புதன், 27 ஜூன், 2018

புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் மதிப்பீடு..


புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி  இயக்குநர்  கே.பாக்யராஜ் அவர்களின் மதிப்பீடு..
***********************************

*பாக்யராஜ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி*:

*உங்கள் மனம் கவர்ந்த மற்றொரு மகாத்மா யார்*?

*அவரது பதில்*:

*ஒரு மாட்டு வண்டிக்காரன் ஒரு சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான். அவன் பேச்சோட வட்டார வழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் என்று தெரிஞ்சதும் மாட்டை கழட்டி விட்டு, வண்டியை குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்*.

*தாகத்துக்கு அந்த சிறுவன் தண்ணீர் கேட்கிறான்*. *அதோ அதுதான் உனக்கான தண்ணீர் என்று சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரை காட்டினாங்க*,
*உயர்சாதிக்காரர்கள்*.

*அவன் மட்டுமல்ல, அவன் எழுதிய தாளும் தீண்டத்தகாதது என்று  நோட்டுப் புத்தகத்தை திருத்த மறுக்கிறார் ஆசிரியர்*.

*முடி வெட்டி முடிந்தபின் அவன் தீண்டத்தகாதவன் என்று தெரிந்து கொண்ட ஒரு சவரத்தொழிலாளி கத்தியை எங்கே கழுவுவேன் என்று கத்துகிறான்*.
*அன்று முதல் தன் சகோதரியிடம் முடிவெட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்கிறான்*.

*வடமொழியைப் பாடமாய் எடுத்து படிக்க விரும்பினப்போ, இந்து தர்மம், கல்விச்சட்டம் இரண்டுமே இடம் தரவில்லை அவனுக்கு*.

*பதினாறு வயதில் அவனுக்கு திருமணம் நடக்குது*.
*தீண்டத்தகாதவர்கள் பகலில் திருமணம் புரியக் கூடாதுன்னு, ஒரு விதிக்குட்பட்டு ஒரு மீன் அங்காடியில் சாக்கடை மூடிய கற்பலகையே மேடையாய், இரவில் நடக்குது அந்த ஏழையின் திருமணம்*.

 *இத்தனை அவமானத்தையும் தன் கொள்கைக்கு உரமாயிட்டு வளர்ந்த கோபுரத் தலைவர் தான், இந்திய அரசியலமைப்பை வடிவமைத்திருக்கிறார்*.
*இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், சுதந்திர இந்தியாவில் இந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இரண்டு யுத்தங்கள் நிகழ்த்தியிருக்கிறார்*.
*பட்டொளி வீசி பாரதத்தின் அடையாளமாய் விளங்கும் தேசியக்கொடியை வடிவமைத்திருக்கிறார்*.

*சேறும், சகதியும் சுவரை அழுக்காக்கலாம்; சூரியனை அழுக்காக்குமா*?
*அழுக்குப்படுத்த முடியாத அறிவுச் சூரியன்*
*அண்ணல் அம்பேத்கர் அவர்கள்*.
*அவரே எனக்கு பிடித்த மகாத்மா*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக