லாக்டவுன்!!!*
ஆஸ்தான நடிகர்களின் அலப்பரை படங்கள் இல்லை, 1000 ரூபாய் டிக்கெட்டும் இல்லை, 300 ரூபாய் பாப்கார்னும் இல்லை
அன்பு ரசிகனின் காசை பறித்து சுகம்காணும் ஆண்டு விடுமுறையில் வரும் ஐபில் கிரிக்கெட் இல்லை, விளம்பர சப்தமும் டிவியில் இல்லை.
200 ரூபாய் பொருளை 2000த்திற்கு விற்கும் மால்கள் இல்லை
1000 ரூபாய்க்கு ஸ்பெஷல் தாலி என்று தாலியறுக்கும் ஹைடெக் ஹோட்டல்கள் இல்லை
கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் கார்பரேட் மருத்துவமனைகள் எதுவும் இல்லை..
குடும்பங்களின் கூட்டை பிரிக்கும் டாஸ்மாக் மது பானங்கள் இல்லை
அழகு, கவர்ச்சி, அலங்காரம் என்று காசு பறிக்கும் அழகு நிலையங்கள் இல்லை
20000 ரூபாய்க்கு அந்தமான், 40000 ரூபாய்க்கு சிங்கப்பூர் என்கிற சுற்றுலா கொள்ளைகள் இல்லை
100 ரூபாய்க்கு சாதா, 300 கொடுத்தால் ஸ்பெஷல் சாதா வழி எனும் கோயில்களின் வாசல்கள் பக்தர்களுக்கு திறந்திருக்கவில்லை
பல லட்ச மண்டபம், பலப்பல லட்சம் பந்தி என்கிற தடபுடல் கல்யாண கலாட்டாக்கள் சுத்தமாய் இல்லை
பக்கத்து கடைக்கும் கோடிகள் மதிப்புள்ள காரில் போகும் திடீர்ப்பணக்காரர்கள் இம்சை அறவே இல்லை
மாலை நேர டீ, ரோட்டோர பஜ்ஜி, உறக்கம் வராத இரவுகளில் நடைப்பயணம் எதுவும் கொஞ்ச நாட்களாய் இல்லை.
பரபர வாழ்க்கையில்லை, பேருந்துகள், இரயில்கள் இல்லை, கூட்டமும் இல்லை, தேவையற்ற ஒலி மாசுமில்லை, சுற்று சூழல் பாதிப்புமில்லை, அன்றாட வேலைகளுமில்லை, அலுவலக விதிகளும் இல்லை.
ஆயினும்...
மக்கள் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், கிடைத்ததை வைத்து நேரத்தை ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!!!
