செவ்வாய், 5 ஜூன், 2018

இந்திய பொருளாரத்தை அதல பாதாளத்தில் தள்ளிய தமிழர்கள்..! மொத்தமாய் சரிய போகும் பணமதிப்பு..!! சிக்கப்போகும் அரசியல்வாதிகள்..!!!

இந்திய பொருளாரத்தை அதல பாதாளத்தில் தள்ளிய தமிழர்கள்..! மொத்தமாய் சரிய போகும் பணமதிப்பு..!! சிக்கப்போகும் அரசியல்வாதிகள்..!!!



இந்திய பொருளாரத்தை அதல பாதாளத்தில் தள்ளிய தமிழர்கள்..! மொத்தமாய் சரிய போகும் பணமதிப்பு..!! சிக்கப்போகும் அரசியல்வாதிகள்..!!!

எந்த ஒரு தீவிரவாதிகளையும் தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை கள்ளத்தனம் அச்சடிக்க முடியாது என பிரதம மந்திரி மோடி மற்றும் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பெருமையாக பேசிவந்தனர். 
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்  கோவையில் வாகன தணிக்கையின் போது 2 நபர்களிடம் 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களை விசாரித்ததில் அவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது. 
விசாரணையில் கோவை, கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் என தெரியவந்தது. மேலும், தானும், தன் நண்பர்களும் சேர்ந்து தான் கள்ள நோட்டுகளை அச்சடித்து வருவதாக ஆனந்தம் வாக்கும் மூலம் அளித்துள்ளான். இதையடுத்து கள்ள நோட்டு அடிக்கும் இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனை நடத்தியதில் அங்கு கட்டுக்கட்டாக மொத்தம்  ரூ.1 கோடிக்கும்  மேலான 2000ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர் .மொத்தமாக  5,904 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இங்கு அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் சென்னை, ஈரோடு, திருப்பூர், கேரளா ஆகிய இடங்களுக்கு சென்று நல்ல நோட்டுகளாக மாற்றியுள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளதா என காவல்துறையினர்  விசாரணை செய்ததில், கள்ளநோட்டு கும்பலுக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதை கண்டறிந்துள்ளனர்.
இவர்கள், அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை ஏஜெண்டுகள் மூலம் கர்நாடகா தேர்தலிலும், கேரளா, திருப்பதி, ஊட்டி, பழனி, கொடைக்கானல் என கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புழங்க விட்டுள்ளார். இந்த கள்ளநோட்டு கும்பலின் தலைவனான சுந்தருக்கு உலக அளவில் கள்ளநோட்டு கும்பலுடனும், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஹவாலா கும்பலுடனும் தொடர்பு இருந்திருக்கிறது.
இவர்களின் உதவியுடனேயே குஜராத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தேவையான நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து அச்சடித்துள்ளனர். கள்ளநோட்டு கும்பல் தலைவன் சுந்தர் பிடிபட்டால் மட்டுமே, மொத்த நெட்வொர்க் பற்றியும் தகவல் கிடைக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கூடுதல் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை போலீசார் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 'கிதர் முகமது'வின் செல்போனை ஆய்வு செய்ததில், தொழில் அதிபர்கள், அரசியல்பிரமுகர்கள் எண்கள் இருந்துள்ளது. அவர்கள் யார்-யார்? எந்தெந்த வகைகளில் இவர்களுக்கு உதவி செய்தார்கள்? என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கைதான கிதர் முகமது மற்றும் ஆனந்தையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். 
இந்நிலையில், இந்த சம்பவம் கோவையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் அதிக அளவில் [1.48 கோடி] பிடிபட்டுள்ளது, பொதுமக்கள், சிறு பெரு வியாபாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக, கோவையில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், சிறு குறு தொழிற்சாலைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர்.
பெட்ரோல் பங்க் மட்டுறும் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பல முறை சோதனை செய்துதான் வாங்குகின்றனர். இதானால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்களை நம் தமிழக மக்களே சேர்ந்து, யாரோ ஒருவரின் வதந்திகிளப்பியதன் காரணமாக புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில், இந்த நிலைமை தொடர்ந்தாள் தமிழகம் முழுவதும் 2000 ரூபாய் தாள்கள் முடக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்த விடயத்தில், பாதுகாப்பான முறையில் உள்ளதாக சொன்ன 2000 ரூபாய் நோட்டுகளை, 15000 ரூபாய் மதிப்புள்ள ஒரு சிறிய மிஷினில் அச்சடித்து இந்திய பொருளாதாரத்தை தலைகீழாய் மாற்றியுள்ளனர். இதற்கு நாட்டின் பிரதமர் மோடி என்ன பதில் சொல்ல போகிறார் என தெரியவில்லை.