வியாழன், 14 ஜூன், 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை



தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை


14. 06. 2018 வியாழன் 11.00 மணிக்கு பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்பளித்தது.


குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.



விடுதலைப்புலிகளின் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுகு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்பு வழங்கியது.


ஏனை மூன்று முன்னை நாள் புலி உறுப்பினர்களுக்கும் வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காக தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டு களுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.


அரச தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ இலங்கையிலும், சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகளை நீதிமன்றம் நிராகரித்தது.



சீவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்தற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக தெரிவித்தது.


செய்தி: நீதிமன்றத்தில் இருந்து சிவமகிழி

ஜெய் ஹிந்துக்கு முன்பே தோன்றிய ஜெய் பீம்.


ஜெய் பீம்

ஜெய் ஹிந்துக்கு முன்பே தோன்றிய ஜெய் பீம்.

ஆண்டு 1818 ஜனவரி 1 ,பிரிட்டிஷ் படையினருக்கும், மராத்திய படையயை சேர்ந்த பேஷ்வா என்கிற உயர்ஜாதி படையினருக்கும் ஒரு பெரும் போர் நடக்கிறது. "பீம்" ஆற்றின் ஒரு கரைக்கும் மறு கரைக்கும் நடுவில் நடக்கும் அந்த போரின் பெயர் "கோரேகாவுன் போர்  (Koregaon Battle )".

இந்த போரின் முக்கியத்துவம் .

முதல் முறையாக தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட, இழிவாக நடத்தப்பட்ட மஹர் இன சிப்பாய்கள் முதல் முறையாக மராத்தியர்கள் பக்கம் போரிடாமல் பிரிட்டிஷ் படையினருடன் சேர்ந்து பேஷ்வாக்களுக்கு எதிராக போரிட்டார்கள். பீம் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்ல மஹர் சிப்பாய்கள் ஆற்றைகடக்கும் போது எழுப்பிய போர் முழக்கம்தான் "ஜெய் பீம்".

25000 பேர்கள் கொண்ட மராத்திய படையை வெறும் 900 மஹர் சிப்பாய்கள் கொண்ட பிரிட்டிஷ் படை வீழ்த்தி போரில் வெற்றி கொண்டது.

இந்த போர் தலித்துக்கள் செய்த முதல் போர் புரட்சியாக கருதப்படுகிறது.

இதில் பிரிட்டிஷ் படையின் சார்பில் 49 பேர் கொல்லப்பட்டனர் அதில் 22 பேர் மஹர் சிப்பாய்கள். அவர்கள் பெயர்கள் பாதிக்கப்பட்ட ஒரு போர் நினைவு தூண் புனேயில் இருக்கிறது

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அந்த நினைவிடத்திற்கு ஜனவரி 1, 1927 ஆம் ஆண்டு முதல் முறை சென்று பார்த்து தன் அஞ்சலியை செலுத்தினார். "ஜெய் பீம்" என்று முழங்கினார் .

அன்று முதல் பெரும்பாலான தலித்துக்கள் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை இந்த நினைவிடத்தில் கொண்டாடுகின்றனர்


1936 ஆம் ஆண்டு முதல் சுதந்திர தொழிலாளர் கட்சி (Independent Labour Party ) யின் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடத்தின் போது மறுபடியும் "ஜெய் பீம்" ஒலித்தது.

அன்றில் இருந்து இன்று வரை மஹாராஷ்டிரா மற்றும் வடஇந்தியாவில் இந்த முழக்கம் வணக்கம் சொல்கிற முறையில் தலித் ஆர்வர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது

இதில் முக்கிய செய்தி என்னவென்றால் ஜெய் பீம் என்கிற முழக்கம் முழங்கப்பட்டு பல வருடங்கள் கழித்து 1941 இல் இந்திய தேசிய படையின் தொண்டர் ஒருவர் உருவாக்கிய ஜெய் ஹிந் என்கிற முழக்கத்தை நேதாஜி வெளியிட்டார்

மதவாதிகள் போன்று புரியாமல் மந்திரங்களை உச்சரிப்பதுபோல் இல்லாமல், இந்த வார்த்தையின் உண்மை அர்த்தம், அதன் பின்னனி, அதன் முக்கியத்துவம் அறிந்து அதை உபயோகிப்பது கற்றவருக்கும், தெளிந்தவருக்கும் அழகு.

அதுவும் இல்லாமல் இது ஒரு ஆற்றின் பெயரை (Proper Noun) கொண்டுள்ளதால், ஒரு முக்கிய நிகழ்வு நடந்த இடத்தின் பெயரை கொண்டுள்ளதால் இதை மொழி மாற்றம் செய்ய இயலாது, இலக்கணத்தின்படியும், வரலாற்றின் படியும்.

அம்பேத்கர் என்கிற பெயருக்கு மொழிமாற்றம் கிடையாது அப்படித்தான் ஜெய் பீம்க்கும்.