இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் - 2019.
* தமிழகத்திலிருந்து மொத்தம் 845 வேட்பாளர்கள் களமிறங்கும் இத்தேர்தலில், தென் சென்னையில் போட்டியிடும் இராதா மட்டும் திருநங்கை. சுயேச்சை வேட்பாளர்! (மதுரைத் தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்திருந்த பாரதி கண்ணம்மா, எனும் மற்றொரு திருநங்கையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.)
* ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்காக, மெரினாவில் அமர்ந்திருந்த போதே ஆரம்பிக்கப் பட்ட ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ எனும் கட்சி, வட,தென், மத்திய சென்னை, நாகப்பட்டினம், கோவை, ஈரோடு, வேலூர் , நெல்லை, மதுரை உள்ளிட்ட 10+ தொகுதிகளில் தன் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இவர்களுள் இருவர் பெண்கள்.
* Pyramid Party Of India (PPOI) என்பதை, தமிழில் 'இந்தியக் கோபுரக் கட்சி' என மொழி பெயர்க்கலாமா எனத் தெரியவில்லை. ஆந்திராவைத் தலைமையிடமாகக் கொண்டு, கடந்த இருபதாண்டுகளாகச் செயல்பட்டு வரும் இக்கட்சி சார்பில், தென் சென்னையிலும் மத்திய சென்னையிலும் முறையே ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக இருவர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள், சைவம் சாப்பிடுபவர்களை மட்டுமே வெற்றி பெற வைக்க வேண்டுமெனும் வேண்டுகோள் /கொள்கை உள்ள கட்சி இது. நாம் தமிழரைத் தொடர்ந்து, வேட்பாளர் ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 50% இடம் அளித்துள்ள இன்னொரு கட்சி இது.
* அனைத்து ஓய்வுதியதாரர்கள் கட்சி (All Pensioner’s Party) சார்பில், மயிலாடுதுறைத் தொகுதியில் ஒருவர் போட்டியிடுகிறார். ஹபீப் முக்மது எனும் அவரின் வயது 65. ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கான கட்சி இது.
* அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக நீலகிரித் தொகுதியில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அதிக மனுத் தாக்கல் நிகழ்ந்த தொகுதி, தென் சென்னை. குறைந்த மனுத் தாக்கல் நிகழ்ந்தது நீலகிரித் தொகுதி. முறையே, 60 மற்றும் 14.
* மதிமுக வேட்பாளர் A.கணேசமூர்த்தி, சுயேச்சை A.C. கணேசமூர்த்தி, சுயேச்சை M. கணேசமூர்த்தி என மொத்தம் 3 கணேசமூர்த்திகள் ஈரோடு தொகுதியில் போட்டியிடுகின்றனர். ஒரே பெயர் கொண்ட அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி இதுதான்.
* முக்கிய கட்சிகள் தவிர, தமிழகத்தில் போட்டியிடும் போட்டியிடும் மற்ற சில கட்சிகளின் பெயர்கள்: இந்திய புதிய காங்கிரஸ், இந்திய கிறித்துவ முன்னணி, கிறித்துவ ஜனநாயக முன்னணி, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி, ஜம்மு & காஷ்மீர் தேசியச் சிறுத்தைகள் கட்சி, ஐக்கிய இந்தியக் கட்சி, நாம் இந்தியர் கட்சி, பிரகதிசில் சமாஜ்வாடி கட்சி, தமிழ் தெலுகு தேசியக் கட்சி, உலக சகோதரத்துவ இயக்கம், மதச்சார்பற்ற பூர்வாஞ்சல் ஜனதா, ஊழல் எதிர்ப்பு மாற்றுக் கட்சி, இளந்தமிழர் முன்னணிக் கழகம், அனைத்து மக்கள் புரட்சிக் கட்சி, அகில இந்திய மக்கள் கழகம், எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழகம், தேசிய மக்கள் சக்திக் கட்சி, தேசிய உழவர் உழைப்பாளர் கழகம், இராஷ்டிரிய சமாஜ் பக்ஷா, உழைப்பாளி மக்கள் கட்சி, இந்திய கனசங்க கட்சி, இந்திய சோசியலிச ஒற்றுமை மையம், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி. மதச்சார்பற்ற இந்திய மக்கள் கட்சி, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், சமாஜ்வாடி பார்வர்டு பிளாக், அம்பேத்கர் தேசிய காங்கிரஸ், பூர்வாஞ்சல் மகா பஞ்சாயத், ஆதர்ஷ் சமாஜ் கட்சி, விடியலைத் தேடும் இந்தியர்கள் கட்சி. குடியரசு சேனா.