செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்... அமலுக்கு வரும் விதிமுறைகள் என்னென்ன?


ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்... அமலுக்கு வரும் விதிமுறைகள் என்னென்ன?

சிந்தியுங்கள்... செயல்படுங்கள்

👆நம் வாக்கு... நம் உரிமை👆
ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்...!!
👆மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது.

👆தேர்தல் விதிகளின்படி, வாக்குப்பதிவு முடியும் 48 மணி நேரத்திற்கு முன்பாக பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

👆இதன்பின் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது.

👆மேலும், தேர்தல் தொடர்பான எதையும் திரைப்படம், தொலைக்காட்சி, எப்எம் ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்றவை வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது.

👆இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்யக்கூடாது. இவற்றை மீறினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

👆தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், அத்தொகுதியின் வாக்காளர் அல்லாதோர் அனைவரும் இன்றுடன் அதாவது 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

👆வேட்பாளருக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் செல்லாததாகி விடும்.

👆வேட்பாளர்கள், சமுதாய கூடங்கள், விருந்தினர் மாளிகைகள், தர்ம சத்திரங்கள் முதலான இடங்களை வாக்கு சேகரிக்கும் இடமாக பயன்படுத்தக்கூடாது.

👆வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் அவரது பயன்பாட்டிற்கு ஒரு வாகனம், தேர்தல் முகவர் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கான அவரது பணியாளர்கள் அல்லது கட்சிப்பணியாளர்கள் பயன்பாட்டிற்கு ஒரு வாகனத்திற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிடம் தனி அனுமதி பெற வேண்டும்.

👆வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், திரும்ப அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுக்கவோ, பயன்படுத்தவோ அனுமதியில்லை. இதை மீறி நடந்தால் தண்டிக்கப்படுவர்.

👆அரசியல் கட்சிகளின் தற்காலிக அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அங்கு அனுமதிக்கக்கூடாது.

👆மேலும், இன்று மாலை 6 மணி முதல் கருத்துக்கணிப்பு உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக