வெள்ளி, 10 ஏப்ரல், 2020

இந்த நெருக்கடியிலும் கொரோனாவை பற்றி தெரியாத நாடுகள், கண்டு கொள்ளாத நாடுகள்.


இந்த நெருக்கடியிலும் கொரோனாவை பற்றி தெரியாத நாடுகள், கண்டு கொள்ளாத நாடுகள்.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

உலகம் முழுவதும் கொரோனா கோரதாண்டவம் ஆடி வரும் நிலையிலும் கொரோனாவை பற்றி தெரியாத நாடுகள், கண்டு கொள்ளாத நாடுகள் உள்ளன.

இந்நிலையில், வடக்கு பசிபிக் கடற்பகுதியில் பலாவ் மொழிபேசும், சுமார் 18,000 மக்கள் தொகை கொண்ட சின்னஞ்சிறு நாடு பலாவ் தீவில், இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நாட்டின் நாணயம் அமெரிக்க டொலர் ஆகும். பசிபிக் பிராந்திய நாடுகள் பலவும் கொரோனாவின் கொடூர தாக்கத்தில் சிக்கி இருக்கின்றன.இதேபோல் சுமார் 1 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட குட்டிநாடான டோங்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கவில்லை.

சாலமன் தீவுகள், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் கொரோனா தாக்காத நாடுகளின் பட்டியலில் உள்ளன.இவைதவிர அண்டார்டிகா கண்டமும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் பசிபிக் கடலில் உள்ள வடக்கு மரியானா தீவுகள் நாடுகளில் முதலாவது கொரோனா பாதிப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பயணக் கட்டுப்பாடுகள் நிறைந்து இருப்பதால் தான் இந்தப் பகுதிகளில் எல்லாம் கொரோனா பரவவில்லை என்று கூறப்படுகிறது.

உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பெரும் பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் வெளி உலகத்தொடர்பு அதிகம் இல்லாமல் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்போது *முதன்முறையாக*  அமேசான் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவத்தொடங்கியுள்ளது.

அமேசானின் கொகமா பழங்குடியின இனத்தை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்ப்ட்டுள்ளது.


அப்பெண் சுகாதாரப்பணியாளாராக செயல்பட்டு வருகிறார். அமேசானில் வாழும் பழங்குடியினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அது காடுகளில் வாழும் மற்றவர்களுக்கும் பரவும் அச்சம் நிலவி வருகிறது.

*உலக நாடுகளை உலுக்கியிருக்கும் கரோனா தொற்று நுழையாத ஒரு நாடு உண்டு என்றால் அது வட கொரியா என்று அறியப்படுகிறது.*

வட கொரியாவில் தற்போது கரோனா அறிகுறி மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என சுமார் 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத் துவக்கத்தில் இது 2,280 ஆக இருந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கரோனா அறிகுறி தென்படவில்லை என்று பலரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், வடகொரியாவில் இதுவரை ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும், எனினும், தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

e-Pass :*(திருமணம்,மருத்துவம்,துக்க நிகழ்வு செல்ல)

*#COVID19

e-Pass :*(திருமணம்,மருத்துவம்,துக்க நிகழ்வு செல்ல)

8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லலாம். 

1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும்.
2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .   
3 . மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.                     
4 . விண்ணப்ப  படிவத்தினை பூர்த்தி செய்யவும் .
5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.