புதன், 27 மே, 2020

ஒரு நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் பயிர்கள் காலி...! இந்திய விவசாயிகளை கதற வைத்துள்ள வெட்டுக்கிளிகள்


ஒரு நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் பயிர்கள் காலி...! இந்திய விவசாயிகளை கதற வைத்துள்ள வெட்டுக்கிளிகள்

வெட்டுக்கிளிகளில் மிகவும் ஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர மைல் பரப்பளவுக்கு இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக வந்திறங்கினால் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் உளவு அளவுக்கு பயிர்களை சாப்பிடக் கூடியது. இந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து தங்களது விளைநிலங்களை சூறையாடி வருகின்றன.

இதன் பூர்வீகம் ஆப்ரிக்கா. எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பருவமழைக்கு பிந்தைய பசுமையான வயல்களில் பல்கிப் பெருகிய இந்த வெட்டுக்கிளிகள் ஏமன் வழியாக ஈரானுக்குள் நுழைந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. பின்பு அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று தங்களது படையை இன்னும் விஸ்தரித்து இம்மாதத் தொடக்கத்தில் எல்லை தாண்டி ராஜஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தன.

தொடக்கத்தில் எல்லையோர மாவட்டங்களில் பூ, காய், பழம், தண்டு என பயிர்களை மொத்தமாக தின்று தீர்த்துக் கொண்டிருந்த இந்த வெட்டுக்கிளிகள் படிப்படியாக முன்னேறி இன்று ராஜஸ்தானின் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் பாதி மாவட்டங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

பூச்சி மருந்து அடித்து கொள்வதற்காக சிறப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டாலும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளை ஒழிக்க அதுபோதுமானதாக இல்லை. ராஜஸ்தானில் 50 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளி கூட்டத்தில் ஒரு பிரிவு சத்தமே இல்லாமல் மத்திய பிரதேசத்திற்குள் புகுந்துவிட்டது.

அங்கே சுமார் 3 கிலோ மீட்டர் அளவுக்கு பறக்கும் இந்த வெட்டுக்கிளிகள் இதுவரை 16 மாவட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியிருக்கின்றன. வருவாய், தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கியமான அரசு துறைகளுக்கும் இவற்றை கொல்வதே பெரும் தலைவலியாய் மாறியிருக்கிறது.

அடுத்தபடியாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பூச்சி மருந்துடன் தீயணைப்புத் துறையினர் தயாராக உள்ள நிலையில், ராஜஸ்தானில் இருந்து வெட்டுக்கிளை ஒழிப்பு நிபுணர்களும் வரவழைக்கப்ட்டுள்ளனர்.

தெரிந்ததும்.. தெரியாததும்.. அறிந்து கொள்வோம் வாங்க.. ஒரு வரியில்...!! தெரிந்து கொள்வோம்..!!



தெரிந்ததும்.. தெரியாததும்.. அறிந்து கொள்வோம் வாங்க.. ஒரு வரியில்...!!
தெரிந்து கொள்வோம்..!!

🌟 சிவப்பு ரத்த அணுக்கள் 20 வினாடிகளில் நம் முழு உடலையும் சுற்றிவிடும்.

🌟 மிகப்பெரிய 1 கிலோ எடையுள்ள ஆலங்கட்டி 1986ஆம் ஆண்டு வங்காளத்தில் விழுந்தது.

🌟 நியூக்ளிக் அமிலத்தை கண்டறிந்து தனிமைப்படுத்திய முதல் ஆராய்ச்சியாளர் பிரெடெரிச் மெய்சர்.

🌟 ஒரு மின்சார விலாங்கு மீனால் 650 வோல்ட் வரை அதிர்வை தர முடியும்.

🌟 மன இறுக்கம் உடைய 65மூ குழந்தைகள் இடது கைப்பழக்கம் உடையவர்கள்.

🌟 மனித உடலில் குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்.

🌟 கரடி பின்னோக்கி மரம் ஏறும் திறன் படைத்தது.

🌟 வானளாவிய நகரம் நியூயார்க் ஆகும்.

🌟 உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு இந்தியா.

🌟 உலகப் புகழ்பெற்ற கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர் ஈரோடு.

🌟 ஒரு புலி கர்ஜிப்பது 1.8 மைல்கள் (3 கி.மீ.) வரை கேட்க முடியும்.

🌟 10 முதல் 20 எரிமலைகள் ஒவ்வொரு நாளும் பூமியில் எங்கேயாவது வெடித்துக் கொண்டிருக்கின்றன.

🌟 நெருப்புக்கோழியின் கண் அதன் மூளையை விட பெரியது.

🌟 எலியின் டிஎன்ஏ 97.5மூ மனித டிஎன்ஏ போலவே இருக்கும்.

🌟 ஆகஸ்ட் 13ஆம் தேதி சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

🌟 கனடாவில் உள்ள யாங் தெருவே, உலகின் மிக நீளமான தெருவாகும்.

🌟 மழை வாசனை அக்டினோமைசேட்டில் என்ற ஒரு பாக்டீரியாவால் வருகிறது.

🌟 அகச்சிவப்பு கதிர்களை தண்ணீர் அதிகமாக ஈர்க்கும்.

🌟 அங்கோலா நாட்டின் நாணயம் கவான்சா.


"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய் 7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது

"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க
 ரூபாய் 7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. எந்த தொழிலுக்கும் விண்ணப்பிக்கலாம். பேப்பர் விண்ணப்ப படிவம் இல்லை. இண்டர்நெட் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான SC/ST மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர்.

தேவையான ஆவணங்கள்:
1. குடும்ப அட்டை
2. வாக்காளர் அட்டை
3. ஆதார் அட்டை
4. ஒரு புகைப்படம்
5. சாதி சான்று
6. வருமான சான்று ( குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு
     மிகாமல் இருக்க வேண்டும்)
7. கல்வி சான்று
8. ஓட்டுநர் உரிமம். பேட்ஜ் அவசியம் (இது வாகன கடனுக்கு மட்டும்
    தேவை)
9. கொட்டேஷன்
10. திட்ட அறிக்கை

மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் அப்லோடு செய்ய வேண்டும்.

எனவே தகுதியுள்ள அனைத்து SC/ST மக்களும் விண்ணப்பித்து கடைசிவரை முயற்சி செய்து பலனை அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கீழுள்ள  தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
http://application.tahdco.com/