திங்கள், 22 ஏப்ரல், 2019

பொன்பரப்பி கலவரமும் கள நிலவரமும்.


பொன்பரப்பி கலவரமும்
கள நிலவரமும்.

20.04.2019

பொன்பெரப்பி கிராமம்.

வன்னியர் சமூகத்தில் 3000
தலகட்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். பறையர் சமூக மக்கள் 600 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். வன்னியர் சமூதாய மக்கள் பெருபாண்மையிராக இருக்கின்றனர்.

தொடக்கபள்ளி மட்டும் சேரி பகுதியில் இருக்கிறது. மற்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் வன்னியர் தெருக்களுக்கே செல்ல வேண்டும்.

இரு சமூதாய மக்களும் பெரிய அளவில்
பொருளாதரத்தில் உயரவில்லை அடிப்படை வசதியான சாலை வசதியை கூட முழுமையாக இல்லாத கிராமமாக உள்ளது. ஊர் முழுவதும் இரு சமூக மக்களின் வீடுகளும் "ஓட்டு வீடாக"-தான் இருக்கிறது. வன்னியர் சமூதாய மக்களிடம் நிலம் கொஞ்சம் இருக்கிறது.
சேரி மக்களிடம் பெருபாண்மையோர்
இடத்தில் நிலம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

பொன்பெரப்பி கிராமத்தில் இதுவரை
சாதிய கலவரம் நடந்தது இல்லை.
இதுவே முதல்முறை. இதற்க்கு முன்பு
நடந்த அனைத்து தேர்தல்களிலும் இரு சமூதாயமும் கட்சி ரீதியாக ஒன்றிணைந்தே செயல்பட்டு உள்ளனர்.

கிராமத்தில் பறையர் வன்னியர்
சமூக மக்கள் உறவுமுறை போன்றே
பழகி உள்ளனர். அனைத்து விடயங்களிலும். உறமுறை அடிப்படையிலே இருவரையும்
மாறி மாறி அழைத்துகொண்டு உள்ளனர்.

பறையர் சமூகத்தை சார்ந்த பெரும்பாண்மையோர்  சென்னையில்
உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்துகொண்டு உள்ளனர்.
கல்லூரி படிப்பை முடித்தவர்களாக இளைஞர்கள் இருக்கின்றனர் வேலையில்லாமால் சென்னையில்
ஹோட்டல் மார்கெட் போன்ற பகுதியில் வேலை செய்துகொண்டு இருக்கின்றனர்.

வன்னியர் சமூகத்திலும்
பெருபாண்மையோர் இதே நிலையில்தான் இருக்கின்றனர். விவசாயிகளாக தின கூலிகளாக இருக்கின்றனர்.

#கலவரத்திற்கான_காரணங்கள்:

பாராளுமன்ற தேர்தல் அறிவிககபட்டவுடன் சிதம்பரம் தொகுதியில் முனைவர். திருமாவளவன் அவர்கள் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று உறுதியானவுடன் பொன்பரப்பி கிராமத்தில் உள்ள பறையர் சமூதாய மக்கள் ஒன்று கூடி தங்களது வாக்குகளை பானை சின்னத்திற்கு அளிப்பது என்றும். சேரிகளுக்குள் மற்ற கட்சியின் சின்னங்கள் வரைய  வேண்டாம் என்றும் முடிவு செய்து உள்ளனர்.

நாமூம் வன்னியர் தெருவிற்குள் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு போக வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளனர். வன்னியர் சமூக திமுக பொருப்பாளர்களிடம்
கலந்து ஆலோசித்து.

வாக்குபதிவு தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வன்னியர் சமூகத்தில் உள்ள திமுக பொருப்பாளர்களில் ஒருவர்
பறையர் சமூகத்தில் இருக்கும்
விசிக பொருப்பாளர்களிடம்
வாக்கு பதிவு அன்று எங்க ஆளுங்க குறிப்பாக
(இந்து முண்ணனி+ பாமக காரனுங்க) ஏதாவது பிரச்சனை பன்னுலாம்னு திட்டம் போடுகிறார்கள். அதனால் உங்கள் சமூகத்தார் காலையிலே வாக்கு அளிக்க ஏற்பாடு செய்துவிடுங்கள் 10 மணிக்குள் முடித்துவிடுங்கள். அப்புறம் ‌அவர்கள் எதாவது பிரச்சனை செய்தால் எங்களால் ஒன்னும் செய்ய முடியாது நானும் படையாட்சி அவனும் படையாட்சி அவனுங்க ஏற்கனவே நான் என் வீட்டில் பானை சின்னம் வரைந்ததால் கடும் கோபத்தில் உள்ளனர். என்று கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த மூன்று நான்கு
ஆண்டுகளாக இந்து முண்ணனி
இந்த பகுதியில் காலூன்றி வளர்ந்து வருகிறது. அங்கு இருக்கும் வன்னியர் இளைஞர்களை சமீபகாலமாக அவர்களே வழிநடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் இந்து முண்ணனியை சார்ந்த மாவட்ட பொறுப்பாளர் #இராஜேந்திரன் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

அரியலூர் நந்தனி கொலை வழக்கில்
தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

18.04.2019 அன்று தலித் மக்கள் அனைவரும் பெரும்திராளாக
காலை 8 மணி முதலே வாக்களிக்க
வந்து கொண்டு இருந்தனர்.

10 மணிக்குள் 400 முதல் 500 வாக்குகள்
தலித் மக்கள் அளித்துவிட்டனர்.
இந்த சம்பவம் வாக்குச்சாவடியில்
இருந்த பாமக இந்து முன்னணி சார்ந்தவர்களுக்கு மிகவும் எரிச்சல்வூட்டும் நிகழ்வாக இருந்துள்ளது.

வாக்குச்சாவடியில் இருந்த வன்னிய சமூகத்தை சார்ந்த இளைஞர்கள்
வாக்களிக்க வந்த மக்களை கொச்சை வார்த்தைகளில் திட்டி உள்ளனர்.
 இதனை கண்டுக்கொள்ளாமல்
வாக்களித்து விட்டு வந்துள்ளனர்.

தலித் சமூகத்தில் இருந்து 45 வயதுடைய ஒருவர் வாக்களிக்க செல்லும் போது அவரை தாகாத வார்த்தையில் திட்டி இருக்கின்றனர். அதனை கண்டுகொள்ளாமல் அவர் வாக்களிக்க உள்ளே சென்று உள்ளார். வாக்களித்து விட்டு வெளியே வரும்பொழுது அவர் முன்னாடியே #பானையை போட்டு உடைத்து உள்ளனர் வன்னியர்
இளைஞர்கள்.

அவர் "ஏன்டா இப்படி செய்கிறீர்கள்"
என்று கேட்டுவிட்டு வன்னியர் பகுதியை சார்ந்த திமுக பொருப்பாளரிடமும்
காவல்துறையிடமும் தகவல் தெரிவித்துவிட்டு சேரி பகுதிக்கு நடந்து சென்று உள்ளார். காவல்துறை அந்த இளைஞர்களை முதலில் கண்டித்து இருக்கிறார்கள். வன்னிய சமூகத்தில் இருக்கும் சிலரிடம் முறையிட்டும் இருக்கிறார்கள்.

வாக்குசாவடி அருகே இருக்கும் சாலைக்கு அருகில் வன்னிய சமூதாயத்தை சார்ந்த
மாற்றுதிறணாளி ஒருவர் #மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டு இருந்திருக்கிறாரார். சேரி பகுதிக்கு விற்பனை செய்வது தொடர்பாக பேசிக்கொண்டு  இருக்கிறார்.

வாக்களித்துவிட்டு சாலையில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்த அவர்
இதனை காதில் வாங்கிகொண்டு
"மது விற்பதை உங்கள் பகுதியோடு நிறுத்தி விடுங்கள் சேரி பகுதிக்கு வேண்டாம் பானையை போட்டு உடைக்கிறார்கள் நீ மதுவிற்க்க சேரிக்கு
ஆள் அனுப்புகிறார் பிரச்சனை செய்ய வேண்டும் என்றே இப்படியெல்லாம் நடந்துகொள்கிறீர்களா" என்று கேட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்கிறார்.

அப்பொழுது அங்கு மது அருந்திகொண்டு  இருந்த முதியவர் ஒருவர் தட்டுத்தடுமாறி (விழுந்து) எழுந்து அவரை தாகாத வார்த்தையில் திட்டுகிறார். இவறும் பதிலுக்கு ஒன்றை கூறிவிட்டு வீட்டிற்கு விரைகிறார்.

நடந்த நிகழ்வுகளை சேரி பகுதிக்கு வந்து கூறுகிறார் அங்கு இருக்கும் இளைஞர்கள் இதனால் கோபம் அடைகின்றனர். அங்கு இருக்கும்
விசிக பொறுப்பாளர்கள் இளைஞர்கள் யாரையும் அங்கு செல்ல வேண்டாம் எதுவும் அவர்களிடம் கேட்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இளைஞர்கள் அனைவரும் சேரி பகுதிக்குள் இருக்கும் தெருவின் தொடக்கத்தில் அமர்ந்து உரையாடி கொண்டு இருக்கின்றனர்.

மதுவிற்ற இடத்தில் நடந்த நிகழ்வை அங்கு இருக்கும் வன்னியர் இளைஞர்கள் அறிந்துகொண்டு.
10 பேர் கொண்ட கும்பல் சேரி பகுதிக்கு இரு சக்கர வாகனங்களில் வந்து தெருவின்‌ முகப்பு பகுதியில் நின்றுகொண்டு #பானையை சாலையில் போட்டு உடைத்து விட்டு .
" நாங்க இப்படிதான் பன்னுவோம் டா உங்களலாம் ஓட்டு‌ போடவிட்டதே
பெரிய விஷயம் அப்புறம் என்னடா பானை உடைச்சானுங்க அத  உடைச்சானுங்கனு புலம்பிகிட்டு‌ ரோட்டில் போறிங்க பற‌ தேவிடியா பயலுகளாக வாங்கடா" என்று தாகாத வார்த்தைகளை
கூறி திட்டி உள்ளனர்.

 சேரி பகுதியில் இருந்து இளைஞர்கள்
சிலர் சென்று இதனை தட்டிகேட்டனர்.
10பேர் கொண்ட கும்பலில் இருந்து ஒருவன் "என்ன திமிரு‌ *****யா பேசுற" என்று சேரி பகுதி இளைஞரை முதலில் தாக்குகிறார்  தாகாத வார்த்தையில் திட்டி. உடனடியாக அங்கு இருந்து சேரி இளைஞர்களும் பதிலுக்கு தாக்குகின்றனர். உடனடியாக
விசிக பொறுப்பாளர் அருகில்
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை அழைத்து வந்து பிரச்சனையை நிறுத்துகிறார்‌.

சத்தத்தை கேட்டு சேரி பகுதியில் இருந்த மக்கள் சாலைக்கு அருகில் வந்தனர். வன்னியர் பகுதி மக்களும் சேரி அருகில் வந்தனர் காவல்துறை தலையிட்டால் பிரச்சினை தொடராமல் முடிக்கப்பட்டது. அனைவரும் கலைந்து சென்றனர்.

காவல் துறையினர் சேரி பகுதியை விட்டு சென்ற 15 நிமிடங்களில் 100 மேற்பட்ட வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் கைகளில் கம்புகள் உருட்டு கட்டகைகளுடன் சேரி பகுதிக்கு வருகின்றனர். சாலையில் அவர்கள் வருவதை அறிந்த சேரி இளைஞர்கள் கூச்சலிட்டு அனைவரையும் வீட்டின் உள்ளே செல்ல சொல்லுகின்றனர் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்களை.

சேரியில் இருக்கும் இளைஞர்கள்
மற்றும் நடுத்தர வயதினர் 15,20 நபர்கள் சேரி நுழைவு பகுதியில் வந்து கொண்டு இருந்த வன்னியர்களை தடுக்க செல்கின்றனர். தடுக்க சென்ற இளைஞர்களை சாதிவெறி கும்பல் உருட்டு கட்டையால் கம்பிகளால் தாக்கிவிட்டு சேரியின்‌ உள்ளே வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவாதால்
தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அவரிகளிடம் இருந்து தப்பித்து செல்கின்றனர். சேரியில் உள்ளே புகுந்த சாதிய கும்பல் சேரியில் இருக்கும் வீடுகள் முழுவதையும் சூறையாடுகின்றனர்.
பற தேவிடியா பயலுகளா வெளிய வாங்கடா உங்களுக்கு அவ்வளவு
திமிறா என்று கூறிக்கொண்டே இருசக்கர வாகனங்கள் சேரியில் இருந்த விசிக கொடிகள் பாபாசாகேப் அம்பேத்கர் பதாகைகளை சேதப்படுத்தி உள்ளனர்.
சேரி பகுதிக்கு வரும் தண்ணீர் குழாய்களை அடித்து நொறுக்கி உள்ளனர். ஒரு இரு சக்கர வாகனத்தை எரித்து உள்ளனர்.

அரைமணி நேரமாக இத்தகைய கொடூர நிகழ்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது. அப்பொழுது நான்கு காவல்துறையினர் மட்டுமே அங்கு வந்துள்ளனர் அப்பொழுது அவர்களால் கட்டுபடுத்த இயலவில்லை பின்பு காவல்துறையினர் அதிகளவில் வருகை பார்த்து சாதிய கும்பல் சேரிக்கு பின்புறம் இருக்கும் ஓடை வழியாக தப்பித்து சென்று உள்ளனர்.

சாதிய கும்பல்கள் பயன்படுத்திய 5,6 அடி கொண்ட கம்புகளின் முனைகளில்
ஆணி அடித்து தயார் செய்து எடுத்து வந்துள்ளனர்.

பொன்பரப்பி பகுதியை சார்ந்த வன்னியர்கள் மட்டும் தாக்குதலை நடத்தவில்லை குடிகாடு பகுதியை சார்ந்த வன்னியர்களும் சாதிவெறி கும்பலில் இருந்து உள்ளனர்.

இத்தகைய தாக்குதலுக்கு
முக்கிய காரணம் முனைவர்.திருமாவளவன் அவர்களின் வெற்றியை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பல்வேறு கட்சிகளில் சிதறி கிடந்தது மக்கள் அரசியல் ரீதியாக
இந்த தேர்தலில் ஒன்றாக நிற்பதை அவர்களால் சகித்துகொள்ள இயலவில்லை.

இந்து முன்னணி அமைப்பினர்
மற்றும் பாமக வினரால் திட்டமிட்டே
இத்தகைய நிகழ்வு நடத்தபட்டுள்ளது.

செயல்திட்டத்தை
#இந்து_முண்ணனி சார்ந்த #இராஜேந்திரன் #பாமக
பொருப்பாளருமே
தீட்டி உள்ளனர்.

பாதிப்புகள்:

10 இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது அதில் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் இருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் அரியலூர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் அடித்து நொறுக்கபட்டு உள்ளது.

இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதபடுத்தபடுட்டு உள்ளது.

ஒரு இருசக்கர வாகனம் தீயிட்டு எரிக்கபட்டு உள்ளது.

பெண்கள் குழந்தைகள் சிலருக்கு
சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

வீட்டின் திண்னை பகுதியில்
அமர்ந்து இருந்த ஒரு முதியவரின் விரல்கள் சாதி வெறியர்களால் ஒடைக்பட்டுள்ளது.

வீட்டின் முன் இருந்த வேலிகள் மற்றும்
மாட்டு கொட்டாய்கள் சேதப்படுத்தபட்டு
உள்ளது.

சேரிபகுதிக்கு வரும் குடிநீர் குழாய்கள்
அடித்து நொறுக்கபட்டுள்ளது.

Dr.அம்பேத்கர் மற்றும்
விசிக மன்ற பதாகைகள் சேதபடுத்தபட்டுள்ளது.

வீட்டிற்கு வெளியே இருந்து பாத்திரங்கள் சேதமாகி உள்ளன.

கள நிலவரம்.

பொன்பெரப்பி கிராமம் முழுவதும் மாயான அமைதி நிலையில் இருக்கிறது.

ஊரின் உள்ளே நுழையும் போதே
ஒரு வித அச்சம் ஏற்படுகிறது.
ஊரின் நுழைவு பகுதியில்
#அக்னி_சட்டியை பெரிய அளவில் வைத்துள்ளனர். ஆங்காங்கே வன்னியர் சங்கம் மற்றும் பாமக கொடிகள் பறக்கிறது.

எது சேரி தெரு ஊர் தெரு என்று எளிதாக அடையாளம்காண இயலவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம் போன்றே தோற்றமளிக்கிறது.

சேரி பகுதி முழுமையாக காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது. சேரி பகுதியின் உள்ளே காவல்துறையினர் மற்றும் மாற்று உடையில் புலனாய்வு துறையினர் வலம் வருகின்றனர்.

வெளி ஆட்கள் மற்றும் கட்சி முற்போக்கு அமைப்பு நிர்வாகிகள் யாரையும் சேரியின் உள்ளே காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. சேரி பகுதிக்கும் செல்லும் அனைத்து பாதைகளிலும் காவல்துறையினர் இருக்கின்றனர்.

சேரிபகுதியில் இருந்தும் யாரும் வெளியே செல்ல முடியவில்லை.

சேரி பகுதியில் இருக்கும் முக்கியமான‌ நபர்களை சமாதானம் செய்யும் வேலை மிக தீவிரமாக காவல்துறை உதவியுடன் நடைபெற்று கொண்டு இருக்கிறது ஒரு புறம்.

சேரி பகுதியில் இருக்கும் பெண்களை அழைத்து பணம் தருவதாக மற்றும் உதவி செய்வதாக வன்னியர் சமூகத்தில் இருந்து ஒரு முக்கிய நபர்
அரசு அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள்
அங்கு இருந்து சென்றுவிட்டனர்.
துண்டு சீட்டில் தொலைபேசி எண்ணை ஒருவரிடம் எழுதி கொடுத்துவிட்டு.

சேரி பகுதியில் இருக்கும் இளைஞர்கள் அழைத்து புலனாய்வு துறையினர் நண்பர்கள் போல உரையாடி செய்திகளை அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளுகின்றனர்.

பெண்களும் குழந்தைகளும் மிகுந்து அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக ஒரு பெண் குழந்தை இன்னும் அந்த அச்சத்தில் இருந்து மீளவே இல்லை. நடந்த நிகழ்வை பற்றி பேசிகொண்டு இருக்கும் போதே அழுகிறாள்.

புலம்பல்கள் செல்லும்
இடம்மெல்லாம் கேட்கின்றன.

பெரிய அளவில் அரசியல் மற்றும்
சமூக விழிப்புணர்வு இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.

காவல்துறை நடவடிக்கை.

முதல்கட்டமாக வன்னியர் சமூகத்தில் இருந்து 12 நபர்களை கைது செய்து உள்ளனர்.

சேரி பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்களை இன்று சீரமைத்து தந்துள்ளனர்.

கள ஆய்வு பணிகளில்.

ஊரின்‌ பின்புறமாக உள்ள ஓடை
பகுதி வழியே சென்றுதான் சேரியை அடைந்தோம்.

சேரிக்குள் சென்றவுடனே இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் " வாங்க சாமிகளே என்ன ஊருயா சாப்பிடிங்களா ஏ போய் தண்ணி மொண்டுகிட்டு வா" என்று அந்த சேரியில் இருக்கும் தாய்மார்களின் அன்பு ஒரு கணம் நம்மை நெகிழ செய்கிறது.

உடனடியாக காவல்துறை நாங்கள் வந்ததை அறிந்து எங்களை கவனிக்க ஆரபித்துவிட்டனர். எங்களை வெளியேற்ற தீவிரமாக முனைப்பு காட்டினார்கள்.

பாதிக்கப்பட்ட வீடுகளை புகைப்படம் எடுக்க முழுமையாக அனுமதிக்கவில்லை.

காவல்துறையினர் சிலர் இடத்தில் வேண்டுகோள் வைத்து உடனே‌ பேசிவிட்டே சென்றுவிடுவாதாக கேட்டுகொண்டு அங்கு இருப்பவர்களிடம்
உரையாடி கள நிலவரங்களை அறிந்துகொண்டோம்.

60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்

" சின்னஞ்சிறு வாண்டுகள் எல்லாம் ரோட்டில நின்னுகிட்டு டேய் பற தேவிடியா பயல்களானு திட்டுரான் தம்பி நமக்கு அவுனுங்கள
அந்த வார்த்தையை சொல்லி திட்ட
வாய் வறுமாட்டிகிது பா. பறையன‌ அவளவு கேவலாமா பா நம்ம என்ன‌ பாவம் பன்னுனோம்"

 என்று ஆதங்கபட்டு பேசினார்.
கண்கள் குளமானதே தவிற
சென்ற‌ கோழைகள் எங்களால்
எதுவும் செய்ய இயலவில்லை.

 Manimaran Law
 அ.இ. அழகுமுத்து
ஆ.கார்த்திகேயன் செந்தமிழ் இயற்கை பண்ணை
அம்பேத் கோகுல்
 

 பதிவு
             ~ அம்பேத் கோகுல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக