வெள்ளி, 15 ஜூன், 2018

4 வருடத்தில் 19 தடவை மட்டுமே நாடாளுமன்றம் பேசிய மோடி.. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு

பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 தடவை மட்டுமே பேசியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் பொதுநல வழக்கு  தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்படும். பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். அதிலும் வருடத்திற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை.

நாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசவில்லை.

இந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும்

முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள்

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும்

இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே,  வாதம் புரியாமல்,  ஏற்கிறேன் இந்தக் கருத்தை முன் மொழிந்தவர்களுக்கு தலையும் வணங்குகிறேன்,

ஆனால்? ???
ஆனால்???

எனக்கு ஒரு ஐயமும் உள்ளது அதற்கு உங்களிடம் தான் தீர்வும் உள்ளது என்பதை நான் அறிவேன் அதற்காகத்தான் இதைப் பதிவிடுகிறேன்

2012 க்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களே இன்று இளைஞர்கள்கள் அதிலும்20 ஆயிரம் பேர்தான் உள்ளோம் இதில் பெண்களில் பாதிப்பேர் ஏற்கனவே திருமணமானவர்கள் அப்படி இருக்கையில் 20 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர் என்றே வைத்துக் கொள்வோம் 

இதற்கு முன் உள்ள ஆசிரியர்களின் குழந்தைகள் பள்ளிப்படிப்பை கடந்துவிட்டார்கள் என்பதால் அவர்களை இணைக்கவில்லை

20 ஆயிரம் குழந்தைகளும் சேரவேண்டும் சேர்க்கவேண்டும் இதில் பல ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளனர் அதையும் நாம் உணரவேண்டும்

இங்குதான் எனக்கு சில ஐயம் எழுகிறது?

இவர்கள் அனைவரும் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் என்ன மாற்றம் வரும்?

நீங்கள் ஒன்றை உணர வேண்டும் அரசுப்பள்ளி கட்டிடங்களும், ஆசிரியர்களும் தரமாக உள்ளனர் அப்படி இருந்தும் ஏன் அரசுப்பள்ளியில் சேர்க்கை இல்லை??

ஏனெனில் சில ஆயிரங்களில் சம்பாதிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அனைத்து திறமைகளையும் கற்றுத்தரும் பள்ளியையே தேர்வு செய்கிறார்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா?

தனியார் பள்ளியில் என்னென்ன வசதிகள் உண்டு அதை நடத்துபவர்கள் யார்? பட்டியலிடுவோமா?

தனியார்பள்ளி

1.பேருந்துவசதி
2.நடனம், நாட்டிய பயிற்சி,
3.இசைப்பயிற்சி
4.கராத்தே
5.ஹிந்தி
6. சிலம்பப் பயிற்சி
7. தரமான விளையாட்டுப் பயிற்சி அதற்கென ஒதுக்கப்பட்ட மைதானங்கள்
8. Ncc. Nss. போன்ற திட்டம் அதற்கென பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட பல ஆசிரியர்கள் உண்டு

9.பணம்கட்டி படிக்க டியூசன்கள் உண்டு 

10. நாளுக்கேற்ற ஆடை, டை, சூட் கோட் 

11. முக்கியமா பாதுகாப்பு கேட்டை விட்டு வெளியவரமுடியாத பாதுகாப்பு

12. ஸ்மார்ட் கிளாஸ் 

இதெல்லாம்தான் பெற்றோர்களை தனியார்பள்ளியை நோக்கி ஈர்க்கிறது

என்பதை உணரவேண்டும்

பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் மீது சற்று அக்கறை அதிகம் பள்ளியில் நடக்கும் மீட்டிங் எல்லாம் வருகிறார்கள் ஆசிரியர்களை கண்டிக்கச் சொல்கிறார்கள்,  ஆனால் அரசுப்பள்ளியில் ??

அரசுப்பள்ளியில்
1.கட்டிடம் உண்டு
2. ஆசிரியர் உண்டு 
3. கழிவறை வசதிகள் சில இடங்களில் உண்டு பல இடங்களில் இல்லை

4. பேருந்துவசதி இல்லை பஸ்பாஸ்உண்டு

5. கராத்தே,  சிறப்பான உடற்கல்வி பயிற்சி, ஹிந்தி,ஸ்மார்ட் கிளாஸ்
ம் இதுல எதுவும் இல்லை

பள்ளிக்கு வாடா னு சொல்லிக் கேட்டாலும் வரமாட்டான் பிள்ளையை கையை பிடித்து இழுத்தாலும் ஏன்டானு கேட்க கூடாது பெத்தவனும் பள்ளிக்கு வரமாட்டான்,  படிக்கலனா திட்டவும் கூடாது,  திட்டினால் ஆசிரியருக்கு சிறைதான் 

இப்படியான சூழலில் இருக்கும் அரசுப்பள்ளியில்

ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்தால் தான் பள்ளி சிறப்பாக இருக்கும் என்று கூறுவது சரியா ?

அரசுப்பள்ளிகளின் தரம் உயர்தல் என்பது ஆசிரியர்களின் பிள்ளைகளை சேர்த்தால் மட்டும் வந்துவிடுமா??

இப்படி ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம்  தருகிறோம் தங்கள் பிள்ளைகளை சேர்க்க மறுக்கிறார்கள் என்று ஆசிரியர்களை சமூகபார்வைக்குள் சிக்கவைத்தவர்கள் யார்?  

அரசு ஏன் 25% ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் அதாவது இந்த ஆண்டுமட்டும் 4 லட்சத்திற்கு மேல் மாணவர்களை தனியார்பள்ளிக்கு பணம் கட்டி படிக்கவைக்க அனுப்பவேண்டும் வேண்டும் 

அட ஆண்டுக்கு 4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளிக்கு அரசு அனுப்புகிறதே அவர்கள்தான் ஏழை என்றால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார்? பணக்காரர்களா??

20 ஆயிரம் ஆசிரியர்கள் 20 ஆயிரம் குழந்தைகளை ஒருமுறைதான் பள்ளியில் சேர்க்கமுடியும் ஆண்டுக்கு 20 ஆயிரம் குழந்தைகளையா அவர்கள் பெற்று அரசுப்பள்ளிக்கு அனுப்பமுடியும்???

ஆண்டுக்கு 4லட்சம் மாணவர்களை 25% இட ஒதுக்கீட்டில் அனுப்புவதை ஆசிரியர்களும், சங்கங்களும் எதிர்த்தோம் அதை மறைக்க எங்கள் மீது இப்படி ஒரு பழியை அரசு சுமத்துகிறது,  இதை ஏன் நீங்கள் கேட்கவில்லை?

ஆண்டுக்கு 4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளியில் அரசு சேர்ப்பதற்கு என்ன காரணம்?  

காரணம் அரசியல்வாதிகளே, அவர்களின் உறவினர்களே, அதிகமாக தனியார்பள்ளியை நடத்துகிறார்கள்,

அவர்களின் பள்ளியை காக்கவும் அவர்கள் சம்பாதிக்கவும் அரசுப்பள்ளியையும் ஆசிரியர்களையும் பலியாக்குவது சரியா?

அரசு நினைத்தால் எதையும் செய்யலாமே ஏன் உத்தரவை பிறப்பிக்க முடியவில்லை அரசு வேலை வேண்டும் எனில் அத்துணை அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளியில் தான் தங்கள் பிள்ளைகளை சேர்க்கவேண்டும் என்று ஏன் உத்தரவு பிறப்பிக்கவில்லை

இதைக்கேட்க எவருக்கும் துப்பில்லை ஆனால் எங்களை கேள்வி கேட்கமட்டும் ஓடிவருவீர்களே 

அத்துணை அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளியில் சேர்க்கும் போது தானாகவே அரசுப்பள்ளியின் தரம் உயரும்,

கலெக்டர் பிள்ளையும், கூலிவேலை செய்பவரின் பிள்ளையும் ஒன்றாக அரசுப்பள்ளியில் பயில்வார்கள்,

அத்துணை அதிகாரிகளின் பிள்ளைகளும் அரசுப்பள்ளியில் படிக்கும் போது சத்துணவு சத்தான உணவாகும்,

கட்டிடங்களும் கழிவறைகளும் ஸ்மார்ட் கிளாஸ்களும் தானாகவே வந்துவிடும்,

தனியார்பள்ளியில் பணம்கட்டி படிக்கவைத்தவர்கள் எல்லாம் அரசுப்பள்ளிக்கு வந்துவிட்டால்  ,கௌரவத்திற்காக சேர்த்தவர்களும் வந்துவிடுவார்கள், 

இப்போது தனியார்பள்ளிகளின் நிலைமை தற்போது இருக்கும் அரசுப்பள்ளிகளைப் போல் ஆட்கள் இல்லாமல் போவர்,

இதனால் தான் அரசால் இப்படி ஒரு சட்டம் இயற்றமுடியவில்லை 

இயற்றினால் தங்கள் பள்ளிக்கு வருமானம் வராதே,  அட ஆசிரியர்களையாவது கட்டாயம் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடுவார்களா?  முடியாது?  4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளிக்கு விற்பதையாவது நிறுத்துவார்களா? இதுவும் முடியாது?  

இதையெல்லாம் நீங்கள் கேட்கமாட்டீர்கள் ஏனெனில் லஞ்சம் வாங்குபவர்களோடு வெறும் சம்பளம் மட்டுமே வாங்கும் எங்களை மட்டும்தானே குறைகூற அரசியல்வாதிகள் பழக்கி இருக்கிறார்கள் 

அரசுவேலையில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் எந்த ஆசிரியர் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்கள் உங்களால் பட்டியல் தரமுடியுமா??

வீடு வாங்கியிருப்பார், தன்பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தந்திருப்பார் மீறினால் 1 ஏக்கர் நிலம் வைத்திருப்பார் இதைத்தவிர ஆசிரியரிடம் நீங்கள் பார்த்த வசதி என்ன? 

பட்டியலிடுங்கள் பார்க்கலாம்

ஆசிரியரை அடக்குவது கல்வியை தனியார்பள்ளிக்கு தாரைவார்ப்பதற்கே எதிர்காலத்தில் ஏழை மாணவர்களுக்கு என்று கல்வி கற்க இடமில்லாமல் போகும் அதை முதலில் உணருங்கள்

நாங்களும் தேர்வெழுதியே வந்தோம், அரசுப்பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் உங்களை அரசின் வேறு பணிக்கு மாற்றுகிறோம் என்று அரசு சொன்னால் நானே முதல் ஆளாக ஆசிரியப்பதவியை ராஜினாமா செய்து அரசுப்பணிக்கு செல்வேன் ஆசிரியர்களுக்கு எதிராக பேசுபவர்களே எங்கள் அத்துணைபேரையும் வேறு அரசுப்பணிக்கு மாற்றச்சொல்லுங்கள் 

அரசுப்பள்ளியை தனியாருக்கு விற்றுவிடச் சொல்லுங்கள் அப்போதுதான் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் பணம் கட்டி தனியார்பள்ளியில் தரமான கல்வியை பெற முடியும்,

ஏனெனில் நாங்கள்தானே உங்களுக்கு இடைஞ்சல் அரசும் அப்படித்தானே எங்களை உங்களுக்கு காண்பிக்கிறது,

தயவு செய்து எங்களை அரசு அலுவலகத்திற்கு பணிமாற்றச் சொல்லுங்கள் எங்களுக்கு பள்ளியில் வேலை செய்வதைவிட அரசு அலுவலகத்தில் வேலை செய்வதே எளிமை,  

நான் ஒரு ஆசிரியன் என்று மாணவர்கள் மத்தியில் பெருமையும் மக்களாகிய உங்களுக்கு மத்தியில் வெட்கமும் கொள்கிறேன்

கொம்பில் சிக்கிய கோமாளி !_

​      

பொறுமையா படிங்க சிறப்புக் கட்டுரை

கொம்பில் சிக்கிய கோமாளி !_

கோமாதாவைப் பாதுகாப்பது என்ற பெயரில் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தாக்கி வந்த பார்ப்பன பாசிஸ்டுகள் இப்போது கிறுக்கு முற்றிக் கூரைக்குக் கொள்ளி வைத்திருக்கிறார்கள்.

கால்நடைச் சந்தைகளை “முறைப்படுத்தும்” விதிகள் என்ற பெயரிலான விதிகளை, மிருக வதை தடைச் சட்டத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.  “விவசாயத்துக்குத் தேவையான கால்நடைகளைப் பாதுகாப்பது, இறைச்சி உண்போருக்கு தரமான இறைச்சி கிடைக்கச்செய்வது” ஆகியவையே இந்த விதிகளின் நோக்கம் என்று மோடி அரசு கூறுகிறது. “பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கம் கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் தீவிரவாதத்தையும் ஒழிப்பது” என்று மோடி அரசு கூறியது எப்படி முழுப்பொய்யோ, அதேபோல இதுவும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டால், ஓரிரு மாடுகளை வைத்திருக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், சிறிய, நடுத்தர விவசாயிகள், சிறிய பால் வியாபாரிகள், சிறிய மாட்டிறைச்சிக் கடை வைத்திருக்கும் முஸ்லிம்கள், பால் விற்பனை, தோல் தொழில், இறைச்சித் தொழில், மாட்டு வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் – ஆகிய அனைவரும் தமது வாழ்வாதாரங்களை இழப்பர். இந்த விதிகள்  இவர்களுடைய வாழ்வுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, ஏழைகளின் புரத உணவான மாட்டிறைச்சியை உள்நாட்டுச் சந்தையிலிருந்து முற்று முழுதாக ஒழித்துக்கட்டிவிடும். பால் மற்றும் இறைச்சித் தொழில் முழுவதையும் பெரிய பால் பண்ணை நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு பால் மற்றும் இறைச்சித் தொழில் நிறுவனங்களின் பிடிக்குக் கொண்டு சென்று விடும்.

இது ஒரு பல நோக்குத் திட்டம். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு இணையான இந்தப் பேரழிவு நடவடிக்கை தனது ஆட்சியின் மூன்றாண்டுத் தோல்வி குறித்த விவாதத்திலிருந்து நாட்டைத் திசைதிருப்பப் பயன்படும் என்று மோடி கணக்குப் போட்டிருக்கக்கூடும். இருப்பினும், இந்த அறிவிக்கை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கும் ஆத்திரம், அந்தக் கணக்கைத் தப்புக்கணக்காக்கி விட்டது. தென் மாநிலங்களிலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் வெடிக்கும் எதிர்ப்புகள், மாநில அரசுகளின் எதிர்ப்புகள், பா.ஜ.க.வுக்கு உள்ளேயே தோன்றியிருக்கும் எதிர்ப்புகள், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் மாடுகளை விற்க முடியாததால் விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கும் கோபம் ஆகியவற்றையெல்லாம் கண்ட மோடி அரசு பம்முகிறது. “பார்ப்பனியம்” என்று பெயர் குறிப்பிட்டுப் பேசத் தயங்கியவர்களையும் “பார்ப்பனிய எதிர்ப்பு” பேசுமாறு தூண்டியிருக்கிறது மோடி அரசு.

💢 *பார்ப்பனியம் எல்லா காலத்திலும் அழிவு சக்தியே!*

பார்ப்பனியம் என்பது எல்லாக் காலங்களிலும் ஒரு அழிவு சக்திதான். அதற்கும் உற்பத்தி நடவடிக்கைக்கும் என்றைக்கும் தொடர்பு இருந்ததில்லை. அதன் காரணமாகவே ஆதிக்கத் திமிரும் அடிமுட்டாள்தனமும் அதனிடம் சரி விகிதத்தில் கலந்தே இருப்பதை நாம் காண்கிறோம். அன்று வேள்வி என்ற பெயரில் கால்நடைகளை வகைதொகையின்றி அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நாசமாக்கியது பார்ப்பன மதம். அதன் மீது வெறுப்புற்ற மக்களிடையே பவுத்தம் செல்வாக்கு பெறவே, தனது சமூக மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு, மாட்டுக்கறியைத் துறந்த பார்ப்பனர்கள், மாட்டை மாதாவாக்கி, மாடு தின்போரைத் தீண்டத்தகாதவர் ஆக்கினர்.

விடுதலைப் போராட்ட காலத்தில் நாட்டிற்குப் பதிலாக மாட்டை முன்தள்ளி, இந்து – முஸ்லிம் பிளவை விதைத்து பிரிட்டிஷாருக்கு உதவினர் இந்து வெறியர்கள். தற்போது, இந்த விதிகள் மூலம் மாடு வளர்ப்போர், வெட்டுவோர், தின்போரை மட்டுமின்றி, கோமாதாவையும் “இன அழிப்பு” செய்வதன் வாயிலாக, இனி வேறு யாரும் பசுக்கொலை செய்யத் தேவையில்லாத நிலையை உருவாக்கி வருகிறது சங்கப் பரிவாரம்.

*கோமாளிகளா, கொடூரர்களா?*

சங்கப் பரிவாரம் உருவாக்க விரும்பும் இந்து ராட்டிரம் என்பது உலக முதலாளித்துவம் வரையறுத்திருக்கும் எல்லைக்கோட்டுக்குள் பயபக்தியுடன் நின்றபடி, பார்ப்பனியம் ஆடுகின்ற கோரத் தாண்டவம். எனவே, சூழ்ச்சியும் அபத்தமும் அதில் கலந்திருப்பதும், ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சுவை அதில் மேலோங்குவதும் தவிர்க்கவியலாது.

உங்களால் நம்ப முடிகிறதா? ஆண் மயிலின் கண்ணீர்த்துளியை விழுங்கிப் பெண் மயில் கருத்தரிப்பதாக ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சாதிக்கிறார். மாட்டு மூத்திரத்தில் தங்கம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடத்துகிறது குஜராத் அரசு. ரூ.500, 1000-த்தைச் செல்லாமலாக்கிவிட்டால் பொருளாதாரம் புயல் வேகத்தில் வளரும் என்று பில்லிசூனியத்தைப் போல பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மக்கள் மீது ஏவுகிறார் ஒரு பிரதமர். மொத்தத்தில் சங்கப் பரிவாரத்தினர் எனப்படுவோர், முட்டாள்தனமும் வக்கிரமும் ஆதிக்கத் திமிரும் கலந்த தெலுங்கு சினிமா வில்லனைப் போன்ற விசித்திரமான பிராணிகள்.

அதனால்தான், கோமாதா சென்டிமென்டை வைத்து இந்து வாக்குகளை அறுவடை செய்து வந்த சங்கப் பரிவாரம், பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்து விட்டது. “முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்கிறார்கள்” என்று வெறுப்பைத் தூண்டி, அதை இந்து வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்வது வேறு, “பயன்தராத மாட்டை விற்கக்கூடாது” என இந்து வாக்கு வங்கிக்கு உத்தரவிடுவது வேறு என்பது “சங்கி”கள் மண்டையில் ஏறவில்லை. ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் ஆசையில், பித்தம் தலைக்கேறிய இந்தக் கும்பல், அக்லக்கைக் கொன்ற கத்தியை உருவி, “இந்து” விவசாயிகளின் வயிற்றில் செருகி விட்டது.

விதிகளின் முதல் பலி விவசாயி!

மோடி அரசு தற்போது உருவாக்கியிருக்கும் விதிகள் முதலில் விவசாயிகளைத்தான் குறி வைத்துத் தாக்குகின்றன. “மாட்டுச் சந்தையில் ஒரு விவசாயி தனது மாட்டை வெட்டுக்கு விற்கக் கூடாது. வாங்குபவரும் வெட்டுக்கு அனுப்பக் கூடாது. அவ்வாறு அடிமாட்டுக்கு விற்பதோ, வாங்குவதோ தண்டனைக்குரிய குற்றம்” என்கிறது மோடி அரசு. மேலும் மாட்டை வாங்குபவர், “அந்த மாட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு யாரிடமும் விற்க மாட்டேன் என்று எழுதிக் கொடுக்க வேண்டும். மீறினால், அதுவும் நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்” என்று கூறுகின்றன இந்த விதிகள்.

வேலையிழந்த மாட்டு வியாபாரிகள்

இந்தப் புதிய விதிகளை நியாயப்படுத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை கூறியிருக்கும் காரணங்கள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரகத்தைச் சேர்ந்தவை. மாட்டுச் சந்தையில் ஆரோக்கியமான மாடுகள் அடி மாடுகளாக விற்பனை செய்யப்படுவதால், விவசாயத்துக்கு மாடு இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல, ஆரோக்கியமற்ற மாடுகளை அடிமாட்டுக்கு விற்பதால், அந்த இறைச்சியைச் சாப்பிடும் மக்கள் பாதிக்கப்படுகிறார்களாம். அதனால்தான் மாட்டுச் சந்தைகளில் அடிமாட்டுக்கு விற்பதையும் வாங்குவதையும் தடை செய்திருப்பதாகக் கூறுகிறது மோடி அரசு.

மாடு இல்லாத காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் கூறுவது அண்டப்புளுகு. விவசாயம் சார்ந்த பணிகளில் மாடுகளைப் பயன்படுத்துவது மிகவும் அரிதாகிவிட்டது என்பதே உண்மை. மாட்டின் பராமரிப்புச் செலவு அதிகமாகிவிட்டதால், அது பொருளாதாரரீதியாகக் கட்டுப்படியாகாததாகிவிட்டது. ஏரில் பூட்டுவது, நீர் இறைப்பது, வண்டி இழுப்பது போன்ற விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சுமார் 45% அளவுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டன. இன்று அது வெறும் 5% ஆகக் குறைந்து விட்டது.

விவசாயத்தின் அழிவுக்குக் காரணம் இந்த அரசு. பாசனப் பராமரிப்பை அரசு புறக்கணிப்பது, வங்கிக் கடன் வழங்க மறுப்பது, உள்ளீடு பொருட்களின் கொள்ளை விலை, விளைபொருளுக்கு நியாயவிலை மறுப்பு போன்ற பல காரணங்களால்தான் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்தின் கோரிக்கைகளும் அதையே நிரூபிக்கின்றன.

விவசாயத்தின் அழிவையும் மீறிக் கிராமப்புற மக்களுக்குச் சோறு போட்டுக்கொண்டிருப்பவை கால்நடைகள்தான். 2013-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள் 1000 பேரிடம் 1586 மாடுகளும், ஏழை விவசாயிகள் ஆயிரம் பேரிடம் 1518 மாடுகளும், நடுத்தர விவசாயிகள் ஆயிரம் பேரிடம் 2575 மாடுகளும் இருக்கின்றன. வேறு வகையில் சொன்னால், நாட்டில் இருக்கும் 70% கால்நடைகள், 67% ஏழை விவசாயிகளிடம் உள்ளன.

பயன்படாத மாட்டைப் பராமரிக்க முடியுமா?

ஒரு மாட்டின் ஆயுட்காலம் 15 முதல் அதிக பட்சம் 25 ஆண்டுகள். நாட்டுப் பசுமாடுகளானால் சராசரியாக பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும், வெளிநாட்டுப் பசுக்களானால் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவை பால் தருவதில்லை. எனவே பால் வற்றிப்போன மாடுகளை சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பராமரிக்க வேண்டுமென்றால், விவசாயி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் செலவிட வேண்டும். ஆண்டுக்கு சுமார் 40,000 ரூபாய்.

விற்க முடியாமல் கைவிடப்பட்ட மாடுகள் தெருவோரக் கழிவுகளைத் தின்னும் அவலம். (கோப்புப் படம்)

இவையே காளைக்கன்றுகளாக இருந்தால், அவற்றை உழவுக்கும் பயன்படுத்த முடியாத இந்தக் காலத்தில், அந்தக் காளைகளை கடைசி காலம் வரை விவசாயி பராமரிக்க வேண்டும். ஒரு பசுமாடு ஈன்று தரும் சுமார் 8 கன்றுகளில் 4 காளைக்கன்றுகளாக இருக்குமாகையால், அவற்றை எந்த விவசாயியாவது பராமரிக்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள். ஆரோக்கியமான மாடுகளை விற்கக் கூடாது என்ற தடையின் மூலம் பயன்படாத இந்தக் காளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை விவசாயிகளின் மீது சுமத்தியிருக்கிறது மோடி அரசு.

உழைத்து ஓய்ந்து போன முதியவர்களையும் உழைப்பதற்குத் தயாராக இருந்தும் வேலை கிடைக்காத இளைஞர்களையுமே பராமரிக்க முடியாத நாட்டில், பால் தராத பசுவை பத்து ஆண்டுகளுக்கும், காளை மாட்டை இருபது ஆண்டுகளுக்கும் பராமரிக்க வேண்டும் என்று கூறுவது விவசாயிகளின் குடும்பத்துக்கே விதிக்கப்படும் ஆயுள் தண்டனையல்லவா?

“வெட்டுக்கு விற்க முடியாது” என்பது மட்டுமல்ல, நல்ல நிலையில் உள்ள பால்மாட்டையோ உழவு மாட்டையோ, விவசாயிகள் ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு விற்பதுகூட இந்த விதியின்படி மிகவும் கடினமானது. இந்த விதிகளின்படி, “மாட்டை வாங்குபவரும் விற்பவரும் தனது அடையாள அட்டை, நிலப்பட்டா போன்றவற்றைத் தரவேண்டும். மாட்டை வாங்கிய வியாபாரி விற்பனைக்கான ஆதாரத்தை வருவாய்த்துறை அதிகாரி, கால்நடை மருத்துவர், மாட்டுச்சந்தையைக் கண்காணிப்பதற்காக அரசு நியமித்திருக்கும் கமிட்டி போன்ற 5 இடங்களில் தரவேண்டும்.” வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், விவசாயி ஒரு மாட்டை விற்பதற்கு இத்தனை இடங்களிலும் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஜல்லிக்கட்டுத் தடை அமலில் இருந்தபோது போலீசும் அதிகார வர்க்கமும் ஆடிய ஆட்டத்தை எண்ணிப்பாருங்கள். அதைக் காட்டிலும் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் விதிகள் பன்மடங்கு கொடியவை. இச்சட்டத்தின்படி மாடு வளர்ப்பதும் விற்பதும் வாங்குவதும், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பதைப் போன்ற ஒரு கிரிமினல் நடவடிக்கையாகவே மாற்றப்பட்டுவிடும்.

அதிகாரிகள் என்ற அட்டைகள் விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சுவது போதாதென்று, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இரத்தக் காட்டேறிகள் “பசுப் பாதுகாவலர்கள்” என்ற பெயரில் எல்லா ஊர்களிலும் முளைப்பார்கள். தங்களுக்கு மாமூல் தரவில்லை என்றால், போலீசில் புகார் செய்வோம் என்று மிரட்டி, விவசாயிகளிடமும் வியாபாரிகளிடமும் பணம் பறிப்பார்கள். தற்போது முஸ்லிம்களுக்கு நடந்து வருவது, நாளை இந்து விவசாயிகளுக்கும் நடக்கும். அந்த விதத்தில், இந்த அறிவிக்கையை மோடி அரசின் மிக முக்கியமான “மதச்சார்பற்ற நடவடிக்கை”யாக நாம் கருதலாம்.

முஸ்லிம்கள், தலித்துகளை அழிவுக்குத் தள்ளுவதே நோக்கம்!

இந்த புதிய விதிகளை நியாயப்படுத்துவதற்கு மோடி அரசு கூறும் இரண்டாவது காரணம், “மக்களுக்குத் தரமான மாட்டிறைச்சி கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவது” என்பதாகும். வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி அக்லக் என்ற முதியவரை வெட்டிக் கொன்ற கட்சி, “அக்லக்கைப் போன்றவர்கள் கெட்டுப்போன மாட்டிறைச்சியை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டுவிடக் கூடாதே” என்று கவலைப்படுகிறதாம்! நம்புகிறீர்களா?

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வேலையிழந்து நிற்கும் உ.பி. மாநில இறைச்சிக்கூடத் தொழிலாளர்கள்.

நாடு முழுவதும் மாட்டிறைச்சித் தொழிலில் ஈடுபட்டிருப்போர் முஸ்லிம்களும் தலித்துகளும்தான் என்பது யாரும் அறியாத இரகசியமல்ல. மகாராட்டிர மாநிலத்தில் மாட்டுக்கறி தடை வந்த பிறகு, இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் குரேஷி என்ற சாதியைச் சேர்ந்த முஸ்லிம்களும் தலித் மக்களுமாக பல இலட்சம் பேர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைக்கு நாடு முழவதும் அம்மக்களை ஆளாக்கி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க வேண்டும் என்ற வக்கிரமான நோக்கம் மோடி அரசின் இந்த முடிவின் பின்னால் இருக்கிறது.

இப்போது, எதிர்ப்பு அதிகரித்தவுடன்,  “இறைச்சித் தொழிலைக் குற்றப்படுத்துவது எமது நோக்கமல்ல, மாட்டுச் சந்தையில்தான் அடிமாடுகளை விற்கக்கூடாது என்று கூறியிருக்கிறோம். அதை இறைச்சிக்கூடத்தினர் விவசாயிகளிடம் அல்லது பண்ணைகளிடம் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம்” என்று சமாளிக்கிறது சுற்றுச்சூழல் அமைச்சகம்.

சந்தைகள் எனப்படுபவை, கிராமப்புறங்களில் சிதறிக் கிடக்கும் விவசாயிகள், தங்களது கால்நடைகளையும் விளை பொருட்களையும் விற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக உருவாக்கப்பட்டவை. விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பேரம் பேசுவதற்கான வாய்ப்பையும், ஓரளவேனும் நியாயமான விலை பெறுவதற்கான வாய்ப்பையும் சந்தைகள்தான் வழங்குகின்றன. இந்த வாய்ப்பைப் பறிப்பதன் மூலம் விவசாயிகள், மாடு வாங்குபவர்கள், மாட்டு வியாபாரிகள், இறைச்சிக்கூடத்தினர் உள்ளிட்ட அனைவருடைய தொழில் செய்யும் உரிமையையும் பறிக்கிறது மோடி அரசு.

ஒருவேளை, இறைச்சிக் கூடத்தினர் விவசாயியிடம் நேரில் சென்று கால்நடையை வாங்கி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்தாலும், அவர்களை மறித்துத் தாக்கவும் மாமூல் வசூலிக்கவும் அதிகார வர்க்கமும் இந்து அமைப்புகளின் காலிகளும் கூட்டணி அமைத்துத் தயாராக இருப்பர். அந்த வகையில் இந்துத்துவ கிரமினல்களின் நடவடிக்கைகளுக்குச் சட்டபூர்வ வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மோடி அரசு.

அதேபோல, “சந்தையில் மாடு வாங்குபவர், அந்த மாட்டை வேறு மாநிலத்துக்கு விற்க முடியாது என்றும், அப்படி விற்க வேண்டுமானால் முன் அனுமதி பெறவேண்டும்” என்றும் புதிய விதி கூறுகிறது. மாட்டுக்கறிக்கு தடை இல்லாத கேரளம், வடகிழக்கிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாடுகள் அனுப்பப்படுவதைத் தடுப்பதற்குத்தான் இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் வணிகம் செய்வதற்கு அரசியல் சட்டத்தின் பிரிவு 301, குடிமக்கள் அனைவருக்கும் வழங்கும் உரிமையை நேரடியாகவே பறிக்கிறது.

சந்தை – சுத்தம் – தரம் – புனிதம்!

“சந்தை” என்ற சொல்லுக்கு ஒரு கிரிமினல்தனமான விளக்கத்தை இந்த அறிவிக்கை தருகிறது. இதன்படி சந்தை என்பது வழக்கமான மாட்டுச் சந்தை மட்டுமல்ல, “இறைச்சிக் கூடத்தின் வாயிலில் கால்நடைகள் நிறுத்தப்படும் இடம் (lairage), இறைச்சிக்கூடங்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் (vehicle stand), கால்நடைகளை அடைத்து வைக்கும் பட்டிகள் (animal pounds)” உள்ளிட்ட அனைத்தையும் “சந்தை” என்ற சொல்லுக்கான விளக்கமாகக் கூறுகிறது இந்த விதி. இந்த விளக்கத்தின்படி மாட்டிறைச்சிக் கூடமே சந்தை என்ற சொல்லுக்குள் அடக்கப்படுவதால், எல்லா மாட்டிறைச்சிக் கூடங்களையும் எந்த நேரத்திலும் சட்ட விரோதமானவையாக்க முடியும் என்பதே இதன் விளைவாக இருக்கும்.

அதேபோல, “தரமான இறைச்சி” என்பதும் மாட்டிறைச்சிக் கடைகளை ஒழிப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. “தரப்படுத்துதல்” என்ற பெயரில் உள்நாட்டு உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், சிறு உணவகங்கள், தெருவோர உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒழித்துக்கட்டுவதற்கு FSSAI  (Food Safety and Standards Authority of India – உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்) என்ற மைய அதிகாரத்தின் மூலம் ஏற்கெனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இறைச்சிக்கூடங்கள், இறைச்சிக்கடைகளும் அடக்கம்.

தெருவோரக் கடைகளுக்கு உணவுத்தரம் பற்றி “சொல்லிக்கொடுக்கும்” பொறுப்பை கோகோ கோலா நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார் மோடி. உணவுச்சந்தையை ஆக்கிரமிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் மோடியும் சந்திக்கும் புள்ளி இது. தரமற்ற மாட்டிறைச்சிக் கூடங்களைப் “போட்டுக்கொடுக்கும்” பொறுப்பை ஜல்லிக்கட்டு புகழ் பீட்டா (PETA) ஏற்றிருக்கிறது. 30,000 சட்டவிரோத மாட்டிறைச்சிக் கூடங்கள் FSSAI இன் உரிமம் இல்லாமல் நாட்டில் இயங்குவதாக பீட்டா அறிவித்திருக்கிறது. இறைச்சிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தும் சங்கபரிவாரமும் பீட்டாவும் இணைகின்ற புள்ளி இது.

“புனிதமற்றது” என்று பார்ப்பனியம் கருதுகின்ற மாட்டிறைச்சி, மதச்சார்பற்ற மொழியில் “தரமற்றது” என்று முதலில் முத்திரை குத்தப்படுகிறது. பிறகு மோடி அதனைச் “சட்டவிரோதமானது” ஆக்குகிறார். தரத்தையும் சுகாதாரத்தையும் பேணுவதற்கான அதிகாரத்தைத் தனது கையில் எடுத்துக் கொள்வதன் மூலம், “பார்ப்பனியச் சுத்தம் – பன்னாட்டுத் தரம்” என்ற இரண்டையும் சமூகத்தின் மீது திணிக்கிறது மோடியின் அரசு.

சுத்தம், தரம் என்ற பெயரிலான தாக்குதலை எல்லா இறைச்சிக்கடைகள் மீதும் நடத்த முடியும். “ராமேசுவரம் போன்ற புனித நகரங்களில் இறைச்சிக் கடைகளே இருக்கக் கூடாது”, “கோயில்களுக்கு அருகே இறைச்சிக்கடை கூடாது” என்பன இந்து முன்னணியின் கோரிக்கைகள். “இந்துப் பண்டிகை, ஜெயின் பண்டிகை நாட்களில் இறைச்சிக் கடைகளை மூடவேண்டும்” என்பது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மெல்ல மெல்ல திணிக்கப்பட்டு வருகிறது. குஜராத்தின் நகரங்கள் இந்துப் பகுதி – முஸ்லிம் பகுதி என்று பிரிக்கப்பட்டு விட்டன. இந்துப் பகுதியில் அசைவ உணவுக்கடைகளே கிடையாது. அசைவ உணவு சாப்பிட விரும்புகிறவர்கள் முஸ்லிம் பகுதிக்குத்தான் செல்ல வேண்டும் என்பது அங்கே அங்கீகரிக்கப்பட்ட பொது ஒழுங்காக நிலைநாட்டப்பட்டு விட்டது.

இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதும், மத நம்பிக்கைக்காகப் பலியிடுவதும் ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி பிராணிகளைத் துன்புறுத்தும் குற்றங்கள் ஆகாது. தற்போது மிருகவதை சட்டத்தின் கீழ் சந்தையில் மாட்டை வெட்டுக்கு விற்கக் கூடாது என்ற விதியை கொண்டு வந்திருப்பதன் மூலம், இறைச்சித்தொழிலையே “விலங்குகளைத் துன்புறுத்தும் குற்றமாக” காட்டுகிறது மோடி அரசு. இது சட்டப்படி செல்லத்தக்கதே என்ற நிலைமை ஏற்படுமானால், இதே அடிப்படையில் நாளை ஆடு, கோழி உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளையும் ஒதுக்குவதும், அவற்றின் மீது கண்காணிப்பை ஏவுவதும், தேவைப்படும்போதெல்லாம் குற்றப்படுத்துவதும் சாத்தியமாகிவிடும்.

மாநில அதிகாரத்தைப் பறிக்கும் குறுக்குவழி!

அரசமைப்புச் சட்டத்தின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதை அனுமதிப்பதோ தடுப்பதோ மாநிலத்தின் அதிகாரமாகும். இதனைத் தடுக்கவோ, முறைப்படுத்தவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அதேபோல கால்நடைச் சந்தைகளையோ, காய்கனிச் சந்தைகளையோ முறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுடையது. இதில் மைய அரசு தலையிட இயலாது.

எனினும், மக்களின் அடிப்படை உரிமைகளையும், மாநிலத்தின் உரிமைகளையும் கள்ளத்தனமான முறையில் பறிப்பதையே தனது வழிமுறையாகக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மக்களின் அடிப்படை உரிமைகளைத் தூசுக்குச் சமமாகக் கருதித் திணிக்கப்பட்ட பண மதிப்பழிப்பு, மாநிலங்களவையைத் தவிர்ப்பதற்காக நிதிமசோதாவாக திணிக்கப்படும் ஆதார் சட்டம் ஆகியவற்றைப் போன்றே, குறுக்கு வழியில் “விலங்குகள் துன்புறுத்தல் தடை சட்டத்தின்” கீழ்தான் (Prevention of cruelty to animals act, 1960) “மாட்டுச்சந்தைகளை நெறிப்படுத்தும்” இந்த விதிகளையும் அறிவித்திருக்கிறது மோடி அரசு. மிருகவதையைத் தடுப்பதற்கான அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம், மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் வழங்குவதால், இந்த சந்து வழியாக மாநில அரசின் அதிகார எல்லைக்குள்ளே நுழைந்திருக்கிறது மோடி அரசு.

“கொம்பு சீவக்கூடாது, சாயம் பூசக்கூடாது, மூக்கணாங்கயிறு போடக்கூடாது, அலங்கரிக்கக் கூடாது, கன்றுகளுக்கு வாய்க்கூடை போடக்கூடாது” – என்று பல நிபந்தனைகளைப் போடுகின்றன மோடியின் புதிய விதிகள்.

“இந்த விதிகளை மீறியதாக அதிகாரிகள் கருதினால், மாட்டைப் பறிமுதல் செய்து கோசாலைக்கு அனுப்புவார்கள். வழக்கு முடியும் வரை மாட்டின் பராமரிப்புக்கான செலவுக்கு மாட்டின் உடைமையாளர்கள்தான் பொறுப்பு. மாடே வேண்டாம் என்று தலை முழுகிவிட்டாலும், மாட்டின் உரிமையாளர் குற்ற வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது”.

“மேற்கூறிய விதிகளுக்கு முரணாக, வாகனங்களில் மாடுகளை அனுப்பினால், அந்த வண்டியில் உள்ள மாடுகளை விற்றவர்கள், வாங்குபவர்கள், வாடகை வண்டியின் உரிமையாளர், இவற்றில் சம்மந்தப்பட்ட தரகர்கள் உள்ளிட்ட அனைவரும் வழக்கு முடியும் வரை மேற்படி மாடுகளைப் பராமரிப்பதற்கான செலவுக்கு பொறுப்பேற்க வேண்டும். வண்டியும் மாடுகளும் வழக்கு முடியும் வரை பறிமுதல் செய்யப்படும். மேற்படி விதிகளில் எது ஒன்றை மீறியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு கோசாலைகள் அல்லது விலங்குகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்” என்று கூறுகின்றன இந்த விதிகள்.

“நாடு முழுவதும் மாட்டுக்கறியைத் தடை செய்ய வேண்டும்” என்ற தனது நோக்கத்தை பல மாநிலங்களில் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதனால்தான் இந்தக் குறுக்கு வழியைக் கடைப்பிடித்திருக்கிறது மோடி அரசு. “இந்த விதிகள் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு முரணானவை” என்பதற்கான காரணங்களை அடுக்குகிறார்கள் சட்ட வல்லுநர்கள். “இந்த விதிகளுக்கு கட்டுப்படமாட்டோம்” என்று கேரள, புதுச்சேரி, கர்நாடக, மே.வங்க முதல்வர்கள் அறிவித்திருக்கிறார்கள். மோடி அரசின் அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அரசியல் சட்டம்தான் அடிக்கொள்ளி!

ஆனால், அரசியல் சட்டத்தின் துணை கொண்டே இந்த விதிகளைத் தடுத்துவிடலாம் என்று எண்ணுவதும், அதற்கு நீதிமன்றத்தை நம்புவதும் அறிவுக்குகந்த நடவடிக்கைகள் அல்ல. இந்திய அரசியல் சட்டமென்பது இந்துத்துவ பாசிசத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சாத்தியத்தை உள்ளடக்கிய ஒரு ஆவணம். “கால்நடை பராமரிப்பு அறிவியல் வழியில் அமைய வேண்டும்” என்றும், “பசு மற்றும் அதன் கன்றுகளைக் கொல்வது தடை செய்யப்படவேண்டும்” என்றும் இரு முரண்பட்ட கருத்துகளை ஒரே நேரத்தில் கூறுகின்ற அரசமைப்பின் உறுப்பு 48 தான், நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ள பசுவதை தடைச் சட்டங்களுக்கான அடிக்கொள்ளி.

பார்ப்பன மத நம்பிக்கையான “பசுவதைத் தடை”யை, “கால்நடை செல்வத்தைப் பேணுதல்” என்ற மதச்சார்பற்ற மொழியில் திணித்திருக்கின்ற இந்தக் கயமையை அரசியல் நிர்ணய சபை விவாதத்திலேயே பல உறுப்பினர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வழிகாட்டும் கோட்பாட்டின் அடிப்படையில் நாடு முழுவதும் பசுவதை தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட (குரேஷி) வழக்கில், “பயன்படாத மாடுகளை வெட்டத் தடைவிதிக்கவியலாது” என்று 1958-இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். 2005-இல் இன்னொரு (மிர்சாபூர்) வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முந்தைய தீர்ப்பை ரத்து செய்தது. “பயன்தராத மாடு என ஒன்று கிடையாது” என்றும், “சாணி, மூத்திரத்தை விற்றே விவசாயி கணிசமாகச் சம்பாதிக்கலாம்” என்றும் அரியதொரு கண்டுபிடிப்பை அந்த தீர்ப்பு வெளியிட்டது.  இந்த அரசியல் சாசன அமர்வின் அறிவுக்கும், ராஜஸ்தானின் மயில் நீதிபதியுடைய அறிவுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அந்தத் தீர்ப்பைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும். இது குறித்த கட்டுரைகளை முந்தைய புதிய ஜனநாயகம் இதழ்களில் எழுதியிருக்கிறோம்.

உச்ச நீதிமன்றம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்ற பிரமைகள் அடிப்படையற்றவை. சட்டவிரோதமாகவும் மரபுகளை மீறியும் பண மதிப்பழிப்பை மக்கள் மீது ஏவினார் மோடி. அதனால், மக்களின் அடிப்படை உரிமைகளும், வாழ்வுரிமையும் பறிக்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை கொள்ளவில்லை. “ஆதார் கட்டாயமில்லை” என்று சொல்லிக்கொண்டே அதனை எல்லா முனைகளிலிருந்தும் கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. குடிமக்களின் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படுவது தெரிந்தும் இதனை அனுமதித்துக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையையும், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களின் உரிமையையும் துச்சமாக மதித்து அடாவடியாகத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஜல்லிக்கட்டு வழக்கில் “சிங்கத்தோடு விளையாடுகிறீர்களா” என்று தனது மேட்டிமைத்தனத்தையும் ஆணவத்தையும் வெளிப்படுத்தியது.

தமிழக மக்களின் எழுச்சிதான் அந்த ஆணவத்தை வீழ்த்தியது. பார்ப்பன பாசிசம் என்பது ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கின்ற வெறும் பண்பாட்டுப் பிரச்சனை அல்ல. அது மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரானது, நாட்டு நலனுக்கு எதிரானது, மக்களின் ஒற்றுமக்கு எதிரானது. இதை மக்கள் சொந்த முறையில் புரிந்து கொள்ளத்தக்க வாய்ப்பை இந்த அறிவிக்கையின் வாயிலாக வழங்கியிருக்கிறது மோடி அரசு.

இது ஜல்லிக்கட்டு இரண்டாவது சுற்று.

-மருதையன்

புதிய ஜனநாயகம், ஜூன் 2017

**********பொறுமையா படிங்க
சிறப்புக் கட்டுரை : கொம்பில் சிக்கிய கோமாளி !

பார்ப்பனியம் எல்லா காலத்திலும் அழிவு சக்தியே!

கோமாளிகளா, கொடூரர்களா?

“வெட்டுக்கு விற்க முடியாது” என்பது மட்டுமல்ல, நல்ல நிலையில் உள்ள பால்மாட்டையோ உழவு மாட்டையோ, விவசாயிகள் ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு விற்பதுகூட இந்த விதியின்படி மிகவும் கடினமானது. இந்த விதிகளின்படி, “மாட்டை வாங்குபவரும் விற்பவரும் தனது அடையாள அட்டை, நிலப்பட்டா போன்றவற்றைத் தரவேண்டும். மாட்டை வாங்கிய வியாப

எங்கள் ஒட்டு விற்பனைக்கு அல்ல_
    
காலா திரைப்படம் - கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் விமர்சனம்

காலா திரைப்படம் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு நேரெதிரான படம் என்றும், ரஜினியின் மூலமாக இயக்குனர் பா.ரஞ்சித் தனது முற்போக்கு அரசியலை முன்வைத்துள்ளார் என்றும் சிலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், காலா திரைப்படம் குறித்து கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது விமர்சனத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது :
"வணக்கம் தம்பி பா.ரஞ்சித், ‘காலா ‘ படம் பார்த்தேன். பார்த்தவுடன் எனக்கேற்பட்ட மன உணர்வுகளின் பகிர்வே இது. நான் ஒரு கைதேர்ந்த திரைப்பட ரசிகையோ அல்லது அதன் நுணுக்கங்களை அறிந்து அதில் தோய்ந்து ரசிக்கின்ற ஆழங்கால் பட்ட விமர்சகியோ அல்ல. ஒரு கூட்டனுபவமாகத் திரையில் காட்டப்படுவதை எனதொத்த ஐனத் திரளோடு அமர்ந்து உள்வாங்கி, பகிர்ந்து ரசித்து அந்த வாழ்வோடு சமயங்களில் சில மணிநேரம் மட்டும், பலசமயங்களில் அதன் சிராய்ப்புக்களைத் தூக்கி அலைந்து கொண்டும் சராசரியாக அதனோடு உறவு வைத்திருக்கின்ற வெகுஐனத்தில் ஒருத்தி. (வெகுஜன ரசனை என்ன என்பதிலும் யார் அந்த வெகு ஜனம் என்பதிலும், நானும் அத்திரளில் முகமற்ற ஒருத்தி என்பதால் எனக்கு கேள்வியும் குழப்பமும் உண்டு)
எனவே இது விமர்சனமோ அலசலோ விவாதமோ அல்ல. ஒரு தன்னிலை வெளிப்பாடான பகிரல் மட்டுமே.
திரு. ரஜினிகாந்தோடு அரசியல் ரீதியாக எதிர்த்திசையில் முரண்பட்டு நிற்பவள் நான். அவரது ‘ஆன்மீக அரசியல்’ அது அடிகோலுகின்ற அபாயமிருக்கின்ற ‘இந்துத்துவ பாசிசத் திறப்பு’ இவற்றால் அவரது அரசியல் தலைமை ஒருபோதும் தமிழகத்திற்கு அமையக்கூடாதெனும் நிலைப்பாடும் அரசியலும் கொண்டவள்.
ஒரு கலைஞனாக திரு. ரஜனிகாந்த் குறித்து அலசி ஆராயுமளவிற்கு அவரது திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்தவளும் அல்ல. அதற்கான அறிவோ நுணுக்கங்களோ அத்துறையில் பெற்றவளும் அல்ல. ஒரு திரைப்படக் கலைஞனாக அவரை மதிப்பவள். அவ்வளவே!
ஆனால் ஒரு கலைஞனாக உங்களின் படைப்புகளின் மீது விருப்பமும், உங்களது அரசியல் நிலைப்பாடுகளில் நம்பிக்கையும் கொண்டவள். அதற்குரிய நம்பிக்கையினை உங்களது முந்தைய படைப்புகள் அளித்தன. ‘காலா’ அதனைக் ‘கபாலியை’விட அதிகமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. 
அதில் நீங்கள் முன் வைக்கின்ற அரசியலால். ஒரு திரைப்படமாக அது கிளர்த்திய கண்ணீர், மலர்த்திய புன்னகை, கீறிய குற்றவுணர்வு, அது அழைத்துச் சென்ற வாழ்க்கையின் இடுக்குகள், தொட்டு எழும்புகின்ற நம்பிக்கையின் உயரங்கள் இவற்றைத் ‘தாராவியின்’ பின்புலத்தில் ஒரு பார்வையாளராக மட்டுமே என்னால் உள்வாங்கி விட்டு விலக முடியவில்லை. ஏனென்றால் ‘தாராவி’ இதற்கு முன்னரான திரைவெளியில் காட்டப்பட்டது போல வெறும் பின்புலம் மட்டும் அல்ல. (It is not just a Canvas but a Life! )
திரைப்படப் பார்வையாளர்கள்,  திரைப்பட ரசனையின் / நுட்பத்தின் / விமர்சனத்தின் வல்லுநர்கள், விற்பன்னர்கள் இவர்களுக்கான மனோவழி அனுபவமும், உலகெங்கும் ஒடுக்கப்படுகின்றவர்களின் (பார்வையாளர்களாக அவர்களது) மனோவழி அனுபவமும் வேறு. கலை எனும் ரசவாதம் கண்ணீருக்கு ஒரே உப்புதான் எனும் மாயத்தைச் செய்தாலும் கூடுதல் ஒட்டாக இப்படைப்போடு உறவு கொள்ள ஓடுக்கப்பட்டவர்களையும், அவர்கள் கைப்பிடித்து நம்மையும் அந்த மனோவழியே அழைத்துச் செல்லும்.
அந்த மறுக்கப்பட்ட, அடக்கப்பட்ட இடத்திலிருந்து, அவர்களது மொழியில், அவர்களுக்காகச் சொல்லப்பட்டாலும் அது நம் மொழியும் நமக்கானதும் தான்!
அவ்வகையில் ‘காலா’ நான் நம்புகின்ற அரசியலை முன்வைக்கின்ற படைப்பு மட்டுமல்ல, நிலம் பிடுங்கப்பட்ட அத்தனை மக்களுடைய மனோவழி அனுபவத்தையும் எனக்களித்த படைப்புமாகும் ஒடுக்கப்பட்ட, சமகாலத்தில் வாழ்கின்ற மக்களது வாழ்க்கையை, ஒரு “மாஸ் ஹீரோவீற்கான”மிகைகள் இல்லாமல், ‘எதிர் அழகியல்’ என்றொரு ‘Aesthetics‘ ஐ சட்டகமாக கொண்ட படைப்பு என்பது என் புரிதல். 
அதன் முற்பகுதி ‘தாராவி’ மக்களின் அன்றாட நகர்விற்கான நடைமுறைச் சிக்கல்கள், இருத்தலுக்கான பிரயத்தனங்கள், அவர்களது எளிய ஆசைகள், நியாயமான கனவுகள், உறுதியான நம்பிக்கைகள், அவர்களது இருப்பை ஆணிவேர் வரை கட்டறுக்க காலங்காலமாகக் கருவிக் கொண்டிருக்கின்ற ஆதிக்க கரங்கள், அதன்பாற்பட்ட துரோகங்கள் என எல்லாவற்றையும் முன் நிறுத்தியது எனக்கு.
பிற்பகுதியோ அடங்க மறுத்தலையும், உரிமையின் வலிமையையும் நினைவூட்டிப் பூர்வகுடிகளுக்கு, மண்ணின் மைந்தர்களுக்கு, வாழ் நிலம் பிடுங்கப்பட்டு துரத்தப்படுபவர்களுக்கு “உடம்பே ஆயுதம்! நிலமே வலிமை!” என்பதைச் சுட்டி நிறைவுறுகிறது!
(ஏனோ இங்கு நான் ராணிமேரிக்கல்லூரியில் பணி புரிகையில் மெரீனாவை அழகுபடுத்த நம் மீனவர்களை இடம் பெயரச் சொன்ன போது , அவர்களோடு ‘மேதா பட்கர்’ வந்தமர்ந்த போராட்டத்தை நினைவு கூறத் தோன்றுகிறது. “கடலுக்கழகு கட்டுமரம்
கடற்கரைக்கழகு மீனவர் எம் வீடுகள்” எனப் பறந்த பதாதைகளின் கம்பீரம் கண்ணில் நிற்கிறது)
தாராவியின் அந்த முகங்களும், உடல் மொழியும், திறந்தவெளிக் கலை வெளிப்பாடுகளும் கைநடுங்கச் சிணுங்கும் பிறந்த குழந்தையைத் தொட்டுத் தூக்குகின்ற பரவசத்தையும், விபத்தில் பறிகொடுக்கின்ற உறவுகளின் சில்லிட்ட விரல்களின் கனத்தையும் ஒருங்கே தந்தன எனக்கு. “கருப்புசிவப்புநீலங்“ குழைந்து கலந்து ஒரே வண்ணமாகப் பிளிறும் அந்த Climax இல் (Slow Motion என்பதே டூயட்டிற்குத்தான் எனும் சிற்றறிவுப் பேதை நான்) உணர்ச்சி வசப்பட்டது உண்மைதான். 
பெருமழையில் சிங்கத்தின் கர்ஜனை, புலியின் பாய்ச்சல், யானையின் பிளிறல் இவற்றையெல்லாம் சடாரென ஒரு வேடனின் அம்பு துளைத்தெடுத்து வெளிவருகையில் வானம் வடிந்ததொரு வானவில் வெளிப்பட்டதைப் போன்ற தொரு உச்சக்காட்சி அது! “கலை பேசுகின்ற அரசியலை விடக் கலையின் அரசியல் முக்கியமானது” என்பதை நம்புபவள்தான் நான். ஆனால் இந்தக் ‘கலையின் அரசியலுக்கான’ வரைபடத்தை வரைந்தவர்கள் யார்? எனும் கேள்வியும் அதற்கான இலக்கணத்தை எம் நிலம், மக்கள் மொழி, அவர் தம் வாழ்வோடு இயைந்த அழகியல் இவற்றைக் கொண்டே எழுத வேண்டும் என்கிற தெளிவும் எனக்குண்டு.
அவ்வகையில் ‘காலா’வில் கலையின் அரசியலை விட அது பேசுகின்ற அரசியல் எனக்கு மிக முக்கியம், அவசியம்.
போலவே யார் என்ன பேசுகிறார்கள், என்ன மொழியில் பேசுகிறார்கள், யாரைப் பார்த்துப்பேசுகிறார்கள், யார்மூலமாகப் பேசுகிறார்கள், யாருக்காகப் பேசுகிறார்கள் இவை அனைத்துமே முக்கியம். ( Be it political or personal!)
அவ்வகையில் திரு. ரஜினிகாந்த் மூலமாகத் திரையில் இவ்வரசியல் முன் வைக்கப்பட்டது எனக்கு ஒப்பவில்லைதான். (அவரது அரசியல் நிலைப்பாடு தூத்துக்குடி பேட்டிக்கு முன்பாகவே நாம் அறிந்தது தான்) ஆனால் அதைத் தேர்ந்தெடுக்கின்ற சுதந்திரமும், உங்களவிலான பதிலும் ஒரு இயக்குநராக உங்களுக்கு உண்டு என்பதை நான் மதிக்கிறேன். 
ஆகவே உங்களது தெரிவைத் தாண்டியும் இத்திரைப்படம் ஒரு அனுபவமாக எனக்கு என்ன அளித்தது என்பதைப் பிரித்துப் பார்க்கின்ற தெளிவும் எனக்கு வேண்டும் என நம்புகிறேன். அதைத் தெளிவு என்பதை விட என் அனுபவத்தை எப்போதும் ஒடுக்கப்பட்டவர் பால் நிற்கின்ற, என் அரசியல்உணர்வு சார் சாய்புணர்வு சற்றுத் தூக்கலாக அதை நிர்ணயிப்பதனை நான் நேர் கொள்ள வேண்டும் என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.
ஆகவே ‘காலா’ வைப் பார்த்தேன். நிலவில் காலடி வைத்த ஆர்ம்ஸ்டிராங் சொன்னதாக ஒரு வாசகம் உண்டு. “மனிதனுக்கு இது ஒரு சிறு காலடி வைத்தல்தான். ஆனால் மனிதகுலத்துக்கு இது மிகப் பெரிய பாய்ச்சல்” எனக்கு ஆகப் பெரிய மகிழ்ச்சி இதுதான். திரை உலகில் இது உங்களுக்கு மிகப் பெரிய பாய்ச்சல்!
ஆனால் அரசியலில் ரஜனிகாந்திற்கு இது ஒரு சிறு காலடி நகர்தல் கூட இல்லை! ஆகப் பெரிய வருத்தமும் உண்டு.
தோழர் லெனினது பெயரை, N.G.O. களுடன் அறியாமல் பணி ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்கின்ற கதாபாத்திரத்திற்குத் தெரிவு செய்தது.
ஆரம்பத்தில் அவ்வயதிற்கான துடிப்பான முறுக்கோடு, நல்லது நடக்க வேண்டும் என்கிற கனவுடன் காலாவிடமிருந்து விலகல், பின்னர் புரிதலுடனுடான இணைதல் என வார்க்கப்பட்டிருக்கின்ற அதனை மனித மனதிற்கான இயல்பான தடுமாற்றங்களுடன் பின்னர் காலப்போக்கில் அடையும் தெளிவுடன் நீங்கள் வனைந்திருக்கலாம். என்றாலும், அந்தப் பெயரும், அதற்குப் பின்னிருக்கின்ற கருத்தியல் சித்தாந்தமும் எனக்கு முக்கியமானது என்பதால் கூடுதலாக வருத்தம். இதுவரையிலும் பிற பேனாக்கள் வெறும் ஊதா மையூற்றி மட்டுமே எழுதி வந்த தாராவியை நீங்கள் வண்ண மை ஊற்றி வாழ்க்கையாக வரைந்திருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள்!
உங்களுக்கும், அதனை வியர்வையும் ரத்தமுமாய் - வலியும் உரிமையுமாய் - ஒரு சரிசமன் வாய்மொழியில் வசனங்களால் உயிர்ப்பித்திருக்கும் தோழர் ஆதவன் தீட்சண்யாவிற்கும், தோழர் மகிழ்னனுக்கும்!  பாடல் எழுதியிருக்கின்ற தங்கை கு.உமாதேவிக்கும்! இதில் பணிபுரிந்த நண்பர் ( Arun Dir)அருணுக்கும்!
இதுவரையிலும் ராஜபாட்டைகளில் பிற ரதங்கள் குதிரைகளில் ஏறிக் கடந்து ஏற்றிய கொடியை இனி ‘மனுசக்’கால்கள் உரிமையோடு நடந்து போய் இறக்கட்டும்!
என் அனுபவத்தின் பகிரல் மட்டுமே இது!
சாமானிய சாதாரண வெகுஜனத் திரளில் தூசு நான்.
இதுவரையிலும் எந்த திரைப்படத்தையும் விமர்சித்திராத, அத்துறை அறிவாளியும் அல்லள். அதை அறிந்த ‘அப்புராணியும்‘ கூட.  அரசியல் சித்தாந்தங்களிலும் ஆழப் படித்துக் கரை கண்டவளோ, அதில் விவாத நீச்சல் அடித்து ‘கோப்பை’வெல்லும் உத்தேசமோ இல்லாதவள்.
- தமிழச்சி தங்கபாண்டியன்" 

சட்டம் ஒரு இருட்டறை

சட்டம் ஒரு இருட்டறை...

கடந்த காலங்களில் நீதிமன்றம் சொல்வதை யாரும் விமர்சனம் செய்யாத நிலை இருந்தது. அப்படியே விமர்சனங்கள் வந்தாலும், அவை அரிதானவையாகவே இருக்கும்.

இப்போதெல்லாம் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வருகிறதென்றால், அது எப்படி வரும் என்ற விவாதங்கள் தொலைக்காட்சிகளில் மட்டுமல்ல டீக்கடைகளிலும் அனல் பறக்கிறது.

அந்தளவிற்கு நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகின்றன.

அதிலும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ஆண்டுக் கணக்கில் இழுத்தடித்ததும், நீதிபதி குன்ஹா தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி "கூட்டிக் கழித்து", மாற்றி வழங்கி ஜெயலலிதாவை விடுதலை செய்ததும் நீதிபதிகள் குறித்த பார்வையை மாற்ற செய்தது.

குமாரசாமி தீர்ப்பின்  மீதான, உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்க எடுத்துக் கொண்ட காலமும், சரியாக ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலா முதல்வராக பொறுப்பேற்க காத்திருந்த முதல் நாள் தீர்ப்பு வழங்கி, சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பி வைத்ததும் நீதிமன்றங்களில் "வேறு அதிகாரம்" நுழைவதை வெளிப்படுத்தியது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத்தில் அமைச்சராக இருந்த போது நடந்த போலி எண்கவுண்ட்டர் வழக்கை கையாண்ட நீதிபதி லோயாவின் மரணம் குறித்த சந்தேகமும், வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டதும் எல்லோருக்குமே சந்தேகத்தை எழுப்பியது.

இப்படிப்பட்ட சூழலில் தமிழக உயர்நீதிமன்றமும் கேள்விக்குள்ளாகும் நிலைக்கு வந்திருக்கிறது.

2018 மார்ச் மாதத்தில் ஓர் தீர்ப்பு வந்தது, பாண்டிச்சேரி மாநிலம் குறித்தது. பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மூன்று நியமன எம்.எல்.ஏக்களை அறிவித்தார். அந்த நியமனம் செல்லாது என பாண்டிச்சேரி சபாநாயகர் அறிவித்தார். அவர்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க மறுத்தார்.

வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் வந்தது. தீர்ப்பில், ஆளுநர் செய்த நியமனம் செல்லும் என்ற அறிவிப்பு வந்தது. சபாநாயகரின் நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது நீதிமன்றத்தால். இங்கு சபாநாயகரின் நடவடிக்கையில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது.

அடுத்த வழக்கு , தமிழக சட்டப்பேரவை குறித்து. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று, தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் எதிர்த்தனர். கட்சி கொறடா உத்தரவை மீறிய அவர்கள் பதவியை, சபாநாயகர் முறைப்படி பறித்திருக்க வேண்டும். பறிக்க நடவடிக்கை எடுக்காததால், வழக்கு நீதிமன்றம் சென்றது.

"சபாநாயகர் நடவடிக்கையில் தலையிட முடியாது", என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

புதுவைக்கு ஓர் தீர்ப்பு, தமிழகத்திற்கு ஓர் தீர்ப்பு என நீதி மேல் மிகுந்த "மதிப்பு" உண்டாகியது. அது இன்று பன் மடங்கு பல்கிப் பெருகுகிறது.

ஓ.பி.எஸ் குரூப் மீது நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க, தினகரன் அணியினர் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உடன், பாய்ந்து பதவியை பறித்தார் சபாநாயகர் தனபால்.

 இதன் மீதான வழக்கை கையாண்டது தான் அதிக சந்தேகங்களை எழுப்புகிறது.

வழக்கில் வாதங்கள் முடிவுற்று, 100 நாட்கள் "விழா கொண்டாடி" தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இன்று. இவ்வளவு தாமதம் ஏன் ? அந்த 18 தொகுதிகளுக்கும் ச.ம.உ  இல்லாமலே வருடம் கடந்து விட்டது.

மொத்த ஆட்சியும் செயல்படவில்லை என்றாலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாவது குறைந்தபட்சம் தொகுதிக்கு பணி நடக்க உதவும். இந்த 18 தொகுதிகளில் அதுவும் இல்லாத அவலம்.

இது ஒருபுறம் என்றால், இன்று வந்த தீர்ப்பு இன்னும் அருமை. இரண்டு நீதிபதிகள் ஆளுக்கொரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். சபாநாயகர் தீர்ப்பு 'செல்லும்' என்கிறார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி. 'செல்லாது' என்கிறார் இன்னொரு நீதிபதி சுந்தர்.

ஒரே சட்டம் இரு வேறு பார்வையை கொடுத்துள்ளது இருவருக்கும். இது கூட பரவாயில்லை.

பாண்டிச்சேரிக்கு, சபாநாயகர் உரிமையில் நீதிமன்றம் தலையிடலாம். 11 பேர் வழக்கில், சபாநாயகர் உரிமையில் தலையிட முடியாது. 18 பேர் வழக்கில், சபாநாயகர் செய்தது சரி என்று சொல்ல முடியும். இப்படி ஒரு சட்டப் புத்தகம் பல்வேறு விதமான வழிமுறைகள் காட்டுகிறது என்றால், என்ன செய்ய...

"சட்டம் ஒரு இருட்டறை", அண்ணா சொன்னார். இருட்டை விளக்கி விளக்கேற்ற வேண்டியவர்கள், இருட்டில் நடமாடுபவர்களாகவே இருந்தால் என்ன செய்ய...

கடைசிக் காலத்தில் 'கவர்னர்' ஆக வாழ ஆசைப்பட்டால் என்ன தான் செய்ய...

# மொத்த நாடும் இருட்டில் நிற்கிறது !