திங்கள், 3 பிப்ரவரி, 2020

போராளித்தலைவரின் போராட்ட வரலாறு .

போராளித்தலைவரின் போராட்ட வரலாறு  . 

(#share  #everywhere )           
 -----------------------------------------
  🌟ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வெடித்த மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து முன்னின்று நடத்தியது.(1983)

  🌟  தலித் மாணவப்போராட்டங்கள் மற்றும் அம்பேத்கர் இயக்கங்களின் போராட்டங்களில்  பங்கேற்று கைது.

 🌟 சென்னை  கடலோரப்பகுதிகளை சார்ந்த தலித் மற்றும் மீனவ இளைஞர்கள் ,மாணவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இளைஞர் நல இயக்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று வழி நடத்தியபோது அப்பொழுது அவ்வியக்கத்தின் சார்பில் ஈழவிடுதலைக்கு ஆதரவாக  மிதிவண்டி பேரணி, ஆர்ப்பாட்டங்கள்  கருத்தரங்குகள் நடத்தியது.(1985)

🌟  ஈழம் சென்ற இந்திய அமைதிப் படையின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களையும் , ஆர்ப்பாட்டங்களையம் தொல் திருமாவளவன் அவர்கள் நடத்தினார்.(1986)

 🌟   புதியகல்விக் கொள்கை(நவோதயா) திட்டத்தின் நகலை சட்டக்கல்லூரி முன் எரித்ததிற்காக டாக்டர் எழுச்சித்தமிழர் கைது,

🌟திராவிடர் கழகம் நடத்திய ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று சென்னை சைதாபேட்டையில் டாக்டர் தொல் திருமாவளவன் கைதானார் .

  🌟 1986 இந்தி அழிப்பு போராட்டத்தில் பங்கேற்றார்.

  🌟 1987-ஈழத்தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தை பாரிமுனைப்பகுதியில் தலைமையேற்று நடத்தினார் டாக்டர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்.

🌟விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை பொறுப்பேற்றபிறகு,  அரசின்விலைவாசி உயர்வை கண்டித்து 01.03.1993 அன்று  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வெறும் உலை போராட்டம் டாக்டர் தொல் திருமாவளவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

  🌟   மதுரை k புதூரில் ராமவர்ம நகரில் மதவெறி எதிர்ப்பு கூட்டம் டாக்டர் எழுச்சித்தமிழரால்  நடத்தப்பட்டது.(13.02.1994)

     🌟 மும்பையிலிருந்து தமிழர்களை விரட்டியடித்த சிவசேனாவை கண்டித்தும்,
அம்பேத்கர் பெயரில் வைக்கப்பட்ட நூலகம் எரிக்கப்பட்டதை கண்டித்தும் மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்க மறுதலித்ததிற்கும்
இரயில் மறியல் போராட்டம் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களால்  நடத்தப்பட்டது.

  🌟1994   ல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% மேல் இட ஒதுக்கீடு வழங்ககூடாது என்றது உச்சநீதிமன்ற தீர்ப்பு. தமிழ்நாட்டை பொறுத்தவரை 69%.
 மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமல்ல,  தாழ்த்தப்பட்டோருக்கு 10% சிறப்பு கூடுதல் வழங்க வேண்டும் என்றும் மதுரை அவனியாபுரம் அம்பேத்கர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஏறத்தாழ ஏழு கிலோமீட்டர் நடந்தே முழக்கமிட்டு சென்று விமான மறியல் - கைது

 🌟1994 -இலங்கை அரசின் ஈழத்தமிழருக்கு எதிரான வன்முறையை கண்டித்து, இலங்கை அதிபர் சந்திரகா கொடும்பாவி எரிப்பு போராட்டம் - கைது.

 🌟  விடுதலைச்  சிறுத்தை களின் மாநிலப்பொருளாளர் முடக்கத்தான்  பாண்டியன் படுகொலையை கண்டித்து வழக்கை சிபிஐ விசாரிக்க கோரியும் தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் ,-கைது
     வேலூர் சிறையில் அடைப்பு

🌟நெல்லை தாமிரபரணியில் நடைபெற்ற படுகொலை தொடர்பான கோமதி நாயகம் அறிக்கை , தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வெளியானதை கண்டித்து அறிக்கை யின் நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றது.

🌟 தமிழக அரசின் வேலை நிறுத்த தடைச்சட்டத்தை TESMA எதிர்த்து தோழமை நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றது,

🌟 பொடா சட்டத்தை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றது.

 🌟 பாப்பா பட்டி , கீரிப்பட்டி ,உள்ளிட்ட ஊராட்சி களில்  தேர்தல் நடத்த வலியுறுத்தி அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்தியது.

🌟காவிரி நீர்ப்பிரச்சனை தொடர்பாக இந்திய பிரதமரை பதவி விலக கோரி வலியுறுத்தி உண்ணாநிலை அறப்போராட்டம் தல்மையேற்று நடத்தியது,

 🌟கூகையூர் கோவில் நுழைவுப்போராட்டாம் .

 🌟தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை தமிழில் படிக்காமல் ,தமிழை அவமதித்த முதலமைச்சர் ஜெயலலிதா வின் தமிழ் விரோத போக்கை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கருப்பு துணியால் முக்காடுபோட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது .இந்த போராட்டம் தமிழுக்கு விரோதமாக செயல்படும் ஜெயலலிதா  அரசின் முகத்திரையை கிழித்தெறிந்தது,

🌟புதுச்சேரி சோரப்பட்டு சேரியில் தீ வைத்த சாதிவெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி ,புதுச்சேரி  சட்டப்பேரவை முன்பு ஆர்ப்பாட்டம்.

 🌟 தமிழக அரசின் தாறுமாறான மின்கட்டண உயர்வை விலக்கிடக்கோரி கைவிடப்பட்டுள்ள ஒற்றை விளக்க இலவச மின்சார திட்டத்தை மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் மீண்டும் நடந்த கோரி அரசு பொது மருத்துவமனையி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்.(27.02.2003)

 🌟   பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்தேசிய பெருந்தலைவர் பழநெடுமாறன்,வைகோ உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்யக்கோரி மூவேந்தர் பகுத்தறிவு பாசறையின் சார்பில்  நடந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தை துவக்கி வைத்தது.(03.03.2003)
 
  🌟 நூறு தமிழ் அறிஞர்கள் உண்ணாநிலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் தமிழ்தேசிய தலைவர்கள் நெடுமாறன் , வைகோ உள்ளிட்டோரை விடுவிக்க கோரி நடந்த  போராட்டத்தை துவக்கி வைத்தார்,

  🌟  பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பழ நெடுமாறன்,வைகோ உள்ளிட்டோர்  விடுவிக்க கோரி திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பாக நடந்த கண்டன கூட்டத்தில் .(29.03.2003)

 🌟2003 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே  தென்பானை கிராமத்தில் சேரிப்பெண் மாரியம்மாள் (16) சாதிவெறியர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

  🌟  மக்கள் உரிமைக்கூட்டமைப்பு சார்பில்  பொடாவை திரும்பபெற வலியுறுத்தியும் , பொடாவில் கைது செய்யப்பட்ட பழ நெடுமாறன்,வைகோ,சுபவீ,நக்கீரன் கோபால் ,பாவாணன் ,பரந்தாமன் ,தாயப்பன் ,சாகுல் அமீது, ஆகியோரை விடுவிக்க கோரி  உண்ணாநிலை அறப்போராட்டத்தில், (06.09.2003)

 🌟   தமிழக அரசின் உயிர்பலி தடை ஆணையை எதிர்த்து அனைத்து தலைநகரங்களிலும் விசிக ஆர்ப்பாட்டம்,(16.10.2003)

🌟 சென்னை சேப்பாக்கம் த்தில் ,இந்திய அரசு - சிங்கள அரசு இராணுவ ஒப்பந்த முயற்சியை கைவிட வலியுறத்தி எழுச்சித்தமிழர் தலைமையில்  உண்ணாநிலை போராட்டம்.(28.06.2005)

  🌟   திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டிக்கு  சாமி கும்பிடச்சென்ற குருவம்பட்டி சங்கரை தீட்டுபட்டதாக சொல்லி சாதிவெறியர்கள் மரத்தில் கட்டி  வைத்து அடித்து படுகொலை.மேலும்  கோட்டாத்தூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  ஒரு லட்சம் நட்ட ஈடு,  தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் ,(9.07.2005)

 🌟 காவிரி நீர்ச்சிக்கல் தீர்க்க,  காவிரிப்படுகை மாவட்டங்களை தஞ்சையில் ஒருங்கிணைத்து தொடர் முழக்க போராட்டம் டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமை.,

🌟  சிங்கள பேரினவாத அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்து  டாக்டர் தொல் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். (03.01.2006)

🌟    அமெரிக்க அரசை கண்டித்து  சென்னை உலகதமிழர் பேரமைப்பின் தலைவர் பழ,நெடுமாறன் அவர்களின் தலைமையில்  28.01.2006 அன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் எழுச்சித்தமிழர்.

 🌟 சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் .(12.06.2006)

   🌟 சிங்கள இராணுவ வெறியாட்டத்தில் செஞ்சோலை பள்ளிச்சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விசிக சார்பில் உண்ணாநிலை அறப்போராட்டம் (17.08.2006.)

 🌟   மக்கள் மக்கள் தொகை அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரி தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம் சென்னையில் பொ . செ தலைமையில்.(06.09.2006)

 🌟  உத்திரபிரதேசம், கான்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை யை சேதபடுத்தி அவமதித்தை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

  🌟  பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலையை சேதபடுத்திய சமூக விரோதிகளை கண்டித்து  சென்னை அரசு பொதுமருத்துவமணை எதிரில். கண்டன ஆர்ப்பாட்டம் 09.12.2006.

 🌟  சதாம் உசேன் படுகொலையை கண்டித்தும் , அமெரிக்க  இங்கிலாந்து படையினரை வெளியேற வலியுறுத்தி  விசிக சார்பில் சென்னை அரசு பொதுமருத்துவமணை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்.

 🌟   சதாம் உசேன் படுகொலையை கண்டித்து , ஆயிரம் விளக்கு மசூதி அருகே தமுமுக மற்றும் தமிழ்நாடு தவஹிதி ஜமா அத் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில்.(30.12.2006)

  🌟 கடலூர் மாவட்டம் கள்ளிப்பாடியில் தொடரும் சாதிப்படுகொடுமைகளை கண்டித்தும்,  சேத்துக்கொல்லை சுப்பிரமணியன் படுகொலையை கண்டித்தும்  சிதம்பரம் பெரியார் சிலை அருகில்  டாக்டர் தொல் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

  🌟 காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசாணையாக அறிவிக்க கோரி சென்னை அரசு  பொது மருத்துவமணை அருகில் டாக்டர் தொல் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

🌟   தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு படுகொலை செய்து வருகின்றனர் ,இதை கண்டுக்கொள்ளாமல் இருந்த இந்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

🌟  தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் வழங்ககோரியும் , ஆயுதபயிற்சி வழங்க கோரியும் , விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்(09.04.2007)

   🌟 தொகுதி மறுசீரமைப்பு குளறுபடிகளை கண்டித்து,  சென்னை பொதுமருத்துவமணை அருகில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.(04.06.2007)

 🌟   கொழும்பு வாழ் தமிழர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் சிங்கள அரசை கண்டித்து ஈழத்தமிழர்களுக்கு மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக வழங்க கோரி ஆர்ப்பாட்டம். (13.06.2007)

   🌟   தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டோர் நுழைவவதற்கு வழிபாடு செய்வதற்கு உரிமை வழங்கி தனிச்சட்டம் இயற்ற வேண்டும்  என்பதை வலியுறுத்தி விசிக சார்பில் தமிநாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம். சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன்பு  தலைவர் தலைமையில்.(17.07.2007)

🌟  முதல்வர் கலைஞர் அவர்களின் நாக்கையும் தலையையும் அறுக்க வேண்டும் என்று பேசிய வேதாந்தியின் கொடுஞ்செயலை கண்டித்து  முதன்முதலில் விசிக சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்(.23.09.2007)

 🌟   திண்ணியம் தீர்ப்பை கண்டித்து எழுச்சித்தமிழர் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.(09.10.2007)

  🌟  அசாம் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் படுகொலையை கண்டித்தும் ,மலேசியாவில் வாழும் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தியும் சென்னை பொது மருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம்,(29.11.2007)

 🌟  சிங்கள பேரினவாத அரசின் அறுபதாம் ஆண்டு சுதந்திர தினவிழாவுக்கு இந்திய தலைமை அமைச்சர் மாண்புமிகு மன்மோகன்சிங் அழைக்கப்பட்டநிலையில் எதிர்ப்பு அதிகமானது.விசிகவும் ,திக வும்  வேண்டுகோள் ஆர்ப்பாட்டம் நடத்தி யதன் விளைவாக மன்மோகன் சிங் கலந்துகொள்ள போவதில்லை என்று அறிவித்தார் ,(31.12.2007)

 🌟தலித்துக்கள் மீது ரவுடி முத்திரை குத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

 🌟 தாழ்த்தப்பட்ட பழங்குடியின  கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற 60% மதிப்பெண்  என்கிற நிபந்தனை யை  விதிக்கும் அரசாணையை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

  🌟 பட்டதாரி தமிழாசிரியர்கள் அரசு பணி கோரி  சேப்பாக்கத்தில் நடந்த அறப்போராட்டத்தை முடித்து வைத்தார்,(21.02.2008)

 🌟  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியதை கண்டித்து விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டம் , சென்னை மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு எழுச்சித்தமிழர் தலைமையில்.(20.02.2008)

🌟 தமிழ்நாட்டில் தமிழனத்திற்கு எதிராக இயங்கும் சிங்கள தூதரகத்தை அப்புறபடுத்த வலியுறுத்தியும் சிங்கள இராணுவத்தினரால் சட்டவிரோதமாக தாக்குதலுக்குள்ளாகும் அப்பாவி தமிழக மீனவர்களின்  பாதுகாப்பு ஆயுதம் வழங்ககோரியும் ,தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்ககோரியும் தமிழக மீனவர்களின் வாழ்வாதர உரிமையை மீட்டெடுக்க வும் கச்சத்தீவு மீட்க கோரியும், தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் சென்னையில்

   🌟 தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தாட்கோ மற்றும் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு திருப்பி செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கின்ற அனைத்து கடன் தொகையையும் மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்யக்கோரி..(07.04.2008)

   🌟 09.05.2008 பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து சென்னை அரசு பொதுமருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம்.
 (09.05.2008)

🌟 ஈழத்தமிழர்கள் குடியுரிமை சட்டத்திருத்தம் செய்ய வேண்டி யும் , ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் நிலம் வாங்ககூடாது வாங்கினாலும் புள்ளிவிவரங்கள் காவல்துறையினரிடம் கொடுக்க வேண்டும் என்ற தமிழக மற்றும் இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோத போக்கை கண்டித்து முதலில் கண்டணம் தெரிவித்து சென்னை அரசு பொதுமருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம்,07.2008

 🌟 2008 தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொலை, இதை கண்டித்து நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்,

 🌟  இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கும் இந்திய அரசை கண்டித்து ,  சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் தமிழின உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்...(03.08.2008)

 🌟   சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில்  விசிக சார்பாக..(16.09.2008)

 🌟 2008 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திக நடத்திய தொடர்வண்டி மறியல்.

 🌟ஈழத்தமிழர்கள் குடியுரிமை சட்டத்திருத்தம் செய்ய வேண்டி யும் , ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் நிலம் வாங்ககூடாது வாங்கினாலும் புள்ளிவிவரங்கள் காவல்துறையினரிடம் கொடுக்க வேண்டும் என்ற தமிழக மற்றும் இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோத போக்கை கண்டித்து முதலில் கண்டணம் தெரிவித்து சென்னை அரசு பொதுமருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம்,

 🌟 2008 தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொலை, இதை கண்டித்து நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்,

 🌟  இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கும் இந்திய அரசை கண்டித்து ,  சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் தமிழின உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்...(03.08.2008)

 🌟   சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில்  விசிக சார்பாக.(16.09.2008)

 🐆 2008 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திக நடத்திய தொடர்வண்டி மறியல்.

 🌟2008   ஈழத்தமிழர்களுக்காக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணா நிலை அறப்போரில்.

🌟  ஒரிசாவில் கிறித்துவர்கள் மீது இந்துத்துவவாதிகள் கொலைவெறி தாக்குதலை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில்.(23.08.2008)

🌟2008 ஈழத்தில் போர் நிறுத்தம் விசிக சார்பில் தமிழகமெங்கும் இரயில் மறியல்

 🌟  ஈழத்தில் போர் நிறுத்த வலியுறுத்தி அனைத்துக்கட்சி சார்பாக நடந்த தமிழர் சங்கிலிப்போராட்டத்தில் எழுச்சித்தமிழருடன் அய்யா நல்லக்கண்ணு, ஆசிரியர் வீரமணி,(24.11.2008)

🌟  ஈழத்தில் போர் நிறுத்தக்கோரி திரைப்பட தென்னிந்திய நடிகர்கள் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் (01.11.2008)

🌟  திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பு
(05.11.2008)

🌟  சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் (09.11.2008)

🌟 இ,கோட்டைப் பட்டியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும் , புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கார் தாக்கப்பட்டதை கண்டித்தும் விசிக சார்பில் தொடர் முழக்க போராட்டம் (10.11.2008)

🌟  இந்திய அரசு போரை நிறுத்த மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக நடைபெற்ற உண்ணா விரத போராட்டம்( 06.11.2008)

🌟  தொழிலாளர் விடுதலை முன்னனி சார்பில் நடைபெற்ற உண்ணா விரத போராட்டத்தில் பங்கேற்பு(11.11.2008)

🌟  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர்கழகம் சார்பில்நடைபெற்ற பேரணியில் பங்கேற்பு,(18 .11.2008)

🌟  போரை நிறுத்த வலியுறுத்தி இளைஞர் மனிதநேய எழுச்சி அறக்கட்டளை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி,இப்பேரணியை எழுச்சித்தமிழர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.(03.12.2008)

🌟   சென்னை சேப்பாக்கத்தில் அரவாணிகள் நடத்திய உண்ணாநிலை அறப்போரில் பங்கேற்பு,(08.12.2008)

🌟   ஈழத்தில் அழிவின் விளிம்பில் ஐந்து இலட்சம் தமிழர்கள் நலன் கருதி இந்திய அரசு இனவெறிப்போரை நிறுத்த வேண்டும் என்றும் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று 15.01.2009 முதல், மறைமலைநகரில் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்

🌟 2009 ஈழத்தமிழர்களுக்காக முற்போக்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ,

🌟  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு உடனடியாக போரை நிறுத்தக்கோரி செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி  மாணவர்கள் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாநிலை அறப்போரில்  ,(23.01 .2009)

🌟 2009 ஈழத்தில் போர் நிறுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊர் ஊராய் மக்களை உசுப்பிய சிறுத்தைகளின் நாம் தமிழர் நடைபயணம்,

🐆 2009 இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய மனிதச்சங்கிலி போராட்டத்தில் ..

🌟2009 இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய கறுப்புக்கொடியேந்தி கண்டன பேரணியில் ..

🌟  செந்தட்டி ஈசுவரன் , பரமசிவம் படுகொலை கண்டித்தும் ,குண்டர் தடுப்புச்சட்டம் , தேசிய பதுகாப்புச்சட்டங்களில் கைது செய்யப்பட்ட 26 விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் இயக்குநர் சீமான் , கொளத்தூர் மணி , நாஞ்சில் சம்பத் ஆகியோரை விடுதலை ச்செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விசிக சார்பாக ஆர்ப்பாட்டம், எழுச்சித்தமிழர் தலைமையில் சங்கரன்கோயிலில் ஆர்ப்பாட்டம்.(17.03.2009)

 🌟 நச்சுப்புகை வீசி தமிழனத்தையே அழித்தொழிக்கும் சிங்கள இனவெறியன் இராஜபாக்சவை கண்டித்து விசிகசார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் , சென்னையில் தலைவர் தலைமையில்.(09.04.2009)

 🌟  சிங்கள கொடுபாதக செயலை கண்டித்தும் ,போரில் பலியான அப்பாவி பொதுமக்களுக்கும் ,களப்பலியான தளபதிககளுக்கும் வீரவணக்கம் செலுத்துகின்ற வகையில் மிக்ப்பெரிய அளவில் அமைதிப்பேரணி..(23.05.2009)

🌟 ஈழத்தமிழர்களை பாதுகாக்க கோரி சிங்கள இனவெறியாட்டத்தை கண்டித்தும் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டார்.(25.05.2009)

🌟   பாலாற்றின் குறக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு  அனுமதி வழங்கிய இந்திய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் ,.(24.06.2009)

🌟   லிபரான் கமிசன் அறிக்கை யை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வலியுறுத்தியும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு (11.07.2009)

🌟 இருபது ஆண்டுகளாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலைசெய்ய சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.(29.07.2009)

🌟   இராஜபாக்சே சகோதரர்களை போர்குற்றவாளிகளாக அறிவித்திடவும் , இலங்கை மீது பொருளாதாரத்தடை விதித்திடவும் சென்னை அரசு  பொது மருத்துவ மணை எதிரில்.
(22.10.2009)

🌟  வீட்டு மனைப்பட்டா கேட்டும் அதற்காக தமிழக அரசு ஆணையம் நியமிக்க வேண்டும் என்று சென்னை அரசு பொதுமருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம்14.12.2009

🌟 2010 வேலூர் கோட்டைக்குள் உள்ள மசூதியில் இசுலாமியர்களுக்கு தொழுகை நடத்த உரிமை மறுக்கப்படுவதை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயகப் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் கைது

🌟   கல்லூரி விடுதிகளின் அவலநிலையை கண்டித்து  விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பாக சென்னை அரசு பொது மருத்துவமணையில் ஆர்ப்பாட்டம்.(20.02 .2010)

🌟   பெட்ரோல் டீசல்ஷாவிலை உயர்வை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் (05.03.2010)

🌟  மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளை தமிழகத்தில் சிகிச்சை அளிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய இந்திய அரசின் போக்கை கண்டித்து விசிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்,(21.04.2010)

🌟    சிங்கள இனவெறியர் இராஜபாக்சே வருகையை  கண்டித்து தடையை மீறி எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம் -கைது (08.06.2010)

🌟 2010  சத்துணவு அமைப்பாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் , பணியிடங்கள் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

🌟  டாஸ்மாக்  ஊழியர்கள்  பணி நிரந்தர செய்யக்கோரி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத் தொழிலாளர் விடுதலை முன்னனி சார்பாக  நடைபெற்ற உண்ணாநிலை அறப்போராட்டம் சென்னை காயிதேமில்லத் நினைவிடம் பின்புறம் நடைப்பெற்ற அறப்போராத்தை முடித்துவைத்தார்,(26.08.2010)

 🌟   நெய்வேலியில் நிலக்கரி  நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர் ஊதிய உயர்வை வலியுறத்தியும் , ஒரு மாதத்திற்கு மேல் நடத்தி வந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,(18.10.2010)

🌟  2010தலித் மக்கள்  மீது தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து ஆர்பாட்டம்

 🌟   தமிழகத்தால்  மழை வெள்ளத்தாதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிதியாக 2000 கோடி வழங்க கோரி இந்திய அரசை வலியுறுத்தி சென்னை அரசு பொது மருத்துவமணை எதிரில் ஆர்ப்பாட்டம் (07.12.2010)

🌟  சிங்கள தூதரகத்தை அப்புறப்படுத்தக்கோரி சிறுத்தைகள் முற்றுகை போராட்டம்( 25.01.2011)

🌟  பொதுத்துறை ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்த அரசு ஊழியர் அய்க்கிய பேரவையின் சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் (28.01.2011)

🌟   தொழிலாளர்களை பழிவாங்கும் இம்காப்ஸ் நிறுவனத்தை கண்டித்தும், தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் இராமதாசை கண்டித்தும் , பாதிக்கப்பட்ட தொழிளாளர்களுக்கு மீண்டும் பணி நியமனம் கிடைத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்(03.03.2011)

🌟 2011 கம்பளி மேடு சுப்ரமணியன் படுகொலையை கண்டித்தும் , பரளிபுதூர் சாதி வெறியாட்டத்தை கண்டித்தும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

🌟 2011 தமிழக மீனவர்களை கடத்தி வருகின்ற சிங்கள அரசை கண்டித்து  ஆர்ப்பாட்டம்

🌟 இராஜபாக்சே செய்தது போர்க்குற்றம் மட்டுமல்ல இனப்படுகொலை இதை கண்டித்து ஆர்ப்பாட்டம்  (01.05.2011)

🌟 இன்ப்படுகொலை குற்றவாளி இராஜபாக்சே கும்பலுக்கு அனைத்துலக நீதிமண்றத்தில் தண்டனை வழங்க வலியுறுத்தி விசிக சார்பாக மாபெரும் கையொப்ப இயக்கம் என்று அறிவித்து கல்லூரி வாசல் , இரயில் நிலையங்கள் , பேருத்து நிறுத்த நீதிமன்ற வளாகங்களில் எழுச்சித்தமிழர் கையொப்பம் பெற்றார் .(12.07.2011)
 
🌟  நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சி  மன்றத்தலைவராக கிருஷ்ணவேணி பொறுப்பேற்றது முதல் சாதிவெறியர்கள் தொடர்ந்துகொடுமைபடுத்தியது மட்டுமல்ல கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதை கண்டித்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் உடன் ஜான் பாண்டியன் அவர்களும் அவருடைய கட்சி தொண்டர்களும் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்(23.07.2011)

🌟 பேரறிவாளன் , சாந்தன் , முருகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதுவிசிக சார்பில் ஆர்ப்பாட்டம்  19.08.2011 சென்னை  தலைவர் தலைமையிலும் , 22.08.2011 தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது,

🌟  இந்தியா முழுவதும் முள்ள அணு உலைகளை மூட வேண்டும் என்று இடிதாங்கி கிராமத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.(21.09.2011)

🌟 பரமக்குடி படுகொலை தொடர்பாக   மையப்புலணாய்வு விசாரணை கோரி சென்னை மற்றும் மதுரையில்(20.09.2011) யில் சிறுத்தைகள் சார்பாக ஆர்ப்பாட்டம்

🌟  சாந்தன் முருகன் , பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் தூக்குத்தண்டணையை இரத்துசெய்யக்கோரி ஊடகவியாலாளர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை முடித்து வைத்தார்,(19.10 .2011)

🌟  பால்விலை , பேருந்து கட்டணம் மற்றும் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து விசிக சார்பில்ஆர்ப்பாட்டம் (21.11.2011)

🌟  முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வற்புறுத்தியும் தமிழகத்தை சார்ந்த நாடாளுமன்ற உறப்பினர் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காந்திசிலை அருகே ஆர்ப்பட்டம் நடைபெற்றது,(29.11.2011)

🌟  முல்லைப்பெரியாறு அணை உரிமையை காக்க மூனாறு தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை மீட்க தேனியிலிருந்து குமுளியை நோக்கி விசிக சார்பாக நடைபயணம்,(16.12.2011)

🌟  திண்ணியத்தை தொடர்ந்து திருவக்கரையிலும் மனிதன் வாயில் மனித கழிவை திணித்த காட்டுமிராண்டித்தணத்தை கண்டித்து வானூரில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்-2012

🌟  தானே புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு நிதி பூற்றுத்தர முயற்சிக்காக காங்கிரஸ் நடுவன் அமைச்சர்கள் பதவிவிலக வேண்டும் என்று வலியுறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம், (16.02.2012)

🌟  சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை இந்தியாஆதரிக்க வலியுறுத்தி  சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில்  விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,(05.03.2012)

🌟 2012  மொஞ்சனூரில் அருந்ததியர்க்கு சுடுகாட்டுப்பாதை தடை, வடுகம் , பொட்டிப்ரெட்டிப்பட்டி , துத்திக்குளம் , ஜேடர் பாளையம் கிராமங்களில்  சாதிய வன்கொடுமைகள்  நிறைந்த நாமக்கல் மாவட்டத்தை அறிவிக்க கோரி  சிறுத்தைகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம்

🌟  தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற கோரி விசிக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் , அரியலூர் மாவத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்றது.05.04.2012

🌟  2012 இலங்கை தம்புள்ள நகரில் மசூதி இடிப்பு சிங்கள இன வெறி அரசை கண்டித்து சென்னையில் விசிக சார்பாக இலங்கை தூதரம் முற்றுகை , எழுச்சித்தமிழர் தலையில் 500 க்கு மேற்பட்டோர் கைது

🌟  ஆந்திராவில் ஐவர் படுகொலை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்.(20.07.2012)

🌟    மதுரையில் புரட்சியாளர் சிலை உடைத்தை கண்டித்தும்,  அதே இடத்தில் புரட்சியாளர் சிலைக்கு வெண்கல சிலை நிறுவவேண்டும் என்று கோரியும் , மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் .(10.08.12)

🌟  கூடங்குளம் மக்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து  சென்னை யில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்.(11.09.2012)

🌟   சிங்கள இனவெறியன் இராஜபாக்சே வாரொகையை கண்டித்து இலங்கை தூதரகம்ஜாமுற்றுகை எழுச்சித்தமிழர் தலைமையில் 1000 பேர் கைது.
(21.09.2012)

🌟  காவிரி நீர் உரிமை தமிழினத்தின் வாழ்வுரிமை அதனை களமிறங்கி போராடா காப்பது நம் உரிமை என்ற அறைகூவலை முன் வைத்து  ஊர்தி பயணம்.(4.10.2012)

🌟  நாமக்கல் மாவட்டம் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு தலித் மாணவி படுகொலையை கண்டித்து சென்னை நினைவரங்கம் முன்பு தலித் மாணவ- மாணவியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனக்குரல் எழுப்பினார்.18.10.2012

🌟  தர்மபுரியில் நடைபெற்ற சாதிவெறியாட்டத்தை கண்டித்து இதனை சிபிஐ விசாரிக்க கோரியும் ,சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்.19.11.2012

🌟  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் , ஊழியர்கள் பாதிக்கும் வகையில் ஆள்குறைப்பு , ஊதியகுறைப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிதம்பரத்தில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்துக்கொண்டார்.25.11.2012

🌟  பெண்களுக்கு எதிராக நாடெங்கும் தொடரும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் , மகளிர் பாதுகாப்புச்சட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ,தற்காப்ப பயிற்சி கட்டாயமாக்க வேண்டும் ,என்று இந்திய அரசுக்கு வலியுறுத்தி  மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்,(  27.12  .2012 )

🌟  வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும் , டெல்டா பாசனப்பகுதியிலிருந்து நீக்கப்பட்ட 32 கிராமங்களை மீண்டும் அதே பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் சிதம்பரத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,(31.12.2012)

🌟  சிங்கள இன வெறியன் இராஜபாக்சே வருகையை கண்டித்து டெசோ அமைப்பின் சார்பில் திமுக தலைமையில் கருப்புடை அணிந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ..(04.02.2013)

🌟 2013 சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான ஐ. நா தீர்மானத்தை  நிறைவேற்ற வலியுறுத்தி டெசோ அமைப்பில் மாநிலம் தழுலவிய பொது வேலை நிறுத்தம் , சாலை மறியலில் ஈடுபட்ட எழுச்சித்தமிழர் உள்ளிட்ட டெசோ தலைவர்கள் கைது.

🌟  இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றத்தை தடுக்க வேண்டும் என்றும் , காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று  வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் டெசோ அமைப்பில் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்றது .(08.08.2013)

🌟   இலங்கையில் நடைபெறும்  காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று ,கச்சத்தீவை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் ,பெட்ரோல் டீசல் விலையை திரும்பபெற வலியுறுத்தியும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் . (7.09.2013)

🌟 .காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் ,(5.11.2013)

🌟  காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்றதை கண்டித்து தமிழகம் முழுவதும் விசிக சார்பில் இரயில் மறியல் 25000 பேர் கைது.15.11. 13

🌟2014 அரசியல் ஆதாயத்திற்காக புரட்சியாளர் சிலையை உடைத்தும் அவமதித்தும், சேரிகளை தாக்கியும் ,சாதிவெறியாட்டம் நடத்தி வரும் கும்பலுக்கு எதிராக புதுவையில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

🌟2014 உத்திரபிரதேசத்தில் தலித் சிறுமிகள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

🌟 இனப்படுகொலை குற்றவாளி சிங்கள அதிபர் இராஜபாக்ஸே ஐ.நா வில் பங்கேற்று உரையாற்றுவதை கண்டித்தும் அதனை தடுக்க இந்திய அரசு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்.(23.09.2014)

🌟 பால்விலை உயர்வை தமிழக அஇசு திரும்ப பெற வலியுறுத்தி விசிக  சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் ,
(31.10.2014)

🌟 மும்பையில் தலித் குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் சாதிவெறியற்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யபட்டார்கள். சிபிஐ விசாரணைக்கு  வலியுறுத்தி மும்பையில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.(24.11.2014)

🌟  கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்து தூக்குதண்டனை அறிவித்தது.இந்திய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்.(05.11.14)

🌟  பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க இருக்கிறோம் என்று சொன்ன வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதை கண்டிக்கும் வகையில் தி,க சார்பில் நடைப்பெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில்,(12.12.2014)

🌟  பாசிச பா.ச.க வின் இந்துத்துவ மதவெறி ஃபாசிச போக்குகளை கண்டித்தும் சென்னையில் விசிக தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்.(23.12.2014)

🌟  தமிழகம் பாலைவனமாவதை தடுத்திட மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும் , மோடி அரசை எதிர்த்தும்   சீர்காழியில் எழுச்சித்தமிழர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
(09.01.2015)

🌟 . நூறுநாள் வேலைத்திட்டத்தை இருநூறு நாளாக விரிவுபடுத்த வேண்டும் என்றும் நிலம் கையகப்படுத்து அவசர சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்,(16.03.2015)

🌟  காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் இராசி மணல் ஆகிய இடங்களில் மூன்று அணைகள் கட்டுவதற்கு கர்நாடகா முயற்சித்து வருகிறது ,இதில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று அனைத்து கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு,(28.03.15)

🌟  மது ஒழிப்பு பரப்பியக்கம் சார்பில் துண்டறிக்கைகளை மெரினா கடற்கரையில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களே பொது மக்களுக்கு விநியோகம் செய்தார்.
(17.09.2015)

🌟  மது ஒழிப்பு பிரச்சாரத்தை நிறைவு செய்யும் வகையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் தலைவர் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பேரணி நடைபெற்றது.(02.15.2015)

🌟  திருவெற்றியூரில் மெட்ரோ இயில் நிர்வாகத்தை கண்டித்து  மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் அந்த மக்கள் ஈடுபட்டு இருந்தார்கள் , அவர்களுக்கு அதரவு தெரிவித்து எழுச்சித்தமிழர் உரையாற்றினார்.(09.03.2016)

🌟  சாதி ஆணவ படுகொலையைத் தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டணி சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம்,(21.03.2016)

🌟 சுவாதி படுகொலையை கண்டித்தும் , கூலிப்படை  கலாச்சாரத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும் சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.(02.07.2016)

🌟  காவிரி நதிநீர் உரிமையை பாதுகாக்க தமிழக முழுவதும் விசிக சார்பில் இரயில் மறியல் எழுச்சித்தமிழர் தலைமையில் 10000 பேர் கைது. (16.06 .2016)

🌟   காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மக்கள் நலக்கூட்டனி சார்பாக இரயில் மறியலில் பங்கேற்பு
(17.10.2016)
🌟  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்  சிங்கள காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை  செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்தேசிய அமைப்பினர் மற்றும் பெரியாரிய அமைப்பினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டனர் ,
(25.10.16)

🌟   - 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவிப்பு செய்ததை கண்டிக்கும் வகையில் இடதுசாரி கட்சிகள் நடத்திய  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு.
(28.11.16)

🌟    500, 1000 ரூபாய்  செல்லாது என்று அறிவித்த  மோடி அரசை கண்டித்து சென்னையில்
 எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,(18.11.2016)

🌟 மோடி அரசை கண்டித்து மதுரையில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,23.11 .2016

🌟  ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் கோவையில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்றது,(28.01.2017)

🌟  சிறுகடம்பூர் தலித் சிறமி நந்தினி படுகொலையை கண்டித்து  தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்றது.(2.02.17)

🌟 நந்தினி படுகொடுயை கண்டித்து அரியலூரில் எழுச்சித்தமிழர்தலைமையில் நடைபெற்றது,(05.02.2017)

🌟 ஏழு வயது சிறுமி ஹாசினியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிப் படுகொலை செய்ததை கண்டித்து வள்ளுவர்கோட்டாத்தில் ஆர்ப்பாட்டம்.
(17.02.17)

🌟 ஐ நா சபையின் தீர்மானத்தை மதிக்காத இலங்கை யை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்  என்னும் கோரிக்கை யை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் (08.03.17)

🌟  சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அனைத்துக்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு  போராட்டத்தில் எழுச்சித்தமிழர் கைது.(25.04.2017)

🌟  காஞ்சி மாவட்டம் திருக்கழுக்குன்றம் சோகண்டி தேவாலயத்தில் தலித்துகளின் வழிபாட்டு உரிமை மறுப்பை கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,(26.04.2017)

🌟  மாடு வாங்குவதற்கும், விற்பதற்கும்  தடை என்று மோடி அறிவித்த மோடி அரசை கண்டித்து  சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்,(02.06.2017)

 🌟 கடலூர் மாவட்டத்தில் தொடரும் சாதிய ஆணவப்படுகொலைகளை கண்டித்து எழுச்சித்தமிழர் தலைமையில் பண்ருட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்,(20.05.2017)

🌟 -சாதி ஆணவப்படுகொலையை தடுத்திட தனிச்சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் நடைபயணத்தை துவக்கி வைத்தார்.09.06.17

🌟 சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்ற தமிழ்தேசிய உணர்வாளர்கள் மீது குண்டர் சட்டம் குறித்து கண்டனஉரையாற்றினார்,(10.06.17)

🌟  மதுக்கடைக்கு எதிராக போராடிய மதுரை வடபழஞ்சி முத்தமிழன் சாதிவெறியர்களால் படுகொலைச்செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்(08.07.17)

🌟 சென்னை மாஆட்சியர் அலுவலகம் முன்பு நீட்டை இரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு(12.07.17)

🌟 மக்கள் நலக்கூட்டணி சார்பாக ஜி,எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து சென்னை யில் ஆர்ப்பாட்டம்(14.07.17)

🌟 திருக்கழுக்குன்றம் அருகே நல்லூர் சேரித்தாக்குதல் மற்றும் அனிதா மரணத்திற்கு காரணாமானவர்களையும்கண்டித்து ஆர்ப்பாட்டம்.(04.09.17)

 🌟 செய்யார் புளியரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற  சாதிகலவரத்தில் வெங்கடேசன் படுகொலையை கண்டித்து செய்யாறில் ஆர்ப்பாட்டம்,(05.08.17)

  🌟 கரூர் மயிலாடுதுறையில் மதவாத சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தை  கண்டித்து கரூரில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம் ,(03.11.17)

🌟 மதவாத சக்தியை கண்டித்து  மயிலாடுதுறை யில் ஆர்ப்பாட்டம்.09.11.17

🌟 ஓக்கி புயலில் பாதித்த மீனவர்களுக்காக வும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வலியுறுத்தியும் நாகர்கோயிலில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடந்த கண்டன  ஆர்ப்பாட்டம்13.12.2017

🌟10.04.2018 -13.04.2018 காவிரி நடை பயணம்

🌟  மும்பையில் தலித்துக்கள் மீது  வன்முறை ஏவும்
பாஜக வை கண்டித்து
சென்னையில் இன்று எழுச்சித்தமிழர் தலைமையில் நடந்த  ஆர்ப்பாட்டம்.8.01.2018

   🌟  நடுத்தர வர்க்க மக்களுக்காக   பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும்  மாநில அரசு கட்டண உயர்வை  திரும்ப பெற   வலியுறுத்தியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக களத்தில் முதல்வர்  எழுச்சித்தமிழர் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்23.01.18

🌟   பேருந்து   கட்டண   உயர்வை திரும்பப் பெற  வலியுறுத்தி
நடைபெற்ற போராட்டத்தில் எழுச்சித்தமிழர் ,புரட்சிப் புயல்,அண்ணன்ன் சுபவீ பங்கேற்பு
(29.01.2018)

🌟    சென்னையில் வன்கொடுமை எதிர்ப்பு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து தலித் தலைவர்களும் எழுச்சித்தமிழர் தலைமையில் ஒன்று திரண்டு ஆளுநர் மாளிகை நோக்கி  ஆர்ப்பாட்டம் ! 24.04.2018


    🌟ஸ்டெர்லைட்  அரசு படுகொலையை கண்டித்து
 சென்னையில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தில்தலைவர் எழுச்சித்தமிழர்,மமக தலைவர் ஜவாஹிருல்லா ,திமுக மகளிரணிச் செயலாளர் சகோதரி கனிமொழி,  கைது.
(25.05.2018)
🌟  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து  எழுச்சித்தமிழர் தலைமையில் சென்னை சோழிங்க நல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.(30.05.18)

🌟  சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஏற்பட்ட சாதிய படுகொலையை கண்டித்து  தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் இரண்டாம் புரட்சியாளர் எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்துகொண்டு கண்டனஉரை நிகழ்த்தினார் .(04.06.2018)


      🌟தூத்துக்குடி  துப்பாக்கி சூட்டை கண்டித்து எழுச்சித்தமிழரின் ஆணைக்கிணங்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகமெங்கும் 90 இடங்களில்  மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

எழுச்சித்தமிழர் தலைமையில்  சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது(22.06.2018)

🌟  நீட் தேர்வை இரத்துச்செய்யக்கோரி
எழுச்சித்தமிழர் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.(04.07.2018)

🌟    எட்டுவழி சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் விசிக சார்பாக எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.(17.07.18)

🌟  எட்டுவழிச் சாலையை எதிர்த்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்,(27.07.18)

🌟 எழுத்தாளர்கள் இந்து பயங்கரவாத சனாதன அமைப்புகளால் கொலை செய்யப்படுவதை கண்டித்தும் ,எழுத்தாளர் விசிக பொதுச்செயலாளர் சகோதரர்  இரவிக்குமார் அவர்களுக்கு வந்த அச்சுறுத்தலை கண்டித்தும் சென்னையில் டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.(11.09.2018)

🌟  ஆத்தூர் ராஜலெட்சுமி படுகொலையை கண்டித்து சேலத்தில்  எழுச்சித்தமிழர் தலைமை யில் ஆர்ப்பாட்டம், (05.11.18)

🌟  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நந்தீஸ்  -சுவாதி ஆனவப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ,தமிழக அரசின் மெத்தனப்போக்கை எதிர்த்தும் டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமையில் ஓசூரில்  பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.(20.11.18)

🌟  காந்தி உருவ படத்தை துப்பாக்கியால் சுட்ட இந்து மகா சபை தலைவரை கண்டித்து சென்னையில் டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.(05.02.2019)

🌟  ஏழு பேர் விடுதலைக்கான மனித சங்கிலிப் போராட்டம் .சென்னையில் டாக்டர் எழுச்சித்தமிழர் பங்கேற்பு 09.03.2019

🌟  பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட் டம்(15.05.2019)

🌟   சாதி வெறி பாமக வின் பொன் பரப்பி அராஜகத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம் (24.08.2019)

🌟  சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு  திருவாரூர் கொல்லி மலையின் வாயில் மலத்தை திணித்த  கொடுமை மற்றும் கடலூர் திலகவதியின் ஆனவப் படுகொலையை கண்டித்து  டாக்டர் எழுச்சித்தமிழரின் தலைமையில்   ஆர்ப்பாட்டம்  நடந்தது .(14.05.2019)

🌟  புரட்சியாளர் சிலையை வேதாரண்யத்தில் தொட்ட சமூக விரோதிகளுக்கு எதிராக,  சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு  டாக்டர் எழுச்சித்தமிழர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,(03.09.2019)

🌟   ஜம்மு காஷ்மீர் சரத்து 370 க்கு எதிராக நடக்கும் அராஜகத்தை கண்டித்து டாக்டர் எழுச்சித்தமிழரின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில்.(12.09.19)

🌟  பாபர்மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது தீர்ப்பை மறுஆய்வு செய்ய 
வலியுறுத்தி பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
(22.11.2019)

🌟   போர் குற்றவாளி
கோத்தபயா ராஜபக்சேவை இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும் பா.ஜ.க.அரசின் தமிழின விரோதபோக்கை கண்டித்து  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக அண்ணன் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டது (23.11.19)

🌟   பாசிஸ பாஜக  கொண்டு வந்த மத , இன அடிப்படையிலான இந்திய குடியரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது(14.12.2019)

🌟 கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் கிராமத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானதை கண்டித்து,  தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்  தலைமையில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்,(16.12.19)

🌟  இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சென்னையை குலுங்கச். செய்த திமுக கூட்டணிப் பேரணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக.(23.12.2019)

🌟   குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடர் இசை முழக்கம்  கண்டன போராட்டத்தில்  தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்   கண்டன உரையாற்றினார். (26.12.19)

🌟 புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ள மாணவர்களுடன் போராட்ட களத்தில் போராளித்தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் .... (6 .01.2020)

🌟  மோடி அரசின் பொருளாதார கொள்கைகளையும், பொதுத் துறைகளை தனியார்மயமாக்கும் திட்டங்களையும், ஜனநாயக விரோத சட்டங்களையும் கண்டித்து அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்தும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கைது...
(08.01.20)