செவ்வாய், 31 மார்ச், 2020

நமக்குரிய வலியை விட....

நமக்குரிய வலியை விட....

உலகையே தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டிருப்பதாக பெருமைப் பட்ட மனித குலத்திற்கு இது சோதனைக் காலம் என்றே சொல்ல வேண்டும்...

மனிதனின் கண்டு பிடிப்புகளே.. அதிகார பசியே.. வர்த்தக நோக்கமே... இன்று மனித குலத்தை சிதறடித்துக் கொண்டிருக்கிறது...

கொரோவை உலகிற்கு பரப்பியுள்ள சீனா, அதற்காக துளியேனும் வருத்தப் பட்டதாக தெரியவில்லை..

வல்லரசு நாடாகுகளாக தம்மை உருவாக்கிக் கொண்டிருந்த நாடுகளின் நிலை.. கொரோனாவால் அங்கெல்லாம் உருவாகியுள்ள மாற்றம்.. பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டுக் கொண்டுள்ளது...

இந்த நிலையில்... கொரோனாவால் நமது நாடும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது...

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்படியொரு சூழ்நிலையை.. ஊரடங்கு நிலையை... அளவற்ற பயத்தை நான் கண்டதில்லை...

ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க... தன் நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை நிச்சயமாக நாம் பாராட்டியே ஆக வேண்டும்...

எதிர்க் கட்சியினரே பாராட்டும் வகையில்... ஆட்சியினரை எதிர்த்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் கூட வாயைத் திறக்க முடியாத அளவிற்கு மக்களை பாதுகாக்கும் பணியில் இன்றைய மத்திய மாநில அரசுகள் மிகச் சிறப்பாகவே செயல் பட்டு வருகின்றன...

நடைபெற்று வருவது கொரோனாவிற்கு எதிரானப் போர்... கொரோனாவிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்டு வரும் பணி....

ஆனால்......

நமது நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை....

நூறு சதவிகிதத்தில் இரண்டு சதவிகிதம் உள்ள அரசு பணியாளர்களுக்கு பொருளாதார சங்கடம் என்பது எப்போதும் இல்லை...

நாட்டு மக்களில்
நூற்றுக் கணக்கில்... ஆயிரக் கணக்கில் உள்ள தொழிலதிபர்களுக்கு எந்த விதமான பொருளாதார சங்கடமும் இல்லை..

ஒரு சில குடும்பத்தினருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் மேலாகவே சொத்துகள் உள்ளது, இவர்களுக்கும் பொருளாதார சங்கடம் இல்லை..

சிறு முதலாளிகள், வியாபாரிகள் போன்றவர்களுக்கும் பொருளாதார சங்கடம் இல்லை.

ஐ.டி.நிறுவனப் பணியாளர்களுக்கும் பொருளாதார சங்கடம் இல்லை...

ஆனால்.... லாரி, பஸ், ஆட்டோ,டாக்சி ஓட்டுநர்களின் நிலை... கட்டிடத் தொழிலாளிகள், கூலித்தொழிலாளிகள் நிலை... விவசாயக் கூலிகளின் நிலை... ஓட்டல் பணியாளர்கள், நெசவாளிகள் நிலை... இப்படி நாம் பலரின் நிலையை சொல்ல முடியும்...

இத்தகைய கூலிகள் நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் உள்ளனர்...
இவர்களுடைய வீட்டில் அடுப்பெரிய வேண்டுமெனில் இவர்கள் எல்லாம் நாள்தோறும் உழைக்க வேண்டும்... உழைக்க முடியாமல் போனால்......

இவர்களிடம் இருப்பு என்று சொல்லிக் கொள்ளவும் ஏதும் இருக்காது...

அன்றன்று உழைத்தால் மட்டுமே...அன்றன்றைய பொழுதுகள் போகும் என்பதே இவர்களின் நிலை.

இந்த நிலையில்தான் கொரோனா... அதனில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள 21 நாட்கள் ஊரடங்கு.....

எந்த வேலையும் இல்லை... வருமானத்திற்கு எந்தவொரு வழியும் இல்லை... பெரும்பாலானோருக்கு, கையிருப்பு என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை.. சிறுக சிறுக சேர்த்து வாங்கி வைத்திருக்கும் பொருட்களை விற்கவோ, அடகு வைக்கவோ கூட வழியில்லை...

இவர்களின் நிலை...
நாட்டில், அரிசி பருப்பு காய்கறி எல்லாமே கிடைக்கிறது... ஆனால், அதை இவர்களால் வாங்க முடியாது.

இந்த நேரத்தில் அரசு மட்டுமல்ல... வசதி படைத்தவர்வளும் இவர்களுக்கு உதவிட முன் வர வேண்டும்... பணமாக என்றல்ல உணவுப்பொருட்களாகவும் வழங்கி இவர்களை எல்லாம் பாதுகாத்திட
வேண்டும்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் பெருமகன் வாழ்ந்த பூமியிது.

நமக்குள்ளும் அந்த மனம் வேண்டும்... கருணையும் இரக்கமும் வேண்டும்.

கொரோனா கற்றுத் தந்துள்ள பாடம்...  கோடிக்கோடியாய் சேர்த்து வைத்திருப்பவர்களின் மனதை இனியாவது மாற்ற வேண்டும்...

இப்போது... முடிந்தவரை இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் உதவிட வேண்டும்... வறுமையில் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்திட வேண்டும்...

நமக்குரிய வலியை விட நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வலியே நமக்கு பெரிதாக இருந்திட வேண்டும்...


ஞாயிறு, 29 மார்ச், 2020

இதுவும் கடந்து போகும்!


போர்காலங்களில் முதலில் சாவது உண்மை  என்பார்கள், ஆம் அவ்வளவு வதந்திகள் கொடிகட்டி பறக்கும்

கொரோனாவிலும் அப்படி பரவ ஆரம்பித்தாயிற்று, பெரும் அச்சமும் அவநம்பிக்கையும் தமிழகத்தில் சூழ்ந்திருக்கின்றது

முதலில் ஒரு உண்மையினை தெரிந்து கொள்ள வேண்டும், நடப்பது முன் எச்சரிக்கையான விஷயம் மட்டுமே, மாறாக கொரொனா எல்லோரின் கழுத்தையும் நெறித்துகொண்டிருக்கின்றது என்பதல்ல‌

கொரோனாவுக்கு மருந்து இல்லை என்பது உண்மை சந்தேகமில்லை, ஆனால் டெங்கி போன்ற ஏராளாமான நோய்களுக்கும் மருந்தே இல்லை, எல்லாமே ஆரம்பகட்டத்தில் வந்தால் குணப்படுத்திவிடலாம்

டெங்கிங்கு அஞ்சா சமூகம் கொரோனாவுக்கு அலறுகின்றது என்றால் அது இது ஒருவித அச்சம் அன்றி வேறல்ல‌

கொரோனா தொற்றுநோய் , மருந்ந்தில்லை. ஒருவரிடம் இருந்து எளிதில் தொற்றும் ஆனால் 20லட்சம் பேர் பாதிக்கபட்டால் சாவு 10 ஆயிரம் வருகின்றது

இந்தியாவில் ஆயிரகணக்கானொர் பாதிக்கபட்டால் சாவு ஒரு இலக்கத்தில்தான் இருக்கின்றது

அதாவது கொரோனா மிகபெரும் ஆட்கொல்லி நோய் அல்ல, ஆனால் ஏற்கனவே நோயுற்றவர்களை பலகீனமாக இருப்பவர்களை கொல்கின்றது

ஆக ஏற்கனவே நோயோடு போராடுபவர்களை கொல்கின்றதே அன்றி நல்ல நிலையில் இருப்பவர்களிடமிருந்து பின் வாங்குகின்றது, அவர்கள் குணமடைகின்றார்கள்

சிகரெட் குடிப்பவன் நுரையீரல் கெட்டு இருக்கும், குடிப்பவன் ஈரல் பாதிப்படைந்திருக்கும் அதை கொல்வது கொரானாவுக்கு எளிது, ஐரோப்பிய கோஷ்டி அடிவாங்குவது இப்படித்தான்

குடியும் புகையுமாக இருந்த கோஷ்டி அடிபடுகின்றது, சீனாவில் நிலமை வேறு உணவும் இன்னும் பல காரணங்கள்

இந்தியா அப்படி அல்ல, இதனால்தால் பல்லாயிரம் பேர் பாதிக்கபட்டாலும் ஏராளமானோர் சட்டென இயல்பு நிலைக்கு திரும்புகின்றார்கள்

கவனியுங்கள் மருத்துவமனையில் இருப்பவன் எல்லாம் கொரோனா நோயாளி அல்ல, அல்லவே அல்ல. இருமலும் காய்ச்சலும் இருந்தால் அனுமதிக்கபட்டு சோதிக்கபடுவர், அதுதான் நடக்கின்றது

பொதுவாக வெளிநாட்டுக்கு செல்வோர் அங்கிருந்து திரும்புவோருக்கு சில சூழல் நீர் மற்றும் இதர காரணமாக ஒரு சளி இருமல் காய்ச்சல் வரும், இது இயல்பு

90% பேர் இதற்கு தப்பமுடியாது, சட்டென மாறும் சூழல், நீர், உணவு, சீதோஷ்ண நிலைக்கு அந்த மாற்றம் உடலில் வரும், ஆம் உடல் அந்த சூழலுக்கு தன்னை மாற்றும் நேரம் வரும்

இது இதுகாலமும் வந்த சாதாரண விடயமே

இப்பொழுது கொரோனா சீசன் என்பதால் சோதனை நடக்கின்றதே அன்றி நிலமை மகா சீரியஸ் என்பதெல்லாம் அபத்தம்

ஒரு கொலை நடந்தால் போலீஸ் 100 பேரை சந்தேகபடும் , அதுபோல இருமல் சளி இருந்தால் சந்தேகம் கொண்டு சோதிக்கின்றார்கள்

சரி இதெல்லாம் எளிது என்றால் அரசு ஏன் இவ்வளவு மெனக்கெடுகின்றது என கேட்கலாம் விஷயம் எளிது

இது வாரி சுருட்டும் நோய் இல்லை என்றாலும் பலவீனமானர்களுக்கு ஆபத்தாகும் இன்னொன்று பெரும் எண்ணிக்கை மக்கள் பாதிக்கபட்டால் சிகிச்சைக்கு தட்டுப்பாடாகும், குணமாக்கலாம் ஆனால் எண்ணிக்கை பெருகினால் ஆபத்து மருத்துவர் உட்பட தட்டுப்பாடு

அரசு நடவடிக்கை எடுத்து தடுக்காவிட்டால் மேற்கத்திய நாடுகள் மீண்டபின் இங்கு முதலீடும் தொழிலும் பாதிக்கபடும் இன்னும் ஏக சிக்கல் வரும்

இதனால் அரசும் மின்னல் வேக நடவடிக்கை எடுக்கின்றது

இதனால் வீண் பயத்தையும் அச்சத்தையும் போக்குங்கள், வெளிநாட்டில் இருந்து வரும்பொழுது விமானம் ஒரு எந்திரமே

ஒரு நட்டு கழன்றாலும் முடிந்தது விஷயம், ஆனால் அச்சமின்றி வந்து சேருகின்றார்கள் எப்படி?

நம்பிக்கை, ஒரு எந்திரம்  மேல் வைக்கும் நம்பிக்கையினை கடவுள் மேலும் உங்கள் மேலும் வையுங்கள்

பூமி, இது வாடகை வீடு , உடல் என்பதும் வாடகைக்கு ஆன்மா தங்கும் கூடு

நேரம் முடிந்தால் எல்லோரும் கிளம்பவேண்டியதுதான், ஒவ்வொருவரும் என்ன நோக்கத்திற்காக வந்தோமோ அது முடிந்தால் ஒரு நொடி கூட தங்கமுடியாது

உலகில் ஒவ்வொருவனையும் கவனிக்கின்றேன், கடந்தவாரம் அவன் மனநிலை எப்படி இருந்தது?

பில்லியன் டாலர் ஒப்பந்தம், வருமானம், உலக சுற்று பயணம், திருமணம், வீடு வாங்கல் விற்றல், வியாபாரம், ஆட்சி, ராணுவம், எண்ணெய், போர், எதிர்கட்சி அது இது என ஒவ்வொருவனும் ஓராயிரம் ஆண்டுக்கு திட்டம் வைத்திருந்தான்

எல்லாம் அப்படியே நொறுக்கபட்டு எல்லா பயலும் அடங்கி ஒடுங்கி அமர்ந்திருக்கின்றான்

நாளை என்பதை கணிப்பவன் எவன்?

இந்த வருடம் இத்தனை பில்லியன் டாலர், இந்த தொழில் ,இவ்வளவு வருமானம் என திட்டமிட்ட பெரு மூளைகள் எல்லாம் ஒடுங்கி அடங்கி கட்டிலில் மல்லாக்க கிடக்கின்றன‌

நான் பெண்டகன் ராணுவதளபதி நான் நினைத்தால் உலகை அழிப்பேன் ஏ கொரான்வே என்னிடம் வராதே என அவனுக்கு சொல்லமுடியவில்லை அழுகின்றான்

ஐரோப்பாவின் சகல கட்டுப்பாடும் என்னது என சொல்பவனும் கொரோனா முன் மண்டியிடுகின்றான்.

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் கொரனாவினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளார்.

பணமோ, ராணுவமோ, விஞ்ஞான மருத்துவமோ எல்லாம் உயிரை காப்பாற்றாது என்பது ஒவ்வொருவனுக்கும் தெரிகின்றது

ஆயுதம், பணம், அதிகாரம், செல்வாக்கு எல்லாமே கொரோனா முன் தூசாக சரிந்து கிடக்கின்றன‌

கடந்த வாரம் வரை பல்லாயிரம் கனவோடும் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும் திட்டமிட்டு  இருந்தவன் , நொடிந்து ஒடிந்து அடங்கி கிடக்கின்றான், எல்லாம் மாயை என்பது புரிகின்றது

ஆம் கடந்த காலத்துக்கு நாம் செல்லமுடியாது, நாளை அல்ல அடுத்த நொடி நமக்கு தெரியாது

வாழும் காலத்தில் வாழ்வதே வாழ்வுக்கான வழி, அதுவன்றி வேறல்ல‌

வீணான பயத்தில் அஞ்சி சாகாதீர்கள், குழந்தைகளை பயமுறுத்தி பெரியோர்களையும் முதியோர்களையும் அச்சுறுத்தி ஒருவித யுத்த சூழலில் வாழாதீர்கள்

அண்டை வீட்டில் நல்ல பாம்பு இருப்பது போல் யாரையும் அச்சத்தோடு நோக்காதீர்கள்

சக மனிதன் மேல் நம்பிக்கை வேண்டும், உங்களுக்கு நாங்கள், எங்களுக்கு நீங்கள் என உற்சாகமும் நம்பிக்கையும் கொடுக்க வேண்டும்

என் சொத்து, என் குடும்பம், என் ஆயுள் , என் வாழ்வு என பதைபதைப்பில் இருப்பீர்களானால் உங்களுக்கும் நிம்மதிக்கும் வெகுதூரம், அதுதான் சாத்தான் அதுதான் பேய் மனம்

நல்ல மனம் நெருப்பிலும் குளிராய் இருக்கும், தீரா ஆசைகொண்ட பேய் மனம் குளிரிலும் நெருப்பாய் எரியும்

சில நூறு வருடங்கள் வாழும் மரத்துக்கு இருக்கும் ஆயுள், சில ஆமைகளுக்கு இருக்கும் ஆயுள் கூட மனிதனுக்கு இல்லை என்பதை உணருங்கள்.

பெரிய ஞானிகளும் சித்தர்களுமே வாழ்ந்து சென்றுவிட்ட உலகில் நீங்களும் நானும் தப்பிவிட முடியாது..

இது அவன் படைத்த உலகம், உடல் அவன் கொடுத்த கூடு, இங்கு அவன் ஆடுவதே ஆட்டம், அவன் இடுவதே கட்டளை, அதை மாற்றும் சக்தி எவனுக்கு உண்டு?

அதனால் அடுத்த நொடியினை இறைவனிடம் கொடுத்துவிட்டு அமைதியாய் இருங்கள், அது ஒன்றுதான் நிம்மதிக்கான வழி

அச்சமே முதல் உயிர்கொல்லி, பாம்பு கடித்து சாகுபவை விட பாம்பு பற்றிய பயத்தில் சாவோர் அதிகம் என்பார்கள், எல்லாமே அச்சம், அச்சம் அவ்வளவு கொடுமையானது

நம்பிக்கையோடு கொடுக்கபடும் ஒரு துளி சாதாரண தீர்த்தம் நோயினை குணமாக்க கூடியது

நம்பிக்கை அவ்வளவு வலிமையானது,

முடிந்தால் டிவி போன்ற மீடியாக்களை அணைத்துவிடுங்கள், எப்பொழுதாவது பாருங்கள் போதும். மக்களிடம் எச்சரிக்கை என்ற பெயரில் பெரும் பீதியினை அவைதான் செய்கின்றன‌

இயல்பாய் இருங்கள், இந்த உலகில் நீங்களும் ஒரு சாதாரண உயிர் என்பதை உணர்ந்து அகந்தை ஒழித்து புன்னகையாய் இருங்கள், எந்த ஆபத்தும் வராது, வந்தாலும் உடனே நீங்கிவிடும்

எச்சரிக்கை நல்லது ஆனால் அதீத எச்சரிக்கையும், நூற்றாண்டு காலம் வாழ்வோம் எனும் பெரும் எதிர்பார்ப்பும்  தேவையற்றது.

விமான பயணத்தில் விமானம் எழும்பியதும் முழு பயணத்துக்கும் பைலட்டே பொறுப்பு, கப்பல் கிளம்பியதும் கேப்டனே பொறுப்பு

அப்படி இறைவனிடம் பொறுப்பை விட்டுவிட்டு இருக்கும் நொடியினை கொண்டாடுங்கள்.

இதுவும் கடந்து போகும்!

சனி, 28 மார்ச், 2020

பதட்டம் வேண்டாம்

பதட்டம் வேண்டாம்!
*————————-*

*கொரோனாவினால் தினசரி புதிய நோயாளிகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டுள்ளன. சமூக தனிமைப்படுத்தல் மூலம் மட்டுமே பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அனைவரும் வலியுறுத்துகின்றனர்.*

*ஒரு சாமானியனின் சந்தேகம். நாம்தான் ஒருநாள் சுய ஊரடங்கு கடைப்பிடித்தோமே, நேற்றிலிருந்து 144 தடை உள்ளதே. பின்பு ஏன்  ஒருநாளில் இவ்வளவு புதிய கேஸ்கள்? 144 எல்லாம் வேஸ்ட்டா?*

*இல்லை.*

*கொரோனா வைரஸ் ஒருவர் உடம்பில் நுழைந்த உடனேயே வியாதி தோன்றுவதில்லை. சுமார் 4 முதல் 14 நாள்கள் (அதிகபட்சம் 21 நாள்கள்) வரை எந்த அறிகுறியும் இல்லாமல் உடலில் பெருகிக் கொண்டிருக்கும் ( incubation period). ஆனாலும் இந்த சமயத்தில் அவர் மற்றவருக்கு கிருமிகளை பரப்புவார். பலருக்கு வியாதி அறிகுறிகள் இல்லாமலேயே கடந்து போகவும் வாய்ப்புள்ளது. வியாதி தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் கிருமித் தொற்று உள்ள அனைவருமே கிருமியை மற்றவர்க்குப் பரப்ப முடியும்.*

*நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் புதிய நோயாளிகள் சுமார் 4-14 நாள்கள் முன்பாகவே தம் உடலுக்குள் கிருமியைப் பெற்றவர்கள். 144 தடை ஆரம்பிக்கும் நாள் வரையில் கிருமிகளைப் பெற்றவர்கள் இன்னும் சுமார் இரண்டு வாரங்கள் வரை வியாதி அறிகுறிகளைப் பெறுவார்கள். எனவே வரும் நாள்களில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். அதுவும் 144 தடை அமலாக்கத்திற்கு முதல் நாள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல ஆயிரம் பேர் சிக்கியதால் இன்னும் இரு வாரங்கள் வரை புதிய நோயாளிகள் எண்ணிக்கை நம் அமைச்சர் அவர்கள் சொன்னது போல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கலாம்*.

*தொற்றுநோயின் தாக்கம் குறைகிறது என்று எப்போது கூற முடியும்?*
*ஒரு உச்சத்துக்குப் பின் தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை எப்போது முந்தைய நாள்களைவிட படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் தொற்றுநோயின் தாக்கம் குறைகிறது என்று கூற முடியும். 144 ஊரடங்கை நாம் முழுமையாகக் கடைப்பிடித்தால் மூன்று வாரங்களுக்குள் அந்நிலையை எட்டிவிட முடியும்.*

*எனவே இன்றைய நாளைய நம்பர்களைப் பார்த்து மனம் தளர்ந்துவிடாமல் முழுமையான சமூக விலகல் மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவோம்*. *இது மூன்று வாரங்களில் முடிகின்ற பிரச்சனை அல்ல. தொடர்ச்சியான சுகாதார கட்டுப்பாடுகள் நடவடிக்கைகள் மாதக்கணக்கில் ஏன் வருடக் கணக்கில் தேவை. இழப்புகள் மிக அதிகம் என்றாலும் இதனை ஒரு சுயபரிசோதனைக் காலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.*_

*_இத்தாலி, ஸ்பெயினின் கசப்பான பாடங்களை நினைவில் கொள்வோம்._* *வெல்வோம்.* *நம்பிக்கையுடன் இருப்போம்*.

எங்கு தோன்றி எப்படி பரவியது கொரோனா தொற்று? மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?

எங்கு தோன்றி எப்படி பரவியது கொரோனா தொற்று? மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?

ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட சீனாவின்  வூஹான் நகரின் மீன் உணவு சந்தையில் 2019 டிசம்பர் மாத துவக்கத்தில் நான்கு நபர்களிடம் நுரையீரல் அழற்சி (நிமோனியா) தென்பட்டது. இதற்கான அறிகுறிகள், இருமல், நெஞ்சுவலி, காய்ச்சல், மூச்சுவிடக் கடினமாக இருத்தல் என்பவற்றை உள்ளடக்கும்.

டிசம்பர் மாத துவக்கத்தில் இறுதியில்  பேருக்கு இருந்த இந்த தொற்று பல மடங்கு பெருகியது. ஆனால், உண்மையில் பல ஆயிரம் பேருக்கு அது அந்த சமயத்திலேயே தொற்றியிருக்கும். மருத்துவர்களுக்கு இது மிக பெரிய சவாலாக இருந்திருக்கும்.

அந்த பல்லாயிரக்கணக்கானவர்களிடமிருந்தும்  குறைந்தது நான்கு அல்லது ஐந்து பேருக்கு 31 டிசம்பர் 2019க்குள் தொற்றியிருக்க கூடும். அப்போது தான் சீன அரசு உலக சுகாதார நிறுவனத்திடம் இந்த தொற்றின் தீவிரம் குறித்து கூறியது. ஆனால், இந்த தொற்றை சரி செய்ய முடியும், கட்டுப்படுத்த முடியும் என்றே கூறியுள்ளது.

அந்த நேரம் புத்தாண்டு நேரமாக அமைந்தது துரதிர்ஷ்டவசமானது. புத்தாண்டையொட்டி பல லட்சக்கணக்கானோர் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், சீனாவிற்குள்ளே பல மாகாணங்களுக்கும் பயணம் செய்தது தவிர்க்க முடியாததாகி விட்டது. பல ஆதாரபூர்வமான தரவுகளின் அடிப்படையிலும், அலைபேசி தடங்கானல்களின் உதவியோடும் வூஹான் நகரத்தை விட்டு ஜனவரி 2020 அன்று மட்டும் 1,75,000 பேர் வெளியேறியுள்ளார்கள். மூன்று வாரங்களில் (ஜனவரி 21) வூஹான் நகரத்திலிருந்து பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சம். சீன அரசு தாமதமாக, அந்த நேரத்தில் தான்  பயண தடையை  விதித்தது.

இரண்டு வாரங்களில் (பிப்ரவரி 4) சீனாவின் பல பகுதிகளில் உள்ள  பல லட்சக்கணக்கானோருக்கு இந்த தொற்று பரவிவிட்டது. சீனாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பலர் பயணமாயினர். அந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 900 பேர் அமெரிக்காவின்  நியூயார்க் நகருக்கும், 2200 பேர் ஆஸ்திரேலியாவின்  சிட்னிக்கும், 15,0000 திற்கும் மேலானோர் பாங்காக் நகருக்கும்  பயணமானதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 23 : முதன் முதலில், சீனாவை தவிர்த்து வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டது 61 வயதான தாய்லாந்தை  சேர்ந்த பெண்மணியிடம் தான். ஜப்பானின் டோக்கியோ, சிங்கப்பூர், கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் சிலரும், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஒருவரும்  இந்த தொற்றால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. பயணம் செய்தவர்களில் 85 விழுக்காடு சோதனை செய்யப்படாதவர்கள். அவர்கள் மூலம் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

ஜனவரி இறுதி : வூஹான் நகரத்தில் ஊரடங்கு அப்போது தான் அமல்படுத்தப்பட்டது. ஜனவரி 31 அன்று அமெரிக்கர்கள் அல்லாத மற்ற நாட்டவர்களுக்கு சீனாவிலிருந்து வர அனுமதியில்லை என்று அமெரிக்கா அறிவித்தது. ஆனால், அதற்குள்ளாகவே 26 நாடுகளில் 30 நகரங்களில் வூஹானிலிருந்து சென்றவர்களால் இந்த தொற்று பரவிவிட்டது. சீனாவுக்கு செல்லாதவர்களாக இருந்தாலும் தொற்று பரவி, சர்ச்சுகள் மற்றும் உணவு விடுதிகள் போன்ற பொது இடங்களுக்கு சென்றவர்களால் அதிகளவு பரவிவிட்டது.

மார்ச் 1 : ஈரான், இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த தொற்று உள்ளதாக அறியப்பட்டது. இதனிடையே சீனா பல லட்சக்கணக்கானோருக்கு பரவியிருந்த தொற்றை  பரிசோதித்து, தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டியது.

மார்ச் 11 : அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் "இந்த தொற்றை   அண்ட விடமாட்டோம்" என்று கூறினார். இந்த அதீத நம்பிக்கையின் காரணமாக சோதனை செய்யும் முயற்சி தாமதமானது. மார்ச் 20க்குள்  சியாட்டில் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இந்த தொற்று தீயாக பரவியது. இந்த பதிவை நான் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்காவில் கொரோனா தொற்று உள்ள 54,968 பேரில் 15000 பேர் நியூயார்க் பெரு நகரத்தை சார்ந்தவர்கள். அமெரிக்காவின் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 56 விழுக்காடு நபர்கள் நியூயார்க் நகரத்தை சார்ந்தவர்கள்.

பாகிஸ்தானில் இது  வரை 972 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 7 பேர் பலியாகியுள்ளனர். இன்று பகல்  நிலவரப்படி உலகில் இது வரை  4,35,374 பேருக்கு தொற்று உள்ளது. 19,618 பேர் இறந்துள்ளனர். இந்த பேராபத்தின்  பிடியில் இருந்து நாம் மீள முடியுமா? அதற்கான நடவடிக்கைகள் என்ன?

சீனாவில் தோன்றினாலும் இத்தாலியில் தான் இது வரை அதிகளவு உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் 6820, சீனாவில் 3281, ஸ்பெயினில் 3434, ஈரானில் 2077, ஃ பிரான்சில் 1100, அமெரிக்காவில் 784, இங்கிலாந்து உட்பட்ட பிரிட்டனில் 422, நெதெர்லான்ட்ஸில் 213, ஜெர்மனியில் 172, ஸ்விட்ஸர்லாந்தில் 145, தென் கொரியாவில் 126, பெல்ஜியத்தில் 178 பேர் என்று உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. உலகின் 195 நாடுகளில் கோரோனா வின் தாக்குதல் உள்ளது.

இந்தியாவில் நிலை என்ன?

இன்று (25/12/2020) பகல் நிலவரப்படி 22038 பேரின் 22,928 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 639 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் மீண்டுள்ளனர்.

இந்திய அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதா?

ஆம். உறுதியாக மேற்கொண்டது.இந்திய அரசு ஜனவரி மாதம் முதற்கொண்டே நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்தது.

17/01/2020/21/01/2020 - சீனாவிலிருந்து வரும் பயணிகளிடம்  வெப்ப ஊடுகதிர் சோதனை துவங்கியது.

 28/01/2020 : "பிரதமர், கொரோனா தொற்று குறித்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். இது குறித்து உங்கள் மாநிலங்களில் அறிகுறியிருந்தால்  உடன் தெரிவிக்கவும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தெரிவித்துள்ளேன்" : ஹர்ஷ்வர்தன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.

ஜனவரி மாதம் 30ம் தேதி கேரளாவில் தான் முதல் கொரோனா தொற்று நோயாளி கண்டறியப்பட்டார். சீனாவின் வூஹானிலிருந்து வந்த மூன்று மாணவர்களிடம் கண்டறியப்பட்டது. இதன் பிறகு, சீனாவிலிருக்கும் தொற்றில்லாத இந்தியர்களை அனுப்புமாறும் மீட்பதற்கு அனுமதி தருமாறும் சீனாவிடம் கேட்டது மத்திய அரசு. .

 பிப்ரவரி  1 : சீனாவிலிருந்து 324 இந்தியர்களை விமானத்தில் மீட்டு கொண்டு வந்தது மத்திய அரசு.

 பிப்ரவரி 2 : மீண்டும் சீனாவிலிருந்து 323 இந்தியர்களை விமானத்தில் மீட்டு கொண்டு வந்தது மத்திய அரசு.

 பிப்ரவரி 2 - மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் நடைபெற்ற அனைத்து துறை செயலாளர்கள் கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 பிப்ரவரி 3 - மத்திய அமைச்சர்களின் ஏழு பேர் அடங்கிய  உயர்நிலை குழு வடிவமைக்கப்பட்டது. 593 விமானங்களில் வந்திறங்கிய 72,553 பயணிகள் சோதிக்கப்பட்டனர்.

 பிப்ரவரி 5 : சீனாவுக்கு பயணம் செய்த இந்தியர்  அல்லாத அந்நியர்கள் அனைவரின் விசாக்களும் ரத்து என்று முடிவு செய்யப்பட்டது.

பிப்ரவரி 27 : 76 இந்தியர்கள் உட்பட 112 பேர் சீனாவிலிருந்து மீட்டு வரப்பட்டனர். மேலும் 15 டன்கள் எடையுள்ள முகமூடிகள், கையுறைகள், மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்களை சீனாவுக்கு  அளித்தது இந்தியா.

அதே நாளன்று, 119 இந்தியர்கள் உட்பட 124 பேரை ஜப்பானிலிருந்து மீட்டது மத்திய அரசு.

மார்ச் 10 : ஈரானில் தவித்து கொண்டிருந்த 58 இந்திய யாத்ரீகர்களை மீட்டு கொண்டு வந்தது மத்திய  அரசு.

மார்ச் 11 :  ஈரானில் தவித்து கொண்டிருந்த 44 இந்திய யாத்ரீகர்களை மீட்டு கொண்டு வந்தது மத்திய  அரசு.

மார்ச் 11 : இத்தாலியில் பரிதவித்து கொண்டிருந்த 74 இந்தியர்கள் உட்பட 83 பேரை மீட்டு வந்து தனிமையில் இருக்க வைத்தது அரசு.

மார்ச் 15 : இத்தாலியிலிருந்து 218 இந்தியர்கள் மீட்டு வரப்பட்டு தனிமைபடுத்தப்பட்டனர்.

மார்ச் 15 : ஈரானிலிருந்து மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அடங்கிய 234 இந்தியர்களை மீட்டு வந்து தனிமைபடுத்தி சோதனை செய்தது மத்திய அரசு.

மார்ச் 16 : ஈரானிலிருந்து 52 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை மீட்டு வந்தது மத்திய அரசு.

மார்ச் 22 : இத்தாலியிலிருந்து 263 இந்திய குடிமக்களை மீட்டு வந்தது மத்திய அரசு.

இதன் பின் அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கை செய்யப்பட்டன.மாநில அரசுகள் படிப்படியாக பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை குறைக்க நடவடிக்கை எடுத்தன. மத்திய அரசின் ஆலோசனைக்கேற்ப பல்வேறு சோதனை கூடங்களை ஏற்படுத்தி வந்தது மாநில அரசுகள்.

13 மார்ச் : பிரதமர் சார்க் நாடுகளிடம் உரையாடி 'ஒருங்கிணைந்த போராட்டத்தை கொரோனா விற்கு எதிராக செய்வோம்' என்று கூறியதை வரவேற்றது சார்க் நாடுகள். மார்ச் 15 அன்று சார்க் நாடுகளுக்காக 73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

19 மார்ச் : 22 மார்ச் அன்று ஒருநாள் மக்கள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர்.

22 மார்ச் :" கொரோனாவுக்கு எதிரான மிக நீண்ட நெடிய போராட்டத்தின் துவக்கமே இந்த ஒரு நாள் மக்கள் ஊரடங்கு" என்றார் பிரதமர்.

24 மார்ச் : இன்றிலிருந்து துவங்கி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர்.

இப்படி பல நாட்களுக்கு முன்பிருந்தே இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. கொரோனாவை  பேரிடராக அறிவித்துள்ள நிலையில், கூடுதல் சோதனை நிலையங்கள், வெப்ப ஊடுகதிர் சோதனை இயந்திரங்கள், செயற்கை சுவாச இயந்திரங்கள், மற்ற மருத்துவ உபகரணங்கள், ஆகியவற்றை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (இந்த நிதியில் 75 % மத்திய அரசுடைய பங்கு) எடுத்து கொள்ளலாம் என்று அனுமதித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் மருத்துவ செலவுகள், தேசிய சுகாதார இயக்கத்தின் நிதியிலிருந்து ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான மற்றும்  கட்டிட தொழிலாளர்களுக்கான உபரி வரியின் மூலம் வசூலிக்கப்பட்ட நிதியிலிருந்து அந்த தொழிலாளர்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. அதே போல் நேற்று பிரதமர் அவர்கள் நாட்டு மக்களிடையே பேசும்போது கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்படும் மருத்துவ கட்டமைப்புகளுக்கு ரூபாய்.15,000 கோடி செலவிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

'சமூக விலகல்' ஒன்று மட்டுமே கொரோனா என்ற தீய சக்தியிடமிருந்து  மக்களை பாதுகாக்கும் என்பதை நன்கு அறிந்தே, பிரதமர் 21 நாட்களுக்கு ஊரடங்கை அறிவித்துள்ளார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடையே இது விரைவில் தொற்றும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். குறித்த நேரத்தில் நாம் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல முடிகிறது. இதில் அனைத்து அரசியல் கட்சியினரும் (ஒரு சிலரை தவிர) முழு ஒத்துழைப்பை அளித்து வருவது சிறப்பு. காவல் துறையினர், மருத்துவ துறையினர், அரசு அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், மற்றும் எண்ணற்ற கணக்கானோர் தங்களின் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் தேவையற்ற பல்வேறு விமர்சனங்களை, கேள்விகளை, கேலிகளை முன் வைக்கும் நிலையிலும், அவர்களும் நம் குடும்பத்தில் ஒருவர் என்றெண்ணி   பிரார்த்தனை செய்து அரசோடு ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை.10 லிருந்து 25 வயதுள்ள இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு நம்பிக்கையையும் ஊட்ட வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.

வரும்முன் காப்போம். உலகிற்கு இந்தியா ஒருங்கிணைந்த அபார சக்தி என்பதை நிரூபிப்போம். வாருங்கள். போரை வெல்வோம்.

வெள்ளி, 27 மார்ச், 2020

கொரானா நன்மைகள்

கொரானா நன்மைகள் .....
====================
 * சட்டத்தால் கூட மூட முடியாத டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான குடும்ப ஆரோக்கியம் பாதுகாக்கும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*குடும்பத்தோடு மட்டுமே கூடி உறவாடி, இப்பொழுது நம்முடன் இருப்பவர்கள் மட்டுமே இக்கட்டான நிலையிலும்  நம்முடன் இருப்பவர்கள் என எண்ணும வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*ஆரோக்கியமான வீட்டு உணவு மட்டுமே உண்ண வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*தேவையற்ற  செலவுகள் செய்யும் வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தி உள்ளது.

*அநியாயமாக தேவைக்கு அதிகமாக சேர்த்த லஞ்சம்/ கறுப்பு பணம் பொன் பொருள் பயன்தராது என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*வீட்டு வேலைகளை பெண்களோடு இணைந்து ஆண்களும்  செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*புத்தகங்கள் படிக்க/எழுத வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

*இக்கட்டான நிலையிலும்  நாம் ஓடிஓடி சேர்த்த நம் கண்முன் (சுற்றும் முற்றி பாருங்கள்)உள்ள எந்த பொருளும் பயனற்றது.
காய்கறி விவசாய பொருட்களை தவிர,
என எண்ண வைத்துள்ளது.

*எந்த இக்கட்டான கடைசி நிலையிலும் விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் உயர்ந்ததில்லை என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*எந்த கடைசி நிலையிலும் விவசாயமும் விவசாயி மட்டுமே இறையருள் படைத்த அற்புதம்.
விவசாயமே மனிதர்களை கடைசி நிலையிலும் கைவிடாது என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*உலகில் நட்பை மறந்து உறவுகளை விட்டு விலகி மறந்து பொருளற்ற ஆடம்பர பொருட்களை சேர்த்தும் அவைகளால் பயனில்லை என்ற எண்ணம் ஏற்படுத்தி உள்ளது.

**சிந்தனையில் நிதானம், தர்மம், மனிதநேயம்,நேர்மை  மறந்து தறிகெட்டு சுயநல வெறிபடித்து  திரிந்த மனிதர்கள் நிதானமாக சிந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.*

*ஜாதியால், மதத்தால், நிறத்தால், பணத்தால், தொழிலால் அதிகாரத்தால் உயர்ந்தவன்/தாழ்ந்தவன் யாரும் இல்லை என மனிதர்கள் எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

*அதர்மங்கள் தலைதூக்கும் போது மீண்டும்  வருவேன்*- என் இறைவான் சொன்ன அற்புத வரிகளை மனிதர்கள் எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

கொரானாவை மன்றாடி கேட்கிறோம்..

*மனிதர்களுக்கு சிந்தனையில் மறுமலர்ச்சி செய்துவிட்டு சென்றுவிடு வந்தவழி நோக்கி.*

*மனிதனின் கெட்ட எண்ணங்களை அழித்துவிடு.  மனிதர்களை அழிக்காதே*

உங்களோடு நிந்தனையில் நானும்....

ஒரு புதுமையான, நம்பிக்கையூட்டும் உலகை நம் குழந்தைகளுக்கு அமைத்து கொடுப்போம்

#அரிய_வாய்ப்பு

வேலை, தொழில் என ஓய்வின்றி உழைத்த நம்மை இன்று வீட்டில் முடங்கியுள்ளது கொரோனா. நம் குழைந்தைகளிடம் நேரம் செலவிட காலம் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சாமாளிக்க முடிவதில்லை என்று புலம்புவதை பார்க்க முடிகிறது. உண்மையில் அவர்களை நாம் சமாளிக்கிறோமா அல்லது புறக்கணிக்கிறோமா? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் கைப்பேசிகளை சற்று ஒதுக்கிவிட்டு, குழந்தைகளிடம் உரையாடுங்கள், விளையாடுங்கள், நேரம் செலவிடுங்கள். உங்கள் புறக்கணிப்பு அவர்களை தனிமை மனப்பான்மைக்கு இட்டுச்செல்லும்.

உங்கள் குழந்தைக்கு நம்பிக்கை கொடுங்கள். அவர்களின் வயதுக்கு ஏற்றார் போல் விளையாட்டுகளை சொல்லிக் கொடுங்கள். நீங்களும் ஒரு குழந்தையாக மாறிவிடுங்கள்.

ஓவியமோ, சிறு சிறு கட்டுரைகளோ எழுத ஊக்கப்படுத்துங்கள். உங்கள் குடும்ப வரலாறோ அல்லது சமூக வரலாறோ சொல்லிக் கொடுங்கள்.

உங்களை பற்றியோ அல்லது அவர்கள் படிக்கும் பள்ளியை பற்றியோ அல்லது அவர்கள் நண்பர்களை பற்றியோ என்ன நினைக்கிறார்கள் என்று எழுதி கொடுக்கச் சொல்லுங்கள்.

இதனால் அவர்களுக்கு புது நம்பிக்கையை உங்கள் மீது ஏற்படுத்தும். இது அவர்களின் எண்ணங்களை அறிய ஒரு வாய்ப்பாக அமையும். உங்களுக்கும் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். இது போன்ற ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காமல் போகும்.

ஒரு புதுமையான, நம்பிக்கையூட்டும் உலகை நம் குழந்தைகளுக்கு அமைத்து கொடுப்போம்.

21 உள்ளடங்கு நாட்கள் இலகுவாக நகர்த்த, குடும்பஸ்தருக்கான 21 வாழ்வியல் சூத்திரங்கள்


21 உள்ளடங்கு நாட்கள் இலகுவாக நகர்த்த, குடும்பஸ்தருக்கான 21 வாழ்வியல் சூத்திரங்கள்

1. வீடு மனைவியின் அதிகார வரம்பிற்குட்பட்டது. அங்கு நீங்கள் அதிகாரம் செலுத்த முயலாதீர்கள். *கிட்டாதாயின் சட்டென மற.*

2.எப்போதும் அடக்கத்தை கடைப்பிடியுங்கள். *அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.*

3.வீடு என்பது நீங்கள் தங்குவதற்கு விசா பெற்றுள்ள இடம். குடியுரிமை பெற முயற்சிக்காதீர்கள். *விணாசே காலம் விபரீத புத்தி.*

4.உங்கள் அன்றாட கடன்களையும் கடமைகளையும் அனுமதி பெற்று கைக்கொள்ளுங்கள். *அனுமதி ஒரு வெகுமதி.*

5.உணவும் பானங்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் உடனடியாக கிடைக்க வேண்டும் என்று  எப்போதும் நினைத்து விடாதீர்கள். கிடைக்கும் நேரத்தில் மறக்காமல்  கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். *ஆசைப் பட்டால் அவஸ்தை.*

6. சும்மா இருக்குறதுக்கு ஒட்டடை அடிக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஒட்டடை அடித்து விடுங்கள். இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான முதல் கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். *முந்தினால் முதலுக்கு மோசமில்லை.*

7. சும்மா இருக்குறதுக்கு ஃபேன் துடைக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஃபேன் துடைக்க ஆரம்பியுங்கள். ஏங்க ஜாக்கிரைதைங்க, பாத்து க்ளீன் பண்ணுங்க என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும்.  இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான இரண்டாவது  கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். *சுத்தம் சோறு போடும்.*

8. சும்மா இருக்குறதுக்கு அந்த பாத்ரூமை க்ளீன் பண்ணலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் பாத்ரூம் க்ளீன் பண்ண ஆரம்பியுங்கள். ஏங்க இதையெல்லாம் நீங்க பண்றீங்க, வேலையாள் வச்சி பண்ணிக்கலாங்க  என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும்.  இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான மூன்றாவது  கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். *சுத்தம் சுபம்.*

9. இப்போது சிங்க்கில் இருக்கும் பாத்திரங்களை கழுவ துவங்குங்கள். ஏங்க, இதெல்லாம் நீங்க செய்யிற வேலையாங்க, போயி பேப்பர் படிங்க, டீ போட்டு எடுத்துட்டு வர்றேன் என்று ஒரு வாசகம் வரும். அது திருவாசகம். இப்போது உங்கள் மதிப்புயர்வு உறுதியாகி விட்டது. *பாத்திரம் அன்புக்கு பாத்திரம்.*

10.  அழுக்கு துணி களை சேகரித்து வாஷிங் மிஷினில் போடுங்கள். பின், இன்னும் ஏதாவது இருக்காம்மா என்று தணிந்த குரலில் கேளுங்கள். பின்னர் வாஷிங் மிஷினை இயக்கி விட்டு நாற்காலியில் அமருங்கள்.இப்போது நீங்கள் கால்மேல் கால் போட்டு தைரியமாக அமரலாம். உங்கள் மதிப்புயர்வு ஏற்கனவே உறுதியாகி விட்டதால் உங்களுக்கு ஒன்றும் ஆகாது. *காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.*

11. இனி வாஷிங் மிஷின் துவைத்த துணிகளை மாடிக்கு எடுத்து சென்று கொடியில் கிளிப் போட்டு காய வையுங்கள்.இது மிக முக்கியமான செயல். தவறினால்  கஷ்டப்பட்டு கிடைத்த மதிப்புயர்வு பரமபத பாம்பிடம் சிக்கியதைப்போல் சர்ரென சருக்கி விடும். *கவனம் கவசம்.*

12. துணி காய வைத்தபின் வீட்டுக்குள் (கால்மேல் கால் போட்டு) அமர்ந்து அடுத்து  என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இப்போது உங்களுக்கு ஒரு டீ அன்பு கொஞ்சம் தூக்கலாக வழங்கப்படும். அசந்து விடக்கூடாது. மெல்ல எமுந்து, பெட்ஷீட், தலையனை போன்றவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்த டீ வழங்கப்பட்டது என்பது பிறிதொரு யோசனையில்தான் புரியவரும். *காரணமில்லாம காரியமில்ல.*

13. சாப்பாட்டு நேரம். ஆச்சரியமாயிருக்கும். உங்களுக்கு பிடித்த உணவு வகைகள் வரிசை கட்டி நிற்கும். இந்த உள்ளடங்கு காலத்துல எதுக்கும்மா இவ்வளவு சிரமம் எடுத்துக்கிறே என்று (சம்பிரதாயமாகவாவது மறக்காமல்) கூற வேண்டும். *புகழோடு தோன்றின் இகழ் இல்லை.*

14. உண்டபின் அமைதியாக  உறங்கி ஓய்வு எடுக்க அனுமதி உண்டு. வாய்திறக்க அனுமதி இருந்தாலும் அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பு. *ஆதலின் மௌனமாய் இருத்தல் நன்று.*

15. உறங்கி எழுந்த பின் அற்புதமாய் ஒரு டீ வரும். நீங்கள் ஆனந்தமாய் அதை பருகலாம். அதன்பின், காயப்போட்ட துவைத்த துணிகளை எடுத்து வந்து விட வேண்டும். இதில் காலதாமதம் வேண்டாம். நீங்கள் ஆனந்தமாய் பருக வழங்கப்பட்ட டீ இதற்காகத்தான் என்பது விரைவில் புரிய வரும். *செய்கை நன்றே.*

16. இப்போது அதி தீவிரமான கண்கானிப்புக்கு ஆட்படுவீர்கள். நீங்கள் காய வைத்து எடுத்து வந்த துணிகளை மடித்து வைக்க வேண்டும். இல்லையேல் பரமபத பாம்பு வேலை நடந்து உங்கள் அறிவு கூறாக்கப்பட்டுவிடும் ஜாக்கிரதை. *முடிவே விடிவு.*

17. நீங்கள் இப்போது ஆல் பாஸ் கேட்டகரியில் உள்ளீர்கள். நிம்மதி நிச்சயம். இரவு உணவு ஏக சுவையாய் பரிமாரப்படும். எப்பிடித்தான் இவ்வளவு வேலையை இழுத்துப்போட்டு செய்றியோம்மான்னு சொல்லீட்டி ( இங்க ரிப்பீட் அனுமதிக்கப்படும்) உறங்கப் போயிரனும் நல்ல பிள்ளையாய். *புகழுரை தெளிவுரை.*

18. இந்த தினசரி யதார்த்தங்களைத்தவிர, உங்கள் கவனத்தை பரண் மேல் ஒரு நாள் இருத்த வேண்டும். *பரண் சுத்தம் பரம சௌக்கியம்*.

19. இதேபோல் அலமாரியின் மேல்  கவனம் செலுத்த வேண்டும்.அற்புத பலன் தரும். அற்புத பலன் தரும் அலமாரி சுத்தத்தை அவ்வப்போது மேற்கொள்வதால் இல்லத்தில்  ஆனந்தம்  தாண்டவமாடும். *அலமாரி அருள் மாரி.*

20. கொஞ்சம் கஷ்டமானாலும் கடினம் பாராமல் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, ஒவ்வொரு நாளும் வீட்டின் ஏதாவது ஒரு  மூலையை தேர்வு செய்து மூலை சலவை, அதாவது மூலையை சுத்தம் செய்ய வேண்டும். *மூலை சலவை மூளை சலவை போக்கும்.*

21. நீங்கள் அறிவாளி🤔 என்பதையோ, புத்திசாலி🥱 என்பதையோ எப்போதும் நினைவில் கொள்ளாதீர்கள். *கொண்டது கொல்லும்.*

மேலே உள்ள 21 சூத்திரங்களையும் வாழ்வின் ஒவ்வொரு  நொடியும் நினைவில் இருத்துங்கள். *சூத்திரம் சாத்திரம்*.

21 நாட்கள் மட்டுமல்ல, 21 யுகங்கள் கூட நீங்கள் வெற்றிகரமான குடும்பஸ்தனாக இருக்கலாம்..!

*வாழ்த்துக்கள்..!*

கொரோனா வைரஸ் படங்கள் வெளியீடு; இந்தியாவில் முதல்முறை.


                   கொரோனா வைரஸ் படங்கள் வெளியீடு; இந்தியாவில் முதல்முறை.

புதுடில்லி: இந்தியாவில் முதல்முறையாக, கொரோனா வைரசின் படங்களை, புனே தேசிய வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன நுண்ணோக்கி உதவியுடன் படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பரில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. தற்போது இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரியில் வூஹானிலிருந்து, வந்த கேரள மாணவிக்கு, இந்தியாவில் முதல்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், கொரோனா வைரசின் தோற்றத்தை, அதிநவீன மின்னணு நுண்ணோக்கியின் உதவியுடன் படங்கள் எடுத்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். 'சார்ஸ் - சிஓவி-2' என்ற அந்த வைரசின் படங்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளது.

இந்த வைரஸ், கடந்த 2012ல் பரவிய 'மெர்ஸ் - சிஓவி' மற்றும் 2002ல் பரவிய 'சார்ஸ் - சிஓவி' வைரஸ்களின் தோற்றங்களை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கையோடு இருங்கள்

நம்பிக்கையோடு இருங்கள்!

- எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்

கொரோனா தாக்குதல் காரணமாக நாடு மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய நன்றி.

இது போலவே ஊடகத்துறையினர் மிகுந்த பொறுப்புணர்வோடு செய்திகளை வழங்குகிறார்கள். அவர்களுக்கும் நன்றி.

கொரோனா தொற்றுநோய் குறித்த பயம் நம் அனைவரின் மனதிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளது. குறிப்பாக வயதானவர்கள். ஆஸ்துமா நோயாளிகள் மிகுந்த மனஅழுத்தம் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயம் அவர்களின் நோய் கூறை அதிகமாக்கிவிடுகிறது.

அவர்களுக்கு ஒன்று சொல்வேன். பயம் வேண்டாம். நம்பிக்கையோடு இருங்கள். மகிழ்ச்சியான உங்களை வாழ்க்கை அப்படியே தொடரும். உங்கள் மீது அன்பு செலுத்துகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் உங்களைச் சிறப்பாகப் பாதுகாப்பார்கள்.

நன்றாக உறங்குங்கள். நன்றாக உண்ணுங்கள். வீண் கவலைகளை அகற்றி மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் தூக்கம் முக்கியம். ஆழ்ந்து உறங்குங்கள். உறங்க முடியாதபடி தேவையற்ற எண்ணங்கள் அலைக்கழிப்புக் கொள்வதாக இருந்தால் பதற்றமோ பயமோ கொள்ள வேண்டாம்.

சில நிமிஷங்களில் இந்த மனநிலை தானே மாறிவிடும். தேவைப்பட்டால் தண்ணீர் குடியுங்கள். அல்லது ஆழ்ந்து உறங்க முடியும் என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அது பலன் தரக்கூடியது.

இரண்டாம் உலகப்போரின் போது நாசிகளின் படுகொலை முகாமில் கூட மக்கள் ஆழ்ந்து உறங்கினார்கள்.

எந்த நம்பிக்கை இந்த உறக்கத்தைக் கொண்டு வந்தது என அவர்களிடம் கேட்டபோது நாளை நிச்சயம் நல்ல நாளாக இருக்கும் என்ற நம்பிக்கை தான் என்று பலரும் சொன்னார்கள். அந்த நம்பிக்கை பலரையும் உயிர்வாழச் செய்தது.

மரணத்தினை எதிர்கொள்ளும் கைதிகளாக இருந்த பெண்கள் தங்களுக்குள்ளாக இரவில் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு நாவலை வாசித்தார்கள். கதைகேட்டு உறங்கிப் போனார்கள்.

அவர்களுக்குச் சிகிச்சை அளித்த விக்டர் பிராங்கல் என்ற மருத்துவர் சொல்கிறார். நெருக்கடி நிலையின் போது உங்கள் உடலும் மனமும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு உங்களைக் காப்பாற்றும். உங்கள் உடலை பற்றி நீங்கள் அறிந்துள்ளது குறைவே.

உங்களுக்கு இந்த வாழ்க்கை எவ்வளவு நாள் அளிக்கப்பட்டிருக்கிறதோ அத்தனை நாட்கள் நிச்சயம் வாழ்ந்தே தீருவீர்கள். அதில் மாற்றமேயில்லை.

அதை எந்தச் சக்தியாலும் தடுக்க இயலாது. ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்

குழந்தைகளை நம்பிக்கையோடு இரு எனச் சொன்னால் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது.

கதைகள் சொல்ல வேண்டும். உண்மையான மனிதர்களின் வாழ்க்கையை உதாரணமாகச் சொல்ல வேண்டும்.

அதைவிடவும் வீட்டு மனிதர் எவரையாவது சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே தான் பெரியவர்களுக்கும்.
இயற்கை பேரிடர்கள்.

நெருக்கடிகளின் போது பெரியவர்கள் எளிதாக வதந்திகளை, பொய்களை நம்பிவிடுகிறார்கள். அதிலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்களை ஒரு போதும் நம்பவேண்டாம்.

சென்னை வெள்ளத்தின் போது இளைஞர்கள் இதே சமூக ஊடகத்தைக் கொண்டு நம்பிக்கையை உருவாக்கினார்கள். அது தான் இப்போதும் தேவை.

ஒவ்வொரு பகுதியிலும் அந்தப்பகுதியில் என்ன கடைகள் திறந்திருக்கின்றன. எந்தப் பெட்ரோல் பங்க். இயங்குகிறது. எந்தக் கடையில் என்ன கிடைக்கிறது. என்ற தகவல்களை வாட்ஸபில் தொடர்ந்து பதிவேற்றுங்கள்.

அது போலவே அவசர உதவி தேவை என்றால் அழைக்கவும் எனத் தன்னார்வ தொண்டர்கள் தங்களின் தொலைபேசி எண்களைத் தரவும்.

எல்லா ஊடகங்களும் இதற்கெனத் தனியாகப் பத்து தொலைபேசி எண்களை உடனடியாக ஒதுக்கி மக்களைக் கொரோனா பயத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.

அதே நேரம் கொரோனா தானே என்ற அலட்சியம் வேண்டாம். இந்த வைரஸ் குறித்த செய்திகள் அச்சப்பட வேண்டியவை தான். ஆனால் பெரும்பீதி அடையத் தேவையற்றவை.

உங்கள் வீட்டில் குழந்தைகள், சிறுவர்கள் இருந்தால் அவர்களுக்குச் சூழ்நிலை பற்றிப் புரிய வையுங்கள். அவர்களுடன் சேர்ந்து கதை கவிதை படியுங்கள். அவர்களை அச்சப்படுத்திவிட வேண்டாம்.

உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டவராக இருந்தால் உங்களின் ஒருநாளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். புதிய விஷயங்களில் மனதைச் செலுத்துங்கள்.

கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பதைத் தவிருங்கள். விருப்பமான விஷயங்களில் ஈடுபடுவதே நேரத்தை கடந்து செல்ல எளிய வழி.

எதையும் படிக்க முடியவில்லை. சினிமா பாட்டு கூடக் கேட்க முடியவில்லை எனப் பலரும் புலம்புகிறார்கள். அது உண்மை.

அது போன்ற தருணத்தில் கட்டாயமாகப் படிக்கவோ படம் பார்க்கவோ முயற்சிக்க வேண்டாம். இசை கேட்பது மனதை ஆற்றுப்படுத்தும். மிகச்சிறந்த இசையைக் கேளுங்கள்.

தொடர்பு அறுந்து போய்விட்டது என நினைக்கும் நண்பர்களை இந்தத் தருணத்தில் தேடி அழைத்துப் பேசுங்கள். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது தான் நம்பிக்கையை உருவாக்குவதில் சிறந்த வழி.

புத்தரின் நண்பராக இருந்த அனந்தபிண்டிகன் என்பவர் நோயுற்ற நேரத்தில் புத்தர் தனது சீடரான சாரி புத்திரரை அனுப்பி அவரது நோயிலிருந்த குணப்படுத்த உதவுங்கள் என்றார்.

சார்பில் நோயாளி அருகில் போய் அமர்ந்து அவர் செய்த நற்செயல்கள். அவரது நற்குணங்கள். சந்தோஷமான நாட்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.

அனந்தபிண்டிகனின் மனது நம்பிக்கை கொண்டது. நோயின் வலி குறைவதாக உணர்ந்தார்.

சந்தோஷமான நினைவுகள். சந்தோஷமான உரையாடல்களே சிறந்த மருந்து.

நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகள் மருந்துகள் ஒருபுறம் என்றால் மறுபுறம் உங்கள் நம்பிக்கை தான் உங்களைக் காப்பாற்றும்

பெரும் போரின் அழிவிலிருந்து ஏராளமான மக்கள் உயிர்பிழைத்தார்கள். ஹிரோஷிமா அணுஆயுத அழிவிலிருந்து மீண்டவர்கள் ஏராளம். இப்படிப் பேரழிவுகள் ஏற்பட்ட காலத்திலும் மனிதர்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை. உறுதியான மனதுடன் தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன் இருந்தார்கள்.

முடிவில் நெருக்கடியை வென்றார்கள். அது தான் நமக்கும் தேவை.
பெண்களுக்கு இந்த மனதைரியம் இயல்பாகவே உண்டு. ஆகவே அவர்களின் உறுதுணை உங்களை நிச்சயம் காப்பாற்றும்.

அதே நேரம் பெண்களை இந்த நெருக்கடியிலும் கடுமையாக வீட்டுப்பணிகளைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம். அவர்களின் ஆரோக்கியம் முக்கியம்.

செய்திகளைத் தொடர்ந்து பார்க்கப் பார்க்க பலருக்கும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனைகள் உருவாகிறது. ஆகவே தேவைப்படும் போது மட்டும் செய்திகளைக் காணுங்கள்.

உங்களின் நலன் கருதும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் உங்களுக்கான நல்லதே செய்வார்கள். மருத்துவர்கள் உங்களைக் காப்பாற்றுவார்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று
நம்பிக்கை வையுங்கள்
இந்த நெருக்கடியான சூழலை வெற்றிகரமாகக் கடந்து செல்வோம் என உறுதியாக நம்புங்கள்

நிச்சயம் நாம் மகிழ்ச்சியான உலகினை தொடருவோம்

நம்புங்கள். தைரியமாக இருங்கள். நல்லதே நடக்கும்..

காய்கறிகள் கிடைக்காத சமயத்தில்

காய்கறிகள் கிடைக்காத சமயத்தில்

காய்கறி வாங்க வெளியே போனாலே கொரனா பரவும்.

காய்கறி கடைகளில் ஏதாவது பாதுகாப்பு
இருக்குதா..???

எதையும் தொடக்கூடாது னு சொல்றாங்க.
யாராவது கேக்குறாங்களா..???

பத்து நாள் காய்கறி சாப்பிடலைனா உடம்புல ஒன்னும் ஆகிடாதுங்க. பெருசா எந்த மாற்றமும் இருக்காது. உடல் புத்துணர்ச்சி பெறும்

பருப்புலயே பத்து விதமா சமைக்கலாம்

கொள்ளு ரசம் சிறந்த ஆன்டி பயோடிக். அதுக்கு காய்கறிகள் தேவையே இல்லை...

உப்பு பருப்பு சீரகம் போட்டு வைக்கலாம். எதிர்ப்பு சக்தி கூடும்...

தட்டைப்பயறு குழம்பு, மொச்சை குழம்பு எல்லாமே சிறந்த வைட்டமின் மற்றும் புரத உணவுகள்...

இட்லி தோசை + தேங்காய் சட்னி இஞ்சி போட்டு வெக்கலாம்

பருப்புல பூண்டு சேர்த்து சமைக்கலாம்

வகை வகையா ரசம் வைக்கலாம் 

நிலக்கடலை சட்னி, எள்ளு சட்னி, உளுந்து சட்னி, பாசிப்பயறு சட்னினு காய்கறி இல்லாத சைடிஷ்கள் ஏராளம்.

சந்தகை, கொழுக்கட்டை, பனியாரம், சப்பாத்தி, பூரி, ராகி களி, கோதுமை களி, சோள மாவு தோசை, பாசி பயறு தோசை, கம்மஞ்சோறு, ராகி கூழ், சோள அம்புலி, கம்மங்கூழ்
னு பெரிய லிஸ்ட்டே போடலாம்

காய்களில் பூசணிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவை ஒன்று முதல் இரண்டு மாசம் தாங்கும்.

இதுல எதுக்குமே தினசரி கடைக்கு போக தேவையில்லை. ஒருமுறை வாங்கி வைத்தால் போதும்.

சொகுசு வாழ்வை விடுத்து ,
குழந்தைகளுக்கு வறுமையை சொல்லித்தர பழகுவோம். நெருக்கடி நேரத்தில் வாழக்கையை சமாளிக்க கற்றுத்தர இதுமாதிரி வாய்ப்பு கிடைக்காது.

2.
*காய்கறிகள் கிடைத்தால்*

காலையில் வீட்டில் சாதம் வடியுங்கள்.. (குக்கரில் அல்ல பழைய முறைப்படி) கிடைக்கும் சுடு கஞ்சியை காலை உணவாக இஞ்சித் துவையலுடன் குடியுங்கள்..

மதியம் சிம்பிளாக இரசம் ஒரு காய் (கூட்டோ பொரியலோ) போதாததற்கு அதே இஞ்சித் துவையலும் வைத்துக் கொள்ளவும்

இரவு இட்லி, உப்புமா அல்லது சப்பாத்தி இதில் ஏதாவது ஒன்று இட்லி எனில் 5
தோசை & சப்பாத்தி எனில் 3..

இது ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே சமைக்கும் சமையல்.!

வீட்டில் வெல்லம் இருந்தால் அதை நீருடன் கலந்து பானகம், அல்லது எலுமிச்சை ஜுஸ், கரைத்து வைத்துக் கொள்ளவும்..

முடிந்தவரை டீ குடிக்கும் அதே சூட்டில் வெந்நீர் அருந்தவும்..

பஜ்ஜி, போண்டா, வடை போன்ற ஸ்நாக்ஸ்களை தவிர்க்கவும்..

சுடுகஞ்சி போரடித்தால் சில நாட்களுக்கு மாற்றாக பிரட் & ஜாம் சாப்பிடவும்..

அசைவம் தவிர்க்க முடியாதவர்கள் மீன் குழம்பு மட்டும் வைத்து சாப்பிடவும் (10 நாட்களுக்கு ஒரு முறை)

முட்டை உபயோகித்தால் காலையில் ஃபிரேக் பாஸ்ட் அப்போது மட்டும் சாப்பிடவும்..

அதிக பட்சமாக வாரத்தில் இரு நாட்கள் முட்டை உபயோகித்தால் போதும்..

குருணை அரிசி கஞ்சி, வரகரிசி பொங்கல், சாப்பிடலாம்..

அடுப்பில்லாத சமையல் எனில் வெள்ளைப் பூசணியை தோல்சீவி அதைத் துருவி..
நீரில் 15 நிமிடம் ஊறவைத்து பிறகு அதை நன்கு பிழிந்தெடுத்து தயிர் ஊற்றி பிசைந்து சாப்பிடவும்.. இது தயிர் சாதத்தை விட சுவையாக இருக்கும்..

ஊறுகாய் எனில் எலுமிச்சை, நார்த்தங்காய், கோங்குரா மட்டும் தொட்டுக் கொள்ளவும்.!

கோதுமை ரவா உப்புமா சாப்பிடுவது மிகவும் உத்தமம்.!
குழந்தைகளுக்கு பிடிக்க வேண்டும் என்றால் அந்த உப்புமாவில் காரட், பட்டாணி, சிறிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு,
கொஞ்சம் இஞ்சி, ஒரு ஸ்பூன் மிளகு (பொடிசெய்து) சேர்க்கவும்..

தேங்காய் சட்னி குழந்தைகளுக்கு மட்டுமே.! பெரியவர்கள் புதினா & கொத்தமல்லி அல்லது இஞ்சி சட்னி சேர்க்கவும்..!

வேப்பிலைப் பொடியும் நல்லெண்ணெயும் இன்னும் சிறப்பு...
அப்பளத்தை பொரிக்காது சுட்டு பயன்படுத்தவும்..

பிரண்டை, சுண்டைக்காய் வத்தக் குழம்புகள் இன்னும் சிறப்பு.. முடிந்தால் அதில் இரண்டு கடுக்காயைப்..
பொடி செய்து சேர்க்கவும்.. வேப்பிலைக் கொழுந்தும் சிறிது அரைத்து வத்தக்குழம்பில் சேர்க்கலாம்..

வாரம் ஒரு முறை கருணைக் கிழங்கு, சிறுகிழங்கு புளிக்குழம்பு வைக்கவும்..

பூசணி, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய் போட்டு கூட்டு வைப்பதும் சாலச் சிறந்தது.!

மிளகு இரசமும் எலுமிச்சை இரசமும் வாரம் முழுவதும் வைக்கலாம்.!

பாகற்காயை வட்டமாக சீவி மஞ்சள்தூள் தடவி வதங்கல் செய்யலாம்.!

தக்காளி, கத்திரிக்காயின் உபயோகம் குறைவாகவே இருக்கட்டும் (ஈஸ்னோபீலியா)

முருங்கை, அவரை, நூக்கல், பீட்ரூட், காரட், பொடி பாகற்காய், முள்ளங்கி ஆவாரம் பூ, மணத்தக்காளி, சிறுகீரை, வெந்தயக்கீரை கிடைத்தால் யோசிக்காமல் வாங்கிவிடவும்.!

சிக்கன் & மட்டன்.!!! பாவம் அந்த உயிர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழட்டுமே.!

இங்கு நான் சொன்ன அனைத்து காய்கறிகளும்..
உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகள்.!

இதை வீட்டில் உங்களால் முடிந்த அளவு சமைத்து முயன்று பாருங்கள்.!

அளவோடு உண்டு நலமோடு மீண்டு வருவோம்..!

அது இன்னும் 21 ஆண்டுகள் என்றாலும்.. நம்மால் முடியாதது உலகில் யாராலும் முடியாது என எண்ணுங்கள்.!

வியாழன், 26 மார்ச், 2020

கொரோனாவைப் பற்றி வரும் எல்லா செய்திகளும் கெட்ட செய்திகள் அல்ல...

கொரோனாவைப் பற்றி வரும் எல்லா செய்திகளும் கெட்ட செய்திகள் அல்ல...

இதோ பல நல்ல செய்திகள்...

1. சீனாவின் கடைசி கொரோனா மருத்துவமனை புது நோயாளிகள் இல்லாததால் மூடப்பட்டு விட்டது.

2. மருத்துவர்கள் மலேரியா மருந்துகள் மூலம் வெற்றிகரமாக கொரோனாவைத் தீர்க்கும் வழியைக் கண்டுபிடித்து விட்டனர்.

3.  ஐரோப்பிய ஆய்வகம் ஒன்றில் கொரோனா எதிர்ப்பு ஆன்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

4. 103 வயது சீன மூதாட்டி  ஒருவர் 6 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் பூரண குணம் பெற்று வீடு திரும்பி விட்டார்.

5. சீனாவில் ஆப்பிள் நிறுவனம் கொரோனாவால் மூடப்பட்டிருந்த தனது அனைத்துக் கிளைகளையும் மீண்டும் திறந்து விட்டது. பணிகள் முன் போல் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

6. கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை அமெரிக்காவின் க்ளீவ்லெண்ட் ஆய்வகம் உடனுக்குடன் சில மணித்துளிகளில் தருகிறது. இந்தியாவுக்கும் அந்தத் தொழில் நுட்பம் விரைவில்  வந்து விடும்.

7. தென்கொரியாவில் கொரோனா நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. புது நோயாளிகள் எண்ணிக்கையும் மிக வேகமாகக் குறைந்து வருகிறது.

8. இத்தாலியில் எப்படி இத்தனை இறப்புகள் என்று தாங்கள் கேட்பது புரிகிறது. ஐரோப்பாவிலேயே மிக வயதானவர்கள் வாழ்வது இத்தாலியில் தான் என்பதால் தான் இத்தனை இறப்பும். அதுவும் குறைந்து வருகிறது.

9. இஸ்ரேல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள். விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

10. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்ட யாரும் உயிரிழக்கவில்லை.

11. அமெரிக்காவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் முற்றிலும் குணமாகி தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத்  திரும்பி பணிக்கும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

12. கனடா மருத்துவ ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

13. சான்டியாகோ, ட்யூக் மற்றும் சிங்கப்பூர் தேசிய மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகி விட்டது.

14. ஜரோப்பாவின் முதல் கொரோனா நோயாளி முற்றிலும் குணமடைந்து விட்டார்.

15. புதுடெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 கொரோனா நோயாளிகள் அனைவரும் முற்றிலும் குணமடைந்து விட்டனர்.

16. கொரோனாவிலிருந்து குணமானவர்களின் நிணநீரிலிருந்து கண்டறிந்த மருந்துகள் மூலம் கொரோனா நோயாளிகள் அனைவரையும் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்பதோடு மீண்டும் வராமல் தடுக்கலாம் என்பதும் உலகம் உய்யக் கிடைத்த வரப்பிரசாதம்.

நல்லதே நினைப்போம்...
நல்லதே நடக்கும்...

புதன், 25 மார்ச், 2020

மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்தக் கியூபா!


மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்தக் கியூபா!

கியூபாவில் பெரும் இயற்கைப் பேரிடர் வந்து மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்!

"உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்", எனப் பிடல் காஸ்ட்ரோ கெஞ்சினார்!

அமெரிக்காவுக்குப் பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை.

பெரும் இழப்பிற்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப்பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன!

அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், அய்ரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் பிடல் உருவாக்கினார்.

உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது. அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள்.

இவ்வளவு மருத்துவப் புரட்சியைச் செய்த பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்!

உலக நாடுகளே!

உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம்; எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள்", என்று அறிவித்தார்.

அவ்வகையில் 95 நாடுகளுக்கு இதுவரை 2 இலட்சம் மருத்துவர்களைக் கியூபா அனுப்பியுள்ளது.

இன்றைக்கு 'கொரோனா' வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ, அப்படி 60 ஆண்டுகளாக இந்தக் கியூபாவை அமெரிக்கா தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது!

அவ்வளவு மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்தக் கியூபா!

இதோ! பிரிட்டன் போன்ற நாடுகள் எவ்வளவோ கெடுதல் செய்தாலும்,   அந்த மக்களையும் காப்பாற்ற கியூபா தான் முன் வந்துள்ளது!

கப்பலில் இருந்து வரும் மேல் நாட்டவர்களே! கியூப மண்ணில் தைரியமாகக் காலூன்றி நடங்கள்! நீங்கள் நலம் பெறுவீர்கள்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍ ‌

பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍ ‌

21 நாட்கள் இந்திய தேசத்து மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே!

அன்புள்ள பிரதம மந்திரி அவர்களே,
கோவிட்19 என்கிற மிக பயங்கரமான தொற்றுநோய் பரவியுள்ள சூழ்நிலையில்,  தங்களது நலனை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

கொ‌ரோனா வைரஸை எதிர்கொள்ள நாடு முழுவதும் 21 நாட்கள் முற்றாக முடக்கம் செய்யப்படும் என்று தாங்கள் அறிவித்த பிரகடனத்தை கவனித்தோம்.

ஏழையிலும் ஏழையான பலவீனத்திலும் பலவீனமான மனிதர்களின் முகத்தை ஒரு கணம் மனதில் நிறுத்தி முடிவுகளை எடுங்கள் என்று மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

எந்தவிதமான நிவாரணமும் ஏழைகளுக்கு அறிவிக்காமல்,  அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை உத்தரவாதமாக செய்வோம் என்று குறிப்பிடாமல்,  அவர்கள் இருபத்தொரு நாட்கள் இந்த நாடு மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில் உயிரோடு வாழ்வதற்கான எந்தவிதமான அவசர உதவியையும் அறிவிக்காமல் உங்களது பேச்சு பெருத்த ஏமாற்றத்தை எங்களுக்கு அளித்திருக்கிறது.

உங்களது உரையில்,  இத்தகைய நாடுதழுவிய முடக்கத்தால் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட போகிற,  குறிப்பாக ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு வேலை தேடி வந்த கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வுக்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் நீங்கள் அளிக்கவில்லை. அவர்கள் உணவையோ அல்லது 21 நாட்கள் தங்குவதற்கான இடத்தையோ உறுதி செய்யாமல் அதை பெறுவதற்காக அல்லது எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் திணறி இன்று இரவு முதல் செய்வதறியாது கையறு நிலையில் நிற்கப் போகிறார்கள்.
அவர்கள் எப்படி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று அடைவார்கள்?
அவர்கள் எப்படி இருபத்தொரு நாட்கள் பணமில்லாமல் அல்லது உணவுப் பொருட்கள் இல்லாமல் அல்லது காவல்துறையின் அராஜகத்தை எதிர்கொள்ளாமல்  உயிர் வாழ்வார்கள் என்று  நம்புகிறீர்கள்?

அவர்கள் பாதுகாப்புக்காக ஓடத் துவங்கி இருக்கிறார்கள். யாரேனும் துரத்துவார்களோ,  பிடித்து விடுவார்களோ,  அடித்து விடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அவர்கள் ஓடத் துவங்கி இருக்கிறார்கள். அனேகமாக நள்ளிரவு முதல் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டு விடும். அவர்கள் தங்களது அடிப்படையான தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்வதற்கு வாய்ப்போ அல்லது பணமோ அல்லது எந்த விதமான உதவியும் அளிக்காமல் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறீர்கள்.

கிட்டத்தட்ட 45 கோடி இந்தியர்கள் அன்றாட கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் 21 நாள் முடக்கம் காரணமாக எல்லோருடைய வேலையும் பறிபோக இருக்கிறது. ஏற்கனவே துயரத்தின் உச்சத்தில் சிக்கியுள்ள அவர்களது வாழ்க்கை எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் நிர்க்கதியாக விடப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வே துயரின் பிடியில் சிக்கியிருக்கிறது. அவர்களது கூலிக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது. நாடு முழுவதும் நோய் பதற்றம் ஏற்பட்டு இருக்கிற நிலையில் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள் விடப்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடுகிற சமூக தனிமைப்படுத்தல் என்பதன் அடிப்படையான நோக்கத்திற்கு எதிராக இந்த நடவடிக்கைகள் எல்லாம் அமைந்துள்ளன. மிகப்பெரிய தொற்றுநோயை எதிர்த்து நாம் போராட வேண்டிய தருணத்தில்,  பொருத்தமற்ற இந்த அறிவிப்புகளை செய்திருக்கிறீர்கள்.

உங்களது உரையில் சுகாதார நடவடிக்கைகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினீர்கள். அது எங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் அடிக்கடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பேசிக் கொண்டிருப்பவர். அடிக்கடி பொருளாதாரத்தில் உச்ச கட்டத்தை எட்ட போவதாக பேசிக் கொண்டிருப்பவர். ஆனால் வெறும் 15 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே உங்களால் ஒதுக்க முடிந்திருக்கிறது. இந்தத் தொகை எந்த அளவிற்கு மிக மிக குறைவானது தெரியுமா?

ஒரு குடிமகனுக்கு வெறும் 112 ரூபாயைத் தான் நீங்கள் ஒதுக்கி இருக்கிறீர்கள்.  ஆனால் மிகப்பெரிய பணக்கார கார்ப்பரேட்டுகளுக்கு நீங்கள் எவ்வளவு ஒதுக்கி இருக்கிறீர்கள் தெரியுமா? அவர்களை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக என்ற பெயரில் கிட்டத்தட்ட 7.78 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறீர்கள்.

இன்னும் சொல்வதானால் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகை மட்டும் அளித்து இருக்கிறீர்கள்

ஆனால் மிக மிக பயங்கரமான ஆபத்தான நோய் சூழலில் சிக்கியிருக்கிற நமது மக்களின் சுகாதாரத்திற்காக உண்மையில் இதைவிட மிக அதிகமாக அல்லவா செலவழித்து இருக்க வேண்டும்?

ஏன் நீங்கள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் பொருட்டு மிகப் பெரும் பணக்காரர்கள் மீது வரி விதித்து அந்த பணத்தை கையகப்படுத்தக் கூடாது என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூட நாம் எச்சரிக்கப்பட்டோம். உலக அளவில் கொரோனா பாதிப்பு என்பது தீவிரமாகப் போகிறது என்பது கண் முன்னால் தெரிந்தது. ஆனாலும் கூட உங்களது அரசாங்கம் தேசிய சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாகவே குறைத்தது. குறிப்பாக நாட்டின் மிக முக்கிய பெரிய மருத்துவ மனைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டன. தில்லியில் இருக்கிற மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட வெறும் 0.1 சதவீதம் அளவிற்குத்தான் சற்று கூடுதல் நிதியை பெற முடிந்தது.

இன்னும் குறிப்பாக ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீம யோஜனா என்ற தேசிய சுகாதார திட்டத்திற்கு பொது நிதி ஒதுக்கீடு 156 கோடி ரூபாயிலிருந்து வெறும் 29 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. அதேபோல ஆயுஸ்மான் பாரத் திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்தது போல 6,400 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. நியாயமாக அது அதிகரிக்கப்பட்டு இருக்கவேண்டும். அதேபோல உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நிதி ஒதுக்கீடு என்பது 360 கோடி ரூபாயிலிருந்து 283. 71கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.

இன்னும் அதிர்ச்சிகரமான முறையில்,  எளிதில் தொற்றக்கூடிய எளிதில் கண்டறிய கூடிய நோய்களுக்கான சுகாதாரம் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு என்பது எந்த விதத்திலும் அதிகரிக்கப்படாமல் 2178 கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது.

உண்மையைச் சொல்வதானால் உங்களது அரசாங்கம் இந்தியாவின் சுகாதார செலவினங்கள் மீது கிரிமினல் தனமான வெட்டுக்களை கடுமையான முறையில் அரங்கேற்றியது.  இது இன்றைக்கு இந்தியாவை மிகப் பெரும் ஆபத்தின் பிடியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

உலக அளவில் கொரோனா நோய் பரவத் துவங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாத காலம் இந்தியாவுக்கு அவகாசம் கிடைத்தது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தொற்று உள்ளதா என பரிசோதனை செய்வதற்கான கருவிகளைக் கூட குறைந்த விலையில் நாடு முழுவதும் சப்ளை செய்ய முடியவில்லை. பரிசோதனை கருவிகள் மட்டுமல்ல,  அதற்கான நடைமுறைகள் அல்லது முக கவசம் மற்றும் வெண்டிலேட்டர்களை வாங்க வேண்டியதன் அவசியத்தைக் கூட அரசு உணர்ந்திருக்கவில்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும். மார்ச் 24ஆம் தேதி வரையிலும் இத்தகைய மிக முக்கியமான கருவிகள் நமக்கு தேவை என்பதைக் கூட உணராமல், அவை ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கூட நிறுத்தாமல் எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்காமல் உங்களது அரசாங்கம் அலட்சியம் செய்து இருக்கிறது என்பது மிகமிக அதிர்ச்சி தரத்தக்க உண்மையாகும்.

உங்களது உரையில் மாநில அரசுகள் முழுக்க முழுக்க சுகாதார நடவடிக்கைகளில் மட்டுமே அதிகபட்ச கவனத்தை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறீர்கள்.  ஆனால் இப்படிப்பட்ட ஒரு பதற்றமான தருணத்தில் உங்களது கட்சியான பாரதிய ஜனதா கட்சி இதையெல்லாம் மறந்து,  மத்தியப் பிரதேசத்தில் மக்களால் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசாங்கத்தை நிலைகுலையச் செய்து, கவிழ்த்து இருக்கிற ஒரு வேலையைத்தான் செய்து கொண்டிருந்தது.  இந்தியாவின் நாடாளுமன்றமும்,  நீங்கள் என்ன தேவை என்று கருதுகிறார்களோ அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் மறுபுறத்தில் கேரளாவில் ஆட்சி நடத்தும் இடது ஜனநாயக அரசாங்கமும் நாட்டில் எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் வேறுசில மாநிலங்களும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பல பணிகளை செய்திருக்கின்றன. குறிப்பாக பாதித்தவர்களை பரிசோதிப்பது, அவர்களோடு யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ அவர்களைத் தேடிக் கண்டறிந்து பரிசோதனைக்கு உள்ளாக்குவது,  பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது,  அதற்கு மிக அதிகபட்சமான முக்கியத்துவம் தருவது என்கிற முறையில் மட்டும் அல்லாமல், இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்ற பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உரிய பொருத்தமான பொருளாதார உதவிகளை அறிவித்திருப்பது என்ற முறையில் மிகச் சிறந்த பணியாற்றி இருக்கின்றன.  இவை எதையும் நீங்கள் குறிப்பிடவும் அங்கீகரிக்கவும் செய்யவில்லை.
அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை,  அவர்களது உணர்வுப்பூர்வமான பங்களிப்பை, அவர்களது சக்தியை, அவர்களது நிர்வாகத் திறமையை நீங்கள் ஒரு துளி அளவு கூட அங்கீகரிக்கவில்லை.

இந்த மிக மிகக் கடினமான தருணத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் அதிகபட்ச கவனத்தைச் செலுத்த வேண்டிய கடமையில் இருக்கிறீர்கள். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் மிகத்தெளிவான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். இந்த கடுமையான தருணத்தில் இருபத்தொரு நாட்கள் நாடே மூடப்படுகிற சூழலில் பொருளாதார உதவிகளைப் பற்றியும் அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பரிசோதனை, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டறிந்து அவர்களுக்கான சோதனை, பொது சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான மிகச்சிறந்த நடவடிக்கைகள் ஆகிய இரண்டு முனைகளிலும் நீங்கள் சரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இரண்டுமே மிக முக்கியமானவை.

இவையிரண்டும் தாமதப்படுத்தாமல் செய்யப்பட்டால் தான் மிகப் பெரும் கொள்ளை நோயை நாம் தோற்கடிக்க முடியும்.

கொரோனா  நோய்க்கு எதிரான இந்த மாபெரும் போராட்டத்தில் இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்கிறோம்.

ஆனால் உங்களது அரசாங்கம் அனைத்தையுமே குடிமக்கள் பக்கம் தள்ளி விடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, குடிமக்களை அனைத்து துன்பங்களை ஏற்றுக் கொள்ளுமாறு நீங்கள் கேட்டுக் கொள்கிறீர்கள். ஆனால் கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்களை நாங்கள் கவனித்து கொள்கிறோம் என்று எந்தவிதமான உறுதி மொழியையும் அளிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

எனவே நமது மக்கள் உயிரோடு இருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நான் உங்களை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

#சீத்தாராம்யெச்சூரி
பொதுச்செயலாளர்
#இந்தியகம்யூனிஸ்ட்கட்சி(மார்க்சிஸ்ட்)

செவ்வாய், 24 மார்ச், 2020

கசப்பானாலும் உண்மை...

கசப்பானாலும் உண்மை...

சீனாவில் தொடங்கி இத்தாலி, ஸ்பெயின்,அமெரிக்கா வரை சென்ற கொரோனா ஏன் சீனாவின் அண்டை நாடான ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கு பரவவில்லை ?

காரணம் வடகொரியாவும் ரஷ்யாவும் சீனாவின் நட்பு நாடுகள். அதனால் வைரஸ் அங்கு போகாது. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு சீனா செய்து வந்த பல பொருளாதார குற்றங்களை ஐநாவில் வெளிப்படுத்தி சீன நிறுவனங்கள் மீது பல தடைகளை விதித்தார். இதற்கு பல நாடுகள் ஆதரவு தந்தனர்.

சீனாவின் முதலீடு இல்லாத நாடுகளே கிடையாது. ஆனால் சீனாவில் அந்நிய முதலீடுகள் கிடையாது. எனவே சீனாவை அந்நிய சந்தைகளுக்கு திறந்துவிட ட்ரம்ப் நிர்பந்தம் செய்ததால் வேறு வழியில்லாமல் சீனா ஒப்பந்தம் செய்தது. அதன்படி சீனாவின் வூகான் மாகாணத்தை அந்நிய முதலீடுகளுக்கு திறப்பதாக சீனா கூறியது.

ஆனால் அதே வூகானில் தான்  கொரோனா பரவியது. ஏன் ?

கரோனா பீதியால் அந்நிய நிறுவனங்கள் இனி சீனாவுக்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள். அதுதான் சீனாவின் திட்டம். அதாவது வேறு எந்த நாடும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி லாபத்தை எடுத்துச் செல்லக்கூடாது. நாங்கள் தான் உலகின் உற்பத்தி மண்டலமாக என்றும் இருப்போம் என்று சீனாவின் பேராசையால் வூகான் மாகாணத்தில் தான் உருவாக்கிய கரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது சீனா.

காட்டுத்தீ போல் வூகானில் பரவிய கொரோனா  ஏன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு பரவாமலே #ஐரோப்பிய_அமெரிக்க நாடுகளுக்கு பரவியது ?
வூகானில் பரவிய கொரோனா திடீரென #அடங்கியது எப்படி ?

 கொரோனா மருந்தே கண்டுபிடிக்காத அன்றைய சூழலில் வூகான் நகரில் சீன அதிபர் எந்த உடல் கவசமும் இன்றி எப்படி அங்கு சென்று மருத்துவமனைகளை பார்வையிட்டார் ?

அப்படியென்றால் ஏற்கனவே  கொரோனாவுக்கான மருந்தை சீனா தயாரித்து தன் வசம் வைத்துள்ளது. வைரஸை உருவாக்கியவன் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காமலா அதை பரப்புவான் ?

அமெரிக்காவை ஒருநாளும் ராணுவத்தால் நாம் எதிர்கொள்ள முடியாது என கருதிய சீனா..
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொருளாதார ரீதியாக சீர்குலைத்து பங்குச்_சந்தையை சரியவைத்து அதன் மூலம் அந்நாட்டு நிறுவனங்களை கைப்பற்ற சீனா கையில் எடுத்த ஆயுதம் தான்  கொரோனா!

அதாவது ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ளபோது அந்நாட்டின் பங்குச்சந்தை மிகவும் குறைவாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சீனா அந்நாட்டின் பங்குகளை வாங்கிக்குவிக்கும்.

முதலில் தன்னை நட்பு நாடாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் சீனா அந்நாட்டிற்கு அதிக அளவில் கடன் கொடுக்கும். பிறகு அந்நாடு கடனை கட்டமுடியாமல் தள்ளாடும் போது அந்நாட்டுடைய வளங்களை தன்வசப்படுத்திக் கொள்ளும்.
இதற்கு சிறந்த உதாரணம் இலங்கை. முதலில் இலங்கைக்கு பல மில்லியன் டாலர்கள் கடன் கொடுத்து இலங்கையை கடனில் தள்ளியது.  இலங்கை கடனை திருப்பி தரமுடியாமல் தள்ளாடிய போது  இலங்கையில் உள்ள ஹம்மந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்தது.  இதைத்தான் ஆங்கிலத்தில் "டெப்ட்_ட்ராப்" (debt trap)என்பார்கள்.

ஆந்திராவில் செம்மரம் வெட்டப்பட்டு கப்பல் வழியாக கடத்தப்பட்டது சீனாவிற்கு தான்.
தமிழ்நாட்டில் V.V மினரல்ஸ் மூலமாக தாது மணல் கடத்தப்பட்டதும் சீனாவிற்கு தான்.

இதுபோக பெரிய மாஃபியா கும்பலை வைத்துக்கொண்டு உலகில் உள்ள பல அரிய விலங்குகளை கடத்தி கள்ளச்சந்தையில் அதை விற்பதும் சீனா தான்.

கொரோனாவால் பல நாடுகளில் உள்ள பங்குச்சந்தை சரியும்போது சீனாவின் பங்குச்சந்தை உயருகிறதே ?
எப்படி ?

இப்போதாவது சீனாவின் சூட்சமம் புரிகிறதா ?

இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க  பொருளாதாரம் சரியும். அதன் விளைவாக பல நாடுகளில் உள்ள வங்கிகள் திவாலாகும்..#இந்தியா_உட்பட

பிறகு சீனா பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும்.
இதுதான் சீனாவின் மாஸ்டர் ப்ளான்.

இது மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இடதுசாரி அரசியல் கட்சிகளை உருவாக்கி நிதி அளித்து அங்கு அக்கட்சிகளை ஆட்சியில் வர உதவிசெய்து NEW WORLD ORDER (NWO)என்ற ஒற்றை கம்யூனிச ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிப்பதும் சீனா தான்.

இந்த ஒற்றை ஆட்சி முறையை நிறுவ இஸ்லாமிய‌ மதத்தை சீனா பகடையாக பயன்படுத்துகிறது.

சப்பமூக்கன் ஒரே கல்லில் எத்தனை மாங்காய் அடிக்கிறான் பார்த்தீர்களா ?

Note: copied

வியாழன், 12 மார்ச், 2020

இரவில் தூங்கும் போது உங்கள் தலைக்கு அருகில் மொபைல் போனை வைத்துக்கொண்டு தூங்குகிறீர்களா?

இரவில் தூங்கும் போது உங்கள் தலைக்கு அருகில் மொபைல் போனை வைத்துக்கொண்டு தூங்குகிறீர்களா?



இப்பொழுது இருக்கும் கம்ப்யூட்டர் காலத்தில் மொபைல் போன் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொருள், மேலும் யாராலும் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகவும் மொபைல் போன் இருக்கிறது, மனித வாழ்வில் அது இல்லையேல் வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு கூட சொல்லலாம் அந்த அளவிற்கு மொபைல் போனில் தேவை இருக்கிறது. ஒரு மனிதன் உணவு இல்லாமல் கூட வாழ்வான் ஆனால் மொபைல்போன் இல்லாமல் இப்போதைய காலகட்டத்தில் வாழ மாட்டான் என்று சொல்லும் அளவிற்கு அதன் தேவை அதிகமாக உள்ளது காலையில் எழுந்தவுடன் நம் உறவுகளை தேடுகிறோமோ இல்லையோ ஆனால் மொபைல் போனை நிச்சயம் தேடுவோம்.
அந்த அளவிற்கு மொபைல் போன் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது, எப்பொழுதுமே அதை நாம் அருகிலேயே வைத்து பார்த்துக் கொள்கிறோம் மற்றும் உபயோகப் படுத்திக் கொள்கிறோம் இரவில் தூங்கும் போது கூட கடைசி நேரத்தில் பார்க்கும் பொருள் மொபைல் போன் தான், காலையில் எழுந்தவுடன் முதலில் பார்க்கும் பொருள் மொபைல். ஆகவே பெரும்பாலானோர் தன் தலைக்கு அருகிலேயே மொபைல் போனை வைத்து தூங்கி விடுகிறார்கள், இது மிகவும் தவறு இவ்வாறு செய்யாதீர்கள்
மொபைல் போனை தலைக்கு அருகில் வைத்து தூங்கும் போது அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு மூளை வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் மூளை நரம்பு பாதிக்கிறது, மேலும் கண்களின் பார்க்கும் திறனை குறைக்கிறது, தலைவலி கண்களில் நீர் வடிதல் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது, ஆகவே நாள் முழுவதும் மொபைல் போனை யூஸ் பண்ணினாலும் தூங்கும்போது அதை உங்களிடம் இருந்து தூரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் எந்த ஒரு எலக்ட்ரானிக் டிவைஸ் அருகிலும் மொபைல் போனை வைத்து விடாதீர்கள் அது அந்த எலக்ட்ரானிக் டிவைஸ்ஐயும் சேர்த்து பாதிப்புகுள்ளாக்கி விடும்.
எலக்ட்ரானிக் டிவைஸ்கே அந்த நிலைமை என்றால் உங்கள் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள்.

புதன், 11 மார்ச், 2020

பேராசிரியர்....



பேராசிரியர்....

நெடிய உயரம்; சிவந்தமேனி; நேர்கொண்ட பார்வை; நிமிர்ந்த தோள்கள்; யாருக்கும் வளைந்து குனியாத தலை; எடுப்பான குரல் _ அவர்தான் பேராசிரியர் க.அன்பழகன். தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர்.

பிறந்த ஊர் திருவாரூர் அருகிலுள்ள காட்டூர்; ஆண்டு 1922. அன்பழகனின் பெற்றோர் மணவழகர் என்கிற கல்யாணசுந்தரம்_ சொர்ணத்தம்மையார். இவர்களது ஐந்து வாரிசுகளில் மூத்தவர்தான் அன்பழகன். இயற்பெயர் ராமைய்யா. கல்யாணசுந்தரம் பெரியாரின் தீவிர பற்றாளர். காங்கிரஸ் சார்பாக பெரியார் கதர் இயக்கத்தைப் பரப்பியபோது, மயிலாடுதுறையில் கதர் விற்பனைக்கென்றே தனி கடை நடத்தினார்.

சிதம்பர விஜயம்!

1925_இல் பெரியார் காங்கிரஸை விட்டு விலகியபோது, கல்யாணசுந்தரமும் விலகினார். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோன்றுவித்தபோது, கல்யாணசுந்தரமும் அதில் தொண்டரானார்.

பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு 1939_ல் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரத்துக்குக் குடிபெயர்ந்தார் கல்யாண சுந்தரம். தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பை பெரியார் ஏற்றபோது, கல்யாண சுந்தரமும் நீதிக்கட்சி அமைப்பை சிதம்பரத்தில் தொடங்கினார். அதில் சேர்ந்த 20 உறுப்பினர்களில் ராமைய்யாவும் ஒருவர்.

நீதிக்கட்சி சார்பில் சிதம்பரத்தில் கல்யாணசுந்தரம் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பெரியார், அண்ணா, சி.பி. சிற்றரசு, பொன்னம்பலனார் போன்ற முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வர். கூட்டம் முடிந்தபிறகு, கல்யாண சுந்தரம் வீட்டில்தான் இரவு ஓய்வு. அந்தத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ராமைய்யாவுக்குக் கிடைத்தது. இது தவிர, ராமைய்யாவின் தந்தை, இயக்க இதழ்களின் முகவராக இருந்ததால், அந்த இதழ்களைப் படித்து... தனது தீப்பந்த எண்ணங்களுக்கு ராமைய்யா பெட்ரோல் போட்டுக்கொண்டார்.

தமிழுணர்வு!

1939_ல் இன்டர்மீடியெட்டில் அண்ணாமலைப் பல்கலையில் சேர்ந்தார் ராமைய்யா. மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்க ஈடுபாட்டால் தன் பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார். இவரது தந்தையும் தன் பெயரை மணவழகன் என்று மாற்றிக் கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரது தமிழுணர்வுக்குத் தீனிபோட்டது.

சிதம்பரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் அதிகம். சுயமரியாதை இயக்கம் அப்போதுதான் வேர்பிடிக்க ஆரம்பித்திருந்த காலம். அந்தக் காலக் கட்டத்தில் பாடவேளை, உறங்கும் நேரம் தவிர, பல்கலையின் ஏதேனும் ஒரு மூலையில் அன்பழகனின் குரல் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும். சுற்றிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தோழர்கள்... நடுவில் அன்பழகன். காங்கிரஸ் எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்று இவரது நாக்கு போர் வாளாய்ச் சுழலும்.

சுற்றிப் பகைவர் கோடி சூழினும் சூறைக் காற்றாய்ச் சுழலும் அவரது சொற்போர் பலரை சுயமரியாதை இயக்கத்தவர்களாய் மாற்றியது. பல்கலையில் சுயமரியாதை இயக்கம் வேர்பிடித்து, விழுது விட்டு வளரத் தொடங்கியது. அதன் பிறகு தான் அங்கே திராவிட மாணவர் கழகம் உருவாகும் நிலை ஏற்பட்டது. படிப்படியாக அன்பழகன் திராவிட இயக்கத்தின் நட்சத்திரப் பேச்சாளராக உருவானார்.

அந்த இளைஞர்!

பல்கலைக் கழகத்தில் ‘தமிழ் இலக்கிய மன்றம்’ சார்பாக அறிஞர் அண்ணாவை சிறப்புப் பேச்சாளராக அன்பழகன் அழைத்தபோது, பலத்த எதிர்ப்பு. அண்ணா வந்தார். ‘ஆற்றோரம்’ என்ற தலைப்பில் அருவித் தமிழில் அவர் பேசியபோது, எதிர்த்தவர்கள் தலை குனிந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில்தான் திருவாரூரில் தமிழ் மாணவர் மன்றம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் அன்பழகனை திருவாரூருக்குப் பேச அழைத்தார். அன்பழகனும் நெடுஞ்செழியனும் அங்கு சென்று பேசினர். கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த அந்த இளைஞரின் பெயர் மு.கருணாநிதி.

பச்சையப்பன் கல்லூரியில்...

1944_ம் ஆண்டு நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்று அசுர வளர்ச்சி கண்டது. அன்பழகன் முன்னணிப் பேச்சாளராகத் தமிழகம் முழுக்க கொள்கை முழக்கம் செய்தார்.

இந்த ஆண்டில் அன்பழகன் எம்.ஏ. தேர்வு பெற்று பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். பேராசிரியர் வகுப்பு நடத்துவதே தனியழகு. அது ஒரு திராவிடர் இயக்கக் கருத்தரங்கு மாதிரி இருக்கும். இவர் வகுப்பெடுக்கும்போது வேறு துறையைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புக்கு வெளியே நின்று இவரது தமிழ்ச் சாரல் பேச்சை ரசிப்பார்கள். பணியில் இருந்து கொண்டே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கட்சியின் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.

அன்பழகனின் இல்வாழ்க்கைத் துணைவி ஜெயலக்ஷ்மி. 1945_ல் பெரியார் தலைமையில் திருமணம். தமிழுணர்வு காரணமாக ஜெயலக்ஷ்மி வெற்றிச்செல்வியானார். வாழ்க்கைத் துணையாக மட்டுமின்றி, இயக்கத்தின் போராட்டங்களிலும் கலந்துகொண்டார் வெற்றிச் செல்வி.

எம்.எல்.ஏ.!

1949_ல் அண்ணா தி.மு.கழகத்தை தொடங்கியபோது, அன்பழகனும் அதில் பங்கு கொண்டு கட்சிப் பிரசாரக் கூட்டங்கள், மாநாடுகளில் பங்கேற்றார். 1957_ல் அண்ணாவின் விருப்பப்படி சட்டமன்றத் தேர்தலில் குதித்து எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். என்றாலும் பேராசிரியர் என்ற அடைமொழியை பச்சையப்பன் கல்லூரி இவர் மீது பச்சை குத்திவிட்டது.

அதன்பிறகு, தி.மு.கழக தொழிற்சங்கச் செயலாளர், மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வித்துறை அமைச்சர் என்று பல பதவிகள் இவரைத் தேடி வந்தன. ஆனால், அந்தப் பதவிகளையெல்லாம் விட, பேராசிரியருக்கு மகிழ்ச்சியூட்டும் பதவி தி.மு. கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற பதவிதான்.

தியாகம்!

பேராசிரியரின் நெடிய அரசியல் வாழ்வு பதவி நிழல்களை மட்டுமல்ல; தியாக வெப்பத்தையும் தாங்கி நிற்பது.

நேருவுக்கு கறுப்புக்கொடி, விலைவாசி உயர்வு கண்டனப் போராட்டம், இந்தி எதிர்ப்பு மறியல் போர், இந்திரா காந்திக்குக் கருப்புக் கொடி, அரசியல் சட்ட எரிப்புப் போர் என்று பல போராட்டங்களில் கலந்துகொண்டு மாதக் கணக்கிலெல்லாம் இவர் சிறைக் கம்பிகளுக்குள் வாழ்ந்திருக்கிறார்.

இது தவிர, 1983_ல் ஈழத் தமிழர் பிரச்னைக்காக எம்.எல்.ஏ. பதவியை கலைஞருடன் இணைந்து இவரும் ராஜினாமா செய்தார். சட்ட எரிப்புப் போராட்டத்தில் இவர் உட்பட பத்துப்பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது.

எளிய வாழ்க்கை!

இவர் ஆடம்பரத்தில் அக்கறையற்றவர். ஆங்கில மருந்துகளைவிட, சித்த மருந்துகளின் மீது ஆர்வம். தினமும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வார். யோகாசனத்திலும் ஈடுபாடு உண்டு. எவர் உரிமையிலும் தலையிட மாட்டார்; தன் உரிமையையும் விட்டுத்தரமாட்டார். துணைவி வெற்றிச்செல்வி காலமானதால் இரண்டாவது மனைவியாக சாந்தகுமாரியை கைப்பிடித்தார்.

கட்சியில் கலைஞருக்கு பிரச்சார பீரங்கிகள் நிறைய உண்டு. ஆனால், கேடயம் ஒன்றே ஒன்றுதான். அது அன்பழகன். சில நேரங்களில் பீரங்கிகள் கலைஞர்மீதே திரும்பிச் சுட்டன. அந்த நெருக்கடியான நேரங்களிலும் இந்தக் கேடயம் தனது நண்பரும் தலைவருமான கலைஞரைப் பாதுகாத்தே வந்திருக்கிறது.

சம்பத் போனார்; எம்.ஜி.ஆர். போனார். நெருக்கடி நிலையின்போது பலர் கையெழுத்துப் போட்டு கட்சியை விட்டு விலகினர். பேராசிரியர் எந்தச் சூழலிலும் விலகினாரில்லை. உயிர் நண்பரும் தலைவருமான கலைஞரிடமிருந்து இவரைப் பிரிக்க பல்வேறு முயற்சிகள் நடந்த போதிலும் அவையெல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.

பேராசிரியர் பற்றி கலைஞர் கூறுவதைக் கேளுங்கள்.

‘இன்று நான் அறுபது லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாம் தி.மு.கழகத்தின் தலைவன். ஆறு கோடி மக்களுக்கான ஆட்சிக்கு முதல்வன்_எனினும் கட்சியிலும் ஆட்சியிலும் எடுக்கும் முடிவுகள் எதுவாயினும் அவரது கருத்து என்னவென்று அறியாமல் செயல்பட்டதில்லை. இது, நான் அவரது வயதுக்கு அளிக்கும் மதிப்பு மட்டுமல்ல; அவரது அறிவுக்கு, ஆற்றலுக்கு, அனுபவத்திற்கு அண்ணாவிற்கு அடுத்து எனக்கு அண்ணனாக இருக்கிறார் என்பதற்காகவும்’ (1997)

கலைஞர் கூற்றில், பேராசிரியர் மீது என்ன ஒரு மரியாதை; அழுத்தமான நம்பிக்கை! அதனால்தான் இந்தமுறை அமைச்சரவையில் தன் பெயரிலான துறைக்கு (நிதி) தனது அண்ணணை அமைச்சராக்கி அழகு பார்க்கிறாரோ கலைஞர்?

அண்ணாவின் நம்பிக்கை!

அந்தக் காலத்தில் சென்னையில் அண்ணாவுக்கு வீடில்லை. காஞ்சியிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் அண்ணா, அன்பழகன் வீட்டில்தான் தங்குவார். அந்த அளவுக்கு அண்ணாவின் மனம் கவர்ந்தவர் அன்பழகன்.

1967_ல் தி.மு.க. ஷெயித்தவுடன், அண்ணாவைத் தேடி கட்சிக்காரர்கள் அலைகிறார்கள். அண்ணா எங்கிருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. அண்ணா இருந்த இடம் ஆஸ்பிரன் தோட்டத்திலிருந்த அன்பழகன் வீடு. அங்கு உட்கார்ந்து கொண்டு நிதானமாக அமைச்சர்கள் பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தார் அண்ணா. பேராசிரியர் மீது அவர் வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கையின் அடையாளம்தான் இது.

பாரதிதாசன் பாடல்
பன்மொழியில் பல்கலையில்
ஆய்வும், பழந்தமிழாம்
பொன்மொழியைத் தம்முயிராய்ப்
போற்றும் பெருமாண்பும்
இன்மொழியில் நாட்டின்
இருளகற்றும் நற்றிறனும்
என்மொழிவேன்! அன்பழகன்
இந்நாட்டின் பொன்னணியே!

_பாவேந்தர் பாரதிதாசன்