#கட்டிக்கலை
பண்டைய காலத்தில் கோயில் கட்ட அரண்மனை வீடுகட்ட நிலம் தேர்ந்தெடுக்கும் முறை
#மனைஆய்வு
#மண்ஆய்வு
வாழ்வதற்கும் வழிபாட்டிற்கும் என தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் அதாவது மனைகள் நீண்டகாலம் நிலைத் திருக்கவேண்டியவையாகும்
எனவே நல்ல மனையைத் தேர்ந்
தெடுப்பது மிகவும் முக்கியமானதாகும் மனையிடத்தின் அமைப்பு, நிலத்தின் உறுதி சூழ்நிலை, மனைநோக்கு இவைகளை ஆராய்ந்த பின்னரே நல்லதொரு மனையைத் தேர்ந்தெடுத்தனர் அன்றைய கால சிற்ப வல்லுனர்கள்
மண்ணின் ஓசையால், மணத்தால், உணர்ச்சியால், வளத் தால், சுவையால், அமைப்பால்
மற்றும் நிறத்தால் சிறந்த மனையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்
மண்ணின் மணம், சுவை
மற்றும் நிறம் இவைகள் கட்டடத்திற்கேற்ற நல்ல மண், தீயமண்ணைக் கண்டு கணிக்
இயலும் என்பதனை இலக்கியங்களும் உணர்த்துகின்றன
நாற்றமும் சுவையு மதுரமுமாய்'
என்று கூறுவதை சிலம்பில் காண்கிறோம்.
நீங்காத மதுரமும் பரிமளமும் பொருந்திய
பூமியில் சகல சாதிகளும் வீடு கட்ட உத்தமம் என்ற அடிகளும்
தயிரொடு நெய் தேன்
எண்ணெய் தாக்கிய உதிரத்தோடு, மயிர் பல சிறுமீன் பட்சி மற்றும் மோர் பொல்ல
நாற்றம் பயிரொடு பலமும் காணார் பாழ்படும் மனை எடுக்கில்
என்ற அடிகளும்
இன்னின்ன இயல்புடைய பூமி ஏற்புடையது, இன்ன நாற்றமுடைய நிலம் ஏற்புடையதல்ல
என த் தெளிவாக்குகின் றன
மேலும் நிலத்தை வன் பால், மென்பால், இடைப்பால் என. மண்ணின் இயல்பால்
மூன்று வகைப்படுத்தலாம்.
வன்பாலாவது ஒரு சதுர அடியில் ஒரு குழி தோண்டி அதனை த்
தோண்டப்பெற்ற மண்ணினால் நிரப்பும் போது குழியின் மண் மிகுவது, மென்பாலாவது
குறைவது; இடைப்பாலாவது சரிசமமாக இருப்பது என்று கூறலாம்
கட்டட அடிப்படைக்குச் சிறந்த நிலமாகக் கொள்ளப்பட்டது
வன்பால்' நிலமே
அளந் ததோர் குழியின் மண்ணை அகழ்ந்து அதன் மேலேயிட்டால்
வளர்ந்திடிற் செல்வ முண்டாம் ஒத்திடில் மிகுதி யில்லை
குளந்தனில் குறையு மாகிற் குறைந்திடும் சம்பத்து அன்றே
உளந்தனில் கருதி நல்லோர் உரைத்தனர் புவியின் மாதே.
மேலும் அங்கு இவ்வாறு எடுக்கும் குழியில் அந்திப்பொழுதில் நீர் நிறைந்து விடியலில் நீரின் அளவு கண்டு பயன்களும் கூறப்படுகின்றது தண்ணீர் இருந்தாலும் சேராய் இருந்தாலும் சுபம்
என்பதனை
நிறைய நீர் இட்டு வைத்து நீள்கதிர் எழுந்த போது
மூறைமையாய் வந்து பார்த் தால் முப்பிடி நீரே நன்றாம்
தரையினில் வற்றியக்கால் தாழ்வு ற பிக்கும் ஆகில்
சிறையொடு நோயாம் என்று தரித்தவர் உரைத்த வாறே
என் ற பாடல் விளக்குகின்றது இதனையும் நல்ல நிலத்தேர்ச்சிக்கு இலக்கணமாகக்கொள்ளலாம் இங்ஙனம் பல்வேறு ஆய்வுகளைச் செய்து தல்லதொரு மனையை த் தேர்த்
தெடுத்தனர் என்பதுத் தெளிவாகின்றது.
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .
*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக