வியாழன், 21 மார்ச், 2019

அன்புள்ள ராமதாஸ் அவர்களுக்கு வணக்கம்!..


அன்புள்ள ராமதாஸ் அவர்களுக்கு வணக்கம்!..

அய்யா என எழுதத்தான் நினைத்தேன்! எங்களுக்கு அய்யா என்றால் பெரியார் தான்! மேலும் அய்யா என உங்களை அழைக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? உங்களை அய்யா என அழைத்தால் என்ன ஆட்டுக்குட்டி என அழைத்தால் என்ன?!..

வாங்க விசயத்திற்கு வருவோம்!!!...

நீங்கள் டாக்டருக்கு படித்தது எதற்கு? உங்களை எல்லாம் யார் டாக்டருக்கு படிக்க சொன்னது? வைத்தியம் பார்க்கவா? இல்லை அரசியல்வாதியாகவா?!..

#வாருங்கள்!..
உங்கள் கடந்த காலத்திற்கு சொல்வோம்!..

சரி, ஐந்து ரூபாய்க்கு  வைத்தியம் பார்த்தது உண்மையா? யாருக்கெல்லாம் பார்த்தீர்கள்? அப்போது உங்கள் நிதி ஆதாரம் என்னவாக இருந்தது?!..

நானோ என் குடும்பத்திலிருந்து யாராவதோ பாமக கட்சியின்  பொறுப்புக்கு வந்தால், என்னை நடுரோட்டில் கட்டி வைத்து சாட்டையால் அடியுங்கள் என்று சொன்ன உங்களை எங்கு கட்டிவைத்து அடிப்பது என,,,

இடத்தை சொல்லவும்?!..

ஜெயலலிதாவை சுண்ணாம்பு கால்வாயில் வீச வேண்டும் என்று சொன்ன நீங்கள் ஜெயலலிதாவை சுண்ணாம்பு கால்வாயில் வீசினீர்களா? எந்த சுண்ணாம்பு கால்வாயில்,,,

வீசினீர்கள்?!..

நான் மீண்டும் ஜெயாவோடு கூட்டணி சேர்ந்தால், அது என் தாயோடு உறவு கொண்டதற்கு சமம் என்று சொன்ன நீங்கள்,,,

அதைத்தான் செய்தீர்களா?!..

போயஸ் தோட்ட வாசலில் கால் கடுக்க நின்று, ஜெயாவோடு பல தடவை கூட்டணி அமைத்தது கடந்த கால வரலாறு,,,

உண்மையா?!.. பொய்யா?!..

திண்டிவனத்தில் 10 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து, ஓட்டை அம்பாசிடர் காரில் வலம் வந்த நீங்கள், இன்று பல நூறு கோடி சொத்துக்கள் சேர்த்தது,,,

உண்மையா?!.. பொய்யா?!..

சரி! பா.ம.க. வில் வாரிசு அரசியல் இல்லை என்றீர்கள்? அப்படியானால் பா.ம.க.வின் இளைஞர் அணித் தலைவரான அன்புமணி உங்களுக்கு,,,

என்ன உறவு?!..

வன்னிய அறக்கட்டளையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மேன்மை தாங்கிய அந்த,,,

ராமதாஸ் யார்?!..

வன்னிய அறக்கட்டளையின் கல்லூரி சரஸ்வதி என்ற பெயரில் இயங்குகிறதே,,,

அவர் யார்?!..

இந்த பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா யார்? அவர் நட்ட மரம் எத்தனை? நட்ட மரத்தின் வகைகள் என்னென்ன? எவ்வளவு உயரம் வளர்ந்துள்ளது காட்டமுடியுமா?
அதற்கு வசூலித்த,,,

தொகை எவ்வளவு?!..

பலரையும் மிரட்டிப் பணம் பறித்ததற்கான போட்டோ, வீடியோ ஆதாரங்கள் என்னிடம்  உள்ளன என வேல்முருகன் சொன்னது,,,

உண்மையா?!.. பொய்யா?!..

மேலும், கடந்த 20 ஆண்டுகளில் திமுகவிடமோ அல்லது அதிமுகவிடமோ பெட்டி வாங்கவில்லை என்று டாக்டர் ராமதாஸால் கூற முடியுமா என கேட்டாரே? வாங்கவில்லை என,,,

சொல்லாதது ஏன்?!..

ராமாதஸ் யார் யாரையெல்லாம், மிரட்டி பணம் பறித்தார் என்பதற்கு என்னிடம் டேப், வீடியோ ஆதாரங்கள் உள்ளன என சொன்ன வேல்முருகனை நீங்கள் சவாலுக்கு,,,

அழைக்காதது ஏன்?!..

வன்னியர் சமூகத்தில் டாக்டர் ராமதாஸ் யார் யாரை கொன்றார் என்ற பட்டியலை வெளியிடுவேன் என வேல்முருகன் சொன்னபோது நீங்கள் ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை? அப்படியானால், நீங்கள் எத்தனை பேரை,,,

கொன்கிறீர்கள்?!..

பாமகவின் வளர்ச்சிக்கு 21 பேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அந்த குடும்பங்கள் வாழ வழியின்றி தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்றபோது, நான் என்ன கொட்டியா வைத்திருக்கிறேன், ஏன் என்னை நாயைப்போல் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என்று நீங்கள் கூறினதாக வேல்முருகன் கூறியுள்ளாரே?,,,

உண்மையா?!.. பொய்யா?!..

கடந்த 1990ம் ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸிடம் டி.எஸ்.ஈ. 1850 அம்பாசிடர் கார் மட்டுமே இருந்தது,,,

உண்மையா?!.. பொய்யா?!..

27 பாமக வேட்பாளர்களிடம் ரூ.2 கோடி சொத்துக்கு பவர் எழுதி வாங்கியது,,,

உண்மையா?!.. பொய்யா?!..

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அந்த 27 பேரின் சொத்துக்கள் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் தயாரா? இல்லை நாங்கள்,,,

கண்டுபிடிக்கட்டுமா?!..

30 வருடத்திற்கு முன்னால் சாதாரண பெட்டிக்கடை டாக்டர்தானே இந்த ராமதாஸ் என, பாரிவேந்தர் சொன்னது,,,

உண்மையா?!.. பொய்யா?!..

இன்று உங்கள் பிள்ளை பத்திரிக்கையாளர்களை கடிந்து கொண்டது போல், நீங்களும்
தினமணி நிருபரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், நிருபரை பார்த்து, "இந்த கேள்வி கேட்க உனக்கு வெட்கமில்லையா?" என கேட்டு  நிருபர்கள் கொந்தளித்த வரலாறு,,,

உண்மையா?!.. பொய்யா?!..

சாதி வெறி பிடித்த அரசியல் வியாபாரியான உங்களுக்கு திமுகவை குறை சொல்ல என்ன யோக்கிதை உள்ளது?!..

#இதோ எங்கள் தலைவர் எதிர்த்த வரலாறும் ஆதரித்த வரலாறும்....

((((( திமுக 1976 முதல் இந்திராவை கடுமையாக எதிர்த்தது.1980 ல் திமுக இந்திராவை ஆதரித்தது.
திமுக இந்திராவை தனிபட்டகாரணத்துக்காக எதிர்க்கவில்லை. எமர்ஜென்சியை எதிர்த்து இந்திராவின் சர்வாதிகார போக்கை கண்டித்தது. போராடியது. விமர்சனம் செய்தது. அதன்பின் இந்திரா தோல்வியை தழுவினார்!..

அதன் பின்னர்பிரதமராக மொராஜி தேசாய் அமர்ந்த போது நாற்காலி சண்டையில் சரண்சிங் வெற்றி பெற்று  நிலையில்லாத அரசும்,  தடுமாற்றம் கொண்ட அரசாக ஜனதா கட்சி பல கூறுகளாகியது. அந்நேரத்தில் இதற்கு காத்திருந்தது போல் மதவாதசக்திகள் தலைநிமிர்ந்து ஜனசங்கம் பாஜகவாக தன் முகத்தை மாற்ற ஆரம்பித்த கால சூழ்நிலை!..

அதை தடுத்து நிறுத்திட, மதவாதசக்தியின் வளர்ச்சியை தடுத்திட, மத்தியில் நிலையான ஆட்சியை தந்திட, இந்திராவை திமுக ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை என சாணக்கிய தனமாக சமயோசிதமாக சிந்தித்து இந்திராவை ஆதரித்தார் கலைஞர்!..

அதே நேரம், சென்னை சீரணி அரங்கத்தில் மக்கள்முன் திமுக மேடையிலே தலைவர் கலைஞரை அருகே வைத்துக்கொண்டு பொதுமேடையிலே மன்னிப்புகேட்டார் இந்திராகாந்தி!..

மன்னிப்பு கேட்பவன் மனிதன். மன்னிக்க தெரிந்தவன் மாமனிதன். என்ற அடிப்படையிலே திமுக
காங்கிரஸை ஆதரித்தது. நாட்டின் நிலைதன்மையை சார்ந்து திமுக அன்று கூட்டணி அமைத்தது!..

அதே போல் வாஜ்பாய் அவர்களை ஆதரித்ததிலும் நட்டுநலன், மக்கள்நலன், தமிழர்நலன் இருந்தது. காரணம் பிரதமர் சந்திரசேகர், பி.வி.நரசிம்மராவிற்கு பிறகு வாஜ்பாய், தேவகௌடா, ஐ.கே குஜரால் என பிரதமர்களின் மாற்றத்தால் இந்திய பொருளாதாரம், இந்தியாவின் ஸ்த்திரத்தன்மை, இந்தியாவின் பாதுகாப்பு, இந்தியாவின் தொழில் வளர்ச்சி என அனைத்தும் கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் வாஜ்பாய் அவர்களை ஆதரித்து நாட்டை வழிநடத்தினார்!..)))))

இப்போது நீங்கள் சொல்லுங்கள் அதிமுக பாஜக இவர்களை,,,

ஆதரிக்க என்ன காரணம்?!..

மாறி மாறி பதவி மற்றும், பணவெறி பிடித்து வெட்கம், மானம், சூடு, சுரனை, இல்லாமல் 5வருடத்திற்கு ஒருமுறை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகளோடு கூட்டணி வைத்து பதவி அதிகாரத்தில் இருந்து கொண்டு அறிக்கை மட்டுமே விடும் மிரட்டல் அரசியல் வியாபாரியான,,,

நீங்கள் பேசலாமா?!..

1994இல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு  ஆர்ப்பாட்டத்தை செய்த போது அந்த ஆர்ப்பாட்டத்தை ஜெயலலிதா அன்றைய காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறையை வைத்து இரும்புக்கரம் கொண்டு நசுக்கி உங்களை ஓட ஓட விரட்டி அடித்து மண்டையை உடைத்த,,,

வரலாறு மறந்து போனதா?!..

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது உங்களை உங்களுடைய மனைவியைகூட சந்திப்பதற்கு அனுமதி மறுத்ததை,,,

மறந்து போனதேன்?!..

ஜெயலலிதாவை உங்கள் மனைவி சந்தித்து நான் தாலி பிச்சை கேட்கிறேன் என்று,,,

கெஞ்சியதை மறந்ததேன்?!..

பிறகு,,,
98-ல் அதிமுக கூட்டணி
2001-ல் அதிமுக கூட்டணி
2011 அதிமுக கூட்டணி
2019ல் அதிமுக கூட்டணி

தமிழக அரசியல் களத்தில் உங்களை போன்று கேவலமான சந்தர்ப்பவாத வியாபாரி,,,

எவர் உள்ளார்?!..

அப்பாவி வன்னிய பெருமக்களை ஏமாற்றி ஜாதியின் பெயரை சொல்லி நீங்கள் கட்சி நடத்தி உங்கள்
குடும்பத்தை வளப்படுத்திக் கொள்ளவில்லை என,,,

உங்களால் சொல்லமுடியுமா?!..

பாமகவை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கிராமம் எல்லாம் கால் பதிய காரணமாக வைத்த திரு.காடுவெட்டி குரு அவர்கள் மறைந்த பிறகு அவருடைய குடும்பம், வன்னிய பெருமக்களின் துரோகி ராமதாஸ் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறதே அது,,,

உண்மையா?!.. பொய்யா?!..

வன்னிய மக்களை காட்டி, தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர் ராமதாஸ். எங்களை ஏமாற்றி வந்தார். வன்னியர்களே இனி ராமதாசை நம்பாதீர்கள் என்று வேறு யாரும் சொல்லவில்லை. அந்த கட்சியை வளர்க்க உயிர் உள்ளவரை பாடுபட்ட காடுவெட்டி குருவின் குடும்பம் பத்திரிக்கையாளர்கள் முன் கோடிட்டு காட்டுகிறது என்றால்,,,

உண்மை இல்லாமலா?!..

டாக்டர் அன்புமணி எந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் அங்கு அவரை எதிர்த்து நிச்சயம் காடுவெட்டி குருவின் குடும்பம் களம் இறங்கும். அன்புமணியை தோற்கடிப்போம் என்று சொன்னதின்,,,

பின்னணி என்ன?!..

"சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி" என்ற கண்ணதாசன் பாட்டு யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ? இப்போது உங்களுக்கு  மிகச்சரியாகப் பொருந்தும்!..

பாட்டாளி மக்கள் கட்சி மதுவை ஒழிக்க போராடி வருகிறது என்றீர்களே மதுவை ஒழித்து விட்டீர்களா? குறைந்த பட்சம் குடிக்காத தொண்டர்களாவையாவது,,,

வைத்துள்ளீர்களா?!..

மதுவிலக்கு போராட்டத்தை நான் அரசியலாக கருதவில்லை மாறாக சமூகக் கடமையாகவே கருதுகிறேன். தேர்தலுக்காகவோ, வாக்குகளை வாங்குவதற்காகவோ இந்த போராட்டங்களை நான் நடத்தவில்லை என்று சொன்ன நீங்கள், 7 சீட்டுக்கு,,,

நாக்கை தொங்க போட்டது ஏன்?!..

தமிழ்நாட்டில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும் வரை நான் தொடர்ந்து போராடுவேன் என்று சொன்னீர்களே அந்த,,,

கடைசிசொட்டு வந்து விட்டதா?!..

பாஜக, அதிமுக, பாமக கூட்டணி இந்த கூட்டணியை பற்றி மிக பெரியளவு விமர்சனத்துக்கு உள்ளாகி இது மானங்கெட்ட கூட்டணி என்று சமூக வலைதளம், ஊடகம் என்று மட்டுமல்லாமல், பொதுவெளியிலும் மக்கள்  சிரிப்பாய் சிரிப்பது உங்களுக்கு,,,

தெரியுமா?!.. தெரியாதா?!..

திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என்ற நீங்கள் இப்போது அதிமுகவோடு கூட்டணி வைத்ததும், உங்கள் மகன் மீதுள்ள ஊழல் வழக்கு,,,

வாபஸ் வாங்கப்பட்டதா?!..

அதிமுக ஊழல் கட்சி என புத்தகம் வெளியிட்டு, வீடு வீடாக கொண்டு சென்று கொடுத்தது,,,

நீங்கள்தானே?!..

அதிமுகவின்  ஊழல்களை கவர்னரிடம் புகாராக தந்ததும்,,,

நீங்கள்தானே?!..

தகுதியே இல்லாத அமைச்சர்கள் என்று தனி நபர் தாக்குதல் நடத்தியதும்,,,

நீங்கள்தானே?!..

தரமற்ற தனிநபர் விமர்சனம் செய்ததும்,,,

நீங்கள்தானே?!..

சரி சொல்லுங்கள் தைலாபுர அரசரே?!. எதைக்கூறி மக்களை சந்தீப்பீர்? வாக்கு கேட்பீர்?!..

15 லட்சம் போடுவதாக சொல்லி ஏமாற்றிய மோடிக்கு,,,

வாக்களிக்க சொல்வீர்களா?!..

நீட் தேர்வு, காவிரிமேலான்மை வாரியம், மேகதாது அணை, 10% இடஒதுக்கீடு என மக்களை துன்புறுத்தியவர்களுக்கு,,,

வாக்கு எப்படி கேட்பீர்கள்?!..

தூத்துகுடியிலே 13 பேரை சுட்டுகொன்ற அதிமுக அரசுக்கு,,,

எப்படி வாக்கு கேட்பீர்கள்?!..

குட்கா ஊழல், சத்துணவு முட்டைஊழல்ன்னு 24 ஊழல் புத்தகத்தை வீடு வீடாக கொடுத்த பாமக அதிமுகவுக்கு,,,

எப்படி ஓட்டு கேட்கும்?!..

கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவது அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே, இந்த விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்
என்று வாய்ச்சவுடால் விட்ட நீங்கள் தாமரைக்கு,,,

எப்படி வாக்கு கேட்பீர்கள்?!..

யானைகளுக்கு இடையில் நடைபெறும் மோதலில் எறும்புகள் நசுங்கி இறந்ததைப் போல, தமிழகத்தில் இரு குழுக்களிடையே நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில், உழவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் கண்டுகொள்ளப்படாமல் மறைக்கப்படுகின்றன என்று சொன்ன உங்கள் மகன் இப்போது,,,

என்ன சொல்ல போகிறார்?!..

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடும் இதுவரை வழங்கப்படாததால் தமிழகம் முழுவதும் உள்ள உழவர்களின் துன்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று உங்கள் மகன் சொன்னது,,,

நினைவில் உள்ளதா?!..

#வாருங்கள்...

மாற்றம் முன்னேற்றம் போண்டா மணி கதைக்கு போவோம்!..

தங்க நகைகள் உள்பட 30 லட்சத்து 1‌2 ஆயிரத்து 915 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும்  சொந்தமாக கார் இல்லை என்றும், அசையா சொத்துகள் கிடையாது எனவும் உறுதிமொழி கொடுத்தாரே,,,

உண்மையா?!..

அன்புமணியின் மனைவி சௌமியாவிற்கு கையிருப்பு 55 ஆயிரம் ரூபாய் எனவும், தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள் என 6 கோடியே 70 லட்சத்து 46 ஆயிரத்து 562 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளதாக உறுதிமொழி கொடுத்தாரே. இந்த சொத்துக்கள்,,,

எப்படி வந்தது?!..

சௌமியாவின் அசையா சொத்துகளின் மதிப்பு 26 கோடியே 21 லட்சத்து 93 ஆயிரத்து 500 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் 3 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரத்து 468 ரூபாய் கடன் இருப்பதாகவும் உறுதிமொழி கொடுத்தாரே இந்த சொத்துக்கள்,,,

எப்படி வந்தது?!..

இதேபோல் அன்புமணியின் மகள் சஞ்சித்ராவின் சொத்துகளின் மதிப்பு 23 லட்சத்து 62 ஆயிரத்து 111 ரூபாய் என்றும், மற்றொரு மகள் சங்கமித்ராவிற்கு 24 லட்சத்து 99 ஆயிரத்து 483 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும்  உறுதிமொழி கொடுத்தாரே இந்த சொத்துக்கள்,,,

எப்படி வந்தது?!..

இவையனைத்தும் இந்தூர் மருத்துவ கல்லூரி ஒதிக்கியத்தில்,,,

கிடைத்ததா?!..

துவக்க காலத்தில் சொந்தமாக கார் கூட இல்லாத உங்களுக்கு, அப்போது வன்னியர் சங்கம்தான் ஒரு அம்பாசிடர் காரை வாங்கிக்கொடுத்தது,,,

உண்மையா?!.. பொய்யா?!..

இன்று வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பிலான கல்லூரி உங்கள் மனைவி சரஸ்வதி அம்மாள் பெயரில் உள்ளது,,,

உண்மையா?!.. பொய்யா?!..

தமிழ், தமிழர் என்று பேசிக் கொண்டு தனது தோட்டம், அலுவலகம், மக்கள் டிவி ஆகியவற்றில் மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும்தான் வேலை கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ் என்றும்,,,

ஏற்காட்டில் மாமியார் பெயரில் 550 ஏக்கர் தோட்டம், 40 கோடியில் தங்கை பெயரில் மாளிகை, சென்னையில் அக்கா பெயரில் சொத்துகள் என்று வாங்கிக் குவித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பண்ருட்டி வேல்முருகன். அது,,,

உண்மையா?!.. பொய்யா?!..

அன்று கார் வாங்க முடியாத உங்களின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 4,000 கோடி என்பது,,,

உண்மையா?!.. பொய்யா?!..

TMD 1819 என்ற எண் நினைவில் உள்ளதா?!..
வன்னியர் தனி உள்ஒதுக்கீடு அரசு ஆணை 35/2012 யையும் தடுக்க முயற்சி செய்ததின் பின்னணியை,,,

சொல்லுங்களேன் கேட்போம்?!..

#வாருங்கள்!
உங்களின் சொத்து விவரத்தை பார்ப்போம்!..

உங்கள் குடும்ப பெயரில் மாற்றப்பட்ட மற்றும்  அபகரிக்கப்பட்ட, வன்னிய பொது சொத்துக்கள்.

ஹாஸ்பிடல், வன்னியர் கல்வி அறக்கட்டளை.10, காமாட்சி அம்மன் கோயில் தெரு , திண்டிவனம். இப்போது அது டாக்டர் அன்புமணி பெயரில் மாற்றப்பட்டுள்ளது,,,

உண்மையா?!.. பொய்யா?!..

வன்னியர் வல்லரச்சி, மாண்டிரே மாணவர் விடுதி, பச்சையப்பன் மேல் நிலைப்பள்ளி, சிதம்பரம்
வன்னியர் சத்திரம், டாக்டர் ராமதாஸ் மேல்நிலை பள்ளி, திருமங்கலம் காளி, தர்மபுரி வன்னியர் திருமால் மண்டபம், தென்காசி சாலை பஸ் ஸ்டாண்ட் எதிரில் குற்றாலத்தில்
ஜிவிஜி.சரஸ்வதி ராமதாஸ்வன்னியர் திருமண மண்டபம், திருச்செந்தூர்
குட்டி செட்டி தெரு சூளை, தென்காசியில் அன்புமணி ராமதாஸ் திருமண மண்டபம், சிதம்பரம், திருத்தணி மண்பங்கள் உட்பட இப்படி பட்டியல் நீளுதே,,,

உண்மையா?!.. பொய்யா?!..

இரண்டு முறை மத்திய ரயில்வே துணை அமைச்சர்களாக வேலு மற்றும் மூர்த்தி அவர்களை வைத்து,,,

அடித்த கொள்ளை எவ்வளவு?!..

இவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்த போது தமிழக ரயில்வே நிலையங்களை ஏன் செம்மை படுத்தவில்லை?. மாறாக கேரளா ரயில்வே நிலையங்களை செம்மை படுத்தியத்தின்,,,

பின்னனி என்ன?!..

குறிப்பாக கோட்டயம், பாலக்காடு, தலைச்சேரி, மாவேலிக்கரை, கண்ணூர் ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டதின் பின்னனி என்ன? அங்கிருக்கும் கல்வெட்டுகளில் வேலு மற்றும் மூர்த்தி பெயர்,,,

பொறித்துள்ள படம்  வேண்டுமா?!..

குறிப்பாக மாவேலிக்கரை இன்றைய கேரளா எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா வீடு அமைந்துள்ள பகுதி ஆயிற்றே? இப்படி கேரளாவின் காங்கிரஸ் தலைவர்களான ஏ.கே ஆண்டனி, கே.பி .வேணுகோபால், கொடிக்குன்னில் சுரேஷ், கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி போன்றோர் வசிக்கும் பகுதியாயிற்றே?. இதை எதற்கு கேட்கிறேன் என்றால் தனது மகள் கல்லூரி செல்லவேண்டும் என்பதற்க்காக ஒரு ரயில் நிலையத்தை  ஏற்படுத்திய மத்திய  அமைச்சர்களும் உண்டு என்பதை,,,

நினைவு படுத்தத்தான்?!..

சரி வாங்களேன் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்..

பாமகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டு 21 பேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனரே அவர்களின் குடும்பத்தார்க்கு ரயில்வே அமைச்சர்களாக இருந்த அமைச்சர்கள் அவர்களின் குடும்பத்தார்க்கு,,,

பணி நியமனம் செய்தார்களா?!..

இல்லை உங்கள் மகன் போண்டாமணி மத்திய மருத்துவ அமைச்சராக இருந்த போது, அந்த தியாக குடும்பத்தாரின் பிள்ளைகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க,,,

ஏற்பாடு செய்யப்பட்டதா?!..

இப்படி எத்தனையோ அடுக்கடுக்கான கேள்விகளை தொடுக்க முடியும்!..

உங்களிடம் விடை உண்டா?!..

சரி சார்! 1998க்கு முன் பா.ம.க வின் நிலை என்ன?
நாட்டுமுத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டையில் உள்ள  பா.ம.க தலைமை அலுவலக போன் பில், கரண்ட் பில் கட்டக்கூட பணமில்லாத கட்சிக்கு இப்போது எப்படி கோடிக்கணக்கில் சொத்து வந்தது?,,,

சொல்வீர்களா?!..

தமிழக அரசிடம் அடிக்கடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரும் நீங்கள், உங்கள் சொத்து பற்றி வெள்ளை அறிக்கை விட தயாரா?,,,

சொல்வீர்களா?!..

சரி இந்த பொள்ளாச்சி பிரச்சனைக்கு வாய் திறக்காதது ஏன்?
கவுண்டர் இனம் என்பதாலா?!.. இல்லை பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு சாதி என்பதாலா?,,,

சொல்வீர்களா?!..

இளவரசன் எப்படி இறந்தான் என உங்கள் மனசாட்சியிடம் கேட்பீர்களா?

முடியுமா?!...

வாருங்கள் வாக்கு கேட்டு வாருங்கள்!..

வீதிக்கு வீதி மக்கள் காரி துப்பவும் ரெடி!..

வீட்டுக்கு வீடு செருப்பு!
வீட்டுக்கு வீடு துடைப்பம்!
வீட்டுக்கு வீடு கரைத்த சாணி!

ஆகியவையும் இருக்கும்!..

ஞாபகம் இருக்கட்டும்!...

#Rajamoorthy,,,,, வாட்சப் பதிவு.