4 வருடத்தில் 19 தடவை மட்டுமே நாடாளுமன்றம் பேசிய மோடி.. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு
பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 தடவை மட்டுமே பேசியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்படும். பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். அதிலும் வருடத்திற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை.
நாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக