செவ்வாய், 30 ஏப்ரல், 2019

தொழிலாளர் தினத்தில் மறைக்கப்பட்ட தலைவர்


தொழிலாளர் தினத்தில் மறைக்கப்பட்ட தலைவர்

உலகெங்கிலும் மே 1 தொழிலாளர் தினமாக நெகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்களுக்காக குரல் கொடுத்த, போராடிய, பாதுகாப்பளித்த, சட்டம் நிறைவேற்றிய தலைவர்களை நினைவு கூறுவர்.

இந்திய தேசத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த பல  போராட்டங்களை அமைப்புகளும் தனி மனிதர்கள் பலரும் ஆங்காங்கே பிரச்சனைகளின் அடிப்படையில்  முன்னெடுத்தனர் என்கிறது நம் வரலாறு.

ஆனால் ஒரு தலைவர் மட்டும் தொழிலாளர் நலன் சார்ந்த 28 சட்ட மசோதாக்களை சத்தமில்லாமல் நிறைவேற்றினார்.

அவரிடம் எந்த தொழிலாளர்களும் தங்களது துயரங்களை போக்க மனு கொடுக்கவில்லை. தங்களுக்காக போராட அழைக்கவில்லை. ஆனாலும் மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பினாலும், மனிதர்களை பாரபட்சமின்றி சமமாக நடத்தும் பண்பை கொண்டிருந்ததாலும் தன்னிச்சையாக அந்த 28 சட்ட மசோதாக்களை வடிவமைத்தார், முன்மொழிந்தார், நிறைவேற்றினார், அமுல்படுத்தினார்

அவர் தான் நமது நவீன இந்தியாவின் தந்தை பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt) அவர்கள்.

அவை:-
1. சம வேலைக்கு பாலின பேதமற்ற சம ஊதியம்

2. தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை நேரத்தை நீக்கி 8 மணி நேர வேலை திட்டத்தை அமுல்படுத்தினார்

3. முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை, ஆகஸ்டு 7, 1942ல் புது டில்லியில் நடத்தினார். முத்தரப்பு பேச்சுவார்த்தையை அமுல்படுத்தினார்.

4. சுரங்க பெண் தொழிலாளர்கள்​ மகப்பேறு அனுகூலச் சட்டம்

5. பெண் தொழிலாளர்கள் சேமநல நிதி

6. பெண்கள் மற்றும் குழந்தைகள், தொழிலாளர் பாதுகாப்பு சட்டம்

7. பெண் தொழிலாளர் மகப்பேறு அனுகூலம்

8. நிலக்கரி சுரங்கங்களில் நிலத்தடி வேலைத் திட்டத்தில் பெண்கள் வேலைவாய்ப்பு குறித்த தடை மீட்பு

9. தொழிற்சங்கங்களை கட்டாயமாக அங்கீகரித்தல்

10. தேசிய வேலைவாய்ப்பு மையங்கள்

11. ஊழியர் அரசாங்க காப்பீட்டு திட்டம்

12. குறைந்தபட்ச ஊதிய திட்டம்

13. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கங்கள் வருங்கால வைப்புநிதி திட்டம்

14. தொழிலாளர் சேமநல நிதி

15. தொழில்நுட்ப பயிற்சி திட்டம் மற்றும் திறன் தொழிலாளர்கள் திட்டம்

16. மகப்பேறு நலச் சட்டம்

17. கிராக்கிப்படி

18. தொழிற்சாலை தொழிலாளர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள்

19. தொழிற்துறை ஊழியர்களுக்கான சுகாதார காப்பீடு

20. சட்டப்பூர்வ வேலைநிறுத்தம்

21. வருங்கால வைப்புநிதி சட்டம்

22. ஊழியர் சம்பள உயர்வு மீளாய்வு செய்தல்

23. இந்திய தொழிற்சாலை சட்டம்

24. இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா,

25. இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம்,

26. மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா

27. தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம்

28. தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா

இந்தியாவில் வருடாவருடம் மே 1 தொழிலாளர் தினத்தை அனுசரிக்கிறோம். ஆனால் ஏனோ தெரியவில்லை இவ்வளவு நன்மைகளை செய்த நவீன இந்தியாவின் தந்தை பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர் அவர்களை மட்டும் தொழிலாளர் தினத்தன்று நினைவுகூற மறந்துவிடுகிறோம்

இது மறதியின் விளைவா அல்லது இருட்டடிப்பா என்று நமக்கு நாமே நேர்மையாக சுயபரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம்

இந்தியாவில் தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்களும் அதன் தாய் கட்சிகளும் அம்பேத்கரை கொண்டாடுவதை தவிர்த்தது மறதியல்ல. இருட்டடிப்பே.

தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அட்டவணை சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே அம்பேத்கர் கொண்டாடப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை

காரணம் பெரும்பாலான தொழிற்சங்க தலைவர்களும், அதன் தாய் கட்சிகளின் தலைமைகளும் பார்ப்பனர்களாகவும் சூத்திரர்களாகவும் இருப்பதே இந்த இருட்டடிபுக்கு பின்னணி.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

இந்த குறள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த விடயத்தில் பாபாசாஹிப் அம்பேத்கர் அவர்களை கொண்டாட மறந்த நமக்கு பொருந்தும்.

மே 1 தொழிலாளர் தினத்தை கொண்டாடுவோம்
அம்பேத்கர் அவர்களை நினைவு கூறுவோம்

திங்கள், 22 ஏப்ரல், 2019

இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

மாதச் சம்பளம் வாங்குபவர்களிடம் பிடித்தம் செய்வதற்கு ஆதாரமான ஃபார்ம் 16 படிவத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

இதில் ஊழியர்கள் தங்களின் வருமானம் முதல் வாடகை மற்றம் அனைத்து வரவு செலவுகளையும் கண்டிப்பாக அதில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.TDS பிடித்தத்திற்கான புதிய படிவம் ஃபார்ம்(Form 16) வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மாற்றி அமைக்கப்பட்ட புதிய படிவத்தை அடிப்படையாகக் கொண்டே மாதச் சம்பளம் வாங்குவோர் தங்களின் 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்யவேண்டும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

*மாத சம்பளதாரர்கள்*

தனி நபர், மாதச் சம்பளம் வாங்குவோர் மற்றும் நிறுவனங்கள் தாக்கல் செய்யும் வருமான வரி ரிட்டன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆண்டு தோறும் மேம்படுத்தி மாற்றிக் கொண்டே வருவது வாடிக்கை. அதே போல் கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிடடன்களையும் இந்த மாத தொடக்கத்தில் மாற்றியமைத்து இணையத்தில் வெளியிட்டது.

*ஃபார்ம் 16*

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அனைத்து படிவங்களையும் வருமான வரித்துறை அடிக்கடி மாற்றிக் கொண்டே வந்தாலும், வருமான வரிக்கழிவுக்கான (Tax Deduction at Source) ஃபார்ம் 16 படிவத்தில் இது வரையிலும் எந்த மாற்றமும் செய்யாமலேயே இருந்து வந்தது.

*வருமான வரி பிடித்தம்*

ஃபார்ம் 16 (Form 16) என்பது ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, அதாவது வருமான வரி உச்சவரம்புக்கு மேற்பட்டு சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் ( (TDS) செய்ததற்காக ஒவ்வொரு காலாண்டு முடிந்தவுடன் வழங்கும் அத்தாட்சி சான்றிதழாகும்.

*TDS பிடித்தம் எப்படி*

பிரதி மாதமும் பிடித்தம் செய்த வருமான வரியானது (TDS) உரிய முறையில் தங்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை இதை வைத்துத்தான் வருமான வரி செலுத்தும் அனைவரும அறிந்துகொள்ளமுடியும். சில நிறுவனங்கள் பிரதி மாதமும் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வரியை காலம் தாழ்த்தியும் வருமான வரித்துறைக்கு செலுத்துவதும் வாடிக்கை.

*வருமான வரி ரிட்டனை தாக்கல்*

தற்போது வருமான வரித்துறை ஃபார்ம் 16 படிவத்தையும் முழுவதுமாக மாற்றியமைத்து விட்டது. இந்த படிவமானது வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்தும் அனைரும் புதிய ஃபார்ம் 16 படிவத்தை அடிப்படையாக வைத்துத்தான் தங்களின் 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்ய முடியும் என்று வருமானத் துறை அறிவித்துள்ளது.

*புதிய படிவத்தில் என்ன இருக்கு*

மாற்றியமைக்கப்பட்ட புதிய ஃபார்ம் 16 படிவத்தில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். வருமான வரி செலுத்துபவர்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் (Savings Accounts) டெபாசிட் செய்துள்ள பணத்திற்கான வட்டி, தள்ளுபடி மற்றும் கட்டணம் ஏதும் இருந்தாலும் அந்த விவரத்தையும் புதிய ஃபார்ம் 16 படிவத்தில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.

*நிரந்தர கணக்கு எண்*

ஃபார்ம் 16 படிவத்தோடு தொடர்புடைய மற்றொரு படிவமான ஃபார்ம் 24க்யூ (Form 24Q) படிவம். இதில் தான் யாருக்கெல்லாம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது, அவர்களின் நிரந்தர கணக்கு எண் (PAN) போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும். இந்த படிவத்தை ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனங்கள் வருமான வரித்துறைக்க தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும்.

*கடன் மற்றும் வீட்டுக்கடன்*

தற்போது ஃபார்ம் 24க்யூ (24Q) விலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரிப் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் பான் எண்ணுடன், அவர்கள் யார் யாரிடம் இருந்து மற்றும் எந்த நிறுவனம் அல்லது நிறுவனம் அல்லாத நபர்களிடம் (Non Institutional Entities) இருந்து கடன் மற்றும் வீட்டுக்கடன் வாங்கியிருந்தாலும் அவர்களின் பான் எண் விவரத்தையும் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

*நிரந்தர கழிவு*

ஃபார்ம் 16 மற்றும் 24க்யூ படிவங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெளிவாக விளக்கிய நாங்கியா அட்வைசர் (ஆண்டர்சன் குளோபல்) நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சோலி மகேஸ்வரி, தற்போது வருமான வரிக்கழிவுக்கான ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 24க்யூ வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் வருமான வரி செலுத்துவோர் தங்களின் வருமான வரி ரிட்டனில் அனைத்து விவரங்களையும் விரிவாக தெரிவிக்க முடியும். குறிப்பாக வருமான வரி பிரிவு 10ன் கீழ் வரும் நிரந்தர கழிவு (standard deduction) மற்றும் வருமான வரி விலக்குக்கான அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிவிக்க முடியும்.

*ஓடி ஒளிய முடியாது*

வருமான வரி செலுத்துவோர் முன்னர் இருந்த படிவங்களில் வரி விலக்கு மற்றும் வரிச் சலுகைக்கான விவரங்களை பிரிவு 80C, 80CCD, 80E மற்றும் 80G பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் போலியாக தெரிவித்து வரிச்சலுகையும் வரி விலக்கும் பெற்று வந்தனர். தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள `பார்ம் 16 மற்றும் 24க்யூ படிவங்களில் போலியான தகவல்களை எல்லாம் தெரிவிக்க முடியாது. அப்படியே போலியாக தெரிவித்து இருந்தாலும் வருமான வரித்துறை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வதை தடுத்து கண்காணிக்கவும் முடியும். இது வருமான வரி செலுத்துவோருக்கு மிகப் பெரிய சிக்கலாகும்.

வாழும் போதே 'நரகமாகும்' வெனிசுலா


வாழும் போதே 'நரகமாகும்' வெனிசுலா

வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்தால், வாழும் போதே நரகம் உறுதி.

இது ஒரு தனிநபருக்கோ, குடும்பத்துக்கோ,
ஒரு ஊருக்கோ அல்ல,

ஒரு நாட்டுக்கே நடந்திருக்கிறது.

அதுவும் இன்றைய உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் எண்ணெய் வளம் அதிகமாக உள்ள நாட்டுக்கே நடந்திருக்கிறது.

ஒருகாலத்தில் லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக *வெனிசுலா* இருந்தது.

இன்று,..
வெனிசுலா வாழத் தகுதியில்லாத நாடாக மாறிவிட்டது.

நாட்டிலிருந்து கிட்டதட்ட 50 லட்சத்துக்கும் மேலானோர் வெளியேறிவிட்டனர்.

இவையனைத்தும் வெனிசுலா அரசின் மிகத் தவறான நிர்வாகத்தினாலும்,
போட்டி நாடுகளின் சூழ்ச்சியினாலும் நடந்தது.

வெனிசுலாவின் இன்றைய நிலை, உலக நாடுகளின் எதிர்கால பற்றிய 'நிகழ்கால உதாரணம்.'

அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு.

ஆனால்,
இன்று நாட்டில் 90 சதவீத மக்கள் உணவு கூட கிடைக்காத நிலையில் வறுமையில் இருக்கிறார்கள்.

எப்படி இந்த நிலைக்கு வெனிசுலா ஆளானது?

2010-ல் ஆரம்பித்தது வெனிசுலாவின் இருண்ட காலம்.

அப்போது அதிபராக இருந்த ஹியாகோ சாவேஸ் வெனிசுலா மக்களுக்காக சில முடிவுகளை எடுத்தார்.

அதாவது,
அனைத்தையும்
'அரசு மயமாக்குவது.'

எண்ணெய் வளத்தைப் பெரிதும் நம்பியிருந்தது வெனிசுலா பொருளாதாரம்.

எண்ணெய் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து மக்களுக்கான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை அரசே வழங்கும்படியான கொள்கை அது.

ஆரம்பத்தில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட 'இந்த கொள்கை அவர்களுக்குப் பாதகமாகும்' என்று அவர்கள் சற்றும் நினைக்கவே இல்லை.

உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி...

ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் வசம் ஒப்படைத்தார் அதிபர்.

உணவு உற்பத்தியை இராணுவத்திடம் கொடுத்தார்.

அவர் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது ஒன்று.

ஆட்சி அதிகாரத்தின் எல்லா நிலைகளிலும் ஊழல் தான் அதிகரித்தது.

அரசு அதிகாரிகள்,
அனைத்து துறைகளையும் சுரண்டி சொந்த வீட்டில் அடுக்கினர்.

எந்தத் துறையையும் அதிகாரிகள் வளர்க்க முற்படவில்லை.

இதனால் நாட்டின் அனைத்து உற்பத்தி துறைகளும் முற்றிலுமாக பாதித்தது.

பெரும் பற்றாக்குறை உருவானது.

*உணவுப் பொருள்களுக்கான தட்டுப்பாடு ருத்ர தாண்டவமாடியது.*

அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

2010-ல் ஆரம்பித்த இந்தப் போக்கு 2014-ல் மிகக் கடுமையான திருப்பத்தைச் சந்தித்தது.

எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த வெனிசுலா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலரிலிருந்து 50 டாலராக பாதியாகக் குறைந்தது.

வெனிசுலாவின் 96 சதவீத வருமானம் எண்ணெய் ஏற்றுமதியில்தான் கிடைத்து வந்தது.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தவுடன், மாற்று பொருளாதாரமாக எந்தத் துறையும் இல்லாததால் நாட்டின் பணவீக்கத்தையும், விலைவாசியையும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

வெனிசுலாவின் பொருளாதாரமே சுக்குநூறானது.

விவசாய உற்பத்தி முற்றிலும் முடங்கிப் போனது.

இதனால்,
இப்போது எங்கும் பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடுகிறது.

விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன.

*அனைத்தும் முடங்கின.*

*உணவு பொருள் உற்பத்தியியில்லாமல்...*

*ஒரு முட்டைக்கு...*
*ஒரு மூட்டை பணம்.*

'அதை கொடுத்தாலும் கிடைக்குமா?'
என்பது சந்தேகமே...

ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், விலை நிர்ணய முறையை வர்த்தகர்கள் நீக்கிவிட்டார்கள்.

அவர்கள் சொல்வதுதான் விலை.

உணவு, தண்ணீர் உட்பட அனைத்து பொருள்களும் மிகப்பெரும் பற்றாக்குறையில் இருக்கிறது.

காரணம் பணவீக்கம்.

2014-ல் 69 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2016-ல் பொருளாதார நெருக்கடி மிகவும் அதிகரித்ததால், 800 சதவீதமாக உயர்ந்தது.

இதற்கே அதிர்ச்சியா?

இரண்டே வருடங்கள்...

2018-ல் வெனிசுலாவின் பணவீக்கம் 16,98,488 சதவீதமாக உயர்ந்தது.

வெனிசுலாவின் நாணயமான *பொலிவரியன் இன்று டாலருக்கு நிகரான மதிப்பு மில்லியனில் இருக்கிறது.*

வெனிசுலாவின் கடன் 105 பில்லியன் டாலர். அதன் கையில் இருப்பது வெறும் 10 பில்லியன் டாலர்.

இன்று,
மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் நிலையோ ரொம்ப மோசம்...

பணம் மூட்டை மூட்டையாக குப்பை கிடங்கில் தீ வைத்து எரிக்கப்படுகிறது.

வெனிசுலாவின் அரசியல்வாதிகள், உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் என எல்லா நிலை மக்களையும் இந்தப் பொருளாதார நெருக்கடி பாதித்து வருகிறது.

இதனால், இங்கு உணவுக்காக கொலை நடப்பதில் முதலிடம்.

2017-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், உணவுப் பற்றாக்குறையால் சராசரியாக 75 சதவீதம் பேர் 8 கிலோ எடை குறைந்துள்ளனர்.

இன்று, 90 சதவீதம் பேர் *வாழ்வாதார* வறுமையில் வாழ்கிறார்கள்.

தினசரி உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலையில் நாட்டின் பாதி சதவீதத்தினர் இருக்கிறார்கள்.

நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியிருக்கிறார்கள்.

வெளியேற நினைப்பவர்கள் பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

வெனிசுலாவில் நடிகைகள் மட்டுமல்ல ஆசிரியர், வழக்கறிஞர் என மிக மரியாதையாக வாழ்ந்து வந்த பெண்கள் கூட பாலியல் தொழிலாளிகளாகப் பல்வேறு நாட்டில் தஞ்சமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், வீட்டுப் பெண்களின் நிலையைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

திருடர்களும், தீவிரவாதிகளும் அதிகரித்து வருகின்றனர்.

பணம் பத்தும் தான் செய்யும்...

ஆனால்,
*பஞ்சமும், பசியும் "எதையும்" செய்யும்.*

பணத்திமிரையும், பசியையும் ஒரே தராசில் வைத்துப் பார்த்தால்...

*'பசியின் முன் பணத்திமிர் மண்டியிட்டு விடும்'* என்பது வெனிசுலாவில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் சாட்சி.

இன்றைய நிலையில், வெனிசுலாவை மீட்பது என்பது, கிட்டதட்ட மணலைக் கயிறாகத் திரிக்கும் சவால்தான்.

தினந்தினம் மக்கள் பலியாவது மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இப்போது வெனிசுலாவுக்கு உதவ எந்த நாடோ அமைப்போ தயாராக இல்லை.

உலக நாடுகளுக்கு வெனிசுலாவின் இன்றைய நிலை 'ஒரு பாடம்.'

ஏனெனில்...

*விவசாயத்தை மதிக்காத* எந்த நாட்டுக்கும் ஏற்படக்கூடியது தான் வெனிசுலாவின் இந்த நிலை.

இன்றைய பணமய பொருளாதாரத்தில்...
போட்டி நாடுகள் எந்த சூழ்ச்சியையும் செய்யலாம்.

நம்முடைய 'திறமையான ஆட்சியாளர்கள்...'

தாங்கள் செய்யும் செயலும், தாங்கள் எடுக்கும் முடிவும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலை உருவாகாமல் தடுக்கலாம்.

*'இன்றைய ஆதாயத்தை மட்டுமே கணக்கில் வைத்து'* எதைத் திட்டமிட்டாலும் அந்த நாடு நாசமாகும் நிலைதான் ஏற்படும்.

*'நீண்டகால அடிப்படையிலான வளர்ச்சித் திட்டங்கள்'* தான் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும்.

அதேசமயம் ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களின் 'பொருளாதாரம் என்பதை விட...

*வாழ்வாதாரம்*' குறித்து தெளிவு வேண்டும்.

இந்தியாவில் தற்போது 'நுகர்வு' என்பது அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது.

நாலைந்து செல்போன் வைத்திருக்கிறோம்.

வீடு முழுக்க ஆடைகளால் நிறைந்திருக்கின்றன.

நிறுத்த இடமில்லை என்றாலும் நாலைந்து கார்களை வாங்குகிறோம்.

இதனால் வேகமான வளரும் பொருளாதாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், நீடித்து வாழ வேண்டுமென்ற ஆசையிருப்பவர்கள்,
*'வாழ்வாதாரத்தை'* தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெனிசுலா,
'அரசு மயமாக்கலை' முன்னெடுத்தது...
வீழ்ச்சியடைந்தது.

இதே போன்று,
தனியார் மய கொள்கையிலும் சில பாதிப்புகள் உண்டு.

ஆகவே,
ஆளும் அரசு...
மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு...

நன்றாக அலசி ஆராய்ந்து...

துணிந்து...
நல்ல முடிவுகள் எடுக்க வேண்டும்.

அப்போது தான் நாடும்,
நாமும் நலமுடன் வாழ முடியும்.

நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும்...

விவசாயி, *விவசாயம் செய்தால் தான் சோறு.*
என்பதை மறந்து விடக்கூடாது.

வெனிசுலா நிலை நாளை நமக்கும் வரலாம்..!

காரணம்...

கிராமங்களில்

நூறு நாள் வேலைத் திட்டம்.

இது நல்ல திட்டம் போல தான் தோன்றும்.

ஆனால்,
நிஜத்தில் நடப்பது...

அங்கு, ஒப்புக்கு தான் வேலை.

'ஓய்வு எடுக்கும்' வேலை தான் அங்கு பிரதானமாக  நடக்கிறது...

சிலர், ஏழைகளின் உடல் நலனை காக்க...!
'பீடி சுற்றுவார்கள்.'

இதனால், பாதிப்பு...

நமது நாட்டில் விவசாயம் செய்பவர்களுக்கு தான்.

விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல்...

விவசாய பணிகள் தான் முடக்கி போகிறது.

இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை.

மீறி...
'அதிக சம்பளம் கொடுத்து, குறைவாக வேலை செய்பவர்களை' வைத்து விவசாயம் செய்தாலும்...

விவசாயத்தில் நஷ்டம்.

இதனால் பல விவசாயிகள் விவசாயத்தை படிப்படியாக விட்டு வருகிறார்கள்.

இந்த நிலை...

இது நமது மக்கள் அனைவருக்கும் அடிக்கபடும் *எச்சரிக்கை மணி!*

வளங்கள் உள்ளவரை மட்டுமே நம்மால் பணத்தைப் புரட்ட முடியும்.

பணத்தையெல்லாம் சேர்த்த பிறகு இறுதியில் வளங்கள் இல்லாத நிலை வரும்போது...

அந்தப் *பணத்துக்கு எந்த மதிப்பும் இருக்காது.*

'ஒரு பொருளுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்' என்பதை வைத்தே அந்தப் பணத்தின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.

வாங்குவதற்கு பொருளே இல்லை,

'பணம் மட்டும் கட்டுக் கட்டாய் இருக்கிறது' என்றால் அந்தப் பணத்துக்கு எந்த மதிப்பும் இல்லை.

அப்போது,
நாமும் மூட்டைகளில் பணத்தைக் கொண்டு போய் கொடுத்து...
முட்டை தான் வாங்கி வரலாம்.

விவசாயத்தை கைவிட்ட எந்த நாடும் வாழாது.

வளராது....!

ஆகவே,
விவசாயம் காப்போம்...

அதற்கான வழிவகை செய்வோம்...

ஒரே தொகுதியில் மாயமான 40 ஆயிரம் வாக்குகள்!

ஒரே தொகுதியில் மாயமான 40 ஆயிரம் வாக்குகள்!

குடியரசுத் தலைவரிடம் முறையிடும் குமரி
மக்களவைத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களான முட்டம், தூத்தூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தேர்தல் அதிகாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் சமாதானம் செய்து தேர்தல் அதிகாரியை மீட்டனர்.

இந்த விவகாரம் இப்போது குமரியில் இருந்து குடியரசுத்தலைவர் வரைக்கும் செல்லும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. காரணம் குமரி மாவட்ட கடற்கரை ஓர 48 மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டிருப்பது நேற்று மாலைதான் முழுமையாகத் தெரிந்தது. இந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் வாக்காளர்களில் பெரும்பாலானோர் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்.

தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சர்ச்சுகள் மூலம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட நிலையில் வரிசை வரிசையாக சென்ற மீனவ மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மீனவ வாக்குகள் மிஸ் ஆகியிருக்கின்றன என்று பலரும் நினைக்க,வாக்குப் பதிவு முடிவதற்கு சற்று நேரம் முன்புதான் குமரி கடற்கரை கிராமங்களான 48 மீனவ கிராமங்களிலும் இந்த திருட்டு விளையாடல் நடந்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து மீனவ மக்கள் போராட்டம் நடத்தியும் வாக்குரிமை அளிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்து குமரியைச் சேர்ந்தவரும் தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் பொதுச் செயலாளருமான சர்ச்சில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகைக்காக நம்மிடம் பேசினார்.

“குமரியின் வரலாற்றிலோ, தமிழக வரலாற்றிலோ இதுவரை இப்படி நடந்ததில்லை. எங்கள் 48 மீனவ கிராமங்களிலும் சரியாக 500 முதல் ஆயிரம் மீனவ வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.

தூத்தூர் கிராமத்தில் 1,200 ஓட்டுகள் வாக்காளர் பட்டியலில் இல்லை. கலியப்பட்டினத்தில் 920 வாக்குகளைக் காணோம், இணையத்தில் 500 மீனவ வாக்குகள் பறிபோயின. இப்படி 48 மீனவ கிராமங்களிலும் மொத்தம் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்துவ மீனவர்களின் வாக்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

நாங்கள் ஃபார்ம் 7 நிரப்பி எங்கள் வாக்குகளை ரத்து செய்ய சொல்லி விண்ணப்பம் கொடுக்கவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வாக்குப் பதிவு செய்தோம். அரசு வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை எல்லாரிடமும் இருக்கிறது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மட்டும் இத்தனை ஆயிரம் ஓட்டுகள் ரத்து செய்யப்பட்டது ஏன்? எங்கள் உரிமையை எங்களிடம் இருந்து திருடியது யார்? இந்தியக் குடியரசுத் தலைவர் , தேர்தல் ஆணையம், குமரி கலெக்டர் இம்மூவரில் யார் இதற்குப் பொறுப்பு? அரசியல்வாதிகள்தான் மக்களிடம் திருடுவார்கள். இப்போது அரசு அதிகாரிகளே திருடர்களாக மாறியிருக்கிறார்கள். எலக்‌ஷன் ப்ரொசீடிங் ஆபீசர், ஆர் ஓ போன்ற அதிகாரிகளிடம் நேற்று கெஞ்சினோம். ஆனால் அவர்கள், ‘லிஸ்ட்ல இல்லேன்னா நாங்க ஒண்ணும் பண்ண முடியாது’ என்று சொல்லிவிட்டனர்” என்ற சர்ச்சிலிடம்,

“இப்பகுதி மீனவர்கள் தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் சரிபார்ப்பு முகாம்களில் வந்து செக் செய்திருக்க வேண்டும்” என்று மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிராத சாஹு சொல்லியிருப்பது குறித்து கேட்டோம்.

“நாங்கள் 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தோம். அப்புறம் ஏன் நாங்கள் போய் செக் செய்ய வேண்டும்? புதிதாக விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிந்துகொள்வதற்காக செக் செய்வார்கள். ஆனால், காலம் காலமாக ஓட்டுப் போட்டு வரும் எங்களை சரிபார்ப்பு முகாம்களில் சரிபார்க்கவில்லை என்பதற்காக நீக்கிவிடுவது என்ன நியாயம்?” என்று கேட்டார்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் சார்பாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டோம்.

“இன்று புனித வெள்ளி, வரும் ஞாயிறு ஈஸ்டர் என்பதால் தேவாலய வழிபாட்டில் அனைவரும் ஈடுபாட்டோடு இருப்பார்கள். எனவே ஈஸ்டருக்குப் பிறகு கூடி விவாதிப்போம். குமரி மாவட்ட தேர்தல் அலுவலர், தமிழக தேர்தல் ஆணையர் மீது குடியரசுத் தலைவர் வரை முறையிடுவோம். தமிழகத்தில் அடுத்து நடக்க இருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலின் போது எங்கள் பகுதியில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் வாக்குகளை யார் ரத்து செய்தார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார் சர்ச்சில்.

மாயமான மீனவ வாக்குகள் அனைத்துமே பாஜகவுக்கு எதிரான வாக்குகள் என்பதும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டுவரும் துறைமுகத் திட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் இக்கடற்கரை மீனவர்களே என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. இப்பிரச்னை பற்றி குமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, “குமரி மீனவர்கள் வாக்கு நீக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சிதறிய தேவாலயம் யார் காரணம்?


சிதறிய தேவாலயம் யார் காரணம்?

இலங்கை தேவாலயங்களிலும் இன்டர் நேசனல்
ஹோட்டல்களிலும் நடைபெற்ற குண்டு வெடிப்பு
எதற்காக நடைபெற்று இருக்க முடியும் யார் காரணமாக இருக்க முடியும் என்று விசாரித்த வந்த இலங்கையின் புலனாய்வு அமைப்பான
இன்டெலிஜென்ட் சர்வீஸ் ஆப் ஸ்ரீலங்கா இதற்கு
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு தான் காரணமாக இருக்கக்கூடும் என்கிறது.இதற்கு உதாரணமாக 2016ம் ஆண்டில்
 இலங்கை யில் இருந்து 32 இஸ்லாமிய மாணவ ர்கள் வெளியேறி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்ததையும் காரணம் காட்டுகிறது
.
ஒரு காலத்தில் இலங்கையில் தலை தூக்கி
இருந்த விடுதலைப்புலிகள் இப்பொழுது இல்லை
என்பதால் இது விடுதலைப்புலிகளின் தாக்குத லாக நிச்சயமாக இருக்க முடியாது. அதே நேர த்தில் இலங்கை மக்கள் தொகையில் பௌத்த
மதம் தான் மெஜாரிட்டி அதாவது சுமார் 70 சதவீ தம் பௌத்தம்.தான்.அடுத்து இந்துக்கள் 13 சதவீ தம் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் 10 சதவீதம் வரை இருக்கிறார்கள். கிறிஸ்தவ ர்கள் 7 சதவீதம்
வரை இருக்கிறார்கள்.

இவங்கையை பொறுத்தவரை இதுவரை தமிழ்
தேசிய சித்தனையுடன் செயல் பட்ட தமிழர்களு க்கும் பௌத்தமத அடிப்படையிலான சிங்கள
இனவாதிகளுக்கும் இடையில் தான் சண்டைகள்
நடைபெற்று வந்ததே தவிர ஒரு காலமும் கிறிஸ்த வர்களை முன் வைத்து எந்த தாக்குதலும் நடை
பெற வில்லை.

அதனால் இப்பொழுது நடைபெற்ற தேவாலயம்
ஹோட்டல்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு க்கு காரணமாக இருப்பது இலங்கை ஹோட்டல்க ளில் தங்கியிருந்த ஐரோப்பிய மக்களை குறி
வைத்தும் அவர்கள் பிரார்த்தனை க்கு சென்ற
தேவாலாயங்களில் தான் குண்டு வெடிப்பு நிகழ்ந்
துள்ளதாக தெரிகிறது.

 எனவே இது உள்ளூர் பிரச்சினை அல்ல  உலக மெங்கும் நடைபெற்று வரும் சிலுவை ப்போரின்
தொடர்ச்சியே இப்போதைய இலங்கை குண்டு
வெடிப்புகள் என்று உறுதியாக கூறுகிறார் கள்.
ஆக மத மோதல்கள் என்பது இந்தியாவில் பிஜேபி தொடங்கி வைத்தது என்று முட்டாள்கள்
கூறுவது வெறும் உளறலே..அது சர்வதேச சண்டை யாகும்.

 உலகம் முழுவதும் யார் ஆட்சி என்பதன் அடை
யாளமாக தோன்றிய சிலுவை ப்போர்கள்
இன்று நேரடியாக இல்லாமல் கண்ணுக்கு தெரி யாத அளவில் கிறிஸ்தவ இஸ்லாமிய நாடுகளு க்கு இடையேநடைபெற்றுவரும் போரில் இந்தியா வும் இந்து க்களும் வெறும் பார்வையாளர்களா கவே இருக்கிறார்கள்.

இன்று இலங்கையில் தேவாலயங்களில் நடை பெற்ற குண்டு வெடிப்பின் பொழுது பலியான
மக்களின் உடல்களில் இருந்து தெறித்து சிதறிய ரத்தம்ஏசுநாதரின் சிலையின் நிறத்தை மாற்றி யதில்இருந்து ஏசு கிறிஸ்து சிந்திய  ரத்தத்தினா ல் தான் மக்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்கும் என்று அப்பாவி மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்த மதபோதகர்களின் நம்பிக்கை மரித்து ப்போய்  விட்டது.

கடவுள் யார்? எங்கு இருக்கிறார் என்று யாராலும்
எந்த மதத்தினாலும்உறுதியாக கூற முடியாத இந்த உலகில் மதம் கடவுள்என்பது ஒரு நம்பி க்கை யின் வடிவம்.அதுநம்முடைய முன்னோர் கள் நமக்கு விட்டுச் சென்றஒரு அடையாளம் . அவ்வளவு தான்.இந்து மதம் கூறும் அன்பே சிவம் என்பதே உலகின் உயர்ந்த தத்துவமாக இருக்க முடியும்.
.
 *இந்த நிலையில் மற்ற மத கடவுள்களை தூற்றி
கொண்டு ஏசு கிறிஸ்துவே உண்மையான கடவுள்
மற்றவர்கள் வணங்குவது தெய்வங்கள் அல்ல
சாத்தான்கள் என்றும் ஏசு கிறிஸ்துவால் தான் உங்களை காப்பாற்ற முடியும் என்று பிரச்சாரம் செய்து வந்த மதபோதகர்களின் நம்பிக்கை யை
நகைப்புக்குள்ளாக்கி உள்ளதுஇலங்கையில்
தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள்.
*
கொழும்பு வில் உள்ளபுனித அந்தோனியார் கோயில் நெகாம்போவில்உள்ள புனித செபாஸ்டி யன் சர்ச் அடுத்து பட்டிகலோயாவில் உள்ள ஷியான் சர்ச் ஆகியவற்றிலும் வெடித்த குண்டு
கள் மூலம் குறைந்தது 150 பேருக்கு மேல் இறந்து
ள்ள நிலையில் இது மதரீதியிலான தாக்குதலின்
அடையாளம் என்றும் ஆரம்பக் கட்ட விசாரணை யில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐ எஸ் அமைப்பு தான்காரணமாக இருக்கும் என்று இலங்கையில்இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கொலும்புவில் உள்ள சின்னமான் கிராண்ட்
சங்க்ரிலா ஹோட்டல் கிங்க்ஸ் புரி ஹோட்டல்க ளில் நடைபெற்ற தாக்குதல்கள் ஈஸ்தர் பண்டிகை
யை முன் வைத்து அங்கு தங்கியிருந்த வெளி நாட்டு பயனிகளை தாக்கவே நடைபெற்றுள்ளதா ல் இதுநிச்சயமாக இலங்கையில் இருந்த உள்நா ட்டுதீவிரவாதத் தின் தொடர்பாக நிச்சயமாக இருக்கமுடியாது.

.

பொன்பரப்பி கலவரமும் கள நிலவரமும்.


பொன்பரப்பி கலவரமும்
கள நிலவரமும்.

20.04.2019

பொன்பெரப்பி கிராமம்.

வன்னியர் சமூகத்தில் 3000
தலகட்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். பறையர் சமூக மக்கள் 600 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். வன்னியர் சமூதாய மக்கள் பெருபாண்மையிராக இருக்கின்றனர்.

தொடக்கபள்ளி மட்டும் சேரி பகுதியில் இருக்கிறது. மற்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் வன்னியர் தெருக்களுக்கே செல்ல வேண்டும்.

இரு சமூதாய மக்களும் பெரிய அளவில்
பொருளாதரத்தில் உயரவில்லை அடிப்படை வசதியான சாலை வசதியை கூட முழுமையாக இல்லாத கிராமமாக உள்ளது. ஊர் முழுவதும் இரு சமூக மக்களின் வீடுகளும் "ஓட்டு வீடாக"-தான் இருக்கிறது. வன்னியர் சமூதாய மக்களிடம் நிலம் கொஞ்சம் இருக்கிறது.
சேரி மக்களிடம் பெருபாண்மையோர்
இடத்தில் நிலம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

பொன்பெரப்பி கிராமத்தில் இதுவரை
சாதிய கலவரம் நடந்தது இல்லை.
இதுவே முதல்முறை. இதற்க்கு முன்பு
நடந்த அனைத்து தேர்தல்களிலும் இரு சமூதாயமும் கட்சி ரீதியாக ஒன்றிணைந்தே செயல்பட்டு உள்ளனர்.

கிராமத்தில் பறையர் வன்னியர்
சமூக மக்கள் உறவுமுறை போன்றே
பழகி உள்ளனர். அனைத்து விடயங்களிலும். உறமுறை அடிப்படையிலே இருவரையும்
மாறி மாறி அழைத்துகொண்டு உள்ளனர்.

பறையர் சமூகத்தை சார்ந்த பெரும்பாண்மையோர்  சென்னையில்
உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்துகொண்டு உள்ளனர்.
கல்லூரி படிப்பை முடித்தவர்களாக இளைஞர்கள் இருக்கின்றனர் வேலையில்லாமால் சென்னையில்
ஹோட்டல் மார்கெட் போன்ற பகுதியில் வேலை செய்துகொண்டு இருக்கின்றனர்.

வன்னியர் சமூகத்திலும்
பெருபாண்மையோர் இதே நிலையில்தான் இருக்கின்றனர். விவசாயிகளாக தின கூலிகளாக இருக்கின்றனர்.

#கலவரத்திற்கான_காரணங்கள்:

பாராளுமன்ற தேர்தல் அறிவிககபட்டவுடன் சிதம்பரம் தொகுதியில் முனைவர். திருமாவளவன் அவர்கள் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று உறுதியானவுடன் பொன்பரப்பி கிராமத்தில் உள்ள பறையர் சமூதாய மக்கள் ஒன்று கூடி தங்களது வாக்குகளை பானை சின்னத்திற்கு அளிப்பது என்றும். சேரிகளுக்குள் மற்ற கட்சியின் சின்னங்கள் வரைய  வேண்டாம் என்றும் முடிவு செய்து உள்ளனர்.

நாமூம் வன்னியர் தெருவிற்குள் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு போக வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளனர். வன்னியர் சமூக திமுக பொருப்பாளர்களிடம்
கலந்து ஆலோசித்து.

வாக்குபதிவு தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வன்னியர் சமூகத்தில் உள்ள திமுக பொருப்பாளர்களில் ஒருவர்
பறையர் சமூகத்தில் இருக்கும்
விசிக பொருப்பாளர்களிடம்
வாக்கு பதிவு அன்று எங்க ஆளுங்க குறிப்பாக
(இந்து முண்ணனி+ பாமக காரனுங்க) ஏதாவது பிரச்சனை பன்னுலாம்னு திட்டம் போடுகிறார்கள். அதனால் உங்கள் சமூகத்தார் காலையிலே வாக்கு அளிக்க ஏற்பாடு செய்துவிடுங்கள் 10 மணிக்குள் முடித்துவிடுங்கள். அப்புறம் ‌அவர்கள் எதாவது பிரச்சனை செய்தால் எங்களால் ஒன்னும் செய்ய முடியாது நானும் படையாட்சி அவனும் படையாட்சி அவனுங்க ஏற்கனவே நான் என் வீட்டில் பானை சின்னம் வரைந்ததால் கடும் கோபத்தில் உள்ளனர். என்று கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த மூன்று நான்கு
ஆண்டுகளாக இந்து முண்ணனி
இந்த பகுதியில் காலூன்றி வளர்ந்து வருகிறது. அங்கு இருக்கும் வன்னியர் இளைஞர்களை சமீபகாலமாக அவர்களே வழிநடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் இந்து முண்ணனியை சார்ந்த மாவட்ட பொறுப்பாளர் #இராஜேந்திரன் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

அரியலூர் நந்தனி கொலை வழக்கில்
தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

18.04.2019 அன்று தலித் மக்கள் அனைவரும் பெரும்திராளாக
காலை 8 மணி முதலே வாக்களிக்க
வந்து கொண்டு இருந்தனர்.

10 மணிக்குள் 400 முதல் 500 வாக்குகள்
தலித் மக்கள் அளித்துவிட்டனர்.
இந்த சம்பவம் வாக்குச்சாவடியில்
இருந்த பாமக இந்து முன்னணி சார்ந்தவர்களுக்கு மிகவும் எரிச்சல்வூட்டும் நிகழ்வாக இருந்துள்ளது.

வாக்குச்சாவடியில் இருந்த வன்னிய சமூகத்தை சார்ந்த இளைஞர்கள்
வாக்களிக்க வந்த மக்களை கொச்சை வார்த்தைகளில் திட்டி உள்ளனர்.
 இதனை கண்டுக்கொள்ளாமல்
வாக்களித்து விட்டு வந்துள்ளனர்.

தலித் சமூகத்தில் இருந்து 45 வயதுடைய ஒருவர் வாக்களிக்க செல்லும் போது அவரை தாகாத வார்த்தையில் திட்டி இருக்கின்றனர். அதனை கண்டுகொள்ளாமல் அவர் வாக்களிக்க உள்ளே சென்று உள்ளார். வாக்களித்து விட்டு வெளியே வரும்பொழுது அவர் முன்னாடியே #பானையை போட்டு உடைத்து உள்ளனர் வன்னியர்
இளைஞர்கள்.

அவர் "ஏன்டா இப்படி செய்கிறீர்கள்"
என்று கேட்டுவிட்டு வன்னியர் பகுதியை சார்ந்த திமுக பொருப்பாளரிடமும்
காவல்துறையிடமும் தகவல் தெரிவித்துவிட்டு சேரி பகுதிக்கு நடந்து சென்று உள்ளார். காவல்துறை அந்த இளைஞர்களை முதலில் கண்டித்து இருக்கிறார்கள். வன்னிய சமூகத்தில் இருக்கும் சிலரிடம் முறையிட்டும் இருக்கிறார்கள்.

வாக்குசாவடி அருகே இருக்கும் சாலைக்கு அருகில் வன்னிய சமூதாயத்தை சார்ந்த
மாற்றுதிறணாளி ஒருவர் #மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டு இருந்திருக்கிறாரார். சேரி பகுதிக்கு விற்பனை செய்வது தொடர்பாக பேசிக்கொண்டு  இருக்கிறார்.

வாக்களித்துவிட்டு சாலையில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்த அவர்
இதனை காதில் வாங்கிகொண்டு
"மது விற்பதை உங்கள் பகுதியோடு நிறுத்தி விடுங்கள் சேரி பகுதிக்கு வேண்டாம் பானையை போட்டு உடைக்கிறார்கள் நீ மதுவிற்க்க சேரிக்கு
ஆள் அனுப்புகிறார் பிரச்சனை செய்ய வேண்டும் என்றே இப்படியெல்லாம் நடந்துகொள்கிறீர்களா" என்று கேட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்கிறார்.

அப்பொழுது அங்கு மது அருந்திகொண்டு  இருந்த முதியவர் ஒருவர் தட்டுத்தடுமாறி (விழுந்து) எழுந்து அவரை தாகாத வார்த்தையில் திட்டுகிறார். இவறும் பதிலுக்கு ஒன்றை கூறிவிட்டு வீட்டிற்கு விரைகிறார்.

நடந்த நிகழ்வுகளை சேரி பகுதிக்கு வந்து கூறுகிறார் அங்கு இருக்கும் இளைஞர்கள் இதனால் கோபம் அடைகின்றனர். அங்கு இருக்கும்
விசிக பொறுப்பாளர்கள் இளைஞர்கள் யாரையும் அங்கு செல்ல வேண்டாம் எதுவும் அவர்களிடம் கேட்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இளைஞர்கள் அனைவரும் சேரி பகுதிக்குள் இருக்கும் தெருவின் தொடக்கத்தில் அமர்ந்து உரையாடி கொண்டு இருக்கின்றனர்.

மதுவிற்ற இடத்தில் நடந்த நிகழ்வை அங்கு இருக்கும் வன்னியர் இளைஞர்கள் அறிந்துகொண்டு.
10 பேர் கொண்ட கும்பல் சேரி பகுதிக்கு இரு சக்கர வாகனங்களில் வந்து தெருவின்‌ முகப்பு பகுதியில் நின்றுகொண்டு #பானையை சாலையில் போட்டு உடைத்து விட்டு .
" நாங்க இப்படிதான் பன்னுவோம் டா உங்களலாம் ஓட்டு‌ போடவிட்டதே
பெரிய விஷயம் அப்புறம் என்னடா பானை உடைச்சானுங்க அத  உடைச்சானுங்கனு புலம்பிகிட்டு‌ ரோட்டில் போறிங்க பற‌ தேவிடியா பயலுகளாக வாங்கடா" என்று தாகாத வார்த்தைகளை
கூறி திட்டி உள்ளனர்.

 சேரி பகுதியில் இருந்து இளைஞர்கள்
சிலர் சென்று இதனை தட்டிகேட்டனர்.
10பேர் கொண்ட கும்பலில் இருந்து ஒருவன் "என்ன திமிரு‌ *****யா பேசுற" என்று சேரி பகுதி இளைஞரை முதலில் தாக்குகிறார்  தாகாத வார்த்தையில் திட்டி. உடனடியாக அங்கு இருந்து சேரி இளைஞர்களும் பதிலுக்கு தாக்குகின்றனர். உடனடியாக
விசிக பொறுப்பாளர் அருகில்
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை அழைத்து வந்து பிரச்சனையை நிறுத்துகிறார்‌.

சத்தத்தை கேட்டு சேரி பகுதியில் இருந்த மக்கள் சாலைக்கு அருகில் வந்தனர். வன்னியர் பகுதி மக்களும் சேரி அருகில் வந்தனர் காவல்துறை தலையிட்டால் பிரச்சினை தொடராமல் முடிக்கப்பட்டது. அனைவரும் கலைந்து சென்றனர்.

காவல் துறையினர் சேரி பகுதியை விட்டு சென்ற 15 நிமிடங்களில் 100 மேற்பட்ட வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் கைகளில் கம்புகள் உருட்டு கட்டகைகளுடன் சேரி பகுதிக்கு வருகின்றனர். சாலையில் அவர்கள் வருவதை அறிந்த சேரி இளைஞர்கள் கூச்சலிட்டு அனைவரையும் வீட்டின் உள்ளே செல்ல சொல்லுகின்றனர் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்களை.

சேரியில் இருக்கும் இளைஞர்கள்
மற்றும் நடுத்தர வயதினர் 15,20 நபர்கள் சேரி நுழைவு பகுதியில் வந்து கொண்டு இருந்த வன்னியர்களை தடுக்க செல்கின்றனர். தடுக்க சென்ற இளைஞர்களை சாதிவெறி கும்பல் உருட்டு கட்டையால் கம்பிகளால் தாக்கிவிட்டு சேரியின்‌ உள்ளே வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவாதால்
தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அவரிகளிடம் இருந்து தப்பித்து செல்கின்றனர். சேரியில் உள்ளே புகுந்த சாதிய கும்பல் சேரியில் இருக்கும் வீடுகள் முழுவதையும் சூறையாடுகின்றனர்.
பற தேவிடியா பயலுகளா வெளிய வாங்கடா உங்களுக்கு அவ்வளவு
திமிறா என்று கூறிக்கொண்டே இருசக்கர வாகனங்கள் சேரியில் இருந்த விசிக கொடிகள் பாபாசாகேப் அம்பேத்கர் பதாகைகளை சேதப்படுத்தி உள்ளனர்.
சேரி பகுதிக்கு வரும் தண்ணீர் குழாய்களை அடித்து நொறுக்கி உள்ளனர். ஒரு இரு சக்கர வாகனத்தை எரித்து உள்ளனர்.

அரைமணி நேரமாக இத்தகைய கொடூர நிகழ்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது. அப்பொழுது நான்கு காவல்துறையினர் மட்டுமே அங்கு வந்துள்ளனர் அப்பொழுது அவர்களால் கட்டுபடுத்த இயலவில்லை பின்பு காவல்துறையினர் அதிகளவில் வருகை பார்த்து சாதிய கும்பல் சேரிக்கு பின்புறம் இருக்கும் ஓடை வழியாக தப்பித்து சென்று உள்ளனர்.

சாதிய கும்பல்கள் பயன்படுத்திய 5,6 அடி கொண்ட கம்புகளின் முனைகளில்
ஆணி அடித்து தயார் செய்து எடுத்து வந்துள்ளனர்.

பொன்பரப்பி பகுதியை சார்ந்த வன்னியர்கள் மட்டும் தாக்குதலை நடத்தவில்லை குடிகாடு பகுதியை சார்ந்த வன்னியர்களும் சாதிவெறி கும்பலில் இருந்து உள்ளனர்.

இத்தகைய தாக்குதலுக்கு
முக்கிய காரணம் முனைவர்.திருமாவளவன் அவர்களின் வெற்றியை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பல்வேறு கட்சிகளில் சிதறி கிடந்தது மக்கள் அரசியல் ரீதியாக
இந்த தேர்தலில் ஒன்றாக நிற்பதை அவர்களால் சகித்துகொள்ள இயலவில்லை.

இந்து முன்னணி அமைப்பினர்
மற்றும் பாமக வினரால் திட்டமிட்டே
இத்தகைய நிகழ்வு நடத்தபட்டுள்ளது.

செயல்திட்டத்தை
#இந்து_முண்ணனி சார்ந்த #இராஜேந்திரன் #பாமக
பொருப்பாளருமே
தீட்டி உள்ளனர்.

பாதிப்புகள்:

10 இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது அதில் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் இருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் அரியலூர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் அடித்து நொறுக்கபட்டு உள்ளது.

இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதபடுத்தபடுட்டு உள்ளது.

ஒரு இருசக்கர வாகனம் தீயிட்டு எரிக்கபட்டு உள்ளது.

பெண்கள் குழந்தைகள் சிலருக்கு
சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

வீட்டின் திண்னை பகுதியில்
அமர்ந்து இருந்த ஒரு முதியவரின் விரல்கள் சாதி வெறியர்களால் ஒடைக்பட்டுள்ளது.

வீட்டின் முன் இருந்த வேலிகள் மற்றும்
மாட்டு கொட்டாய்கள் சேதப்படுத்தபட்டு
உள்ளது.

சேரிபகுதிக்கு வரும் குடிநீர் குழாய்கள்
அடித்து நொறுக்கபட்டுள்ளது.

Dr.அம்பேத்கர் மற்றும்
விசிக மன்ற பதாகைகள் சேதபடுத்தபட்டுள்ளது.

வீட்டிற்கு வெளியே இருந்து பாத்திரங்கள் சேதமாகி உள்ளன.

கள நிலவரம்.

பொன்பெரப்பி கிராமம் முழுவதும் மாயான அமைதி நிலையில் இருக்கிறது.

ஊரின் உள்ளே நுழையும் போதே
ஒரு வித அச்சம் ஏற்படுகிறது.
ஊரின் நுழைவு பகுதியில்
#அக்னி_சட்டியை பெரிய அளவில் வைத்துள்ளனர். ஆங்காங்கே வன்னியர் சங்கம் மற்றும் பாமக கொடிகள் பறக்கிறது.

எது சேரி தெரு ஊர் தெரு என்று எளிதாக அடையாளம்காண இயலவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம் போன்றே தோற்றமளிக்கிறது.

சேரி பகுதி முழுமையாக காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது. சேரி பகுதியின் உள்ளே காவல்துறையினர் மற்றும் மாற்று உடையில் புலனாய்வு துறையினர் வலம் வருகின்றனர்.

வெளி ஆட்கள் மற்றும் கட்சி முற்போக்கு அமைப்பு நிர்வாகிகள் யாரையும் சேரியின் உள்ளே காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. சேரி பகுதிக்கும் செல்லும் அனைத்து பாதைகளிலும் காவல்துறையினர் இருக்கின்றனர்.

சேரிபகுதியில் இருந்தும் யாரும் வெளியே செல்ல முடியவில்லை.

சேரி பகுதியில் இருக்கும் முக்கியமான‌ நபர்களை சமாதானம் செய்யும் வேலை மிக தீவிரமாக காவல்துறை உதவியுடன் நடைபெற்று கொண்டு இருக்கிறது ஒரு புறம்.

சேரி பகுதியில் இருக்கும் பெண்களை அழைத்து பணம் தருவதாக மற்றும் உதவி செய்வதாக வன்னியர் சமூகத்தில் இருந்து ஒரு முக்கிய நபர்
அரசு அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள்
அங்கு இருந்து சென்றுவிட்டனர்.
துண்டு சீட்டில் தொலைபேசி எண்ணை ஒருவரிடம் எழுதி கொடுத்துவிட்டு.

சேரி பகுதியில் இருக்கும் இளைஞர்கள் அழைத்து புலனாய்வு துறையினர் நண்பர்கள் போல உரையாடி செய்திகளை அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளுகின்றனர்.

பெண்களும் குழந்தைகளும் மிகுந்து அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக ஒரு பெண் குழந்தை இன்னும் அந்த அச்சத்தில் இருந்து மீளவே இல்லை. நடந்த நிகழ்வை பற்றி பேசிகொண்டு இருக்கும் போதே அழுகிறாள்.

புலம்பல்கள் செல்லும்
இடம்மெல்லாம் கேட்கின்றன.

பெரிய அளவில் அரசியல் மற்றும்
சமூக விழிப்புணர்வு இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.

காவல்துறை நடவடிக்கை.

முதல்கட்டமாக வன்னியர் சமூகத்தில் இருந்து 12 நபர்களை கைது செய்து உள்ளனர்.

சேரி பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்களை இன்று சீரமைத்து தந்துள்ளனர்.

கள ஆய்வு பணிகளில்.

ஊரின்‌ பின்புறமாக உள்ள ஓடை
பகுதி வழியே சென்றுதான் சேரியை அடைந்தோம்.

சேரிக்குள் சென்றவுடனே இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் " வாங்க சாமிகளே என்ன ஊருயா சாப்பிடிங்களா ஏ போய் தண்ணி மொண்டுகிட்டு வா" என்று அந்த சேரியில் இருக்கும் தாய்மார்களின் அன்பு ஒரு கணம் நம்மை நெகிழ செய்கிறது.

உடனடியாக காவல்துறை நாங்கள் வந்ததை அறிந்து எங்களை கவனிக்க ஆரபித்துவிட்டனர். எங்களை வெளியேற்ற தீவிரமாக முனைப்பு காட்டினார்கள்.

பாதிக்கப்பட்ட வீடுகளை புகைப்படம் எடுக்க முழுமையாக அனுமதிக்கவில்லை.

காவல்துறையினர் சிலர் இடத்தில் வேண்டுகோள் வைத்து உடனே‌ பேசிவிட்டே சென்றுவிடுவாதாக கேட்டுகொண்டு அங்கு இருப்பவர்களிடம்
உரையாடி கள நிலவரங்களை அறிந்துகொண்டோம்.

60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்

" சின்னஞ்சிறு வாண்டுகள் எல்லாம் ரோட்டில நின்னுகிட்டு டேய் பற தேவிடியா பயல்களானு திட்டுரான் தம்பி நமக்கு அவுனுங்கள
அந்த வார்த்தையை சொல்லி திட்ட
வாய் வறுமாட்டிகிது பா. பறையன‌ அவளவு கேவலாமா பா நம்ம என்ன‌ பாவம் பன்னுனோம்"

 என்று ஆதங்கபட்டு பேசினார்.
கண்கள் குளமானதே தவிற
சென்ற‌ கோழைகள் எங்களால்
எதுவும் செய்ய இயலவில்லை.

 Manimaran Law
 அ.இ. அழகுமுத்து
ஆ.கார்த்திகேயன் செந்தமிழ் இயற்கை பண்ணை
அம்பேத் கோகுல்
 

 பதிவு
             ~ அம்பேத் கோகுல்

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

தமிழக அரசியல் களத்தில் டாப்–30 கோடீஸ்வர வேட்பாளர்கள் பெயரும் சொத்து மதிப்பும்...

தமிழக அரசியல் களத்தில் டாப்–30 கோடீஸ்வர வேட்பாளர்கள் பெயரும் சொத்து மதிப்பும்...

1. வசந்த குமார் (காங்கிரஸ்) கன்னியாகுமரி தொகுதி – ரூ. 417.48 கோடி

 2. இசக்கி சுப்பையா (அமமுக) தென்சென்னை தொகுதி - ரூ.237.56 கோடி

3. சி.மகேந்திரன் (அதிமுக) பொள்ளாச்சி தொகுதி – ரூ.172.32 கோடி

 4. ஆர். மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) – கோவை தொகுதி – ரூ.131.48 கோடி

 5. ஏ.சி.சண்முகம் (அதிமுக கூட்டணி) – வேலூர் தொகுதி - ரூ.125.83 கோடி

 6. ஜெகத்ரட்சகன் (திமுக) அரக்கோணம் தொகுதி - ரூ.114.69 கோடி

 7. பாரிவேந்தர் ( ஐஜேகே) – பெரம்பலூர் தொகுதி - ரூ. 97.26 கோடி

 8. சாருபாலா தொண்டைமான் (அமமுக) – திருச்சி தொகுதி- ரூ. 92.37 கோடி

 9. கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) சிவகங்கை தொகுதி - ரூ.79.34 கோடி

 10. எல்.கே.சுதீஷ் (தேமுதிக) கள்ளக்குறிச்சி தொகுதி - ரூ.68.57 கோடி

 11. சி.பி.ராதா கிருஷ்ணன் – (பாஜக) கோவை தொகுதி – 67.09 கோடி

 12. பி.முருகேசன் (அமமுக) – தஞ்சாவூர் தொகுதி - ரூ.64.96 கோடி

 13. டி.எம். கதிர் ஆனந்த் (திமுக) வேலூர் தொகுதி - ரூ.57.22 கோடி

 14. ஞானசேகர் (அமமுக) திருவண்ணாமலை தொகுதி - ரூ. 51 கோடி

 15. சின்னராஜ் ( கொ.ம.தே.க) – பொள்ளாச்சி தொகுதி - ரூ.48.34 கோடி

 16. கௌதம சிகாமணி (திமுக) கள்ளக்குறிச்சி தொகுதி - ரூ.47.09 கோடி

 17. டி.ஆர்.வி. எஸ்.ரமேஷ் (திமுக) கடலூர் தொகுதி - ரூ.42.32 கோடி

 18. வி.ஆர். கலாநிதி (திமுக) வடசென்னை - ரூ..32 கோடி

 19. வைத்தியலிங்கம் (பாமக) ஸ்ரீபெரும்பலூர் - ரூ.37.31 கோடி

 20. நவாஸ்கனி (முஸ்லீம் லீக்) ராமநாதபுரம் தொகுதி - ரூ.36-46 கோடி

 21, அன்புமணி ராமதாஸ் (பாமக) தர்மபுரி தொகுதி- ரூ. 33.84 கோடி

 22. கனிமொழி (திமுக) தூத்துக்குடி தொகுதி - ரூ.30.33 கோடி

 23. சாம் பால் (பாமக) மத்திய சென்னை தொகுதி - ரூ.30.18 கோடி

 24. என்.ஆர். அப்பாதுரை (அமமுக) கோவை தொகுதி - ரூ. 29.59 கோடி

 25. கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) தென்காசி தொகுதி - ரூ.25. 45 கோடி

 26. ஆர்.கோவிந்தசாமி (பாமக) கடலூர் தொகுதி - ரூ.25.45 கோடி

 27. வி.பாண்டி (அமமுக) சிவகங்கை தொகுதி – 23.92 கோடி

 28. பி.தம்பிதுரை (அதிமுக)  கரூர் தொகுதி – ரூ. 23.41 கோடி

 29. ஞானதிரவியம் (திமுக) நெல்லை தொகுதி - ரூ. 23.26 கோடி

 30. டி.ஆர்.பாலு (திமுக) – ஸ்ரீபெரும்புதூர் தொகுதி – ரூ. 20.42 கோடி

ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்... அமலுக்கு வரும் விதிமுறைகள் என்னென்ன?


ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்... அமலுக்கு வரும் விதிமுறைகள் என்னென்ன?

சிந்தியுங்கள்... செயல்படுங்கள்

👆நம் வாக்கு... நம் உரிமை👆
ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்...!!
👆மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது.

👆தேர்தல் விதிகளின்படி, வாக்குப்பதிவு முடியும் 48 மணி நேரத்திற்கு முன்பாக பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

👆இதன்பின் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது.

👆மேலும், தேர்தல் தொடர்பான எதையும் திரைப்படம், தொலைக்காட்சி, எப்எம் ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்றவை வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது.

👆இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்யக்கூடாது. இவற்றை மீறினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

👆தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், அத்தொகுதியின் வாக்காளர் அல்லாதோர் அனைவரும் இன்றுடன் அதாவது 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

👆வேட்பாளருக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் செல்லாததாகி விடும்.

👆வேட்பாளர்கள், சமுதாய கூடங்கள், விருந்தினர் மாளிகைகள், தர்ம சத்திரங்கள் முதலான இடங்களை வாக்கு சேகரிக்கும் இடமாக பயன்படுத்தக்கூடாது.

👆வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் அவரது பயன்பாட்டிற்கு ஒரு வாகனம், தேர்தல் முகவர் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கான அவரது பணியாளர்கள் அல்லது கட்சிப்பணியாளர்கள் பயன்பாட்டிற்கு ஒரு வாகனத்திற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிடம் தனி அனுமதி பெற வேண்டும்.

👆வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், திரும்ப அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுக்கவோ, பயன்படுத்தவோ அனுமதியில்லை. இதை மீறி நடந்தால் தண்டிக்கப்படுவர்.

👆அரசியல் கட்சிகளின் தற்காலிக அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அங்கு அனுமதிக்கக்கூடாது.

👆மேலும், இன்று மாலை 6 மணி முதல் கருத்துக்கணிப்பு உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது.


திங்கள், 15 ஏப்ரல், 2019

#Chowkidar & co எப்படி ஓட்டு கேட்பார்கள்

#Chowkidar & co எப்படி ஓட்டு கேட்பார்கள்,

1. NEET Exam நாங்கள் கொண்டு வந்தோம் அதனால் வாக்களியுங்கள்
2. GST நாங்கள் கொண்டு வந்தோம் அதனால் வாக்களியுங்கள்
3. Demonetization நாங்கள் கொண்டு வந்தோம் அதனால் வாக்களியுங்கள்
4. கருப்பு பணத்தை ஒழித்து விட்டோம் அதனால் வாக்களியுங்கள்
5. 15 லட்சத்தை கூறி ஆட்சிக்கு வந்த நாங்கள், ஒவ்வொரு வருடமும் SBI சுமார் 5000 கோடி வருவாய்(Minimum balance deduction) ஈட்டி உள்ளது அதனால் வாக்களியுங்கள்
6. HAL, BSNL போன்ற அந்நிய நிறுவனங்களை ஒழித்து விட்டோம் அதனால் வாக்களியுங்கள்
7. Court, CBI, Election commission, RBI போன்ற அனைத்து அரசு நிறுவனகங்களையும் நாங்கள் ஆக்கிரமித்து விட்டோம் அதனால் வாக்களியுங்கள்
8. விவசாயிகளை சாகடித்து விட்டோம் அதனால் வாக்களியுங்கள்
9. Hindhi மற்றும் Hindhi பேசும் மக்களை உங்கள் மீது திணித்து விட்டோம் அதனால் வாக்களியுங்கள்
10. Supreme court நீதிபதிகளை Press conference கொடுக்க செய்தோம் அதனால் வாக்களியுங்கள்
11. வேலைவாய்ப்பிற்கு பதிலாக சுய தொழில் (Pakkoda Sale) தொடங்க வழி வகை செய்தோம் அதனால் வாக்களியுங்கள்
12. Ambani, Athani போன்ற ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்தினோம் அதனால் வாக்களியுங்கள்
13. Jio University-ஐ Eminence ஆக்கினோம் அதனால் வாக்களியுங்கள்
14. Gas Bill-ஐ Rs.900-மாக கொண்டு வந்தோம் அதனால் வாக்களியுங்கள்
15. புது புது India-வை உருவாக்கினோம் (Make in India, Digital India) அதனால் வாக்களியுங்கள்
16. அந்த ஏழு பேரை இன்னும் விடுவிக்கவில்லை அதனால் வாக்களியுங்கள்
17. அந்த 13 பேரை கொன்று குவித்தோம் அதனால் வாக்களியுங்கள்
18. மதத்தின் பெயரால் நாட்டை பிரித்தோம் அதனால் வாக்களியுங்கள்
19. Pakistan உடன் போர் செய்தோம் அதனால் வாக்களியுங்கள்
20. அதானியின் சொந்த விமானத்தில் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த நன்றியை காட்ட, ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய மக்கள் பணத்தை கொடுத்தோம் அதனால் வாக்களியுங்கள்.
21. மாடுகளை காப்பாற்றினோம் (Except women, children) அதனால் வாக்களியுங்கள்
22. 3000 கோடியில் சிலை வைத்தோம் அதனால் வாக்களியுங்கள்
23. மீத்தேன் ஹைட்ரோகார்பன் நியூட்ரினோ போன்ற திட்டங்களை கொண்டு வந்தோம் அதனால் வாக்களியுங்கள்
இது போன்ற எண்ணற்ற திட்டங்களை உங்கள் நலனுக்காக கொண்டு வந்துள்ளோம் அதனால் வாக்களியுங்கள் !!!!!
24. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், தனியாரிடம் விலை நிர்ணயத்தை கொடுத்து பெட்ரோல், டீசல் விலையை தினமும் ஏறுமுகத்தில் வைத்தோம் அதனால் வாக்களியுங்கள்.
25. 100 நாட்களுக்குள் பணமதிப்பிழப்பின் தாக்கம் குறையாவிட்டால் என்னை உயிருடன் கொளுத்துங்கள் என்று கூறிவிட்டு இன்று உங்களிடமே வாக்கு சேகரிக்க வருகிறோம் அதனால் வாக்களியுங்கள்.
26. தமிழக மக்கள் வாக்களித்து நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று கூறினோம் அதனால் வாக்களியுங்கள்.
27. சுவாதிக்காக தெருவில் இறங்கி போராடிவிட்டு, பொள்ளாச்சி விசயத்தில், "இது போன்ற விசயங்களை தெறிந்துகொள்வதில் ஆர்வமில்லை" என கூறினோம்
அதனால் வாக்களியுங்கள்.
28. குரங்கனி விபத்திலும், புயலிலும் வராத இராணுவ Helicopter ஐ OPS வீட்டு வாடகைக்கு அனுப்பினோம் அதனால் வாக்களியுங்கள்.
29. பிரதமரின் புகைப்படத்துடன் JIO விளம்பரம் செய்த அம்பானி அதிரும் வகையில் ₹500 அபராதம் விதித்தோம் அதனால் வாக்களியுங்கள்.
30. கடலில் கொட்டிய எண்ணெயை வாளி வைத்து அள்ளிவிட்டு, அணுஉலை பாதுகாப்பானது என்று கூறி உங்களுக்கே உலை வைத்தோம் அதனால் வாக்களியுங்கள்.
31. நாட்டிலேயே மஹாராஸ்ட்ராவுக்கு அடுத்தது 2வது அதிக வரி செலுத்தும் தமிழக விவசாயிகளுக்கு நிதியளிக்காமல்,மங்கோலிய நாட்டின் வளர்ச்சிக்கு நிதி  உதவி செய்தோம் அதனால் வாக்களியுங்கள்.
32. ஏன் என கேட்ட பத்திரிக்கையாளரை I am not prepare to answer you, You are an anti indian என பட்டமளிதோம் அதனால் வாக்களியுங்கள்.
33. பெண் பத்திரிக்கையாளரை கொச்சைப்படுத்திய பின்னும், போலீஸ் பாதுகாப்புடன் பத்திரிக்கை வைக்க சென்றோம் அதனால் வாக்களியுங்கள்.
34. NEET காரணமாக உயிரிழந்த மாணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என கொச்சைப்படுத்தினோம் அதனால் வாக்களியுங்கள்.
35. கள்ளக்காதலால் இறத்தவனுக்காக பொது சொத்தை சூறையாடினோம் அதனால் வாக்களியுங்கள்.
36. இனப்படுகொலையில் இறந்தவர்களை நாய்குட்டியுடன் ஒப்பிட்டோம் அதனால் வாக்களியுங்கள்.
37. முஸ்லீம் பெண்களின் பிணத்தை கூட தோண்டி எடுத்து கற்பழிக்க சொன்னோம் அதனால் வாக்களியுங்கள்.
38. நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களை கூட கொச்சைப் படுத்தினோம் அதனால் வாக்களியுங்கள்.
39. கருவில் உள்ள குழந்தையை சூலாயுதத்தால் குத்தி எடுத்தோம் அதனால் வாக்களியுங்கள்.
40. 8 வயது சிறுமியை கோயில் கருவறையில் வைத்து ஒரு வாரம் கற்பழித்தவனுக்காக மாநில அமைச்சர்கள் ஊர்வலம் நடத்தினோம் அதனால் வாக்களியுங்கள்.
41. ஒரே ஆண்டில் 16000 மடங்கு வளர்ச்சியை தேசியத் தலைவரின் மகனுக்கு வழங்கினோம்
அதனால் வாக்களியுங்கள்.
42. ஆட்டிறைச்சி வைத்திருந்த முதியவரையும், ரம்ஜானுக்கு துணி எடுக்க சென்ற சிறுவனையும் வயது வித்தியாசம் பார்க்காமல் அடித்தே கொன்றோம் அதனால் வாக்களியுங்கள்.
43. கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையை தூக்கி எறிவோம் என்றோம் அதனால் வாக்களியுங்கள்.
44. காதலர்களை நிர்வாணப்படுத்தி தோலில் சுமக்க சொல்லி குச்சியால் அடித்தோம் அதனால் வாக்களியுங்கள்.
45. 30 வருடங்களாக மதம் தெறியாத நடிகனின் Voter ID யை வைத்து வேற்றுமைபடுத்தினோம். அதேவேளை, தனக்கு வேண்டிய நடிகரின் படத்தில் தன் அமைப்பை கழுவி ஊத்தினாலும் அவருக்கு ஆதரவளித்தோம்  அதனால் வாக்களியுங்கள்.
46. ஒரு MP யையே வீட்டிற்குள் சென்று கொலை செய்தோம் அதனால் வாக்களியுங்கள்.
47. சுயமறியாதை பிரச்சாரம் செய்த ஈ.வெ.ரா வை செருப்பால் அடிப்பேன் என்றோம் அதனால் வாக்களியுங்கள்.
48. போலி என்கவுன்டரில் கைதான தேசிய தலைவரை விடுதலை செய்தவரை மாநில ஆளுநராக்கினோம் அதனால் வாக்களியுங்கள்.
49. எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில், நியமித்த ஆளுநரை வைத்து மாநில சுயாட்சியை கேல்விக்குறியாக்கினோம்.
50. ஏற்கனவே மாவட்ட எண்ணிக்கையை விட அதிக மருத்துவக்கல்லூரிகளுள்ள மாநிலத்தில், (வடமாநிலத்தில் விற்கும் பருப்பை) மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்போம் என்றோம்.
51. ஊழல் செய்பவருக்கு இந்தியாவில் இடமில்லை என கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த காரணத்தால், வரிசையாக விஜய் மல்லையா, நீரவ் மோடி என பாரபட்சம் பார்க்காமல் நாடு கடத்தினோம் அதனால் வாக்களியுங்கள்.
52. Digital India வின் பெயரைச் சொல்லி FREEDOM Mobiles என கூறி பிரதமர் புகைப்படத்துடன் கொள்ளையடித்தோம் அதனால் வாக்களியுங்கள்.
53. 3 ல் ஒரு பங்கு குற்றப் பிண்ணனி கொண்ட அமைச்சரவை அதனால் வாக்களியுங்கள்.
54. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவருக்கு இணை அமைச்சர், தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு பாதுகாப்பு, கல்வி, மனிதவளம் போன்ற முக்கிய துறைகள்
அதனால் வாக்களியுங்கள்.

சனி, 13 ஏப்ரல், 2019

சீமானின் சொத்து மதிப்பு விபரம்...


சீமானின் சொத்து மதிப்பு விபரம்...

1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர் , 
2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்,
3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்,
4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம் , 
5.ஆவடியில் 6ஏக்கர் நிலம் , 
6.பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள் , 
7.சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில் ,
9.விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும்டிரஸ்டி பெயரில் சர்ச்,
10.மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம் , 
11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு .
13. நெல்லை குமரிமாவட்ட நாடார் முக்கிய சங்கத்தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது. 
15.பழனி அருகே தென்னந்தோப்பு 
16.ஊட்டியில் எஸ்டேட் தொழில். 

இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை , மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை. 

ஒரு சாதாரண எளிய பிள்ளையின் சொத்து இவ்வளவு தான்.

கடைசியில் அரணையூரில் ஆறு கோடி 6000 சதுர அடியில் சின்னதா ஒரு வீடு..

இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்..

சீமான் அரசியல் வாழ்க்கை..

1982- 1985திமுக
1986- 1988 அதிமுக
1988 - 1991 காங்கிரஸ்
1992 - 1996 கம்யூனிஸ்ட்
1996 - 2004 திமுக
2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
2007 - 2009 மதிமுக ஆதரவு
2009 - 2011 அதிமுக ஆதரவு
2012 -  நாம் தமிழர்(பெரியார் வழி)
2014 -நாம் தமிழர்   பெரியார் வடுக வந்தேரி (பிரபாகரன் வழி)
2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னனி)
2016 முதல்  முப்பாட்டன் முருகன் வழி

இதை மறுக்க முடியுமா...

- மதி நீலா

சனி, 6 ஏப்ரல், 2019

இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் - 2019.

இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் - 2019.

* தமிழகத்திலிருந்து மொத்தம் 845 வேட்பாளர்கள் களமிறங்கும் இத்தேர்தலில், தென் சென்னையில் போட்டியிடும் இராதா மட்டும் திருநங்கை. சுயேச்சை வேட்பாளர்! (மதுரைத் தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்திருந்த பாரதி கண்ணம்மா, எனும் மற்றொரு திருநங்கையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.)

* ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்காக, மெரினாவில் அமர்ந்திருந்த போதே ஆரம்பிக்கப் பட்ட ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ எனும் கட்சி, வட,தென், மத்திய சென்னை, நாகப்பட்டினம், கோவை, ஈரோடு, வேலூர் , நெல்லை, மதுரை உள்ளிட்ட 10+ தொகுதிகளில் தன் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இவர்களுள் இருவர் பெண்கள்.

* Pyramid Party Of India (PPOI) என்பதை, தமிழில் 'இந்தியக் கோபுரக் கட்சி' என மொழி பெயர்க்கலாமா எனத் தெரியவில்லை. ஆந்திராவைத் தலைமையிடமாகக்  கொண்டு, கடந்த இருபதாண்டுகளாகச் செயல்பட்டு வரும் இக்கட்சி சார்பில், தென் சென்னையிலும் மத்திய சென்னையிலும் முறையே ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக இருவர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள், சைவம் சாப்பிடுபவர்களை மட்டுமே வெற்றி பெற வைக்க வேண்டுமெனும் வேண்டுகோள் /கொள்கை உள்ள கட்சி இது. நாம் தமிழரைத் தொடர்ந்து, வேட்பாளர் ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 50% இடம் அளித்துள்ள இன்னொரு கட்சி இது.

* அனைத்து ஓய்வுதியதாரர்கள் கட்சி (All Pensioner’s Party) சார்பில், மயிலாடுதுறைத் தொகுதியில் ஒருவர் போட்டியிடுகிறார். ஹபீப் முக்மது எனும் அவரின் வயது 65. ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கான கட்சி இது.

* அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக நீலகிரித் தொகுதியில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அதிக மனுத் தாக்கல் நிகழ்ந்த தொகுதி, தென் சென்னை. குறைந்த மனுத் தாக்கல் நிகழ்ந்தது நீலகிரித் தொகுதி. முறையே, 60 மற்றும் 14.

* மதிமுக வேட்பாளர் A.கணேசமூர்த்தி, சுயேச்சை A.C. கணேசமூர்த்தி, சுயேச்சை M. கணேசமூர்த்தி என மொத்தம் 3 கணேசமூர்த்திகள் ஈரோடு தொகுதியில் போட்டியிடுகின்றனர். ஒரே பெயர் கொண்ட அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி இதுதான்.

* முக்கிய கட்சிகள் தவிர, தமிழகத்தில் போட்டியிடும் போட்டியிடும் மற்ற சில கட்சிகளின் பெயர்கள்: இந்திய புதிய காங்கிரஸ், இந்திய கிறித்துவ முன்னணி, கிறித்துவ ஜனநாயக முன்னணி, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி, ஜம்மு & காஷ்மீர் தேசியச் சிறுத்தைகள் கட்சி, ஐக்கிய இந்தியக் கட்சி, நாம் இந்தியர் கட்சி, பிரகதிசில் சமாஜ்வாடி கட்சி, தமிழ் தெலுகு தேசியக் கட்சி, உலக சகோதரத்துவ இயக்கம், மதச்சார்பற்ற பூர்வாஞ்சல் ஜனதா, ஊழல் எதிர்ப்பு மாற்றுக் கட்சி, இளந்தமிழர் முன்னணிக் கழகம், அனைத்து மக்கள் புரட்சிக் கட்சி, அகில இந்திய மக்கள் கழகம், எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழகம், தேசிய மக்கள் சக்திக் கட்சி, தேசிய உழவர் உழைப்பாளர் கழகம், இராஷ்டிரிய சமாஜ் பக்ஷா, உழைப்பாளி மக்கள் கட்சி, இந்திய கனசங்க கட்சி, இந்திய சோசியலிச ஒற்றுமை மையம், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி. மதச்சார்பற்ற இந்திய மக்கள் கட்சி, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், சமாஜ்வாடி பார்வர்டு பிளாக், அம்பேத்கர் தேசிய காங்கிரஸ், பூர்வாஞ்சல் மகா பஞ்சாயத், ஆதர்ஷ் சமாஜ் கட்சி, விடியலைத் தேடும் இந்தியர்கள் கட்சி. குடியரசு சேனா.

எத்தனை அக்கிரமங்கள், கொடுஞ்செயல்கள் செய்த பின்னரும் ராமதாஸ் சமூகநீதி போர்வையில் தமிழகத்தில் வலம் வந்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே, சாதியவாதம் பாசிசத்திலும் சேராது,

எத்தனை அக்கிரமங்கள், கொடுஞ்செயல்கள் செய்த பின்னரும் ராமதாஸ் சமூகநீதி போர்வையில் தமிழகத்தில் வலம் வந்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே, சாதியவாதம் பாசிசத்திலும் சேராது, 

தலித் மக்களுக்கு என்னை போல உழைத்தவர் யாருமில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் சொல்லியிருப்பதாக தெரிகிறது. இதை அவர் சொல்வது முதல் முறையல்ல, ராமதாஸின் தலித் வெறுப்பு குறித்து கேள்வி கேட்கும் போதெல்லாம் அச்சூழலை சமாளிக்க அவர் அடிக்கடி சொல்வது தான்.

இதற்கான ஒரு சிறு விளக்கத்தை கொடுப்பதற்கு இது தான் தக்க தருணமென நினைக்கிறன் நான், ஏனென்றால்; பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைத்திருக்கின்ற இந்தச்சூழலில் இதைச்சொன்னால், ஒருவேளை இந்த பொதுச் சமூகம் நம்புவதற்கான வாய்ப்பிருக்கிறது என்கிற நப்பாசை தான். ஒருவேளை 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் கூட்டணி மாறினால், மீண்டும் அவர் சமூகநீதி காப்பளாராகி விடுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதால், இதுவே தருணம்.

ராமதாஸை சமூகநீதி காப்பாளர் என்பதற்கு பல சம்பவங்களை குறிப்பிடுவார்கள், அவரது இட ஒதுக்கீட்டு போராட்டத்தை தவிர்த்து, வேதாரண்யம் குடிதாங்கி சம்பவத்தை குறிப்பிடுவார்கள். தலித் பிணத்தை பொதுவழியில் தூக்கிச்சென்றதை ராமதாஸின் ஆகச்சிறந்த சமூகநீதி வரலாற்று நிகழ்வாக சொல்வார்கள், இச்சம்பவத்தை ராமதாஸே பல இடங்களில் குறிப்பிட்டது உண்டு. இதையும் மனதில் வைத்து "என்னைப் போல தலித் மக்களுக்கு உழைத்தவரில்லை" என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.

உண்மையில்; கும்பகோணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் TM மணி அவர்கள் நீலப்புலிகள் என்னும் அமைப்பை நடத்தி வந்தார், அவ்வமைப்பு தீண்டாமை, சாதி ஒழிப்பு, சாதிய அடக்குமுறைக்கு எதிராக தீவிரமாக களமாடி வந்த அமைப்பு.  TM மணி அவர்கள் பின்னாளில் இஸ்லாத்தை தழுவி  TM உமர் பரூக் ஆனார், அதே பெயருடன் தான் இறந்தார். நீலப்புலிகள் அமைப்பும் திரு TM மணியின் தொடர் போராட்டத்தின் வெற்றியாக தான் வேதாரண்யம் குடிதாங்கியில் பொதுவழியில் தலித் பிணத்தை கொண்டுபோக முடிந்தது.

கடைசி நேரத்தில் தேன்கூட்டை கலைத்து அதற்கு சம்மந்தமேயில்லாதவன் தேனை திருடிச்செல்வதை போல, இறுதிப்போராட்டத்தில் கலந்து கொண்டதனாலவே ராமதாஸ் அந்த மொத்த போராட்டத்திற்கான credits ஐ தட்டிச்சென்றார். அந்த வெற்றி நீலிபுலிகளுக்கும் TM மணி அவர்களுக்கும் நன்றி செலுத்தப் பட வேண்டிய வெற்றி. தலித்தல்லாத ஒருவர் இம்மாதிரி போராட்டங்களில் கலந்துக்கொள்வது ஜனநாயம் தான், மறுப்பதிற்கில்லை, ஆனால்; இந்திய சாதிய சமூகத்தில் தலித் ஒருவன் தனக்காக தன் அரசியலை பேசி போராடினால் அதை உவப்பாகவோ அல்லது அது அவன் தலையெழுத்து என்கிற மனநிலையில் சாதாரணமாகக் கடக்கும் சமூகம், தலித்தல்லாதவன் சிறிய பங்களிப்பை செலுத்தினாலும் அதை வரலாற்றில் பதிக்கிறது, போராளி என்கிறது, புரட்சியாளர் பட்டம் சுமத்தப்படுகிறது, அத்தோடு அல்லாமல் அந்த போராட்டத்திற்கான "முழுக் காரணமும் நானே" என அதை உரிமைக் கொண்டாடி காலத்துக்கும் சொல்லிக்காட்டவும் செய்கிறது.

"எனக்கு இதைச்செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனாலும் செய்கிறேன் பார்த்தாயா?" என்கிற மனநிலையும் சாதிய சிந்தனையால் உற்பத்தியாகும் மனநிலை தான்.

இப்படி சின்னச்சின்ன பங்களிப்பை செய்து எஞ்சிய வாழக்கையில் எந்த தவறிழைத்தாலும் அதை விமர்சிக்கும் போதெல்லாம் அவர்களது சிறு பங்களிப்பு பேசுபொருளாகிறது அல்லது சொல்லிக்காட்டப்படுகிறது. ராமதாசும் அப்படியே கடைசி நேரத்தில் புகுந்து கவனம் பெற்றதால் அதை தனது பயோடேட்டாவில் இணைத்துக்கொண்டார், ஆனால் TM மணி அவர்களது மகத்தான பங்களிப்பை தனிவொரு பதிவு எழுதி சொல்ல வேண்டிய நிலையிலிருக்கிறது, அதுதான் வரலாறாகவும் கடத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில் தான் மருத்துவர் ராமதாஸ் நேரம் கிடைக்கும் போதெல்லாம் "என்னை விட தலித் மக்களுக்கு உழைத்தவர் யாருமில்லை" என்று சொல்லி வருகிறார், ஆனால் கடந்த இருபதாண்டு காலத்தில் மட்டும் கவுண்டர் - தலித் மக்கள் ஒற்றுமைக்கு எதிராக ராமதாஸ் செய்த வஞ்சகம், அவரின் சமூகநீதி சாயத்தை தாண்டி கோரமானாது.

எத்தனை அக்கிரமங்கள், கொடுஞ்செயல்கள் செய்த பின்னரும் ராமதாஸ் சமூகநீதி போர்வையில் தமிழகத்தில் வலம் வந்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே, சாதியவாதம் பாசிசத்திலும் சேராது, இந்துத்துவத்திலும் சேராது, சனாதானத்திலும் சேராது என்கிற எழுதாத நவீனச் சட்டமே தமிழகத்தின் சமூகநீதியாக இருப்பதால் தான்.

வாசுகி பாஸ்கர்