சனி, 30 ஜூன், 2018

உண்மையில் தமிழ்நாட்டில் நடப்பது என்ன? 8 வழிச்சாலைக்கு பின்னுள்ள உலக அரசியல்தான் என்ன?


25 ஆண்டுகளுக்கு முன்
சோமாலியாவில் நடந்தது
இன்று தமிழகத்தில் தொடங்குகிறது.

பொருளாதார அடியாளின் வாக்கு மூலம் படிக்க முடியாதவர்கள் இந்த பதிவையாவது அவசியம் படிக்க வேண்டும்.....
உண்மையில் தமிழ்நாட்டில் நடப்பது என்ன?
8 வழிச்சாலைக்கு பின்னுள்ள உலக அரசியல்தான் என்ன?

இது உண்மையில் அரசின் திட்டம்தானா? வளர்ச்சிக்கான திட்டம்தானா?

இல்லை என் அன்பு மக்களே...
நடப்பது உலக வங்கியின் ஜப்தி நடவடிக்கை...
கொடுத்த கடனுக்கு ஜப்தி செய்ய தொடங்கியது உலக வங்கி...

இந்த பதிவை கவனமாக வாசித்து பரப்புங்கள். நாம் மெல்ல மெல்ல நாம் வேட்டையாடப்படப் போகின்றோம்...

பழைய காலனிய ஆதிக்கம் என்பது விக்டோரியா மகாராணியின் ஆசியோடு உலகின் பல நாடுகளுக்குச் சென்ற தனிப்பெரும் முதலாளிகள் அந்த நாடுகளின் பொருளாதாரங்களை 'வியாபாரம்' என்ற பெயரில் சிதைத்து அவ்வரசுகளையும் அடிமைபடுத்தி அந்த நிலத்திலேயே நின்று அழித்தார்கள்.

இன்று இம்முறையைக் அப்பணியைச் செய்ய அவர்கள் வைத்துள்ள அமைப்பே உலக வங்கி.

உலக வங்கியின் வழியாக சாலை அமையுங்கள்... பள்ளிகூடம் கட்டுங்கள்.. பாலம் போடுங்கள்.. அணைக் கட்டுங்கள்... உள்கட்டமைப்பை வலிமைப்படுத்துங்கள்... கடன் தருகின்றோம் என்பார்கள்...

கடனும் தருவார்கள்... ஆனால் இதில் எதன் வழியாகவும் பொருளாதாரம் வளர்ந்து வாங்கிய கடனை எந்த நாடுகளும் திருப்பிக் கட்டியதும் இல்லை; கடனை கட்டிய ஈராக் லிபியா போன்ற தேசங்களை இவர்கள் வாழவும் விட்டதில்லை...

இந்த வழிமுறையைப் பின்பற்றியே இதுவரை தமிழ்நாட்டிற்கு உலக வங்கி 5 லட்சம் கோடி பணத்தைக் கடனாக வழங்கியது. இன்று தமிழ்நாடு அரசு திவால் என்ற நிலையை அடைந்தப்பின் தனது உண்மையான ஆகோர முகங்களைக் காட்டத் தொடங்கிவிட்டது...

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் என்றால்... ஏன் இந்தியா வழியாக கடனை தராமல் நேரடியாக தமிழ்நாட்டின் அரசிடமே கடன் வழங்கினார்கள்?

நான் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட மாநில அரசு எனில் மத்திய அரசின் துணையின்றி எப்படி உலக வங்கியின் முகவர்கள் நேரடியாக முதல்வர்களாக இருந்த கருணாநிதி ஜெயலலிதாவை சந்தித்தே... கடன் வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டார்கள்?

இன்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத போது எடப்பாடியை ஒரு காபந்து முதல்வராக உட்கார வைத்து 4.5 லட்சம் கோடிக்கான இரும்புத் தாதுக்களை எடுக்க 8 வழிச்சாலையை அமைக்க எத்தனிப்பது யார்? இப்படிதானே காபந்து அதிபர்களை ஈராக் லாபியா கிரீஸ் அர்ஜண்டைனா நாடுகளில் அமைத்து அந்த நாடுகளை சூரையாடினார்கள்...

கோவையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எப்படி தண்ணீரை உறிஞ்சி எடுக்க அனுமதி பெற்றது?
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை எடப்பாடிக்கு தெரியாமலே சுடச்சொன்ன அந்த உச்சபட்ச அதிகாரம் படைத்தவன் யார்?

உலக வங்கி.... அவன் பின்னே நிற்கும் உலக வல்லாதிக்க நாடுகள்...

விக்டோரியா மகாராணி வியாபாரிகளை அனுப்பியதற்கும் உலக வங்கி தன் ஒப்பந்தங்களின் வழியாக கார்பரேட் வியாபாரிகளை அனுப்புவதும் ஒரே காலனிய ஆதிக்க முறைதான்....
அன்று ஒரு நாடு.. இன்று பல நாடுகளின் கூட்டு...

அன்று எதிர்த்தவனை ஆங்கிலேயே ராணுவம் சுட்டது. இன்று உலக வங்கி நிர்வகிக்கும் நேட்டோ ராணுவம் சுடும்...

உலக வங்கி கடன் கொடுக்கும் போது 115 நிபந்தனைகளை விதிக்கும்... அந்த நிபந்தனைகளின்படி செயல்பட்டால் பொதுவாகவே கடனைக் கட்டமுடியாது.

கடன் கட்டமுடியாத நிலைவரும் போது கந்துவட்டிக்காரன் எப்படி நமது வீட்டு சாமான்களை தூக்கிச் செல்வானோ அப்படி உலக வங்கி கார்பரேட்டுகள் என்ற அடியாட்களின் வழியாக கடன்வாங்கிய நாடுகளின் இயற்கை வளங்களை எடுத்துச் செல்வார்கள்...

இயற்கை வளங்களை கடனுக்காக எடுப்போம் என்பதும் 115 நிபந்தனைகளில் ஒன்று...

இப்ப யோசியுங்கள்...
8 வழிச்சாலை எதற்கு?
கோவையில் தண்ணீர் எடுக்க அனுமதி எதற்கு?
தமிழ்நாடு முழுவதும் 235 இடங்களில் பெட்ரோல் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி முயல்வதற்கு காரணம் என்ன?
மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்க துடிப்பது ஏன்?

உலக வங்கியின் ஜப்தி நடக்கிறது...

இது எடப்பாடிக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் ஸ்டாலினுக்கு உறுதியாகத் தெரியும். அதனால்தான் ஆட்சியை கலைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் வாய்மூடி மௌனிக்கிறார். ஏனெனில் கருணா ஜெயா என்று அனைவருமே வாங்கியுள்ள கமிசன் பட்டியல் உலக வங்கியிடம் உள்ளது. எவனும் எதிர்க்க முடியாது...

அரசு 8 வழிச்சாலையை எதிர்பவனை ஒடுக்கியே தீரும். இது மக்களின் அரசல்ல... உலக வங்கியின் காபந்து அடிமை அரசு...

இதை தடுப்பது எப்படி?
என்னதான் தீர்வு?

#தற்ச்சார்பு_பொருளாதாரம்...

நாமே மாற்று!

மேலவளவு போராளிகளின் நினைவு தினம் ஜூன் 30.


மேலவளவு போராளிகளின் நினைவு தினம் ஜூன் 30.

இனப் படுகொலைக்கு இணையான மதுரை - மேலவளவுப் படுகொலை நாட்டையே உலுக்கிய நிகழ் வாகும். சமூக நடைமுறைகளைச் சாதாரணமாகக் கவனித்து வரும் எவரும்,மேலவளவுப் படுகொலை யின் பின்னணியைப் புரிந்து கொண்டிருப்பர். நீண்ட காலமாகத் தாங்கள் அனுபவித்து வந்த மேலவளவுப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், சாதி வெறியுணர்வடைந்த மேல வளவு கள்ளர்கள்,  30.6.1997 அன்று பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகளை சென்னகரம்பட்டிப் படுகொலை "பாணி"யிலேயே பயணம் செய்த பேருந்தை வழிமறித்து, வெட்டிப் படுகொலை செய்தனர். முருகேசனை பேருந்திற் குள்ளேயே வைத்து தலை வேறு உடல் வேறாக வெட்டிப் படுகொலை செய்தனர். தலையை எடுத்துக் கொண்டு போய் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து இரண்டு  "பர்லாங்" தொலைவிலிருந்த கிணற்றில் வீசினார்கள். கள்ளர் சாதி படுகொலை யாளர்கள். நாட்டில் உள்ள அனைத்து சமூக நலச் சிந்தனையாளர்கள் பேரதிர்ச்சியில் உறைந்தனர். மேலவளவு கிராமத்தில் வசித்த வந்த அத்தனை தலித் மக்கள் கொலை பீதியில் ஊரைவிட்டே வெளியேறினர்.
பத்தாண்டு கழித்து எண்ணிப் பார்த்தாலும் பெரும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் உருவாக்கும் மேலவளவு படுகொலை வழக்கை தமிழக ஆட்சியாளர்களும் காவல்துறை அதிகாரிகளும் நீதிபதிகளும் கையாண்ட விதத்தை அறிந்தவர்கள் வேதனையில் துடித்திருப்பார்கள் என்று சொல்ல வேண்டும். படுகொலையைவிட வழக்கு கையாளப்பட்ட விதம் பெரும் கொடுமையானது. கொந்தளிப்பை உருவாக்கக் கூடியது. "இரட்டை இலை" ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. கள்ளர் சாதியினரின் கைப்பிடியில் இருக்கும் கட்சி அது என்பதால் அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் நீதிபதிகளும் கொலையாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே செயல்பட்டனர்.
41 கள்ளர் சாதி இந்துக்கள் மீது குற்றப் பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாகவே வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய நிபந்தனையற்ற பிணையில் வெளிவந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். பலர் மேலவளவு கிராமத்திலேயே தங்கினர். பிணையை ரத்து செய்ய வழக்கறிஞர் ரத்தினம் தலைமையில் 75 வழக்கறிஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து முறையிட்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருந்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் வழக்கறிஞர்கள். உயர்நீதி மன்ற நீதிபதிகளின் முடிவு தவறானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய "பெஞ்ச்" தீர்ப்பளித்தது. ஆனாலும் பிணையை ரத்து செய்ய வில்லை. பிணையை ரத்து செய்யவே உச்சநீதிமன்றம்வரை செல்ல வேண்டிய நிலையை ஜெயலலிதா அரசு உருவாக்கியது.
இந்நிலையில் நேர்மையாக வழக்கு விசாரணை நடைபெறாது என்பதை அறிந்த வழக்கறிஞர்கள், வழக்கை சென்னை நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் நீதிபதிகள் வழக்கை சேலத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். பல்வேறு கொலை மிரட்டல்களைச் சந்தித்த வழக்கறிஞர்களும் சாட்சிகளும்,மன உறுதியோடு நின்றனர். வழக்கறிஞர் ரத்தினம் ஆவேசத்துடன் போராடினர். இறுதியில் 26.7.2001 அன்று 17 பேருக்கு ஆயுட்காலச் சிறை தண்டனையும், 23 பேரை விடுதலை செய்தும், சேலம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலவளவுப் படுகொலை வழக்கிலும் கூட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனை பெற்ற 17 பேருக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களை மிக பயங்கரமான முறையில் படுகொலை செய்த கள்ளர் சாதி வெறியர்களுக்கு  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நெறிகெட்ட முறையில் பிணை வழங்கியபோது, தமிழக அரசு வழக்கறிஞர் தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்த வில்லை. பின்னர், ரத்தினம் தலைமையிலான சமூக நீதி வழக்கறிஞர்கள்,  பிணையை ரத்து செய்ய உச்சநீதி மன்றத்தில் முறையிட்டனர். கடுமையான கொலைமிரட்டல்கள் வந்த போதும் மனம் தளராமல் வழக்கை நடத்தினர். உச்சநீதி மன்றம் பிணையை ரத்து செய்து 17 ஆயுட் சிறை குற்றவாளிகளை சிறையிலடைக்க உத்தரவிட்டது.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதனாலேயே மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஜெயலலிதாவும், கருணாநிதியும், சேலம் விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்த 23 பேர்களைத் தண்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. தண்டிக்கப்பட்ட 17 குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யும்படி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தண்டனையை உறுதி செய்து கடந்த 19.4.2006 அன்று தீர்ப்பளித்தது. விடுதலை செய்யப்பட்ட 23 பேர்கள் மீதும் குற்ற ஆதாரங்கள் இருந்தாலும் தமிழக அரசு மேல் முறையீடு செய்யாததால் நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்று கூறி கை கழுவினர் நீதிபதிகள். மேலவளவு மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து குற்றவாளிகளைத் தப்பிக்க செய்ய அனைத்து முயற்சிகளையும் ஜெயலலிதா அரசு செய்தது.
நன்றி : www.ambedkar.in

மாவீரன் மேலவளவு முருகேசன் நினைவு தினம் ஜூன் 30.


மாவீரன் மேலவளவு முருகேசன் நினைவு தினம் ஜூன் 30.6.1997-KEETRU

வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். 30.6.1997 அன்று நடைபெற்ற சம்பவம் தொடங்கி இன்றுவரை அவ்வழக்கு சந்தித்துள்ள / சந்தித்து வரும் திருப்பங்கள் திடுக்கிடச் செய்பவை. அவை குறித்து தனிப் புத்தகம் எழுதுமளவிற்கு தகவல் களஞ்சியம் கொண்டது அது. இவ்வழக்கில் குற்றவாளிகள் சார்ந்துள்ள ஆதிக்க சாதியினர், காவல் துறையின் பல்வேறு தகுதி நிலையிலான அதிகாரிகள், நீதித்துறையில் உள்ள பல்வேறு நீதிபதிகள், தலித் இயக்கங்கள் ஆகியோரின் பங்கேற்பு வன்கொடுமை வழக்குகளுக்கு என்னென்ன விதமான இடையூறுகள் வரக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ளது மேலவளவு ஊராட்சி மன்றம். 1996ஆம் ஆண்டிற்கு முன் இதன் தலைவர் பதவியை அங்குள்ள பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தினரான கள்ளரில் ஒரு பிரிவினரான அம்பலக்காரர்கள் வகித்து வந்துள்ளனர். இவ்வகையில் கடைசியாக மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அழகர்சாமி. 1992ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட 73ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, அரசு நிர்வாகம் அடித்தட்டு மக்களைச் சென்றடைய பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டுமெனக் கூறியது. அதனடிப்படையில் தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தை இயற்றியது. அப்போது பொதுத் தொகுதியாக இருந்த மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவி, 1996ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தொகுதிப் பதவியாக மாற்றம் செய்யப்பட்டது.
இதுநாள் வரை தங்களுக்கு கீழே இருந்த தலித்துகள் தங்களுக்கு மேலே வந்துவிடுவார்களோ என்று, ஒரு தலித்தை தலைவராக ஏற்றுக் கொள்ளாத மனநிலையிலிருந்த ஆதிக்க சாதியினர், இது குறித்து தங்கள் வெறுப்பை வெளிக்காட்டினர். இருப்பினும், தங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி கிடைத்த புதிய உரிமையை கைக்கொள்ள தலித் மக்கள் ஆர்வம் காட்டினர். தி.மு.க.வைச் சேர்ந்த முருகேசனும் மற்றும் சிலரும் 10.9.1996 அன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், ஆதிக்க சாதியினர் அவர்களை மிரட்டவே, அவர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
மேலூர் வட்டாட்சியர் நடத்திய சமாதானக் கூட்டத்தில், ஆதிக்க சாதியினர் அரசு ஆணைக்குக் கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர். அச்சத்தால் தலித் மக்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, 9.10.1996 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த தேர்தல் நடத்தப்படவில்லை. மீண்டும் 28.12.96 அன்று நடைபெற்ற தேர்தலில் முருகேசன் உட்பட சிலர் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆதிக்க சாதியினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, மக்களைத் தாக்கிவிட்டு வாக்குப்பெட்டிகளை தூக்கிச் சென்று தேர்தலை தடுத்துவிட்டனர். காவல் துறையின் பலத்த காவலுடன் மீண்டும் 31.12.1996 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆதிக்க சாதியினர் இத்தேர்தலைப் புறக்கணிக்க, தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து, இறுதியில் முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஆதிக்க சமூகத்தினர் முருகேசனுடன் தந்திரமாகப் பழகி, ஊராட்சி மன்றத்தின் ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுக் கொண்டனர். எனினும் ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிய முடியாத அளவிற்கு முருகேசன் தடுக்கப்பட்டார். முதன்முறையாக 10.9.1996 அன்று முருகேசனும் மற்ற தலித் மக்களும் வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தங்கள் எதிர்ப்பையும் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக தலித் மக்களின் மூன்று குடிசைகளுக்கு தீ வைத்தனர் ஆதிக்க சாதியினர். முருகேசன் ஊராட்சி மன்றத் தலைவராக வந்தபிறகு தீ வைக்கப்பட்ட குடிசைகளின் உரிமையாளர்களுக்காக இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.
இது குறித்து நிவாரணம் கோரி 30.6.1997அன்று மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரது உதவியாளரைப் பார்த்தனர். அங்கு வந்திருந்த மேலவளவு மனோகரன் (செட்டியார் சமூகம்), இவர்கள் எந்தப் பேருந்தில் ஊர் திரும்புவார்கள் எனக் கேட்டு, கே.என்.ஆர். பேருந்தில் முருகேசன் உட்பட மற்றவர்களும் ஊர் திரும்ப உள்ளதைத் தெரிந்து கொண்டார். அவ்வாறே அந்தப் பேருந்தில் புறப்பட்டனர்.
மேலூர் வந்ததும் குற்றவாளிகள் சிலரும் தலித் சமூகத்தைச் சார்ந்த சிலரும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். வண்டி அக்ரகாரம் பழைய கள்ளுக்கடைமேடு என்ற இடத்தின் அருகே வந்ததும், பேருந்தில் வந்த துரைபாண்டி என்பவர், ஓட்டுநரை வண்டியை நிறுத்தும்படி கூச்சல் போட்டார். அதே சமயம், சென்னகரம்பட்டி ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.
பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்) பூபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பில் இருந்து தனியாக வெட்டி எடுத்து, அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.
25.9.97 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு மா. சுப்பிரமணியன் என்ற துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணையை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக காவல்துறையின் குழுக்கள் செயல்பட்டன. 85ஆவது நாளில் 25.9.97 அன்று குற்றப்பத்திரிகை 41 பேர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது (90 நாட்கள் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருந்ததால், கைதானவர்களை பிணையில் தவிர்க்க முடியாமல் விடுவித்தாக வேண்டும் என்பது சட்டவிதி). குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர்.
1998 மார்ச் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் பெரும்பான்மையினருக்குப் பிணை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலவளவிற்குத் திரும்பியதால், தலித் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் செல்வாக்குள்ள முக்கியமான ஓரிருவர் சம்பவ சாட்சிகளான தலித் மக்கள் சிலரிடம் மறைமுக மிரட்டலில்ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கு காரணமாக இது குறித்து அவர்களால் நேரடியாக ஒன்றும் செய்ய இயலவில்லை. முருகேசனின் தம்பி கருப்பையா இச்சூழ்நிலையை விளக்கி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சருக்கு மனு அளித்தார். ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இத்தகவல்களைக் கேள்விப்பட்ட உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் பொ. ரத்தினமும், இக்கட்டுரையாளரும், மற்ற சக வழக்குரைஞர்களும் இச்சூழ்நிலை குறித்துப் பெரும் கவலையடைந்தனர். 1998 ஏப்ரல் மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அப்போதிருந்த மன்மோகன் சிங் லிபரான் (பாபர் மசூதி இடிப்பு குறித்த விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக தற்பொழுது உள்ளார்) அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கி, இச்சூழலால் வழக்கில் சாட்சிகளாக உள்ள தலித் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, 75 வழக்குரைஞர்கள் கையொப்பமிட்ட மனுவை உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரப்படி நடவடிக்கை எடுக்க, இரு நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் விசாரணைக்கு அம்மனுவை அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.
ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயராம் சவுத்தா மற்றும் பி. பக்தவச்சலு ஆகியோர், மனுதாரர்களான வழக்குரைஞர்கள் வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட நபர்களோ, அரசோ அல்லர்; அவர்கள் வழக்கிற்கு மூன்றாம் தரப்பினர். எனவே, அவர்களின் கோரிக்கை மனுவை ஏற்று இவ்வகையில் உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரத்தைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை என்று அதிரடித் தீர்ப்பு வழங்கினர்.
இத்தீர்ப்பினை எதிர்த்து வழக்குரைஞர் பொ. ரத்தினம் (முதலாம் மனுதாரர்) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பிணை ரத்து குறித்த குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவை ஆய்ந்து அளித்த தீர்ப்பு, மிகவும் முன்னோடித் தீர்ப்பாக இன்று வரை அறியப்படுகிறது. அதற்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகள், “ஒரு குற்றம் சாட்டப்பட்டவரின் பிணை உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவை குற்றவியல் வழக்கைத் தொடுத்து நடத்தும் அரசோ அல்லது அவ்வழக்கில் குறிப்பாக பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரது உறவினரோதான் தாக்கல் செய்ய முடியும்” என்றிருந்த நிலையை மாற்றி, வழக்கில் நேரிடையாகத் தொடர்பற்ற ஆனால் அக்குறிப்பிட்ட வழக்கின் தன்மையில் உண்மையான, நேர்மையான அக்கறையுள்ள நபர்களும் பிணை ரத்து மனு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் (ரத்தினம்-எதிர்-அரசு (2000) 2SCC 391) சட்ட விளக்கமளித்தது.
இத்தீர்ப்பின் காரணமாக மேலவளவு படுகொலை வழக்கு, சட்டரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததால், இதற்குப் பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற வட்டாரத்தில் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டிய வழக்கு என்ற தனிக்கவனம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, இன்னொரு செய்தியையும் இங்கு பதிவு செய்வது, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் நீதிமன்றத்தை எவ்விதம் அணுகலாம் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக அமையும்.
மேலவளவு வழக்கின் விசாரணை மதுரையிலேயே நடத்தப்பட்டால், மதுரை மற்றும் பிற தென்மாவட்டங்களில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆதிக்க சாதியின மக்களே பெரும்பான்மையினராக இருப்பதால், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சியளிக்க பல்வேறு விதமான இடையூறுகள், அச்சுறுத்தல்கள் போன்றவை நிகழும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்துதல், சாட்சிகளை விலை பேசுதல் போன்றவை நிகழ்ந்ததாலும் வழக்கு விசாரணையை வேறு வட மாவட்டத்திற்கு மாற்றக்கோரி, பாதிக்கப்பட்டோர் சார்பில் மனு செய்யப்பட்டது. இம்மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த போதுதான் உச்ச நீதிமன்றத்தின் மேற்கூறிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின்னரே உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டோர் தரப்பு கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்தது. எனவே, வழக்கு விசாரணை மதுரையிலிருந்து சேலத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
வழக்கு விசாரணையை சேலத்தில் நடத்த மூத்த குற்றவியல் வழக்குரைஞர் திருமலைராஜன் அவர்களை அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞரான நியமனம் செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்டோர் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது அரசு உத்ததரவு ஏதும் பிறப்பிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு மனுவம் தாக்கல்செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலவளவு வழக்கை நடத்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். அவருடன் மற்றொரு மூத்த குற்றவியல் வழக்குரைஞரான ப.பா. மோகன் அவர்களும் வழக்கு விசாரணையை திறமிக்க வகையில் நடத்தினார். பல்வேறு இடையூறுகளைக் கடந்து நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் 26.7.2001 அன்று வழங்கப்பட்ட விசாரணை நீதிமன்றத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 40 நபர்களில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; 23 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு நிலுவையிலிருக்கும் காலத்திற்கு தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவர்கள் தாக்கல் செய்த பிணை மனுக்கள், முதல் சுற்றில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் செய்யப்பட்ட எதிர் மனு காரணமாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும், பின்னர் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது. மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல் வழங்கியது, மனித உரிமை மற்றும் தலித் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

புதன், 27 ஜூன், 2018

புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் மதிப்பீடு..


புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி  இயக்குநர்  கே.பாக்யராஜ் அவர்களின் மதிப்பீடு..
***********************************

*பாக்யராஜ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி*:

*உங்கள் மனம் கவர்ந்த மற்றொரு மகாத்மா யார்*?

*அவரது பதில்*:

*ஒரு மாட்டு வண்டிக்காரன் ஒரு சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான். அவன் பேச்சோட வட்டார வழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் என்று தெரிஞ்சதும் மாட்டை கழட்டி விட்டு, வண்டியை குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்*.

*தாகத்துக்கு அந்த சிறுவன் தண்ணீர் கேட்கிறான்*. *அதோ அதுதான் உனக்கான தண்ணீர் என்று சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரை காட்டினாங்க*,
*உயர்சாதிக்காரர்கள்*.

*அவன் மட்டுமல்ல, அவன் எழுதிய தாளும் தீண்டத்தகாதது என்று  நோட்டுப் புத்தகத்தை திருத்த மறுக்கிறார் ஆசிரியர்*.

*முடி வெட்டி முடிந்தபின் அவன் தீண்டத்தகாதவன் என்று தெரிந்து கொண்ட ஒரு சவரத்தொழிலாளி கத்தியை எங்கே கழுவுவேன் என்று கத்துகிறான்*.
*அன்று முதல் தன் சகோதரியிடம் முடிவெட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்கிறான்*.

*வடமொழியைப் பாடமாய் எடுத்து படிக்க விரும்பினப்போ, இந்து தர்மம், கல்விச்சட்டம் இரண்டுமே இடம் தரவில்லை அவனுக்கு*.

*பதினாறு வயதில் அவனுக்கு திருமணம் நடக்குது*.
*தீண்டத்தகாதவர்கள் பகலில் திருமணம் புரியக் கூடாதுன்னு, ஒரு விதிக்குட்பட்டு ஒரு மீன் அங்காடியில் சாக்கடை மூடிய கற்பலகையே மேடையாய், இரவில் நடக்குது அந்த ஏழையின் திருமணம்*.

 *இத்தனை அவமானத்தையும் தன் கொள்கைக்கு உரமாயிட்டு வளர்ந்த கோபுரத் தலைவர் தான், இந்திய அரசியலமைப்பை வடிவமைத்திருக்கிறார்*.
*இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், சுதந்திர இந்தியாவில் இந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இரண்டு யுத்தங்கள் நிகழ்த்தியிருக்கிறார்*.
*பட்டொளி வீசி பாரதத்தின் அடையாளமாய் விளங்கும் தேசியக்கொடியை வடிவமைத்திருக்கிறார்*.

*சேறும், சகதியும் சுவரை அழுக்காக்கலாம்; சூரியனை அழுக்காக்குமா*?
*அழுக்குப்படுத்த முடியாத அறிவுச் சூரியன்*
*அண்ணல் அம்பேத்கர் அவர்கள்*.
*அவரே எனக்கு பிடித்த மகாத்மா*

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் வேலை - என்ன நிலை? ஜெ.ஜெயரஞ்சன்


சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் வேலை - என்ன நிலை?   ஜெ.ஜெயரஞ்சன்

உலகமெங்கிலும் மக்களுக்குப் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஒரு பெரிய தலைவலியாக உருவாகியுள்ளது. அதுவும் இந்தியாவில் கேட்கவே வேண்டாம். மக்கள்தொகை பெருக்கத்தினால் இளைஞர் பட்டாளம் நாளும் பெருகும் அதே வேளையில் அவர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாகவில்லை. 2001-2011 ஆண்டுகளுக்கு இடையே இந்திய மக்கள்தொகையில் 15 வயது நிரம்பியோர் எண்ணிக்கை மாதாமாதம் ஏறத்தாழ 15 லட்சம் அதிகமாகிறது. இந்த எண்ணிக்கைப் பெருக்கம் சமீப காலங்களில் குறையப் போவதில்லை. இதில் நிறைய பேர் கல்வி நிலையங்களில் படிப்பைத் தொடர்ந்தபோதிலும் அவர்களும் விரைவில் வேலை தேடிச் சந்தைக்குள் வருகிறார்கள். இந்தியாவில் தற்போது 15 முதல் 55 வயதுக்குட்பட்டோரில் சரிபாதிப் பேர் உழைப்பாளிகள். இதே அளவை நாடு தொடர வேண்டுமெனில் மாதமொன்றுக்கு உருவாக்கப்பட வேண்டிய வேலைகளின் எண்ணிக்கை 8 லட்சம் ஆகும். அதாவது ஏறத்தாழ ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

பொருளாதாரம் வளரும்போதுதான் வேலைவாய்ப்பு உருவாகும் என எங்களுக்குப் படிப்பிக்கப்பட்டது. ஆனால், நாங்கள் நிதர்சனமாகக் காண்பது என்ன? உலகிலேயே அதி வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியா. ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது வார்த்தையில் மட்டுமே உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. அதைவிடவும் கேவலம், உருவாகும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் சுத்த கூலி வேலைகளே. உழைக்கும் வயதில் (15-59) உள்ள மக்கள்தொகை பெருகும் வேகத்தில் 10இல் ஒரு பங்கு வேகத்தில் கூட வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. இது ஒரு புறமிருக்க, பெண்கள் வேலைகளில் இருந்து விலகுவது போல் தெரிகிறது. உருவாக்கப்படும் வேலைகளில் பெரும்பான்மையானவை சுயதொழில் வகையையும், அன்றாடக் கூலி வகையையும் சேர்ந்தவையாக உள்ளன.

சுயதொழில் என்ற வரையறை ஒரு சிக்கலானது. உழைக்கும் வயதிலுள்ளோர் வேலை தேடுகிறேன் என்று வேலை எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. வயிற்றுப் பிழைப்பிற்கு எதையாவது செய்தே ஆக வேண்டும். ஏதோ ஒரு தொழிலை தற்காலிகமாகச் செய்யத் தலைப்படுவர். அவர்கள்தான் சுயதொழில் புரிவோரில் பெரும்பான்மையினர். ஆக, சுயதொழில் புரிவோர் அனைவரும் தொழில்முனைவோர்தான் எனக் கருதுவது தவறாகும். ஆனால், போதுமான அளவில், வாக்குறுதி அளித்த அளவில், வேலைவாய்ப்பு உருவாக்க இயலாத பாஜக, தாங்கள் தொழிலாளர்களுக்கு வேலை உருவாக்குவதற்குப் பதிலாக தொழில்முனைவோரை உருவாக்குவதாகக் கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம். அதற்குக் கடன் வழங்க ஒரு திட்டம். அதற்குப் பெயர் முத்ரா. முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கடன் தொகையின் சராசரி அளவு ரூ.37,500. ஒரு நபரால் 37,500 ரூபாயை வைத்துக் கொண்டு என்ன சுயதொழில் தொடங்க இயலும்? அத்தொழிலிலிருந்து என்ன வருமானம் பெற்றுவிடுவார்? அது மட்டுமல்ல, அவரது தொழில் செழித்துப் பெருகி அவர் மற்றொருவரை வேலைக்கு அமர்த்துவார்களாம். இதன் வாயிலாக நம் நாட்டில் வேலைவாய்ப்பு பல்கிப் பெருகியுள்ளதாம். பக்கோடா வியாபாரம் இந்த நிலையில் வெளிவந்த கதைதான். ஆக, வேலைவாய்ப்பு உருவாக்கம் எனும் பொறுப்பைத் தங்களிடமிருந்து வேலையற்ற இளைஞர்களுக்குக் கைமாற்றி விட்டதுதான் இவர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கிய வரலாறு. இவர்கள்தான் எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘வேலைவாய்ப்பற்ற’ வளர்ச்சி என முழங்கியவர்கள். அதைப் பல ஊடகங்களும் தவறாமல் பேசின. இன்று எந்த ஊடகமும் வாய் திறப்பதில்லை. ஏன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

இது ஒரு புறமிருக்க, வெளிப்படையான வேலையில்லா நிலை இந்தியாவில் குறைவு என வாதிடுகிறார்கள். பெண்கள் வேலையிலிருந்து விலகுவது அக்குடும்பங்களின் செழிப்பான நிலையினால்தான் எனவும் கூறுகிறார்கள். இந்தியாவில் வறுமை குறைந்துள்ளதால்தான் இது சாத்தியம் எனவும் கூறப்படுகிறது. தொழிலாளர்களின் கூலி வருமான உயர்வினால்தான் வறுமை குறைந்துள்ளது. ஆகவே, வீண் கவலை வேண்டியதில்லை என்பது ஒரு நிலைப்பாடு. இந்நிலைப்பாடு சரிதானா? வேலை தேடுகிறேன் என எதுவும் செய்யாமல் தொடர்ந்து வேலையில்லாமல் இருப்பது எத்தனைப் பேருக்கு சாத்தியம்? கிடைக்கும் வேலையைச் செய்வதும், ஒருவர் செய்ய வேண்டிய வேலையைப் பலரும் பகிர்ந்து செய்வதும் பிழைக்கும் வழிகள். அதனால் இவர்கள் வேலைப் பெற்றுவிட்டார்கள் எனக் கூறுவது எதைச் சேர்ந்தது? பெண்கள் வேலையை விட்டு விலகுவது சுகமாக இருப்பதற்காகவா? அதுபோன்று சான்றுகள் ஒன்றும் கிடைக்கவில்லை.

வேலைவாய்ப்பு குறித்து இந்த விவாதம் தொடர ஒரு முக்கியமான காரணம் வேலைவாய்ப்பு குறித்த தரவுகளினால்தான். பலவிதமான புள்ளிவிவரங்கள் இந்தியாவில் உள்ளன. மக்கள்தொகை கணக்கெடுப்பு, பொருளாதாரக் கணக்கெடுப்பு, வீட்டுத் தொகை சர்வேக்கள், உழைப்பாளர் சர்வேக்கள் எனப் பல தரவுகள். ஒவ்வொன்றும் ‘வேலை’ என்பதை வெவ்வேறு விதமாக அணுகுகின்றன. பெரும்பாலான வேலைகள் சுய தொழிலாகவும், அன்றாடக் கூலி வேலைகளாகவும் இருக்கும்போது ‘வேலை’ என்பதைக் கணக்கெடுப்பது பெரும் சிக்கலாகிறது. ‘வேலை’ என்றால் ஒரு பணி உத்தரவு, கால நிர்ணயம், மாதச் சம்பளம், விடுமுறை, இதர சலுகைகள் எனக் கொண்டால் வெகு சொற்பமான ‘வேலைகளே’ உள்ளன. இந்த வரையறைக்குள் வராதவர்கள் ‘வேலையில்’ இல்லை எனக் கொள்வதா? அல்லது அவர்கள் புரியும் பணியை ‘வேலை’ என எப்படிக் கொள்வது?

ஆட்சியாளர்களுக்கு எப்படியாவது தாங்கள் அளித்த வாக்குறுதியைப் போல் போதுமான வேலையை உருவாக்கிவிட்டதாகக் காட்டியே தீர வேண்டிய நிலை. அதனால், பழைய கணக்கிடும் முறைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டார்கள். அதற்குப் பதிலாக EPF Dataவைக் கொண்டு புது வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என ஒரு புதுக் கதையை உலவ விடுகிறார்கள். இதற்காக அவர்கள் EPF-ன் சட்டதிட்டங்களை மாற்றியதைச் சொல்வதில்லை. முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்கள் பணிபுரிந்தால் மட்டுமே EPF கட்ட வேண்டும். அதனை 10 ஆகக் குறைத்ததால், இதுவரை 19 தொழிலாளர்கள் வரை பணிபுரிந்த நிறுவனங்களும் EPFன் வலைக்குள் வந்தன. இதனால் புதிதாக 19 நபர்கள் EPFக்குள் வந்தனர். இது புதிய வேலைவாய்ப்பா? இல்லையே. முன்பு அமைப்பு சாரா தொழிலாளராக இருந்தவர்கள் ஒரு வகையில் ‘அமைப்பு சார்ந்த’ தொழிலாளர்களாக மாறியுள்ளனர் எனக் கூறலாம். அவர்கள் முழுவதுமான ‘அமைப்பு சார்ந்த’ தொழிலாளர்கள் இல்லை.

இதையெல்லாம் படிக்கும்போது, வித்தைக்காரர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட பந்துகளை மேலே தூக்கிப்போட்டு ஒன்றையும் தவறவிடாமல் பிடிக்கும் சாகசத்தைக் காண்பதைப் போல் உள்ளது இந்தியாவில் வேலைவாய்ப்புகளின் நிலைமை. இதனை ஆங்கிலத்தில் ‘jugglery' எனக் கூறுவார்கள். பார்ப்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், கோடிக்கணக்கானவர்களின் வாழ்வு. இதில் பார்ப்பவர் கண்களைக் கட்டுவதைவிட காய்ந்த வயிற்றுக்குப் பதில் சொல்வது ஆள்வோரின் பொறுப்பு.


கட்டுரையாளர் குறிப்பு:

ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. நன்றி :மின்னம்பலம்

செவ்வாய், 26 ஜூன், 2018

சேகுவேரா அன்று இந்தியா வந்தபோது இடதுசாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்?



சேகுவேரா அன்று இந்தியா வந்தபோது இடதுசாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்?

சேகுவேரா பற்றிய எத்தனையோ புத்தகங்கள் வந்திருக்கின்றன.. எத்தனையோ திரைப்படங்கள் வந்திருக்கின்றன.. அதுவும் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே தேசிய இனம் மற்றும் புரட்சி என பேசுகிற முற்போக்கு முகாம்களின் முதுகுகள் சேகுவேராவின் டி சர்ட்டுகளை அணியாமல் இருந்தது இல்லை..
எங்கோ அர்ஜெண்டினாவில் பிறந்து மருத்துவராக வளர்ந்து பின்னர் காடுகளில் அலைந்து திரிந்து லத்தீன் அமெரிக்க தேசத்து நாடுகளின் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்துப் போன மாபெரும் போராளியாக இன்றும் உலகமே கொண்டாடக் கூடிய அதி அற்புதன்!
கியூபாவில் போராளியாகி அரசுப் பொறுப்பிலே அங்கம் வகித்து அதே கியூபாவைவிட்டு ரகசியமாக வெளியேறி காங்கோ நாட்டுப் புரட்சிக்காக, பொலிவியா புரட்சிக்காக களமாடிய மாவீரன்!
வரலாறு நெடுகிலும் இப்படித்தான் சே குவேராவைப் பற்றிய பதிவு இருக்கிறது,.
அந்த மாமனிதன் காலடிகள் 1959ஆம் ஆண்டில் இந்த இந்திய துணைக் கண்டத்திலும் பதிந்திருக்கிறது என்பதையே இந்த தலைமுறைக்கு 9 ஆண்டுகளுக்கு முன்புதான் ஓம் தன்வி என்ற எழுத்தாளர் அறிவித்தார்..
அதற்காக அவர் மேற்கொண்ட பயணம் அவ்வளவு நெடியது.. அதன் பின்னர் விக்கிலீக்ஸ் தகவல்களில் சேவின் இந்திய பயணக் குறிப்பு 2011-ம் ஆண்டு வெளியானது சரி
அதற்கும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன தொடர்பு? என்கிறீர்களா?
டெல்லி வந்த சேகுவேரா அப்போதைய பிரதமர் ஜாஹர்லால் நேருவை சந்தித்துப் பேசினார். அவர் நேருவுக்கு பரிசாகக் கொடுத்தது கியூபா சிகரெட்டுகள்.. நேரு அப்போது அளித்த விருந்தில் இந்திரா குடும்பமும் கலந்து கொண்டது.
நேருவிடம் கம்யூனிஸ கியூபா பற்றியும் மா சேதுங் பற்றியும் சே குவேரா கேள்விகள் கேட்க...நேருவோ நேரடியாக பதிலளிக்காமல் ஆப்பிள் பழங்களைப் பற்றி பேசி இருந்திருக்கிறார்.
சேகுவேரா பற்றிய ஓம் தன்வியின் ஆதாரங்களுக்கு பேருதவியாக இருந்தவர் டெல்லி ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த கே பி பானுமதி என்பவர்தான்!
அவர் சேகுவராவை பேட்டி எடுத்து ஒலி பரப்பியவர்!
அவரும் சேகுவேரா பற்றி நினைவுகளைப் பதிவு செய்கிறார்..அவர் போன முக்கியமான இடம் கொல்கத்தா!
ஆம் கம்யூனிஸ்டுகளின் கோட்டைக்குப் போனார்.. ஆனால் என்ன நடந்தது?
இந்தியா வருகை தந்த சேகுவேரா கம்யூனிஸ்டுகளின் கோட்டையான கொல்கத்தாவுக்கும் கூட போயிருக்கிறார். அப்போதைய முதல்வராக இருந்த பி.சி. ராயை சந்தித்துப் பேசியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லும் அந்தப் பதிவு ஒரு அதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.!
அப்போது கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியாக பிளவுபடாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாகவே இருந்த காலம்!
எந்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவரையும் சே குவேரா சந்தித்ததாகவோ எந்த ஒரு குறிப்புமே இல்லை..
(Shockingly, the Calcutta communists - at a time when the Communist Party of India had not yet split - completely ignored the presence of this great leader of the Cuban revolution.)
ஓம் தன்வி சேகரித்து வெளியிட்ட புகைப்படங்களிலுமே கூட அப்படியான ஒரு காட்சி கூட இல்லை..
அதுமட்டுமல்ல..
சே குவேரா இந்தியா வந்து போன வரலாற்றை பதிவு செய்யக் கூடிய எந்த ஒரு நூலையும் அவரைக் கொண்டாடுகிற கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுவரை வெளியிட்டதாக தெரியவில்லை
அப்படியானால் சேகுவேராவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அன்று கொல்கத்தாவில் அவமதித்தனவா? அதை வரலாற்றுப் பக்க்கங்களில் மறைக்கின்றனவா?
பிடல் காஸ்ட்ரோவின் வரிகளில் சொல்வதானால் அந்த உண்மையை "வரலாறு விடுதலை செய்யும்"!
இன்று 'சே' எனும் சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்ட நாள் (09.10.1967)
நன்றி : ஒன் இந்தியா தமிழ்.

"இரட்டை வாக்குரிமை "


"இரட்டை வாக்குரிமை "

  1921-ல் இங்கிலாந்து வல்லரசு சைமன்குழுவை
காங்கிரசுபுறக்கணித்தது
இங்கிலாந்து பேரரசர்அய்
ந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்
திய பிரதிநிதிகள் அனை
வரையும் லண்டனுக்கு வரவழைத்து நேரில் அவ
ர்களது கோரிக்கைகளை
கேட்பதற்கான ஒரு கூட்ட
த்தை ஏர்பாடு செய்தார்.
அதுவே வட்டமேசை மாநாடு  என்று அழைக்க
ப்பட்டது. 
  1930,1932 ஆகிய ஆண்
டுகளில் நடைபெற்ற வட்
ட மேசை மாநாடுகளில்
புரட்சியாளர் அம்பேத்கரு
ம்,  மாவீரர்இரட்டைமலை
சீனுவாசனாரும் கலந்து
கொண்டனர்.அங்கு இரட்
டை வாக்குரிமை கோரிக்
கை அம்பேத்கரால் வலி
மையான வாதங்கலோடு
எடுத்து வைக்கப்பட்டது.

 1921 -லேயே தாம் நடத்தி
வந்த திராவிடன் இதழ் வ ழி இரட்டைவாக்குரிமை
கோரிக்கைக்கு முன்னோ
டியான கருத்தியலை உரு
வாக்கிய பேரறிஞர்
"அயோத்திதாசர் ".

   இரட்டை வாக்குரிமைக்
காய் வட்ட மேசை மாநாட்
டில் அம்பேத்கரோடு நின்
று போராடிய மாவீரன்
"இரட்டைடேமலை சீனு
வாசனார்."

   இரட்டை வாக்குரிமை
இந்த கோரிக்கைக்கு அடி
ப்படையாக விலங்குவது
சமுகத்தில் நிலவும் சாதிய
கட்டமைப்புதானே தவிர
தலித்துக்களின் அதிகார
ஆசையல்ல.
    இரட்டை வாழிடம், இர
ட்டை சுடுகாடு , இரட்டை
வழிப்பாட்டு தலம், இரட்
டை குவாளைமுறை என
திணிக்கப்படும் இரட்டை
வாழ்நிலையின் எதிர் வினையாகவே இரட்டை
வாக்குரிமை எழுகிறது
என்பதை உணர்ந்து வரும்
எழுச்சித்தமிழர் அவர்கள்
மக்களைத் திரட்டி பலகட்
ட போராட்டங்களை பல
வடிவங்களில் சமூக தலை
நிமிர்க்கு தியாக போராளி
போராடிவருகின்றார் ...!

சனி, 23 ஜூன், 2018

கியூபா, கியூபா-ன்னு ஒரு நாடு!


ஒரு கதை சொல்லட்டுமா சார்……!_

கியூபா, கியூபா-ன்னு ஒரு நாடு!

 *அமெரிக்கா வுக்கு கீழே ஒரு ஓரமா துக்குணூன்டா இருக்கும் மேப்-ல அதேதான்*

▪Oriental Fruits Factory என்ற ஓர் நிறுவனம் அந் நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டவும், நிலங்களை அபகரிக்கவும் அமெரிக்காவால் நியமிக்கப்பட்டது!

▪அவர்களும் அங்கே இருக்கும் கரும்பு, பழங்கள், உணவு தானியம் என அனைத்தையும் அள்ளி எடுத்து சென்று கொண்டே இருந்தனர்!

▪ஒரு நிலையில் ஒட்டு மொத்த நாடும் அமெரிக்காவின் பிடியில் இருக்கிறது என்பதை மக்கள் உணரும் போது தான் தாங்கள் அடிமையாக்கப் பட்டிருக்கிறோம் என்பதையே தெரிந்து கொண்டார்கள்!

▪அவர்கள் அதை தெரிந்து கொள்ளும் போது அவர்களுக்காக அதற்கு முன்பு பேசிய போராடிய வழக்கறிஞர் நாடு கடத்தப்பட்டு இருந்தார்!

▪பின்னாளில் அந்த வழக்கறிஞர் தன் தோழர்களோடு மெக்சிகோ -விலிருந்து கடல் மார்க்கமாக நாடு வந்து சேர்ந்து இரகசியமாக படை கட்டி எழுப்ப துவங்கியிருந்தார்!

▪அப்போது அங்கு தலைமை பதவியில் இருந்தவர் அமெரிக்கா வின் அடிமை "பாடிஸ்ட்டா''

▪▪ *நாடு திரும்பிய பின்னர்*

▪அங்கே வாழ்ந்த பூர்வ குடிகள், பல நாட்களாக வாழும் தென் அமெரிக்கர்கள், வேலைக்காக அடிமையாக அமெரிக்க கம்பெனியால் அடிமையாக கொண்டு வரப் பட்ட ஆப்பிரிக்கர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு தன் படையை கட்டி அமெரிக்காவை எதிர்த்து நின்றார்!

💢 *இதில் குறிப்பாக*;- _வந்தேறி வராத ஏறி என்று_

▪பிரித்து பார்த்து ஒதுக்கி வைக்கவில்லை!

▪அரசின் அடக்குமுறையால் ஏற்கனவே கோபத்தில் மக்களும் கை கோர்க்க……, பாடிஸ்ட்டா அரசு வீழ்ந்தது!

▪இறுதியாக அந்த வழக்கறிஞர் ஆட்சியை பிடித்தார்!

▪அவர்கள் மீது மீண்டும் அறிவிக்கப் படாத ஓர் நேரடி போரை தொடுத்தது அமெரிக்கா.!

▪தங்களின் திறமையால் மறைமுக கொரில்லா தாக்குதல் மூலம் அமெரிக்க படை வீரர்களை-யே
தோற்கடித்ததோடு……, 

▪அந்த வீரர்களை சிறையும் பிடித்தனர்!

▪திருடனுக்கு தேள் கொட்டியது போல் முழித்தது அமெரிக்கா!

▪சர்வதேச அளவில் பேசி வீரர்களை மீட்கவும் முடியாது! காரணம்,

▪நடத்தியது திருட்டுத் தனமான வேலை! 1500 வீரர்களை கொண்டு வீழ்த்தி விடலாம் என்று நினைத்தவர்கள் சிக்கி கொண்டனர்!

▪அந்த வழக்கறிஞர் தன் மருத்துவரும் ரிசர்வ் வங்கி தலைவருமான நண்பனை பேச வைத்தார் அமெரிக்காவிடம்!

▪52 மில்லியன் அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக பெற்றுக் கொண்டு வீரர்களை திருப்பி அனுப்பியது கியூபா!

🔹 *அந்த வழக்கறிஞர் - ஃபிடல் காஸ்ட்ரோ*

🔹 *அந்த மருத்துவர் - சே குவேரா*

⚫ *அங்கு பாடிஸ்ட்டா -  இங்கு எடப்பாடியும், மோடியும்!*

▫ *அங்கே Oriental Fruits - இங்கு கார்ப்பரேட்கள்*

▪ *கடைசி முதலாளி அங்கும் இங்கும் அமெரிக்கா தான்!*

▪ *பிடலும், சேகுவேராவும் கண்டிப்பாக போராளி இயக்கங்களும் பொது மக்கங்களுமே!*
 
▪ *இதில் அங்கும் இங்கும், எங்குமே தேர்தல் கட்சிகள் வந்ததில்லை! வரப் போவதுமில்லை!*

🏷 *protest Revolution Fidal CHE TamilNadu சேகுவேரா*


வெள்ளி, 22 ஜூன், 2018

சர்வதேச யோகா நாள்ல இவரப் பத்தி தெரிஞ்சுக்கலன்னா எப்பிடி?

சர்வதேச யோகா நாள்ல இவரப் பத்தி தெரிஞ்சுக்கலன்னா எப்பிடி?

இன்று நான்காவது சர்வதேச யோகாதினம் கடைபிடிக்கப்படுகிறது இந்த தினத்தில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் குரு பாபா ராம்தேவ் தலைமையில் ஒரேயிடத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்சிகள் நடைபெறுகிறது.
இந்த நேரத்தில் யோகா மட்டுமல்லது ஆயுர்வேதம், அரசியல்,பிஸ்னஸ் என பல துறைகளிலும் புகுந்து விளையாடி வரும் பாபா ராம்தேவ் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ராம்தேவ் ஹரியானா மாநிலத்தில் உள்ள மஹேந்திரகார் என்ற மாவட்டத்தில் இருக்கும் அலிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் ராம் நிவாஸ் யாதவ் மற்றும் குலாபா தேவி இவருக்கு ராமகிருஷ்ண யாதவ் என்று பெயர் சூட்டினர். அலிப்பூரிலேயே எட்டாம் வகுப்பு வரை படித்த ராம் தேவ் அதன் பிறகு திடீரென்று ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பள்ளிப்படிப்பை நிறுத்தினார். 
தொடர்ந்து யோகா, சமிஸ்கிருதம் ஆகியவை கற்றுத் தேர்ந்தார். பின்னர் ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் போது சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். இந்திய வேதங்களின் மீது ஈர்ப்பு கொண்டு அதை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ஹரித்வாரில் உள்ள குருகுல் காங்கரி விஸ்வ வித்யாலாவில் சேர்ந்து அரபிந்தோ கோஷின் யோகிக் சதன் என்ற புத்தகத்தை படித்தார்.
அதன் பிறகு இமயமலை குகையில் தீவிரமாக யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.
தான் கற்றுக் கொண்ட யோகாவை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விரும்பியவர் திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கினார். ஆச்சார்யா நிதின் சோனி நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய யோகா பயிற்சியை முதன் முதலாக ஆஸ்தா என்ற தொலைகாட்சியில் செய்தார். இதற்கும் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
நாளுக்கு நாள் அவரது புகழ் அதிகரித்துக் கொண்டே சென்றது. அமிதாப் பச்சன்,ஷில்பா ஷெட்டி உட்பட பல பிரபலங்களுக்கு யோகா சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதோடு பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும் இஸ்லாமிய மத குருமார்கள் பயிலும் கல்லூரியிலும் யோகா பயிற்சி அளித்திருக்கிறார். 
இவருடைய பதஞ்சலி யோகபீடத்திற்கு ஸ்காட்லாந்தில் இருக்கும் ஒரு தீவையே இவரை பின்பற்றும் தம்பதியனர் காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள். 
இவரது மூச்சுப் பயிற்சி மற்றும் ஆயுர்வேத முறைகளினால் பல நோய்கள் குணமாவதை அறிந்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் புதிதாக யோகா மற்றும் ஆயுர்வேதம் தொடர்பான பாடங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஒரு பக்கம் மக்களின் ஆரோக்கியம் குறித்து பேசி வந்தவர் பின்னர் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு லட்சம் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய பேரணியை நடத்திக்காட்டினார். அதோடு ஊழலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தெரிவித்தார். கருப்பு பணத்தை எப்படி மீட்கலாம் என்று சொல்லி அரசுக்கு பல யோசனைகளை முன்மொழிந்தார். இதனால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சுமார் பதினைந்து நாட்கள் வரையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹரித்வாரில் ஆயுர்வேதம் மற்றும் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி அதனை நடத்தி வருகிறார் இங்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையம் தான் உலகிலேயே மிகப்பெரிய ஆயுர்வேதம் மற்றும் யோகா பயிற்சி மையம் என்று சொல்லப்படுகிறது இவருடைய சொத்து மதிப்பு மட்டும் முப்பது பில்லையனைத் தாண்டும் என்கிறார்கள்.
பாபா ராம்தேவின் யோகா பயிற்சியை நேரடியாக நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கு லட்சக்கணக்கில் நீங்கள் செலவிட வேண்டியிருக்கும். முதல் வரிசையில் உட்கார ஐம்பதாயிரத்திலிருந்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. இது சாதரண நாட்களில், ஏதேனும் விஷேச தினம் என்றால் முதல் வரிசையில் உட்காருவதற்கான டிக்கெட்டின் விலை லட்சக்கணக்கை தாண்டுகிறது. யோகா பயிற்சி நடக்கிற இடத்தில் கடைசி வரிசையில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதன் ஆரம்ப விலை ஆயிரத்திலிருந்து ஆரம்பம். இதன் விலையும் விஷேச நாட்களில் கூடுதலாக இருக்கிறது.
தன்னுடைய யோகா பயிற்சியின் மூலம் எயிட்ஸை குணமாக்குவேன் என்று சொன்னார் ராம்தேவ். ஆனால் இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து நான் எயிட்சை குணமாக்குவேன் என்று சொல்லவில்லை. எயிட்சால் பாதிக்கப்பட்டவர்கள் யோகா செய்யும் போது அவர்களுக்கு ஒரு ரிலீஃப் கிடைக்கும் என்றேன் என்றார். தான் கொடுக்கும் மருந்துகளால் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லியும் சர்ச்சையில் சிக்கினார்.
தனக்கு சிறுவயதாக இருந்த போது இடதுபக்கம் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டதாவும் ரிஷி தயானந்த் அவர்களின் புத்தகத்தை படித்த பிறகு அதன்படியே நடந்து கொள்ள ஆரம்பித்த பிறகு அந்த முடக்குவாதம் சரியாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவரது வலது புற நெற்றியில் சுருக்கங்கள் இருக்காது. வலது கண் அவ்வளவாக சிமிட்ட மாட்டார். ஆவருக்கு வலது பக்கம் தான் முடக்குவாதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். இடது பக்கம் முடக்குவாதம் ஏற்பட்டதற்கான அறிகுறிகளே இல்லையாம்!
ஊழலுக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு டெல்லியில் இருக்கிற ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடக்கும் போது போலீசார் கைது செய்ய வருகிறார்கள் என்று தெரிந்ததும் சுடிதார் அணிந்து, துப்பட்டாவினால் தலையில் முக்காடிட்டு தப்பிக்க முயன்றிருக்கிறார்.
ஆனால் இவருடைய தாடி காட்டிக் கொடுத்துவிட்டது இவர் நிறுவிய திவ்யா மருந்தகம் கிட்டத்தட்ட 280க்கும் மேற்பட்ட மருந்துகளையும் பிற பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதன்மூலமாக ஆண்டுக்கு ஆயிரத்துநூறு கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது.

புதன், 20 ஜூன், 2018

இந்தியாவின் முதல் தலித் பெண் பட்டதாரி


இந்தியாவின் முதல் தலித் பெண் பட்டதாரி

சட்டத்தை இயற்ற அம்பேத்கார் வழி நடத்திய அரசியலமைப்பு குழுவில் ஒரு ஒரே தலித் பெண்
மேலோடை அணிந்த முதல் தலித் பெண்
இந்தியாவின் முதல் தலித் பெண் பட்டதாரி
அவர்தான் = தாக்சாயினி

மிஸ் இந்தியா அழகியாக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அனுக்ரீத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மிஸ் இந்தியா அழகியாக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அனுக்ரீத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

*இந்த ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்று வந்தது.*

*30 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்டப் போட்டிகளில் தகுதி பெற்றனர்.


*நேற்றிரவு நடைபெற்ற வண்ணமயமான இறுதிச் சுற்றுப் போட்டிக்கான நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர், நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீக்சித் உள்ளிடடோர் கலந்துகொண்டனர்.*

*இதில், தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அனுக்ரீதி வாஸ் என்பவர் மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார்.*

_சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பிரெஞ்ச் பயிலும் மாணவியான அனுக்ரீத்திக்கு கடந்த ஆண்டின் அழகியாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர் மகுடம் சூட்டினார். ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்திரி, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டனர்.

செவ்வாய், 19 ஜூன், 2018

உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?



உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த
கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து
கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற
புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும்
நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டு
மென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன.
இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,
காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது
சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள்
உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி,
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின்
நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய
கெவின் தொலைதூர கிராமங்கள் வரை
சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு
நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய
படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது;

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில்
உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத
நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின்
சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு
வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி
தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை
நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர்
பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச்
சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு
பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்;
பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று
விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம்
நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம்
தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்?
அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி
ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான
அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த
விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின்
பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர்
அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

 இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு
அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது.
அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு
ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry...

நாம் எவராக இருந்தாலும்
சரி நண்பர்களே,
நம்மிடம் மனிதம் இல்லையெனில்
நாமும் மிருகத்திற்க்கே
ஒப்பாவோம்❣❣. ....

திங்கள், 18 ஜூன், 2018

Rss vhp பஜ்ரங் தள்.....தடை பற்றிய அறிவிப்பு செய்திகளை கேள்விப் பட்டு இருப்பீர்கள் ... அதைப் பற்றிய விரிவான உண்மையான தகவல்கள்


Rss  vhp பஜ்ரங் தள்.....தடை பற்றிய அறிவிப்பு செய்திகளை கேள்விப் பட்டு இருப்பீர்கள் ... அதைப் பற்றிய விரிவான உண்மையான தகவல்கள்

Rss  vhp சிவசேனா ராம்சேனா அனுமன்சேனா பஜ்ரங்தள் மற்றும் அதன் கிளை அமைப்புகள் அனைத்தும் மத  பயங்கவாத அமைப்புகளாக அறிவித்து தடை செய்தது உலகின் நம்பர் 1 பாதுகாப்பு அமைப்பும்,, அமெரிக்காவின் உளவு பிரிவான CIA (cetral intelligence agency)

இனிமேல் இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை அமெரிக்காவில் முழுவதுமாக தடை செய்திருக்கிறது VIA.. இந்தியாவிலும் இந்த அமைப்புகளின் செயல் பாடுகள் கண்காணிக்கப்படும் என்று சொல்லி rss டவுசர்களின் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது அமெரிக்கா

ஏன் என்ன எதனால் ஒரு நாட்டினன் பிரதமர் இருக்கும் ஒரு அமைப்புக்கு இவ்வளவு பெரிய ஆப்பு??

அதற்க்கான பின்னணி காரணங்களை  விசாரித்தால் வரும்  எல்லாம் வெடிகுண்டு ரகம்.... அப்படி என்ன ன்னு வாருங்கள் தெரிந்து கொள்வோம்

அமெரிக்கா உலகம் முழுவதும் உள்ள எல்லா இயக்கங்களையும் கண்காணித்து வருகிறது...அவற்றில் isis... ஆகாய்தா... ஜெய்ஷிஇ முகமத்... இந்தியாவில் சிமி போன்ற இன்னும் பல அமைப்புகள் உலகெங்கும் உள்ளன

ஐ நா சபையில் உள்ள உறுப்புநாடுகள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் பிட்டு இருக்கின்றன... அதில் ஒவ்வொரு நாட்டிலும் போராட்ட இயக்கங்கள் நடத்திக்கொள்ள உரிமை உண்டு ஆனால் அதற்க்கு சில நிபந்தனைகள் உள்ளன அவை

1 இயக்கம் பெயர் தெளிவாக இருக்க வேண்டும்

2 கொள்கைகள் பற்றி தெளிவான வரையறைகள் இருக்க வேண்டும்

3 மிக முக்கியமானது உறுப்பினர் சேர்க்கை ... நீக்கம் குறித்தான தெளிவான ஆவணங்கள் பராமரிக்கப் பட வேண்டும்

4 உறுப்பினர்களுக்கு அடையாள எண் பதிவு என் போன்ற விபரங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்

5 சம்பந்தப் பட்ட நாட்டின் அமைச்சரவை ஒப்புதலோடு கூடிய அனுமதியை பெற்று அந்த இயக்கம் இயங்க வேண்டும்

6 கூட்டங்கள் ...பங்கேற்போர் விபரங்களை எப்போதும் வெளிப்டையாக  பொது மக்கள் மத்தியில் பகிர்ந்துவிடு இருக்குமா வேண்டும் ...என்று.  இன்னும் நிறைய கட்டுப்பாடுகளை ஐ நா சபை உறுப்பு நாடுகள் தங்களுக்குள் ஒப்புக்கொண்டு உள்ளன இவற்றிற்கு கட்டுப் படாத இயக்கங்கள் தடை செய்யப்படும்

Rss மற்றும் அதன் அல்லக்கை  அமைப்புகளிடம் CIA இந்த விபரங்களைக் கேட்டு இருந்தது  அப்போது தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளன

அதாவது மேலே சொன்ன அவர்கள் கேட்ட ஒரு தகவலைக்கூட இவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை

அதாவது rss ல் உறுப்பினர் சேர்க்கை.... உறுப்பினர் நீக்கம் போன்ற எதுவும் இல்லை

உறுப்பினர்களுக்கு பதிவு எண் இல்லை

 ஒவ்வொரு இயக்கத்துக்கும் ஒரு அரசு அனுமதி எண் வேண்டும் அதை வருடா வருடம் ரெனியூவல் அதாவது புதுப்பிக்க வேண்டும் அந்த இயக்கத்துக்கு தலைமையகம்  தலைவர்...செயலாளர்.... மற்றும் ஒவ்வொரு பதவிக்கும் பொறுப்பாளர்கள் என்று எல்லாம் இருக்கணும் அப்போது தான் அந்த இயக்க உறுப்பினர்கள் செய்யும் தவறுகளுக்கு இழப்பீடு அல்லது விசாரணையை தலைமையிடம் கேக்க முடியும்  ஆனால்  rss ல் இது எதுவுமே இல்லை

இப்போது தான் அமெரிக்கா விழித்துக் கொண்டது
முடிவில் தெரிய வந்த உண்மை என்னன்னா

Rss ஒரு ரகசிய இயக்கம் அதுவும் பயங்கவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத இயக்கம் .. மொஸார்ட்  போல செயல்படும் ஒரு கூலிப்படை இயக்கம் என்று அம்பலப்படுத்தி இருக்கிறது....

சர்தார் பட்டேல் இதே காரணங்களுக்காக தான் rss ஐ அப்போது  நீங்கள் ரகசிய இயக்கம் உங்களை அனுமதிக்க முடியாது என்று சொல்லி தடைசெய்தார்

அது மட்டுமல்ல பெயருக்கு தான் மோகன் பாகவத் தலைவர் ஆனால் உண்மையில் அது குறிப்பட்ட நான்கு கோடீஸ்வர பிராமணன்கள் குடும்பங்கள்  நடத்தும் ஒரு கூலிப்படைபோன்ற  ஒரு குழு என்கிறது

முடிவில் அமெரிக்கா இப்படி அறிவித்து இருக்கிறது

Isisபயங்கரவாத அமைப்பை போல rss vhp  மற்றும் அதன் அனைத்து  அல்லக்கை அமைப்புகளும் ரகசிய பயங்கரவாத அமைப்புகள் எண்டது அறிவித்து இருக்கிறது

இப்போது isis பயங்கவாத இயக்கங்களில் பட்டியலில் தான் rss ... vhp ..மற்றும் அதன் கிளை அமைப்புகள் உள்ளன என்பது தான் நிதர்சனமான அதிர்ச்சியூட்டும் உண்மை

இப்போது இதன் கண்மணிகள் பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள் ...

பதில் சொல்ல விரும்புவோர் தக்க  ஆதாரங்களுடன்  நாகரிகமாக பதில் சொல்லலாம் ...

நம் பதிவுக்கான ஆதாரம் கீழே ...





படித்ததில் வெட்கி தலை குனிந்தது.....



படித்ததில் வெட்கி  தலை குனிந்தது.....

உலக மக்களே இது
எங்க ஊருல மட்டும் தான் நடக்கும் ....

சட்டப்படி மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆட்சியில் நீடித்துக்கொண்டே இருக்கிறது ஒரு கட்சி. அந்த அசிங்கத்துப் பெயர்

                    "மாநில அரசு"

இந்த அநீதியைத் தெரிந்தே அனுமதித்துக்கொண்டு, வழக்கைத் தள்ளிப்போட்டபடியே, இந்த அரசைக் காக்கும் இடத்திற்குப் பெயர்        

                     "நீதிமன்றம்"

பெரிய மனிதர்களுக்குப் பாலியல் விருந்தளிக்க, அதற்கு மாணவிகளைப் பயன்படுத்த 'ஆள் பிடிக்கிறார்' ஒரு பெண். அந்த பாலியல் புரோக்கருக்கு பெயர்

"பேராசிரியர்"

அப்படி 'ஆள் பிடித்த வழக்கில்' தனது பெயர் சம்பந்தப்பட்டது தெரிந்தவுடனே தானே ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, அதன் அறிக்கையைத் தானே வாங்கி வைத்துக் கொள்கிறார் ஒருவர்

பேட்டியெடுக்க வந்த பெண் நிருபரின் கன்னத்தைத் தடவுகிறார் அந்தப் பெரிய மனுசனுக்கு பெயர்

                      ஆளுனர்"

மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் இந்த மாநிலத்தின் குழந்தைகளுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் கொடுக்கப்படுகிறது.

அலைச்சலில் சாகிறார் தந்தை ஒருவர். குக்கிராமத்தில் படிக்கும் குழந்தைக்கும், தலைநகரில் படிக்கும் குழந்தைக்கும் ஒரேவிதமான தேர்வு நடத்தப்பட்டு அவர்களது கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. அதற்குப் பெயர்

               "தகுதித் தேர்வு"

பெண் பத்திரிக்கையாளர்கள் மற்றும் உயர் பொறுப்புக்களைப் பெறும் பெண்கள் பெரிய  மனிதர்களுடன்  படுக்கையில்  படுத்து தான்  அந்த  வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்கிறான் ஒருத்தன்  அந்த காமுகனுக்கு  பெயர்

             "கட்சிப் பிரமுகர்"

அவனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்திலிருக்கும் முக்கியமான ஒருவரோடு ஒரு நிகழ்வில் கலந்துகொள்கிறார் அந்த நபர். "அவனைப் பிடித்துத் தருவது என் வேலை அல்ல" என்கிறார் அந்த முக்கியமான மனிதன் அவருக்குப் பெயர்

              "மத்திய அமைச்சர்"

கைது செய்யப்பட வேண்டியவரின் வீட்டுக்கே காவல்துறை பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காரணம் செல்வாக்கு  மிக்க அவரது உறவினர். அவருக்குப் பெயர்

            "தலைமைச் செயலாளர்"

மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் போதைப்பொருளான குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் இருவர். ஒருவருக்குப் பெயர்

             "சுகாதாரத்துறை அமைச்சர்".

தீவிரவாதிகளுக்கு எதிரான 'துல்லியத் தாக்குதல்' போல குறிவைத்துச் சுட்டபிறகு, காயம்பட்டவர்களை மருத்துவமனைகளிலும் சென்று அடித்து நொறுக்குகிறது சீருடை அணியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம். அதற்குப் பெயர்

                  "காவல்துறை"

விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, மக்களுக்குப் போக்குக் காட்டியபடியே, பின் வேறு வழியில்லாமல் செய்தியின் தீவிரத்தைக் குறைத்து வெளியே பரப்புகின்றன சில நிறுவனங்கள். விவாதங்களின் மூலம் அரசுத் தரப்பை நியாயப் படுத்தும் வேலையைத் தெளிவாகச் செய்யவும் தெரியும் அந்த  அடிமைகளுக்கு  பெயர்

                     "ஊடகங்கள்"

தனது மாநிலத்தின் மக்கள் சுடப்பட்டுச் சாகும்போது "துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது" என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர்

              "மாநில அமைச்சர்"

"இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டுச் செத்தவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் பிச்சையிடுகிறார் ஒருவர். அவருக்குப் பெயர்

                   "முதலமைச்சர்"

நேற்றுவரை அரிதாரம் பூசிட்டு எழுதிக் கொடுத்ததை கேமரா முன் வீர வசனம் பேசி நடித்த ஒருவன் கிட்னி நுரையீரல் எல்லாம் கெட்டுப் போன பிறகு இனி நடிப்புக்கு இந்த உடல் உதவாது ன்னு உறுதியா தெருஞ்சதுக்கு பிறகு மக்கள் மேல திடீர் பாசம் வந்து அவர்களைப்பார்த்துட்டு இவர்கள் சமூக விரோதிகள் ங்கறான் ஒருத்தன் அவனுக்கு பேரு

               வருங்காலமுதலமைச்சர்

இவையெல்லாவற்றுக்கும்,  விட்டுக்கொடுக்காமல் முட்டுக் கொடுக்கும் அற்பப் பதர்களுக்குப் பெயர் " தேச பக்தர்கள்"

இதையெல்லாம் மனசாட்சியில்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பிற்குப் பெயர் "தேசம்"

ஆனால், தங்களது வாழ்வாதாரத்திற்கும், தங்களது ஊரின் சுற்றுப்புறச் சூழலுக்கும், தங்கள் குடும்பத்தினரின் உடல்நிலைக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களுக்கும், இவ்வளவு ஏன், வாய்வழியே சுடப்பட்டுச் செத்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்குமான பெயர் மட்டும் சமூக விரோதிகள் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள்

வாழ்க பாரதம் ....
பாரத் ஆத்தாக்கி செய் செய்... WhatsApp ல் வந்தது.

வெள்ளி, 15 ஜூன், 2018

4 வருடத்தில் 19 தடவை மட்டுமே நாடாளுமன்றம் பேசிய மோடி.. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு


4 வருடத்தில் 19 தடவை மட்டுமே நாடாளுமன்றம் பேசிய மோடி.. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு

பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 தடவை மட்டுமே பேசியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் பொதுநல வழக்கு  தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்படும். பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். அதிலும் வருடத்திற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை.

நாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசவில்லை.

இந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும்


இந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் 

முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள்

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும்

இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே,  வாதம் புரியாமல்,  ஏற்கிறேன் இந்தக் கருத்தை முன் மொழிந்தவர்களுக்கு தலையும் வணங்குகிறேன்,

ஆனால்? ???
ஆனால்???

எனக்கு ஒரு ஐயமும் உள்ளது அதற்கு உங்களிடம் தான் தீர்வும் உள்ளது என்பதை நான் அறிவேன் அதற்காகத்தான் இதைப் பதிவிடுகிறேன்

2012 க்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களே இன்று இளைஞர்கள்கள் அதிலும்20 ஆயிரம் பேர்தான் உள்ளோம் இதில் பெண்களில் பாதிப்பேர் ஏற்கனவே திருமணமானவர்கள் அப்படி இருக்கையில் 20 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர் என்றே வைத்துக் கொள்வோம் 

இதற்கு முன் உள்ள ஆசிரியர்களின் குழந்தைகள் பள்ளிப்படிப்பை கடந்துவிட்டார்கள் என்பதால் அவர்களை இணைக்கவில்லை

20 ஆயிரம் குழந்தைகளும் சேரவேண்டும் சேர்க்கவேண்டும் இதில் பல ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளனர் அதையும் நாம் உணரவேண்டும்

இங்குதான் எனக்கு சில ஐயம் எழுகிறது?

இவர்கள் அனைவரும் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் என்ன மாற்றம் வரும்?

நீங்கள் ஒன்றை உணர வேண்டும் அரசுப்பள்ளி கட்டிடங்களும், ஆசிரியர்களும் தரமாக உள்ளனர் அப்படி இருந்தும் ஏன் அரசுப்பள்ளியில் சேர்க்கை இல்லை??

ஏனெனில் சில ஆயிரங்களில் சம்பாதிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அனைத்து திறமைகளையும் கற்றுத்தரும் பள்ளியையே தேர்வு செய்கிறார்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா?

தனியார் பள்ளியில் என்னென்ன வசதிகள் உண்டு அதை நடத்துபவர்கள் யார்? பட்டியலிடுவோமா?

தனியார்பள்ளி

1.பேருந்துவசதி
2.நடனம், நாட்டிய பயிற்சி,
3.இசைப்பயிற்சி
4.கராத்தே
5.ஹிந்தி
6. சிலம்பப் பயிற்சி
7. தரமான விளையாட்டுப் பயிற்சி அதற்கென ஒதுக்கப்பட்ட மைதானங்கள்
8. Ncc. Nss. போன்ற திட்டம் அதற்கென பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட பல ஆசிரியர்கள் உண்டு

9.பணம்கட்டி படிக்க டியூசன்கள் உண்டு 

10. நாளுக்கேற்ற ஆடை, டை, சூட் கோட் 

11. முக்கியமா பாதுகாப்பு கேட்டை விட்டு வெளியவரமுடியாத பாதுகாப்பு

12. ஸ்மார்ட் கிளாஸ் 

இதெல்லாம்தான் பெற்றோர்களை தனியார்பள்ளியை நோக்கி ஈர்க்கிறது

என்பதை உணரவேண்டும்

பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் மீது சற்று அக்கறை அதிகம் பள்ளியில் நடக்கும் மீட்டிங் எல்லாம் வருகிறார்கள் ஆசிரியர்களை கண்டிக்கச் சொல்கிறார்கள்,  ஆனால் அரசுப்பள்ளியில் ??

அரசுப்பள்ளியில்
1.கட்டிடம் உண்டு
2. ஆசிரியர் உண்டு 
3. கழிவறை வசதிகள் சில இடங்களில் உண்டு பல இடங்களில் இல்லை

4. பேருந்துவசதி இல்லை பஸ்பாஸ்உண்டு

5. கராத்தே,  சிறப்பான உடற்கல்வி பயிற்சி, ஹிந்தி,ஸ்மார்ட் கிளாஸ்
ம் இதுல எதுவும் இல்லை

பள்ளிக்கு வாடா னு சொல்லிக் கேட்டாலும் வரமாட்டான் பிள்ளையை கையை பிடித்து இழுத்தாலும் ஏன்டானு கேட்க கூடாது பெத்தவனும் பள்ளிக்கு வரமாட்டான்,  படிக்கலனா திட்டவும் கூடாது,  திட்டினால் ஆசிரியருக்கு சிறைதான் 

இப்படியான சூழலில் இருக்கும் அரசுப்பள்ளியில்

ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்தால் தான் பள்ளி சிறப்பாக இருக்கும் என்று கூறுவது சரியா ?

அரசுப்பள்ளிகளின் தரம் உயர்தல் என்பது ஆசிரியர்களின் பிள்ளைகளை சேர்த்தால் மட்டும் வந்துவிடுமா??

இப்படி ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம்  தருகிறோம் தங்கள் பிள்ளைகளை சேர்க்க மறுக்கிறார்கள் என்று ஆசிரியர்களை சமூகபார்வைக்குள் சிக்கவைத்தவர்கள் யார்?  

அரசு ஏன் 25% ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் அதாவது இந்த ஆண்டுமட்டும் 4 லட்சத்திற்கு மேல் மாணவர்களை தனியார்பள்ளிக்கு பணம் கட்டி படிக்கவைக்க அனுப்பவேண்டும் வேண்டும் 

அட ஆண்டுக்கு 4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளிக்கு அரசு அனுப்புகிறதே அவர்கள்தான் ஏழை என்றால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார்? பணக்காரர்களா??

20 ஆயிரம் ஆசிரியர்கள் 20 ஆயிரம் குழந்தைகளை ஒருமுறைதான் பள்ளியில் சேர்க்கமுடியும் ஆண்டுக்கு 20 ஆயிரம் குழந்தைகளையா அவர்கள் பெற்று அரசுப்பள்ளிக்கு அனுப்பமுடியும்???

ஆண்டுக்கு 4லட்சம் மாணவர்களை 25% இட ஒதுக்கீட்டில் அனுப்புவதை ஆசிரியர்களும், சங்கங்களும் எதிர்த்தோம் அதை மறைக்க எங்கள் மீது இப்படி ஒரு பழியை அரசு சுமத்துகிறது,  இதை ஏன் நீங்கள் கேட்கவில்லை?

ஆண்டுக்கு 4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளியில் அரசு சேர்ப்பதற்கு என்ன காரணம்?  

காரணம் அரசியல்வாதிகளே, அவர்களின் உறவினர்களே, அதிகமாக தனியார்பள்ளியை நடத்துகிறார்கள்,

அவர்களின் பள்ளியை காக்கவும் அவர்கள் சம்பாதிக்கவும் அரசுப்பள்ளியையும் ஆசிரியர்களையும் பலியாக்குவது சரியா?

அரசு நினைத்தால் எதையும் செய்யலாமே ஏன் உத்தரவை பிறப்பிக்க முடியவில்லை அரசு வேலை வேண்டும் எனில் அத்துணை அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளியில் தான் தங்கள் பிள்ளைகளை சேர்க்கவேண்டும் என்று ஏன் உத்தரவு பிறப்பிக்கவில்லை

இதைக்கேட்க எவருக்கும் துப்பில்லை ஆனால் எங்களை கேள்வி கேட்கமட்டும் ஓடிவருவீர்களே 

அத்துணை அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளியில் சேர்க்கும் போது தானாகவே அரசுப்பள்ளியின் தரம் உயரும்,

கலெக்டர் பிள்ளையும், கூலிவேலை செய்பவரின் பிள்ளையும் ஒன்றாக அரசுப்பள்ளியில் பயில்வார்கள்,

அத்துணை அதிகாரிகளின் பிள்ளைகளும் அரசுப்பள்ளியில் படிக்கும் போது சத்துணவு சத்தான உணவாகும்,

கட்டிடங்களும் கழிவறைகளும் ஸ்மார்ட் கிளாஸ்களும் தானாகவே வந்துவிடும்,

தனியார்பள்ளியில் பணம்கட்டி படிக்கவைத்தவர்கள் எல்லாம் அரசுப்பள்ளிக்கு வந்துவிட்டால்  ,கௌரவத்திற்காக சேர்த்தவர்களும் வந்துவிடுவார்கள், 

இப்போது தனியார்பள்ளிகளின் நிலைமை தற்போது இருக்கும் அரசுப்பள்ளிகளைப் போல் ஆட்கள் இல்லாமல் போவர்,

இதனால் தான் அரசால் இப்படி ஒரு சட்டம் இயற்றமுடியவில்லை 

இயற்றினால் தங்கள் பள்ளிக்கு வருமானம் வராதே,  அட ஆசிரியர்களையாவது கட்டாயம் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடுவார்களா?  முடியாது?  4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளிக்கு விற்பதையாவது நிறுத்துவார்களா? இதுவும் முடியாது?  

இதையெல்லாம் நீங்கள் கேட்கமாட்டீர்கள் ஏனெனில் லஞ்சம் வாங்குபவர்களோடு வெறும் சம்பளம் மட்டுமே வாங்கும் எங்களை மட்டும்தானே குறைகூற அரசியல்வாதிகள் பழக்கி இருக்கிறார்கள் 

அரசுவேலையில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் எந்த ஆசிரியர் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்கள் உங்களால் பட்டியல் தரமுடியுமா??

வீடு வாங்கியிருப்பார், தன்பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தந்திருப்பார் மீறினால் 1 ஏக்கர் நிலம் வைத்திருப்பார் இதைத்தவிர ஆசிரியரிடம் நீங்கள் பார்த்த வசதி என்ன? 

பட்டியலிடுங்கள் பார்க்கலாம்

ஆசிரியரை அடக்குவது கல்வியை தனியார்பள்ளிக்கு தாரைவார்ப்பதற்கே எதிர்காலத்தில் ஏழை மாணவர்களுக்கு என்று கல்வி கற்க இடமில்லாமல் போகும் அதை முதலில் உணருங்கள்

நாங்களும் தேர்வெழுதியே வந்தோம், அரசுப்பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் உங்களை அரசின் வேறு பணிக்கு மாற்றுகிறோம் என்று அரசு சொன்னால் நானே முதல் ஆளாக ஆசிரியப்பதவியை ராஜினாமா செய்து அரசுப்பணிக்கு செல்வேன் ஆசிரியர்களுக்கு எதிராக பேசுபவர்களே எங்கள் அத்துணைபேரையும் வேறு அரசுப்பணிக்கு மாற்றச்சொல்லுங்கள் 

அரசுப்பள்ளியை தனியாருக்கு விற்றுவிடச் சொல்லுங்கள் அப்போதுதான் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் பணம் கட்டி தனியார்பள்ளியில் தரமான கல்வியை பெற முடியும்,

ஏனெனில் நாங்கள்தானே உங்களுக்கு இடைஞ்சல் அரசும் அப்படித்தானே எங்களை உங்களுக்கு காண்பிக்கிறது,

தயவு செய்து எங்களை அரசு அலுவலகத்திற்கு பணிமாற்றச் சொல்லுங்கள் எங்களுக்கு பள்ளியில் வேலை செய்வதைவிட அரசு அலுவலகத்தில் வேலை செய்வதே எளிமை,  

நான் ஒரு ஆசிரியன் என்று மாணவர்கள் மத்தியில் பெருமையும் மக்களாகிய உங்களுக்கு மத்தியில் வெட்கமும் கொள்கிறேன்