* வாழும் மொழியான தமிழை கருவறைக்கு வெளியே நிறுத்தி விட்டு செத்த மொழி சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது ஏன்? கருவறைக்குள் தமிழை எப்போது அனுமதிப்பீர்கள்?
* திருக்குறளை சொந்தம் கொண்டாடும் பாசிஸ்டுகளே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவரின் வாக்கிற்கு எதிராக சாதியை தூக்கிப் பிடிக்கும் மனுசாஸ்திரத்தையும் பகவத் கீதையையும் கொளுத்துவோம் வருகிறீர்களா?
* கீழடியில் இல்லாத, திருக்குறளில் இல்லாத மதமான இந்து மதத்தை கைவிடத் தயாரா ஆர்.எஸ்.எஸ் அம்பிகளே?
* சங்க இலக்கியங்களிலும் பண்டைய தமிழகத்திலும் இல்லாத சாதியை கைவிடத் தயாரா? நாமெல்லாம் தமிழர்கள் தானே, சேரித் தமிழனிடம் திருமண சம்பந்தம் செய்து கொள்ள அக்கிரகாரம் தயாரா?
* தமிழ் உலகின் மூத்த மொழி என தேனொழுக பேசுகிறார் உங்கள் பிரதமர், அந்த தமிழை அலுவல் மொழியாக அறிவிக்குமா மத்திய அரசு?
* உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பீர்களா பாஜகவின் திடீர் தமிழ் ஆர்வலர்களே?
* சமஸ்கிருதத்தை விட தமிழ் தான் மூத்த மொழி என்பதை ஏற்றுக் கொண்டு அறிவிப்பீர்களா?
* தமிழில் எழுத்துருவான தமிழியில் இருந்து தான் சமஸ்கிருதம் பெற்றுப் போட்ட குட்டிகள் எல்லாம் எழுத்துருக்களைப் பெற்றன என ஒப்புக் கொள்வீர்களா?
* இனிமேல் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் “நமஸ்தே சதா வத்சலே…” எனத் துவங்கும் பிரார்த்தனைப் பாடலுக்கு பதிலாக தமிழ்தாய் வாழ்த்து பாடத் தயாரா?
* தமிழ் வாழும் தமிழ்நாட்டில் இருக்கும் சங்கர மடம் உள்ளிட்ட மடங்களில் சமஸ்கிருதத்தை தடை செய்ய போராடுவோம் வருகிறீர்களா?
இந்தக் கேள்விகளை திடீர் தமிழ் வேடம் போட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் கேட்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக