#மக்களே_நாடு
உலகின் மிகவும் அசுத்தமான நதி ஒரே வருடத்தில் அரசின் நேர்மையான உழைப்பால் மாற்றம் அடைந்துள்ளது. மக்களின் ஆரோக்கியத்தையும், இயற்கை சூழலையும் பாதுகாப்பதும் ராணுவத்தினரின் கடமை என்பதால் அரசு 7,000 ராணுவத்தினரை களமிறக்கியுள்ளது.
2000 மேலான ஆலைகளின் கழிவுகள் கொட்டப்பட்டதால் ஈயம், மெர்குரி, ஆர்சனிக் மற்றும் பிற நச்சுப் பொருட்கள் நீரில் கலந்து மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஆனது. நதியை சுற்றி வாழும் மக்கள் கழிவுகள் நிரம்பிய நீரை பயன்படுத்தியதால் உடல்நல பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டதால் நதியின் மேற்பரப்பு கூட தெரியாமல் பிளாஸ்டிக்கால் நிரம்பியது. Adidas, H&M போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கூட நதியில் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமல் கொட்டுகின்றன. இவ்வாறு நதியை சீரழித்த பல நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
500மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டு அசுர வேகத்தில் தற்போது சுத்தம் செய்யும் வேலை நடந்து வருகிறது. மக்களுக்கு சேவை செய்ய 7,000 இந்தோனேசிய ராணுவத்தினரும் முழுநேரப் பணியாக நதியை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். 40% பிளாஸ்டிக் கழிவுகள் நீக்கப்பட்டு அதிவேகமாக சுத்தமாகி வருகிறது. 120 மில்லியன் மரங்கள் நதியை சுற்றி நடப்பட்டுள்ளன. சுற்றி இருக்கும் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தியுள்ளார்கள்
"சிட்டிரம்" என்னும் 270 கிலோ மீட்டர் நீளமுள்ள நதி மேற்கு ஜாவாவில் இந்த நதியின் மாற்றம் நாம் நாசம் செய்ததை நாமே சரி செய்ய முடியும் என்பதற்கு எடுத்துங்காட்டாக உள்ளது. இந்தோனேசிய அதிபர் உலகின் சுத்தமான நதியாக மாற்றுவேன் என சபதம் எடுத்திருக்கிறார். இந்தோனேசிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் அடுத்த 5 வருடங்களுக்கு நாங்கள் எந்த சண்டையிலும் ஈடுபாடு காட்டப்போவதில்லை. மக்களின் நன்மைக்காக நீர்நிலைகளை சீரமைப்பதில் பிஸியாக இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.
நாடு என்பது மக்களே. மக்களின் நல்வாழ்வும் ஆரோக்கியமுமே வளர்ச்சிக்கான அடிப்படை என்பதிலும், நாடு பெருமை கொள்ள வேண்டியதும் அதைக் குறித்துத்தான் என்பதிலும் இந்தோனேசிய அரசு தெளிவாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக