வியாழன், 26 டிசம்பர், 2019

நிர்வாகத்தில் தமிழகம் முதலிடமாம்: மத்திய அரசு தகவல்ஈ

நிர்வாகத்தில் தமிழகம் முதலிடமாம்: மத்திய அரசு தகவல்

டிசம்பர் 26,2019 13:21

புதுடில்லி ; பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் அடிப்படையில், நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு நிர்வாகத்திறன் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில், நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் மஹாராஷ்டிரா, 3வது இடத்தில் கர்நாடகா, 4வது இடத்தில் சத்தீஸ்கர், 5வது இடத்தில் ஆந்திரா, 6வது இடத்தில் குஜராத், 7 வது இடத்தில் ஹரியானா, 8 வது இடத்தில் கேரளா 9வது இடத்தில் மத்திய பிரதேச, 10வது இடத்தில் மே.வங்கம், 11வது இடத்தில் தெலுங்கானா, 12வது இடத்தில் ராஜஸ்தான், 13வது இடத்தில் பஞ்சாப், 14வது இடத்தில் ஒடிசாவும், 15வது இடத்தில் பீஹார், 16வது இடத்தில் கோவா, 17 வது இடத்தில் உ.பி., 18 வது இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளன.



மேலும், பொது மக்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம், முதலிடத்தையும், பொது சுகாதாரத்துறையில் 2வது இடத்தையும், சுற்றுச்சூழலில் 3வது இடத்தையும், வேளாண்மையில் 9வது இடத்தையும், வணிகத்தில் 14வது இடத்தையும், மனித வள மேம்பாட்டில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. பெரிய மாநிலங்கள் பட்டியலில், பொருளாதார துறையில் 5வது இடத்தையும், நீதி, சட்டம் ஒழுங்கு, பொது மக்கள் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும், நல்லாட்சி நடக்கும் மாநிலங்களிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது, காலங்காலமாக புளித்துப்போன விசயம்...


பிரித்தாளும் சூழ்ச்சி என்பது,
காலங்காலமாக
புளித்துப்போன விசயம்...

இஸ்லாமியர்கள்,
அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான்
அவர்களது நாடு என்பது போலவும்,
பாமர மக்களின் மனங்களில்
பிரிவினையை உண்டாக்குவதற்கான,
நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக
விதைத்து வந்தனர், வருகின்றனர்...

இந்த பொய்ப்பிரச்சாரங்கள்
ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது...
சத்தியத்தை யாராலும் புதைத்து விட
முடியாது...

இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும்
இந்துக்களின் இரத்த சொந்தங்கள்...

இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற,
இன்ன பிற கொடுமைகளால்,
அந்த வாழ்க்கை முறையிலிருந்து தப்பித்து,
சுய மரியாதையைப்பேணவும்,
சமத்துவத்தை அனுபவிக்கவும்,
அதற்கு வழி வகுத்துத்தந்த
இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு
மாறியவர்கள்...

ஒவ்வொரு மனிதனும்,
தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையை
தேர்ந்தெடுத்துக்கொள்வது,
அவனவனுடைய அடிப்படை சுதந்திரம்.
இதை "இந்திய அரசியல் சாசன சட்டம்"
உறுதி செய்திருக்கிறது...

ஒரே தாய், தந்தையருக்கு பிறந்த
பிள்ளைகள், அவரவருக்கு பிடித்தமான
வாழ்க்கை முறையை
தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லையா,
அதே போலத்தான் இதுவும்...

எல்லா மதத்தினரும்
இந்திய தேசத்தின் பிள்ளைகளே...

என் தகப்பனாரின் மூதாதையர்கள்,
சேதுபதிச்சீமையின் மறவர் குலம்.

என் தாயாரின் மூதாதையர்கள்,
சேதுபதிச்சீமையின் மீனவர் குலம்.

எனது மூதாதையர் காலத்தில்,
சேதுபதிச்சீமையில்,
பள்ளு, பறை என்று 18 சாதிகள்
இருந்தனவென்றும்,
அவர்களில் பெரும்பாலானோர்
இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி,
சாதிகளற்று, சம்பந்தம் பண்ணிக்
கொண்டார்கள் என்றும், என் தாயார்
எனக்கு சொல்லியிருக்கிறார்கள்...

அதனால், எல்லா சாதியிலும்
எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு...

*பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு.*
*அதில் மனித நேயமே மாண்பு..*

நடிகர் ராஜ்கிரண்

புதன், 25 டிசம்பர், 2019

தஞ்சை கீழ்வெண்மணி படுகொலை நடைபெற்ற நாள்,டிசம்பர் 25. (25-12-1968)


தஞ்சை கீழ்வெண்மணி படுகொலை நடைபெற்ற நாள்,டிசம்பர் 25. (25-12-1968)

   *தஞ்சை மண்ணில் "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன. விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள்.*

   *உழைப்புக்கு‍ ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். இதனை ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது.*

   *கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.*

   *1968 டிசம்பர் 25 அன்று நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் ராமையன் என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள்.*

   *எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில், அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.*

*மாண்டவர்கள்:-*👇

*1]சுந்தரம்-வயது/45*
*2]சரோஜா/12*
*3]மாதம்பாள்/25*
*4]தங்கையன்/5*
*5]பாப்பா/35*
*6]சந்திரா/12*
*7]ஆசைத்தம்பி/10*
*8]வாசுகி/3*
*9]சின்னப்பிள்ளை/28*
*10]கருணாநிதி/12*
*11]வாசுகி/5*
*12]குஞ்சம்மாள்/30*
*13]பூமயில்/18*
*14]கருப்பாயி/35*
*15]இராஞ்சியம்மாள்/16*
*16]தாமோதரன்/1*
*17]ஜெயம்/10*
*18]கனகம்மாள்/25*
*19]இராஜேந்திரன்/7*
*20]சுப்பன்/50*
*21]குப்பம்மாள்/35*
*22]பாக்கியம்/35*
*23]ஜோதி/10*
*24]இரத்தினம்/35*
*25]குருசாமி/15*
*26]நடராசன்/5*
*27]வீரம்மாள்/25*
*28]பட்டு/46*
*29]சண்முகம்/13*
*30]முருகன்/40*
*31]ஆச்சியம்மாள்/30*
*32]நடராசன்/6*
*33]ஜெயம்/6*
*34]செல்வி/3*
*35]கருப்பாயி/50*
*36]சேது/26*
*37]நடராசன்/10*
*38]அஞ்சலை/45*
*39]ஆண்டாள்/20*
*40]சீனிவாசன்/40*
*41]காவோி/50*
*42]வேதவள்ளி/10*
*43]குணசேகரன்/1*
*44]இராணி/4*

*குற்றவாளிகள்:-*👇

*1]கோபாலகிருஷ்ண'நாயுடு'.*
*2]பாலு'நாயுடு'.*
*3]கோவிந்தராஜ்'நாயுடு'.*
*4]இராமு'பிள்ளை'.*
*5]ராஜ்'நாயுடு'.*
*6]மூா்த்தி'நாயுடு'.*
*7]இராமதாசு.*
*8]சீனிவாச'நாயுடு'.*
*9]மூா்த்தி.*
*10]இராமனுஜம்.*
*11]இராமையா'நாடாா்'.*
*12]பாலு.*
*13]தாமோதரன்.*
*14]கோவிந்தராஜிலு'நாயுடு'.*
*15]கிருஷ்ணமூா்த்தி.*
*16]பொருமாள்சுவாமி.*
*17]காியய்யா'நாயுடு'.*
*18]முத்து'நாயுடு'.*
*19]கிருஷ்ணசுவாமி.*
*20]கோதண்டவம்'பிள்ளை'.*
*21]முருகைய்யாத்'தேவா்'.*

   *தஞ்சை கீழ்வெண்மனியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து இந்நாளில் உயிர்நீத்த தியாகிகளுக்கு...*

*வீரவணக்கம்!*                   *வீரவணக்கம்!*

திங்கள், 23 டிசம்பர், 2019

மக்களே_நாடு



#மக்களே_நாடு

உலகின் மிகவும் அசுத்தமான நதி ஒரே வருடத்தில் அரசின் நேர்மையான உழைப்பால் மாற்றம் அடைந்துள்ளது. மக்களின் ஆரோக்கியத்தையும், இயற்கை சூழலையும் பாதுகாப்பதும் ராணுவத்தினரின் கடமை என்பதால் அரசு 7,000 ராணுவத்தினரை களமிறக்கியுள்ளது.

2000 மேலான ஆலைகளின் கழிவுகள் கொட்டப்பட்டதால் ஈயம், மெர்குரி, ஆர்சனிக் மற்றும் பிற நச்சுப் பொருட்கள் நீரில் கலந்து மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஆனது. நதியை சுற்றி வாழும் மக்கள் கழிவுகள் நிரம்பிய நீரை பயன்படுத்தியதால் உடல்நல பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டதால் நதியின் மேற்பரப்பு கூட தெரியாமல் பிளாஸ்டிக்கால் நிரம்பியது. Adidas, H&M போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கூட நதியில் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமல் கொட்டுகின்றன. இவ்வாறு நதியை சீரழித்த பல நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

500மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டு அசுர வேகத்தில் தற்போது சுத்தம்‌ செய்யும் வேலை நடந்து வருகிறது. மக்களுக்கு சேவை செய்ய 7,000 இந்தோனேசிய‌ ராணுவத்தினரும் முழுநேரப் பணியாக நதியை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். 40% பிளாஸ்டிக் கழிவுகள் நீக்கப்பட்டு அதிவேகமாக சுத்தமாகி வருகிறது. 120 மில்லியன் மரங்கள் நதியை சுற்றி நடப்பட்டுள்ளன. சுற்றி இருக்கும் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தியுள்ளார்கள்

"சிட்டிரம்" என்னும் 270 கிலோ மீட்டர் நீளமுள்ள நதி மேற்கு ஜாவாவில் இந்த நதியின் மாற்றம் நாம் நாசம் செய்ததை நாமே சரி செய்ய முடியும் என்பதற்கு எடுத்துங்காட்டாக உள்ளது. இந்தோனேசிய அதிபர் உலகின் சுத்தமான நதியாக மாற்றுவேன் என சபதம் எடுத்திருக்கிறார். இந்தோனேசிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் அடுத்த 5 வருடங்களுக்கு நாங்கள் எந்த சண்டையிலும் ஈடுபாடு காட்டப்போவதில்லை. மக்களின் நன்மைக்காக நீர்நிலைகளை சீரமைப்பதில் பிஸியாக இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.

நாடு என்பது மக்களே. மக்களின் நல்வாழ்வும் ஆரோக்கியமுமே வளர்ச்சிக்கான அடிப்படை என்பதிலும், நாடு பெருமை கொள்ள வேண்டியதும் அதைக் குறித்துத்தான் என்பதிலும் இந்தோனேசிய அரசு தெளிவாக உள்ளது.

புதன், 18 டிசம்பர், 2019

வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட, இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு 75 தியாகிகளின் பெயர்கள்.

வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட, இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு 75 தியாகிகளின் பெயர்கள்.

யாருப்பா சுதந்திரம் வாங்கித் தந்தாங்க என்றால் காந்தியும் நேருவும் என்று சாதாரணமாகச் சொல்லும் நிலைமையை ஒரு வரலாற்றுப் புரட்டை நம்மிடம் புகுத்திவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால் வெள்ளையனை எதிர்த்து அவனுக்கு எதிராகப் போராடி தூக்கில் தொங்கியும் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியும் சித்ரவதைகளாலும் உயிர்துறந்த வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட, இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு 75 தியாகிகளின் பெயர்களை மட்டும் இங்கே பிரசுரித்துள்ளோம். இவர்கள் எந்த சதிவழக்கில் கொல்லப்பட்டனர் என்பதையெல்லாம் படித்துத் தெரிந்துகொள்ளும் பொறுமை இன்று யாருக்கும் இல்லை.

குறைந்தபட்சம் அவர்களின் பெயர்களையாவது ஒருமுறை ஒரேஒரு முறை உச்சரித்து அவர்களுக்கு நன்றி செலுத்தலாமே.

1) ஷேர் அலி 8.2.1872
2) வாசுதேவ் சாபேக்கர் 8.5.1899
3) பாலகிருஷ்ண சாபேக்கர் 8.5.1899
4) விநாயக் ரானடே 8.5.1899
5) பிரபுல்ல சக்ரவர்த்தி (சக்கி) 30.4.1908
6) குதிராம் போஸ் 11.8.1908
7) சத்யேந்திரநாத் போஸ் 10.11.1908
8. கனையாலால் 10.11.1908
9) சாருசந்திர ராய் 10.11.1908
10) திருநெல்வேலி கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வர் 13.3.1908
11) மதன்லால் திங்ரா 9.8.1909
12) கோபால் சென் 3.6.1908
13) ஆனந்த் லட்சுமணன் கான்காரே 19.4.1910
14) தேஷ் பாண்டே 19.4.1910
15) கார்வே 19.4.1910
16) வாஞ்சிநாதன் 17.6.1911
17) அமீர்சந்த் 8.5.1915
18) பாய் பாலமுகுந்த் 8.5.1915
19) அவத்பிகாரி 8.5.1915
20) வசந்த்குமார் பிஸ்வாஸ் 10.5.1915
21) கர்த்தார்சிங் 16.11.1915
22) விஷ்ணு கணேஷ் பிங்களே 16.11.1915
23) பாய் பக்ஷீஸ் சிங் கில்வாலி 16.11.1915
24) பாய் பி. சுரேய்ன்சிங் 16.11.1915
25) பாய் ஐ. சுரேய்ன்சிங் 16.11.1915
26) பாய் ஜகத்சிங் 16.11.1915
27) ஹர்ணாம்சிங் பட்டிகொராயா 16.11.1915
28) மேவாசிங் 16.11.1915
29) பண்டிட் சோகன்லால் பதக் ........... 1916
30) பாய் ஹர்ணாம்சிங் ........... 1916
31) சாலியாராம் ஷானேவால் ........... 1916
32) பசாவாசிங் பாரா ........... 1916
33) நாராயண்சிங் பல்லோ ........... 1916
34) நரஞ்சன்சிங் சங்கட்புரா ........... 1916
35) சச்சீந்திரநாத் சன்யால் ........... 1916
36) சாரு சந்திரபாசு 16.3.1909
37) சித்தப்பிரியாரே 16.3.1909
38) ஜதீந்திரநாத் முகர்ஜி 16.3.1909
39) கோபிநாத் சாகா 1.3.1924
40) ராம்பிரசாத் பிஸ்மில் 17.12.1927
41) ராஜேந்திரநாத் லஹரி 17.12.1927
42) அஷ்பகுல்லா 19.12.1927
43) ரோஷன் சிங் 19.12.1927
44) லாலா லஜபதிராய் 17.11.1928
45) சந்திரசேகர் ஆசாத் 27.2.1931
46) பகத்சிங் 23.3.1931
47) சுகதேவ் 23.3.1931
48) ராஜகுரு 23.3.1931
49) சூர்யாசென் 11.1.1934
50) தாரகேஸ்வர் 11.1.1934
51) தஸ்தகீர் 11.1.1934
52) சட்டார்சிங் 29.7.1944
53) நசீர் சிங் 29.7.1944
54) துர்க்காமால் 25.8.1944
55) ஹசாரா சிங் 25.10.1944
56) சர்தாரா சிங் 23.3.1945
57) நாகேந்திர சிங் 28.8.1943
58) கேசரிசந்த் சர்மா 3.5.1945
59) சரண்சிங் 28.8.1943
60) தல்பஹதூர் தாப்பா 3.5.1945
61) தல்பாரா சிங் 3.5.1945
62) சமன்சிங் 3.5.1945
63) எஸ்.இ. பரதன் 10.9.1943
64) ப்ரீதம் சிங் 10.9.1943
65) குருசரண் சிங் 10.9.1943
66) டி.பி. குமாரன் 10.9.1943
67) போடார்க் 10.9.1943
68) கர்த்தார்சிங் 4.12.1945
69) முகம்மது அப்துல் காதர் 10.9.1945
70) ராமுத்தேவர் 7.7.1944
71) ராமசாமி ஒன்றிரியார் 7.7.1944
72) அஜாய் சிங் 1945
73) சாகூர் அகமது 23.8.1943

இந்த பதிவில் தூக்கிலிடப்பட்ட கொல்லப்பட்ட தியாகிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளன. ஆயுள் தண்டனை பெற்றவர்கள் (அப்போது 25 ஆண்டுகள்) கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள் ( 7 ஆண்டுகள்) சித்ரவதைக்கு உள்ளானவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர் உதாரணத்திற்கு படத்தை பார்க்கவும்.


முஸ்லீம் மக்கள் தொகை

முஸ்லீம் மக்கள் தொகை

 1⃣ இந்தியா 30%
 2⃣ அல்பேனியா 75%
 3⃣ அல்ஜீரியா 99%
 4⃣ அங்கோலா 25%
 5⃣ அர்ஜென்டினா 2%
 6⃣ ஆஸ்திரேலியா 2.09%
 7⃣ அஜர்பைஜான் 93%
 8⃣ பஹ்ரின் 100%
 9⃣ பங்களாதேஷ் 85%
 1⃣0⃣ பூட்டான் 5%
 1⃣1⃣ பிரேசில் 0.6%
 1⃣2⃣ பர்மா 10%
 1⃣3⃣ கனடா 1.48%
 1⃣4⃣Cntral africn rpblc 55%
 1⃣5⃣ சீனா 11%
 1⃣6⃣ எகிப்து 94%
 1⃣7⃣ எதோபியா 65%
 1⃣8⃣ ஃபிஜி 11%
 1⃣9⃣France 7%
 2⃣0⃣ ஜார்ஜியா 11%
 2⃣1⃣ ஜெர்மனி 3.4%
 2⃣2⃣ கிரீஸ் 1.5%
 2⃣3⃣ குயினியா 95%
 2⃣4⃣ குயானா 15%
 2⃣5⃣ ஹாங்காங் 1%
 2⃣6⃣AFGHANISTAN'S%
 2⃣7⃣ இந்தோனேசியா 95%
 2⃣8⃣Iran 99%
 2⃣9⃣Iraq 97%
 3⃣0⃣ இஸ்ரியல் 14%
 3⃣1⃣ இத்தாலி 1%
 3⃣2⃣ ஜப்பான் 1%
 3⃣3⃣ ஜோர்டான் 95%
 3⃣4⃣ கென்யா 30%
 3⃣5⃣ குவைத் 89%
 3⃣6⃣ லெபனான் 70%
 3⃣7⃣ லிபியா 100%
 3⃣8⃣ மாலத்தீவுகள் 100%
 3⃣9⃣ மலேசியா 60%
 4⃣0⃣ மொரிஷியஸ் 19.5%
 4⃣1⃣ மயோட்டே 99%
 4⃣2⃣ நைஜீரியா 75%
 4⃣3⃣ ஓமன் 100%
 4⃣4⃣ பாக்கிஸ்தான் 97%
 4⃣5⃣ பிலிபைன்ஸ் 14%
 4⃣6⃣ கத்தார் 100%
 4⃣7⃣ ருமேனியா 20%
 4⃣8⃣ ரஷியா 18%
 4⃣9⃣ சவுதி அரபு 100%
 5⃣0⃣ சிங்கப்பூர் 17%
 5⃣1⃣ சோமாலியா 100%
 5⃣2⃣ ஸ்ரீ லங்கா 9%
 5⃣3⃣ சூடான் 85%
 5⃣4⃣ சிரியா 90%
 5⃣5⃣ தாசாகிஸ்தான் 85%
 5⃣6⃣ தான்சானியா 65%
 5⃣7⃣Thiland 14%
 5⃣8⃣ துனிசியா 98%
 5⃣9⃣ துர்கி 99.8%
 6⃣0⃣UAE 96%
 6⃣1⃣UK 2.5%
 6⃣2⃣USA 3.75%
 6⃣3⃣ உஸ்பெகிஸ்தான் 88%

 நபிமார்கள் தோன்றிய இடம்

 D ஆடம் (ஏ.எஸ்) - இலங்கை
 Oo நூஹ் (ஏ.எஸ்) - ஜோர்டான்
 Ho ஷோயிப் (ஏ.எஸ்) - சிரியா
 Ale சலே (ஏ.எஸ்) - லெபனான்
 B இப்ராஹிம் (ஏ.எஸ்) - பாலஸ்தீனம் மற்றும் ஈராக்கில் இறந்தார்
 S இஸ்மாயில் (ஏ.எஸ்) - சவுதி அரேபியா
 Ak யாகூப் (ஏ.எஸ்) - பாலஸ்தீனம்
 Ah யஹ்யா (ஏ.எஸ்) பாலஸ்தீனம்
 ஜகாரியா (ஏ.எஸ்) பாலஸ்தீனம்
 S இஷாக் (ஏ.எஸ்) - பாலஸ்தீனம்
 Us யூசுப் (ஏ.எஸ்) - பாலஸ்தீனம்
 Oo லூத் (A.S) - ஈராக்
 Y அயுப் (ஏ.எஸ்) - ஜோர்டான்
 Ood ஹூட் (ஏ.எஸ்) - யமென்
 Ab நாபி-முஹம்மது S.A.W) - சவுதி அரேபியா

 Prophet தீர்க்கதரிசிகளின் வயது

 D ஆடம் (ஏ.எஸ்) - 1000 வருடம்
 OoNooh (A.S) - 950 Yrs
 HoShoaib (A.S) - 882 Yrs
 Ale சலேஹ் (ஏ.எஸ்) - 586 வருடம்
 ஜகாரியா (ஏ.எஸ்) - 207 வருடம்
 B இப்ராஹிம் (A.S) - 195 Yrs
 Ula சுலைமான் (ஏ.எஸ்) - 150 வருடம்
 ✅ இஸ்மாயில் (A.S) - 137 Yrs
 Ak யாகூப் (ஏ.எஸ்) - 129 வருடம்
 Us மூசா (ஏ.எஸ்) - 125 வருடம்
 S இஷாக் (ஏ.எஸ்) - 120 வருடம்
 Ar ஹாரூன் (ஏ.எஸ்) - 119 வருடம்
 Us யூசுப் (A.S) - 110 Yrs
 ✅NABI முஹம்மது (S.A.W) - 63 ஆண்டுகள்


செவ்வாய், 17 டிசம்பர், 2019

#பணம்

#பணம்

1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம்.

ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?
 

அப்படியாக  பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.

 "காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1,  TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.
   

இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான  கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள்.

பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.

3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள்.

அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.
 

இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள்.

ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?

4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.

5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம்
( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.


அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?

6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.
பரவும் அபாயத்தை மறக்கிறோம்.

மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான்.

அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள்.

ஆனால் நாம்.....................?

இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும்.

இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம்.

ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.
   

நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.
 

எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.
 

அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்
   

கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.
 

இந்த குறுந்தகவலை
குறைந்த பட்சம்  நம் நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்வோம்.
 

சற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்........!
       
நன்றி.
               
இப்படிக்கு:-       
*வங்கி காசாளர்..*

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றிய உலக நாடுகள் ஓர் அலசல்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றிய உலக நாடுகள் ஓர் அலசல்

1. நீங்கள் வட கொரியா எல்லையை சட்டவிரோதமாகக் கடந்தால், மூடிய சிறையில் உங்களுக்கு 12 ஆண்டுகள் கடின உழைப்பு விதிக்கப்படும்.

 2. நீங்கள் சட்டவிரோதமாக ஆப்கானிஸ்தான் எல்லையைத் தாண்டினால், நீங்கள் அங்கு சுடப்படுவீர்கள்.

 3. நீங்கள் சட்டவிரோதமாக சவுதி அரேபியா எல்லையை கடந்தால், நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.

 4. நீங்கள் சட்டவிரோதமாக சீன எல்லையைத் தாண்டினால், நீங்கள் கடத்தப்படுவீர்கள், மீண்டும் உங்களிடம் இல்லாததை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள்.

 5. நீங்கள் கியூபா எல்லையை சட்டவிரோதமாகக் கடந்தால், நீங்கள் சரிந்து போகும் வரை நீங்கள் ஒரு அரசியல் சிறையில் அடைவீர்கள்.

 6. நீங்கள் சட்டவிரோதமாக பிரிட்டிஷ் எல்லையைத் தாண்டினால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், விசாரிக்கப்படுவீர்கள், சிறைக்கு அனுப்பப்படுவீர்கள், உங்கள் தண்டனைக்குப் பிறகு உங்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவீர்கள்.

இது போல் இன்னும் பல நாடுகளில் பல கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில்


 7. நீங்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லையைத் தாண்டினால், நீங்கள் பெறுவீர்கள்:

 1. ரேஷன் கார்டு
 2. பாஸ்போர்ட்
 3. ஓட்டுநர் உரிமம்
4. வாக்காளர் அடையாள அட்டை
 5. கடன் அட்டை
 6. மானியத்தில் அரசு வீட்டுவசதி.
 7. வீடு வாங்க கடன்
 8. இலவச கல்வி 9. இலவச சுகாதார பராமரிப்பு
 10. ஊழல் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குரிமை !!!

 இந்தியா எங்கே செல்கிறது எதிர்கால இந்திய நாட்டு மக்கள் நிலை என்ன... ??

யாருக்கும் பாதிப்பைத் தராத , நேர்மையான குடியுரிமை சட்ட திருத்த மசோதா அவசியம் வேண்டும் என்று உணருங்கள்...

வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஜப்பானில் ஜாதி ஒழிக்கப்பட்டது எப்படி?

*ஜப்பானில் ஜாதி ஒழிக்கப்பட்டது எப்படி?*

100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது...

கீழ் சாதியினர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் 'புராக்குமீன்' (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் "சேரி"களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர். அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது.. அவர்களுக்கு செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது...

1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படுதோல்வியடைந்த பிறகு குறைவான மக்கள் தொகையில், பொருளாதாரமற்ற சூழ்நிலையில் திக்கு முக்காடியது... இனி ஜப்பான் அவ்வளவுதான், சரித்திரத்தின் பக்கங்களில் காணாமல் போய்விடும் என்று உலகம் உச்சுக்கொட்டியது..

காலங்காலமாக ஆண்ட பரம்பரையாக சொல்லிக்கொண்டு, நாட்டை உலகப்போரில் சீர்குலைத்ததற்கு மன்னர் "ஹிரோஹிட்டோ' (Hirohito) பொதுமன்னிப்பு கேட்டு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகிக் கொண்டார்... அவருக்குப் பதில் போர்களில் பெரும் பங்கு வகித்த அவரது மந்திரி 'டோஜோ' (Tojo) போர் வெறியை தூண்டியதற்காக தூக்கிலிடப்பட்டார். (அப்போதும் மன்னர்களே தப்பினர், அவரின் எடுபுடிகளான மந்திரிகள் மாட்டிக்கொண்டனர்)

பின்னர் வந்த மக்களாட்சி முறை ஜப்பானிய மக்கள் மத்தியிலுள்ள சாதி பிரிவினைகளை முதலில் ஒழித்தது. ஜப்பான் வளர வேண்டுமென்றால் அனைவருமே 'ஜப்பானியர்' என்ற சொல்லைத் தவிர 'நான் சாமுராய் இனம், என்‌ பரம்பரை வீரப்பரம்பரை, நான் அவன் நான் இவன்' போன்ற வீண் பெருமைக்கு இனி இடமில்லை என்று திட்டவட்டமாக நின்றது...

பொது மக்களின் வேலை நேரத்தை அதிகரித்தது.. விடுமுறைகளை குறைத்தது... புராக்குமீன்களை ஊருக்குள் அழைத்தது... ஊரார் அனைவருக்கும் ஒரே கல்வியை தந்தது... சாதிய புனைப்பெயர்களை அழித்தது... உலக நாடுகளின் பண உதவியுடன் ஜப்பானியர் அனைவருமே தம் தம் திறமையை வைத்து ஏற்றுமதி தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் தந்தது... அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொழில் ரீதியாக கைகோர்த்து நின்றது... முதலாளித்துவமாக வெளியே தெரிந்தாலும் உள்ளே சிறந்த சோசலிச கொள்கை கொண்ட நாடாக பரிணமித்தது...

"ஜப்பானிய நாட்டில் தயாரிக்கப்பட்டது"(Made in Japan) என்றால் அதன் தரமே உலக நாடுகளின் தரத்தை விட உயர்ந்த தரமாக இருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் விட்டு கொடுக்கவில்லை... நாடு மெல்ல மெல்ல முன்னேறியது... இத்துபோன பழைய பெருமைகள் பேசி, எங்கள் சாதி, எங்கள் பரம்பரை, எங்கள் இனம் என்று முட்டுகட்டையாக கூவிய சில பழமைவாதிகளை ஈவிரக்கமின்றி கைது செய்து கடுமையாகக் தண்டித்தது... ஆன்மீகத்தைவிட அறிவியல்சார் நாத்திகத்தையே முதல் கொள்கையாக பாவித்தது...

கலப்பு சாதி திருமணங்களை வலுக்கட்டாயமாக்கியது.. சம்பந்தி வீட்டார் என்ன சாதி? நம் மேனேஜர் என்ன சாதி? சக பணியாளர் என்ன சாதி? எதிர் வீட்டுக்காரன் என்ன சாதி ? என்று மோப்பம் பிடிப்பதை அரசாங்கம் தண்டனை குற்றமாகவே மாற்றியது... சாதியை பற்றி பேசினாலே கடும் தண்டனை என்பதால் வெறும் 30 ஆண்டுகளில் கடை சாதியான புராக்குமீன் இரத்தமும் சாமுராய்களின் இரத்தமும் அனைத்து ஜப்பானியர் உடலிலும் ஓடியது..

விளைவு...??

இந்தியா இன்னமும் 100 ஆண்டுகளில் வளரமுடியாத சமூக வளர்ச்சியை பெற்று இன்று ஜப்பான் நாம் எட்ட முடியாத தூரத்தில் உயர்ந்து நிற்கிறது‌..

"புராக்குமீன்" என்ற வெறுப்பை ஒரு கடந்தகால கனவாக ஜப்பான் மக்களிடம் மறக்கடித்து சாதி பிரிவினைகளை வென்று உலக நாடுகளில் சிறந்த மக்கள் மேம்பாடான முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது‌...

இந்தியா..??

வெள்ளி, 6 டிசம்பர், 2019

இனி IBPS/RRB/SSC தேர்வுகள் கிடையாது? ஒரே தேசம் ஒரே ஆட்தேர்வு திட்டத்தை அமலாக்கும் முனைப்பில் மத்திய அரசு


இனி IBPS/RRB/SSC தேர்வுகள் கிடையாது? ஒரே தேசம் ஒரே ஆட்தேர்வு திட்டத்தை அமலாக்கும் முனைப்பில் மத்திய அரசு

மத்திய அரசுப் பணிகளுக்கான ஆட்தேர்வில் மிகப் பெரும் அதிரடியாக தற்போது உள்ள ரயில்வே/வங்கி/மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளை இரத்து செய்து விட்டு “பொது தகுதித் தேர்வு” எனும் பெயரில் ஒரே தேர்வை நடத்த மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

தற்போது யுபிஎஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்திய குடிமைப் பணிகளான இந்திய ஆட்சியர் பணி, இந்திய அயலக பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி உள்ளிட்ட குரூப் ஏ மற்றும் குரூப் பி கெஜட்டட் அதிகாரிகள் பணிகளுக்கான தேர்வுகளை நடதரதுகிறது.

இதே போல எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம், மற்ற அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

ரயில்வே தனியாகவும், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகள் தனியாகவும் தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்கின்றன.

இந்நிலையில் தொழில்நுட்ப அறிவு சாராத இந்த பணிகளுக்கான பல்வேறு தேர்வு முறைகளை கலைத்து விட்டு ஒருங்கிணைந்த பொதுத் தகுதித் தேர்வு ஒன்றை பட்டப்படிப்பு, 12’ம் வகுப்பு மற்றும் 10’ம் வகுப்பு என பல்வேறு தகுதிகளில் நடத்த உள்ளது.

மேலும் இந்த பொது தகுதித் தேர்வில் நிலை 1, நிலை 2, நிலை 3, நிலை 4 என பல்வேறு படிநிலைகளும் இருக்கும். முதல் நிலையில் கணினியில் நடக்கும் பொது அறிவு, திறன் சார்ந்ததாக இருக்கும். அடுத்தடுத்த படிநிலைகளில் ஸ்கில் டெஸ்ட் உள்ளிட்டவை இருக்கும்.

இத்தேர்வுகளில் தேர்வர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் தேர்வருக்கும் மற்றும் ஆட்சேர்ப்பு நடத்தும் அமைப்புக்கும் பகிரப்படும். குறிப்பிட்ட சில பதவிகளுக்கு அதற்கான சிறப்புத் தகுதிகளை சோதிக்க வேண்டிய அவசியம் இருப்பின் அதற்கான தேர்வுகளை ஆட்சேர்ப்பு அமைப்புகளே மேற்கொண்டு இடத்தை நிரப்பிக் கொள்ளும்.

இத்தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறும் நிலையில் அந்த தேர்ச்சியானது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும். அதற்குள் எந்தவொரு அரசுப் பணியையும் பெறவில்லையெனில் மீண்டும் பொது தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

ஒருவர் குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் தங்கள் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள அதிகபட்சம் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இது தொடர்பாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கையில், “இதன் மூலம் தேர்வர்கள் ஒரே தகுதிக்கு பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக தேர்வு நடத்தும்போது அதற்கான விண்ணப்பச் செலவுகள், கால விரயம் போன்றவை தவிர்க்கப்படும். அதே போல தேர்வு முகமைகளுக்கும் தேர்வை நடத்தி ஆட்சேரப்பை மேற்கொள்வதற்கான செலவுகள் குறையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகளைப் வழங்க மத்திய பணியாளர் அமைச்சகம் தற்போது மத்திய அரசின் அனைத்து துறைகளையும்/ மாநில அரசுகள்/ யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசு பணிகளுக்காக மட்டுமே தற்போது இது கொண்டுவரப்பட்டாலும், இந்த பொது தகுதித் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு மாநில அரசுகளும் ஆட்சேர்க்கையை மேற்கொள்ள விரும்பும்பட்சத்தில் உரிய வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தகுதித் தேர்வு எனும் ஒன்றை கொண்டு வந்தாலும், ஆட்சேர்ப்பை எஸ்எஸ்சி/ஆர்ஆர்பி/ஐபீபிஎஸ் போன்றவை தான் மேற்கொள்ளும். பொது தகுதித் தேர்வு என்பது அடிப்படைத் தகுதியாகக் கொண்டு குறிப்பிட்ட பணிகளுக்கு சிறப்புத் தேர்வுகள் தேவைப்படுமாயின் அதை அந்தந்த தேர்வு முகமைகளே நடத்திக் கொள்ளலாம் என்பது தான் இந்த புதிய அறிவிப்பின் சாராம்சம்.

இந்த பொது தகுதித் தேர்வைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கீழே கருத்துக்களாக தெரிவிக்கவும்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

“தனி பாஸ்போர்ட்.. தனிக்கொடி.. தனித் தீவு” - நித்யானந்தாவின் ராஜ வாழ்க்கை #நித்யானந்தா_கைலாசம்


“தனி பாஸ்போர்ட்.. தனிக்கொடி.. தனித் தீவு” - நித்யானந்தாவின் ராஜ வாழ்க்கை
#நித்யானந்தா_கைலாசம்

ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு ‘கைலாசம்’ என பெயரிட்டு தனிநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு விடுதியில் ஆசிரமம் அமைத்து இந்தியாவிலும், உலக நாடுகளிலும் உள்ள ஆன்மிக பக்தர்களை கவர்ந்தவர் நித்யானந்தா. ஆனால் பாலியல் வன்கொடுமை, பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் கட்டியது, சிறுமிகளை வசியப்படுத்தி வைத்திருந்தது என தொடர்ச்சியாக எழுந்த புகார்கள் காரணமாக நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.


தற்போது அவர் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் நாட்டுக்கு சொந்தமான ஒரு தீவை விலைக்கு வாங்கி தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக தங்கமும், பணமும் பக்தர்களிடம் இருந்து வசூல் செய்து, பல கோடி ரூபாய் கொடுத்து தீவை வாங்கியுள்ளார் நித்தியானந்தா.

பெங்களூரு பிடதி ஆசிரமத்திலிருந்து உத்தரப்பிரதேசம் சென்று அங்கிருந்து காரில் நேபாளம் சென்றுள்ளார் நித்யானந்தா. அங்கிருந்து தனி விமானத்தில் தான் வாங்கிய தீவுக்கு, 2 பெண் சீடர்கள் மற்றும் தற்போது குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தனன் சர்மாவின் மூத்த மகளுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு படிப்படியாக ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் அந்த தீவுக்கு சென்றுள்ளனர். இதில் பெரும்பாலோனர் பெண்கள் என்று தெரிகிறது.


நித்யானந்தா வாங்கியிருக்கும் இந்தத் தீவுக்கு ‘கைலாசம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தீவை தனிநாடுபோல் நடத்த திட்டமிட்டு, அதற்கான முயற்சிகளை அமெரிக்காவைச் சேர்ந்த சட்டமைப்பு உதவியுடன் நித்யானந்தா பக்தர்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. தனக்கு என தனிக்கொடி, தனி பாஸ்போர்ட், தனி இலட்சினை போன்றவற்றையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் தகவல் கிடைத்த பிறகுதான் நித்யானந்தா மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக, மத்திய அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.


‘கைலாசம்’ தீவில் இலவச மருத்துவம், இலவசக் கல்வி வழங்கப்படும், யோகா, தியானம், ஆன்மிக மருத்துவம் வழங்கப்படும் என அதன் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு என்ற முறையில் ‘கைலாசம்’ அமைதியான இறையாண்மை உள்ள சேவை அடிப்படையில் செயல்படும் என்றும், தூதரக நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டு உலக நாடுகளுடன் இணக்கமாக செயல்படுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்..!



தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்..!

காலையில்  எழுப்பிட அப்பா
வேண்டாம் - *Alarm app* -இருக்கு!

நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் - *step counter* இருக்கு!

சமைத்து தந்திட அம்மா
வேண்டாம்  - *zomato, swiggy app* இருக்கு!

பயணம் செய்ய பேருந்து
வேண்டாம் - *Uber,OLA app* இருக்கு!

விலாசம் அறிய டீ - கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
*Google Map* இருக்கு!

மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் - *Big Basket* இருக்கு!

துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் -
*Amazon , Flipkart app* இருக்கு!

நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம் -
*What's up, facebook* இருக்கு!

கைமாறாக பணம் வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை - *Paytm app* இருக்கு!

மற்றும் பல தகவலுக்கு நம்ம
*Google* டமாரம் இருக்கு!

இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு..
*App* என்னும் *ஆப்பு*.!!

_உள்ளங்கை நெல்லிக்கனியென நீ நினைக்க !_

_விரித்திருப்பதோ மீள முடியாத வலைதளம்.!_

_சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!_

_விழித்தெழுந்து விடை கொடு..!_

*செல்லின அடிமைகளாய் இல்லாமல் உறவுகளோடும் சேர்ந்து நல்ல வலை பின்னுவோம்..!*

வருங்காலத்தை உணர்த்தும் / எச்சரிக்கும் / அறிவுறுத்தும் அருமையான பதிவு.

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்வர்.
_📖படித்ததில் பிடித்தது ..

வெள்ளி, 29 நவம்பர், 2019

உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜா 9 வது இடத்தில் இருக்கிறார்.


உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் இசைஞானி  இளையராஜா 9 வது இடத்தில் இருக்கிறார்.

இது கடந்த ஆண்டுக்கு முன் வந்த தகவல்தான். இந்த தகவலின்படி இருக்கிற உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களின் பட்டியலை உற்று நோக்குங்கள். இந்த வரிசையில் இசைஞானி  இளையராஜா 9 வது இடத்தில் இருக்கிறார்..

உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக, திரைப்படங்களுக்கான உலகளாவிய  இணையதளமான Taste of cinema என்ற இணையம் இளையராஜாவை தேர்வு செய்துள்ளது என்பது ஒரு சிறப்பம்சம்.
அடுத்ததாக இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே என்பது இரண்டாவது சிறப்பம்சம்.

//டேஸ்ட்ஆப் சினிமா என்ற அந்த பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த 25 கம்போஸர்கள் பட்டியலால் விருதுகள் மீதான மதிப்பீடு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்பதை கவனியுங்கள்..
இந்த வரிசை பட்டியலை வெளியிட்ட இணையதளத்தில் உள்ளவர்களை ஒத்த மனிதர்கள்தான் ஆஸ்கர் போன்ற விருதுகளுக்கான தேர்வுக்குழுவில் இருப்பவர்களும்..
ஆனால் இது ஏதோ நாமினியில் இருக்கிற ஐந்தாறு படங்களில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து அதுசார்ந்த  கலைஞர்களுக்கு விருது அளிக்கிற கதையே அல்ல. உலகம் முழுதுமுள்ள தற்கால இசையமைப்பாளர்களின் இசைபற்றிய ஆராய்ச்சிகளுக்கு பின்னால் எடுக்கப்பட்ட முடிவு. ஒவ்வொரு இசைக்கலைஞர்கள் பற்றிய சாதனைகள், சுயவிவரங்கள் இங்கே இருக்கின்றன. ஏலியன், பிளானட் ஆப் தி ஏப்ஸ், கிளாடியேட்டர், டைட்டானிக், பிரேவ் ஹார்ட் உள்ளிட்ட பல பிரமாண்ட கம்போசிங்களை அளித்த கம்போசர்களும், மூன்று முறைக்கு மேல் ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வாங்கிய லார்ட் ஆப்த ரிங் பட கம்போசரும், இசைக்கான உயரிய சீஸர் விருதை மூன்று முறை வென்ற கம்போசரும் இளையராஜாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் இருப்பதை காணும்போது வியப்பு மேலிடுகிறதை. இந்த பட்டியலில் உள்ள 25 பேரை கவனியுங்கள். இளையராஜாவின் மீதான மஞ்சள் ஒளிக்கான காரணம் புரியும்//

25. ஆலன் சில்வெஸ்ட்ரி (ஃபாரஸ்ட் கம்ப், பேக் டு த ஃப்யூச்சர், தி அவெஞ்சர்ஸ் படங்களின் இசையமைப்பாளர்)

24. வாஞ்சலிஸ் (ப்ளேட் ரன்னர், சேரியட்ஸ் ஆப் பையர் போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர்)

23. ஜேம்ஸ் நியூட்டன் – ஹோவர்ட் (எட்டு முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தி ப்யூஜிடிவ், மை பெஸ்ட் ப்ரண்ட்ஸ் வெட்டிங், வெர்டிகல் லிமிட், தி சிக்ஸ்த் சென்ஸ் போன்றவை இவர் இசையில் வந்தவை)

22. பிலிப் க்ளாஸ் (இவர் இசையமைத்த மிஷிமா : எ லைப் இன் போர் சேப்டர்ஸ் இன்றும் சிறந்த இசையாகப் போற்றப்படுகிறது. க்வாட்ஸி பட வரிசைகளுக்கு இசையமைத்தவர்)

21.டேனி எல்ப்மேன் (பிரபல ஹாலிவுட் இயக்குநர் டிம் பர்ட்டனுடன் இணைந்து பல வெற்றிப் படங்கள் தந்தவர். குறிப்பாக பேட்மேன் வரிசைப் படங்கள்)

20.தாமஸ் நியூமேன் (ரோட் டு பெர்டிஷன், பைன்டிங் நெமோ போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர். இவர் தந்தை ஆல்ப்ரெட் நியூமேன், சகோதரர் டேவிட் நியூமேன், உறவினர் ராண்டி நியூமேன் அனைவருமே புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள்)

19.ஹோவர்ட் ஷோர் (லார்ட் ஆப் தி ரிங்க்ஸின் மூன்று பாகங்களுக்கும் இசை தந்தவர். மூன்று ஆஸ்கர்கள் பெற்றவர்)

18.எல்மர் பெர்ன்ஸ்டீன் (தி மேக்னிபிஷியன்ட் செவன், டென் கமான்ட்மெண்ட்ஸ், தி கிரேட் எஸ்கேப் போன்ற படங்கள் இவர் இசையமைத்தவைதான்)

17.டிமிட்ரி டியோம்கின் (ரெட் ரிவர், ஹை நூன், மிஸ்டர் ஸ்மித் கோஸ் டு வாஷிங்டன் போன்ற படங்களின் இசையமைப்பாளர்)

16.ஜார்ஜஸ் டெலெரெ (தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சீஸர் விருது பெற்ற முதல் இசையமைப்பாளர். ஜீன் லாக் கோடர்ட்டின் கண்டெம்ப் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.)

15.ஜேம்ஸ் ஹார்னர் (இவரது டைட்டானிக் பட இசையை யார்தான் மறக்க முடியும். பிரேவ் ஹார்ட்டும் இவர் படம்தான்)

14.ஜோ ஹிசைசி (பிரபல இயக்குநர் தகாஷி கிடனோவின் பெரும்பாலான படங்களுக்கு இசை இவர்தான். வேல்லி ஆப் தி விண்ட் படத்தின் இசையமைப்பாளர்)

13.ஹான்ஸ் ஜிம்மர் (க்ளாடியேட்டர், பைரேட்ஸ் ஆப் தி கர்ரீபியன் போன்ற மெகா படங்களின் இசையமைப்பாளர் ஜிம்மர். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குக்குப் பிடித்த இசையமைப்பாளர். )

12.ஜான் பேர்ரி (பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜான் பேர்ரி. அவுட் ஆப் ஆப்ரிக்கா படத்துக்காக ஆஸ்கர் பெற்றவர்)

11.மௌரிஸ் ஜார் (லாரன்ஸ் ஆப் அரேபியா, கோஸ்ட், விட்னஸ் போன்ற படங்களுக்கு மறக்க முடியாத இசை தந்தவர்)

10.ஜெர்ரி கோல்ட்ஸ்மித் (ஏலியன்ஸ், ப்ளானட் ஆப் தி ஏப்ஸ், டோட்டல் ரீகால் போன்ற மெகா ஹிட் படங்களின் இசையமைப்பாளர்.)

9.இளையராஜா (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 970 படங்கள், 4500க்கும் மேற்பட்ட பாடல்கள், 28 தனி இசை ஆல்பங்கள், ஏராளமான சர்வதேச மேடை நிகழ்ச்சிகள் நடத்தியவர்… ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய இசைக்குச் சொந்தக்காரர்.. பின்னணி இசையால் படங்களை பேச வைத்தவர். Music Composer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்த இசையமைப்பாளர்!)

8.ஆலன் மென்கின் (6 ஆண்டுகளில் 8 ஆஸ்கர்களை வாங்கியவர். டிஸ்னி நிறுவனப் படங்களில் பணியாற்றியவர். தி லயன் கிங் இவர் இசையமைத்த படம்தான்)

7.மைக்கேல் ரெக்ரான்ட் (க்ளின்ட் ஈஸ்ட்வுட், ராபர்ட் ஆல்ட்மேன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களுடன் பணிபுந்தவர். தி தாமஸ் க்ரோனின் அஃபையர்ஸ் படத்தின் இசையமைப்பாளர்.)

6.டோரு டகேமிட்சு (ஜப்பானின் முக்கிய இசையமைப்பாளர். பிரபல இயக்குநர்கள் ஹிரோஷி தெஷிகாரா, நகிஷா ஒஷிமா போன்றவர்களின் படங்களுக்கு இசை தந்தவர்)

5.நினோ ரோட்டா (தி காட்பாதர் படங்களுக்கு இசை தந்தவர்)

4.பெர்னார்ட் ஹர்மான் (சைக்கோ, வெர்டிகோ உள்ளிட்ட ஹிட்ச்காக் படங்களின் இசையமைப்பாளர்)

3.ஜான் வில்லியம்ஸ் (சூப்பர் மேன், ஸ்டார் வார்ஸ், ஈடி, ஜூராஸிக் பார்க் படங்களின் இசையமைப்பாளர்)

2.மேக்ஸ் ஸ்டெய்னர் (காஸாப்ளாங்கா, கான் வித் த விண்ட் படங்களின் இசையமைப்பாளர்)

1.என்னியோ மொர்ரிக்கோன் (கில் பில், இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படங்களுக்கு இசையமைத்தவர்)
                          --ராசாங்கம்.

சனி, 23 நவம்பர், 2019

#தென்காசி_மாவட்டமாக_உதயமானது :


#தென்காசி_மாவட்டமாக_உதயமானது :
-------------------------------------
நெல்லையிலிருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமானது தென்காசி.

(வரைபடம்-திருநெல்வேலி மாவட்டம் 1940களில் .Then Tirunelveli district-1940s.)

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 33வது புதிய  மாவட்டமாக அமைகிறது தென்காசி.

புதிய மாவட்டம் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 கோட்டங்கள் மற்றும் 8 தாலுகாக்களை உள்ளடக்கியது.

தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தென்காசி மாவட்டம்.

தூத்துக்குடி,தென்காசி,நெல்லை என்று மாவட்டங்கள் பிரிந்தாலும் எல்லாமே நெல்லை சீமைதான்!

என் தகப்பா.....
நெல்லையப்பா....
நானுனக்கு
பிள்ளையப்பா....

சரிக்குச்சரி
ஊரினைப்
பிரித்து
தென்காசி
எனும்
பேரினைக்
கொடுத்தாய்...

தற்கால
பெருமை
சொல்லும்
மேம்பாலம்
உனக்கு

கற்கால
பெருமை
சொல்லும்
குற்றாலம்
எனக்கு...

சேட்டைகள்
செய்யும்
நெல்லை
உனக்கு

சேட்டன்கள்
வாழும்
கேரளத்தின்
எல்லை
எனக்கு...

பாரம்பரியமிக்க
பாளையங்கோட்டை
உன்னிடம்

தன்மானமிக்க
தலைவன்கோட்டை
என்னிடம்...

வம்பை
தவிர்க்கும்
அம்பாசமுத்திரமும்
வம்பை
வளர்க்கும்
கோபாலசமுத்திரமும்
உங்களுக்கு...

பண்பை
வளர்க்கும்
பாவூர்சத்திரமும்

அன்பை
பெருக்கும்
பனவடலிசத்திரமும்
எங்களுக்கு...

கைதியை
அடைக்கும்
சென்ட்ரல்
உங்களுக்கு

மனதினை
மயக்கும்
தென்றல்
எங்களுக்கு...

ஆற்றங்கரை
குளியல் உங்களுக்கு
அருவி குளியல்
எங்களுக்கு.

உங்களுக்கு
ராதாபுரம்

எங்களுக்கும்
செங்கலுக்கும்
மாதாபுரம்...

ஆலங்குளத்து
ஆலையின்
அரிசியை
பதிலளிப்பேன்...

மானூரிலிருந்து
லேட்டா
வந்தாலும்
பிரானூர்
புரோட்டாவை
பரிசளிப்பேன்...

பழவூரின்
பசுமோரை
பாவூரின்
பசுங்கீரைக்கு
பகிர்ந்தளிப்பேன்...

மணிமுத்தாரை
வைத்துக்கொண்டு
அடவிநயினாரை
எனக்களித்தாய்...

கட்ட
பொம்மனையும்
பாரதியையும்
பங்காளிக்கு
வழங்கிவிட்டு

வாஞ்சி
நாதனையும்
பூலித்தேவனையும்
தென்காசிக்கென
முழங்கிவிட்டாய்...

கடல்
இல்லையென
கவலை
கொண்டோம்

பாதி
உடலையும்
காசி
விஸ்வநாதன்
திடலையும்
தந்து
திகைக்க
வைத்தாய்...

ஒன்றின்மேல்
ஒன்றமர்ந்தாலும்
குன்றின்மேல்
குடியிருக்கும்
எங்கள்
திருமலைக்
குமரனுக்கு
ஈடில்லையென
குதூகலித்தோம்...

மங்கையான
சங்கை
அதிவிரைவில்
தங்கையாக
உதயமாக
எங்கள்
பங்கை
செலுத்திடுவோம்

திருவேங்கடத்து
மக்களின்
தாங்கொணாத்
துயரைத்தை
துடைத்திடுவோம்...

நெல்லையின்
கெத்து
இல்லையெனும்
சொல்லை
உடைத்திடுவோம்...

அப்பனே
நெல்லையப்பா
அல்வாவாலும்

நீ பேர்பெற்றாய்.....
பிரிவு வருத்தான்....

திருநெல்வேலியிலிருந்து பிரிந்ததென்காசி மாவட்ட வரைபடம்.
தென்காசியை தலைநகராகக்கொண்டு ஆண்ட பாண்டியர்களின் நினைவுக்கு வருகிறது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-11-2019


புதன், 20 நவம்பர், 2019

மாவட்ட பிரிவினைக்குப்பிறகு ஒரு திருநெல்வேலிக்காரனின் மனநிலை...

மாவட்ட பிரிவினைக்குப்பிறகு ஒரு திருநெல்வேலிக்காரனின் மனநிலை...

வீட்ல துருதுருனு வயசுக்கு வந்த ஒரு பொண்ணு இருந்து, அத கட்டிக்கொடுத்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வச்ச பிறகு ஒரு வெறுமை, சோகம், மகிழ்ச்சி, அயர்ச்சி எல்லாம் கலந்த ஒரு உணர்வு வருமே! அப்படியொரு உணர்வில்தான் திருநெல்வேலி மாவட்ட மக்கள் அனைவருமே இருக்கிறோம்.

ஆம்! தென்காசி எங்கள் நெல்லை மண்ணின் மகள்! மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் பல பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் அவள் பெண்! அவளை தமிழ்நாட்டுக்கு இன்னொரு மாவட்டமாக கட்டிக்கொடுத்து தனியாக வாழ வழியனுப்பி வைத்துவிட்டோம்.

சும்மா அனுப்பல... நாடே வியக்குமளவு சீதனம் கொடுத்து அனுப்பியிருக்கிறோம். குற்றால அருவிகள், தாமிரபரணியின் கிளை ஆறுகளான சிற்றாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி ஆகிய நான்கு கிளை ஆறுகள், அதன்மேல் கடனா, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு ஆகிய ஐந்து அழகான அணைகள் என்று இயற்கை எழில்கொஞ்சும் பல பகுதிகள் அவள் பெற்ற சீதனம்! இது தவிர, எங்கள் வற்றாத ஜீவநதி தாமிரபரணியின் பாபநாசம் அணையிலிருந்து ஒரு பங்கு குடிநீர் வழக்கம்போல தினமும் அவளுக்கு செல்லும்.

இவளல்லாது எங்கள் நெல்லை மண்ணிற்கு ஒரு மூத்த மகனும் இருக்கிறான். அவன் பெயர் தூத்துக்குடி! தொழில் வளம் மிக்க மாவட்டமென்பதால் அவன் ஆண்மகன்! தொழில் வளத்தில் நெல்லையை பின்னுக்குத்தள்ளி தோளுக்கு மேல வளர்ந்துட்டு வர்றான்.

பொறுப்பாக சம்பாதிக்கும் ஒரு மகன், ஒரு அழகான மகள்! இதுதான் எங்கள் நெல்லை குடும்பம். மகளை நல்லபடியாக கட்டிக்கொடுத்த பின் பெற்றோர் என்னமாதிரியான மனநிலையில் இருப்பார்களோ அதே உணர்வுதான் இப்போது இரண்டு மாவட்ட பிரிவினை கண்ட திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கும்.

நெல்லையின் மகள் தென்காசி தமிழகத்தின் புதிய மாவட்டமாக உதயமாகியிருக்கிறாள். எங்கள் திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இதுவரை மற்ற மாவட்ட மக்கள் எப்படி ஆதரவு அளித்து வந்தீர்களோ அதுபோலவே நெல்லையின் மகள் தென்காசிக்கும் ஆதரவளியுங்கள். அவள் மென்மேலும் வளர தாய் திருநெல்வேலி மக்களின் வாழ்த்துகள்!

பதிவை எழுதும்போதே கண்கள் குளமாகிறது! 

திங்கள், 18 நவம்பர், 2019

சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19.


 சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19.

ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவுபடுத்தும் நாளாகவும் அமைகிறது. சரி ஆண்களுக்கென்ன.. பேண்ட், சார்ட் போட்ட ராஜாக்கள். அவர்களால் தான் அடுத்தவங்களுக்கு பாதிப்பு... அவங்களுக்கெல்லாம் ஒரு தினமா..? அப்படி என்ன சாதனை பண்ணாங்க என கேட்பவரா நீங்கள்.. ஒரு நிமிடம் கீழே உள்ளதை படியுங்கள்.


ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் போதும். ‘அட சிங்கக்குட்டி பொறந்துட்டானா..? இனி குடும்பத்தை காப்பாத்திடுவான்’ என வர்றவங்க.. போறவங்க சொல்விட்டு போவாங்க. குழந்தை பால்குடியை கூட மறந்திருக்காது. அட இவன் வளர்ந்ததும் நமக்கு சம்பாதிச்சு போட்டுருவான்ல என பெற்றோர்கள் கனவு காண்பார்கள். வளரும் ஆண் குழந்தையிடம், எப்போது சம்பாதிச்சு அம்மாவுக்கு வளையல் வாங்கித் தருவான் என விளையாட்டாக கேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த நேரத்தில் குழந்தைக்கு 7 வயதை தாண்டியிருக்காது. இப்படி ஆண் குழந்தைகள் வளரும்போது, அவர்கள் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்திலேயே அவர்களுக்குள் ஒரு நெருக்கடியை உண்டாக்கி விடுகிறோம்.

பையன் தானே..? அவனுக்கு என்ன பிரச்னை வரப்போகுது.. எங்கேயாவது சுத்திட்டு வீட்டுக்கு வந்துருவான் என 10 வயது சிறுவனை அசால்டாக கையாள்கிறோம். அவன் மனக் குமுறல்களை காது கொடுத்து கேட்பதில்லை. சிறுமிகளுக்கு எப்படி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்படுகிறதோ..? அதேபோன்று ஆண் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்கும் கயவர்கள் இருக்கிறார்கள். சிறுவர்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகளை அவ்வளவு எளிதில் வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். அவர்களை கனிவுடன் பெற்றோர்கள் அணுகினால் உண்மை வெளிவரும்.


படிச்சாச்சு.. வேலைக்கும் போயாச்சு.. ஒரு காதல் தோல்வி வருகிறது என்றால் நிச்சயம் ஆணின் கண்கள் கலங்கும். அப்போது அருகில் இருப்பவர்கள் சொல்வார்கள். ‘என்னடா இவ்வளவு பெரிய மீசை வச்சிருக்கே. கண் கலங்கிட்டு’ அப்படின்னு சொல்வார்கள் அந்த இளைஞரும் அழுகையை மறைத்து சந்தோஷமாக இருப்பது போன்று காட்டிக் கொள்வான். உண்மையில் ஒரு இறுக்கமான மனநிலைக்கு தள்ளப்படுவான். மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல முடியாமல் தினம் தினம் புழுங்குது எல்லாம் மரண வலி.


திருமணம் ஆன ஆண்களுக்கோ ஒருமாதம் சம்பளம் வரவில்லையென்றால், பிரசர் தலைக்கு ஏறிவிடும். கையும் ஓடாது. காலும் ஓடாது. அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையேயான சின்ன சின்ன சச்சரவுகளில், அம்மா பக்கம் சேர்ந்துக் கொண்டால் ‘அப்படியே நீ போய்டு’ என மனைவி சொல்வாள். அதே மனைவி பக்கம் சென்றால், இவ்வளவு நாள் வளர்த்தது எல்லாம் வீணாப் போச்சே என அம்மா அழுவாள். என்னதான் சொல்வது என தினம் தினம் தவிக்கும் கணவர்கள் ஏராளம். இப்படி தங்களுக்கு நிகழும் பிரச்னைகளிலிருந்து இந்த வாழ்க்கையே வேண்டாம் என முடித்துக் கொள்ளும் இளைஞர்கள் பலரும் இருக்கிறார்கள்.

பெண்கள் தீபங்களாக ஜொலிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக இருக்கும் எண்ணெய்யும், திரியும் ஆண்கள்தான். ஒட்டுமொத்த ஆண்கள் சமூதாயத்தை குற்றவாளி போன்று சிலர் எண்ணுகிறார்கள். அது தவறானது. பெற்றோருக்கு நல்ல மகனாகவும், தன் மனைவிக்கு நம்பிக்கையானவனாகவும், குழந்தைக்கு நல்ல அப்பாவாகவும், சொந்த பிரச்னைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு ஆணும் இங்கு போற்றப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு குடும்பத்தையும் தனது விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் தூக்கி நிறுத்த நினைக்கும், அதனை நடத்திக் கொண்டிருக்கும் அத்தனை ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்..!
நன்றி புதியதலைமுறை.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சனி, 16 நவம்பர், 2019

பண்டைய காலத்தில் கோயில் கட்ட அரண்மனை வீடுகட்ட நிலம் தேர்ந்தெடுக்கும் முறை


#கட்டிக்கலை

பண்டைய காலத்தில் கோயில் கட்ட அரண்மனை வீடுகட்ட நிலம் தேர்ந்தெடுக்கும் முறை

#மனைஆய்வு
#மண்ஆய்வு

வாழ்வதற்கும் வழிபாட்டிற்கும் என தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் அதாவது மனைகள் நீண்டகாலம் நிலைத் திருக்கவேண்டியவையாகும்

எனவே நல்ல மனையைத் தேர்ந்
தெடுப்பது மிகவும் முக்கியமானதாகும் மனையிடத்தின் அமைப்பு, நிலத்தின் உறுதி சூழ்நிலை, மனைநோக்கு இவைகளை ஆராய்ந்த பின்னரே நல்லதொரு மனையைத் தேர்ந்தெடுத்தனர் அன்றைய கால சிற்ப வல்லுனர்கள்

மண்ணின் ஓசையால், மணத்தால், உணர்ச்சியால், வளத் தால், சுவையால், அமைப்பால்
மற்றும் நிறத்தால் சிறந்த மனையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்

மண்ணின் மணம், சுவை
மற்றும் நிறம் இவைகள் கட்டடத்திற்கேற்ற நல்ல மண், தீயமண்ணைக்  கண்டு கணிக்
இயலும் என்பதனை இலக்கியங்களும் உணர்த்துகின்றன

நாற்றமும் சுவையு மதுரமுமாய்'

என்று கூறுவதை சிலம்பில் காண்கிறோம்.

நீங்காத மதுரமும் பரிமளமும் பொருந்திய
பூமியில் சகல சாதிகளும் வீடு கட்ட உத்தமம் என்ற அடிகளும்

தயிரொடு நெய் தேன்
எண்ணெய் தாக்கிய உதிரத்தோடு, மயிர் பல சிறுமீன் பட்சி மற்றும் மோர் பொல்ல
நாற்றம் பயிரொடு பலமும் காணார் பாழ்படும் மனை எடுக்கில்
என்ற அடிகளும்

இன்னின்ன இயல்புடைய பூமி ஏற்புடையது, இன்ன நாற்றமுடைய நிலம் ஏற்புடையதல்ல
என த் தெளிவாக்குகின் றன

மேலும் நிலத்தை வன் பால், மென்பால், இடைப்பால் என. மண்ணின் இயல்பால்
மூன்று வகைப்படுத்தலாம்.

 வன்பாலாவது ஒரு சதுர அடியில் ஒரு குழி தோண்டி அதனை த்
தோண்டப்பெற்ற மண்ணினால் நிரப்பும் போது குழியின் மண் மிகுவது, மென்பாலாவது

குறைவது; இடைப்பாலாவது சரிசமமாக இருப்பது என்று கூறலாம்
கட்டட அடிப்படைக்குச் சிறந்த நிலமாகக் கொள்ளப்பட்டது
வன்பால்' நிலமே

அளந் ததோர் குழியின் மண்ணை அகழ்ந்து அதன் மேலேயிட்டால்
வளர்ந்திடிற் செல்வ முண்டாம் ஒத்திடில் மிகுதி யில்லை
குளந்தனில் குறையு மாகிற் குறைந்திடும் சம்பத்து அன்றே
உளந்தனில் கருதி நல்லோர் உரைத்தனர் புவியின் மாதே.

மேலும் அங்கு இவ்வாறு எடுக்கும் குழியில் அந்திப்பொழுதில் நீர் நிறைந்து விடியலில் நீரின் அளவு கண்டு பயன்களும் கூறப்படுகின்றது தண்ணீர் இருந்தாலும் சேராய் இருந்தாலும்  சுபம்
என்பதனை

நிறைய நீர் இட்டு வைத்து நீள்கதிர் எழுந்த போது

மூறைமையாய் வந்து பார்த் தால் முப்பிடி நீரே நன்றாம்

தரையினில் வற்றியக்கால் தாழ்வு ற பிக்கும் ஆகில்

சிறையொடு நோயாம் என்று தரித்தவர் உரைத்த வாறே

என் ற பாடல் விளக்குகின்றது  இதனையும் நல்ல நிலத்தேர்ச்சிக்கு இலக்கணமாகக்கொள்ளலாம் இங்ஙனம் பல்வேறு ஆய்வுகளைச் செய்து தல்லதொரு மனையை த் தேர்த்
தெடுத்தனர் என்பதுத் தெளிவாகின்றது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

நீங்கா வலி தரும் நெல்லைப் பிரிவினை


நீங்கா வலி தரும் நெல்லைப் பிரிவினை
November 15, 2019

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான நம் நெல்லை பிரிக்கப்பட்டுவிட்டது.

 இதுநாள் வரை நெல்லையின் பெருமிதங்களாக நாம் கொண்டாடி வந்த பல அம்சங்கள் நம்மைவிட்டு போயிருக்கின்றன.

கேரள எல்லை இனி நெல்லையிடம் இல்லை:

கேரள மாநிலத்தோடு சாலை வழி எல்லையை பகிர்ந்து கொள்ளும் வெகு சில மாவட்டங்களுள் ஒன்றாக நம் நெல்லை இருந்துவந்தது.

தென்காசியின் பிரிவால் இனி எல்லை நம்மிடம் இருக்கப்போவதில்லை.

பார்டர் புரோட்டா கடையும் தென்காசி மாவட்டத்துக்காரரின் கடையாகி விட்டது!

வீரபூமியின் பெயர் மாறிவிட்டது:

கட்டபொம்மனையும் பாரதியையும் தூத்துக்குடி எடுத்துக் கொண்டது போல வாஞ்சிநாதனையும்,பூலித்தேவனையும் தென்காசி எடுத்துக் கொண்டுவிட்டது.

குற்றாலம் இனி அண்டை மாவட்ட சுற்றுலாத் தலம்:

"நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டுகிறது" என்று இனி எந்தப் பத்திரிகையும், செய்திச் சொல்லப்போவதில்லை

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கும் இயக்கப்படும் ரெயிலாக மாறிவிட்டது.

திருமங்கலம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலை பிரச்னை இனிமேல் தென்காசி மாவட்டத்தின் பிரச்னை.

நகரங்களை இழந்த நெல்லை:

பழைய நெல்லை மாவட்டத்தில் நம் நெல்லைக்கு அடுத்து பெரிய நகரங்களாக இருந்த சங்கரன்கோவிலும், கடையநல்லூரும் தென்காசியோடு இணைந்துள்ளது இழப்பு தான் நமக்கு.

பிற நகரங்களான புளியங்குடியும் செங்கோட்டையும் அங்கு தான் போயிருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே அதிகமாக மேற்கு தொடர்ச்சி மலை படர்ந்திருக்கும் மாவட்டம் என்ற பெயரும் நம்மிடமிருந்து போயிருக்கிறது.

நெல்லைக்கே அல்வா:

சொக்கம்பட்டி அங்கு இணைந்துவிட்டதால் திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த மாவட்டமாக தென்காசி மாறியிருக்கிறது.

வரமாட்டேன் என அழுது அடம்பிடித்த ஆலங்குளத்தையும் சங்கரன்கோவிலையும் தனது அதிகாரத்தால் தென்காசியோடு சேர்த்து வைத்துள்ளது அரசாங்கம்.

நிகழ்கால அரசியல் ஆளுமை வைகோ இனி தென்காசி மாவட்டத்துக்காரர் என்று அழைக்கப்படுவார். அமைச்சர் தொகுதியான சங்கரன்கோவிலை நாம் இழந்துவிட்டதால் அமைச்சர்களில்லாத மாவட்டமாக மாறி நிற்கிறோம்.!

இருந்தாலும் பரவாயில்லை..

பிரிவின் வலி தான் கொடியது.
இது பிரிவல்ல பிரசவம்..!

நம் நெல்லைக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது.

ஆம்,
அதன் பெயர் தென்காசி.!

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வெள்ளி, 15 நவம்பர், 2019

உலக பொறுமை தினம் நவம்பர் 16.



உலக பொறுமை தினம் நவம்பர் 16.

பொறுமை தரும் வெற்றி

பொறுமை என்பது வெற்றியைப் பெற்றுத்தரும் முக்கியமான குணம் ஆகும். ஒருவருக்கு எல்லாத் திறமைகளும் இருந்து பொறுமை இல்லாவிட்டால் அவர் வெற்றி பெறுவது கடினம்.

நம்முடைய எல்லா முயற்சிகளுக்கும் உடனே பலன் கிடைத்து விடுவதில்லை. பலன் கிடைக்கும் வரைக் காத்திருப்பதே பொறுமை ஆகும்.

நாம் விதையை விதைத்த உடனே நமக்குப் பழங்கள் கிடைத்து விடுவதில்லை. விதை முளைத்து மரமாகிப் பூத்துக் குலுங்கிப் பின்தான் பழங்கள் தருகின்றன.

ஒரு விதை மரமாகிப் பயன் கொடுக்கப் பல மாதங்கள் ஆகலாம். ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம். அதற்கு காத்திருப்பவனுக்குத்தான் கனிகள் கிடைக்கும்.

நம்முடைய இலக்கு நோக்கிய பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்தும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகக் கூடாது. பொறுமையுடன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கைப் பயணம் என்பது 100 கி.மீ வேகத்தில் செல்லும் நெடுஞ்சாலைப் பயணமாக மட்டும் இருக்காது.
சில சமயங்களில் மேடுபள்ளங்கள் நிறைந்த 10 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லக் கூடிய பாதையாகவும் இருக்கலாம்.

நமது வாகனம் 100 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கலாம். நாமும் திறமையான வாகன ஓட்டியாக இருக்கலாம். ஆனாலும் பாதை நம்மை 10 கி.மீ வேகத்தைவிடக் கூட்டமுடியாமல் செய்து விடும். அப்போது நமக்குத் தேவை பொறுமை.

இந்தப் பாதையை நாம் மெதுவாகதான் கடந்தாக வேண்டும் என்ற பொறுமையும், சற்றுத் தூரத்தில் இந்தப் பாதை நெடுஞ்சாலையுடன் சேர்ந்துவிடும் என்ற புரிதலும்தான் நம்மை வெற்றியாளராக மாற்றும்.

பாதை கடினமானதாக இருக்கின்றது என்று பயணத்தில் இருந்து விலகுபவர்கள் இலக்கை அடைய முடியாது.

நிறையப் பேருக்குத் தம்முடைய முயற்சியைக் கைவிடும்போது வெற்றி இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பது தெரியாமல் போய்விடுகின்றது.

பொறுமை இல்லாத காரணத்தால் நிறையப்பேர் இலக்கிற்கு மிக அருகில் வந்ததும் இலக்கை அடையாமல் போகிறோம்.

ஓட்டப்பந்தயத்தில் இலக்கிற்கு அருகில் இருக்கும்போதுதான் நமக்கு மிகவும் களைப்பாகவும், வலிப்பதுமாகவும் நமது ஓட்டம் இருக்கும். நம் மனதை இலக்கின்மீது வைக்க வேண்டும். வலியின் மீதுஅல்ல.

வாழ்க்கைப் பயணம் என்பது நேர்கோட்டுப் பாதையில் செல்லும் பயணம் அல்ல. அது நிறைய திருப்பங்கள் நிறைந்த பயணம்.

நாம் நீண்ட தூரம் பயணம் செய்து களைப்படைந்து இருக்கலாம். கூடவே நமது வெற்றி மிகஅருகில் அடுத்த திருப்பத்தில் காத்திருக்கலாம்.

எனவே பொறுமையுடன் பயணம் செய்வோம் வெற்றியை அடைந்தே தீருவோம்.

நம்முடைய முயற்சியில் மட்டுமல்ல பிறருடன் பழகும்போதும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

நமது குடும்பம், நண்பர்கள் மற்றும் உடன் வேலை பார்ப்போர் என அனைவரிடமும் அவர்களது சிறுசிறு குறைகளைப் பொருட்படுத்தாமல் அவைகளைப் பொறுத்துக் கொண்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ஐந்து விரல்களில் ஒன்றுகூட மற்றொன்றைப் போல் இருப்பதில்லை. மனிதர்களும் அப்படித்தான் ஒவ்வொருவரும் ஒருவிதம். இதைப்புரிந்து கொண்டு பொறுமையுடன் ஒவ்வொருவரையும் அணுகினால் அனைவரும் நம் வெற்றிக்குத் துணை புரிவார்கள்.

நம் மனதில் அமைதி, நம் செயல்களின் விளைவுகளைப் பொறுமையுடன் கண்காணித்தல், மற்றவர்களுடன் நிதானமாகப் பழகுதல் ஆகியவை நம்மிடமிருந்தால் வெற்றி நிச்சயம் நம்மைத் தேடி ஓடிவரும்.
நன்றி இனிது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை நடுங்கவைத்த `பூமியின் தந்தை!’ - பிர்சா முண்டா பிறந்த தினப் பகிர்வு



பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை நடுங்கவைத்த `பூமியின் தந்தை!’ - பிர்சா முண்டா பிறந்த தினப் பகிர்வு

November 15, 2019 at 9:09 PM

பிர்சா முண்டா, தற்போது அதிகமானோரால் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெயர். காரணம், அவரைப் பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் திரைப்படம் இயக்கவுள்ளதாக அறிவித்ததுதான். தன் இன மக்களின் சமூக/பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் சுதந்திரப் போராட்டத்துக்காகவும் மிகத் தீவிரமாகப் போராடிய பிர்சா முண்டாவைப் பற்றித் திரைப்படம் வரப்போகிறது என்பதற்காக மட்டுமல்ல, இன்று அவரது பிறந்த நாள் என்பதற்காகவும் அவர் யார் என்று தெரிந்துகொள்வோம்...

`சுதந்திரப் போராட்டம்' என்றவுடன், பிரிட்டிஷாருக்கு எதிரான பெரிய, நீண்ட போராட்டத்தைத்தான் நினைத்துக்கொள்கிறோம். பல்வேறு கலாசாரப் பின்னணிகளைச் சேர்ந்த இந்தியர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் இணைத்தது இந்தப் போராட்டம்தான் என்பதால்கூட இருக்கலாம். சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக, தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமும் இதுதான். 

சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அது சென்ற திசை பற்றியும் விமர்சனம் வைத்தவர்கள்கூட, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்பதை மிகப்பெரிய வெற்றியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், `சமூக/பொருளாதாரச் சுரண்டலிலிருந்து எப்போது விடுதலை?' என, சுதந்திரப் போராட்ட காலத்திலேயே உறக்கக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் பெரியார், அம்பேத்கர் போன்றோர்.

சுதந்திரப் போராட்டத்தின் மூலம் பகத்சிங்கும் காந்தியும் பிரபலமாவதற்கு முன்னரே பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை நடுங்கவைத்தவர் பிர்சா முண்டா. சோட்டா நாக்பூர் பீடபூமியில் உள்ள காடுகளிலிருந்து (இப்போது ஜார்க்கண்ட் மாநிலம்) வந்த பழங்குடிப் போராளி பிர்சா முண்டா. பார்லிமென்ட்டில் இருக்கும் ஒரே ஒரு பழங்குடி ஆளுமையின் ஓவியம் இவருடையதுதான்.

நவம்பர் 15, 1875 குந்தி மாவட்டம் உல்லிஹட்டூவில் பிறந்தவர். கொஞ்சகாலம் மிஷனரிப் பள்ளியில் படித்தார். தனது ஆசிரியர் ஜெய்பால் நாகின் வார்த்தைகளைக் கேட்டு கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார். அதனால், ஜெர்மன் மிஷன் பள்ளியில் படித்தார். அந்தப் படிப்புதான், பின்னாளில் அவர் வாழ்வில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தது.

மதம் என்பதன் மீதான அவரது புரிதலை கிறிஸ்துவ மதமாற்றம் வடிவமைத்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கம் பற்றிய விழிப்புஉணர்வும், பழங்குடியினரைக் கிறிஸ்துவர்களாக மாற்றும் முயற்சிகள் பற்றிய அறிவும் கைகொடுக்க, `பிர்ஸைத்' என்கிற நம்பிக்கையைத் தோற்றுவித்தார். முண்டா மற்றும் ஒரோன் பழங்குடியினரும் அந்த நம்பிக்கையில் இணைந்துகொண்டனர். இது பிரிட்டிஷாரின் மதமாற்ற முயற்சிகளுக்குப் பெரிய சவாலாக அமைந்தது.

மேற்கு சிங்க்பம் மாவட்டத்தின் சைபாஸா நகரில் (ஜார்க்கண்ட்) ஐந்தாண்டுகள் இருந்தார். அப்போது சர்தார்களின் கலவரத்தின் மூலம் பிரிட்டிஷார்கள் எப்படியெல்லாம் பழங்குடியினரை அடக்கியாள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டார். அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்படும் மிஷனரிகளும் இதற்குக் கருவிகளாக இருக்கின்றன என்பதையும் உணர்ந்தார். அது அவரது மனதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் 1890-ல் ஜெர்மன் மிஷன் பள்ளியைவிட்டு வெளியேறினார் பிர்சா. கிறிஸ்தவ மதத்தையும் கைவிட்டுவிட்டு தனது பழங்குடியின மத நம்பிக்கைக்கு மாறினார். இதே நேரத்தில் சைபாஸாவைவிட்டும் வெளியேறிய அவர், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக முழு நேரமாகப் போராடினார். விளைபொருள்களுக்கும் நிலத்துக்கும் தீவிர வரிகளை வசூலிப்பதன்மூலம் சந்தாள் மற்றும் முண்டா பழங்குடியினரையும் பிரிட்டிஷ் அரசு சுரண்டுகிறது என்பதைக் கண்டு கொதிப்படைந்தார்.

இதற்கெல்லாம் உள்ளூர் ஜமீன்தார்களே உடந்தையாக இருந்தார்கள் என்பதும், அதற்குக் கூலியாக அதிக அளவில் பழங்குடி நிலங்களையும் வளைத்துக்கொண்டார்கள் என்பதும், ஒருசிலருக்கெல்லாம் 150 கிராமங்கள் வரை சொந்தமாகின என்பதும், நிலத்தை முதலில் வைத்திருந்த பழங்குடியினரையே கூலிக்கு வேலைக்கும் வைத்துக்கொண்டார்கள் என்பதும் அவரது கோபத்தை மேலும் மேலும் அதிகமாக்கியது. 

இந்த எல்லாச் சுரண்டல்களையும் எதிர்க்கவும் பழங்குடியினரைக் காக்கவும் `உல்குலான்’ என்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். ஆதிவாசிகளின் நில உரிமைகளை அழுத்திச் சொல்வதாக இந்தப் போராட்டம் அமைந்தது. அவர்களே நிலத்தின் முழு உரிமையாளர்கள் என்பதை இது வலியுறுத்தியது. பிரிட்டிஷார்கள், ஜமீன்தார்கள் ஆகியவர்களை வெளியேற்றுவதும் இதன் நோக்கமாக அமைந்திருந்தது. கொரில்லா முறையில் போரிட்டு பல பிரிட்டிஷ் அரசாங்கப் போலீஸார்களைக் கொன்றனர். 1894 அக்டோபரில் ஜமீன்தார்கள் வசூலித்த காட்டுவரியை ரத்துசெய்ய பிர்சா போராட்டம் நடத்தினார். காடுகளின் பொருள்கள் ஆதிவாசிகளுக்கே சொந்தமானது என்று வலியுறுத்தினார்.

போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்துகொண்ட ஒரான், முண்டா, கரியா போன்ற பழங்குடியினர் அனைவரும் இவருடன் இணைந்துகொண்டனர். அவர்களிடம் ஜமீன்தார்கள், பிரிட்டிஷ் அரசாங்கம் ஆகியோரின் சுரண்டலை எதிர்க்குமாறு பிர்சா வலியுறுத்தினார். இதற்காக ஹசாரிபாக் சென்ட்ரல் ஜெயிலில் இரண்டு வருடம் சிறைவைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்து இன்னும் தீவிரமாகப் போராடினார்.

ஆகஸ்ட் 1897-ம் ஆண்டில் குந்திக் காவல்நிலையைத்தை, வில்-அம்புகளால் தாக்கினார் பிர்சா. அவரோடு 400 பேர் இணைந்து தாக்குதல் நடத்தினர். 1898-ம் ஆண்டில் தனகா நதியின் கரையில் முண்டாக்களுக்கும் பிரிட்டிஷார்களுக்கும் நடந்த தாக்குதலில் பிரிட்டிஷாரைத் தோற்கடித்தார். இதனால், பிரிட்டிஷ் அரசு பல பழங்குடி ஆண்களையும் பெண்களையும் கைதுசெய்தது.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மட்டுமல்லாமல், தன் இனக் குழுவிலேயே இருந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடினார் பிர்சா. மூடநம்பிக்கை, பலி, குடிப்பழக்கம் என, தன் பழங்குடி மக்களிடையே இருந்த பழக்கங்களை எதிர்த்தார். அதேநேரத்தில் தங்களின் மதநம்பிக்கைகளையும் கலாசாரங்களையும் மறக்கக் கூடாது என வலியுறுத்தினார். நிலம் மீதான உரிமையையும் அதை அழுத்திக் கேட்கவேண்டிய அவசியத்தையும் உணர்த்தினார். இவரை, `பூமியின் தந்தை' என்று பழங்குடியின மக்கள் அழைத்தனர்.

இவரது போராட்டங்களை, பிரிட்டிஷார் மிகவும் கொடூரமாக எதிர்கொண்டனர். சுரண்டலையும் பிரிவினைவாதத்தையும் மேலும் மேலும் அதிகரித்தனர். 1900-ம் ஆண்டில் தும்பாரி மலைகளில் தங்கியிருந்த பிர்சா ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நூற்றுக்கணக்கானோரைக் கொலைசெய்தனர். அந்த நிகழ்வு நடைபெற்ற சில மாதத்துக்குள்ளேயே சக்ரதர்பூர் அருகே இருக்கும் ஜம்கோபாய் காட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பிரிட்டிஷார் இவரை வளைத்துப் பிடித்து கைதுசெய்தனர்.

கேட்கவே முடியாத பல சித்ரவதைகளை அனுபவித்த பிறகு, ஜூன் 9, 1900-ம் ஆண்டில் பிர்சா உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 25! இவரது மரணத்துக்கு, காலரா நோயே காரணம் எனச் சொல்லப்பட்டது. இவர் இறந்து எட்டு வருடத்துக்குப் பிறகு, ஆதிவாசி நிலங்களை பிறர் வாங்குவதைக் குறைக்க, சோட்டா நாக்பூர் சட்டம் இயற்றப்பட்டது.

இவர் விட்டுச்சென்ற வரலாற்றைச் சொல்லி முடிப்பது கடினம். ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட எல்லாக் கல்வி நிறுவனங்களுக்கும் இவர் பெயர்தான் சூட்டப்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல, ஏர்போர்ட், ஸ்டேடியம், ஏன் மத்திய சிறைக்குக்கூட இவர் பெயர்தான்!

இவர் பிறந்த உலிகட்டூ கிராமம் ஒரு புனிதத்தலமாக மாறியிருக்கிறது. பீகாரிலிருந்து ஜார்க்கண்ட் பிரி(ற)ந்த தினமும் நவம்பர் 15-தான்.

பிரிட்டிஷாரை மட்டுமல்ல, தன் மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், அவர்கள் சமூக/பொருளாதார நிலையில் சமத்துவம் பெற வேண்டும் என்பதற்காகவும் போராடியவர் பிர்சா. ஆனால், இன்றும் சுரண்டலுக்கும் அடிப்படை வாழ்வாதாரத்துக்கும் பழங்குடி மக்கள் போராடவேண்டிய சூழலே இருக்கிறது. பிர்சாவை மட்டுமல்ல, அவர் எதற்கு எதிராகப் போராடினாரோ அதையும் நாம் தெரிந்துகொண்டு செயல்படவேண்டியது அவசியம்.
நன்றி விகடன்.
Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .
*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வியாழன், 14 நவம்பர், 2019

தமிழ்நாடு மெட்ராஸ் IIT-இல் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவி பாத்திமா - "என் தற்கொலைக்கு சென்னை IIT இணை பேராசிரியர் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் காரணம்"


தமிழ்நாடு மெட்ராஸ் IIT-இல் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவி பாத்திமா -
"என் தற்கொலைக்கு சென்னை IIT இணை பேராசிரியர் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் காரணம்"

*Justice for Fathima*

ஐஐடி மெட்ராஸில் இஸ்லாமிய வெறுப்பினால் நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் பேசிய மலையாள பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு.

"எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு (சால்) அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை (Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.

ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள்.  வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விடயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.

பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.
சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு ஃபாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.

அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள். மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்பொழுதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?

சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18 வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள்  தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே.?  அவளா இப்படி செய்து கொண்டாள்..?

ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5 நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.

இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..

Need Justice for Fathima.

#நேருஜி_அவர்களின்_பிறந்த_தினம் #குழந்தைகள்_தினம்_நவம்பர் 14,


#நேருஜி_அவர்களின்_பிறந்த_தினம்
#குழந்தைகள்_தினம்_நவம்பர் 14,

கல்வியை மீட்டெடுத்த நேரு

இந்தியாவைச் செதுக்கிய சிற்பிகளில் நேரு முதன்மையானவர். தன்னலமற்ற தலைவர். கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஆளுமை. எத்தனையோ முக்கியத் தலைவர்கள் விடுதலைக்காகப் போராடியபோதும், நேரு என்ற ஒருவர் இல்லையென்றால் இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும்.

ஏனென்றால், காந்தி என்ற குழந்தைத்தனம் மிகுந்த முரட்டுக் கொள்கைவாதியைச் சமாளித்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற பெரும் தலைவர் நேரு. காந்தியின் உண்மையான சீடர். காந்தியின் நம்பிக்கைக்கு நூறு சதவீதம் பாத்திரமானவர். சொல்லப்போனால், ஈருடல் ஓர் உயிராக வாழ்ந்தவர்கள் அவர்கள்.

தேசத்தின் விருப்பத் தேர்வு
குழந்தைகளின் மாமா என்பதாலோ ரோஜாப்பூவின் காதலர் என்பதாலோ மென்மையானவர் என்று நேருவை நினைக்க வேண்டாம். இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலால் வியந்து போற்றப்பட்ட உறுதிக்குச் சொந்தக்காரர் நேரு. இந்தியாவின் முதல் பிரதமராக சர்தார் படேலை காங்கிரஸ் கட்சியிலிருந்த சிலர் முன்மொழிந்தபோது, “நீங்கள் வேண்டுமானால் என்னைப் பிரதமராக்க விரும்பலாம். ஆனால், நான் உட்பட இந்தத் தேசத்து மக்களின் ஒரே விருப்பத்தேர்வு நேரு மட்டுமே” என்று படேல் மறுத்தது அதற்குச் சான்று.

நேரு எப்போதும் ஒரு ஜனநாயகவாதியாகவே இருந்தார். இன்றைய முற்போக்குவாதிகளால் கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு முற்போக்குச் சிந்தனைகளை நேரு கொண்டிருந்தார்.
சிந்தனைக் களமான சிறைச்சாலை
அளப்பரிய அறிவும் தெளிவான சிந்தனையும் மரபின் வழி அவருக்கு வந்த கொடைகள். தொலைநோக்குப் பார்வையும் நவீனமும் நாகரிகமும் இறுதிவரை அவரை விட்டு அகலாமல் பயணித்தன. பலமுறை சிறை சென்றுள்ளார். ஆனால், ஒருமுறை கூட அவர் மன்னிப்புக் கடிதம் கொடுக்கவில்லை.

சிறையைக் கண்டு நேரு அஞ்சவில்லை. தன்னையும் தனது நாட்டையும் வடிவமைக்கும் களமாகச் சிறையை அவர் மாற்றினார். சிறையில் இருந்த காலத்தில் அதிகம் படித்தார். தனது சிந்தனைகளைத் தொகுத்து எழுத்தாக்கினார். சுதந்திரப் போராட்டத்துக்கான தேவைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கான தேவைக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவை வார்த்தெடுத்து வழிநடத்துவதே தனக்கு முன்னிருக்கும் சவால் என்பதை நேரு தெளிவாக உணர்ந்திருந்தார். கல்லாமையும் அறியாமையும் நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகள் என அவர் உணர்ந்திருந்தார். அவற்றைத் தரமான கல்வியால் மட்டுமே களைய முடியுமென நம்பினார்.

காந்திய, மார்க்ஸியச் சிந்தனைகள்
கல்வியைக் குறித்த நேருவின் பார்வையில் பாயும் ஒளியாக காந்தியச் சிந்தனைகளும் கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களும் இணைந்திருந்தன. நேருவைப் பொறுத்தவரை கல்வியறிவு என்பது பகுத்தறிவாலும் அனுபவ அறிவாலும் நேர்மறை எண்ணங்களாலும் வரையறுக்கப்பட்ட ஒன்று. மதங்களிலிருந்து கல்வியைப் பிரித்தெடுத்து, குருகுலங்களிலிருந்து கல்வியை விடுவித்து, கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றியதில் நேருவுக்குக் கணிசமான பங்குண்டு.

பகுத்தறிவாளரான நேருவுக்கு மதத்தைவிட விஞ்ஞானத்தில்தான் அதிக நம்பிக்கை இருந்தது. தனது அறிவாலும் அனுபவத்தாலும் தர்க்கத்தாலும் அறிந்தவற்றை மட்டுமே உண்மையென எடுத்துவைத்தார். காந்தியைப் போன்று கொள்கையை வலிந்து திணிக்காமல், தனது கொள்கையை மக்களின் கொள்கையாக வெகு இயல்பாக நேருவால் மாற்ற முடிந்ததற்கு, நேருவின் இந்தப் பண்பே காரணம்.

மதங்களால் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளையும் அந்த மதங்களின் மீதான மக்களின் கண்மூடித்தனமான விசுவாசத்தையும் தீவிரமாக எதிர்த்தார். பகுத்தறிவை அடிப்படையாகக்கொண்ட ஒரு விஞ்ஞானப் பார்வையை, உயர்ந்த தரத்திலான கல்வியை அளிப்பதன் மூலம் நேரு மக்களிடம் ஏற்படுத்தினார்.
அதனால்தான் ‘மதச்சார்பின்மையை வலியுறுத்திய நேரு ஒரு மதத்தலைவராக இருக்கவில்லை, ஆன்மிகத்தில் ஆழமான நம்பிக்கையுள்ள ஒரு மனிதராக இருந்தார்’ என டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறினார்.

உயர்கல்விக்குச் செறிவூட்டிய நேரு
ஐந்தாண்டுத் திட்டங்களைப் போன்று, நம் நாட்டின் வளர்ச்சிக்கு, மாணவர்களின் உயர்கல்விக்கு அவர் முன்னெடுத்த திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்), ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) ஆகியவை நேருவால் உருவாக்கப்பட்டவையே. 1950-ல் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூரில் முதல் ஐ.ஐ.டியைத் தோற்றுவித்தார்.

அதன் பிறகு, 1958-ல் சோவியத் யூனியனின் உதவியுடன் மும்பையில் ஐ.ஐ.டியை நிறுவினார். கான்பூர் ஐ.ஐ.டியை 1959-ல் அமெரிக்காவின் உதவியுடன் நிறுவினார். இன்று உலகின் பல உன்னதப் பல்கலைக்கழகங்களுக்குத் தரத்திலும் கல்விச் செறிவிலும் இவை சவால்விடுகின்றன.

இதன் மாணவர்கள் இன்று உலகெங்கும் இருக்கும் பல பெரு நிறுவனங்களிலும் நாஸா போன்ற சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களிலும் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக நிரம்பியிருக்கிறார்கள்.

இந்தியாவின் அடையாளம்
செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் நேரு, பிறக்கும்போதே வளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தார். உலகின் உன்னதக் கல்வி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

காந்திகூட படித்துப் பட்டம் பெற்ற பிறகு, வேலைக்காகத் தென்னாப்பிரிக்கா சென்றார். ஒருவேளை தென்னாப்பிரிக்க ரயில் பயணத்தில் காந்திக்கு அந்த அவமானம் நேர்ந்திராவிட்டால், காந்தி தென்னாப்பிரிக்காவிலேயே நிம்மதியாக இருந்திருக்கக்கூடும். ஆனால், நேரு அப்படியில்லை. கேம்பிரிட்ஜில் படித்துப் பட்டம் பெற்ற பின்னும், லண்டனில் இருக்க இயலாமல், நாட்டுக்குச் சேவையாற்ற ஓடிவந்தார்.

தன் சொத்துகளை விற்றும் இழந்தும் இங்கே போராடினார். நம் நாட்டின் மனிதவளம் கல்வியில் தேர்ச்சி பெற்றால், உலகின் முன்னணி நாடாக இந்தியா மாறிவிடும் எனத் தீர்க்கமாக நம்பினார். அவரது தொலைநோக்குப் பார்வையால் விளைந்த பயன்களின் மேல் ஏறி நின்றுகொண்டுதான் சிலர் நேருவை இகழ்கின்றனர். நேருவை இகழ்வது இந்தியாவையே இகழ்வது போன்றது. ஏனென்றால், சுதந்திர இந்தியாவின் முதன்மை அடையாளம் நேருதான்..

செவ்வாய், 12 நவம்பர், 2019

தலித் அரசியல் தலைமை நாட்டுவோம் நாட்டைத் தலைகீழாய்ப் புரட்டத் தோழமைப் போற்றுவோம்


ஈனப்பயலே உனக்கு எதுக்குடா
தலைவர் பதவி என்று சொல்லி,

#மேலவளவு முருகேசனின் வலது தோளில் முதல் வெட்டு வெட்டினான். தலையைத் துண்டித்தான். துண்டித்த தலையைக் கையில் எடுத்துக் கொண்டு நடுரோட்டில் ஓடினான் அழகர்சாமி.

மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினான். பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார். நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள்.

முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது. தலை அரை கிலோமீட்டர் கடந்து ஒரு கிணற்றில் வீசப்பட்டது.

#இதுவெல்லாம் மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட சாட்சிகள். வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று முதல் குற்றவாளியான ராமர் உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

தமிழக அரசு தற்போது அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்திருக்கின்றது.

இந்த நாட்டில் தலித் மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பு இல்லையென்று நீதிமன்றங்களும் ஆட்சியாளர்களும் உணர்த்திக் கொண்டேயிருக்கின்றார்கள். நாம் தான் அமைப்பாகாமல் சிதறிக் கொண்டிருக்கின்றோம்.

தலித் அரசியல் தலைமை நாட்டுவோம் நாட்டைத் தலைகீழாய்ப் புரட்டத் தோழமைப் போற்றுவோம்.

தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில்
அமைப்பாய்த் திரள்வோம்.. ✊

ஞாயிறு, 10 நவம்பர், 2019

இந்தக் கேள்விகளை திடீர் தமிழ் வேடம் போட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் கேட்க வேண்டும்.



*    வாழும் மொழியான தமிழை கருவறைக்கு வெளியே நிறுத்தி விட்டு செத்த மொழி சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது ஏன்? கருவறைக்குள் தமிழை எப்போது அனுமதிப்பீர்கள்?
 *   திருக்குறளை சொந்தம் கொண்டாடும் பாசிஸ்டுகளே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவரின் வாக்கிற்கு எதிராக சாதியை தூக்கிப் பிடிக்கும் மனுசாஸ்திரத்தையும் பகவத் கீதையையும் கொளுத்துவோம் வருகிறீர்களா?
 *   கீழடியில் இல்லாத, திருக்குறளில் இல்லாத மதமான இந்து மதத்தை கைவிடத் தயாரா ஆர்.எஸ்.எஸ் அம்பிகளே?
  *  சங்க இலக்கியங்களிலும் பண்டைய தமிழகத்திலும் இல்லாத சாதியை கைவிடத் தயாரா? நாமெல்லாம் தமிழர்கள் தானே, சேரித் தமிழனிடம் திருமண சம்பந்தம் செய்து கொள்ள அக்கிரகாரம் தயாரா?
  *  தமிழ் உலகின் மூத்த மொழி என தேனொழுக பேசுகிறார் உங்கள் பிரதமர், அந்த தமிழை அலுவல் மொழியாக அறிவிக்குமா மத்திய அரசு?
   * உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பீர்களா பாஜகவின் திடீர் தமிழ் ஆர்வலர்களே?
   * சமஸ்கிருதத்தை விட தமிழ் தான் மூத்த மொழி என்பதை ஏற்றுக் கொண்டு அறிவிப்பீர்களா?
   * தமிழில் எழுத்துருவான தமிழியில் இருந்து தான் சமஸ்கிருதம் பெற்றுப் போட்ட குட்டிகள் எல்லாம் எழுத்துருக்களைப் பெற்றன என ஒப்புக் கொள்வீர்களா?
   * இனிமேல் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் “நமஸ்தே சதா வத்சலே…” எனத் துவங்கும் பிரார்த்தனைப் பாடலுக்கு பதிலாக தமிழ்தாய் வாழ்த்து பாடத் தயாரா?
   * தமிழ் வாழும் தமிழ்நாட்டில் இருக்கும் சங்கர மடம் உள்ளிட்ட மடங்களில் சமஸ்கிருதத்தை தடை செய்ய போராடுவோம் வருகிறீர்களா?

இந்தக் கேள்விகளை திடீர் தமிழ் வேடம் போட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் கேட்க வேண்டும்.                                             

சனி, 9 நவம்பர், 2019

இன்று பிறந்த நாள் யாருக்கு தெரியுமா?..

இன்று பிறந்த நாள் யாருக்கு தெரியுமா?..

அவசியம் இந்த வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும்.

மக்கள் நலனுக்காக சொந்த பணத்திலேயே பாலம் கட்ட உதவிய மனிதர் வாழ்ந்த நாட்டில் இன்று எத்தகைய அரசியல் வாதிகள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது.....
1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பிலிருந்து..

திருநெல்வேலி-பளையங்கோட்டை இரட்டை நகரங்கள். 2 க்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணிஆறு

ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டுமுழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடும்.ஆற்றைக் கடந்திடப் படகில்தான் பயணித்திடல் வேண்டும்
படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தல் வேண்டும்

குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்றுவிட முடியாது

படகில் இடம் பிடித்திட முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்ட சமாச்சாரங்கள்

சமூகவிரோதிகளின் திருவிளையாடல்களுக்குப் பஞ்சமிருக்காது
களவும்,கலகமும் குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை

1840-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு: E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 5 நாட்கள் ஆன நிலை

தாமிரபரணிப் படகுத் துறையில் குழப்பம் கலகம் நாலைந்து கொலைகள் எனவே, கலெக்டர் தூங்காமல் தவித்துக் கொண்டிருந்தார்...
நெல்லை-பாளை நகரங்களுக்கிடையே பாலம் ஒன்றிருந்தால் சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார்

ஆலோசனைக் கூட்டமும் அரை லட்ச மதிப்பீட்டில் பாலங் கட்டத் தீர்மானமும

கேப்டன் பேபர் W.H. ஹார்ஸ்லி நமது சுலோசன முதலியார் (தாசில்தார்) பதவிக்குச் சமமான சிராஸ்தார் பதவி வகித்ததால் அழைக்கப் பட்டவர்
கலெக்டர் தாம்சன் தலைமையில் கூடினர்.

உடனடியாகப் பாலங்க்கட்டத் தீர்மானிக்கப்பட்டது

கேப்டன் பேபரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது

வரைபடம் தயாரானது.

760 அடி நீளம்,21.5 அடி அகலம், 60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுக்கள் அவற்றைத் தாங்கிட இரட்டைத் தூண்கள்-என அமர்க்களமான வரைபடம் தயாரானது
தூண்கள் ரோமானிய அரண்மனயை நினைவூட்டியது

லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் திகழ்ந்தது...

திட்ட மதிப்பீடு அரை லட்சம் கலெக்டர் உட்பட அனைவரும் மலைத்துப் போயினர்

இன்றைய மதிப்பில் அது பல கோடியைத் தாண்டி விடும்...
ஆனா மகிழ்ச்சியுடன் கலெக்டர் ஒப்புதல் அளிக்கின்றார்...

பணத்திற்கு என்ன செய்வது எங்கே போவது..??

மக்களிடம் வசூல் செய்வது என்று தீர்மானிக்கின்றார்..

அதே சமயம் கலெக்டர் அவரிடம் சிரஸ்தாராக வேலை பார்க்கும் சுலோசன முதலியார் பக்கம் கலெக்டரின் பார்வை செல்கின்றது...
அது சரி யார் இந்த சுலோசன முதலியார்..??

திருமணம் தொண்டை மண்டலத்தில் உள்ள ஓர் சிற்றூர் இங்கிருந்து நெல்லைக்குக் குடியேறியவர்கள் தான் முதலியாரின் மூதாதையர்கள்...

கோடீ்ஸ்வரக் குடும்பம்...

வீட்டில் தங்கக் கட்டிகள் பாளம் பாளமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமாம்...
தங்கம், வெள்ளி நாணயங்க்கள் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருப்பார்களாம்... கௌரவத்திற்காகவே க்லெக்டர் ஆபீஸ் உத்தியோகம்.( இப்பவும் திருட்டு அரசியல்வாதி வீட்டில் இருக்கு ஆனால் அவை அயல்நாட்டு போய்டும்)

குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்குச் சமமாக அலுவலகத்திற்கு வருபவர்...
நீளமான அல்பேகா' கருப்புக் கோட்டு ஜரிகைத் தலைப்பா அங்கவஸ்திரம் வைரக் கடுக்கன் ஆகியவ்ற்றோடு அலுவலகத்திற்கு வருவதே கம்பீரமாக இருக்குமாம்...

மக்களிடம் வசூல் வேட்டை அவருக்குத் தர்ம சங்கடமான நிலை...

நடந்தனவற்றை வீட்டில் மனைவியிடம் சொல்கின்றார்...
மனைவி வடிவாம்பாள் கவலைப்படாதீர்கள் தூங்குங்கள் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என ஆறுதல் அளிக்கின்றார்...

தூங்கிய சுலோசன மு்தலியாரின் நினைவலைகளின் சுழற்சி

அப்பாவைப் பற்றிய எண்ணங்களில் மூழ்குகிறார்...
வீர பாண்டிய கட்ட பொம்மன் புகழ் மேஜர் பானர்மெனிடம் மொழி பெயர்ப்பாளராகத் தனது தந்தை வேலை பார்த்தது நினைவுக்கு வருகின்றது...

1799-ஆம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்படுவதற்கு முன் கயத்தாறு மாளிகை விசாரணயில் முதல் சாட்சியே இவர் தந்தை இராமலிங்க முதலியார் தான்...
பின்னர், கர்னல் மெக்காலே தனது ஏஜெண்டாக்கித் திருவனந்தபுரத்திற்கு் அப்பாவை அழைத்துக் கொண்டது...

மனைவி வடிவாம்பாள் குடும்பம் வசதி. ஒரே மகன் வேதாத்திரிதாச முதலியார் திருவாங்கூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது.... என்றெல்லாம் நெஞ்ச்சத்திரையில் நிழலாட பல்வேறு நினைவுகளுடன்..
இரவுப் பொழுதைக் கழிக்கின்றார் ஒரு முடிவெடுத்தும் விடுகின்றார்...

அவரது தந்தை மொழிப்பாலமாக (மொழி பெயர்ப்பாளர்) இருந்து சம்பாத்தியம் செய்ததை ஆற்றுப் பாலத்தில் போட முடிவு செய்கின்றார்

கணவனே கண்கண்ட தெய்வமென வாழும் வடிவாம்பாள் மறுக்கவில்லை..
மறுநாள் காலையில் கலெக்டரிடம், பாலங்கட்ட ஆகும் மொத்தச் செலவையும் தாமே ஏறுக் கொள்வதாக வாக்குக் கொடுக்கின்றார்...

சொன்னதுடன் வெள்ளித் தாம்பாளத்தில் தன் மனைவி தந்த தங்க நகைகளையும் கொஞ்சம் பணத்தையும் அச்சாரக் காணிக்கை என்று சொல்லிக் கலெக்டரிடம் கொடுக்கின்றார்...
கலெக்டருக்கோ இன்ப அதிர்ச்சி திக்கு முக்காடிப் போகின்றார்

வெள்ளையன்-கருப்பன் பேதங்கள் காணமற் போகின்றன மரபுகள் உடைகின்றன கலெக்டர், முதலியாரை, அப்படியே ஆவி சேர்த்து ஆலிங்கனம் செய்து பேச வார்த்தையின்றித் தவிக்கின்றார்...
பாலத் திருப்பணிக்குக் தனி மனிதர் தந்த நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்கச் செய்தது வரலாற்று உண்மை...

கலெக்டர் புது உத்வேகத்துடன் செயல்படுகின்றார் பாலமும் கட்டிமுடிக்கப் படுகின்றது...

இன்றும் அது சுலோச்சனா முதலியார் பாலம் என்று தான் அழைக்கப்படுகிறது....
அப்பேர்பட்ட பாலத்துக்குத்தான் இன்றைக்கு பர்த் டே...

திறப்பு விழாவில் சுலோச்சன முதலியார் முன் நடக்க கலெக்டர் உட்பட மற்றவர்கள் பின் நடந்த செய்தியும் உண்டு...

எப்படிப்பட்ட வள்ளல் பெருமக்கள் வாழ்ந்த நாடு இது.

வியாழன், 7 நவம்பர், 2019

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைய விதை போட்டவர் ஏ.கே.செல்லையா Ex M.L.A.


குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைய விதை போட்டவர் ஏ.கே.செல்லையா Ex M.L.A.

ஐயா 
ஏ.கே.#செல்லையா
கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளாவில் இருந்து தமிழகத்தோடு இணைக்க வேண்டி குரல் எழுப்பியதோடு  தனது குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்  பதவியையும் ராஜினமா செய்து

குமரி மாவட்டம் தமிழகத்தோடு
இணைய விதை போட்ட

ஐயா
ஏ.கே.#செல்லையா_சாம்பான் Ex M.L.A
அவர்களின் தமிழ் தேசிய/இன/மொழி உணர்வோடு கூடிய அர்ப்பணிப்பை மறவாதீர்!!

#நவம்பர்_1
#தமிழ்நாடுதினம்

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துகள்...!


தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துகள்...!

ஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்படாத காரணத்தால், அதில் குழந்தைகள் தவறி விழுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

➤2009 பிப்ரவரி 22-ம் தேதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி, 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிந்தான்.

➤அதே ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலாமாக மீட்கப்பட்டான்.

➤2011 செப்டம்பர் 8-ஆம் தேதி நெல்லை மாவட்டம் கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்ஷன் உயிரிழந்தான்.

➤2012 அக்டோபர் ஒன்றாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே 50 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் குணா, உயிருடன் மீட்கப்பட்டான்.

➤2013 ஏப்ரல் 28-ம் தேதி கரூர் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

➤அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி தேவி உயிரிழந்தார்.

➤2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மதுமிதா, பல மணி போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

➤அதே ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 3வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

➤2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

➤2015ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

➤2018ம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டார்.

தற்போது குழந்தை சுஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து, குழந்தையை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
Thanks News7

#Surjith #சுஜித்

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144