இந்திய சுதந்திரம் என்பது 'சமூக சுதந்திரம் அல்ல (Not social liberty), மாறாக ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்டது ( Transfer of power from British to Brahmin). ஆனால், சுதந்திரத்திற்கு முன்பே Dr. அம்பேத்கர் இந்தியாவிற்கு ஆற்றிய அளப்பரிய பணி.
1. டாக்டர் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வரவில்லை. கிறித்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வந்த மனு என்பவன்தான், பிறப்பின் அடிப்படையில் அவரவர் குலத்தொழிலை அவரவர்தான் மேற்கொள்ள வேண்டும் என்றான். இதுவே மனு தர்மம். மனு தான் முதன்முதலில் இடஒதுக்கீடைக் கட்டமைத்தான். ஆனால் அம்பேத்கரால்தான் இன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செய்தார் என்பதைத் தெரிந்து வைத்திருப்பவர்கள், ஏழை பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு, பிராமண பெண்களுக்கு இடஒதுக்கீடு என மேலும் விரிவுபடுத்த முயன்ற போது, “பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக (Other Backward Class) என்று OBC Reservation-யைக் கொண்டு வர அரசமைப்புச் சட்டத்தில் உறுப்பு 340தனை சேர்த்தார் அம்பேத்கர்.
உறுப்பு 340ன் படி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்நிலையைக் கண்டறிய ஆணையம் அமைக்க வேண்டும் என கூறுகிறது. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகியும், அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த ஆணையமும் அமைக்கவில்லை என பிரதமர் நேருவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
அதன் பின்னர்தான் 1953ஆம் ஆண்டு காகாகலேல்கர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மேம்பாட்டிற்கு குழு அமைக்கப்பட்டது, அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பின்பு மண்டல் கமிசன் அறிக்கைப்படி OBC இடஒதுக்கீட்டை BSP நிறுவனத்தலைவர் கன்சிராம் அவர்களின் வற்புறுத்தலின் பேரால் வி. பி. சிங் அமல்படுத்தினார்.
2. அம்பேத்கரால்தான் திறமைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என்று இன்று குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்கு முன்பு, ஒரு வேலையில் சேரவேண்டும் என்றால் சிபாரிசு வேண்டும். ஏற்கனவே உயர்பதவியில் வகித்தவர்கள் பிராமணர்கள். எனவே சிபாரிசின் பேரில் பிராமண இளைஞர்களுக்கே வேலை கிடைத்தது.
ஆனால் படித்தவர்கள் பதிவு செய்து வேலை கிடைக்க “தேசிய வேலைவாய்ப்பு நிறுவனம் (National Employment Agency)” கொண்டு வந்தவர் டாக்டர் அம்பேத்கர். இதுவே பின்னாளில் Employment Exchange ஆனது.
3. இந்தியாவின் கருவூலம் எனப்படும் ரிசர்வ் வங்கியை டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்டதிட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பின்படி ஹில்டன்-யங் தலைமையிலான ராயல் கமிஷன் ஆன் இந்தியன் கரன்சி அண்ட் பைனான்ஸ் என்னும் குழு நிறுவியது. குழுவிலிருந்த ஒவ்வொருவரின் கையிலும் அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரையான “ரூபாய் சிக்கல்கள்-தீர்வுகள்” இருந்தது.
4. 1923ல் டாக்டர் அம்பேத்கரின் “பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதியின் பரிமாணம்” என்ற ஆய்வின் அடிப்படையிலேயே இந்தியாவின் நிதி ஆணைக்குழு Finance Commission தோற்றுவிக்கப்பட்டது.
5. சைமன் குழுவிடம் 1928-லேயே வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்திப்பெற்றார் டாக்டர் அம்பேத்கர்.இப்போது உள்ளதுபோல் பெண்கள் உட்பட பெரும்பான்மை மக்களுக்கு அப்போது வாக்குரிமை கிடையாது.
6. விவசாயிகளிடமிருந்து வரி வசூலிக்க பின்பற்றப்பட்ட வன்முறை வடிவிலான கோட்டி முறையை (Khoti) ஒழிக்க மசோதாவை முன்மொழிந்தார்டாக்டர் அம்பேத்கர். ஆனால் காங்கிரசுஅதை எதிர்த்தது.
எனவே சனவரி 12, 1938-ல் 20,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்துப் போராடினார் டாக்டர் அம்பேத்கர். இதுவே சுதந்திரப் போராட்டத்தில் நடந்த மிகப்பெரிய விவசாயப் போராட்டம். கோட்டி முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 95 சதவிகிதத்திற்கும் மேல் பிற்படுத்தப்பட்டவர்களே.
7. தாய்மார்கள் அதிகம் குழந்தை பெறுவதால் வரும் உடல்நலக்குறையைப் போக்க குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் என்றார்.
8. மது அருந்தி வரும் கணவனுக்கு உணவளிக்காதே என்றார்.1940ல் மதுவையும், பிற போதைப் பொருட்களையும் அரசு தடை செய்ய வேண்டும் என்பதற்காக அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை கொள்கைகளில்(Directive Principle of state policy) உறுப்பு 47யைச் சேர்த்தார்.
9. பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் விடுமுறையுடன் கூடிய ஓய்வு வேண்டும் என்று மும்பை சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தார் 1942-ல். ஆனால் இந்திய அரசு அந்த மசோதாவை 1961-ல்தான் நிறைவேற்றியது.
10. 1942-ல் தொழிற்சாலை சட்டத்தில் 14 மணி நேரமிருந்த பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்தார்.
11. ஆபத்தான பணிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வேலை செய்வதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தார்.
12. தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தைக் கொண்டு வந்தார்.
13. முதன்முறையாக தொழிற்சாலை சட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் கிடைக்க சட்டம் கொண்டு வந்தார்.
14. இரண்டாம் உலகப்போருக்குப்பின், நாட்டின் மறுகட்டமைப்பு மிகப்பெரும் சவாலாக இருந்தது. அதற்காக நிறுவப்பட்டதே மறுகட்டமைப்பு குழு மன்றம் (Reconstruction committee council). அம்பேத்கர் அம்மன்றத்தின் உறுப்பினர். அதன் மூலம் பாசனம் மற்றும் மின்சார கொள்கைக்கான குழுவுக்கு தலைவராய் இருந்தபோது அவர் முயற்சியால் கொண்டுவரப்பட்டதுதான் கீழ்காண்பவை.
1944ல் மத்திய நீர்வழி மற்றும் பாசன ஆணையத்தைத் தோற்றுவித்தார். அதுவே தற்போதைய மத்திய நீர் ஆணையம் (Central Water Commission).
மத்திய மின்சார தொழில்நுட்ப வாரியத்தை (Central Technical Power Board) தோற்றுவித்தார். அதுவே பின்னாளில் தேசிய மின்சார இணைப்பு ஒழுங்குமுறை கழகம் (National Power Grid Corporation).
15. 1946-ல் நவம்பர் 26ஆம் தேதி, அம்பேத்கர் ஒரு புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார். அதில் சட்டம் மூலம் அனைவரும் சமம், ஆனால் இது சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சாத்தியமா? என்ற சந்தேகத்தை எழுப்பினார். அதன் பிறகு நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அமைக்கப்பட்டதுதான் – இந்திய திட்டக் குழு (Planning Commission of India).
16. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் (Damodhar Valley Project), கிராகுட் அணைத் திட்டம் (Hirakud Project), சோன் பள்ளத்தாக்கு திட்டம்(Sone Valley Project) ஆகியவை எல்லாம் அம்பேத்கரின் முதன்மை பங்களிப்பில் உருவானதே.
மேற்கண்டவை அனைத்தும் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து மக்களின் நலனுக்காகவே செய்தார்.
1209ல் கட்டப்பட்ட உலகின் பழமையான பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் கடந்த நூற்றாண்டில் மக்களுக்கு உழைத்த மாமேதை யார்? என்ற வாக்கெடுப்பில் முதல் இடத்தை பிடித்தவர் டாக்டர் அம்பேத்கர். அவர் நவீன இந்தியாவின் சிற்பியாக இருக்கிறார்.
ஐ.நா, டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை சர்வதேச சமூகநீதி நாளாகக் கொண்டாடுகிறது.
ஆனால் நம்மைப் பொறுத்தவரை அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.
அதனால் தான்...
இன்று இட ஒதுக்கீடு மற்றும் திறமைப்பற்றி வாய் கிழிய விதண்டாவாதம் செய்யும் எவரும் இந்திய தேசியத்தை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான அம்பேத்கர் திறமையையும் அறிவையும் ஏற்றுக் கொள்ளாமல் அவரை சாதியோடு சேர்த்து மட்டுமே பார்ப்போம் என்று அடம்பிடிக்கிறார்கள்.
சாதியும் மதமும்தான் அளவுகோல் என்றால் நமக்கு அயோக்கியர்களே தலைவர்களாக வாய்ப்பார்கள். #Jai bhim.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக