எத்தனை அக்கிரமங்கள், கொடுஞ்செயல்கள் செய்த பின்னரும் ராமதாஸ் சமூகநீதி போர்வையில் தமிழகத்தில் வலம் வந்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே, சாதியவாதம் பாசிசத்திலும் சேராது,
தலித் மக்களுக்கு என்னை போல உழைத்தவர் யாருமில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் சொல்லியிருப்பதாக தெரிகிறது. இதை அவர் சொல்வது முதல் முறையல்ல, ராமதாஸின் தலித் வெறுப்பு குறித்து கேள்வி கேட்கும் போதெல்லாம் அச்சூழலை சமாளிக்க அவர் அடிக்கடி சொல்வது தான்.
இதற்கான ஒரு சிறு விளக்கத்தை கொடுப்பதற்கு இது தான் தக்க தருணமென நினைக்கிறன் நான், ஏனென்றால்; பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைத்திருக்கின்ற இந்தச்சூழலில் இதைச்சொன்னால், ஒருவேளை இந்த பொதுச் சமூகம் நம்புவதற்கான வாய்ப்பிருக்கிறது என்கிற நப்பாசை தான். ஒருவேளை 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் கூட்டணி மாறினால், மீண்டும் அவர் சமூகநீதி காப்பளாராகி விடுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதால், இதுவே தருணம்.
ராமதாஸை சமூகநீதி காப்பாளர் என்பதற்கு பல சம்பவங்களை குறிப்பிடுவார்கள், அவரது இட ஒதுக்கீட்டு போராட்டத்தை தவிர்த்து, வேதாரண்யம் குடிதாங்கி சம்பவத்தை குறிப்பிடுவார்கள். தலித் பிணத்தை பொதுவழியில் தூக்கிச்சென்றதை ராமதாஸின் ஆகச்சிறந்த சமூகநீதி வரலாற்று நிகழ்வாக சொல்வார்கள், இச்சம்பவத்தை ராமதாஸே பல இடங்களில் குறிப்பிட்டது உண்டு. இதையும் மனதில் வைத்து "என்னைப் போல தலித் மக்களுக்கு உழைத்தவரில்லை" என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.
உண்மையில்; கும்பகோணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் TM மணி அவர்கள் நீலப்புலிகள் என்னும் அமைப்பை நடத்தி வந்தார், அவ்வமைப்பு தீண்டாமை, சாதி ஒழிப்பு, சாதிய அடக்குமுறைக்கு எதிராக தீவிரமாக களமாடி வந்த அமைப்பு. TM மணி அவர்கள் பின்னாளில் இஸ்லாத்தை தழுவி TM உமர் பரூக் ஆனார், அதே பெயருடன் தான் இறந்தார். நீலப்புலிகள் அமைப்பும் திரு TM மணியின் தொடர் போராட்டத்தின் வெற்றியாக தான் வேதாரண்யம் குடிதாங்கியில் பொதுவழியில் தலித் பிணத்தை கொண்டுபோக முடிந்தது.
கடைசி நேரத்தில் தேன்கூட்டை கலைத்து அதற்கு சம்மந்தமேயில்லாதவன் தேனை திருடிச்செல்வதை போல, இறுதிப்போராட்டத்தில் கலந்து கொண்டதனாலவே ராமதாஸ் அந்த மொத்த போராட்டத்திற்கான credits ஐ தட்டிச்சென்றார். அந்த வெற்றி நீலிபுலிகளுக்கும் TM மணி அவர்களுக்கும் நன்றி செலுத்தப் பட வேண்டிய வெற்றி. தலித்தல்லாத ஒருவர் இம்மாதிரி போராட்டங்களில் கலந்துக்கொள்வது ஜனநாயம் தான், மறுப்பதிற்கில்லை, ஆனால்; இந்திய சாதிய சமூகத்தில் தலித் ஒருவன் தனக்காக தன் அரசியலை பேசி போராடினால் அதை உவப்பாகவோ அல்லது அது அவன் தலையெழுத்து என்கிற மனநிலையில் சாதாரணமாகக் கடக்கும் சமூகம், தலித்தல்லாதவன் சிறிய பங்களிப்பை செலுத்தினாலும் அதை வரலாற்றில் பதிக்கிறது, போராளி என்கிறது, புரட்சியாளர் பட்டம் சுமத்தப்படுகிறது, அத்தோடு அல்லாமல் அந்த போராட்டத்திற்கான "முழுக் காரணமும் நானே" என அதை உரிமைக் கொண்டாடி காலத்துக்கும் சொல்லிக்காட்டவும் செய்கிறது.
"எனக்கு இதைச்செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனாலும் செய்கிறேன் பார்த்தாயா?" என்கிற மனநிலையும் சாதிய சிந்தனையால் உற்பத்தியாகும் மனநிலை தான்.
இப்படி சின்னச்சின்ன பங்களிப்பை செய்து எஞ்சிய வாழக்கையில் எந்த தவறிழைத்தாலும் அதை விமர்சிக்கும் போதெல்லாம் அவர்களது சிறு பங்களிப்பு பேசுபொருளாகிறது அல்லது சொல்லிக்காட்டப்படுகிறது. ராமதாசும் அப்படியே கடைசி நேரத்தில் புகுந்து கவனம் பெற்றதால் அதை தனது பயோடேட்டாவில் இணைத்துக்கொண்டார், ஆனால் TM மணி அவர்களது மகத்தான பங்களிப்பை தனிவொரு பதிவு எழுதி சொல்ல வேண்டிய நிலையிலிருக்கிறது, அதுதான் வரலாறாகவும் கடத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் தான் மருத்துவர் ராமதாஸ் நேரம் கிடைக்கும் போதெல்லாம் "என்னை விட தலித் மக்களுக்கு உழைத்தவர் யாருமில்லை" என்று சொல்லி வருகிறார், ஆனால் கடந்த இருபதாண்டு காலத்தில் மட்டும் கவுண்டர் - தலித் மக்கள் ஒற்றுமைக்கு எதிராக ராமதாஸ் செய்த வஞ்சகம், அவரின் சமூகநீதி சாயத்தை தாண்டி கோரமானாது.
எத்தனை அக்கிரமங்கள், கொடுஞ்செயல்கள் செய்த பின்னரும் ராமதாஸ் சமூகநீதி போர்வையில் தமிழகத்தில் வலம் வந்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே, சாதியவாதம் பாசிசத்திலும் சேராது, இந்துத்துவத்திலும் சேராது, சனாதானத்திலும் சேராது என்கிற எழுதாத நவீனச் சட்டமே தமிழகத்தின் சமூகநீதியாக இருப்பதால் தான்.
வாசுகி பாஸ்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக