ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

யார் இந்த வேனு ஸ்ரீநிவாஸன் ?

யார் இந்த வேனு ஸ்ரீநிவாஸன் ?

டி வி எஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பேரன்.  சென்னையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து அமெரிக்காவில்  (Purdue University) அறிவியல் முதுகலை பட்டத்தை பெற்றார்.  அப்பல்கலைகழகம் அவருக்கு மேலான்மையில் டாக்டரேட் பட்டத்தையும் வழங்கியது.  மேலும் பிரிட்டனின் வார்விக் (Warwick) பல்கலைகழகமும் இந்தியாவின் ஐஐடி காரக்பூரூம் அவருக்கு அறிவியலில் டாக்டரேட் பட்டத்தை வழங்கின.

1979ல் சுந்தரம் க்ளேய்டானின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்ற வேனு ஸ்ரீநிவாஸன் அவர்கள், 1980ல் டி வி எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக  (chariman) பதவி ஏற்றார்.  கம்யூனிஸ்டுகள் அந்நிறுவனத்தில் பெரும் தொழிலாளர் பிரச்சனைகளை கிளப்பி வந்த சமயம் அது. தொழிலாளர் சங்கங்களின் கடுமையான‌ நிபந்தனைகள் நிறுவனத்தை பெரும் நஷ்டத்தில் தள்ளின.   மூன்று மாதம் நிறுவனத்தை இழுத்து மூடி தொழிலாளர் சங்கங்களை வழிக்கு வர வைத்தார் வேனு ஸ்ரீநிவாஸன், அதன் பின் நிறுவனத்தில் பல புதுமைகளை புகுத்தி அதை உலக தரத்திற்கு மேம்படுத்தி,  அதிநவீன இயந்திரங்களை களம் இறக்கி, புதிய தொழில் நுட்பங்களை ஆழமான ஆராய்சிகள் மூலம் உருவாக்கி, நிறுவனத்தை உயர்த்தினார்.  ஜப்பானின் சுசுகி நிறுவனத்தோடு சேர்ந்து இரு சக்கர கணங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தார்.  அதன் பின் 2001ல் சுசுகி தனியாக பிரிந்திட, இந்தியாவிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட இஞ்சினோடு  டி வி எஸ் விக்டர் எனும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தினார்.  இதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  பல ஜப்பானிய தர ஆய்வாள‌ர்களை தன் நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டு தன்னுடைய மோட்டார் சைக்கிள்களின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தினார்.    டி வி எஸ் 50 முதல் டி வி எஸ் ஸ்கூட்டி,  ஸ்டார் சிட்டி, அப்பாச்சி என அவர் உருவாக்கி  வெற்றி கரமாக சந்தைப் படுத்திய வாகனங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.  உலக அளவில் அவருக்கு கிடைத்த விருதுகளை பட்டியலிட பக்கங்கள் போதாது என்றாலும் அவர் பெற்ற முக்கியமான விருதுகள் சில.

2003 Star of Asia Businessweek
2004 Doctor of Science University of Warwick
2004 Jamsetji Tata Lifetime Achievement Award Indian Society for Quality
2005 J R D Tata Corporate Leadership Award All India Management Association
2009 Doctor Of Science IIT, Kharagpur, India
2010 Padma Shri Government of India
2010 Order of Diplomatic Service Merit Government of South Korea
2012 Ishikawa-Kano Award Asian Network for Quality
2014 Doctor of Management Purdue University, USA
2014 Honorary Commander of Korean Naval vessel, ROKS Choi Young Republic of Korean Navy
2014 Honorary Citizen of Busan City, Republic of Korea Busan Metropolitan Council
2015 Goodwill Envoy for Public Diplomacy Republic of Korea
2016 Champion of Champions and Best CEO Business Today
2018 Life Time Achievement Award F A D A

அவரின் சமூக மற்றும் ஆன்மீக பங்களிப்புகள் என்ன ?

வேனு ஸ்ரீநிவாஸன் அவர்களின் சமூக சேவைகள் கணக்கில் அடங்காதவை.  கிராமப்புற கல்வி,  விவசாயம் சார்ந்த பயிற்சிகள் என அவருடைய தொண்டு நிறுவனம் வெறும் நன்கொடை மட்டும் அளிக்காமல் அடிமட்ட அளவில் களம் இறங்கி பல தொண்டுகளை புரிந்து வருகின்றது. விருப்பமுள்ளர்கள் https://www.tvssst.org/ எனும் வலைதளத்திற்கு சென்று அவற்றை குறித்து விரிவாக‌ அறிந்துக் கொள்ளலாம்.

அது போல கோயில்களுக்காகவும், ஆன்மீக பணிகளுக்காகவும், திரு வேனு ஸ்ரீநிவாஸன் அவர்கள் அரும்பணியாற்றி உள்ளது கணக்கில் அடங்காது.  திருவரங்கம் ரங்கநாதர் கோயிலின்  திருப்பணிக்காக மட்டும் அவர் 25 கோடிகளை வழங்கியதும்,  தமிழ்நாட்டில் உள்ள 100 திருக்கோயில்களுக்கும் மேல் அவர் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

வேனு ஸ்ரீநிவாஸன் அவர்கள் மீது என்ன வழக்கு ?

ரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் கபாலீஸ்வர‌ர் கோயிலில் உள்ள ஒரு பழமையான‌ மயில் சிலை திருடப்பட்டு அங்கு புதிய போலி சிலை மாற்றி வைக்கப்பட்டதாக‌ மயிலாப்பூர் காவல் நிலயத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதை யானை ராஜேந்திரன் எனும் வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார்.  அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட திருக்கோயில்கள் புணரமைப்பு குழுவில் ஒரு உறுப்பினராக வேனு ஸ்ரீநிவாஸன் அவர்களின் பெயரும் அதில் இடம் பெற்றுள்ளது,  இந்தியாவின் முன்னனி தொழில் அதிபர்களில் ஒருவர் என்கிற நிலையில் தனக்கும் தான் சார்ந்த நிறுவனத்திற்கும் இதனால் எந்த‌ அவப்பெயரும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக‌ ஒரு முன் ஜாமீனை தாக்கல் செய்துள்ளார் ஸ்ரீநிவாஸன்.  சமூகத்தில் மதிப்பும், மரியாதைக்கும் உரிய எந்த நபரும் இப்படி ஒரு முன் ஜாமீனை தாக்கல் செய்துக் கொள்வது புதிதல்ல‌. சொல்லப் போனால்  2004ல் தன்னுடைய சொந்த செலவில் கபாலீஸ்வர்ர் கோயிலுக்கு 70 லட்சம் கொடுத்து பணிகளை செய்துள்ளார் வேனு ஸ்ரீநிவாஸன் என்பது குறிப்பிடத்தக்கது.   அந்த வருடத்தில் இருந்ததை தவிர தனக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் ஒரு பக்தன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார் வேனு ஸ்ரீநிவாஸன்

டி வி எஸ் குழு மம் துரதிஷ்டவசமாக பிராமண சமூகத்தினரால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகையால், திமுக மற்றும் கம்யூனிஸ கூட்டங்கள் அந்த நிறுவனத்தை எப்படியாவது அழித்திட துடித்தன. பல தடைகளை போட்டன.  ஆனால் ஈடு இனையற்ற திறமையையும், அயராத உழைப்பையும் யார் தடுத்து விட இயலும் ?.  டி வி எஸ் நிறுவன‌ங்கள் நம் நாடு முழுவதும் மட்டும் இல்லாது உலகம் முழுவதும் விரிந்து பரவியது.  தமிழகம் முழுவதும் திராவிட கட்சிகளின் இந்து விரோத கொள்கைகளால் பலத் திருக்கோயில்கள், மிக மோசமான நிர்வாக‌த்தினாலும்,  அறநிலயத்துறை மற்றும் அரசுகளின் கூட்டுக் கொள்ளையாலும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஐயா பொன் மானிக்கவேல் அவர்கள் இறைவனின்  மறு அவதாரமாக‌வே இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அரும்பணி ஆற்றி வருகிறார்.  சிலை கடத்தல்களிலும்  பல முறைகேடுகளிலும் ஈடுபட்ட பல‌ அறநிலயத்துறை அதிகாரிகள் கைதாகி வருகிறார்கள்.  இந்நிலையில் தான் வேனு ஸ்ரீநிவாஸன் போன்ற சமூகத்தில் தலைசிறந்து விளங்கும் நபர்களை ஏதோ சிலை திருட்டில் சம்பந்தப்பட்டவர் போல் ஒரு பரப்புரையை திமுக, கம்யூனிஸ்டு,  கிறிஸ்தவ மற்றும் தேச விரோத இந்து விரோத சக்திகள் மேற்கொள்கின்றன. அவர்களின் முக்கிய நோக்கமே தர்ம சேவகர்களை குறித்து அவதூறு பரப்புவதுதான். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த கட்டுரையை சிரமப்பட்டு அடியேன் எழுதுவது நம் இந்து தர்மத்திற்காக பாடுபடும் மற்றும் உதவும் நல்லுள்ளங்களை நாம் எந்த விதத்திலும் முன்கூட்டியே தவறாக நினைத்து விடக்கூடாது என்பதற்காகதான்.   யார் நல்லவர் யார் தீயவர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்திடம் உள்ளது.  அதே வேளையில் நம் தர்மத்திற்காக சேவையாற்றுபவர்களை குறித்த விஷமப் பரப்புரைகளை  நாம் முழு சக்தியுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

தலித்துகளுக்கும் திராவிட அரசியலுக்குமான கடைசிக் கண்ணி கலைஞர் கருணாநிதி


தலித்துகளுக்கும் திராவிட அரசியலுக்குமான கடைசிக் கண்ணி கலைஞர் கருணாநிதி

திராவிட அரசியலின் தோற்றத்தில் தலித்துகளின் பங்கு அளப்பரியது. திராவிட சித்தாந்தம், சொல்லாடல்கள் தலித்துகளிடமே முதலில் தோன்றியது எனலாம். பிராமணர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகள் தலித்துகளிடம் முகிழ்ந்து பின்பு திராவிட அரசியலால் மக்கள் மயப்படுத்தப்பட்டது. திராவிடன் என்ற கருத்துச் சொல்லாடலை அரசியல் பதமாக்கியது தலித்துகளே. எனது நூலான “சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை 1869-1943” என்ற தலைப்பில் குறியீட்டு ரீதியாக 'சூரியோதயம்' என்பது தலித்துகளின் அறிவு மரபையும் 'உதயசூரியன்' என்பது அவர்களின் அரசியல் மரபையும் குறிப்பதாகவே இருக்கும். தலித்துகளின் அறிவியக்கமும் அரசியல் இயக்கங்களும் எவ்வாறு திராவிட அரசியலுக்கான நாற்றாங்கால்களாக இருந்து வந்தன என்பதை தலித்துகளின் இதழியல் வரலாற்றின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு திராவிட அரசியலின் முன்னோடிகளாக இருந்த தலித்துகள் திராவிட இயக்க தோற்றக் காலங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். அதற்கு முன்பே அவர்களுக்கிருந்த செழுமையான தர்க்க அறிவு அவர்களை இயல்பாகவே திராவிட இயக்கத்தின் முன்கொடி ஏந்துபவர்களாக்கியது. அவர்கள் கொண்ட கொள்கைக்காக உயிரையும் இழக்கத் தயாராக இருந்தனர். திராவிட இயக்கம் தோன்றிய 1920களில் தலித்துகளின் அறிவியக்கம் கிட்டத்தட்ட நூறு வருடப் பாரம்பரியம் கொண்டதாக இருந்தது. பிராமணரல்லாதார் எனும் அரசியல் சொல்லாடலிலும் அதன் கொள்கை முழக்கங்களிலும் நம்பிக்கை வைத்த தலித்துகள் திரள் திரளாக திராவிட இயக்கத்தின் பின் அணிவகுத்தனர். சாதி ஆதிக்க எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கலப்புத் திருமணம் போன்ற கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் தீவிரமாக செயல்பட்ட தலித்துகள் ஆதிக்கச் சாதியினரின் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாயினர். இந்த உழைப்பின் பயனால்தான் அது மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து அரசியல் கட்சியாகவும் பரிணமித்தது. திராவிட அரசியலின் அதிகாரத்தை நோக்கிய பயணத்தில், ஏற்கனவே திராவிட இயக்கச் செயல்பாடுகளில் பெரிதும் பங்கெடுக்காத, வட்டார அதிகாரம் கொண்ட ஆதிக்கச் சாதியினர் முனைப்பு காட்டினர். இதன் விளைவாக தலித்துகள் தி.மு.க.வின் கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர். தி.மு.க.வின் அதிகார மிக்க பொறுப்புகளான மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் பதவிகளுக்கு தலித்துகள் நியமிக்கப்படுவது அல்லது கட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாமல் போனது. ஆரம்பத்தில் வெள்ளாள சாதிகளும் பின்பு இடைநிலை சாதிகளும் தி.மு.க.வில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினாலும் தலித்துகள் ஒரே ஒரு தலைமையை மட்டுமே நம்பி கட்சியில் தொடர்ந்து வந்தனர் அவர்தான் கலைஞர் கருணாநிதி.

தமிழகத்தின் எண்ணிக்கைச் சிறுபான்மையான, இந்து கோயில் மரபு ஒடுக்குதலை சந்தித்த ஒரு சாதியில் பிறந்ததும், திராவிட சித்தாந்தத்தை தீவிரமாக பின்பற்றியவருமாக இருந்ததாலேயே தலித்துகளுக்கு கலைஞரின் தலைமையிலான தி.மு.க.வின் மீது தீராத காதல் இருந்தது. எப்போதெல்லாம் தலித்துகள் தி.மு.க.வின் மீது வெறுப்பு கொண்டு வெளியேற வேண்டுமென நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் ஆதிக்கச் சாதியினர் கலைஞரை சாதி ரீதியாக வசைபாடியதை தலித்துகள் நினைவு கூர்ந்து தி.மு.க.வில் நீடித்து வந்தனர். ஒவ்வொரு வட்டாரத்திற்குத் தகுந்தாற் போல கலைஞரின் சாதி விளித்துக் கொள்ளப்பட்டது. அவர் நாவிதர், மேளக்காரர், நாயனக்காரர் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இதுதான் தலித்துகளை அவருடன் இன்னும் நெருக்கமாக்கியது. கலைஞரே ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதும், தலித்துகள் மீது எவ்வாறு இந்து மதம் தீண்டாமையை சுமத்தியதோ அதே போல தேவதாசி மரபையும் சில சமூகத்தினர் மீது சுமத்தியது என்ற ஓர்மையே கலைஞரை தங்களுக்கான தலைவராக தலித்துகள் பார்த்து வந்தனர்.

இடைநிலைச் சாதியினர் தி.மு.க.வின் அரசியல் முகவர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டபோது சமூகத்தில் தலித்துகள் மீதான இடைநிலை சாதியினரின் ஒடுக்குதலை தி.மு.க. கண்டும் காணாது போல் இருந்தது என்று விமர்சித்த தலித்துகளே பின்னாட்களில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. தொண்டர்களானார்கள்.
தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.விற்கு தலித்துகள் சென்றது எம்.ஜி.ஆரின் சினிமா முகமதிப்பிற்காக மட்டுமே கிடையாது. தி.மு.க.வினால் அரசியல் பலம் பெற்ற ஆதிக்கச் சாதியினர் தலித்துகளுக்கு எதிராக வினையாற்றத் தொடங்கியதே தென் மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான தலித்துகள் தி.மு.க.வை விட்டு வெளியேறி அ.தி.மு.க.வை ஆதரிக்கத் தொடங்கினர். இந்த இழப்பை இன்றுவரை தி.மு.க.வால் சரிசெய்ய முடியவில்லை. தி.மு.க.வின் கோட்டையாக இருந்த சென்னையை தி.மு.க. இழந்ததும் சென்னை மையத்திலிருந்து தலித்துகள் அப்புறப்படுத்தப்பட்டதும், தென் மாவட்ட ஆதிக்கச் சாதியினர் சென்னையில் அதிகமாக குடியேறியதுமே காரணமாகும்.

தி.மு.க.வில் தலித்துகளின் பங்கெடுப்பை இரண்டு காலகட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, அண்ணா தலைமையிலான தி.மு.க. காலங்களிலிருந்தே (1949) தி.மு.க.விலிருந்து தலித்துகள் அப்புறப்படுத்தல் நடந்தாலும் அரசியல் அதிகாரம் இல்லாததால் இதன் வீச்சு குறைவாக இருந்தது. தி.மு.க. அதிகாரத்தைக் கைப்பற்றிய (1967) ஒரு வருடத்தில் அண்ணாவின் மறைவுக்குப் பின்பு கலைஞர் தலைமைக்கு வந்த பின்பு முற்பட்ட சாதிகளின் ஆதிக்கம் குறைந்து இடைநிலை சாதிகளின் கைகளுக்கு வந்தது தி.மு.க. 1990 களுக்குள் தி.மு.க.வின் கட்சிப் பொறுப்புகளில் மிக சொற்பமான தலித்துகளே எஞ்சியிருந்தனர். தலித்துகளின் மக்கள் தொகைக்கேற்பவோ அல்லது தி.மு.க. வாக்கு வங்கியில் அவர்களின் பங்கிற்கேற்பவோ அவர்களுக்கு கட்சிப் பொறுப்புகளில் இடம் வழங்கப்படவில்லை. இது அ.தி.மு.க.விற்கும் பொருந்தும். புதிய தலைமுறை தலித்துகளும் 1990-களுக்குப் பின்பு தலித் அரசியலில் அணி திரள ஆரம்பித்தனர். இது தி.மு.க.விற்குதான் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் தி.மு.க.வில் தலித் தலைமைக்கான முக்கியத்துவம் தரப்படவில்லை. இதற்கு கலைஞரை மட்டுமே காரணமாக சொல்லிவிடமுடியாது. தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்களாகவும், மாவட்டப் பொறுப்புகளிலும் இருந்த ஆதிக்கச் சாதியினரின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டே கட்சி செயல்பட்டது. அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட செயலாளருக்கே அதிகாரம் என்பது உள்கட்சி ஜனநாயகமாக பார்க்கப்பட்டாலும் அது சாதியாக செயல்பட்டது என்பதே யதார்த்தம். ஆனால் தி.மு.க.வின் கடைசித் தொண்டர்களாக இருந்த தலித்துகள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை பார்ப்பனியத் தலைமை என்றும் தி.மு.க.வே பெரியார் வழியிலான உண்மையான திராவிடக் கட்சி என்று நம்பியும் பேசியும் வந்தனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பெருமளவில் பங்கெடுத்த இடைநிலை சாதியினர் தலித்துகள் போன்ற கொள்கைப் பிடிப்புடன் தி.மு.க.வை பார்க்கவில்லை. அவர்கள் அதை அதிகாரம் தரும் ஒரு அரசியல் கட்சியாகவே பார்த்து வந்தனர். பெரியார் வழியிலான கலைஞரின் தலைமைக்குப் பின்பு சித்தாந்த ரீதியாக தலித்துகளைக் கவர தி.மு.க.வில் ஒருவரும் கிடையாது என்பது மிகையல்ல.
#கலைஞர் #தலித்துகள்