ஸ்டெர்லைடின் உற்பத்திப் பொருட்களும்... அதற்கு அரசியல்வாதிகளின் 30% கமிஷன் கேல்குலேஷனும்..!
கக்கூஸ் கட்ட வாசலில் 20 குழி மணல், 50 செங்கல் கொட்டினாலே.. எங்கேந்தோ மூக்கு வேத்து... கழுகு மாதிரி ஓடி வருவாங்க..நம்ம ஊர் அரசியல்வாதிகள்..!
ஸ்டெர்லைட்டில் கோடிகளில் பணம்.. மெட்ரிக் டன்களில் உற்பத்தி..! விட்டா வைப்பாங்க..? ஆளாளுக்குப் படை எடுத்து .. கொடுத்து கொடுத்தே கர்ணன் மாதிர கை சிவந்தாராம் இந்த ஆலையின் ஓனருங்க...அப்பவும் மாளல்லை..! பிரய்யோஜனமும் இல்லை.
_____________________________
உண்மையானத் தமிழன்னா இதை ஒரு வார்த்தை விடாம படிக்கணும்.
சமீபத்தில் டேனியல் ஞானராஜ்னு ஒரு மகராசன் ரொம்ப அக்கறையோடு தூத்துக்குடி நிலவரங்களை எழுதிட்டு வாரார். அவரும் அவர் குடும்பமும் நல்லாயிருக்கணும்!
இன்று தூத்துக்குடியில் நடந்த துயரமான சம்பவம் நம் சமுதாயத்தில் வாழும் மக்களின் அறியாமையை அரசியல்வாதிகளும், கிறிஸ்துவ மிஷனரிகளும், அரசியல் சார்ந்து ஆதாயம் தேடுபவர்களும் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
விவாதத்திற்குள் செல்லும் முன் ஸ்டெர்லைட் பற்றி அடிப்படையாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விசயங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் ஒரு காப்பர் ஸ்மெல்ட்டர், ஒரு ரிஃபைனரி, ஒரு ஸல்ஃபியூரிக் ஆசிட் பிளான்ட், ஒரு ஃபாஸ்ஃபோரிக் ஆசிட் பிளான்ட், மற்றும் ஒரு காப்பர் ராடு பிளான்ட் ஆகியவை உள்ளன.
காப்பர் ராடு உற்பத்தி செய்ய காப்பர் கேத்தோடு தான் மூலப்பொருள். பித்தளை, வெண்கலம் மற்றும் அலாய் ஸ்டீல் செய்யவும் காப்பர் கேத்தோடு உபயோகப்படுகிறது. இவை பெரும்பாலும் கட்டுமானப் பொருட்களுக்கும், நாட்டின் இராணுவத் தளவாடங்களுக்கும் உபயோகிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப் பயன்படுத்துவது உலகத்தரம் வாய்ந்த “A” கிரேடு கேத்தோடு ஆகும்.
காப்பர் தயாரிப்பின் உப பொருட்களாக
1) ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்,
2) சல்ஃப்யூரிக் ஆசிட்,
3) ஹைட்ரோ-ஃப்ளூரோ-சிலிசிக் ஆசிட்,
4) ஃபெர்ரோ சாண்ட் மற்றும்
5) ஃபாஸ்போ-ஜிப்பசம்,
இவை அனைத்தும் உற்பத்தி செய்யப் படுகின்றன.
இவற்றில் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
1) ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்.
இதில் ஃபாஸ்ஃபோரிக் ஆசிட், உரங்கள் தயாரிக்கவும், விலங்குகளுக்குத் தீவனம் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப் படுகின்றன. இது சல்ஃப்யூரிக் ஆசிட் மற்றும் ராக் ஃபாஸ்ஃபேட்டின் வேதியல் மாற்றத்தால் தயாரிக்கப்படுகிறது. இதன் செய்முறை மட்டும் கட்டுமான அமைப்பு இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்கு 2,30,000 மெட்ரிக் டன் அளவு இந்த ஃபாஸ்ஃபரிக் ஆசிட் தயாரிக்கப் படுகிறது. இவை டேங்கர் லாரிகள் மூலமாக இந்தியா முழுவதும் மற்றும் அயல்நாடுகளுக்கும் சப்ளை செய்யப் படுகிறது.
2) சல்ஃப்யூரிக் ஆசிட்.
காப்பர் ஸ்மெல்ட்டிங் செய்யும் போது சல்ஃபர் டை-ஆக்ஸைடு வாயு உருவாகிறது. அதுவே வேதியல் மாற்றமடைந்து சல்ஃப்யூரிக் ஆசிடாக உரு மாறுகிறது. இதில் பெரும்பகுதி, ஃபாஸ்ஃபோரிக் ஆசிட் தயாரிக்க உள்ளுக்குள்ளேயே உபயோகப்படுத்தப் படுகிறது. ஒரு சிறு பகுதியே வெளிச் சந்தைக்குச் செல்கிறது.
வெளிச்சந்தையில் விற்கப்படுவது உரங்கள் தயாரிக்கவும், எண்ணை சுத்திகரிப்பிலும், காகித தயாரிப்பிலும், டிட்டர்ஜென்ட் சோப் தயாரிப்பிலும், ஸ்டீல் தயாரிப்பிலும் உபயோகப்படுத்தப் படுகின்றன.
இது ஆண்டுக்கு 12,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
3) ஹைட்ரோ-ஃப்ளூரோ-சிலிசிக் ஆசிட்.
ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்டை ஆவியாக்கி குளிர வைப்பதில் உருவாவது தான் இது. பெரும்பாலும் இது தண்ணீரை சுத்தப் படுத்த உதவுகிறது. தண்ணீரில் க்ளோரின் கலப்பது போலத்தான் இதுவும். இது ஆண்டுக்கு 10,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப் படுகிறது.
4) ஃபெர்ரோ சாண்ட்.
காப்பர் உற்பத்தி செய்ய பைரோ-மெட்டலர்ஜிக்கல் ப்ராஸஸ் பயன்படுத்தும் போது இந்த ஃபெர்ரோ சாண்ட் கிடைக்கிறது. இது ஆற்று மணலுக்கு ஒரு மாற்றுப் பொருள். கட்டுமானத்திற்கும், சாலை அமைக்கவும் இந்த மணல் உபயோகப் படுத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு 6,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
5) ஃபாஸ்ஃபோ ஜிப்சம்.
தூத்துக்குடியில் உற்பத்தி ஆகும் இது, உலகின் மற்ற இடங்களில் கிடைப்பதை விட தரம் உயர்ந்தது. இது சிமென்ட் உற்பத்தியிலும், செங்கல் மற்றும் பிளாஸ்ட்டர் ஆஃப் பாரிஸ் உற்பத்தியிலும் உபயோகப் படுத்தப்படுகிறது. எண்ணை வித்துக்கள் விளைய வைப்பதற்கு முன் மண்ணைப் பதப்படுத்தவும் இது பயன்படுகிறது. இது ஆண்டுக்கு 10,00,000 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
பின்பு காப்பர் ராடு. இது தான் ஸ்டெர்லைட்டின் முதலும் முக்கியமானதுமான உற்பத்திப் பொருள். இது தொலைத்தொடர்பு வசதிகளுக்கும், மின்சாரக் கடத்தியாகவும், டிரான்ஸ்ஃபார்மர்களிலும், மின்காந்த கடத்திகளிலும் உபயோகிக்கப்படுகின்றன.
இந்தியாவில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் அளவு காப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஸ்டெர்லைட்டின் பங்கு 30% மேல், அதாவது தோராயமாக 50,000 மெட்ரிக் டன்.
நிற்க...!!!
இப்போது விவாதத்திற்கு வருவோம்.
இந்தக் காப்பரையோ, அல்லது காப்பர் உற்பத்தியின் போது கிடைக்கும் உப பொருட்களையோ, அல்லது அந்த உப பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் மற்ற பொருட்களையோ நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தாமல் இருக்கிறோமா?
அதாவது உரங்கள், தீவனம், எண்ணை, காகிதம், டிட்டர்ஜென்ட் சோப்பு, ஸ்ட்டீல், க்ளோரின், கட்டுமானப் பொருட்கள், சாலை, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ், எண்ணை வித்துக்கள், மின்சாரம் மற்றும் மின்கடத்திகள்.
இதில் எங்கு இருந்து வருகிறது கேன்சர்? மேற்சொல்லப்பட்ட ஆசிடுகள் நம் தோலில் நேரடியாகப் பட்டால் கண்டிப்பாகக் காயமோ அரிப்போ ஏற்படும். நாம் பள்ளியில் படிக்கும் போது சயின்ஸ் லாப்-இல் ஏற்படுமே, அது போலத் தான். அதுவும் உள்ளே வேலை பார்ப்பவர்களுக்கு. இவ்வளவு பெரிய நிறுவனம் கண்டிப்பாக அதற்கான பயிற்சிகள் அனைத்தும் தொழிலாளர்களுக்குக் கொடுத்திருப்பார்கள்.
இந்த ஆசிடுகள் எதுவும், யூனியன் கார்பைடு கேஸ் போல் அல்லாமல், காற்றில் கலந்து வேதிவினை புரிபவை அல்ல.
இவற்றில் ஸல்ஃப்யூரிக் ஆசிட்டுக்கு மட்டும் உள்ள குணாதிசயம் என்னவென்றால், அது திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சிக் கொள்ளும் என்பது மட்டுமே. உற்பத்தி செய்த உடனே அதைச் சேமித்து வைக்க முடியாது. அதனால் காற்றின் ஈரப்பதத்தை அது உறிஞ்சிக் கொள்ளலாம். தூத்துக்குடியில் மழை பெய்யாமல் இருக்க இது ஒரு காரணமாக இருக்கலாம்.
மற்றபடி கேன்சர் என்பதெல்லாம் கட்டுக்கதை.
இவ்வளவு பொருட்களை இத்தனை லட்சம் டன் கொள்ளளவு உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தின் வருட வியாபாரம் எவ்வளவு இருக்கும் என்று தோராயமாக உங்கள் மனதில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 22,000 கோடி இவர்களுடைய ஒரு வருட வியாபாரம். தோராயமாக 8,000 கோடி இதனுடைய மொத்த லாபம். ஒரு 5000 கோடி நிகர லாபமாக இருக்கலாம். கடந்த 5 வருடங்களில் 300 கோடி ரூபாயை மாசுக் கட்டுப்பாட்டிற்கு மட்டும் செலவழித்து இருக்கிறார்கள்.
உலக காப்பர் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 3.5%, இதை அதிகப் படுத்தத்தான் ஸ்டெர்லைட் 3300 கோடியில் விரிவாக்கம் செய்யலாம் என்று தீர்மானித்தது. இதன் மூலம் இப்போது இருக்கும் 5000 நேரடி வேலைவாய்ப்பு 9000-த்திற்கும், மறைமுக வேலைவாய்ப்பு 20,000-இல் இருந்து 29,000-த்திற்கும் உயரும் என்பது இந்த நிறுவனத்தின் கணிப்பு.
இங்குதான் நம்முடைய அரசியல்வாதிகள் உள்ளே வருகிறார்கள்.
இவ்வளவு வியாபாரம் நடக்கிறதே, இவ்வளவு லாபம் கிடைக்கிறதே, இன்னும் விரிவாக்கத்திற்கு கோடி கோடியாய் பணம் இருக்கிறதே, இதில் நமக்கு என்ன கிடைக்கும் என்பது தான் இவர்களுடைய குறிக்கோள். நம்முடைய அரசியல்வாதிகளுக்குத்தான் 30% கமிஷன் கொடுக்க வேண்டுமே. இந்தத் தொல்லையினால் சில நிறுவனங்கள் ஆந்திராவில் தொழில் தொடங்கச் சென்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
சும்மா போய்க் கேட்டால் இந்த நிறுவனங்கள் பணம் கொடுக்க மாட்டார்கள் என்பதால், பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, கேன்சர் போன்ற வியாதிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களைத் தூண்டிவிட்டு, ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.
இந்த அறியாமையில் போனதுதான், ஒரு பெண் உட்பட இன்று போன 11 உயிர்களும். இதில் காவல்துறையையோ, மாவட்ட ஆட்சியாளரையோ சொல்லிக் குற்றமில்லை.
நம் அப்பாவி மக்கள் தங்கள் அறியாமையினால் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து பிண அரசியலும் செய்து, தங்களுக்குத் தேவையானதையும் நிறைவேற்றிக் கொண்டு, நமக்காக நீலிக் கண்ணீரும் வடிப்பார்கள்.
நமது மக்கள் அறியாமையில் இருந்து வெளிவந்து சமூகத்தை அனுக வேண்டும். போராட்டத்தால் எல்லாவற்றிலும் ஜெயிக்க முடியாது. இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர்கள் குடும்பத்தினர் இனிவரும் காலங்களை எதிர்கொள்ள மன வலிமையைத் தருமாறு கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
எல்லா இழப்பையும் பணத்தால் ஈடு செய்ய முடியும் என்ற தமிழக அரசின் எண்ணத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
உங்கள் சுவர்களில் பகிர்ந்து புரியாத மக்களுக்கு கொஞ்சம் விழிப்புணர்வு கொடுத்து உதவுங்கள்.
நன்றி - ஆனந்தன் அமிர்தன் ஜி பதிவு