள் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி  பொக்ரான் அனுகுண்டு வெடித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்தீர்கள்,..

அய்யா உங்கள் ஆட்சியில் நீங்கள்தான் மேதை விஞ்ஞானி திரு.அப்துல்கலாமை ஜானதிபதியாக்கினீர்கள்,.

அய்யா உங்கள் ஆட்சியில் தான் பணிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றிவாகை சூடினீர்கள்..

ஐயா உங்கள் ஆட்சியில் தான் சுற்றுலா கூட போகமுடியாத ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில்(ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை  அடக்கி சுற்றுலா சுலபமாக்கினீர்கள்..

அய்யா உங்கள் ஆட்சியில் தான் வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடான் கொடுக்கும் நிலை உருவாக்கினீர்கள்..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணா கர்நாடக மாநிலதலைநகர் பெங்களூரை சிலிகான்vally யாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி  மென்பொருள் உற்பத்தியை தன்னிரைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறையை போக்கினீர்கள்..

அய்யா உங்கள் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது ..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

அய்யா உங்கள் ஆட்சியில்தான் இமாச்சல் மாநிலத்தில் (மண்டி) முதல் பெரிய சுரங்கப்பாதை
9KM அமைக்கப்பட்டு போக்குவரத்து சுலமாக்கப்பட்டது.

அய்யா உங்கள் ஆட்சியில்தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள்..
கடல் பாலங்கள் கொண்ட  கொங்கன் ரயில்வே மங்களூர்to மும்பை பாதை அமைக்கப்பட்டது ..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது,..

அய்யா உங்கள் ஆட்சியில்தான்  வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது,.

அய்யா உங்கள் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக ஆக்கப்பட்டது...

நாட்டுமக்களுக்காக திருமணமே செய்து கொள்ளாத உங்களின் இன்னும் பல சாதனைகள் சொல்லி கொண்டேபோகலாம்.

.சுதந்திர இந்தியாவின் சிற்பியான உங்களுக்கு ..
உங்களுக்கு ஒரு பாரதரத்னா போதாது ..
இருக்கும் அனைத்து விருதுகள் கொடுத்தால் கூட எங்கள்ஆசை அடங்காது...

நீங்கள் மறைந்தாலும் தங்களது சாதனைகள்  மறையாது...

புதன், 15 ஆகஸ்ட், 2018

சுதந்திரத்திற்கு முன்பே Dr. அம்பேத்கர் இந்தியாவிற்கு ஆற்றிய அளப்பரிய பணி.


இந்திய சுதந்திரம் என்பது 'சமூக சுதந்திரம் அல்ல (Not social liberty), மாறாக ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்டது ( Transfer of power from British to Brahmin). ஆனால், சுதந்திரத்திற்கு முன்பே  Dr. அம்பேத்கர் இந்தியாவிற்கு ஆற்றிய அளப்பரிய பணி.

1. டாக்டர் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வரவில்லை. கிறித்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வந்த மனு என்பவன்தான், பிறப்பின் அடிப்படையில் அவரவர் குலத்தொழிலை அவரவர்தான் மேற்கொள்ள வேண்டும் என்றான். இதுவே மனு தர்மம். மனு தான் முதன்முதலில் இடஒதுக்கீடைக் கட்டமைத்தான். ஆனால் அம்பேத்கரால்தான் இன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செய்தார் என்பதைத் தெரிந்து வைத்திருப்பவர்கள், ஏழை பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு, பிராமண பெண்களுக்கு இடஒதுக்கீடு என மேலும் விரிவுபடுத்த முயன்ற போது, “பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக (Other Backward Class) என்று OBC Reservation-யைக் கொண்டு வர அரசமைப்புச் சட்டத்தில் உறுப்பு 340தனை சேர்த்தார் அம்பேத்கர்.
உறுப்பு 340ன் படி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்நிலையைக் கண்டறிய ஆணையம் அமைக்க வேண்டும் என கூறுகிறது. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகியும், அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த ஆணையமும் அமைக்கவில்லை என பிரதமர் நேருவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
அதன் பின்னர்தான் 1953ஆம் ஆண்டு காகாகலேல்கர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மேம்பாட்டிற்கு குழு அமைக்கப்பட்டது, அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பின்பு மண்டல் கமிசன் அறிக்கைப்படி OBC  இடஒதுக்கீட்டை BSP நிறுவனத்தலைவர் கன்சிராம் அவர்களின் வற்புறுத்தலின் பேரால்  வி. பி. சிங் அமல்படுத்தினார்.

2. அம்பேத்கரால்தான் திறமைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என்று இன்று குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்கு முன்பு, ஒரு வேலையில் சேரவேண்டும் என்றால் சிபாரிசு வேண்டும். ஏற்கனவே உயர்பதவியில் வகித்தவர்கள் பிராமணர்கள். எனவே சிபாரிசின் பேரில் பிராமண இளைஞர்களுக்கே வேலை கிடைத்தது.
ஆனால் படித்தவர்கள் பதிவு செய்து வேலை கிடைக்க “தேசிய வேலைவாய்ப்பு நிறுவனம் (National Employment Agency)” கொண்டு வந்தவர் டாக்டர் அம்பேத்கர். இதுவே பின்னாளில் Employment Exchange ஆனது.

3. இந்தியாவின் கருவூலம் எனப்படும் ரிசர்வ் வங்கியை டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்டதிட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பின்படி ஹில்டன்-யங் தலைமையிலான ராயல் கமிஷன் ஆன் இந்தியன் கரன்சி அண்ட் பைனான்ஸ் என்னும் குழு நிறுவியது. குழுவிலிருந்த ஒவ்வொருவரின் கையிலும்  அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரையான “ரூபாய் சிக்கல்கள்-தீர்வுகள்” இருந்தது.

4. 1923ல் டாக்டர் அம்பேத்கரின் “பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதியின் பரிமாணம்” என்ற ஆய்வின் அடிப்படையிலேயே இந்தியாவின் நிதி ஆணைக்குழு Finance Commission தோற்றுவிக்கப்பட்டது.

5. சைமன் குழுவிடம் 1928-லேயே வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்திப்பெற்றார் டாக்டர் அம்பேத்கர்.இப்போது உள்ளதுபோல் பெண்கள் உட்பட பெரும்பான்மை மக்களுக்கு அப்போது வாக்குரிமை கிடையாது.

6. விவசாயிகளிடமிருந்து வரி வசூலிக்க பின்பற்றப்பட்ட வன்முறை வடிவிலான கோட்டி முறையை (Khoti) ஒழிக்க மசோதாவை முன்மொழிந்தார்டாக்டர் அம்பேத்கர். ஆனால் காங்கிரசுஅதை எதிர்த்தது.
எனவே சனவரி 12, 1938-ல் 20,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்துப் போராடினார் டாக்டர் அம்பேத்கர். இதுவே சுதந்திரப் போராட்டத்தில் நடந்த மிகப்பெரிய விவசாயப் போராட்டம். கோட்டி முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 95 சதவிகிதத்திற்கும் மேல் பிற்படுத்தப்பட்டவர்களே.

7. தாய்மார்கள் அதிகம் குழந்தை பெறுவதால் வரும் உடல்நலக்குறையைப் போக்க குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் என்றார்.

8. மது அருந்தி வரும் கணவனுக்கு உணவளிக்காதே என்றார்.1940ல் மதுவையும், பிற போதைப் பொருட்களையும் அரசு தடை செய்ய வேண்டும் என்பதற்காக அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை கொள்கைகளில்(Directive Principle of state policy) உறுப்பு 47யைச் சேர்த்தார்.

9. பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் விடுமுறையுடன் கூடிய ஓய்வு வேண்டும் என்று மும்பை சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தார் 1942-ல். ஆனால் இந்திய அரசு அந்த மசோதாவை 1961-ல்தான் நிறைவேற்றியது.

10. 1942-ல் தொழிற்சாலை சட்டத்தில் 14 மணி நேரமிருந்த பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்தார்.

11. ஆபத்தான பணிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வேலை செய்வதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தார்.

12. தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தைக் கொண்டு வந்தார்.

13. முதன்முறையாக தொழிற்சாலை சட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் கிடைக்க சட்டம் கொண்டு வந்தார்.

14. இரண்டாம் உலகப்போருக்குப்பின், நாட்டின் மறுகட்டமைப்பு மிகப்பெரும் சவாலாக இருந்தது. அதற்காக நிறுவப்பட்டதே மறுகட்டமைப்பு குழு மன்றம் (Reconstruction committee council). அம்பேத்கர் அம்மன்றத்தின் உறுப்பினர். அதன் மூலம் பாசனம் மற்றும் மின்சார கொள்கைக்கான குழுவுக்கு தலைவராய் இருந்தபோது அவர் முயற்சியால் கொண்டுவரப்பட்டதுதான் கீழ்காண்பவை.

1944ல் மத்திய நீர்வழி மற்றும் பாசன ஆணையத்தைத் தோற்றுவித்தார். அதுவே தற்போதைய மத்திய நீர் ஆணையம் (Central Water Commission).

மத்திய மின்சார தொழில்நுட்ப வாரியத்தை (Central Technical Power Board) தோற்றுவித்தார். அதுவே பின்னாளில் தேசிய மின்சார இணைப்பு ஒழுங்குமுறை கழகம் (National Power Grid Corporation).

 15. 1946-ல் நவம்பர் 26ஆம் தேதி, அம்பேத்கர் ஒரு புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார். அதில் சட்டம் மூலம் அனைவரும் சமம், ஆனால் இது சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சாத்தியமா? என்ற சந்தேகத்தை எழுப்பினார். அதன் பிறகு நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அமைக்கப்பட்டதுதான் – இந்திய திட்டக் குழு (Planning Commission of India).

16. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் (Damodhar Valley Project), கிராகுட் அணைத் திட்டம் (Hirakud Project), சோன் பள்ளத்தாக்கு திட்டம்(Sone Valley Project) ஆகியவை எல்லாம் அம்பேத்கரின் முதன்மை பங்களிப்பில் உருவானதே.

மேற்கண்டவை அனைத்தும் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து மக்களின் நலனுக்காகவே செய்தார்.

1209ல் கட்டப்பட்ட உலகின் பழமையான பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் கடந்த நூற்றாண்டில் மக்களுக்கு உழைத்த மாமேதை யார்? என்ற வாக்கெடுப்பில் முதல் இடத்தை பிடித்தவர் டாக்டர் அம்பேத்கர். அவர் நவீன இந்தியாவின் சிற்பியாக இருக்கிறார்.

ஐ.நா, டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை சர்வதேச சமூகநீதி நாளாகக் கொண்டாடுகிறது.

ஆனால் நம்மைப் பொறுத்தவரை அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.

அதனால் தான்...

இன்று இட ஒதுக்கீடு மற்றும் திறமைப்பற்றி வாய் கிழிய விதண்டாவாதம் செய்யும் எவரும் இந்திய தேசியத்தை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான அம்பேத்கர் திறமையையும் அறிவையும் ஏற்றுக் கொள்ளாமல் அவரை சாதியோடு சேர்த்து மட்டுமே பார்ப்போம் என்று அடம்பிடிக்கிறார்கள்.
சாதியும் மதமும்தான் அளவுகோல் என்றால் நமக்கு அயோக்கியர்களே தலைவர்களாக வாய்ப்பார்கள். #Jai bhim.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

ஊராட்சியில் இதை செய்தலே போதும் பல பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்...

ஊராட்சியில் இதை செய்தலே போதும் பல பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்...

* கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ??
நாம் என்ன செய்ய வேண்டும் ??

* நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம்

* கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம்

* கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம்

0. சட்டசபைக்கு இணையான வலிமை= கிராமசபையை பயண்படுத்த வாரீர்

 1.ஜனநாயக திருவிழாவை ஆகஸ்ட்-15 கிராமசபையில் கொண்டாட வாருங்கள் அனைவரும்

 2.பஞ்சாயத்து தலைவராக நினைப்போரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்

 3.அரசியல் ஆசை உள்ளோரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்

 4.Ex பஞ்சாயத்து உபதலைவரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்

 5.Ex வார்டு மெம்பரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்

6. ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டத்துக்கு வரும் தலைவருக்கு ஓட்டு போடுங்கள்

 7.  ஆகஸ்ட்-15 நம் கிராமம் மீது அக்கறை இல்லாமல் கிராமசபை கூட்டத்துக்கு வராத தலைவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்

 8.ஊராட்சி செயலாளரின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.

 9.மண் வெட்டியதாக பணத்தை எடுப்பவர்களை ஆய்வு செய்ய சரியான தருணம் ஆகஸ்ட்-15

 10.கிராமசபை கூட்டத்தில் அரசு அலுவலர் தரையில்தான் உட்கார வேண்டும்

11.  50 நபருக்கு குறைவாக இருந்தால் கிராமசபை கூட்டத்தை நிறுத்துங்கள்

 12.கிராமசபை கூட்டத்துக்கு செல்லும் முன் ஆன்லைனில் வரவு செலவு விபரங்களை டவுன்லோடு செய்யுங்கள்

 13.ஓட்டுப்போடுவதைப் போல முக்கியத்துவம் வாய்ந்தது-ஆகஸ்ட்-15

 14.கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிராமத்தின் வளர்ச்சியை  அழிக்க துணை போகாதிருங்கள்

 15.பேருந்துவசதி குறித்து ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் ஏற்றுங்கள்

 16.இலவச வீடு வேண்டுவோர் ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்

 17.  ஆகஸ்ட்-15 உங்கள் கிராமத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுக்கான நாள்

 18.ஆகஸ்ட்-15  கிராமசபையில் சாக்கடை கால்வாய் அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்.

 19.  ஆகஸ்ட்-15 கிராமசபையில் குளம்,ஏரி தூர்வார்வது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்

 20.  ஆகஸ்ட்-15 கிராமசபையில் குடிநீர் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்

 21.மே-1 க்கு பின்பு உள்ள செலவு விபரங்களை  ஆகஸ்ட்-15 கிராமசபையில் உங்கள் ஒப்புதல் பெற்றதாக கையெழுத்து வாங்க போவது எத்தனை பேருக்கு தெரியும்

22.  !!  ஆகஸ்ட்-15  !!  கிராமசபையின்  முக்கியத்துவத்தை  இளைஞர்கள் தெரிந்துகொண்டு கிராமத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும்.

 23.உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க ஆகஸ்ட்-15 கிராமசபைக்கு வாருங்கள்

 24.கிராமசபை கூட்டத்தை தகுந்த காரணத்தோட நிறுத்தினால் மாவட்ட ஆட்சியரை உங்கள் கிராமத்திற்கு வரவைக்கலாம்

 25.!!நேரலை!!
கிராமசபை கூட்டத்தை முடிந்தவரை முகநூலில் நேரலையாக பரப்புவோம்

 26.   501 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவியுங்கள்

27. அரசு இ-சேவை மையம் தொடங்க தீர்மானம் ஏற்ற வாருங்கள்

28. மரத்த நடுறோம், மரத்த நடுறோம்னு ஆயிரகணக்கான மரத்தை நட்டு இலட்சம் ரூ வீண்டித்த மரங்களெல்லாம் எங்கே? விவாதிக்கலாம் வாருங்கள் ?

29.கிராமசபை கூட்டத்தில் போய்
உட்காருவது! நமது கடமை

30. நல்ல பணிதட
பொருப்பாளரை கிராமசபை கூட்டத்தில் விவாதித்து தேர்ந்தெடுப்போம்

31. உங்கள் கிராமத்தின் தேவைகளை மட்டும் தெரிந்தெடுக்க சரியான தருணம் ஆகஸ்ட்-15  கிராமசபை

32. புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தீர்மானம் ஏற்ற கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்

33. நம் கிராமத்தில் கிராமசபை அரசாணை படி 100க்கு குறைவான நபர்கள் இருந்தால் கூட்டத்தை நிருத்தி மறு தேதிக்கு மாற்றலாம்

34. கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சியை  பன்மடங்கு ஆக்க வாருங்கள்

35 . இலவச வீடு வேண்டுவோர் ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்

36. கேள்வி கேட்டல்தான் அரசுக்கு அச்சம் வரும் என்றால் அதற்கான சரியான தருணம்  ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டம்

37. வண்ணகற்கள் சாலை  அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்

38. உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க

39.வீண் செலவுகளுக்கு ஒப்புதல் கையெழுத்து எக்காரணம் கொண்டு போடாமல் தடுப்போம்

39. ரேசன் கார்டு,  பட்டா மாறுதல்,  வருவாய் துறை சார்ந்த வருமான,  இருப்பிட, சாதி சான்றுகளை,  பல்வேறு இணைய வழி சேவைகள் அனைத்தும் நமது கிராமத்திலும் வழங்கும் கிராம சேவை மையங்கள் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.  ஏற்கனவே கிராம சேவை மையம் கட்டப்பட்டு இருந்தால் திறந்து வைத்து,  மக்கள் பயன்பாட்டிற்கு விட தீர்மானம் நிறைவேற்றுங்கள்.

இதன் மூலம் நாம் இணையம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் நமது கிராமத்தில் லஞ்சமில்லாமல் பெற முடியும்.

ஒரு கிராமத்திற்கு ஐந்து ஆண்டுக்கு 4 1/2 கோடி ருபாய் வழங்கப்படுகிறது

கிராமங்கள் முன்னேறாமல் இருக்க MP,MLA மட்டும் காரணமில்லை

கிராமங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களும் இளைஞர்களும் தான் காரணம்

உங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயண்படுத்தபடுகிறதா ?

என்னென்ன பணிகள் நடைபெற்றது ?

தரமான பொருட்கள் உபயோகப்படுத்த பட்டுள்ளதா ?

என்ற கேள்விகளை எழுப்புங்கள்

!! கிராமசபையில் அதிகாரம் மக்களுக்கே !!

உள்ளாட்சி அதிகாரங்களில், கிராம சபைகள் என்பது ஒரு சட்ட பிரிவு மட்டும்தான். அது வலிமையானது. ஆனால் சமீப காலங்களாக கிராம சபைகள் அரசியலாக்க பட்டு வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம் !!!!

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

யார் இந்த வேனு ஸ்ரீநிவாஸன் ?

யார் இந்த வேனு ஸ்ரீநிவாஸன் ?

டி வி எஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பேரன்.  சென்னையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து அமெரிக்காவில்  (Purdue University) அறிவியல் முதுகலை பட்டத்தை பெற்றார்.  அப்பல்கலைகழகம் அவருக்கு மேலான்மையில் டாக்டரேட் பட்டத்தையும் வழங்கியது.  மேலும் பிரிட்டனின் வார்விக் (Warwick) பல்கலைகழகமும் இந்தியாவின் ஐஐடி காரக்பூரூம் அவருக்கு அறிவியலில் டாக்டரேட் பட்டத்தை வழங்கின.

1979ல் சுந்தரம் க்ளேய்டானின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்ற வேனு ஸ்ரீநிவாஸன் அவர்கள், 1980ல் டி வி எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக  (chariman) பதவி ஏற்றார்.  கம்யூனிஸ்டுகள் அந்நிறுவனத்தில் பெரும் தொழிலாளர் பிரச்சனைகளை கிளப்பி வந்த சமயம் அது. தொழிலாளர் சங்கங்களின் கடுமையான‌ நிபந்தனைகள் நிறுவனத்தை பெரும் நஷ்டத்தில் தள்ளின.   மூன்று மாதம் நிறுவனத்தை இழுத்து மூடி தொழிலாளர் சங்கங்களை வழிக்கு வர வைத்தார் வேனு ஸ்ரீநிவாஸன், அதன் பின் நிறுவனத்தில் பல புதுமைகளை புகுத்தி அதை உலக தரத்திற்கு மேம்படுத்தி,  அதிநவீன இயந்திரங்களை களம் இறக்கி, புதிய தொழில் நுட்பங்களை ஆழமான ஆராய்சிகள் மூலம் உருவாக்கி, நிறுவனத்தை உயர்த்தினார்.  ஜப்பானின் சுசுகி நிறுவனத்தோடு சேர்ந்து இரு சக்கர கணங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தார்.  அதன் பின் 2001ல் சுசுகி தனியாக பிரிந்திட, இந்தியாவிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட இஞ்சினோடு  டி வி எஸ் விக்டர் எனும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தினார்.  இதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  பல ஜப்பானிய தர ஆய்வாள‌ர்களை தன் நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டு தன்னுடைய மோட்டார் சைக்கிள்களின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தினார்.    டி வி எஸ் 50 முதல் டி வி எஸ் ஸ்கூட்டி,  ஸ்டார் சிட்டி, அப்பாச்சி என அவர் உருவாக்கி  வெற்றி கரமாக சந்தைப் படுத்திய வாகனங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.  உலக அளவில் அவருக்கு கிடைத்த விருதுகளை பட்டியலிட பக்கங்கள் போதாது என்றாலும் அவர் பெற்ற முக்கியமான விருதுகள் சில.

2003 Star of Asia Businessweek
2004 Doctor of Science University of Warwick
2004 Jamsetji Tata Lifetime Achievement Award Indian Society for Quality
2005 J R D Tata Corporate Leadership Award All India Management Association
2009 Doctor Of Science IIT, Kharagpur, India
2010 Padma Shri Government of India
2010 Order of Diplomatic Service Merit Government of South Korea
2012 Ishikawa-Kano Award Asian Network for Quality
2014 Doctor of Management Purdue University, USA
2014 Honorary Commander of Korean Naval vessel, ROKS Choi Young Republic of Korean Navy
2014 Honorary Citizen of Busan City, Republic of Korea Busan Metropolitan Council
2015 Goodwill Envoy for Public Diplomacy Republic of Korea
2016 Champion of Champions and Best CEO Business Today
2018 Life Time Achievement Award F A D A

அவரின் சமூக மற்றும் ஆன்மீக பங்களிப்புகள் என்ன ?

வேனு ஸ்ரீநிவாஸன் அவர்களின் சமூக சேவைகள் கணக்கில் அடங்காதவை.  கிராமப்புற கல்வி,  விவசாயம் சார்ந்த பயிற்சிகள் என அவருடைய தொண்டு நிறுவனம் வெறும் நன்கொடை மட்டும் அளிக்காமல் அடிமட்ட அளவில் களம் இறங்கி பல தொண்டுகளை புரிந்து வருகின்றது. விருப்பமுள்ளர்கள் https://www.tvssst.org/ எனும் வலைதளத்திற்கு சென்று அவற்றை குறித்து விரிவாக‌ அறிந்துக் கொள்ளலாம்.

அது போல கோயில்களுக்காகவும், ஆன்மீக பணிகளுக்காகவும், திரு வேனு ஸ்ரீநிவாஸன் அவர்கள் அரும்பணியாற்றி உள்ளது கணக்கில் அடங்காது.  திருவரங்கம் ரங்கநாதர் கோயிலின்  திருப்பணிக்காக மட்டும் அவர் 25 கோடிகளை வழங்கியதும்,  தமிழ்நாட்டில் உள்ள 100 திருக்கோயில்களுக்கும் மேல் அவர் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

வேனு ஸ்ரீநிவாஸன் அவர்கள் மீது என்ன வழக்கு ?

ரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் கபாலீஸ்வர‌ர் கோயிலில் உள்ள ஒரு பழமையான‌ மயில் சிலை திருடப்பட்டு அங்கு புதிய போலி சிலை மாற்றி வைக்கப்பட்டதாக‌ மயிலாப்பூர் காவல் நிலயத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதை யானை ராஜேந்திரன் எனும் வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார்.  அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட திருக்கோயில்கள் புணரமைப்பு குழுவில் ஒரு உறுப்பினராக வேனு ஸ்ரீநிவாஸன் அவர்களின் பெயரும் அதில் இடம் பெற்றுள்ளது,  இந்தியாவின் முன்னனி தொழில் அதிபர்களில் ஒருவர் என்கிற நிலையில் தனக்கும் தான் சார்ந்த நிறுவனத்திற்கும் இதனால் எந்த‌ அவப்பெயரும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக‌ ஒரு முன் ஜாமீனை தாக்கல் செய்துள்ளார் ஸ்ரீநிவாஸன்.  சமூகத்தில் மதிப்பும், மரியாதைக்கும் உரிய எந்த நபரும் இப்படி ஒரு முன் ஜாமீனை தாக்கல் செய்துக் கொள்வது புதிதல்ல‌. சொல்லப் போனால்  2004ல் தன்னுடைய சொந்த செலவில் கபாலீஸ்வர்ர் கோயிலுக்கு 70 லட்சம் கொடுத்து பணிகளை செய்துள்ளார் வேனு ஸ்ரீநிவாஸன் என்பது குறிப்பிடத்தக்கது.   அந்த வருடத்தில் இருந்ததை தவிர தனக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் ஒரு பக்தன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார் வேனு ஸ்ரீநிவாஸன்

டி வி எஸ் குழு மம் துரதிஷ்டவசமாக பிராமண சமூகத்தினரால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகையால், திமுக மற்றும் கம்யூனிஸ கூட்டங்கள் அந்த நிறுவனத்தை எப்படியாவது அழித்திட துடித்தன. பல தடைகளை போட்டன.  ஆனால் ஈடு இனையற்ற திறமையையும், அயராத உழைப்பையும் யார் தடுத்து விட இயலும் ?.  டி வி எஸ் நிறுவன‌ங்கள் நம் நாடு முழுவதும் மட்டும் இல்லாது உலகம் முழுவதும் விரிந்து பரவியது.  தமிழகம் முழுவதும் திராவிட கட்சிகளின் இந்து விரோத கொள்கைகளால் பலத் திருக்கோயில்கள், மிக மோசமான நிர்வாக‌த்தினாலும்,  அறநிலயத்துறை மற்றும் அரசுகளின் கூட்டுக் கொள்ளையாலும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஐயா பொன் மானிக்கவேல் அவர்கள் இறைவனின்  மறு அவதாரமாக‌வே இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அரும்பணி ஆற்றி வருகிறார்.  சிலை கடத்தல்களிலும்  பல முறைகேடுகளிலும் ஈடுபட்ட பல‌ அறநிலயத்துறை அதிகாரிகள் கைதாகி வருகிறார்கள்.  இந்நிலையில் தான் வேனு ஸ்ரீநிவாஸன் போன்ற சமூகத்தில் தலைசிறந்து விளங்கும் நபர்களை ஏதோ சிலை திருட்டில் சம்பந்தப்பட்டவர் போல் ஒரு பரப்புரையை திமுக, கம்யூனிஸ்டு,  கிறிஸ்தவ மற்றும் தேச விரோத இந்து விரோத சக்திகள் மேற்கொள்கின்றன. அவர்களின் முக்கிய நோக்கமே தர்ம சேவகர்களை குறித்து அவதூறு பரப்புவதுதான். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த கட்டுரையை சிரமப்பட்டு அடியேன் எழுதுவது நம் இந்து தர்மத்திற்காக பாடுபடும் மற்றும் உதவும் நல்லுள்ளங்களை நாம் எந்த விதத்திலும் முன்கூட்டியே தவறாக நினைத்து விடக்கூடாது என்பதற்காகதான்.   யார் நல்லவர் யார் தீயவர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்திடம் உள்ளது.  அதே வேளையில் நம் தர்மத்திற்காக சேவையாற்றுபவர்களை குறித்த விஷமப் பரப்புரைகளை  நாம் முழு சக்தியுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

தலித்துகளுக்கும் திராவிட அரசியலுக்குமான கடைசிக் கண்ணி கலைஞர் கருணாநிதி


தலித்துகளுக்கும் திராவிட அரசியலுக்குமான கடைசிக் கண்ணி கலைஞர் கருணாநிதி

திராவிட அரசியலின் தோற்றத்தில் தலித்துகளின் பங்கு அளப்பரியது. திராவிட சித்தாந்தம், சொல்லாடல்கள் தலித்துகளிடமே முதலில் தோன்றியது எனலாம். பிராமணர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகள் தலித்துகளிடம் முகிழ்ந்து பின்பு திராவிட அரசியலால் மக்கள் மயப்படுத்தப்பட்டது. திராவிடன் என்ற கருத்துச் சொல்லாடலை அரசியல் பதமாக்கியது தலித்துகளே. எனது நூலான “சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை 1869-1943” என்ற தலைப்பில் குறியீட்டு ரீதியாக 'சூரியோதயம்' என்பது தலித்துகளின் அறிவு மரபையும் 'உதயசூரியன்' என்பது அவர்களின் அரசியல் மரபையும் குறிப்பதாகவே இருக்கும். தலித்துகளின் அறிவியக்கமும் அரசியல் இயக்கங்களும் எவ்வாறு திராவிட அரசியலுக்கான நாற்றாங்கால்களாக இருந்து வந்தன என்பதை தலித்துகளின் இதழியல் வரலாற்றின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு திராவிட அரசியலின் முன்னோடிகளாக இருந்த தலித்துகள் திராவிட இயக்க தோற்றக் காலங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். அதற்கு முன்பே அவர்களுக்கிருந்த செழுமையான தர்க்க அறிவு அவர்களை இயல்பாகவே திராவிட இயக்கத்தின் முன்கொடி ஏந்துபவர்களாக்கியது. அவர்கள் கொண்ட கொள்கைக்காக உயிரையும் இழக்கத் தயாராக இருந்தனர். திராவிட இயக்கம் தோன்றிய 1920களில் தலித்துகளின் அறிவியக்கம் கிட்டத்தட்ட நூறு வருடப் பாரம்பரியம் கொண்டதாக இருந்தது. பிராமணரல்லாதார் எனும் அரசியல் சொல்லாடலிலும் அதன் கொள்கை முழக்கங்களிலும் நம்பிக்கை வைத்த தலித்துகள் திரள் திரளாக திராவிட இயக்கத்தின் பின் அணிவகுத்தனர். சாதி ஆதிக்க எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கலப்புத் திருமணம் போன்ற கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் தீவிரமாக செயல்பட்ட தலித்துகள் ஆதிக்கச் சாதியினரின் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாயினர். இந்த உழைப்பின் பயனால்தான் அது மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து அரசியல் கட்சியாகவும் பரிணமித்தது. திராவிட அரசியலின் அதிகாரத்தை நோக்கிய பயணத்தில், ஏற்கனவே திராவிட இயக்கச் செயல்பாடுகளில் பெரிதும் பங்கெடுக்காத, வட்டார அதிகாரம் கொண்ட ஆதிக்கச் சாதியினர் முனைப்பு காட்டினர். இதன் விளைவாக தலித்துகள் தி.மு.க.வின் கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர். தி.மு.க.வின் அதிகார மிக்க பொறுப்புகளான மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் பதவிகளுக்கு தலித்துகள் நியமிக்கப்படுவது அல்லது கட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாமல் போனது. ஆரம்பத்தில் வெள்ளாள சாதிகளும் பின்பு இடைநிலை சாதிகளும் தி.மு.க.வில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினாலும் தலித்துகள் ஒரே ஒரு தலைமையை மட்டுமே நம்பி கட்சியில் தொடர்ந்து வந்தனர் அவர்தான் கலைஞர் கருணாநிதி.

தமிழகத்தின் எண்ணிக்கைச் சிறுபான்மையான, இந்து கோயில் மரபு ஒடுக்குதலை சந்தித்த ஒரு சாதியில் பிறந்ததும், திராவிட சித்தாந்தத்தை தீவிரமாக பின்பற்றியவருமாக இருந்ததாலேயே தலித்துகளுக்கு கலைஞரின் தலைமையிலான தி.மு.க.வின் மீது தீராத காதல் இருந்தது. எப்போதெல்லாம் தலித்துகள் தி.மு.க.வின் மீது வெறுப்பு கொண்டு வெளியேற வேண்டுமென நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் ஆதிக்கச் சாதியினர் கலைஞரை சாதி ரீதியாக வசைபாடியதை தலித்துகள் நினைவு கூர்ந்து தி.மு.க.வில் நீடித்து வந்தனர். ஒவ்வொரு வட்டாரத்திற்குத் தகுந்தாற் போல கலைஞரின் சாதி விளித்துக் கொள்ளப்பட்டது. அவர் நாவிதர், மேளக்காரர், நாயனக்காரர் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இதுதான் தலித்துகளை அவருடன் இன்னும் நெருக்கமாக்கியது. கலைஞரே ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதும், தலித்துகள் மீது எவ்வாறு இந்து மதம் தீண்டாமையை சுமத்தியதோ அதே போல தேவதாசி மரபையும் சில சமூகத்தினர் மீது சுமத்தியது என்ற ஓர்மையே கலைஞரை தங்களுக்கான தலைவராக தலித்துகள் பார்த்து வந்தனர்.

இடைநிலைச் சாதியினர் தி.மு.க.வின் அரசியல் முகவர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டபோது சமூகத்தில் தலித்துகள் மீதான இடைநிலை சாதியினரின் ஒடுக்குதலை தி.மு.க. கண்டும் காணாது போல் இருந்தது என்று விமர்சித்த தலித்துகளே பின்னாட்களில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. தொண்டர்களானார்கள்.
தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.விற்கு தலித்துகள் சென்றது எம்.ஜி.ஆரின் சினிமா முகமதிப்பிற்காக மட்டுமே கிடையாது. தி.மு.க.வினால் அரசியல் பலம் பெற்ற ஆதிக்கச் சாதியினர் தலித்துகளுக்கு எதிராக வினையாற்றத் தொடங்கியதே தென் மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான தலித்துகள் தி.மு.க.வை விட்டு வெளியேறி அ.தி.மு.க.வை ஆதரிக்கத் தொடங்கினர். இந்த இழப்பை இன்றுவரை தி.மு.க.வால் சரிசெய்ய முடியவில்லை. தி.மு.க.வின் கோட்டையாக இருந்த சென்னையை தி.மு.க. இழந்ததும் சென்னை மையத்திலிருந்து தலித்துகள் அப்புறப்படுத்தப்பட்டதும், தென் மாவட்ட ஆதிக்கச் சாதியினர் சென்னையில் அதிகமாக குடியேறியதுமே காரணமாகும்.

தி.மு.க.வில் தலித்துகளின் பங்கெடுப்பை இரண்டு காலகட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, அண்ணா தலைமையிலான தி.மு.க. காலங்களிலிருந்தே (1949) தி.மு.க.விலிருந்து தலித்துகள் அப்புறப்படுத்தல் நடந்தாலும் அரசியல் அதிகாரம் இல்லாததால் இதன் வீச்சு குறைவாக இருந்தது. தி.மு.க. அதிகாரத்தைக் கைப்பற்றிய (1967) ஒரு வருடத்தில் அண்ணாவின் மறைவுக்குப் பின்பு கலைஞர் தலைமைக்கு வந்த பின்பு முற்பட்ட சாதிகளின் ஆதிக்கம் குறைந்து இடைநிலை சாதிகளின் கைகளுக்கு வந்தது தி.மு.க. 1990 களுக்குள் தி.மு.க.வின் கட்சிப் பொறுப்புகளில் மிக சொற்பமான தலித்துகளே எஞ்சியிருந்தனர். தலித்துகளின் மக்கள் தொகைக்கேற்பவோ அல்லது தி.மு.க. வாக்கு வங்கியில் அவர்களின் பங்கிற்கேற்பவோ அவர்களுக்கு கட்சிப் பொறுப்புகளில் இடம் வழங்கப்படவில்லை. இது அ.தி.மு.க.விற்கும் பொருந்தும். புதிய தலைமுறை தலித்துகளும் 1990-களுக்குப் பின்பு தலித் அரசியலில் அணி திரள ஆரம்பித்தனர். இது தி.மு.க.விற்குதான் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் தி.மு.க.வில் தலித் தலைமைக்கான முக்கியத்துவம் தரப்படவில்லை. இதற்கு கலைஞரை மட்டுமே காரணமாக சொல்லிவிடமுடியாது. தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்களாகவும், மாவட்டப் பொறுப்புகளிலும் இருந்த ஆதிக்கச் சாதியினரின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டே கட்சி செயல்பட்டது. அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட செயலாளருக்கே அதிகாரம் என்பது உள்கட்சி ஜனநாயகமாக பார்க்கப்பட்டாலும் அது சாதியாக செயல்பட்டது என்பதே யதார்த்தம். ஆனால் தி.மு.க.வின் கடைசித் தொண்டர்களாக இருந்த தலித்துகள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை பார்ப்பனியத் தலைமை என்றும் தி.மு.க.வே பெரியார் வழியிலான உண்மையான திராவிடக் கட்சி என்று நம்பியும் பேசியும் வந்தனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பெருமளவில் பங்கெடுத்த இடைநிலை சாதியினர் தலித்துகள் போன்ற கொள்கைப் பிடிப்புடன் தி.மு.க.வை பார்க்கவில்லை. அவர்கள் அதை அதிகாரம் தரும் ஒரு அரசியல் கட்சியாகவே பார்த்து வந்தனர். பெரியார் வழியிலான கலைஞரின் தலைமைக்குப் பின்பு சித்தாந்த ரீதியாக தலித்துகளைக் கவர தி.மு.க.வில் ஒருவரும் கிடையாது என்பது மிகையல்ல.
#கலைஞர் #தலித்துகள்

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கலைஞர் காமராஜருக்கு மெரினாவில் இடம்தரவில்லை என வதந்தி பரப்புவார் கவனத்திற்கு!


கலைஞர் காமராஜருக்கு மெரினாவில் இடம்தரவில்லை என வதந்தி பரப்புவார் கவனத்திற்கு!

அக்டோபர் 2, காமராஜர் மறைந்த அன்று சோகமே உருவாக, அப்போதைய முதல்வர் கலைஞரும், அவர் அமைச்சரவை சகாக்களும் அவரது உடலை சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திலேயே காமராஜர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் அங்கேயே நடத்த திட்டமிட்டனர். முதல்வர் கலைஞரின் காதுகளுக்கு இந்த தகவல்போனது.
கொதித்துவிட்டார் கலைஞர்.

 “காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகாரி ஒருவர், காமராஜர் அப்போது எந்த பொறுப்பிலும் இல்லாததை சொல்லி, சில சட்ட சம்பிராதாயங்களை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச்சொன்னார்.

 மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கலைஞர், " நான்  சொன்னதை செய்யுங்கள்...மேலும் காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான ராஜாஜி நினைவகம் அருகில்தான் அடக்கம் செய்யவேண்டும்...காமராஜருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை"  என கறாராக கூறினார் கலைஞர்.

காமராஜர் உடல் புதைக்கப்படவில்லை சமாதி கட்ட!

காமராஜர் உடல் தகனம்தான் செய்யபட்டது

எனவே கடற்கரையில் சமாதி கட்ட முடியாது

அதனால் காந்தி மண்டபம் அருகே காமராஜருக்கு மணிமண்டம் கட்டப்பட்டது

அதையும் கலைஞர்தான் செய்தார்!

புதன், 8 ஆகஸ்ட், 2018

#கலைஞர் 95


#கலைஞர் #கருணாநிதி 95.

1. பிறப்பு : 1924 ஜுன் 3ஆம் தேதி

2. தந்தை : முத்துவேல்

3. தாயார் : அஞ்சுகம்

4. சகோதரிகள் : சண்முகசுந்தரம், பெரியநாயகி

5. இடம் : திருக்குவளை கிராமம், திருவாரூரில்இருந்து 15 மைல் தொலைவில்

6. தந்தையின்முதல்மனைவி : குஞ்சம்மாள்

7. இரண்டாம்மனைவி : வேதம்மாள்

8. மூன்றாவதுமனைவி : அஞ்சுகம்

9. கலைஞரின் முதல்மனைவி :பத்மா (திருமணம் 1944 செப்டம்பர் 13. காலமானது 1948). இவர் இசைச் சக்ரவர்த்தி சி. எஸ். ஜெயராமனின் சகோதரி.

10. இரண்டாம் மனைவி : தயாளுஅம்மாள் (1948 செப்டம்பர் 15)

11. மூன்றாம் மனைவி : ராஜாத்திஅம்மாள் (திருமணம் 1966)

12. பிள்ளைகள் :மு.க. முத்து, முதல்மனைவிக்குப் பிறந்தவர்.

13. ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு(தயாளு அம்மாவுக்குப் பிறந்தவர்கள்)

14. கனிமொழி (ராஜாத்தி அம்மாள்)

15.  அவருடைய பெற்றோர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஓர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடனக் கலைஞராக இருந்தார்.

16. கலைஞரின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவம், ஏழ்மையில் இருந்த போதிலும், அவர் தமிழ் மீதும் தமிழ்  இலக்கியத்தின் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்தார்.

17. நீதிக்கட்சியின் தூண்களுள் ஒருவரான பனகல் அரசர் பற்றிய நூல், கலைஞரின் பாடமாக இருந்தது.அந்தப் பள்ளியிலேயே கலைஞர் மட்டுமே அந்த 50 பக்க நூலையும் மனப்பாடம் செய்திருக்கிறார்.கலைஞரின் அரசியல் ஆர்வத்திற்கான விதையை இந்நூலே தூவியது எனச் சொல்லலாம்.

18. அந்தக் காலக்கட்டத்தில் தான்  தந்தை பெரியார் சுயமரியாத இயக்கத்தைத் துவக்குகிறார். அவரது தளபதியாக உருவெடுக்கிறார், பேரறிஞர் அண்ணா. இச்சமயத்தில் அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரியார், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிட, முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் உருவானது. பெரியார் தொண்டர்கள் மாநிலம் முழுதும் கிளர்ச்சி செய்தனர்.

19. ஜூன் 3, 1938. சைதையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் அழகிரிசாமியின் புயலை ஒத்த பேச்சும், மறைமலை அடிகளாரின் செந்தமிழ் உரையும், பேரறிஞர் அண்ணாவின் அறிவு பூர்வமான அழகு தமிழ் உரையும் இந்தி எதிர்ப்புத்தீயை பரவிடச் செய்தன. மாணவன் கலைஞரின் மனதிலே இவையே மாபெரும் மாற்றத்தைச் செய்திட்டன.

20. அப்போதே குல்லுகப்பட்டர் இராசாசி, தமிழ்த்தாயைக் கத்தியால் குத்துவது போல படம் வரைந்து, ஒரு சைக்கிள் ரிக்ஷா ஊர்வலம் நடத்தினார். இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்ற முழக்கத்துடன் அந்தச் சாலை வழியே வந்த தனது இந்தி ஆசிரியருக்கும் ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்து இந்தி ஒழிக என்று கத்தியது அந்த இளஞ் சூரியன்.


21. பள்ளியில் படிக்கும் போதே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்கினார். ஆனால் பேசுவதற்கு முன் குறிப்பெடுப்பது, பேசிப்பேசிப் பழகுவது எனத் தன்னைத்தயார் படுத்திக் கொண்டே போட்டிகளில் ஈடுபடலானார். அந்தப் பழக்கத்தை அவர் கைவிடவே இல்லை.

22. தனது 15வது வயதில் மாணவ நேசன் எனற பெயரில் ஒரு கையெழுத்துப் பிரதியை உருவாக்கி அதனை ஐம்பது பிரதிகள் எடுத்து, நண்பர்களின் தனிச்சுற்றிற்கு அனுப்பி வைத்தார்.

23. இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது.

24. கலைஞரின் தந்தை முத்துவேலர் கவியாற்றல் கொண்டவர். வடமொழி கிரந்தங்களில் தேர்ச்சி உடையவர். இயல்பிலே கவியாற்றல்,எழுத்தாற்றல் கொண்டிருந்த கலைஞருக்கு சமயத்தின் பால் சிந்தனை செல்லவில்லை.

25. பள்ளிக் காலத்திலேயே தந்தை பெரியாரின் குடியரசு இதழை வாங்கிப்படித்ததால் நாத்திகரானார்.

26. ஒரு முறை ஒரு மதப்பிரசங்கி சைவ உணவு பற்றித் திருவாரூரில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த கலைஞர் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார். சைவர், மரக்கறி உணவின் பெருமையைக் கூறி அசைவ உணவைச் சாடினார்.  ஒரு கோழியைத்தின்று விட்டால், அவ்வளவுதான் கோழி மறைந்து விடும். மீன் ஆடு..எல்லாம் அப்படித்தான். அழிந்து விடும். ஆனால், கத்திரிக்காய் சாப்பிட்டால், செடி அப்படியே இருக்கும், தேங்காய் சாப்பிட்டால், தென்னை மரம் அப்படியே இருக்கும்…என்று கூற..சிறுவன் கலைஞர் எழுந்தார்: அய்யா, கொத்தமல்லியைச் சாப்பிட்டால், மல்லிச் செடி இறந்து விடுமே, அது அசைவ உணவா? என்று கேட்க வாயடைத்துப் போனாராம்…

27. பள்ளியிறுதித்தேர்வில் மூன்று முறை ஃபெயில் ஆனார். நான்காவது முறை எழுத அனுமதி இன்மையால் படிப்பை நிறுத்தியது அந்த சுயம்புச் சூரியன்.

28. 1939 பள்ளியில் நடைபெற்ற சொற்போட்டியில் “நட்பு” என்ற தலைப்பில் பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு மாணவர். அதுவே அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு. அதே சமயம் தான் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து வாரம்தோறும் பேச்சுப் பயிற்சி அளித்தார். அப்போதே மாணவர்களிடையே வார சந்தா வசூலித்து அமைப்பு ரீதியாகச் செயல்பட்டார்.

29. 19.4.1940 மாணவர் ஒற்றுமைக்கென  "தமிழ்நாடு மாணவர் மன்றம்" என்கிற தனி அமைப்பு ஏற்படுத்தி வாரம்தோறும் கூட்டம் நடத்தினார். 1941 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் கிளைகள் தஞ்சை மாவட்டத்திலும், தமிழ் நாட்டில் பல இடங்களிலும் ஏற்படுத்த அயராது பாடுபட்டார்.

30. 1942 பேரறிஞர் அண்ணா நடத்திய “திராவிட நாடு” மூன்றாவது இதழில் “இளமைப் பலி” என்ற இவரது எழுத்தோவியம் வெளிவந்தது. திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகைதந்த அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடநாடு இதழுக்கு எழுதும்   இளைஞரைக் கூட்டிவாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஒரு சிறுவனை அண்ணாவின் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அந்த எழுத்துக்கு உரியவன் இந்தச் சின்னப்பையனா? என அண்ணா ஆச்சரியப்பட்டுப்போனார். படித்து முடித்து விட்டுவா உன்னை சுயமரியாதை இயக்கத்தில் சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறி கலைஞரை அனுப்பி வைத்தாராம் அண்ணா. ஆனால் அண்ணாவின் இந்த அறிவுரையைக் கலைஞர் கேட்கவில்லை. இது பற்றிப் பல முறை வருந்தியிருக்கிறார், கலைஞர்.


31. 1942 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அன்றைய மாணவர்களை அழைத்துப் பேசச் செய்தார். அந்த ஆண்டு விழாவின் போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப்பாடல் பிற்காலத்தில் உணர்ச்சிக் கவிதையாக வரலாற்றுப் புகழ் பெற்று அமைந்தது. இந்நிகழ்ச்சியின் போது நிதிப் பற்றாக்குறைக்காக தமது கைச்சங்கிலியை அடகு வைத்துச் சமாளித்தார்.

32. இதே ஆண்டில் தான் “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரால் ஒரு நிறுவனம் தொடங்கி “முரசொலியை” மாத இதழாக 10.08.1942ல் வெளியிட்டார்.  அதில் “சேரன்” என்ற புனைப் பெயரால் கனல் தெறிக்கும் கட்டுரைகளை எழுதினார்.

33. 28.5.1944 திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் (பேபி டாக்கீஸ்) முதன் முதலாகப் ‘பழனியப்பன்’ என்ற சீர்திருத்த நாடகத்தை அரங்கேற்றினார். திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார் அவர்கள் கலைஞரின் முரசொலி ஏடு கண்டு மிகச்சிறந்த பணி என்று பாராட்டினார். அன்று முதல் பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு  பேசத்தொடங்கினார். திராவிட நடிகர் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் ‘பழனியப்பன்’ நாடகத்தை நடத்தியதோடு அதில் முக்கியப் பாத்திரமேற்று நடித்தார்.

34. 11.11.44 அன்று பத்மாவதி அம்மையாரை வழக்கறிஞர் விசயராகவலு தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.

35. புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது காங்கிரசார் கலைஞைரைக் கடுமையாகத் தாக்கினார்கள். மயங்கி விழுந்து விட்டவரை இறந்துவிட்டார் எனக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டனர். கருணை உள்ளம் கொண்ட தாய் ஒருவரும், இளைஞர் ஒருவரும் அவரைக் காத்தனர். மறுநாள் முகமதியர் போன்று மாறு வேடமணிந்து பெரியாரைச் சந்தித்தார். பெரியார் கலைஞரைக் கட்டித் தழுவிக் காயங்களுக்கு மருந்திட்டார். தன்னுடன் அழைத்துச் சென்று “குடிஅரசு” வார இதழின் துணை ஆசிரியராக்கினார்.

36. 19.4.1946 திராவிடர் கழகக் கொடிக்கு மாதிரி அமைத்து நடுவில் உள்ள சிவப்பு நிறத்தைக் குறிக்க, தன் கைவிரலை அறுத்து இரத்தத்தை பதித்தார். முதன் முதலாக தன் குருதியை கொடிக்குக் காணிக்கையாக்கினார்.

37. 19.4.1946 தம் தந்தையார் மரணப் படுக்கையில் இருந்தபோது மருத்துவரை அழைக்க கலைஞர் சென்றார். அப்போது அந்த மருத்துவர், சித்த வைத்தியர்கள் மாநாட்டினை தலைமையேற்று நடத்திக் கொண்டு இருந்தார். அங்கு வந்த தலைவர் கலைஞரை கண்டதும் மாநாட்டில் உடனே அவரை உரையாற்றிட அறிவித்து விட்டார். கலைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நண்பர் தென்னன், தந்தையின்  மரணச் செய்தியோடு வந்தார்.

38. 1947 இந்தியாவுக்குச் சுந்திரம் கிடைத்ததைப் பெரியார் தமிழர்களுக்குத் துக்க நாள் என்றார். அண்ணா “அது திராவிடர்களுக்குத் திருநாள்” என்று குறிப்பிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் களைய, பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாலம் அமைக்க முரசொலியில் ‘கடைசி நாட்கள்’ என்ற கட்டுரையைக்  கலைஞர் வடித்தார்.

39. 1948 துணைவியார் பத்மாவதி அவர்கள் நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த நேரத்திலும் இயக்கத் தோழர்களின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் கலைஞர் புதுக்கோட்டைக் கூட்டத்திற்கு உரையாற்றச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து லாரியில் ஊர் திரும்புவதற்குள்  கலைஞரின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார்.

40. 1948 தயாளு அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதே நாளில் திருமணத்திற்கு சற்று முன்பு, மணமகன் கோலத்தில் இருந்தபோதும், அவ்வழியே சென்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் கலைஞர்.


41. 17.9.1949 இல் திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது. கலைஞர் அதன் தோற்றுநர்களுள் ஒருவர் ஆவர்.

42. தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962

43. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967

44. பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969

45. தமிழக முதலமைச்சர் 1969 – 1971

46. இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976

47. தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983

48. தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986

49. மூன்றாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991

50. நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001


51. ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006-2011

52. கலைஞருக்கு,  கலைஞர் என்கிற அந்தப் பட்டப் பெயரை அளித்தவர் நடிகவேள் ராதா. தூக்கு மேடை நாடகத்தை எழுதியதற்காகப் புளகாங்கிதம் அடைந்து, ராதா இப்பட்டத்தை வழங்கினார்.

53. கலைஞர்தான் என் திரைக்கதை குரு என அண்மையில் மறைந்த இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் முக்தா சீனிவாசன் கூறியிருக்கிறார். மாடர்ன் தியேட்டர்ஸில் சீனிவாசன் பணியாற்றிய போது, அங்கே மந்திரிகுமாரி படத்தை எழுதிய கலைஞரிடம் இருந்து திரைக்கதை நுணுக்கங்களைத்தான் அறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.கலைஞர் உடல்நலம் குன்றி சென்னை காவேரி மருத்துவமனையில் நுழைகிற போது அருகில் இருந்த மருத்துவரிடம்..."ஒரு பேட்ஸ்மேன் 90 ரன் அடிச்சுட்டா அவன் செஞ்சுரி அடிச்சே தீரணும்...ஆனா அதுக்கு பிட்சும் ஒத்துழைக்கணும் இல்லையா" என்றாராம், சிரித்துக் கொண்டே..

54. ஒரு முறை கவிஞர் வாலியின் உணவுமுறை பற்றிப் பேச்சு வந்தது. அவர் சைவமா அசைவமா என. அவர் அய்யங்கார் என்றாராம் அருகில் இருந்தவர்.  கலைஞர் சிரித்துக்கொண்டே..."வாலி..சுறாமீன் சாப்பிடும் பிராமின்..".என்றாராம்...

55. தலைமைச் செயலகத்தில் ஒரு முறை புது லிஃப்ட் அமைக்கப்பட்டிருந்தது. கலைஞர் உள்ளே நுழைய கலைஞரோடு வந்தவர்களில் நான்கு பேர் மட்டுமே செல்லலாம் என்றாராம்  ஆப்ரேட்டர். ஏன்யா என்றாராம் கலைஞர். சார் இதுல அஞ்சு பேர்தான் சார் போலாம் என்றாராம். உடனே கலைஞர் இதென்னய்யா பாஞ்சாலி மாதிரி..என்று  சிரித்துகொண்டே கூறினாராம்.

56. கலைஞர் இசை வேளாளர் பிரிவில் பிறந்ததால், அவருக்கு இசையில் நாட்டம் அதிகம். ஒரு திருமண விழாவில் அண்ணா பேசிய போது, கருணாநிதிக்கு நாயனம் வாசிக்கத்தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாயனம் வாசிக்கக் கற்றுக் கொண்டு பாதியிலே விட்டிருக்கிறார்.

57. தமிழ் நாட்டில் தேவதாஸி முறை முற்றிலும் ஒழிந்ததற்குக் கலைஞர் பெருங்காரணமாவார்.

58. கலைஞர் எங்கும் தனது சாதியைக் குறிப்பிட மாட்டார். ஜெயகாந்தன் ஒரு முறை கலைஞரை பேட்டி எடுக்கையில் உங்கள் அப்பா பேர் என்ன எனக் கேட்க முத்துவேலர் என்றாராம் கலைஞர். முத்துவேல் பிள்ளை என்று சொல்லுங்கள் என ஜே கே சொல்ல, இல்லை வெறும் முத்துவேலர் தான் என்றிருக்கிறார்.

59. கலைஞரின் உயிர்நண்பர்கள் என்றால் அது பெரும்பாலும் சினிமாக்காரர்களே. எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன், வாலி என. எம்ஜிஆரின் தாய் சத்யா அம்மையார், கலைஞரைச் சொந்தப் பிள்ளை போல நடத்தினாராம். அதே போல் அன்னை அஞ்சுகம் அம்மையாரும் எம்ஜிஆரைச் சொந்தப் பிள்ளை போல் நடத்தியிருக்கிறார்.

60. கலைஞர் வாழ்விலேயே செய்த மிகப்பெரும் தவறு, எம்ஜிஆரைக் கட்சியை விட்டு நீக்கியதே. திமுகவில் ஒரு கும்பல் கலைஞர் எம்ஜிஆர் நட்பு பிடிக்காமல் இவர்களை எப்படியாவது பிரித்திடலாம் எனச் சூழ்ச்சி செய்து, இருவரிடமும் கோள் மூட்டிப் பிரிவினையை வளர்த்த போது…மு.க. முத்து ஹீரோ ஆன விஷயம் எம்ஜிஆரிடம் தவறாகக் கூறப்பட்டுள்ளது. இத்தனைக்கும் முத்துவின் முதல் படமான பிள்ளையோ பிள்ளையின் துவக்க விழா எம்ஜிஆர் தலைமையில் தான் நடந்தது. படத்தில் எம்ஜிஆரின் போஸ்டர்களும் காட்டப் படும். இப்படத்தில் மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ என்ற பாடலை வாலி எழுதினார். அப்பாடலைக் கேட்டு எம்ஜிஆர் கோபம் அடைந்து வாலியை அழைத்து..ஏய்யா என் பாட்டை எல்லாம் அவனுக்கு எழுதியிருக்கே என்று கடிந்து கொண்டாராம். இந்தச் சூழலில், எம்ஜிஆர், கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேரப் போகிறார் என்கிற தகவல் வரவே, கலைஞர் அவரை சஸ்பெண்ட் செய்ய எண்ணினார். அப்போது எம்ஜிஆரை நீக்காதீர்கள் என அழுது புலம்பியது முரசொலி மாறன் அவர்கள். நீக்கச் சொன்னது நாவலர் உள்பட அனைத்துத் தலைவர்களும். கடைசியாக மாறன் பேச்சைக் கேட்டு, நீக்கும் முடிவை கலைஞர் கைவிட, அதற்குள், நெடுஞ்செழியன் பத்திரிகையாளர்களுக்குச் சொல்லி விட்டார்…திமுக வின் சரிவு துவங்கியது.


61. எம்.ஜி.ஆரும் கலைஞரும் அரசியலில் கீரியும் பாம்பும் போல இருந்தாலும் சட்டசபையிலோ அல்லது வெளியிலோ, ஜெயலலிதாவைப் போல கருணாநிதி என்று சொன்னதில்லை. கலைஞர் என்றே குறிப்பிடுவார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒருமுறை சட்டசபையில் உரையாற்றிய ஒரு அ.தி.மு.க உறுப்பினர், கருணாநிதி, என்று பெயர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவரை அழைத்த எம்.ஜி.ஆர், நானே அவரை பெயர் சொல்லி அழைப்பதில்லை. இனிமேல் அவரை கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும் என்று கடிந்து கொண்டாராம்.. அதனால் தான் எம்.ஜி.ஆர். மரணமடைந்த தகவல் கிடைத்ததுமே அதிகாலைப் பொழுதிலேயே ராமாவரம் சென்று படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினார்.

62. இந்திராவால் 356 பிரிவின் கீழ், 170 எம் எல் ஏ வைத்திருந்த  கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டு, 13 ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞரை, இந்திராவின் பிள்ளை ராஜீவின் தூண்டுதலால், சந்திர சேகர் அதே 356 பிரிவின் கீழ் கலைத்தார். இந்தியாவிலேயே இரண்டு முறை கலைஞர் ஆட்சிதான் கலைக்கப் பட்ட்து.

63. திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது திண்டு எங்களுக்கு, கல் எம்ஜிஆருக்கு என்று பேசினார். எம்ஜிஆர் அதைக் காப்பி அடித்து, திண்டு எங்களுக்கு, கல் கருணாநிதிக்கு என்றார். அதற்கு அழகாய் பதில் அளித்தார்: ஆம்..தோல்வியால் துவண்டு தூங்க திண்டு உங்களுக்கு, வெற்றியைப் பொறித்திட கல் எங்களுக்கு. (ஆனால் தேர்தலில் தோற்றார் என்பது வேறு விஷயம்)

64. 1980ல் நாடாளுமன்றத் தேர்தலின் போது: சோதனையின் கொம்புடைத்து சாதனையாக்கிடும் காலம் கனிந்தது என்றார். 38 தொகுதிகளில் கழகம் வென்றது.

65. ஒரு முறை சத்துணவின் கூட இரண்டு முட்டைகள் வழங்க உத்தரவிட்டார், அப்போது அருகிலிருந்த துரைமுருகன், தலைவரே ரெண்டு முட்டைய வெச்சி ஆம்லெட் போடச்சொல்லலாமே, என்றதற்கு,வேணாய்யா. பாயில்டு முட்டன்னா ரெண்டா ஒன்னான்னு சந்தேகம் வராது.ஆனா ஆம்லெட்னா, ஒரு முட்டைல ஊத்திட்டு ரெண்டுன்னு சொல்லி ஏமாத்த முடியும்  இல்ல..அதனால வேக வெச்ச முட்டையே தருவோம் என்றார்.

66. தான் ஆட்சியில் இருந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தலைமைச் செயலகம் சென்று பணியாற்றுவார். தலைமைச் செயலக அதிகாரிகள் முணுமுணுத்துக்கொண்டு பணியாற்றுவர். ஏனென்றால், முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருக்கும்போது எப்போது என்ன கேட்பாரோ என அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும் தலைமைச் செயலகத்துக்கு வந்துவிடுவார்கள்.

67. 1999-ம் ஆண்டு ஓர் அதிகாலைப் பொழுதில், புழல் ஏரி உடையும் அபாயக் கட்டத்தில் இருப்பதாக அன்றைய முதல்வர் கலைஞருக்குத் தகவல் தரப்படுகிறது. உடனே உயர் அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்கு வரச்சொல்லிவிட்டு தானும் புறப்பட்டுப் போகிறார். அதற்கு முன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளையும் துணை ராணுவப் படையினரையும் செல்லச் சொல்லி உத்தரவிட்டார். அதுபற்றி எழுதிய ஆங்கில நாளேடு ஒன்று, ''அதிகாலையில் கருணாநிதி தலைமைச் செயலகம் சென்றபோது லிஃப்ட் ஆபரேட்டரும் இல்லை. லிப்ஃட்டும் தரைத்தளத்தில் இல்லை. உடனே முதல்வர் படிகள் வழியே தன் அறைக்குச்  சென்றார். அவசரத்தில் முதல்வரின் கால்கள் இரண்டு இரண்டு படிகளைத் தாண்டி தாண்டிச் சென்றன'' என்று குறிப்பிட்டது.

68. கலைஞருடைய ஞாபக சக்தி உலகப் பிரசித்தம். ஆனால் அதை தனது குறைபாடாகத்தான் கருதினார் கலைஞர். பலரும் செய்த துரோகங்கள் நினைவில் இருந்தால் உறுத்திக் கொண்டே இருக்கும். எனவே மறதி ஒரு மாமருந்து என்றார்.

69. நீண்ட ஆயுள் பற்றிப் பேசுகையில் அதுவும் ஒரு சாபம் என்றார். கூட இருந்தவங்க ஒவ்வொருத்தராப் போய்கிட்டே இருந்தா, நமக்கு அதை விடச் சோகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றார்.

70. தமிழின் பல சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமை கலைஞரைச் சாரும். கழகம், வாரியம், ஒன்றியம், போக்குவரத்து, கால்நடை போல…

71. சட்டசபையில் கலைஞரின் நகைச்சுவை பற்றி ஒரு தனி நூலே எழுதலாம். குறிப்புகள் இல்லாமல் எங்கும் பேசவே மாட்டார். அதே போல், சட்ட மன்றத்தில் யார் என்ன பேசினாலும் அதை அவர் மறக்கவே மாட்டார். அதிமுக எம் எல் ஏ ஜி.விசுவநாதன்(வி ஐ டி) ஒரு முறை எம்ஜிஆர் முன்னிலையில் உங்களுக்கு எல்லாம் நல்ல படியாக அமைந்து விட்டது, ஆனால் நல்ல எதிர்க் கட்சித்தலைவர் தான் அமையவில்லை..எனக் கலைஞரைக் கிண்டலடித்துக் கூறியிருக்கிறார். கலைஞர் அவரை முறைக்க, எம்ஜிஆர் அதை ரசித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிவி குடும்பத்தோடு கலைஞர் இல்லம் போக, அவரது பிள்ளைகளிடம் உங்கப்பா அசெம்பிளில என்னப் பத்தி என்ன சொன்னாரு தெரியுமா என்று ஜிவி கூறியதை அப்படியே கூறியுள்ளார்.

72. சினிமா நிகழ்ச்சிகளில் கலைஞர் விரும்பிக் கலந்து கொள்வார். ஆனால் படத்தைப் பார்த்து விட்டுத்தான் பேசுவார். ”படையப்பா வசூல் ரெகார்டையெல்லாம் உடையப்பா” விஜய்க்கு லவ் டுடே, எனக்கு லவ் யெஸ்டர் டே” “ டி.ஆர். என்னில் பாதி”..என்பது போலப் பல பட விழாக்களில் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.

73. மாறன் சகோதரர்களுக்கும் கலைஞருக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கின்போது (2008), 'உளியின் ஓசை' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய ஒரு வசனம் இது: 'பறக்கத் தெரியும் என்பதற்காக சூரியனுக்குள் பாயக்கூடாது.'

74. முரசொலிக்கு வரும் கட்டுரைகள் கலைஞரின் ஒப்புதல் பெற்றே  பிரசுரமாகும். ஒருமுறை தன் இருக்கையின் நுனியில் உட்கார்ந்துகொண்டு கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார் கலைஞர். அப்போது மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி அவர்கள் கலைஞரிடம், ''சேரில் சாய்ந்துகொண்டு பாருங்களேன்'' என்றார். அதற்கு கருணாநிதி  சொன்னார், ''வேணாங்க சாஞ்சிக்கிட்டா சோம்பேறித்தனம் வந்துடும்''. - இப்படிச் சொன்னபோது அவருக்கு வயது எண்பத்து இரண்டு.

75. இந்திப்படங்களை விரும்பிப் பார்ப்பாராம். மாடர்ன் தியேட்டர்சில் இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி சுந்தரம், ஒரே நாற்காலி போட்டு உட்காரும் பழக்கம் உள்ளவர். அவர் இரண்டே பேருக்கு மட்டுமே தன் எதிரில் அமர அனுமதி வழங்குவாராம். அதில் ஒருவர் கலைஞர். மற்றவர், கண்ணதாசன்.

76. கலைப்புலி தாணு  தி முக விற்காக ஒரு பிரச்சாரப் படம் செய்ய விரும்பிய போது  ஒப்புக்கொண்டு தனது பழைய ஃபுட்டெஜெல்லாம் கொடுத்து உதவினார்.  தாணு அவர்கள் இசையமைத்து அவரே பாடல்களும் எழுதினார். கலைஞர் அடிக்கடி எடிட்டிங்கிற்கு வந்து மாற்றங்கள் சொல்வதுண்டு. அப்போது ஓர் இடத்தில் பிச்சைக்கார மறுவாழ்வைப் பற்றிச் சொல்கையில் அய்யா சாமி தர்மம்  பண்ணு. அம்மா தாயே தர்மம் பண்ணு..இட ஒழிச்சவர் நம்ம கலைஞரு..என்று வந்தது. அந்த இடத்தில் நிறுத்தச் சொன்ன கலைஞர், தாணு..அத அய்யா சாமி பிச்ச போடு.. அம்மா தாயே பிச்ச போடுனு மாத்திடு..இல்லன்னா..கருணாநிதி.தர்மம் பண்றத ஒழிச்சாருன்ற மாதிரி ஆயிடும்.. என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

77. ஒரு முறை கலைஞரோடு திமுக பிரச்சாரப் படம் எடுப்பது குறித்து ஒரு சந்திப்பு. அப்போது பேசிக்கொண்டிருக்கையில் நான் சொன்னேன் அய்யா நீங்க ஒரு முறை என்னை எல்லோரும் முதல் அமைச்சர் என்கிறார்கள். ஆனால் அண்ணா என்கிற முதலை இழந்த அமைச்சர் நான்  சொன்னீங்க என்றேன்..சொன்னேனாயா என்றார்..ஆமாய்யா சொன்னீங்க என்றேன்..அவர் ஆச்சர்யத்தோடு தாணு சாரைப் பார்த்து, சின்ன புள்ள எவ்ளோ ஞாபகம் வெச்சிக்கிட்டிருக்கு என்றார். மு.க ஸ்டாலின் அவர்களும், சண்முகநாதன் அவர்களும் கூட இருந்தனர்.

78. நெருக்கடியான தருணங்களில் துணிச்சலுடன் முடிவெடுப்பார். கொள்கை அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வார்.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி:  தந்தை பெரியார் தனது  94 வது  வயதில் காலமானார் என்ற செய்தி ‘கலைஞருக்குதெரிவிக்கப்பட்டது. தனது ஆட்சியில் அப்பெயரியவருக்கு பிரமாண்டமான இறுதி மரியாதையைச் செய்து விட வேண்டும் என எண்ணினார் கலைஞர். தலைமைச் செயலாளரை அழைத்து சென்னையில் மறுநாள் பூரண அரச மரியாதைகளும் பெரியாரின் பூதவுடல் பெரியார் திடலில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொன்னார்.  தலைமைச்செயலாளர், பெரியாருக்குப் பூரண அரச மரியாதை அளிப்பதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அவர் ஒரு மக்கள் தலைவராக இருந்தாலும் அரசு பதவிகள் எதையும் வகிக்காதவர், அரசு பதவி வகிக்காதவருக்கு அரசு மரியாதை தரும் வழக்கம் கிடையாது. அப்படிச்   செய்தால் மத்திய அரசுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் என்றார். அதெல்லாம் எனக்குத் தெரியாது.... பூரண அரச மரியாதைகளுடன் பெரியாரின் நல்லடக்கம் நடைபெறவேண்டும் என்று கலைஞர்சொன்னதும், எப்படி விதிகளை மீறுவது? என்று இழுத்தார் தலைமைச்செயலர். மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு அரச பதவியாவது வகித்திருக்கிறாரா? அவருக்கு மத்திய அரசாங்கம் பூரண அரச மரியாதைகளுடன்தானே இறுதிக்கிரியைகளைச் செய்தது? காந்திக்கு ஒருநீதி பெரியாருக்கு ஒருநீதியா? பெரியாருக்கு பூரண அரச மரியாதைகளுடன் இறுதி மரியாதை நடக்கவேண்டும். இதனால் ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று சொல்லி அவரை அனுப்பினார் கலைஞர். பூரண அரச  மரியாதைகளுடன் நடைபெற்றன பெரியாரின் நல்லடக்கம்.

79. இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்த போது அவருடன் கூட்டணி வைத்திருந்த கலைஞர் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் நெருக்கடிநிலையை எதிர்த்தார். நெருக்கடி நிலைகாலத்தில் இயற்றப்பட்ட மிசாசட்டத்தின் கீழ்பல தி.மு.க தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

80.  அவ்வாறு சிறைசென்றவர்களில் ஒருவர் ஸ்டாலின். சிறையில் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். தி.மு.க தலைவர்களுள் ஒருவரான சிட்டிபாபு சிறைக் கொடுமைகளுக்கு  ஆளாகி உயிரிழந்தார்.


81. 1983 ஆம் ஆண்டு ஈழ இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசு இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் எனக்கோரி தன் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

82. இந்திய அமைதிப் படை இந்தியா வந்த போது இந்திய வீரர்களை வரவேற்பதற்கு கலைஞர் அங்கே செல்லவில்லை. பின்னர் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, என் சகோதரர்களான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தவர்களை நான் வரவேற்கமாட்டேன்  என்று துணிச்சலாக சொன்னார்.

83. வேலூரில் கண்டி மன்னன் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கல்லறை அமைந்திருக்கும் இடம் மிகமிக அசுத்தமாக்க் கேட்பாரற்றுக் கிடந்தபோது, , முத்துமண்டபம் என்ற பெயரில் கட்டிடமொன்றை எழுப்பி கண்டி மன்னர் மற்றும் குடும்பத்தினரின் கல்லறைகளைப் பாதுகாத்தார்.

84. தமிழகத்தில் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டபோது கொலையாளிகள் தப்பிச் செல்வதற்கு கலைஞர் உடந்தையாக இருந்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனால் ஆட்சியை இழந்தார்.

85. பின்னர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்ட போது, திமுக பெருத்த அடி வாங்கியது. 1991 தேர்தலில் கலைஞர் மட்டுமே வென்றார்.

86. கலைஞர் இந்திய வரலாற்றிலேயே தேர்தலில் தோல்வியுறாத ஒரே தலைவர் ஆவார்.

கலைஞரின் சட்ட மன்ற சாதனைகள்:
1957  குளித்தலை
1962  தஞ்சாவூர்
1967  சைதாப்பேட்டை 
1971  சைதாப்பேட்டை
1977  அண்ணா நகர்
1980  அண்ணா நகர்
1989  துறைமுகம்
1991  துறைமுகம்
1996  சேப்பாக்கம்
2001  சேப்பாக்கம்
 2006  சேப்பாக்கம்
 2011  திருவாரூர்
2016 திருவாரூர் 

87. விருதுகள்:
அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.

88. தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.

89. தமிழ்நாட்டு ஆளுநரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.

90. தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.


91. கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

• மந்திரிகுமாரி (1950)[1]

• பராசக்தி (1952)[2]

• திரும்பிப்பார் (1953)

• மனோகரா (1954)[3]

• அம்மையப்பன் (1954)[4]

• ராஜாராணி (1956)[5]

• புதுமைப்பித்தன் (1957)[6]

• காஞ்சித்தலைவன் (1963)

• பூம்புகார் (1964)

• கண்ணம்மா (1972)

• காலம்பதில்சொல்லும் (1980)

• இளைஞன் (2011)

• மண்ணின்மைந்தன்

• புதியபராசக்தி

• பாலைவனரோஜாக்கள்

• நீதிக்குதண்டனை

• பாசப்பறவைகள்

• பாடாததேனீக்கள்

• பாலைவனப்பூக்கள்

• உளியின்ஓசை



92 . திரைக்கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்:

1. பணம் (1952)

2. எல்லாரும்இந்நாட்டுமன்னர் (1960)

93.வசனம் எழுதிய திரைப்படங்கள்

1. ராஜகுமாரி (1947)

2. மலைக்கள்ளன் (1954)

94.திரைப்படங்களுக்கு எழுதியுள்ள சில பாடல்கள்:

1. ஊருக்குஉழைப்பவண்டி - மந்திரிகுமாரி

2. இல்வாழ்வினிலேஒளி.. - பராசக்தி

3. பூமாலைநீயே - பராசக்தி

4. பேசும்யாழேபெண்மானே - நாம்

5. மணிப்புறாபுதுமணிப்புறா - ராஜாராணி

6. பூனைகண்ணைமூடி - ராஜாராணி

7. ஆயர்பாடிகண்ணாநீ - ரங்கோன்ராதா

8. பொதுநலம்என்றம் - ரங்கோன்ராதா

9. அலையிருக்குதுகடலிலே - குறவஞ்சி

10. வெல்கநாடுவெல்கநாடு - காஞ்சித்தலைவன்

11. ஒருவனுக்குஒருத்திஎன்ற - பூம்புகார்

12. கன்னம்கன்னம் - பூமாலை

13. காகிதஓடம் - மறக்கமுடியுமா

14. ஒண்ணுகொடுத்தா - மறக்கமுடியுமா

15. நெஞ்சுக்குநீதியும் - நெஞ்சுக்குநீதி

95.திரைப்பட வடிவம் பெற்ற இலக்கியப் படைப்புகள்:

பொன்னர்சங்கர் எனும் பெயரில் கலைஞர் எழுதிய நூலினை அடிப்படையாகக் கொண்டு பொன்னர்சங்கர் எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டது.


செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

"தலைவர் கலைஞர் அவர்களும், திராவிட முன்னேற்ற கழகமும், தமிழ்நாட்டுக்கு செய்த 125 வகையான வரலாற்று சாதனைகளின் பட்டியல் இதோ!



"தலைவர் கலைஞர் அவர்களும், திராவிட முன்னேற்ற கழகமும், தமிழ்நாட்டுக்கு செய்த 125 வகையான வரலாற்று சாதனைகளின் பட்டியல்   இதோ!

1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்

2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்

6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்

7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்

8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்

9. கை ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்

10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்


11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்

12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்

14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்

15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.

16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்

17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்

20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்


21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்

22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்

23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்

24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்

25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்

26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்

27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்

28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்

29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்

30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது
கலைஞர்


31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்

32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்

33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்

35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்

36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்

37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்


41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்

42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது

43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்

44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்

45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்

46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம்
அமைத்தது கலைஞர்

47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்

50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்.


51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்

52. கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்

54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்

57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்

59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.

60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்


61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்

62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம்
அளித்தது கலைஞர்

63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்

65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்

66. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்

67. ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்

68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்

69. செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்

70. சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்


71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர்
கலைஞர்

72. விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர். (2006-2011
வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)

73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு,
பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல்
கிடைக்கச் செய்தவர் கலைஞர். விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று
(இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)

74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.

75. நன்றிக் கடனாக, சரியான(தேர்தல்) நேரத்தில், பழி கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே
தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள். அதனால்
கொலைபழியை சுமந்தது கலைஞர்.

76. ராஜீவ் படுகொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று ஜெயின் கமிஷன் சொன்னபோது, கழகத்தின்
மீது படிந்த கொலைப்பழியைத் துடைத்தவர் கலைஞர்

76. சமத்துவபுரம் கண்டது கலைஞர்.

77. உழவர் சந்தை தந்தது கலைஞர் .

78. டைடல் பார்க் முதல் ELCOT IT SEZ பார்க்குகளை கொண்டுவந்தவர் கலைஞர் !

79. தமிழகத்தில் தொழில் புரட்சியையும், கணிணிப் புரட்சியையும் கொண்டுவந்தவர் கலைஞர் !

80. தொல்காப்பியர் பூங்கா, செம்மொழி பூங்காக்கள் அமைத்தது கலைஞர் !


81. சமச்சீர் கல்வி கொண்டு வந்தது கலைஞர் !

82. இந்தியாவிலே முதன் முதலாக சென்னை அண்ணா மேம்பாலம் முதல் கோவை அடுக்கு
மேம்பாலம் போன்ற பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டியது கலைஞர் !

83. ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது
கலைஞர்.

84. திராவிடக் கலைநுணுக்கத்தோடு புதிய தலைமைச் செயலகம் கட்டியது கலைஞர் ! (அதை
அழித்தவர் ஜெயலலிதா)

85. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலை மாற்றி மத்திய அமைச்சரவையில்
தமிழகத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிவந்ததோடு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்
படுத்தியவர் கலைஞர் !

86. சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marnie
University)

87. திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)

88. கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.

89. திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)

90. ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல்
ஊனமுற்றோர்க் கான தேசிய நிறுவனம்.


91. சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)

92. திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School)

93. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

94. ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை
மற்றும் ஆராய்ச்சி மையம்.

95. கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள்,
துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள்
போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின...

96. சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

97. 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை """"சூப்பர்
ஸ்பெஷாலிட்டி"" மருத்துவமனையாக மேம்பாடு.

98. கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில்
உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.

99. 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும்
சாலைக்கான துவக்கம்.

100. 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.


101. 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.

102. தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக
மாற்றிட அனுமதி.

103. 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

104. சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

105. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

106. சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

107. 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய
குளிர் உருட்டாலை உருவாக்கம்.

108. கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச்
செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள்,
நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு..

109. நெசவாளர் சமுதாயத்தினர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.

110. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000
கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி.


111. இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.

112. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவது, பல மாவட்டங்களில்
புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்..

113. திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன

114. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டத்தை 1973 ஆம் ஆண்டு துவக்கி
செயல்படுத்தியது கலைஞர்

115. அத்திக்கடவு அவிநாசி குடிநீர் முதல் பகுதியான கோவைக்கு குடிநீர் வழங்கும் "பவானி
அத்திக்கடவு திட்டம்" என்கிற அந்த திட்டத்தை 2001-06 ஆண்டுகளில் செயல்படுத்தியவர் கலைஞர்

116. சென்னையில் கோயம்பேடு காய் கனி அங்காடி, சென்னை மருத்துவ கல்லூரி கட்டிடம்,
நாமக்கல் கவிஞர் மாளிகை, பனகல் மாளிகை, சென்னை டிரேட் சென்டர், புதிய தலைமைசெயலகம்,
அண்ணா நூற்றாண்டு நூலகம்.... இப்படி எண்ணற்ற பெரிய திட்டங்களை கட்டியதும் திமுக தான்..

117. செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா, பெரம்பூர் மாறன் பூங்கா, அண்ணா நகர் பூங்கா....
இப்படி பல பல பூங்காக்களை சென்னையில் உருவாக்கியதும் திமுக ஆட்சிதான்...

118. சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய
நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொருள்
துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்கசெய்தது திமுக...

119. சென்னை துறைமுக விரிவாக்கம், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம்,
நின்றுபோன கிருஷ்ணா கால்வாய் குடிநீர் திட்டம் என்று சென்னையின் வளர்ச்சிக்காக திட்டங்களை
கொண்டுவந்ததும் திமுகதான்...

120. பல பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து தொழில்
வளர்ச்சிக்கு உதவியது திமுக.. தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல்
உற்பத்தியில் முன்னிலை வகிக்க காரணம் திமுக..


121. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை
மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் துவக்கப்பட்டன..

122. தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது 2006-11 திமுக ஆட்சியின் போதுதான்...
தமிழகத்தை தொழில்வளர்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியது கலைஞரின் திமுக
ஆட்சி.. அதின் காரணமாக, இந்தியாவிலேயே GDPயில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ் நாடு..
GST வரிவசூலிலும் இரண்டாம் இடத்தில், அதிகளவு வரி செலுத்தும் உற்பத்தி மாநிலமாக தமிழ் நாடு
முன்னிலை வகிக்கிறது..

123. தமிழ் மொழியிலும் கோயில்களில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும் சட்டமும் போடப்பட்டது
திமுக ஆட்சியில்..

124. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று
குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன..

125. ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1948 ஆம்
ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு
பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்..

இப்படி சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்...

உதாரணத்துக்கு 1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். ஆனால், 2011 இல் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய். 1960
இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2011 இல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது...

தலைவர் கலைஞர் & தளபதி ஸ்டாலின் மற்றும் திமுக ஆட்சியை ஆரிய பார்ப்பனீய சக்திகள் தொடர்ச்சியாக எதிர்ப்பதில் இருந்தே தெரியவில்லையா, கலைஞரும் திமுகவும் தமிழர்களுக்காகவும் & தமிழ் நாட்டின் வளர்ச்சிகாகவும் எவ்வாறெல்லாம் பாடுபடுகிறார்கள் என்று.....

திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றே ஒன்றுதான் - "திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் நல்லது செய்வார்கள்... தமிழகம் மீண்டும் வளர்சிப்பாதையில்
செல்லும், தமிழ் நாடு முதன்மையான மாநிலமாக மாறிவிடும்.. தமிழும் தமிழர்களும் உயர்வு பெறுவார்கள்.... அதனை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும்... தமிழ், தமிழர், தமிழ்
நாடு எல்லாவகைகளிலும் பின்தங்கவேண்டும்", என்ற ஒரே நோக்கம்தான் அவர்களுக்கு... 
வாழ்க! தலைவர்கலைஞர்!!
வளர்க! திமுக!!