வியாழன், 26 டிசம்பர், 2019

நிர்வாகத்தில் தமிழகம் முதலிடமாம்: மத்திய அரசு தகவல்ஈ

நிர்வாகத்தில் தமிழகம் முதலிடமாம்: மத்திய அரசு தகவல்

டிசம்பர் 26,2019 13:21

புதுடில்லி ; பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் அடிப்படையில், நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு நிர்வாகத்திறன் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில், நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் மஹாராஷ்டிரா, 3வது இடத்தில் கர்நாடகா, 4வது இடத்தில் சத்தீஸ்கர், 5வது இடத்தில் ஆந்திரா, 6வது இடத்தில் குஜராத், 7 வது இடத்தில் ஹரியானா, 8 வது இடத்தில் கேரளா 9வது இடத்தில் மத்திய பிரதேச, 10வது இடத்தில் மே.வங்கம், 11வது இடத்தில் தெலுங்கானா, 12வது இடத்தில் ராஜஸ்தான், 13வது இடத்தில் பஞ்சாப், 14வது இடத்தில் ஒடிசாவும், 15வது இடத்தில் பீஹார், 16வது இடத்தில் கோவா, 17 வது இடத்தில் உ.பி., 18 வது இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளன.



மேலும், பொது மக்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம், முதலிடத்தையும், பொது சுகாதாரத்துறையில் 2வது இடத்தையும், சுற்றுச்சூழலில் 3வது இடத்தையும், வேளாண்மையில் 9வது இடத்தையும், வணிகத்தில் 14வது இடத்தையும், மனித வள மேம்பாட்டில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. பெரிய மாநிலங்கள் பட்டியலில், பொருளாதார துறையில் 5வது இடத்தையும், நீதி, சட்டம் ஒழுங்கு, பொது மக்கள் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும், நல்லாட்சி நடக்கும் மாநிலங்களிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது, காலங்காலமாக புளித்துப்போன விசயம்...


பிரித்தாளும் சூழ்ச்சி என்பது,
காலங்காலமாக
புளித்துப்போன விசயம்...

இஸ்லாமியர்கள்,
அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான்
அவர்களது நாடு என்பது போலவும்,
பாமர மக்களின் மனங்களில்
பிரிவினையை உண்டாக்குவதற்கான,
நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக
விதைத்து வந்தனர், வருகின்றனர்...

இந்த பொய்ப்பிரச்சாரங்கள்
ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது...
சத்தியத்தை யாராலும் புதைத்து விட
முடியாது...

இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும்
இந்துக்களின் இரத்த சொந்தங்கள்...

இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற,
இன்ன பிற கொடுமைகளால்,
அந்த வாழ்க்கை முறையிலிருந்து தப்பித்து,
சுய மரியாதையைப்பேணவும்,
சமத்துவத்தை அனுபவிக்கவும்,
அதற்கு வழி வகுத்துத்தந்த
இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு
மாறியவர்கள்...

ஒவ்வொரு மனிதனும்,
தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையை
தேர்ந்தெடுத்துக்கொள்வது,
அவனவனுடைய அடிப்படை சுதந்திரம்.
இதை "இந்திய அரசியல் சாசன சட்டம்"
உறுதி செய்திருக்கிறது...

ஒரே தாய், தந்தையருக்கு பிறந்த
பிள்ளைகள், அவரவருக்கு பிடித்தமான
வாழ்க்கை முறையை
தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லையா,
அதே போலத்தான் இதுவும்...

எல்லா மதத்தினரும்
இந்திய தேசத்தின் பிள்ளைகளே...

என் தகப்பனாரின் மூதாதையர்கள்,
சேதுபதிச்சீமையின் மறவர் குலம்.

என் தாயாரின் மூதாதையர்கள்,
சேதுபதிச்சீமையின் மீனவர் குலம்.

எனது மூதாதையர் காலத்தில்,
சேதுபதிச்சீமையில்,
பள்ளு, பறை என்று 18 சாதிகள்
இருந்தனவென்றும்,
அவர்களில் பெரும்பாலானோர்
இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி,
சாதிகளற்று, சம்பந்தம் பண்ணிக்
கொண்டார்கள் என்றும், என் தாயார்
எனக்கு சொல்லியிருக்கிறார்கள்...

அதனால், எல்லா சாதியிலும்
எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு...

*பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு.*
*அதில் மனித நேயமே மாண்பு..*

நடிகர் ராஜ்கிரண்