சனி, 2 மே, 2020

"கலகலவென சிரி... கண்ணில் நீர் வர சிரி... இன்று உலக சிரிப்பு தினம்!


"கலகலவென சிரி... கண்ணில் நீர் வர சிரி... இன்று உலக சிரிப்பு தினம்!


  •  ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இந்த இயந்திர உலகில் நமக்கும் சிரிக்க நேரமில்லை, மற்றவர்களைச் சிரிக்க வைக்கவும் நேரமில்லை.
எனவே, ஆண்டுதோறும் உலக சிரிப்பு தினம் என்ற ஒன்று கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் முடிந்தளவு மக்கள் ஆங்காங்கே ஒன்றாகக் கூடி சிரித்து, களித்து மகிழ்கிறார்கள்.
  • கடந்த 1998ம் ஆண்டு உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா (Dr. Madan Kataria) என்பவர் உருவாக்கினர்.
  • இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் 'லாப்டர் யோகா' இயக்கத்தை (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.
  • மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி இத்தினம் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது.
  • முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர்.
  • 2000ம் ஆண்டு இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6000-க்கும் மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.
  • இத்தினத்தில் இந்தியாவில் லாப்டர் கிளப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக போய் கொண்டாடுகிறார்கள்.அப்போது, 'சிரிப்பு மூலம் உலக அமைதி', வாழ்க்கைக்காக சிரிப்பு, அன்பும் சிரிப்பும், சிரிப்புக்கு மொழி இல்லை, சிரிப்பு ஒரு உலக மொழி,ஹோ ஹோ ஹா ஹா, சிரிப்பு & ஒரு பாசிடிவ் சக்தி, போன்ற பேனர்களுடன் செல்கிறார்கள்.
  • சிறப்பாக சிரிக்கும் சிறுவர்-சிறுமிகள்,பெண்கள்,வயதானவர்களுக்கு பரிசும் வழங்கப் படுகிறது.
  • சிரிப்பு ஒரு சிறந்த மருந்து என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சிரிக்கும் போது, முழு உடலுக்கும் நன்மை விளைகிறது. நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது. உமிழ்நீரில் கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்கிறது என பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
  • சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள் கலகலவென சிரிக்கின்றன.ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக சுருங்கி விடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
  • மற்ற உறுப்புகள் சரிவர இயங்க உடற்பயிற்சி எப்படி முக்கியமோ அதைப் போலவே சிரிப்பு மூலம் உள் உறுப்புகளை வலிமையாக்க முடியும் என அவர்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
  • தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும்,அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
  • அதேபோல், மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்றை கொழுப்பு கரைகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
  • நாமும் சிரித்து, மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வோம் என இந்நாளில் சபதம் எடுத்துக் கொள்வோமாக...

“லவ் பண்ணலன்னா பரவால்ல, நாம பிரண்ட்ஸா இருப்போம் “


“லவ் பண்ணலன்னா பரவால்ல,
நாம பிரண்ட்ஸா இருப்போம் “...
இந்த வார்த்தையை நிறைய ஆண்கள்
நிறைய பெண்களிடம் சொல்வதை
கேள்விப்பட்டிருப்போம்,
இப்படி சொல்லும்போது உடனே
அந்த பெண்களும் ஈஈ.. என்று
பல்லிளித்துக்கொண்டு
“ச்சே எவ்ளோ நல்லவனா இருக்கான்,
நம்மள தொல்லை பண்ணாமா
உடனே புரிஞ்சிகிட்டான்,
நம்மள ரொம்ப பிடிச்சு போனதால தான்
பாவம் லவ் இல்லன்னா கூட பரவால்ல
அட்லீஸ்ட் பிரண்டாவாவது இருன்னு கேக்குறான்,
பிரண்டா இருக்கிறதுல என்ன தப்பு” என்று
தனக்கு தானே சொரிந்துகொண்டு
அவனை லவ் என்கின்ற டப்பாவில்
இருந்து எடுத்து நட்பு என்கின்ற
டப்பாவில் போட்டு ஹாண்ட் பேக்கில்
வைத்துக்கொண்டு ஊரை சுற்றி வருவார்கள்.
“கொஞ்சநாள் ஆனா அவ மனசு மாறுவதற்கு
நிறைய வாய்ப்பு இருக்கு” என்று இவனும்
அவள் கேட்டதற்கெல்லாம்
ஆமாஞ்சாமி போட்டுக்கொண்டு,
எடுப்பு வேலைகளை விழுந்து விழுந்து
பார்த்துக்கொண்டு காதலி என்கின்ற
பார்வையில் இருந்து கால் இஞ்ச் கூட
தன் பார்வையை மாற்றிக்கொள்ளாமல்
இவ்வளவு நாள் தூரமாய் இருந்து
சைட் அடித்ததற்கும்,
ஜொள் விட்டதற்கும் பதிலாக,
இப்போது அருகில் இருந்துகொண்டே
அதையெல்லாம் செய்துகொண்டிருப்பான்,
இவளும் அதை கண்டும் காணாமல்
அவன் சைட் அடிப்பதையும்,
இவள் எது செய்தாலும் அவன் அதை
ஆஹா ஓஹோ என்று புகழ்வதையும்
ரசித்துக்கொண்டு,
அவன் சில நேரங்களில் இரட்டை அர்த்த
கமெண்ட் அடித்தாலும்,
பர்சனல் விஷயங்களை பேசினாலும்,
உடலை பற்றி பாராட்டினாலும்
அவன் பிரண்ட்லியா சொல்றான்,
அவன் பிரண்ட்லியா சொல்றான் என்று
அந்த பிரண்டு என்கின்ற வார்த்தையை
எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ
அவ்வளவு கேவலப்படுத்திவிட்டு
அனுமதிக்கப்பட்ட டேட்டிங்கில்
வலம் வருவதுபோல் வலம் வருவார்கள்,
யார் கேட்டாலும் பிரண்டு, பிரண்டு என்று
பிரண்டு எனும் போர்வைக்குள்
நுழைந்துகொண்டு இவர்கள் செய்கிற
அநியாயங்கள் அளவில்லாதவை,
மகாபலிபுரம் லாட்ஜில் மாட்டினாலும்,
யாரென்று கேட்டால் பிரண்டு என்பார்கள்,
ஏழு கழுதை வயசான கள்ளக்காதலர்களை
எங்காவது போலீஸ் விசாரித்தாலும்
பிரண்டு சார் என்பார்கள்,
மெரினா பீச்சில் படகுக்கு பின்னால் சிக்கினாலும்
துப்பட்டாவை சரிசெய்துகொண்டே
பிரண்டு என்பார்கள்!
இந்த பிரண்டு என்கின்ற வார்த்தை
இந்த ஒழுக்கம் கெட்டவர்களிடம்
சிக்கிக்கொண்டு படாத பாடு படுகிறது!
நட்பு என்ற உறவு மிக மிக உயர்வான ஒன்று!
காதலியாக பார்த்தவிட்ட ஒரு பெண்ணை
செத்தாலும் தோழியாக பார்க்க முடியாது,
தோழி என்ற போர்வைக்குள் திருட்டுத்தனமாக
காதலியை தான் பார்த்துக்கொண்டு
இருப்பார்களே ஒழிய தோழியாக
பார்க்க மாட்டார்கள்!
அப்படி எந்த ஆணாவது
பிரெண்டா இருக்கலாம் என்று சொன்னால்
“வேணும்னா அண்ணாவா இருக்கியா,
எனக்கு அண்ணா இல்ல” என்று
சொல்லிப்பாருங்கள்,
அடுத்தநாளே காணாமல் போய்விடுவான்!
காதலி என்கின்ற இடத்தில் இருந்து
தோழி என்கின்ற இடத்திற்கு
உடனே jump ஆக முடிகிறது,
பிறகு ஏன் அண்ணன் என்கின்ற இடத்திற்கு
jump ஆக முடியவில்லை,
காரணம் அண்ணன் என்று சொல்லிவிட்டால்
சைட் அடிக்க முடியாது,
அதுவே தோழி என்று சொல்லிவிட்டால்
அதை வைத்து எல்லா வேலைகளையும்
பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பு தான்!
அண்ணன் தங்கை அக்கா தம்பி போன்ற
உறவுகளுக்கு எப்படி ஒரு தனித்தன்மை
இருக்கிறதோ அதே போல் தான்
தோழி தோழன் என்கின்ற உறவும்!
பிரண்டு என்று சொல்லிவிட்டு
சைட் அடிப்பதும் கூட
ஒரு கீழ்தரமான எண்ணம் தான்,
100 ல் 90 பேர் நட்பின் அர்த்தமும் ஆழமும்
தெரியாமலேயே தவறாக அதை
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது
தான் உண்மை!
காதல் ஏற்கப்படாத இடங்களில்
முழுவதும் ஒதுக்கி வையுங்கள்,
அல்லது ஒதுங்கி போய்விடுங்கள்!
அதுவே அந்த காதலுக்கு கொடுக்கப்படும்
மரியாதை,
“இல்ல இல்ல இப்போ நாங்க
பிரண்ட்ஸா மாறிட்டோம்”னு
கதை விட்டீங்கன்னா,
அதுக்கு அர்த்தம் நீங்க பிரண்ட்ஸா மாறல,
கள்ளக்காதலர்களா மாறிட்டீங்கன்னு அர்த்தம்!
❣️❣️❣️