#கொரோனா_பாடங்கள்
கொரோனோவால் ஏற்பட்டிருக்க இந்த ஊரடங்கு உத்தரவு நமக்கு நிறைய விடயங்களை உணர்த்தி இருக்கு. நம்ம வாழ்க்கைக்கு அடிப்படைத்தேவைகள் என்ன அப்படிங்கறதையும் நம்மளுக்கு தெளிவுபடுத்தி இருக்கு.
விவசாயம், மருத்துவம், சுகாதாரம், துப்புரவு, குடிநீர் மற்றும் கழிவுநீர் மின்சாரம், காவல்துறை இதையெல்லாம் நிர்வகிக்கும் அடிப்படை அரசு நிர்வாகம்.
இவ்வளவுதாங்க நம்ம வாழ்க்கை வாழறதுக்கு அடிப்படையா தேவைப்படுகிறது.
இது எவ்வளவு எளிமையாக இந்த கொரோனா வைரஸ் உலகத்துல இருக்குற எல்லாருக்கும் புரியவைச்சிருக்கு? கூடுதலா நமக்கு பள்ளி கல்வி துறை நம்மளோட சமூக முன்னேற்றத்திற்கு தேவை. இதைத்தவிர நம்ம வாழ்க்கையில செய்யுறது, சமூகத்துல இருக்குற பெரிய ஆட்கள் புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான். இதை தான் இந்த கொரோனா வைரஸ் மிக எளிமையா புரிய வச்சிருக்கு.
"அரசாங்கத்தால் ஒன்னும் செய்ய முடியாது. அரசாங்கம் செய்கிறது எல்லாமே தரக்குறைவா இருக்கும்" அப்படின்னு நம்ம பொதுவா பேசிட்டு இருந்தோம். ஆனா, இன்னைக்கு அந்த அரசாங்கத்தால் மட்டும் தான் எல்லாத்தையும் செய்ய முடியுது. அரசாங்கம் தான் செய்யணும் அப்படின்னு எதிர்பார்க்கிறோம்.
அதேநேரத்துல அரசாங்கம் இத எல்லாம செய்ய வேண்டியதில்லை. தனியார் கம்பெனிகள் எல்லாத்தையும் செய்திடுமன்னு பேசினவங்க இன்னைக்கு காணாம போயாச்சு. அந்த தனியார் முதலாளிகளும் இன்னைக்கு இருக்கிற இடம் தெரியாம போயாச்சு.
இனியாச்சும், மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் கட்டாயம் தேவை. அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும் என்பதை நாம எல்லாரும் உணரனும்.
அதே நேரத்தில் வாழ்க்கைக்கு எது தேவையோ அதை உணர்ந்து பேச வேண்டும். விவசாயக் கடன்களை ஒரு லட்சம் கோடி தள்ளுபடி செய்யறத வாய்கிழிய பேசும் கார்ப்பரேட்கள் நடத்தும் பத்திரிகைகள், கார்போரேட்களுக்கு தள்ளுபடியாகும் 10 லட்சம் கோடிகளை பற்றி வாய் திறப்பதில்லை. இதைப் பார்க்கும் மக்களும் "விவசாயிகளுக்கு இவ்வளவு கடனைத் தள்ளுபடி செய்றீங்க?" என்று கேள்வி கேக்குறாங்க.
10 லட்சம் கோடிகளை தள்ளுபடி வாங்கிய பெரிய முதலாளிகள் எல்லாம் இன்னைக்கு கம்பெனிகளே மூடிட்டு வீட்ல உட்கார்ந்துட்டு இருக்காங்க. ஆனா இந்தியா முழுக்க இருக்கும் விவசாயிகள் இன்னைக்கு கழனியில இறங்கி விவசாயம் பார்த்துட்டு இருக்காங்க. அரசாங்கம் அவங்க எல்லாரும் போய் விவசாயம் செய்ய சொல்லி வலியுறுத்துகிறது. அப்போ இதுல யாரு புடுங்குன ஆணி தேவையில்லாத ஆணி அப்படின்னு எளிமையாக புரியுது.
இனிமேலாவது, நம்ம அரசுதுறை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைளையும் விவசாயிகளோட கோரிக்கைகளையும் மதிச்சு அரசாங்கம் நிறைவேற்றனும் அப்படின்னு ஆதரவாக குரல் கொடுக்கனும். கொடுப்போமா...?!
