கலைஞர் காமராஜருக்கு மெரினாவில் இடம்தரவில்லை என வதந்தி பரப்புவார் கவனத்திற்கு!
அக்டோபர் 2, காமராஜர் மறைந்த அன்று சோகமே உருவாக, அப்போதைய முதல்வர் கலைஞரும், அவர் அமைச்சரவை சகாக்களும் அவரது உடலை சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திலேயே காமராஜர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் அங்கேயே நடத்த திட்டமிட்டனர். முதல்வர் கலைஞரின் காதுகளுக்கு இந்த தகவல்போனது.
கொதித்துவிட்டார் கலைஞர்.
“காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகாரி ஒருவர், காமராஜர் அப்போது எந்த பொறுப்பிலும் இல்லாததை சொல்லி, சில சட்ட சம்பிராதாயங்களை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச்சொன்னார்.
மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கலைஞர், " நான் சொன்னதை செய்யுங்கள்...மேலும் காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான ராஜாஜி நினைவகம் அருகில்தான் அடக்கம் செய்யவேண்டும்...காமராஜருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" என கறாராக கூறினார் கலைஞர்.
காமராஜர் உடல் புதைக்கப்படவில்லை சமாதி கட்ட!
காமராஜர் உடல் தகனம்தான் செய்யபட்டது
எனவே கடற்கரையில் சமாதி கட்ட முடியாது
அதனால் காந்தி மண்டபம் அருகே காமராஜருக்கு மணிமண்டம் கட்டப்பட்டது
அதையும் கலைஞர்தான் செய்தார்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக