செவ்வாய், 12 மே, 2020

#தேவதாசி


#தேவதாசி

 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

 இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம்  சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.

இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.

இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?

கொரோன வைரஸ் ஊரடங்கு, 20 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகுப்பு - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

*கொரோன வைரஸ் ஊரடங்கு, 20 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகுப்பு - இந்திய பிரதமர் நரேந்திர மோடி*

12 மே 2020

பிரதமர் மோடி
இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்தி மோடி பொருளாதார உதவித் தொகுப்பு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான நான்காம் கட்ட ஊரடங்கு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

இது கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்திய பின்பு நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு ஆற்றும் மூன்றாவது உரையாகும்.

மோடி ஆற்றிய உரையின் 10 முக்கியத் தகவல்கள்!

1. ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே பாதித்துள்ளது என்றும் இந்த உலகமே நான்கு மாதகாலமாக கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வருவதாகவும் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

2. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடங்கிய சமயத்தில் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. அப்போது சில N-95 முகக் கவசங்கள் மட்டுமே இருந்தன. இப்பொழுது நாள்தோறும் இரண்டு லட்சம் மருத்துவப் பாதுகாப்பு உடைகள் மற்றும் இரண்டு லட்சம் N-95 முகக் கவசங்கள்ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றன என்று தனது உரையில் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

3. "உலகெங்கும் 42 லட்சம் பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியர்களில் பலரும் தங்களது நேசத்துக்கு உரியவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று நரேந்திர மோடி பேசினார்.

*20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார உதவி*

4. தொழில்துறையை மேம்படுத்தவும், நடுத்தர மக்களுக்காகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுகாகவும், 2020ஆம் ஆண்டில் 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு இந்திய அரசால் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.

5. "கோவிட்-19 பரவலால் உண்டாகியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக இந்திய அரசு ஏற்கனவே அறிவித்த உதவித்தொகுப்பு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த உதவித் தொகுப்பு மற்றும் தற்போதைய உதவித் தொகுப்பு ஆகியவை ஒட்டுமொத்தமாக 20 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 10%," என்று அவர் கூறினார்.

*எதிர்வரும் நாட்களில் இந்திய நிதியமைச்சர் இதுகுறித்த விவரங்களை விரிவாக அறிவிப்பார் என்று மோடி தெரிவித்தார்*

6. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான உலகத்தின் போராட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் புதிய நம்பிக்கை கொடுப்பதாகவும், இதன் காரணமாக இந்தியா உலகெங்கும் பாராட்டப்படுவதாகவும், அந்த பாராட்டால் ஒவ்வோர் இந்தியரும் பெருமை கொள்வதாகவும் பிரதமர் பேசினார்.

7. தற்போது இந்தியா எதிர்கொண்டுள்ள பிரச்சனை முன்னெப்போதும் சந்தித்திராத நெருக்கடி. ஆனாலும் நம்மால் அதை விட்டுவிட முடியாது என்று நரேந்திர மோடி பேசினார்.

8. இந்தியா தற்சார்பை வலியுறுத்தும் நாடாக இருப்பதாகவும், இந்தியா வலியுறுத்தும் தற்சார்பில் உலகத்தின் மகிழ்ச்சி ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஆகியவை குறித்த கவலை இருப்பதாகவும் நரேந்திர மோடி கூறினார்.

*ஊரடங்கு*

9. மே 17ஆம் தேதி தற்போதைய மூன்றாவது ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், மே 18க்குள் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும் என்று கூறிய நரேந்திர மோடி அதில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறினார்.

10. மாநில அரசுகள் அளிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் நான்காம் கட்ட ஊரடங்கின் விதிகள் மே 18ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் மோடி.

73 வருட காத்திருப்பு சிறப்பாக முடிந்தது

73 வருட காத்திருப்பு சிறப்பாக முடிந்தது. 

==========================================
73 வருடமாக  பாகிஸ்தான்  வசம் இருந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை,  பாரதத்தின் ஒன்றிணைந்த பகுதியாக பாரதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது பற்றி தேசிய ஊடகங்கள் நேற்று மதியம் முதல் செய்தி தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வரும் நிலையில் தமிழக ஊடகங்களில் இதை பற்றிய சிறிய செய்தி கூட இல்லாததை கண்டு உள்ள படியே வெட்கப்படும் நிலையில் உள்ளது.......

பாக்கிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளன காஷ்மீரில் ஒரு பகுதியை நம்மோடு இணைத்துள்ளோம் சென்ற நான்கு நாட்களாக நடந்த... இந்தியாவின் சில அதிரடி காய் நகர்த்தல் வேலையால்.  ஏதாவது அதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? 

இருக்காது.  ஏனெனில், நீங்கள் பார்க்கும் சானல்கள் அதைப் பற்றிய தகவல்கள் தெரிவிக்கவேயில்லையே!

3.5.2020  அன்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆட்சேபித்து

கில்ஜிட், பல்டிஸ்ட் பிரதேசங்கள்

இந்தியாவின் இறையான்மைக்கு உட்பட்ட பிரதேசம், இன்றோ நாளையோ ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்படும் என இந்தியா அறிவித்தது.

5.5.2020 முதல் இந்திய அரசின் வானிலை அறிவிப்பு தலைமையகம் கில்ஜிஸ்டான், பல்டிஸ்டான், பலூச்சிஸ்தான், சிந்து பகுதிகளுக்கான வானிலை அறிவிப்புகளை வெளியிட துவங்கியுள்ளது.

6.5.2020 முதல் Google நிறுவனம் இந்திய மேப்பில் இருந்து Loc எல்லை கோட்டை நீக்கிவிட்டது.

7.5.2020 முதல் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்துநதியின் உபநதிகளில் நீரின் அளவு குறைக்கப்பட்டது. (எரியிறதை பிடுங்கினா கொதிக்கிறது நிக்கும்)

 இனி கோடைகால உபரி நீர் ஜம்மு, ராஜஸ்தான் பிரதேசங்களுக்கு திருப்பி விடப்படும்.

ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இது,

வந்தேமாதரம் !!!