வெள்ளி, 25 மே, 2018

மண்ணை திருடி விற்றவன்..! இன்று எம் கலைநயமிக்க சிலைகளையும் விற்கிறான்..!! விழுப்புரத்தில் விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள் கொள்ளை..!!!

மண்ணை திருடி விற்றவன்..! இன்று எம் கலைநயமிக்க சிலைகளையும் விற்கிறான்..!! விழுப்புரத்தில் விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள் கொள்ளை..!!!



மண்ணை திருடி விற்றவன்..! இன்று எம் கலைநயமிக்க சிலைகளையும் விற்கிறான்..!! விழுப்புரத்தில் விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள் கொள்ளை..!!!

பழனியில் தொடர்ந்த சிலை மோசடிகள்,  தமிழகத்தின் பல கோயில்களிலும் நடைபெற்றிருக்கிறது. தற்போது, சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலையிட்ட பிறகு, பழனி கோயில் சிலை மோசடியில்,  முன்னாள் அதிகாரிகள் ஐந்து பேரிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அவர்களும், அவர்களைத் தொடர்ந்து பலரும் கைது செய்யப் படலாம், என்று அஞ்சப் படுகிறது. இதே போல, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ள சிலைகள் எல்லாம் மாயமாகி விட்டதென தெய்வீகன் (வயது 53) என்பவர், தந்த தகவலின் அடிப்படையில், இந்தக் கோயிலை சோதனை செய்த போது, இடிபாடுகளுடன், மிக மோசமான நிலையில் இருந்த கோயிலைக் கண்டு, ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கிருந்த பழமையான சிலைகள் ஒன்று கூட தற்போது இல்லை என்பதையும் அறிந்து கொண்டனர். இந்தக் கோயிலில் இருந்த, சந்தான கோபால கிருஷ்ணனின் ஐம்பொன் சிலை காணவில்லை, என்ற புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் நேற்று ஆய்வினை மேற் கொண்டனர்.
இது தொடர்பாக, அறநிலையத்துறை ஆய்வாளர், சரவணன், போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து, போலீசார் நேற்று கோயிலை ஆய்வு செய்து, முன்னாள் குருக்கள் உள்ளிட்ட கோயில் ஊழியர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.
தொடர்ந்து, இதே பகுதியில் உள்ள, அர்த்தநாரீசுவரர் கோயிலையும் ஆய்வு செய்தனர். அங்கிருந்த சிலைகளும் மாயமாகி விட்டது, அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதான் ஸ்டெர்லைட் தொடக்கம் ... அன்றைய முதல்வராக ஜெயலலிதா....


இதுதான் ஸ்டெர்லைட் தொடக்கம் 1994... அன்றைய முதல்வராக ஜெயலலிதா....


துப்பாக்கிச் சூடு -ஆணையிட மறுத்த அண்ணா ..


துப்பாக்கிச் சூடு   -ஆணையிட மறுத்த அண்ணா ..
*************************

அண்ணா முதல்வராக இருந்த போது
மாணவர்கள் கலவரம் நடந்தது,

 பேருந்துகள் கொளுத்தப்பட்டன.

காவல்துறை அதிகாரிகள்,
 முதல்வர்
அண்ணாவிடம் சென்று,  சுட்டுத்தள்ள
 உத்தரவிடுமாறு கேட்கிறார்கள்.

அண்ணா அமைதியாகச் சாென்னார்-

"ஆயிரம் பேருந்துகள் காெளுத்தப்பட்டாலும்
இந்த  அரசாங்கத்தால் புதிய பேருந்துகள்
வாங்கிக் கொள்ள  முடியும். ஆனால் இங்கு ஒரு மாணவனை இழந்தாலும் நம்மால் அவன் உயிரை மீண்டும் பெறமுடியாது" என்று
துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட மறுத்தவர்
அண்ணா ...!

உயிரின் மதிப்பு தெரிந்து, மனிதநேயத்தோடு மக்கள் போராட்டங்களை அணுகியவர் அண்ணா .

ஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா?



ஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா?

"தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதால்தான் நான் அங்கு சென்று மக்களைச் சந்திக்கவில்லை" என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சியிலிருப்பவர்கள் நினைத்தால் எந்த ஒரு விதிமுறையையும் கடைபிடிக்காமல் மக்களை சுட்டு வீழ்த்த முடிகிறது, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு வழங்க முடிகிறது, ஆனால் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மக்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல நேரில் செல்ல முடியவில்லை . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மெரினா கடற்கறையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 'தர்ம யுத்தம்' செய்த போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததை மறந்துவிட்டார்களா? கண்ணை மூடி தியானம் செய்து மெளனப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரைச் சுற்றி ஆதரவாளர்கள் நின்றிருந்தபோது 144 தடை சட்டத்தின் விதிமுறைகள் எங்கேபோனது?

தூத்துக்குடியில் இவ்வாறான ஒரு சம்பவத்தை நிகழ்த்தி தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டு,  முதல்வர் சிறுபிள்ளைத்தனமான பதிலைக் கூறுகிறார். துணை முதல்வரோ கட்சி நிர்வாகியின் வீட்டு விஷேசத்தில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கிறார்.மேலும் "தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது" என்றும் கூறியுள்ளார் முதல்வர்.யாரின் தற்காப்புக்கு என்பது புரியவில்லை.போலீஸாருக்கா? வேதாந்தா நிறுவனத்துக்கா? மக்களை பாதுகாக்கவேண்டிய அரசாங்கம், தற்காப்புக்காக 13 பேரை கொலை செய்வதென்பது இதுவே முதல் முறையாக இருக்கும்."மக்கள் முதலில் சட்டத்தை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்;பொது சொத்திற்கு சேதம் விளைவிக்கக் கூடாது" என்றும் கூறியுள்ளார்.பொது சொத்திற்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்று கூறும் நீங்கள் பொது சேவை செய்ய வந்த காவல்துறையிடம் மக்களின் சொத்துக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்று சொல்லி அனுப்பவில்லையா ? நேற்று வெளியான காணொளியொன்றில் போலீஸாரே மீனவப் படகிற்கு தீ வைக்கிறார்கள்.ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ஆட்டோக்களுக்கும்,வாகனங்களுக்கும் தீ வைத்தது யார் என்பதை வட இந்திய மீடியாக்களே படம் போட்டுக்காட்டின.

ஓபிஎஸ் எடப்பாடி

144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டிருந்தால் கூட்டமாகத்தான் செல்லக்கூடாது. ஆனால் நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வர்தானே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதானே நீங்கள் தனியாகவே சென்று ஆறுதல் கூறியிருக்கலாமே. எதிர்க்கட்சித் தலைவர் தொடங்கி சமீபத்தில் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் வரை மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.ஆறுதல் சொல்வதற்கு முதல்வர்கூட செல்லவேண்டாம், அனைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் முதல் ஆளாக வந்து அதிமுக அரசை ஆதரித்து பேசும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களோ,அல்லது அதிமுக அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியோ சென்று ஆறுதல் தெரிவித்திருக்கலாமே.மக்களை சட்டத்தை மதிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.அதே சமயம் அரசாங்கமும் சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் பின்பற்றவேண்டும்.

144 தடை உத்தரவு:

'144 தடை உத்தரவுச் சட்டம்' என்பது 1861ம் ஆண்டு ஆங்கிலேயே ஆட்சியில் கலவரங்களை தடுக்க உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்த பரோடா மாகாணத்தில்தான் 144 தடை உத்தரவு முதன்முதலில் பிறப்பிக்கப்பட்டது.பின்னர் நடந்த அனைத்து சுதந்திரப் போராட்டங்களையும் ஒடுக்க இந்தச் சட்டத்தை பயன்படுத்தினார்கள் ஆங்கிலேயேர்கள்.அந்த சட்டத்தை இன்று வரை சிறு சிறு மாற்றங்கள் மேற்கொண்டு பின்பற்றி வருகிறது  இந்திய அரசு.

விதிமுறைகள்:

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் போது சாலைகளில் நான்கு அல்லது நான்கிற்கும் மேற்பட்டோர் ஒன்று சேரக்கூடாது. மீறி ஒன்று கூடினால் 'கலவரத்தில் ஈடுபட்டவர்கள்' என்று கூறி வழக்குப் பதிவு செய்யமுடியும். அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்க முடியும். கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்துக்கொண்டிருக்கும் போது போலீஸாரை தடுக்க முயன்றால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்.

ஊரடங்கு உத்தரவும் 144 தடையும் ஒன்றா ?

இல்லை. ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் வீட்டை விட்டு தனியாககூட வெளியே வரக்கூடாது.அப்படி வரவேண்டுமென்றால் போலீஸாரிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும்.

இப்போது சொல்லுங்கள் முதல்வரே.. இந்த சட்டம் உங்களை தூத்துக்குடிக்குள் அனுமதிக்காதா... இல்லை தூத்துக்குடிக்கு நீங்கள் நான்கு பேருடன் சென்றால் உங்களை போராட்டக்காரர்கள் என்று கூறி காவல்துறைதான் சுட்டு வீழ்த்திவிடுமா? பதில் சொல்லுங்கள் முதல்வரே!
விகடன்

இந்தியாவில் பாஜக கட்சியின் உண்மை நிலவரம்..


இந்தியாவில் பாஜக கட்சியின் உண்மை நிலவரம்..

நாடே காவியாகிவிட்டது போல்  வரைபடங்களை தயாரித்து மக்கள் மத்தியில்* ஒரு போலியான பிம்பத்தை கட்டமைத்து சமகாலத்தில் அரசியல் கட்சிகளையும் மிரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளது பாஜக.

இந்தியாவில் அவர்களின் உண்மை பலம் என்ன என்பதை சற்று பார்ப்போம்.

இந்தியாவின் 29 மாநிலங்களில் வெறும் 10 மாநிலங்களில் மட்டுமே பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. அதே வேளையில்..

தமிழ்நாடு:   0 எம்.எல்.ஏக்கள்
சிக்கிம் : 0 எம்.எல்.ஏக்கள்
மிசோரம் : 0 எம்.எல்.ஏக்கள்

ஆந்திரா:  294ல் 9 எம்.எல்.ஏக்கள்
கேரளா: 140ல் 1 எம்.எல்.ஏ
பஞ்சாப் : 117ல் 3 எம்.எல்.ஏக்கள்
மேற்கு வங்கம் : 294ல் 3 எம்.எல்.ஏக்கள்
தெலுங்கானா : 119ல் 5 எம்.எல்.ஏக்கள்
தில்லி  : 70ல் 3 எம்.எல்.ஏக்கள்
ஒரிசா  : 147ல் 10 எம்.எல்.ஏக்கள்
நாகாலாந்து  : 60ல் 12 எம்.எல்.ஏக்கள்

கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி
மேகாலயா  : 60ல் 2 எம்.எல்.ஏக்கள்
பிகார்  : 243ல் 53 எம்.எல்.ஏக்கள்
கோவா  : 40ல் 13 எம்.எல்.ஏக்கள்
ஜம்மு காஷ்மீர்  : 87ல் 25 எம்.எல்.ஏக்கள்

ஆக மொத்தம் 4139 சட்டமன்ற இருக்கைகளில் 1516 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பாஜகவை சேர்ந்தவர்கள், அதிலும் 950 சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் 6 மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உபி, மத்திய பிரதேச, ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களே.

ஆனால் 6 மாநிலங்களை வைத்துக் கொண்டு நாடே காவிமயாகிவிட்டது என்று போட்டோஷாப்பில் ஒரு காவி இந்தியா வரைப்படத்தை சுற்றுக்குவிட்டு ஒரு போலியான மாயையை ஏற்படுத்த முயல்கிறது அமித் ஷா- மோடி கூட்டணி.

விளம்பர அரசியல் செய்யும் இவர்களின் முகமூடியை தகர்ப்போம், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் இடம் நோட்டாவுக்கு கீழ் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.....
காட்டுத்தீயாய் பகிருங்கள், செய்தியை கொண்டு சேருங்கள் உலகின் கடை கோடி தமிழர் வரை.....-  எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்

   

ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமம்


ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமம்

ஒரு கிலோ தாமிரம் (செம்பு) விலை : ரூபாய். 385
ஒரு ஆண்டில் தூத்துக்குடியில் வெட்டி எடுக்கப்படும் தாமிரத்தின் அளவு: 4 லட்சம் டன் (40 கோடி கிலோ)
ஒரு ஆண்டில் தமிழ்நாட்டு இயற்கை வளம் தூத்துக்குடியில் மட்டும்  சுரண்டப்படும் மதிப்பு 15,400 கோடி ரூபாய்.

இது இந்தியாவின் ஒட்டு மொத தாமிரம் உற்பத்தியில் 36% தூத்துக்குடியில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

பாஜக / காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் நன்கொடை கொடுக்கும் பெரு நிறுவனங்களின் பட்டியலில் வேதாந்தா குழுமம் (ஸ்டெர்லைட்) இருந்து வருகிறது.

வேதாந்தாவின் தலைமை அலுவலகம்  லண்டனில் உள்ளது. இதன் உரிமையாளர் அனில் அகர்வால் பூனே மார்வாடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

 ​அரசு நிறுவனமான பாரத் அலுமினியம் கார்பொரேஷனை  கையகப்படுத்தி இந்துஸ்தான் அலுமியம் என பெயர் வைத்து அலுமினிய சுரங்கம் அமைத்து லாபம் ஈட்டி வருகிறார்.

​ஆஸ்திரேலியா, ஜாம்பியா என பல நாடுகளில் சுரங்கம் அமைத்து தொழில் செய்து வரும் வேதாந்தா குழுமம் , தமிழ்நாடு - தமிழ் ஈழம் இடையே உள்ள மன்னார் வளைகுடாவில் மாபெரும் இயற்கை எரிவாயு குழாய்களை கடலுக்கு இடையே துளையிட்டு எடுக்க முயற்சித்த "காரின் இந்தியா" எனும் நிறுவனத்தை வாங்கியுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து இவர்களை விரட்டவில்லை என்றால் , தமிழர் கடலில் உள்ள இயற்க்கை எரிவாயு உறிஞ்சும் இவர்களின் திட்டம் மீண்டும் வரும். ​​


20 வருடமாக இருந்த இந்த ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை சூடுபிடிக்க காரணம்,
வேதாந்தா குழுமத்திற்கு கொடுத்த சுரங்க லைசன்ஸ் காலாவதி ஆகிறது. அதை புதுப்பிக்கும் போது  தற்போது ஆண்டுக்கு எடுக்கும் 4 லட்சம் டன் தாமிரத்தை இருமடங்காக எடுக்க திட்டமிட்டு அனுமதி பெற முயற்சிக்கிறது வேதாந்தா குழுமம். ஏற்கனவே ரசாயன வாயு வெளியேற்ற விபத்திற்காக 100 கோடி அபராதம் பெற்ற இந்த நிறுவனம் பாதுகாப்பு குறைபாடுகள், மாவட்டம் முழுக்க நிலத்தடி நீர் மாசுபாடு, தோல் பிரச்சனைகள், புற்று நோய் உருவாக காரணமாகும் மாசுகளை வெளியேற்றி வருகிறது. ஏற்கனவே பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் தூத்துக்குடி மக்கள் இனி இரு மடங்கு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி கலவரம்: விடை தெரியாத கேள்விகள் ???


தூத்துக்குடி கலவரம்: விடை தெரியாத கேள்விகள் ???

துாத்துக்குடி: துாத்துக்குடி போராட்டம், கலவரமாக மாறியதும், தொடர்ந்து நடந்த வன்முறைகளும், போலீஸ் துப்பாக்கி சூடும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளன.

*கேள்விகள்:*
⬛ ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் 100வது நாள் என்று கூறிக்கொண்டு, நேற்று துாத்துக்குடியில் இவ்வளவு பெரிய கூட்டம் எப்படி கூடியது என்பது மர்மமாக இருக்கிறது.

⬛ ஆங்கிலத்தில் ‛மாப் பிகேவியர்' என்று கூறுவார்கள். அதாவது, கூட்டமாக சிலர் சேர்ந்து கொண்டால், அவர்களுக்கு திடீர் தைரியம் வந்துவிடும். வன்முறையில் ஈடுபட அஞ்ச மாட்டார்கள். இது தான் துாத்துக்குடியிலும் நடந்துள்ளது. சாதாரணமாக ஆரம்பித்த பேரணியில் இருந்த சிலர், போலீஸ் மீது கற்களை வீசி வன்முறையை துவக்கி வைத்தனர். இவர்கள் யார்?

⬛ கற்கள் வீசப்பட்டதும், போலீசார் தடியடி நடத்தத் துவங்கினர். இதைத் தான் வன்முறையாளர்கள் எதிர்பார்த்தனர். அதுபோலவே, கூட்டத்தில் பலர் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், வன்முறையில் ஈடுபட்டனர். கூட்டத்தில் சிலர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு போலீசாரை தாக்கி உள்ளனர். இவர்கள் யார்?

⬛ அப்பாவி மக்களின் 100 வாகனங்கள் நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டன. போராட்டத்திற்கு எந்த தொடர்பும் இல்லாமல், கடன்பட்டு, கஷ்டப்பட்டு வாங்கிய வாகனங்களை அநியாயத்திற்கு இவர்கள் இழந்துள்ளனர். இவர்கள் பொதுமக்கள் இல்லையா?

⬛ ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் சேவைக்காகத் தானே இவை அமைக்கப்பட்டுள்ளன. இவை மூடப்பட்டால், முடிவில் பாதிக்கப்படுவதும் இதே பொதுமக்கள் தானே?

⬛ வன்முறையின்போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது எப்படி?. போராட்டத்திற்கு வரும் போதே பெட்ரோல், தீப்பெட்டி கொண்டு வந்தார்களா? அப்படி என்றால் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

⬛ ஆலை திறக்கப்பட்டது 1998ல். அப்போது திமுக ஆட்சி. இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டவை த.மா.கா. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட். அந்த தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டது காங்., அதாவது, முந்தைய தேர்தலுக்கும் அடுத்த தேர்தலுக்கும் இடையே கூட்டணி மாறிவிட்டது காங்.,

⬛ இடைப்பட்ட காலத்தில் புரட்சித்தலைவி அம்மா, கருணாநிதி, ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதல்வராக இருந்து விட்டார்கள். மத்தியில் காங்., பாஜ ஆட்சியில் இருந்தன. இப்படி இருக்கும்போது, போராட்டக்காரர்கள் குறி வைக்க வேண்டியது அக்கட்சிகளைத் தான்.

⬛ போராட்டத்திற்கு எதிராக பலமாக பேசி வரும் வைகோ, இதே அதிமுகவுடனும், திமுகவுடனும் மாறி மாறி கூட்டணி வைத்தார். அப்போது அவருக்கு தெரியாதா ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது இந்தக் கட்சிகள் தான் என்று. இதுவே திருமாவளவன், அன்புமணி ஆகியோருக்கும் பொருந்தும்.

⬛ ஸ்டெர்லைட் பிரச்னை 25 ஆண்டுகளாக இருக்கிறது. என்னவோ நேற்று முளைத்த பிரச்னை போல பலர் பேசுகின்றனர். இத்தனை ஆண்டுகள் இவர்கள் என்ன செய்தார்கள்.

⬛ அமைதியாக நடந்துவந்த மக்கள் போராட்டத்தை வன்முறையை நோக்கி திருப்பி விட்டது யார் என்று கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள் தான் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு உண்மையில் மக்கள் மீது அக்கறை கிடையாது. ஏதாவது பிரச்னையை கிளப்பி அதில் குளிர்காய நினைப்பவர்கள்.

⬛ இன்னும் சிலர், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என கேட்கிறார்கள். துப்பாக்கி சூட்டுக்கு டிஐஜியோ, எஸ்பியோ, கலெக்டரோ உத்தரவிட்டு இருக்கலாம். அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்பத் தான் இவர்கள் செயல்படுவார்கள். *சூழ்நிலை உத்தரவிட வைத்திருக்கலாமே?*

⬛ ஸ்டரெ்லைட் ஆலை மூடப்படுவது இது முதல்முறை அல்ல. 2013ல், பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவால், பல வாரங்களுக்கு ஆலை மூடப்பட்டு இருந்தது. அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவி அம்மா. மீண்டும் ஆலை திறக்கப்பட்டபோது, பரட்சித்தலைவி அம்மாவிடம் இன்றைய அரசியல் கட்சிகள் ஏன் கேள்வி எழுப்பவில்லை?

⬛ இன்று வெளியான பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை எதிர்பார்த்திருந்த ஒரு மாணவி துப்பாக்கி சூட்டில் பலியானது பரிதாபத்திற்குரியது. இவ்வளவு சின்ன பெண்ணை போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது யார். இப்போது உயிரே போய்விட்டது. இதற்கு நிதி உதவி அளித்தால் மட்டும் சரியாகிவிடுமா. உயிருக்கு விலை மதிப்பு இருக்கிறதா?

⬛ ஆலை அமைக்கப்பட காரணமான கட்சிகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். அப்படி செய்தால் தான், மக்கள் பிரச்னைகளை வைத்து அரசியல் செய்யும் தலைவர்கள் திருந்துவார்கள்.

வவ்வாலின் மூலம் நோய் பரவுகிறது என்ற கூற்று கார்பரேட்களின் கனவு திட்டம்



"வவ்வாலின் மூலம் நோய் பரவுகிறது என்ற கூற்று கார்பரேட்களின் கனவு திட்டம்"

வவ்வாலைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்கலாம்.

(கீழே உள்ள பதிவு வவ்வாலின் பயன்களை அலசும் போது கிடைத்த ஒன்று)

சமீப காலங்களில் மனிதர்கள் வவ்வால்களின் பயன்பாடுகளை வெகுவாக அறிந்து வருகின்றார்கள்.

பொதுவாக வவ்வால்கள் கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திகளுக்கும் உதாரணமாகக் கூறப்படுகின்றது.

ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் இவைகளின் அளவற்ற பயன்பாடுகளைப்பற்றி சிலாகித்து கூறுகின்றனர்.

இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன.

மெக்ஸிகோவில் வாழக்கூடிய மஸ்டிப்(mastiff) வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது.

இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன.

சிறிய பழுப்பு நிற வவ்வால்கள் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை.

இதிலிருந்து இவை மனித குலத்திற்கு ஆற்றக்கூடிய அளவற்றத் தொண்டினை வார்த்தைகளினால் எங்ஙனம் விளக்க இயலும். பல நாடுகளில் இன்று மக்களுக்கு நோய்களையும் இன்னபிற தொல்லைகளையும் கொடுக்கும் கொசுக்களை அழிக்க பட்ஜட் போட்டுக்கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.

மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதனால் வவ்வால்களின் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணைச்செய்கின்றன.

இவைகளின் மூலம் 500 க்கும் மேற்ப்பட்ட தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை நடைப்பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச்சிறந்க உரமாக பூமிக்கு அமைந்துவிடுகின்றன.

பல நாடுகளில் இவை வசிக்கக்கூடிய இடங்களிலிருந்து இவற்றின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான மிக உயர் தரமான உரம் தயாரிக்கப்படுகின்றது.

இவையும் இவற்றின் பயன்பாடுகளின் மிகமுக்கியமானதாகும்.

மனிதர்களுக்கு நேரடியான பயன்களும் இவற்றில் உள்ளன

வம்பைர்(vampire) வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது.

மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேறும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன.

பிரிடெய்ல் வவ்வால்களின் இருப்பிடங்களில் சேர்ந்த இவற்றின் கழிவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய சோடியம் நைட்ரேட்டைக் கொண்டு அமெரிக்காவில் நடந்த சிவில் போரில்(1861-1865) வெடிமருந்து தயார் செய்துள்ள வரலாறும் நமக்கு காணக் கிடைக்கின்றது.

கார்பரேட் சரியாக வருமான காய் நகர்த்துகிறான்..

 நிபா எதுவரை போகும் என்று தெரிய வில்லை... ஆனால் இந்த கார்ப்பரேட் சதிவலையில் சிக்கிக் கொண்டால், வவ்வாலை இனிமேல் நாம் விலங்குகள் சரணாலயத்தில் தான் பார்க்க முடியும்...
-----------
நிபாவை பற்றிய சில கேள்விகள்... உங்கள் பார்வைக்கு...

*நிபா* என்ன இது...

இது இத்தனைநாள் எங்க இருந்துச்சி??

கேள்வி-1
*நிபா வைரஸ்* கடந்த 500 நூற்றாண்டா இல்ல, இப்ப எங்கிருந்து வந்திச்சி??

கேள்வி-2
அது ஏன் வவ்வால்கள் மூலமாக மட்டும்தான் பரவுமாம்?

கேள்வி-3
அது ஏன் இயற்கை வளம் மிக்க கேரளாவில் திடீர்னு வந்துச்சி?

கேள்வி-4
இது பரவுவதற்க்கு முன்னாடியே தனியார் டீவி சேனல்களில் விளம்பரம் செய்வதற்க்கான காரணம் என்ன?

கேள்வி-5
தனியார் டீவி சேனல்களில் வருமானம் இல்லாமல் எதையும் செய்யாதே இதை எப்படி வாங்கி விளம்பரம் செய்கிறது..?

கேள்வி-6
   அரசு தொலைகாட்சிகளே நட்டத்தில் ஓடும் பொழுது தனியார் தொலைக்காட்சி களுக்கு நோயை பற்றி சொல்ல எத்தனை இலட்சம் கொடுக்கப்பட்டது..??

ஒரே ஒரு பெரிய பதில் :
கேரளா இயற்கை அழிக்கப்படும்.
வவ்வால் இனம் அழிக்கப்படும்.
புதிய வகை ஒரு நோயை பரப்புவார்கள்.
3 மாதம் கழித்து அதற்க்கான மருந்து விற்பனை மிக அமோகமாக நடக்கும்...

மிக முக்கியமான ஒன்று....

இன்னமும் இதை வைத்து அரச குடும்பத்தை பற்றி ஆராயும் சில மக்களை கொலை செய்வார்கள் உங்களையும்தான்....

இது உண்மை....

ஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னனியும்...



ஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னனியும்...

1.உரிமையாளர் - அனில் அகர்வால்

2.தலைமையிடம் - இலண்டன்,இங்கிலாந்து

3.நிறுவனப் பெயர் - வேதாந்தா ரிசோர்ஸ்

4.அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி

5.முக்கிய உற்பத்தி - தாமிரம் (copper )

6.கழிவு உற்பத்தி - தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம்

7.முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத்

8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத்,மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா

9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா , ரத்னகிரி

10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார்

11.அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு

12.அடிக்கள் நாட்டியவர் -  முதல்வர் ஜெ.ஜெயலலிதா 1994

13.ஆலை இயங்க அனுமதியளித்தவர் - முதல்வர் மு.கருனாநிதி 1996

14.அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்

15.முதல் உண்ணாவிரத போராட்டம் -1996

16.போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை

17.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி

18.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7

19.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)

20.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)

21.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)

22.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)

23.ஐந்தாம் விபத்து - ஆயில் டேங்க் வெடிப்பு

24.ஆறாம் விபத்து - நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்

25.உற்பத்தி செய்தது - 2லட்சம் டன் (2005 கணக்கில்)

26.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28

27.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா

28.மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து -உச்சநீதிமன்றம்

29.தமிழ்நாடு பசுமை வாரிம்  - தடை

30.தேசிய பசுமை வாரியம் - அனுமதி

இதை  தயவு செயது அனைவருடைய  குரூப்க்கும் அனுப்பவும்.
அனுப்பியவர்க்கு கோடி நன்றி