வெள்ளி, 6 டிசம்பர், 2019

இனி IBPS/RRB/SSC தேர்வுகள் கிடையாது? ஒரே தேசம் ஒரே ஆட்தேர்வு திட்டத்தை அமலாக்கும் முனைப்பில் மத்திய அரசு


இனி IBPS/RRB/SSC தேர்வுகள் கிடையாது? ஒரே தேசம் ஒரே ஆட்தேர்வு திட்டத்தை அமலாக்கும் முனைப்பில் மத்திய அரசு

மத்திய அரசுப் பணிகளுக்கான ஆட்தேர்வில் மிகப் பெரும் அதிரடியாக தற்போது உள்ள ரயில்வே/வங்கி/மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளை இரத்து செய்து விட்டு “பொது தகுதித் தேர்வு” எனும் பெயரில் ஒரே தேர்வை நடத்த மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

தற்போது யுபிஎஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்திய குடிமைப் பணிகளான இந்திய ஆட்சியர் பணி, இந்திய அயலக பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி உள்ளிட்ட குரூப் ஏ மற்றும் குரூப் பி கெஜட்டட் அதிகாரிகள் பணிகளுக்கான தேர்வுகளை நடதரதுகிறது.

இதே போல எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம், மற்ற அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

ரயில்வே தனியாகவும், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகள் தனியாகவும் தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்கின்றன.

இந்நிலையில் தொழில்நுட்ப அறிவு சாராத இந்த பணிகளுக்கான பல்வேறு தேர்வு முறைகளை கலைத்து விட்டு ஒருங்கிணைந்த பொதுத் தகுதித் தேர்வு ஒன்றை பட்டப்படிப்பு, 12’ம் வகுப்பு மற்றும் 10’ம் வகுப்பு என பல்வேறு தகுதிகளில் நடத்த உள்ளது.

மேலும் இந்த பொது தகுதித் தேர்வில் நிலை 1, நிலை 2, நிலை 3, நிலை 4 என பல்வேறு படிநிலைகளும் இருக்கும். முதல் நிலையில் கணினியில் நடக்கும் பொது அறிவு, திறன் சார்ந்ததாக இருக்கும். அடுத்தடுத்த படிநிலைகளில் ஸ்கில் டெஸ்ட் உள்ளிட்டவை இருக்கும்.

இத்தேர்வுகளில் தேர்வர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் தேர்வருக்கும் மற்றும் ஆட்சேர்ப்பு நடத்தும் அமைப்புக்கும் பகிரப்படும். குறிப்பிட்ட சில பதவிகளுக்கு அதற்கான சிறப்புத் தகுதிகளை சோதிக்க வேண்டிய அவசியம் இருப்பின் அதற்கான தேர்வுகளை ஆட்சேர்ப்பு அமைப்புகளே மேற்கொண்டு இடத்தை நிரப்பிக் கொள்ளும்.

இத்தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறும் நிலையில் அந்த தேர்ச்சியானது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும். அதற்குள் எந்தவொரு அரசுப் பணியையும் பெறவில்லையெனில் மீண்டும் பொது தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

ஒருவர் குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் தங்கள் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள அதிகபட்சம் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இது தொடர்பாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கையில், “இதன் மூலம் தேர்வர்கள் ஒரே தகுதிக்கு பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக தேர்வு நடத்தும்போது அதற்கான விண்ணப்பச் செலவுகள், கால விரயம் போன்றவை தவிர்க்கப்படும். அதே போல தேர்வு முகமைகளுக்கும் தேர்வை நடத்தி ஆட்சேரப்பை மேற்கொள்வதற்கான செலவுகள் குறையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகளைப் வழங்க மத்திய பணியாளர் அமைச்சகம் தற்போது மத்திய அரசின் அனைத்து துறைகளையும்/ மாநில அரசுகள்/ யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசு பணிகளுக்காக மட்டுமே தற்போது இது கொண்டுவரப்பட்டாலும், இந்த பொது தகுதித் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு மாநில அரசுகளும் ஆட்சேர்க்கையை மேற்கொள்ள விரும்பும்பட்சத்தில் உரிய வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தகுதித் தேர்வு எனும் ஒன்றை கொண்டு வந்தாலும், ஆட்சேர்ப்பை எஸ்எஸ்சி/ஆர்ஆர்பி/ஐபீபிஎஸ் போன்றவை தான் மேற்கொள்ளும். பொது தகுதித் தேர்வு என்பது அடிப்படைத் தகுதியாகக் கொண்டு குறிப்பிட்ட பணிகளுக்கு சிறப்புத் தேர்வுகள் தேவைப்படுமாயின் அதை அந்தந்த தேர்வு முகமைகளே நடத்திக் கொள்ளலாம் என்பது தான் இந்த புதிய அறிவிப்பின் சாராம்சம்.

இந்த பொது தகுதித் தேர்வைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கீழே கருத்துக்களாக தெரிவிக்கவும்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

“தனி பாஸ்போர்ட்.. தனிக்கொடி.. தனித் தீவு” - நித்யானந்தாவின் ராஜ வாழ்க்கை #நித்யானந்தா_கைலாசம்


“தனி பாஸ்போர்ட்.. தனிக்கொடி.. தனித் தீவு” - நித்யானந்தாவின் ராஜ வாழ்க்கை
#நித்யானந்தா_கைலாசம்

ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு ‘கைலாசம்’ என பெயரிட்டு தனிநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு விடுதியில் ஆசிரமம் அமைத்து இந்தியாவிலும், உலக நாடுகளிலும் உள்ள ஆன்மிக பக்தர்களை கவர்ந்தவர் நித்யானந்தா. ஆனால் பாலியல் வன்கொடுமை, பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் கட்டியது, சிறுமிகளை வசியப்படுத்தி வைத்திருந்தது என தொடர்ச்சியாக எழுந்த புகார்கள் காரணமாக நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.


தற்போது அவர் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் நாட்டுக்கு சொந்தமான ஒரு தீவை விலைக்கு வாங்கி தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக தங்கமும், பணமும் பக்தர்களிடம் இருந்து வசூல் செய்து, பல கோடி ரூபாய் கொடுத்து தீவை வாங்கியுள்ளார் நித்தியானந்தா.

பெங்களூரு பிடதி ஆசிரமத்திலிருந்து உத்தரப்பிரதேசம் சென்று அங்கிருந்து காரில் நேபாளம் சென்றுள்ளார் நித்யானந்தா. அங்கிருந்து தனி விமானத்தில் தான் வாங்கிய தீவுக்கு, 2 பெண் சீடர்கள் மற்றும் தற்போது குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தனன் சர்மாவின் மூத்த மகளுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு படிப்படியாக ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் அந்த தீவுக்கு சென்றுள்ளனர். இதில் பெரும்பாலோனர் பெண்கள் என்று தெரிகிறது.


நித்யானந்தா வாங்கியிருக்கும் இந்தத் தீவுக்கு ‘கைலாசம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தீவை தனிநாடுபோல் நடத்த திட்டமிட்டு, அதற்கான முயற்சிகளை அமெரிக்காவைச் சேர்ந்த சட்டமைப்பு உதவியுடன் நித்யானந்தா பக்தர்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. தனக்கு என தனிக்கொடி, தனி பாஸ்போர்ட், தனி இலட்சினை போன்றவற்றையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் தகவல் கிடைத்த பிறகுதான் நித்யானந்தா மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக, மத்திய அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.


‘கைலாசம்’ தீவில் இலவச மருத்துவம், இலவசக் கல்வி வழங்கப்படும், யோகா, தியானம், ஆன்மிக மருத்துவம் வழங்கப்படும் என அதன் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு என்ற முறையில் ‘கைலாசம்’ அமைதியான இறையாண்மை உள்ள சேவை அடிப்படையில் செயல்படும் என்றும், தூதரக நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டு உலக நாடுகளுடன் இணக்கமாக செயல்படுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*