வியாழன், 15 நவம்பர், 2018

கிறிஸ்தவர் தமிழரா?


கிறிஸ்தவர் தமிழரா?

என மதத்தால் பிளக்கும் வந்தேறி ராசாக்களுக்கு  அவர்கள் பிழைப்புக்காக பேசும் மொழியை, எம் உயிரினும் மேலாம் அமுதத்தமிழை வளர்த்தவர்களில் மூலவர் பற்றி சில உண்மைகள்...

இத்தாலி நாட்டில் பிறந்த Constantine Joseph Beschi என்பவர்

கிறிஸ்தவர்களுக்கு குருத்துவ பணியாற்றவும் ஏனையோருக்கு கிறிஸ்துவை அறிவிக்கவும் இத்தாலியில் இருந்து புறப்படுகிறார் சில நாடுகளை கடந்து 1710 ம் ஆண்டு இந்தியா வந்தடைகிறார்

இந்தியாவில் கோவாவில் வந்து இறங்கிய இவர் அப்படியே கொச்சி வந்து கால்நடையாக ஏசுவின் சீடரான புனித தோமா வழியில் பயணித்து மதுரைக்கு வருகிறார்

மதுரையிலிருந்து கோவில்பட்டி தாலுகா காமநாயகன்பட்டிக்கு வந்த இவர் இங்குள்ள மக்களின் பாஷையை நுண்ணோக்கி பார்க்கிறார் வித்யாசமான சப்தத்துடன் பேசும் அழகை கண்டு வியந்து இம்மொழி பற்றி ஆய்வு செய்கிறார்..

இவர் ஆய்வு செய்த மொழி தமிழ் ...

தமிழின் உச்சரிப்பு அழகை கண்ட இவர் தமிழை கற்றுக்கொள்கிறார்
மற்றும் தமிழில் அன்று இருந்த இலக்கியம் இலக்கணம் அகராதி போன்றவைகளையும் கற்றுக்கொள்கிறார் ....

இதன் பின்னர் தனக்கு ஆங்கிலப்பெயர் வேண்டாம் என்று தைரியநாதசாமி என்று மாற்றிக்கொண்டார்

இவர் தமிழ் எழுத்தின் சிறப்பை மற்ற நாட்டவர்கள் உணர திருக்குறள்,   நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.

தமது நாட்டவர்களான இத்தாலி மக்கள் தமிழை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று  தமிழ் - லத்தீன் அகராதியை முதன் முதலில்  உருவாக்கினார்.

அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது ...

பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்....

அதன் பிறகு தொண்ணூல் விளக்கம் என்ற நூலை வெளியிட்டார் அதில்

♦எழுத்ததிகாரம் , சொல்லதிகாரம் , பொருளதிகாரம் , யாப்பதிகாரம்
அணியதிகாரம்,,

என்று 5 வகை படுத்தி வழங்கியது இவரது சாதனை

மற்றும் புராண தமிழ் இலக்கிய இலக்கணங்கள் எல்லாமும்

கவிதை வடிவில் இருந்து வந்தது..

 இதற்க்கு காரணம் அன்றைய காலத்தில் அறிவு புலமை மக்களுக்கு அதிகம் ஆகவே கவிதையை புரிந்துகொள்ளும் மக்கள் வாழ்ந்தார்கள்

இன்றைய காலத்தில் திருக்குறளுக்கு விளக்கம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலையை உணர்ந்த இவர்

♦அவற்றை மக்கள் இலகுவாக படிப்பதற்கு தமிழ் இலக்கியங்களை  உரைநடையாக மாற்றினார் ..

இதெல்லாம் விட இவர் செய்த மிகப்பெரிய விஷயம்
என்ன தெரியுமா ?

அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம்.

புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம்.

♦உதாரணத்திற்கு  "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் எழுதுவார்கள் (அ:அர, எ:எர)

 உதாரணத்திற்கு  ஆடு என்று இப்படித்தான் நாம் இன்று எழுதுகிறோம் ஆனால் அக்காலத்தில் ஆடு  என்று எழுதுவதற்கு
அர,, டு என்றுதான் எழுதுவார்கள் இதை மாற்றி

ஆடு என்று நெடில் உரையை கொடுத்தவர் இவர் தான்

அதனால் தான் இன்றும் கூட நமக்கு எழுத்து சுருங்கி வருகிறது இல்லையென்றால் நெடில் உள்ள வார்த்தைக்கு இரண்டு தனி தனி வார்த்தைகளை நாம் எழுதவேண்டும் ..

♦இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.

இப்போ சொல்லுங்க இந்த கிருத்துவர் செய்த செயலை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று சொல்லிவிட முடியுமா?

இங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் தமிழர்கள் அல்ல என்றுதான் உரைத்திட இயலுமா?

ஆமாம் மேலே சொன்ன அந்த இத்தாலி நாட்டு காரர்  தமிழுக்கு இவ்வளவு பணிகள் செய்துள்ள பொழுது இவரை பற்றி நமக்கு சொல்லி கொடுக்காதது ஏன் என்று நமக்கு சந்தேகம் எழலாம் .

ஆனால் நமக்கு இவரை பற்றி சொல்லி கொடுத்துளார்கள்

ஆம் ...

இவர்தான் நாம் வரலாற்றில் படிக்க கூடிய
*வீரமாமுனிவர்*
இவருக்கு சென்னை கடற்கரையில் அண்ணா சிலை நிறுவிப் போற்றினார்..
♦வரலாறு தெரியாதவனால்
வரலாறு படைக்க மூடியாது..

திங்கள், 12 நவம்பர், 2018

49p பற்றி சர்கார் திரைபட கதையும் நிஜ கதையும் ஓர் அலசல்.

49p பற்றி சர்கார் திரைபட கதையும் நிஜ கதையும் ஓர் அலசல்.

49-P: கள்ள ஓட்டால் முதல்வர் வேட்பாளர் தோற்ற தேர்தல் வரலாறு- உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன ?

வேட்பாளரின் மனைவி போட்ட கள்ள ஓட்டு... ஒரு வாக்கு வித்தியாசத்தில் MLA வெற்றி...49-P வாக்குகளைச் சேர்த்தபோது நடந்தது என்ன...?

49-P: கள்ள ஓட்டால் முதல்வர் வேட்பாளர் தோற்ற தேர்தல் வரலாறு...
-செந்தில் ஆறுமுகம்,

சர்க்கார் படத்தின் காரணமாக ”கள்ள ஓட்டு” மற்றும் அது தொடர்பான “49(P)" தேர்தல் விதிமுறை குறித்து பொதுவெளியில் விவாதம் நடக்கிறது. படத்தில் “ஒரு ஓட்டின்” முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக விவாதிக்கப்படும். உண்மையிலேயே, “ஒரு ஓட்டு” வித்தியாசம் ஒரு சட்டமன்றத் தேர்தலில் பலத்த அதிர்வை ஏற்படுத்திய  பழைய உண்மை நிகழ்வு ஒன்று உள்ளது. 

ஒருவரின் ஓட்டை மற்றொருவர் போட்டுவிட்டால், அது குறித்தான வழக்கு நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது தீர்ப்பு எப்படி வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்தப்  பதிவு,நிகழ்வு உதவியாக இருக்கும்.

ஆண்டு 2008. ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல். அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவரும், வெற்றி பெற்றால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புப் பெற்றவருமான சி.பி.ஜோஷியும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கல்யாண்சிங் சவுகானும் ”நாத்துவாரா” சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள். 04-12-2008 அன்று தேர்தல் நடந்தது. 4 நாட்கள் கடந்து தேர்தல் முடிவுகள் வெளியானது.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது “நாத்துவாரா” தொகுதியின் முடிவு காங்கிரசிற்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது..!! இந்திய தேர்தல் வரலாற்றில் இது முக்கியமானதொரு முடிவாக இருக்கப்போகிறது என்பது அப்போது போட்டியிட்ட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தத் தேர்தலில்,  “நாத்துவாரா” தொகுதியில்
காங்கிரசின் ஜோஷி பெற்ற ஓட்டுக்கள்: ”62215”
பி.ஜே.பி.யின் கல்யாண் சிங் பெற்ற ஓட்டுக்கள்: ”62216”

ஆம், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பி.ஜே.பி.வேட்பாளரான கல்யாண் சிங் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார். ஓட்டு எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்கச் சொல்கிறார் ஜோஷி.   தபால் வாக்குகளை எண்ணிப் பார்த்தாயிற்று, ஓட்டு எந்திரங்களில் மீண்டும் ஒருமுறை வாக்குகளை சரிபார்த்தாயிற்று. ஒரு ஓட்டு வித்தியாசம்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

 மாநில காங்கிரஸ் தலைவர், முதல்வராவதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர் என்ற முறையில் இருக்கும் காங்கிரசின் ஜோஷி அவர்கள் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது உறுதி செய்யப்பட்டு, 08-12-2008 அன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. ( 1980,1985,1998,2003 என ஏற்கனவே இந்த சட்டமன்றத் தொகுதியில் வென்றவர் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்த உண்மைச் சம்பவத்தில் 49(P) எனப்படும் பிரிவு இப்போது விவாதத்திற்கு வருகிறது.  Section 49P in The Conduct of Elections Rules, 1961 ன்படி தனது ஓட்டை யாராவது போட்டிருந்தால், தனது அடையாளத்தைக் நிரூபித்து, ஓட்டிற்குச் சொந்தக்காரரான உண்மையான நபர் வாக்களிக்கலாம். அப்படி சிலர், “நாத்துவாரா” தொகுதியில் வாக்களித்திருந்தனர். இப்படிப் போடப்பட்ட ஓட்டுக்களை “Tendered Votes" என்று அழைக்கப்படும்.

வெற்றி பெற்ற வேட்பாளருக்கும், அவருக்கு அடுத்தபடியாக வந்த
வாக்காளருக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக உள்ள
சமயத்தில் மட்டுமே, அதுவும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்
அடிப்படையில்தான் இவ்வாக்குகள் எண்ணப்படும். ஆகவே, தோற்றவராக
அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி, இந்த Tendered Votes(49-P)
 எண்ணப்படவேண்டும் என்று கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில்
(ஜோத்பூர்) 16-01-2009ல் வழக்கு தொடுக்கிறார். (இது எண்ணப்பட்டால் தனக்கு
சாதகமாக தீர்ப்பு மாற வாய்ப்பிருக்கும் என்று கருதி..).
இவ்வழக்கில்(Election Petition No. 1/2009)
தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு, வென்றவராக அறிவிக்கப்பட்ட
 பி.ஜே.பி.வேட்பாளர் கல்யாண் சிங்கின் மனைவி கல்பனா குன்வர்
இரண்டு ஓட்டுக்கள்(வாக்குச்சாவடி எண்39,40ல் வரிசை எண் 484,727) போட்டார்
என்ற அதிர்ச்சிக்குரிய குற்றச்சாட்டையும் வழக்கில் சேர்த்திருந்தார்.

வழக்கம்போல், ஆண்டுக்கணக்கில்  விவாதிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி. தினேஷ் மகேஷ்வரி அவர்கள் 31-08-2012ல் தீர்ப்பு வழங்கினார்.

ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் 4 முக்கிய அம்சங்கள்:
1. “நாத்துவாரா” தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளர் கல்யாண் சிங்கின் வெற்றி செல்லாது, ரத்து செய்யப்படுகிறது (void)

2. கள்ள ஓட்டு போட்ட பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி கல்பனா குன்வர் மற்றும் வேறு இருவர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்(கல்பனா போட்ட 2 ஓட்டுக்களும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல்,  வேறு இருவர் போட்ட கள்ள ஓட்டுக்களும் ரத்து செய்யப்பட்டது.)

3. கள்ள ஓட்டு போட்டு தேர்தல் முறைகேடு செய்த பி.ஜே.பி. வேட்பாளர் கல்யாண் சிங்,   காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷியின் வழக்கு செலவிற்காக ரூ.51,000/- கொடுக்க வேண்டும்
.
4. பி.ஜே.பி. வேட்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக இத்தீர்ப்பு 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது.

எதிர்பார்த்தது போல் பி.ஜே.பி. வேட்பாளர் கல்யாண் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 49(P) விதிமுறையின்படி வாக்களித்தவர்களின் (”Tendered Votes" )எண்ணப்படவேண்டும் என்று கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், அந்த வாக்குகளை எண்ண 04-03-2013ல் உத்தரவிட்டது. 

பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி போட்ட 2 ஓட்டுக்களும் கள்ள ஓட்டாக கருதப்பட்டு, அதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். அதேபோல் வேறு இருவர் போட்ட கள்ள ஓட்டையும் கழித்துவிட்டு - 49(P) ல் பதிவான வாக்குகளை எண்ணி முடித்தபோது ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. !

பி.ஜே.பி., காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் சம வாக்குகளைப் பெற்றிருந்தனர் !! மீண்டும் குழப்பம் !!

இருவரும் சமவாக்குகள் பெற்றால் குலுக்கல் முறையில்தான் வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படவேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி சார்பில் வாதிடப்பட்டது.

12-4-2013ல் இவ்விசித்திரமான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.(தேர்தல் நடந்தது டிசம்பர் 2008 என்பதை நினைவில் கொள்க!!). 2008ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் பதவிக்காலமே முடிவடையும் தருவாயில் உள்ளநிலை, மற்றும் ஜோஷி-கல்யாண்சிங் இருவருமே சம வாக்குகள் பெற்றுள்ள நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு “நாத்துவாரா” தொகுதியின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்தது. பி.ஜே.பி.வேட்பாளர் கல்யாண்சிங்கே சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார் என்றும் அறிவித்தது.

ஆக,  2008ல் தேர்தல். 2009ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு. 2012ல் உயர்நீதிமன்ற தீர்ப்பு. 2013ல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு. ( இறுதித் தீர்ப்பு வெளியானது ஏப்ரல் 2013ல்தான். அதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிட்டது. ஆம், அக்டோபர் 2013ல் அடுத்த சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.)

கள்ள ஓட்டுப் போடப்பட்டால், அதுவும் “ஒரு ஓட்டு” வித்தியாசத்தில் வெற்றி,தோல்வி மாறும் என்ற இயல்புடைய வழக்கு ஒன்றில், தேசியக் கட்சி ஒன்றின் முதல்வர் வேட்பாளர் ஒருவர் தோற்ற வழக்கில் எவ்வளவு ”விரைவாக!!” தீர்ப்பு வரும் என்பதற்கு நம் கண்முன்னுள்ள உதாரணம் இது. 

பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி கள்ள ஓட்டு போட்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும், அவரின் ஓட்டைக் கழித்துவிட்டு மறு எண்ணிக்கை நடத்தவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. “நாத்துவாரா” தொகுதியில் நடைபெற்ற தேர்தலை ரத்துசெய்துவிடவில்லை..!!

காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்று, முதல்வராகும் வாய்ப்பை இழந்தார் என்பதைப் பார்த்தோம்(பின்னர் அவர் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய மந்திரியானது வேறு கதை). 

இந்த சமயத்தில் ஒருவர், ஒரே ஒருவர், தேர்தல் நாளன்று  வாக்குச் சாவடிக்கு வந்திருந்தால் காங்கிரசின் ஜோஷி வெற்றி பெற்றிருப்பார்.

அவர் யார் தெரியுமா..? அவர் வேறு யாருமில்லை, வாக்களிக்க வராத ஜோஷியின் மனைவியே !! ??

வியாழன், 1 நவம்பர், 2018

OBC/SC/ST & RELIGIOUS MINORITIES மக்களுடைய இட ஒதுக்கீட்டு முறையின் எதிரி, அகன்ற பாரதத்தின் பிரிவினைவாதி சர்தார் வல்லபாய் படேல்... .


OBC/SC/ST & RELIGIOUS MINORITIES  மக்களுடைய இட ஒதுக்கீட்டு முறையின் எதிரி, அகன்ற பாரதத்தின் பிரிவினைவாதி  சர்தார் வல்லபாய் படேல்...       .

ஒன்றுபட்ட பாரதம் என்பது இன்றைய  1. இந்தியா, 2.இலங்கை, 3.பாகிஸ்தான்,4.பங்ளாதேஷ் மற்றும் 5.ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அடங்கியவை.

வெவ்வேறு சூழலில், இவை தனிதனித்நாடுகளாக பிரிந்தன. அதற்கான காரணமும் இருக்கின்றன. இதில் மிக முக்கியமாக பாகிஸ்தானும், கிழக்குபாகிஸ்தானும்(இன்றைய பங்களாதேஷ்) இந்தியாவிலிருந்து பிரிந்ததற்கான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணம் உள்ளது.

இங்கு மதங்களை வைத்து அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வேளையில், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சீரிய முயற்சியினால், இந்தியாவில் முதன் முதலாக 1911- ல் சாதிவாரி கணக்கெடுப்பை அன்றைய பிரிட்டிஷ் அரசு எடுத்தது. அதில் 428 சாதிகள் இந்துக்கள் அல்ல என்று சென்சஸ் கமிஷனால் அறியப்பட்டது.         அதன்  பிறகு பாபாசாகேப் அவர்களின் கோரிக்கையை ஏற்று 1918ல் செளத்பரோ கமிட்டி மற்றும் 1927-1928 களில் சைமன் கமிஷன் மூலமாக, வயதின் அடிப்படையில் அனைவருக்கும்  ஓட்டு என்ற அரசியல் உரிமையும், கல்வியின் அடிப்படையில், வேலைவாய்ப்பும்,  சம உரிமை அளித்தல் போன்ற காரணங்களுக்காக சைமன் கமிஷன்   அமைக்கப்பட்டது. இதில் நம் முன்னோர்கள் யாவருக்கும் ஓட்டுரிமையோ, வேட்பாளராகும் தகுதியோ கிடையாது. ஆனால், பாபாசாகேப் அவர்கள் அன்றைக்கு 21 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை(Adult Enfranchisement) வாங்கிக் கொடுத்தார்.

மேலும், இதன் தொடர்ச்சியாக 1930-1932 களில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் பிரிட்டிஷ் அரசு, கமிஷனில் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதில்  பட்டியலின மக்களுக்கு இரட்டை வாக்குரிமையுடன் (dual voting rights) கூடிய தனித்தொகுதி (Separate electorates) வழங்கப்பட்டது. பிறகு அது பார்ப்பனிய சூழ்ச்சியின் தூண்டுதலின்பேரில்  காந்தி அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.  பட்டியலின மக்களுக்கு எவ்வித உரிமைகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதன் விளைவாக தனித்தொகுதி முறையும்,  இரட்டை வாக்குரிமையும் பறிக்கப்பட்டு இன்றைய ரிசர்வ்தொகுதிகள் முறை கொண்டுவரப்பட்டது. இதை பாபாசாகேப் மனமாற ஏற்கவில்லை. இதுவே பூனா ஒப்பந்தம் ஆகும்.

இறுதியாக ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவு எடுத்தது. சுதந்திரம் கொடுப்பதற்கு முன்பு, இந்தியாவிற்கு அரசியல் அமைப்பு சட்டத்தை (constitution) உருவாக்க கமிட்டி அமைக்க பணித்தது. இதன் காரணமாக பாபாசாகேப் அவர்கள் எந்த நிலையிலும் அரசியல் சாசன சபைக்குள்(constitution assembly) வந்துவிடக் கூடாது என்று பார்ப்பணர்களும்(Brahmins) பார்ப்பனிய ஏவலாளிகளான ஜாதிஇந்துக்களும் (brahminists) மிகவும் உறுதியாக இருந்தனர். அப்பொழுது,  பங்ளாதேச பகுதியில் அமைந்துள்ள ஜெய்சூர் (jaisur) மற்றும் குல்நார் (Kulnar) தொகுதியிலிருந்து பாபாசாகேப் அவர்களும், ஜோகிந்தர் நாத் மண்டல் அவர்களும் அரசியல் சாசன சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள்- அனைவருக்கும் சம உரிமை கல்வி,வேலைவாய்ப்பு, அரசியல் பங்கீடு போன்ற உரிமைகளுக்கு ஒப்புதல் வழங்க  பாபாசகேப் அவர்கள் அரசியல் சாசன சபையில் உரிமைகோரிய கோரிக்கைகளை முழுவதுமாக ரத்து செய்தவர்தான் இந்த சர்தார் வல்லபாய் அவர்கள். அதாவது அனைவரும் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட பிரதிநிதித்துவ முறையான 'இட ஒதுக்கீட்டு' முறையை இரத்து செய்தவர் தான்  இந்த பார்ப்பனிய கரும்பு மனிதர்.

மேலும் வல்லபாய் அவர்கள் ஒருபடி மேலே சென்று எப்படியாவது பாபாசகேப் அவர்களை    அரசியல்சாசன சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று  திட்டமிட்டார். பாபாசகேப் அவர்கள் தேர்தெடுக்கப்பட்ட தொகுதி கிழக்கு பாகிஸ்தானில் இருப்பதை அறிந்த வல்லபாய் அவர்கள் அந்த இடங்களை  இந்தியாவிலிருந்து   தனியாக பிரித்து பாகிஸ்தானுக்கு உட்பட்ட பங்ளாதேசத்துடன் சேர்த்து விட்டார்.

மேலும் முகம்மது அலி ஜின்னாவை தூண்டிவிட்டு  பாகிஸ்தானை  பிரித்தார்.ஆகவே இப்படி ஒன்றுபட்ட இந்தியாவை -பாரதத்தை சீர்குலைத்த இழிவை செய்தவர்தான் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் வல்லபாய் அவர்கள்.

அதன் பிறகு பாபாசாகேப் , தான் தேர்தெடுக்ப்பட்ட தொகுதியை இழக்க நேர்ந்தது. அரசியல் சாசன சபை உறுப்பினர் பதவியை இழந்தார். மிகவருத்தம் அடைந்த அவர் உடனே கொல்கத்தாவிலிருந்து நேரடியாக லண்டன் சென்று  அங்கு இங்கிலாந்து ராணி அவர்களை சந்தித்தார்.

 இந்தியாவிலிருந்து  நேரு,காந்தி உட்பட எவர் ஒருவரும் முன் (appointment) அனுமதியில்லால் இங்கிலாந்து ராணியை சந்திக்க முடியாது. ஆனால் பாபாசாகேப் ஒருவர் மட்டுமே (appointment இல்லாமல்) நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

ஆக நடந்தவற்றையும் தன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் இங்கிலாந்து அரசிடம் பாபாசகேப் முறையிட, உடனடியாக நேருவை அழைத்த இங்கிலாந்து அரசு, இந்தியாவிற்கு சுதந்திரம் என்பது மறுபரிசீலனை செய்யப்படும்......... டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசன சபையில் உறுப்பினர் மற்றும் அரசியல் வரைவு கமிட்டி உறுப்பினர் (drafting committee member) ஆகும் வரை என்று எச்சரித்து கட்டளையிட்டது பிரிட்டிஷ் அரசு.

 மீ்ண்டும் அடிபணிந்த நேருவின் தலைமையிலான இடைக்கால மந்திரி சபை, பாபாசாகேப் அவர்களை அரசியல் சாசன சபை மற்றும் அரசியல் அமைப்பு வரைவு கமிட்டி உறுப்பினர் ஆக்கியது.

 அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுத எவரும் முன்வராமல் தயங்கிய நிலையில், அந்த பொறுப்பை தானே சுமந்து தனது எழும்புகளை பேனாவாக்கி, தன் இரத்தத்தை மையாக்கி அரசியல் அமைப்பு சட்டத்தை தனி ஒருவராக எழுதி  மக்களுக்கான உரிமைகளை சட்டமாக்கினார்.   அதில் ARTICLE -340 பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு உறுதிபடுத்தப்பட்டது. அதேபோல் SC/ST  மக்களின் உரிமைகளும் உறுதிபடுத்தப்பட்டது.               இதற்கு முன்பு எந்த சர்தார்வல்லபாய் அவர்களால்  மக்களுக்கு உரிய உரிமைகள் ரத்து செய்யப்பட்டதோ அந்த உரிமைகளை யாரும் அசைத்து பார்க்கா வண்ணம் அரசியல் அமைப்பு சட்டம் அமைப்பில் நிலையான பாதுகாப்பை உருவாக்கித்தந்தார் பாபாசாகிப் அவர்கள்.

இந்திய மக்களின் சம உரிமையான  பிரதிநிதித்துவ இடம் ஒதுக்கீட்டு முறையை காக்கும் சட்டத்தை ரத்து செய்த சர்தார் அவர்கள் எப்படி இரும்பு மனிதரானார். அவர் சார்ந்த பட்டேல் சமூகம் இன்று குஜராத்தில் ஹார்த்திக்பட்டேல் தலைமையில் பட்டேல்  மக்களின் உரிமைகளுக்காக ரோட்டில் வந்து ஆண்டுகணக்கில் போராட்டம் நடத்திகொண்டிருக்கிறார்கள். இங்கே தமிழ் நாட்டிலும் ஒரு சிலர் நாங்கள் OBC/MBC க்கு போகிறோம், நாங்கள் குர்மி-பட்டேல் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் விரும்பும் OBC  இடஒதுக்கீட்டைத்தான் வல்லபாய் பட்டேல் வீறுகொண்டு எதிர்த்தார்,அதை இரத்தும் செய்தார்.இவ்வாறு அவர் obc/SC/ST/religious minority மக்களின் உரிமையான இடஒதுக்கீட்டின் எதிரியாக செயல் பட்டதால் தான் அவர் இட ஒதுக்கீடு முறையை எதிர்க்கும் பார்ப்பனியத்திற்கு இரும்பு மனிதராக தென்பட்டார்.

பங்ளாதேஷ்- பாகிஸ்தான்  நாடுகளின் பிரிவினைகளுக்கு காரணமாக இருந்த சர்தார் அவர்கள் ஒன்று பட்ட அகன்ற பாரதத்தை உருவாக்கினாரா?  பிளவு படுத்தினாரா?

 முழுக்க முழுக்க பிராமணர்களின் பிரதிநிதியாக செயல்பட்டு நம் போன்றவர்களின் உரிமைகளை எதிர்த்த சர்தார் வல்லபாய்  அவர்களை பற்றிய பெருமையை நம் வாயால் பேச வைப்பதே பிராமணிசத்தின் வெற்றியாகும்.

 இது போன்ற உண்மையான வரலாறுகளை கண்டறிந்து மக்களுக்கு உரக்கச் சொல்வது நமது வரலாற்றுக்கடமை ஆகும். ஜெய் பீம். Thanks WhatsApp news

புதன், 31 அக்டோபர், 2018

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்..? நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்...


*அருப்புக்கோட்டை கல்லூரி ஆசிரியைக்கு நேர்ந்த கசப்பான  கொடுமை*  *நிர்மலாதேவியை  பெண் சதையாக* *பார்த்துள்ள கோட்சூட் போட்ட*
 *அரசு கல்வித்துறை  அதிகாரிகள்*

 மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்..?
நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்...


கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி (வயது 46) கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சிறையில் இருந்த நிர்மலா தேவியை ஏப்ரல் 25-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து, விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை நிர்மலா தேவி நீண்ட நெடிய வாக்குமூலமாக அளித்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2003-ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தோம். அப்போது, பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

எனது உறவினர்கள், கணவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கக்கூடாது என்று என்னை கண்டித்தனர். அதன்பிறகு, எனது கணவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் நெருக்கமாக பழக என்னை வற்புறுத்தினார். இதனால், எங்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.

அதன்பிறகு, 2008-ம் ஆண்டு எனது கணவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால், நான் குழந்தைகளுடன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினேன். அப்போது, எனது கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு எனது கணவர் வேலை பார்க்க சென்றார். அவருக்கு அந்த பணி பிடித்திருந்ததால் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.

நான் பணிபுரிந்த தேவாங்கர் கலை கல்லூரியின் நிர்வாக குழுவில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. 2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

நான் அவருடன் நெருக்கமாக பழகினேன். இது எனது கணவருக்கும் தெரியும். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த செல்போனை எனது கணவர் தான் வைத்திருந்தார். அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த தொடர்பால் அவருக்கு பணிபுரிந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு எனது கணவர் சரவண பாண்டியன், சவுதி அரேபியாவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன். அவர் எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்.

அதன்பிறகு, எனது கணவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து பார்த்தார். அதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை தீர்த்து வைக்க எனது கணவரின் நண்பர்கள் ராஜூ, ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சிலர் வந்தனர். அவர்களுடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டதால், எனது கல்லூரியில் வேலைபார்ப்பவர்கள் யாரும் என்னுடன் சரியாக பேசுவது கிடையாது. நானும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன்.

இந்த சூழ்நிலையில், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். இதனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்தேன். திருப்பதி, சென்னை என்று பல இடங்களுக்கு சென்றேன். 24 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.

அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்து வந்தோம். அதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராமநாதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, உல்லாசமாக இருந்தோம். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்தேன்.

2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது, அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன்.

தற்போது, அவர் வெளி கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக வகுப்புகள் நடத்தி வருகிறார். நானும் அவரைப்போல் கவுரவ விரிவுரையாளராக ஆசைப்பட்டு, அவரிடம் உதவி கேட்டேன். இது தொடர்பாக, அடிக்கடி அவருடன் போனில் பேசுவேன். வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை பரிமாறிக்கொள்வேன். அப்போது, அவர் ஏதாவது கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாளராக சென்றால், அதை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்புவார். அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள முருகன் என்பவரை தொடர்புகொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் எண்ணை கொடுத்தார். நானும் உடனே முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புத்தாக்கப் பயிற்சியில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன்.

நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை நான் திருத்திக்கொண்டிருந்தபோது முருகனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அன்று அவர் அருப்புக்கோட்டைக்கு வந்திருப்பதாகவும், என்னை சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார். நானும் விடைத்தாள் திருத்தி முடித்தவுடன் மாலை 3 மணிக்கு மேல் காந்திநகர் பஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். அவரும் அங்கு எனக்காக காத்திருந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார்.

அதன்பிறகு, எனது மகளின் சடங்கு ஆல்பத்தை அவருக்கு காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு உன்னுடைய மகளும் வருவாளா? என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர், உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா? என்று என்னிடம் கேட்டார். அவர் கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கத்தான் கேட்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்கு நான் எங்களது கல்லூரி நிலவரம் தற்போது சரியில்லை. இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்

அதன் பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.

அப்போது முருகன் என்னிடம், “என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று மீண்டும் கேட்டார். “நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.

மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.

அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி கூறியதால் அவருக்காக காத்திருந்தேன். அவர் வந்தவுடன் கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.

முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிர்மலா தேவி, தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவித்துள்ளார். அது என்னவென்பது,


கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்புகொண்டு தவறான பாதைக்கு அழைத்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் 2-வது பகுதி வெளியிடப்படுகிறது. தொடர்ந்து, நிர்மலா தேவி கூறியதாவது:-

மார்ச் 13-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தங்குவதற்கு தேவையான உடைமைகளை நான் எடுத்துக்கொண்டு செல்லும்போது, அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னர் வருவதை தெரிந்துகொண்டேன். கவர்னர் வருகையையொட்டி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சிக்கு நானும் சென்றிருந்தேன். அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்துவிட்டு திரும்பிய கவர்னர் அறிவியல் கண்காட்சியை திறந்துவைக்க வந்தார்.

கவர்னரை முதன்முறையாக பார்க்கும் ஆவலில், கவர்னர் ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்துவைத்ததை எனது செல்போனில் வீடியோ எடுத்தேன். போட்டோக்களும் எடுத்துக்கொண்டேன். கவர்னர் வருகையின்போது எடுத்த வீடியோவை கணிதம் படித்த 3-ம் ஆண்டு மாணவிகள் மூவர், முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், எனது மகள் வைசாலி மற்றும் பேராசிரியர்கள் சிலருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினேன். எனக்கு அதிகமான செல்வாக்கு இருப்பதாக மாணவிகள் நம்பி எனது பேச்சை கேட்பார்கள் என்று நினைத்தேன்.

மார்ச் 15-ந் தேதி மாலை 4.45 மணிக்கு மாணவிகள் 4 பேரும் ஒன்றாக பேசிவைத்துக்கொண்டு, ஒரே இடத்தில் இருந்தபடி ஒரு மாணவியின் செல்போனில் இருந்து எனக்கு பேசினார்கள். மாணவிகள் 4 பேரும் ஒரே இடத்தில் இருப்பதை உறுதிசெய்து கொண்ட நான், உடனே அந்த மாணவி போனுக்கு தொடர்புகொண்டு, ஸ்பீக்கரில் போடச் சொல்லி 4 மாணவிகளிடமும் ஒரே நேரத்தில் சுமார் 20 நிமிடங்கள் பேசி அவர்களை மூளைச்சலவை செய்தேன். அந்த உரையாடலில் பெரிய உயர் அதிகாரி என்று துணை வேந்தர், பதிவாளர் ஆகிய இருவரையும் எண்ணிக்கொண்டு யூகத்தின் அடிப்படையில் பேசினேன். வாய்ப்பு வருவதாக நான் சொல்லும்போது, பாடக் குறிப்பு தயாரிப்பதை மனதில் வைத்தே பேசினேன்.

உயர் அதிகாரி என்று நான் சொன்னது, துணை வேந்தர், பதிவாளர் மற்றும் தொலைதூர கல்வி இயக்குனர் ஆகியோருக்கு முருகன் நெருக்கமாக இருந்ததால், முருகன் மூலமாக எதையும் சாதிக்கலாம் என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். அடுத்து, “அவர்கள் கொஞ்சம் எதிர்பார்க்கிறார்கள்” என்று நான் சொன்னது, முருகன், கருப்பசாமி ஆகியோர் மாணவிகள் தான் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதைத்தான் அவ்வாறு சொன்னேன். பணத்தை உங்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்கி போட்டுவிடுவேன் என்றும், மாதாமாதம் சம்பளம் கொடுக்கிற மாதிரி உங்கள் வீட்டுக்கு பணம் வரும் என்று மாணவிகளிடம் நான் கூறியதற்கு, அவர்கள் உடன்பட்டு சம்மதித்தால் அதற்குரிய பணத்தை கொடுப்பதாக குறிப்பிட்டேன். ‘என்கிட்ட கேட்டுக்கொண்டே இருக்காங்க’ என்று கருப்பசாமியைத்தான் சொன்னேன். எனக்கு அவர்கள் சில உறுதியை கொடுத்திருக்கிறார்கள் என்பது, மாணவிகளை பற்றிய விவரம் வெளியே தெரியாது என்பதைக் குறிப்பிட்டு கூறினேன்.

அடுத்த வாரம் ஒரு முக்கியமான ‘அசைன்மெண்ட்’ இருக்கு என்று நான் சொன்னது, கருப்பசாமி அடுத்த வாரம் சென்னை செல்லும்போது தன்னுடன் கல்லூரி மாணவிகளை அனுப்ப ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டதை மனதில் வைத்து சொன்னேன். ‘கவர்னர் வரும் வீடியோவை அனுப்பியிருந்தேன் இல்ல, அப்ப சில விஷயங்கள் நடந்துச்சு. நடுவில் ஸ்கிரீன் இல்ல, கவர்னர் லெவல் கவர்னர் தாத்தா இல்ல’ என்று நான் கூறியதற்கு காரணம், எதார்த்தமாக கவர்னர் வருகையை நான் வீடியோ எடுத்து அனுப்பிய நிலையில், மாணவிகள் என்னை நம்பி சம்மதிப்பார்கள் என்று கூறினேன். ‘ரொம்ப பெரிய லெவல்ல எனக்கு ஆட்களை தெரியும் என கூறினால்தான் மாணவிகள் சம்மதிப்பார்கள்’ என அவ்வாறு கூறினேன்.

மாணவிகள் நான் கூறிய விஷயத்துக்கு சம்மதிக்கவில்லை. அதற்கு நான் உடனே பதில்கூற தேவையில்லை என்றும், நிதானமாக தங்களுக்குள் கலந்துபேசி, மார்ச் 17-ந் தேதிக்குள் முடிவு சொல்லுமாறு கூறினேன். அவர்களின் முடிவை தெரிந்துகொள்வதற்காக மாணவிகள் 4 பேருக்கும் தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தேன். அவர்களது பதிலில், அவர்களுக்கு இஷ்டமில்லை என்பதை தெரிந்துகொண்டேன். இதனால், நான் அவர்களிடம் இந்த விஷயம் தொடர்பாக இனி பேசமாட்டேன் என்றும், இந்த விவரத்தினை வெளியாட்கள் யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்.

பின்னர், வழக்கம்போல் புத்தாக்கப் பயிற்சிக்கு சென்று வந்தேன். 20-ந் தேதி தேவாங்கர் கல்லூரி செயலாளரிடம் இருந்து எனக்கு கடிதம் ஒன்று ஆள்மூலம் வந்து சேர்ந்தது. அந்தக் கடிதத்தை பார்த்தபோது, புத்தாக்கப் பயிற்சியை முடித்துவிட்டு, உடனடியாக கல்லூரிக்கு வந்து அறிக்கை அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் உடனே செயலாளருக்கு போன் செய்து இதுகுறித்து கேட்டபோது, ‘நாளை கல்லூரிக்கு வாங்க, நேரில் பேசிக்கொள்ளலாம்’ என்று கூறிவிட்டார். உடனே நான் பல்கலைக்கழகத்தில் உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரியை நேரில் சந்தித்து விவரத்தை சொன்னேன். அதற்கு அவர், பயிற்சி முடிந்தால் மட்டுமே அனுப்ப முடியும் என்று கூறியதுடன், இது தொடர்பாக கல்லூரி செயலாளருக்கு கடிதம் ஒன்றை என்னிடம் எழுதிக் கொடுத்து அனுப்பினார்.

பின்னர், அங்கிருந்து நான் தங்கியிருக்கும் இடத்திற்கு புறப்பட்டபோது, அவருடைய காரில் என்னை ஏற்றிக்கொண்டு நான் தங்கியிருந்த இடத்தில் கொண்டுபோய்விட்டார். அப்போது, அவர் என்னுடைய அறைக்கு வந்தார். நாங்கள் இருவரும் அறையில் முத்தமிட்டுக் கொண்டோம். பின்னர், அங்கிருந்து மீண்டும் அவரது காரில் புறப்பட்டோம். பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகேயுள்ள பஸ் ஸ்டாப்பில் என்னை அவர் இறக்கிவிட்டுச் சென்றார். நான் அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டு அருப்புக்கோட்டைக்கு வந்துவிட்டேன்.

அன்று இரவே அவர் கொடுத்த கடிதத்தை எடுத்துக்கொண்டு தேவாங்கர் கல்லூரி செயலாளர் வீட்டிற்கு சென்றேன். அப்பொழுது அவரது குடும்பத்தினர் நாளை கல்லூரிக்கு சென்று பார்க்குமாறு கூறிவிட்டனர். மார்ச் 21-ந் தேதி காலை தேவாங்கர் கலை கல்லூரிக்கு சென்றுவிட்டதால் நான் புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. கல்லூரிக்கு சென்று செயலாளரை சந்தித்தபோது, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடும்படியும், செயலாளருக்கு அந்த அதிகாரி கொடுத்த கடிதத்தை தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு கணிதத்துறைக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.

நான் செய்முறை தேர்வு நடந்து கொண்டிருந்த கம்ப்யூட்டர் அறைக்கு சென்றுவிட்டேன். மதியம் 12 மணியளவில் அலுவலக உதவியாளர் என்னிடம் வந்து அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். அலுவலக தலைமைப் பொறுப்பாளரை நான் சந்தித்தபோது என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அலுவலக கடிதம் ஒன்றை கொடுத்தார். அதை பிரித்து பார்த்தபோது, என்னை பணியிடை நீக்கம் செய்திருந்தது தெரியவந்தது. என்ன காரணத்திற்காக என்னை பணியிடை நீக்கம் செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எனவே, கல்லூரியில் இருந்த பேராசிரியர்களிடம் இதுகுறித்து கேட்டுப்பார்த்தேன். யாரும் காரணம் சொல்லவில்லை. உடனே நான் செயலாளரை சென்று பார்த்தபோது, கல்லூரி கமிட்டி முன்பு விசாரணை வரும்போது உங்கள் விளக்கத்தை கொடுக்கலாம் என்று கூறினார்.

அந்த ஆணையில் நான் அருப்புக்கோட்டையை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், என்னுடைய உடைமைகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து எடுத்து வருவதற்காக செயலாளரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு பல்கலைக்கழகம் வந்து பெண் அதிகாரி ஒருவரை சந்தித்து பணியிடை நீக்க ஆணையை காண்பித்தேன். பின்பு இதுசம்பந்தமாக முருகனையும் சந்தித்து உதவி கேட்டேன். அவரும் அனைத்துவித உதவிகளையும் செய்வதாக கூறினார். ஆனால், என்ன காரணத்திற்காக என்னை பணியிடை நீக்கம் செய்தார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது.

இந்த நிலையில், மனிதவள மேம்பாட்டு அதிகாரியை சந்தித்து அவரிடம் அந்தக் கடிதத்தை காண்பித்தேன். கடிதத்தில், பணியிடை நீக்கத்திற்கான காரணம் குறித்து குறிப்பிடப்படாததால் என்னை தொடர்ந்து பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுமாறு கூறினார். மேலும், கல்லூரி நிர்வாகத்தை சந்தித்து காரணம் மற்றும் விளக்கத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு, அதற்கு ஏற்றார்போல் செயல்படுமாறு எனக்கு அவர் ஆலோசனை வழங்கினார். அடுத்த 2 நாட்கள் அங்கேயே தங்கி பயிற்சியை தொடர்ந்தேன்.

அப்போது, எனது கணவரின் நண்பருக்கு போன் செய்து, சஸ்பெண்டு செய்யப்பட்ட தகவலை சொன்னேன். அவர் எனது கணவரிடம் போன் செய்து, கல்லூரி செயலாளரிடம் சஸ்பெண்டுக்கான காரணம் குறித்து கேட்கச் சொன்னார். எனது கணவரும் அங்கு சென்று காரணம் கேட்டபோது, கணிதத்துறையை சேர்ந்த மாணவிகள் 4 பேர் ஒரு ஒலிப்பதிவு நாடாவை கொடுத்து என் மீது புகார் மனு அளித்ததால், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கல்லூரி செயலாளர் கூறியுள்ளார். இதை என்னிடம் கணவரின் நண்பர் போன் மூலம் தெரிவித்தார்.

நான் இந்தத் தகவலை முருகனிடம் போனில் தெரிவித்தபோது, அவர் கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறினார். மனிதவள மேம்பாட்டு அதிகாரி எனக்கு போன் செய்தார். அப்போது, என்னை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை சொன்னேன். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகள் வேண்டும் என்று தொடர்ந்து கேட்டதால்தான், நான் இவ்வாறு பேசி மாட்டிக்கொண்டேன் என்றும் அவரிடம் சொன்னேன். அப்போது அவர் யாருக்காக கேட்டார்கள் என்று என்னிடம் கேட்டார். நான் உயர் அதிகாரிகள் என்று மட்டும் கூறினேன். பிறகு அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன்.

மார்ச் 30-ந் தேதி வக்கீல் பாபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் எனக்கு போன் செய்து திருத்தணி சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கொடைக்கானல் வருவதாகவும், அவருக்காக என்னை அங்கு வரச் சொன்னார். நானும் பாபுவின் ஜூனியர் வக்கீல் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் காரில் புறப்பட்டு கொடைக்கானல் சென்றேன். போகும்போது, ராஜேஷ் என்னிடம் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். கொடைக்கானலில் ஒரு ஓட்டலில் 2 அறைகள் முன்பதிவு செய்திருந்தார்கள். ஓட்டல் பெயர் எனக்கு தெரியவில்லை. அடுத்தநாள் முழுவதும் நான் திருத்தணி சரணவன் மற்றும் பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.

ஏப்ரல் 1-ந் தேதி என் செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் வாரப் பத்திரிகை ஒன்றில் இருந்து பேசுவதாகவும், மாணவிகளுடன் நான் பேசிய ஆடியோ பதிவு குறித்து பேச வேண்டும் என்றும் கூறினார். இதைக்கேட்டு நான் பதறிப்போய் பல்கலைக்கழக அதிகாரிக்கு போனில் இந்த தகவலை சொன்னேன். அப்போது அவர் என்னிடம், இந்த முருகனுக்கும், கருப்பசாமிக்கும் ‘சப்ளையிங் சர்வீஸ்’ செய்வதே வேலை என்றும், துணைவேந்தர் அல்லது பதிவாளருக்குத்தான் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கலாம் என்றும் கூறினார்.

ஏப்ரல் 6-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று நான் முருகனை நேரில் சந்தித்தேன். அப்போது அவருடன் கருப்பசாமி, அவரது நண்பர் ராஜபாண்டியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் உடன் இருந்தனர். நான் வாரப் பத்திரிகை நிருபர் போன் செய்த விவரத்தை சொன்னேன். அதற்கு முருகன், ‘எதுனாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்’ என்று கூறினார். நான் முருகனிடம் துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் சொல்லி எங்கள் கல்லூரி செயலாளரிடம் பேச சொல்லச் சொன்னேன். அதற்கு முருகன் ‘சொல்கிறேன்’ என்று சொன்னார். மேலும், நான் வேலை பார்த்த கல்லூரியில் இந்த விஷயம் குறித்து அவர் விசாரித்ததாகவும், கல்லூரியில் இருந்து என்னை பணிநீக்கம் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

நான் ஏற்கனவே கொடைக்கானல் சென்றபோது, வக்கீல் ராஜேஷ் என்பவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக நான் தெரிந்துகொண்டதை முருகனிடம் சொல்லி கல்லூரி மாணவிகளின் விவரம் கேட்டு சொல்லவா என்று கேட்டேன். அதற்கு அவர், தற்போது சூழ்நிலை சரியில்லை என்று கூறி மறுத்துவிட்டார். அதைக்கேட்ட பின்னர், மனிதவள மேம்பாட்டு அதிகாரியை நேரில் சந்தித்தேன். அவரிடம் என்னுடைய பணியிடை நீக்கம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஏற்கனவே பலமுறை என்னிடம் போனில் கூறியதுபோல, முருகன் மூலமாக பதிவாளர் மற்றும் துணைவேந்தரிடம் சிபாரிசு செய்யச் சொல்லுமாறு மறுபடியும் கூறினார். பின்னர் என்னுடைய காரில் அவரை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விருதுநகர் நோக்கி சென்றபோது, 4 வழிச்சாலையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, இருவரும் காரிலேயே உடலுறவு கொண்டோம். இந்த பிரச்சினை முடிந்தவுடன் நாம் இருவரும் எங்கேயாவது வெளியே செல்லலாம் என்று நான்கூற, அதற்கு அவர் கொடைக்கானல் போகலாம் என்றார். அவரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்டுவிட்டு, அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன்.

ஏப்ரல் 8-ந் தேதி மதியம் நான் மாணவிகளுடன் பேசிய ஆடியோ பதிவு வாரப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த தகவல் எனக்கு தெரியவந்தது. பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போவதால், இதுகுறித்து முருகனிடம் பேசலாம் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செல்ல முடிவெடுத்து பல்கலைக்கழக அதிகாரிக்கு ஏப்ரல் 10-ந் தேதி காலை எஸ்.எம்.எஸ். செய்தேன். அவர் சாயங்காலம் எல்லோரும் கிளம்பிய பிறகு வாருங்கள் என்று எனக்கு போன் செய்து கூறினார். அதன்படி, மாலை 6 மணிக்கு பல்கலைக்கழகம் வந்து முருகனை சந்தித்து பேசினேன். அவருடைய கார் டிரைவர் அப்போது அங்கிருந்தார்.

முருகன் என்னைப் பார்த்து, “ஏம்மா இங்க வந்தீங்க. பல்கலைக்கழகத்தில் யாராவது பார்த்தா, இப்ப உங்களை எல்லாருக்கும் தெரியுமே” என்று சொல்லி காளவாசல் அருகில் உள்ள ஒரு பேக்கரி கடை அருகே காத்திருக்க சொன்னார். ஆனால், அங்கு கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், நான் அங்கு செல்லாமல், காளவாசல் போகும் வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு காத்திருந்தேன். அப்போது முருகன் எனக்கு போன் செய்து மாட்டுத்தாவணி அருகே வரச்சொன்னார். நான் அங்கு கிளம்பி சென்று கொண்டிருந்தபோது, முருகன் மறுபடியும் போன் செய்து மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அருகேயுள்ள பாலத்திற்கு வரச்சொன்னார். நான் அங்கு சென்றபிறகு முருகனும் அங்கு வந்தார். ‘என்னை எப்படியாவது இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று நான் அவரிடம் சொன்னேன்.

அதற்கு அவர், ‘கருப்பசாமியால் நீங்களும், நானும் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். நான் இப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். என்னை இந்த பிரச்சினையில் இழுத்துவிட்டுவிடாதீர்கள். ஏற்கனவே, துணைவேந்தருக்கும், பதிவாளருக்கும் நிறைய பணம் செலவு பண்ணிட்டேன். உங்க பொண்ணுக்கு இந்த வருடம் கல்விக் கட்டணம் கட்ட ரூ.5 லட்சம் தருகிறேன்’ என்று சொன்னார். நான் உடனே ‘இப்ப அவசரமாக ரூ.1 லட்சம் கொடுங்கள்’ என்று கேட்டேன். அவரும் கையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை என்னிடம் கொடுத்தார். வேறு ஏதாவது பல்கலைக்கழகத்தில் எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் சொன்னார்.

அதன்பிறகு, நான் அங்கேயே நின்றபடி, பல்கலைக்கழக அதிகாரிக்கு போன் செய்து அவரை வரச்சொன்னேன். அவரும் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தார். நான் அவரது காரில் ஏறிக்கொண்டேன். அப்போது, முருகனை சந்தித்தது குறித்தும், அவர் எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாக கூறியதையும் அவரிடம் கூறினேன். பிறகு அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன்.

அங்கு இருந்தபடி, கருப்பசாமியை போனில் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் என்னுடைய எண்ணை ‘பிளாக்’ செய்துவிட்டார். ஏப்ரல் 14-ந் தேதி அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன், பதில் இல்லை. பின்னர், முருகனுக்கு போன் செய்து நிலைமை மோசமாவதை கூறி உதவி செய்யுமாறு கேட்டேன். பிறகு 15 மற்றும் 16-ந் தேதிகளில் முருகனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். ஆனால் பதில் இல்லை. ஏப்ரல் 12-ந் தேதி முருகனின் நண்பர் ராஜபாண்டியனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எஸ்.எம்.எஸ். அனுப்பி, முருகனிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் பெற்றுத்தருமாறு கூறினேன். அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. 14 மற்றும் 15-ந் தேதிகளில் மாணவிகள் 4 பேருக்கும் தொடர்ச்சியாக எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை.

ஏப்ரல் 16-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு எனது தாயார் வசிக்கும் தெருவை சேர்ந்த ஒருவரின் மைத்துனர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மற்றொருவருடன் என்னை வந்து சந்தித்து, 2 சமூக ஆர்வலர்கள் என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார்கள். நானும் சரி என்று அவர்களை சந்திக்க வரச்சொன்னேன். ஆறுமுகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும், அவருடன் மற்றொருவரும் என்னை வந்து சந்தித்து, கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடைபெறுவதாகவும் என்னை கைது செய்ய எந்த நேரத்திலும் போலீஸ் வரலாம் என்றும் கூறினார்கள். மேலும், நான் விருப்பப்பட்டால் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக கூறியதன்பேரில், நான் அதற்கு சரி என்று கூறியதால், அவர்கள் 5 நிமிடத்தில் வருவதாக கூறிச் சென்றார்கள்.

அவர்கள் வெளியே சென்றவுடன் ராஜாவிடம் இருந்து எனக்கு போன் வந்தது. போலீஸ் என் வீட்டிற்கு வருவதாக தகவல் சொன்னார். நான் உடனே வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு, உள்ளே இருந்தபடி ராஜா மற்றும் ஆறுமுகத்துக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என்னை கைது செய்து அழைத்து சென்றார்.

நான் சிறையில் இருந்தபோது என்னை யாரும் பார்க்க வரவில்லை. எனக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகிய யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. நான் அவர்களிடம் நேரிலோ, போனிலோ பேசியது இல்லை. அறிவியல் கண்காட்சியை திறந்துவைக்க வந்தபோதுதான் கவர்னரை நான் நேரில் பார்த்தேன். அதற்கு முன்பாக அவரை தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கிறேன். மேலும், நான் இந்த மாணவிகளை தவிர இதற்கு முன் வேறு எந்த கல்லூரி மாணவியையும் இத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு அழைத்தது இல்லை.

இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நிர்மலா தேவி கூறியுள்ளார்.

திங்கள், 15 அக்டோபர், 2018

எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?


எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்தவைகள் பற்றி ஜூனியர்விகடனில் அண்ணன் செளபா எழுதிய நேர்முக வர்ணனை இது :

முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.

தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.

ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.

சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.

சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வையிடக் கிளம்பியது.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.

முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.

திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.

வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!

கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!

ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.

இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.

முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...

டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.

சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.

தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!

ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.

பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.

டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.

உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்!..
பகிர்வுக்கு நன்றி  Sendras Sendra தம்பி.

புதன், 3 அக்டோபர், 2018

ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்? தகவல் தொகுப்புகள்.


ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்? தகவல் தொகுப்புகள்.

1. உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்களை  கொண்டு மெக்கா விற்கு அடுத்த படியாக அதிகம் பயணப்படுகிற இடம் சபரிமலை .
2. சைவம் மற்றும் வைணவ பிரிவுகளின் ஒற்றுமை உருவமாக பார்க்கப்படுகிற  புண்ணிய  கோவில் சபரிமலை
3. மதுரையில் இருந்து தன் சொந்த அமைச்சர்களால் உயிருக்கு ஆபத்து என கருதி சென்ற  ராஜசேகர பாண்டியன் திருவிதாங்கூர் மன்னனால் உதவப்பட்டு பந்தள தேசத்து மன்னனாக ஆட்சி செய்தான். அவனின் வளர்ப்பு மகனே ஐயப்பன் (1194AD)
4. ராஜசேகர பாண்டியன்  பம்பை நதிக்கரையில்  வேட்டையாட சென்றபோது கண்டெடுத்த கடவுள் அவதாரமே குழந்தை மணிகண்டன் (ஐயப்பன்).
5. 12 வயது வரை மணிகண்டன்  மனித உருவமாக வளர்ந்து  தன அவதார நோக்கம் முடிந்த உடன் தியானம் செய்ய சென்ற இடமே இன்றைய சபரிமலை .
6. பந்தள வம்சத்தை சார்ந்த நபர்கள் இன்றும் சபரிமலை செல்வதில்லை. தன் தந்தை ராஜசேகர பாண்டியன் சபரிமலை வந்தால் ஐயப்பன் எங்கு எந்தித்துவிடுவாரோ  என்று அவர் கால்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. அதனால் தான் அந்த ஐதீகம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
7. பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் தன் வளர்ப்பு குழந்தை ஐயப்பனுக்காக செய்ததே திருவாபரண பெட்டி.. இதில் தங்கத்தில் சிறிய வடிவில் புலி,யானை, வாள், மாலை போன்றவை உள்ளன.. ஓலை சுவடிகளை இன்றும் காணலாம்.
8. ராஜசேகர பாண்டியன் தன் மனைவி தலைவலி என்று சொல்லி புலியின் பாலை அடர்ந்த காட்டிற்குள் ஐயப்பனை கொண்டு  வர சொன்னபோது இரண்டு முடிச்சுக்களில் பாதுகாப்பிற்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பியதே இன்று இருமுடியாக ஐயப்ப பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.
9. இந்தியாவில் கோவில் வளாகத்தில் (சன்னிதானத்தில்) அரேபிய முஸ்லிம் வாவர் சுவாமியாக காட்சி அளிப்பது சபரிமலையில் மட்டுமே.. வாவர் ஐயப்பனின் நெருங்கிய நண்பர்.. இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம் அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது.மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டு.
10. ஹரிவராஸனம் விச்வமோஹனம் என்ற புகழ்பெற்ற  கே ஜே யேசுதாஸ் பாடிய பாடலே நடை அடைப்பில் ஐயப்பன் உறங்குவதற்காக இசைக்கப்படுகிறது. இந்த பாடலை எழுதியவர் கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர்.இவர் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி
11. Memoir of the survey of Travancore and Cochin states என்ற ஆங்கிலேயர் 1894 ல் எழுதிய புத்தகத்தில் சபரிமலைக்கு செல்வோர் அப்போதே ஆண்டு தோறும் 15000 என்று குறிப்பிட்டு இருக்கிறார். அப்போதைய மக்கள்தொகை தென் இந்தியாவில் 5 கோடிக்கும் கீழ்.
12. பரசுராமரால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட  ஐயப்பன் சிலை 1950 ல் தீவிபத்தில் சேதம் அடைந்தது. இன்று அந்த சிலை உருக்கபட்டு கோவில் மணியாக கொடி மரம் அருகே காட்சி அளிக்கிறது.
13. தீவிபத்தை  தொடர்ந்து சிலையை யார் செய்ய வேண்டும் என்ற தேவபிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது. அதில் மதுரை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் பி.டி.ராஜனும் பெயர்கள் வந்தன. அவர்கள் வழங்கிய விக்கிரகத்தைத்தான் இன்றைக்கும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம். அந்த சிலை கும்பகோணத்தில் அடுத்த சுவாமிமலையில் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியால் செய்யப்பட்டது.
14. கேரளாவில் கோயில்களில் பராமரிப்பு பணிகளோ, முக்கிய மாற்றங்களோ நடத்த வேண்டும் என்றால் கடவுளிடம் அனுமதி கேட்பதற்காக ‘தேவபிரசன்னம்’ என்ற பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படியே இன்றும் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமெனில் தேவபிரசன்னம் செய்யப்பட்டு கடவுளின் அனுமதி பெற வேண்டும் என்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு.
15. Kamakhya Temple (Guwahati, Assam), Lord Kartikeya Temple (Pehowa, Haryana and in Pushkar, Rajasthan) Haji Ali Dargah (Mumbai, Maharashtra) Mangal Chandi Temple, (Bokaro, Jharkhand) Sree Padmanabhaswamy Temple (Malayinkeezhu, Kerala) Patbausi Satra (Barpeta, Assam) Jain Temple (Ranakpur, Rajasthan) போன்ற கோவில்களை போல சபரிமலையும் பெண்களை அனுமதிப்பதில்லை .
16. ஐயப்பனை  சாஸ்தாவாக வழிபடும் முறை தமிழகத்தில் இருப்பதே. முக்கியமாக தென் மாவட்டங்களில் அய்யனார்  வழிபாடு மிக பிரபலம். அதில் ஆதி சாஸ்தாவாக காட்சி அளிக்கும் இடமே சொரிமுத்து அய்யனார் கோவில் பாபநாசம்,
17. விரத முறையில் உணவை உண்டு அன்னதானம் செய்ய வேண்டும் என்பது சபரிமலை யாத்திரையில் மட்டுமே.  மற்ற முறைகளில் விரதம் என்றால் உணவை உட்கொள்ளாமல் இருப்பது.
18. ஏழை,பணக்காரர்,சாதி, உயர் அதிகாரி,பாமரன் என  பாகுபாடு அன்றி அனைவரையும் சாமியாக பார்ப்பதே சபரிமலையின் தனிச்சிறப்பு.
19. 41 நாட்கள் விரதம் இருக்கும் முறை  சபரிமலை யாத்திரையில் மட்டுமே காணப்பட கூடிய ஒன்று. வேறு எந்த கோவிலிலும் காண முடியாத கடுமையான விரத முறை.
20.  அடர்ந்த காட்டிற்குள் வன விலங்குகள் தாக்கும் அபாயத்திற்கு மத்தியில் நடைபயனமாக 60 கிலோ மீட்டர் செல்வது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மட்டுமே
21. கேரள கட்டுமான முறையையும் தமிழ்நாட்டின் சாஸ்தா வழிபாட்டையும் இணைத்து இரு மாநிலத்தின் ஒற்றுமை சின்னமாக இருப்பது சபரிமலை
22. மணிகண்டன் கல்வியை குருவிடம் தான் பயில வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜசேகர பாண்டியனின் ஆசையே இன்று குரு தத்துவமாக குருசாமியாக ஐயப்ப யாத்திரையில் இருக்கிற வழக்கம்.. தன்னை காண வேணுமெனில் குரு மூலமாகத் தான் வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஐயப்பன்
23. மற்ற கோவில்களை போல் தினமும் அல்லாமல் ஆண்டில் வெறும் 120 நாட்களுக்கும் குறைவாக நடை திறந்து இருக்கும் கோவில் சபரிமலையே
24. சபரிமலை யாத்திரையை தமிழக மக்களிடையே மிகவும் பிரபல படுத்தியவர்  நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளை ... பாடல்கள் மூலம் பிரபலபடுத்தியவர்கள் வீரமணி சோமு மற்றும் அவர் தம்பி கே வீரமணி.
25. இன்று போல் அடர்ந்த காட்டில் சாலை,ஹோட்டல்கள் இல்லாத காலத்தில் தமிழக பக்தர்களுக்காக  உணவும் பேருந்து வசதியையும் ஏற்படுத்தி குருவாக  இருந்தவர் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட புனலூர் தாத்தா சுப்ரமணிய அய்யர்.
26. ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருக்கும் வாவர் மசூதிக்கு சென்று வாவரை வணங்குவது வழக்கம். அதன் பிறகே பெருவழியில் நுழைகின்றனர். எந்த இந்து கோவிலிலும் இல்லாத இந்த முறை சபரிமலையை தனித்துவமாக காட்டுகிறது.
27. சபரிமலைக்கு மற்ற கோவில்களை போல் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்கிற வழக்கம் இல்லை. ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் பக்தியாலும் அதன் சக்தி குறையாமல் ஒவ்வொரு வருடமும் அதன் சைதன்யம் கூடிக்கொண்டே  செல்வதாக நம்பப்படுகிறது.
28. பரசுராமர் உருவாக்கிய சிறிய ஆலயத்தை மாற்றி அமைத்து பதினெட்டுபடிகளோடு உருவாக்கியவர் பந்தள அரசர் ராஜசேகர பாண்டியன்.
29. சபரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம். அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.
30. சபரிமலையில் மாளிகைபுறத்து அம்மன் சன்னதி என்பது ஐயப்பன் வதம் செய்த பெண் மகிஷியின் தூய்மை வடிவமே. வதம் செய்த பிறகு ஐயப்பன் தன்னை மணந்து கொள்ள விருப்பம் சொன்ன போது “என் அருகிலேயே நீ இருக்கலாம் என்றும் எப்போது என்னை ஒரு கன்னிசாமியாவது வராமல் இருக்கிறாரோ அன்று உன்னை மணந்து கொள்கிறேன்” என்று கூறியவன் பிர்மச்சர்யம் கொண்ட ஐயப்பன்.. அந்த மாளிகைபுரத்து அம்மன் இன்றும் காத்துக் கொண்டு இருக்கிறாள்.. ஆண்டு தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.


செவ்வாய், 2 அக்டோபர், 2018

மகாத்மா காந்தியின் மறுபக்கம் வெளிவராத பல விசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்திய இந்தியாடுடே இதழ்.


#காந்தி_ஜெயந்தி_சிறப்பு_பதிவு

மகாத்மா காந்தியின் மறுபக்கம் வெளிவராத பல விசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்திய இந்தியாடுடே இதழ்.

உண்மையான ஆத்மா
பவித்ரமான பரமாத்துமா
#மகாத்மா_காந்தியா..நித்யானந்தாவா...
நாறியது காந்தி புகழ்..

மகாத்மா காந்தி பற்றி இந்த வாரம் வெளிவந்த இந்தியாடுடே பல விசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது.இந்தியாடுடேயில் மனுப்பெண் என்ற பெண் உதவியாளர் டைரியில் குறிப்பிட்டிருந்தவற்றை கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள்.காந்தி தனக்கு பணிவிடை செய்ய நிறைய இளம்பெண்களை ஆசிரமத்தில் தங்க வைத்திருந்தார் அவர்களை ஷிப்ட் முறையில் இரண்டு இரண்டு பேராக தனது வலது இடது பக்கத்தில் ஒரே படுக்கையறையில் படுக்க வைத்துக்கொள்வார்.அணைப்பார் சில்மிசம் செய்வார். நிர்வாணமாகதான் தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்வார்.அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்கின்றனரா என டெஸ்ட் செய்வாராம் இதற்கு பெயர் பிரம்மச்சர்ய பரிசோதன என பெயரும் வைத்திருக்கிறார்.தன்னை தினசரி ஒரு பெண் குளிப்பாட்ட வேண்டும் என சொல்லி இருக்கிறார்.குளிப்பட்டும் அந்த பெண் உடையில்லாமல் இருக்க வேண்டும்.அப்படி குளிப்பாட்டிய சுசீலா நாயர் காந்தி இறந்தபின் சுதந்திர இந்தியாவில் இரு முறை சுகாதார மந்திரியாக இருந்தார்.பிரம்மச்சர்ய டெஸ்டை பென்களிடம் காட்டிய காந்தி ஆண்களிடம் காட்டவில்லை.இவருக்கு இந்த பரிசோதனை செய்யதான் நேரம் இருந்தது இதனால்தான் சுதந்திரத்தை வாங்கி தருவதிலும் நேரம் கடத்தினார்.பேச்சுவார்த்தை நடத்தி இருந்தா எப்போதோ சுதந்திரம் கிடைச்சிருக்கும்.காந்தியின் பாலுணர்வு பரிசோதனையை கண்டித்து மொரார்ஜி தேசாயும்,வல்லபாய் பட்டேலும் உடனே இதை நிறுத்தும்படி காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.இது இன்னும் ஆவண கப்பகத்தில் இருக்கிறது சரி இந்த தகவல்கள் எப்படி வெளிவந்தது..? காந்தி இரு பெண்களை தாங்கி நிற்கும் புகைப்படம் அடிக்கடி பார்த்திருப்போம்.அந்த பெண்களில் ஒருவர்தான் மனுப்பெண் அவரது டைரி இப்போது இந்தியா டுடேவுக்கு கிடைத்திருக்கிறது மொத்தம் 14 டைரி எல்லாமே பாபுவின் லீலைகள் தான்.

பாபு..? அதான் நம்ம மகாத்மா..!  நன்றி முகநூல்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

டாக்டர்அம்பேத்கர் நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில்


#டாக்டர்அம்பேத்கர்
நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?
ஏனெனில்

1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது
2) அதுதான் என்னை சூத்திரன் என்றது
3) அதுதான் என்னை வேசிமகன் என்றது
4) அதுதான் என் தாயை வேசி என்றது
5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது
6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது
7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது
8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது
9) அதுதான் என் நிழல் பட்டால் தோஷம் என்றது
10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது
13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது
15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
22) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
27) அதுதான் என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது
28) அதுதான் என் பாட்டன் அணிந்த முடிக்கும் வரி போட்டது
29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது
30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது
33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
34) அதுதான்; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப் போக்கியது
35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
36) அதுதான் என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது
40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
43) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
44) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது
45) அதுதான் என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
46) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
47) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
48) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது
49) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
50) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
51) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
52) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது
53) அதுதான்  விவசாயம் பாவத் தொழில் என்றது

இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.

வியாழன், 27 செப்டம்பர், 2018

பரியேறும் பெருமாள்


பரியேறும் பெருமாள் -  வெளியாகிறது. சில மாதங்களுக்கு முன்பே படத்தைப் பார்க்க வாய்த்துவிட்டாலும் அதிகாரபூர்வ வெளியீட்டுக்காகக் காத்திருந்தேன். எழுதத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

இன்று மீண்டும் காண்கையில் மனம் அதிர்ந்து அதிர்ந்து அடங்கியது. என் நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது...தயவுசெய்து திரையரங்கு சென்று பரியனைப் பாருங்கள். உணர்வுபூர்வமாக உங்களை வென்றெடுப்பான் அவன். நீங்கள் எச்சாதியாய் இருந்தாலும், சாதியற்றவராய் இருந்தாலும், எம்மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும்!

 படம் நெடுகிலும் மனம் பரியனுக்காய் உருகுகிறது, நெகிழ்கிறது, கண்ணீர் விடுகிறது, ஆவேசப்படுகிறது. பொதுச்சமூகத்தை அவன் உரையாட அழைக்கிறான். அந்த அழைப்பைத் தவறவிடாதீர்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகச் சிறந்த படம் இதுவே என்பேன்.

செல்வத்தின் (Mari Selvaraj) அரசியல் மீதும் கலையின் மீதும் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு.

கலை உனக்கு அப்படி கைகூடியுள்ளது செல்வம். சட்டென்று உயரமாகிவிட்டாய் ஒரே படத்தின்மூலம்!! ஒரு சகோதரியாய் எனக்கு அதில் மிகுந்த பெருமை.  இந்த நேரத்தில் பேரன்பு பெருக்கெடுக்கிறது.

இப்படத்தை எழுதி உருவாக்கித் தந்த உனக்கும் தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.

பரியன் பெருவெற்றி பெறட்டும். தென் தமிழ்நாட்டின் குரலாக இதுவரை ஒலித்த குரல்களுக்கிடையே, இதுவரை ஒலிக்காத, மிக வலுவான, இன்னொரு தரப்பின் குரல் பரியேறும் பெருமாளுடையது.

ஏற்கனவே victimized ஆக உணரும் தருணமொன்றில்  பார்க்க நேர்ந்துவிட்ட 'பரியேறும் பெருமாள்' அதிர்வலைகளை உண்டாக்கி வலியைக் கிளறிவிடவே செய்கிறான்.

பரியன் என்னவன். என் சகோதரன். என் நண்பன், என் காதலன். அவன் எல்லாமுமாய் நிற்கிறான். அவன் வெற்றி பெறுவதுதானே முறை?

பரியனும் செல்வமும் எங்கள் பொக்கிஷம்!! இச்சமூகத்தின் சொத்து.
-கவின் மலர்

#பரியேறும்_பெருமாள்_from_sep28
#பா_இரஞ்சித்
#நீலம்_productions
Mari Selvaraj

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

அண்ணல் அம்பேத்கரின் இறுதி நாட்கள்


அண்ணல் அம்பேத்கரின் இறுதி நாட்கள்!

பத்து ஆண்டுகளாகவே பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உடல் நல்ல நிலையில் இல்லை. சிறிது காலம் குடல் அழற்சியினாலும், இரத்தக் கொதிப்பினாலும் வேதனைப் பட்டார். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் உடல் நிலையை மிகவும் பாதிக்கும் வகையில் நீரிழிவு நோயும் உருவாகியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவரின் நீண்ட நாள் போராட்டங்களும் படிப்பும், எழுத்தும் அவரின் உடல் நிலையை வெகுவாகப் பாதித்தன.
டாக்டர் அம்பேத்கர் நடத்திய இயக்கத்தை அவருக்குப் பிறகு வழிநடத்திச் செல்லுவார்கள் என்று அவர் நம்பியிருந்த துணை நிலைத் தலைவர்களின் நம்பிக்கையற்ற செயல்களினாலும், அவர்களுக்குள் தலைமைப் பதவிக்கு நடந்த போட்டிகளாலும், அவரது போராட்டங்களினால் கிடைத்த அரசு உயர் பதவிகளில் அமர்ந்தவர்களின் வெட்கக்கேடான நடத்தைகளினாலும் அவர் மனம் உடைந்து போனார். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, அவரது அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களின் நடத்தைகளினால் அவருடைய உடல்நலக் குறைவு இன்னும் தீவிர மடைந்தது.
அவருடைய மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகள், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. சனவரி 1955 முதல் அவர் உடல்நிலை மேலும் கவலையை உருவாக்கியது. அவர் எடை குறைந்து தளர்ச்சியுற்று, சுருங்கிக் காணப்பட்டார். அவரது கோடை மற்றும் பனிக்கால உடைகள், இப்போது அவருக்குப் பெரிதாக இருந்ததால் சுருக்கித் தைக்கப்பட்டன. அவரது கம்பீரமான உடம்பை அவரது மெல்லிய கால்கள் தாங்க முடியாமல் போனதால் உடம்பின் எடை குறைந்தது.
அவரது மிகப் பெரிய நூலகத்தில் நடமாடும் போதும், தோட்டத்தில் உலவும் போதும், காரில் ஏறி அமரவும் - இறங்கவும், நாடாளுமன்றத்திற்குச் செல்லவும், வேறு எங்கேயும் செல்வதற்கும், குளிப்பதற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும், எழுவதற்கும், உடையணிந்து கொள்வதற்கும் அவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டது. சில சமயங்களில் சாப்பிட மனமில்லாமல் அவர் படுக்கையில் படுத்திருப்பார். அப்போது அவருக்கு நான் உதவ வேண்டியிருந்தது.
டாக்டர் அம்பேத்கரின் மகிழ்ச்சியற்ற வாழ்நிலை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் அழுவது, எனக்கு மிகப் பெரும் வேதனையாக இருந்தது. அவரது அழுகைக்கானக் காரணத்தை அறிய நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எதிர் கொள்ள முடியாத எரிமலையின் சீற்றம் போன்ற அவரது கோபத்திற்குப் பயந்து நான் அதுபற்றி கேட்கத் தயங்கினேன்.
சூலை 30 ஆம் நாள், என் அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே அம்பேத்கர் மாளிகைக்குச் சென்றேன். அன்றையச் செய்தித்தாள்களையும், நான் கொண்டு வந்திருந்த மாலை நேரச் செய்தித்தாளையும் படித்து எனக்குச் சில குறிப்புகளை அம்பேத்கர் கொடுத்தார். பிறகு கையால் எழுதப்பட்ட, சில புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டிருந்த 50 பக்கங்களைக் கொடுத்துக் கொண்டே “இந்த ஆவணங்கள், புத்தரும் காரல் மார்க்சும், பழைய இந்தியாவின் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் மற்றும் இந்து மதத்தின் புதிர்கள் ஆகிய நூல்களுக்காகத் தயாரிக்கப்பட்டவை. என் வாழ்நாளில் இந்தப் புத்தகங்களை என்னால் வெளியிட முடியாது என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். அப்போது அவர் கண்களில் நீர் திரண்டிருந்தது.
மேலும், அவர் என்னைப் பார்த்தபடியே, “நீ எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்காக நிறைய இழந்திருக்கிறாய். வேதனைகளையும் சந்தித்திருக்கிறாய். உனது நலத்தைப் பற்றிக் கூட அக்கறைப்படாமல் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலைத் தட்டச்சு செய்ததற்கு சிறிதும் பலன் எதிர்பாராமல் முடித்துக் கொடுத்ததையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து துடிப்புடனும், தியாகத்துடனும் செயல்பட வேண்டியிருக்கிற எனது சூழ்நிலையை நீ புரிந்து கொள்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.
அடுத்த நாள் செவ்வாய் சூலை 31, 1956. 26, அலிப்பூர் சாலைக்கு மாலை 5.50 மணிக்குச் சென்று வழக்கம் போல, அன்று வந்திருந்த அனைத்துக் கடிதங்களையும் எடுத்துக் கொண்டு அவரிடம் சென்றேன். என் அறைக்கு எதிரே உள்ள நடைவெளியில் நாற்காலியின் மேல் உள்ள சிறு மெத்தையில் காலை வைத்துக் கொண்டு அமர்ந்தவாறு குறிப்புகள் சொல்ல ஆரம்பித்தார்.
ஆனால், இடையிலேயே கண்களை மூடி, தலையை நாற்காலியில் சாய்ந்தவாறு கண்ணயர்ந்து விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்து அவரது களைத்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவர் எழுந்தார். கடிதங்களை நான் வாசிக்க, விரைவாக அடுத்தடுத்து பதில் குறிப்புகள் கொடுத்தார். அதன் பின்னர் என் தோள் மேல் கை போட்டுக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றார். மறுகையில் உள்ள புத்தகம் கீழே விழ படுக்கையில் படுத்துக் கொண்டார். சிறிது நேரம் அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. அதற்குள் நான் அவரது தலையையும் காலையும் பிடித்து விட்டேன். அது அவருக்கு ஓரளவு தெம்பைக் கொடுத்தது.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அவரிடம் கேட்பதற்கு நான் தயக்கப்பட்ட அந்தக் கேள்வியை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரது படுக்கைக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்த படியே அந்தக் கேள்வியைக் கேட்டேன். “அய்யா, கொஞ்ச நாட்களாக ஏன் நீங்கள் அதிக வருத்தத்துடன் இருக்கிறீர்கள். சில சமயங்களில் அழுகிறீர்களே ஏன்? இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பணிவுடன் அவர் பாதத்தைத் தொட்டு கொண்டே கேட்டேன்.
கொஞ்ச நேரத்திற்கு அவர் எவ்வித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து, எனது கேள்வியால் பாதிக்கப்பட்ட அவர், உணர்ச்சி வயப்பட்ட குரலில் கைகளை உயர்த்தி, அவரது நெற்றியில் வைத்துக் கொண்டு சொன்னார். “இந்தப் பையன் பிடிவாதக்காரனாய் இருக்கிறான், ரொம்பப் பிடிவாதக்காரனாய் இருக்கிறான்”
அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் முற்றிலும் அமைதி நிலவியது. நான் அவரது முகத்தை ஆராய்ந்தேன். கண்களை வெறித்தபடி அவர் கூறினார், “நீங்களோ அல்லது வேறு யாருமோ எனது வருத்தத்தைப் பற்றியும், எனது வேதனைகளைப் பற்றியும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கிருக்கும் முதல் கவலை, என் வாழ்க்கையில் நான் எடுத்துக் கொண்ட சேவையை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. என் மக்களை ஆளும் வர்க்கமாக, அரசியல் அதிகாரங்களை மற்ற வகுப்பினரோடு சமமான முறையில் பகிர்ந்து கொள்ளும் நிலையில் பார்க்க வேண்டும் என ஆசைப் பட்டேன்.
நான் இப்போது எனது உடல் நலமின்மையால், ஊனமாகிப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறேன். நான் எனது போராட்டங்களினால் சாதித்துக் காட்டியவற்றையெல்லாம் அனுபவித்து வரும் படித்தவர்கள், தங்களது இரக்கமற்றத் தன்மையாலும், வஞ்சகத்தாலும், தங்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று மெய்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு, ஒடுக்கப்பட்ட அவர்களது சகோதர்கள் மேல் எவ்வித இரக்கமும் இல்லை. நான் எண்ணியிருந்ததை விட அவர்கள் கேடு கெட்டவர்களாய் இருக்கிறார்கள்.
அவர்கள் முழுவதும் தங்களது தன்னலத்திற்காகவே வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட சமுகத் தொண்டில் அக்கறை காட்டவில்லை. அவர்களை அழித்துவிடும் பாதையில் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போது நான், கிராமங்களில் மாற்ற முடியா வறுமையில் தொடர்ந்து உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவற்ற என் மக்களுக்காகப் பாடுபட விரும்புகின்றேன். ஆனால், என் வாழ்நாள் குறுகியதாய் இருக்கிறது.
என் வாழ்நாளில், தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து யாரேனும் ஒருவர் முன்னேறி வந்து அம்மக்களுக்காக நடத்தப்படும் இயக்கத்தில், பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இப்போது வரை அச்சூழ்நிலைக்கு யாரும் வரவில்லை. இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் நம்பிக்கைக்குரியவராகவும், உண்மையானவராகவும் யாரையெல்லாம் நினைத்தேனோ, அவர்களெல்லாம் பதவிக்காகவும், தலைமைக்காகவும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவர்களின் மேல் விழுந்த அந்த மிகப் பெரும் பொறுப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், அப்படி நடந்து கொள்கிறார்கள்” என்றார். இப்படி அவர் பேசுகிற போதெல்லாம் அவரது கண்கள் கோபத்தில் கனன்று கொண்டிருந்தன.
மேலும் அவர் “என் வாழ்நாளுக்குள் எனது எல்லா புத்தகங்களையும் வெளியிட்டு விட வேண்டும் என எண்ணுகிறேன். வரலாற்று முக்கியத்துவமிக்க எனது “புத்தரும் கார்ல் மார்க்சும்”, பழைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்” மற்றும் “இந்து மதத்தின் புதிர்கள்” போன்ற புத்தகங்களை வெளியிட எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை. எனக்குப் பிறகு இவற்றை யாரும் வெளியிடப் போவதுமில்லை என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று மிகவும் உணர்ச்சி பொங்கக் கூறினார். நான் இடையில் பேச முற்பட்ட போதும் அவரே தொடர்ந்து பேசினார்.
அவரது கண்கள் வெறித்த படியிருந்தது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் என்னைத் திரும்பிப் பார்த்த போது, நானும் அழுது கொண்டு அவரைப் பார்த்தேன். இதற்கு முன்னால் பலமுறை அவர் கவலையோடு அழுது கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் பார்த்தவை, என் கற்பனைகளையும், கடந்த கால அனுபவங்களையும் தாண்டியதாக இருந்தது.
நான் எழுந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, களங்கமற்ற முகத்தில் வேதனைகளை வெளிப்படுத்தியபடி, கம்மிய குரலில், “தைரியமாக இரு. மனம் தளர்ந்து விடாதே. ஒரு நாளில்லை ஒருநாள், வாழ்க்கை ஒரு முடிவுக்கு வரும்” என்றார். நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏன் அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெறுமையோடு அவரை உற்றுப் பார்த்தேன்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னார், “என் மக்களுக்குச் சொல் நானக்சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவைகளெல்லாம், தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும், முடிவற்ற சிரமங்களையும் கடந்து எல்லா பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இந்துப் பத்திரிக்கைகளிடமிருந்து வந்த அவதூறுகளுக்கு எதிராகவும், என் எதிரிகளுக்கு எதிராகவும் என் வாழ்நாளெல்லாம் போராடிப் பெற்றவையே. என்னோடு சேர்ந்து போராடிய சிலரும் இப்போது தங்களது தன்னலத் தேட்டங்களுக்காக என்னை ஏமாற்றத் துணிந்து விட்டனர்.
ஆனால் என் வாழ்நாளின் இறுதி வரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன். என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும். மாண்புடனும், மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். என் மக்களும், என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால், அது இப்போது எங்கே நிற்கிறதோ அங்கேயே அதனை விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியைப் பின்னோக்கித் தள்ளிவிட வேண்டாம். இதுவே என் செய்தி.
உண்மையில் எல்லா வகைகளிலும் தீவிரம் மிகுந்த எனது இந்தக் கடைசிச் செய்தி நிச்சயமாக கவனிக்கப்படாமல் போகாது. போய் என் மக்களுக்குச் சொல்; போய்ச் சொல்; போய்ச் சொல்”. என்று மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறினார். இவ்வாறு சொல்லிக் கொண்டே, கண்ணீர் திரண்டு முகத்தில் வழிய தேம்பித் தேம்பி அழுதார். பெரிதும் நம்பிக்கை இழந்து காணப்பட்டார். அவரது தாங்க முடியாத அந்தத் துயரத்தை, கசப்பு மிகுந்த நோயின் தீவிரத்தை வெளிக்காட்டிய அவரது முகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அழுகையுடனும் பெரு மூச்சுடனும், தனது ஒடுக்கப்பட்ட சகோதரர்களுக்காக அவர் கூறிய, நெஞ்சை உலுக்கக் கூடிய அவரது கடைசிச் செய்தியைக் கேட்டுத் திகைத்து நின்றேன். அதற்குப் பிறகுதான் அதுவே டாக்டர் அம்பேத்கரின் கடைசிச் செய்தி என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
- நானக்சந்த் ரட்டு
- தமிழில்: அகன் கிளாடிஸ்
(நன்றி: தலித் முரசு)

சனி, 18 ஆகஸ்ட், 2018

அறிவுப்பெட்டகத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


2005 ம் ஆண்டு, பழங்குடி இருளர் சமூகத்தவர் ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள், அத்தீர்மானத்தின் முக்கியமான அறிவிப்பு "தேர்தல் புறக்கணிப்பு". 2006 ம் ஆண்டு நடக்கவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அந்த தீர்மானத்தின் நகல்கள் துண்டறிக்கைகளாய் விநியோகிக்கப்பட்டது. தேர்தலை புறக்கணிக்கும் அந்த தீர்மானத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு அம்சம் இருந்தது.

அது, "தேர்தல் புறக்கணிப்பு, ஆனால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு விதிவிலக்கு"

ஆம், விடுதலை சிறுத்தைகளை தவிர வேறெந்த கட்சிக்கும் வாக்களிக்கப் போவதாகயில்லை என்று அந்த தீர்மானம் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சட்டங்களும் பாதுகாப்பும் தேர்தல் அரசியலின் மூலம் ஆட்சிக்கு வந்த கட்சிகளால் ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் பழங்குடி இருளர் சமூகத்தவரின் அந்த அறிவிப்பின் பின்னணியில் இருக்கும் நியாயத்தை அவர்களாகவே இருந்து உணர்ந்தாலொழிய, இந்த பொதுசமூகத்தால் அந்த வலியை உணரவே முடியாது. அந்த போராட்டங்கள் இன்று வரை தொடர்கிறது, நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இனச்சான்று இல்லாமல் கல்வியை தொடர முடியாத ஒரு தலைமுறைக் கனவு குழியில் தோண்டி புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

2005 ம் ஆண்டுக்கு முன்பிருந்து, ஜீன் 2018 தலைவர் தொல். திருமாவளவன் அவர்களது தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரை, பழங்குடி சமூகத்துவருக்கான பாதுகாப்பு அரணாகவும், களத்தில் நிற்கும் வீரர்களாகவும் ஒரு நெடிய வரலாறு திருமா அவர்களின் வழிகாட்டுதலின் படி விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தாருக்கு உண்டு. அதன் காரணமாகவே, அந்த பற்றுதலின் வெளிப்பாடாகவே நாம் விடுதலை சிறுத்தைகளை தவிர்த்து வேறு யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்கிற பழங்குடி மக்களின் அறக் கோவத்தை அணுக வேண்டும்.

அரசியல் அதிகாரத்திலிருந்து சிந்திய கிளை அதிகாரத்தை கூட இன்னும் நுகர்ந்தும் பார்த்திடாத ஒரு இயக்கத்தை, அதன் தலைவரை நோக்கி "நீ தலித் மக்களுக்கு என்ன செய்தாய்?" என்கிற கேள்வியே அபத்தம். ஆனாலும் அந்த கேள்விகளுக்கு பதிலில்லாமல் இல்லை.

எந்தவொரு சமூகத்தையும் அரசியல் ரீதியாக தயார் செய்வதற்கு முன், அவர்களை பண்பாட்டு ரீதியாக தயார் செய்வது முதற்கடமையாகிறது. அதிலும் பிளவு பட்டுக்கிடக்கும் இந்திய தலித் சமூகத்தை ஒருங்கிணைப்பது பிரசவ வலியை விட நூறு மடங்கு வலியும் வேதனையும் கொடுக்கக்கூடிய அயற்சியான முயற்சி என்றால் அது சத்தியமாக மிகையல்ல. தமிழக தலித் சமூகத்திற்கென ஒரு போராட்ட வரலாறு உண்டு. அயோத்திதாசப் பண்டிதர், தாத்தா ரெட்டமாலை ஸ்ரீனிவாசன், LC குருசாமி, எம்.சி.ராஜா என்று இந்த பட்டியல் தொடர்கிறது. பண்பாட்டு தளத்திலும் அறிவு / அரசியல் தளத்திலும் தலித்துகளின் பங்களிப்போடு கூடிய போராட்டம் காலம் காலமாக நடந்துக் கொண்டு தானிருக்கிறது என்றாலும், அடக்குமுறைக்கு எதிராக "அடங்கு மறு, அத்து மீறு, திமிறி ஏழு" என்று வீறுகொண்டு எழுந்த குரலொன்று தமிழகத்தையே தன் பக்கம் திருப்பியது. எந்தவித அரசியல் அதிகாரமும் இன்றி, ஊடகத்துணையும் இன்றி, தனக்கான இடத்தை தானே நிறுவியது, தவிர்க்கப்பட முடியாத தலைவனாய் வளர்ந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான எந்த அநீதி அரங்கேறினாலும் தன் முதல் தடத்தை பதித்து "உங்களுக்கு நான் இருக்கிறேன், நீங்கள் அநாதையல்ல" என்றது அந்தக் குரல். கொடி பிடிக்கவும், ஆள் சேர்க்கவும் சிதறிக்கிடந்த தலித் சமூகத்தை இந்த நூற்றாண்டில் ஒருங்கிணைக்க துணிந்து, அதில் கணிசமான வெற்றியும் கண்டுள்ள இந்தச் சாதனையை தவிர வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள் திருமாவிடம்? இதை வேறு யார் இங்கே சாத்தியப்படுத்திக்காட்டினார்கள்?

இதன் காரணமாகவோ என்னவோ, திருமா அவர்கள் தலித் தலைவராக அறியப்பட்டார். தலித் தலைவராக அறியப்படுவதில் சிக்கலேதும் இல்லை, ஆனால் தலித்தாய் பிறந்ததனாலவே அவர் தலித்துகளுக்கான தலைவராக மட்டுமே அறியப்படுவது இந்த சாதியச் சமூகத்தின் தோல்வி. அவர் தலித் தலைவராக அறியப்பட்டார், காரணம்; தலித்துகளுக்கு ஒன்றென்றால் வேறெந்த தலைவனையும் விட அவர் முன் வந்து களத்தில் நிற்கிறார், வேறெந்த தலைவனையும் விட அவர் தலித் பிரச்சனைகளை அதிகம் பேசுகிறார், வேறெந்த தலைவனையும் விட தலித் விடுதலை குறித்து அதிகம் சிந்திக்கிறார், அதனாலவே அவர் தலித் தலைவராக அறியப்படுகிறார், இதற்காக அவர் தலித் தலைவராக அறியப்படுவாரெனில் "ஆம் அவர் தலித்துகளின் தலைவர்"

ஈழத்தில் தொடங்கி, அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு செய்யும் கொடுமைகளுக்கு எதிராக கண்டனக்குரல்களை பதிவு செய்வதில் நீண்டு, எல்லா மக்களுக்குமான பிரச்சனைகள் என்று உருவகப்படுத்தப்பட்ட அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் என்று, திருமாவின் பங்களிப்பை வேறு எந்த இயக்கத்தோடும் ஒப்பிட்டு கூட குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஊடகங்கள் கண்டும் காணாமல் விட்ட எட்டுவழிச் சாலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமே சமீபத்திய அத்தாட்சி.

நாடு முழுக்க இந்துத்துவ பாசிச அரசாங்கங்களின் கோரப்பிடியில் சிக்கி சிதிலமாக, 2017 ல் மாநில சுயாட்சி மாநாட்டின் மூலம், வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான அனைத்து தோழமை சக்திகளையும் ஒருங்கிணைத்து, 2019 ம் தேர்தலில் இந்த வகுப்புவாத சக்திகளை விரட்டியடிப்பதற்கு நாம் ஒருங்கிணைவது அவசியம் என்று இந்தியாவிலேயே முதல் அறைகூவல் விடுத்தது தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் தான்.

திருநங்கைகளும், பெண்களும், சிறுபான்மை மதத்தவரென இம்மண்ணில் ஒடுக்கப்படும் அனைவருமே தலித்துகள் தான் என்று, ஆதிக்கத்துக்கு எதிராய் ஒருங்கிணைக்கும் தலைவன் தலித் தலைவனா அல்லது முற்போக்குச் சமூகத்தை அடையத்துடிக்கும் மானுட விடுதலைக்கான தலைவனா? மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் என இந்தசித்தாந்த கோட்பாட்டின்படி தேசியம் அமைக்காமல் போனால், அது சமத்துவத்துக்கு எதிரான தேசமாகத்தான் இருக்குமென தமிழ் தேசியம் பேசும் தொல். திருமாவளவன், தமிழ் தேசியத்தின் தலைவராக அறியப்படாமல் போவதற்கு தகுதியற்ற நிலையிலிருப்பது இந்த தமிழகமா? தலைவர் திருமாவளவனா?

தலித்துகளை இந்துத்துவ அரசியலை நோக்கி நகர்த்தும் வேட்டையில் வடஇந்திய இந்துத்துவ சக்திகளால் குறிவைக்கப்பட்டவரில் முதன்மையானவரும், முக்கியமானவரும் திருமா தான். அவர் பிடிகொடுக்காமல் விரட்டியதனாலவே அவ்விடத்தை யாரை கொண்டு நிரப்பினார்கள் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ள தேவையில்லை. ஒரு வேளை அவர் அதற்கு இசைந்திருந்தால்,  தலைமுறை தாண்டி பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்ளுமளவு பின்புலமும், அதிகாரத்தில் பகிர்வும் கிடைத்திருக்கும்.

மாறாக இந்துத்துவ பார்ப்பன சக்திகளுக்கு எதிரான அணித்திரட்டலை மேற்கொண்டார், அதனாலே தான் என்னவோ, பாபர் மசூதி இடிப்பு நாளான அன்று அவர் பேசியதை திரித்துக் கூறி, தலைக்கு விலை வைத்தது தமிழக பாசிசம்.

விசிக வின் வெளிச்சம் தொலைக்காட்சியை நடத்த மாதாந்திர செலவை கூட சமாளிக்க இயலாமல் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஒரு இயக்கமும் அதன் தலைவரும், இந்தியாவை ஆளும் நிகழ்கால வர்ண வர்க்கத்தோடு இணைந்தால்  இப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்பதையறிந்தும்,வேறந்த தலைமையை காட்டிலும் இந்துத்துவத்தின் முகத்தை தோலுரித்து வருவதிலிருந்து, அவரின் கொள்கைப் பிடிப்பிற்கு வேறெந்த சான்றை சமர்ப்பிப்பது?

"என்னால் முதல்வர் ஆக முடியாதென" தலைவர் திருமா சொல்லியிருப்பது fact அல்ல, நம் நாட்டின் fate . அதை சொல்வது அவர் பெருந்தன்மையல்ல, நம் சமூக அமைப்பின் யோக்கியதை.

பேரன்பு மிக்க தலைவர் தொல். திருமா அவர்களே, உங்களின் அந்த கூற்று பொய்ப்பிக்க வேண்டுமென்பது தான் என் போன்றோரின் ஆசை, ஒருவேளை நீங்கள் சொல்வது போலவே முடியாமல் போனால், தலைமுறைகள் தாண்டி அது சாத்தியப்படும் போது,  சாதியை மிதித்து அரசியலுக்கான தளம் அமைத்துக்கொடுத்த உங்கள் தோள்களில் இருந்து தான் அந்த வெற்றி சாத்தியப்பட போகிறது, அமைப்பாத் திரட்டிய நீங்கள் தான் அதற்கும் தாய் மண்ணாக இருக்கப்போகிறீர்கள், போராட்ட வரலாற்றில் மகத்தான போராளியாக உன்னை வரலாறு குறிப்பெடுத்துக் கொள்ளும், சந்தேகமின்றி உன் பக்கங்களை புரட்டிப்பார்க்கும், அதிலிருந்து அறிவுச்சமுகம் வீறு கொண்டு எழும்,

எங்கள் அறிவுப்பெட்டகத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்❤️💙

சுதந்திரதின செங்கோல் சிறப்பு


தேசியமும் தெய்வீகமும்

சுதந்திரதின செங்கோல் சிறப்பு

*1947 ஆகஸ்டு 15 முறைப்படி நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம் தெரியுமா ?*

மௌன்பேட்டன் நேருவை அழைத்து உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கபோகிறோம் அதை எப்படி கொடுப்பது என்று கேட்க நேருவுக்கு குழப்பமாக இருந்தது

 எதை அடையாளமாக வைத்து பெறுவது உடனே மூதறிஞர் ராஜாஜியை அனுகி எனக்கு இந்த நடைமுறைகள் தெறியாது அதனால் தாங்கள் தான் தீர்வுகூற வேண்டும் என்றார்.

 உடனே ராஜாஜி கவலை வேண்டாம் எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது *ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதியமன்னருக்கு குடுத்து ஆட்சிமாற்றம் செய்வர்.*

நாமும் அந்நியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட குருமகானின் கையால் செங்கோலை பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம் என்றார்.

 நேருவும் நேரம் குறைவாக உள்ளது உடனே ஏற்பாட்டை செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு  விசயத்தை சொல்ல அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம்அவர்கள்

உடனே முறையாக செங்கோல் தயாரித்து தங்க முழாம் பூசி
*இளையஆதீனம் தம்பிரான்பண்டார சுவாமிகளிடம்* பொறுப்பை ஒப்டைத்து கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் (தேவாரத்தில் இருந்து கோளறுபதிகம் பதினோரு பாடல்களை குறித்து கொடுத்து இந்த பாடல்களை பாடவேண்டும்.)உடன் அனுப்பிவைத்தார்.

 ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் டில்லி போய் சேர்ந்தனர். அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைதலையில் இருந்து  பாரதத்தின் விடுதலை பெரும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர்

அந்த சுதந்திர வைபவ தினத்தில் *மௌன்பேட்டனிடம் இருந்து செங்கோலை குருமகாசண்ணிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று*

 செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து ஓதுவார்மூர்திகள் வேயிறுதோளிபங்கன் என்று துவங்குகிற தேவாரதிருப்பதிகத்தை பாட பதினோராவது பாடலின் கடைசி வரி. " அடியார்கள் வானில் அரசால்வர் ஆணை நமதே."  இந்தவரி பாடி முடிக்கும் போதுதான்

*சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்.*

அந்த நிகழ்வை தான் நாம் சுதந்திர தினமாக கொணடாடுகிறோம்.

*அது மட்டுமல்ல செங்கோல் வழங்கும் போது ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் இசைத்தார்.*

இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை

   திருவாவடு துறை ஆதீனமடத்தில் செங்கோல் வைபவ கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது .

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

திரு.அடல்பிகாரி வாஜ்பாய்


திரு.அடல்பிகாரி வாஜ்பாய்

தங்கத்தை
இங்கிலாந்தில் அடமானம் வைத்து அரசாங்கம் நடத்திய இந்தியாவில் நீங்கள் பிரதமராக பதவியேற்ற பின்தான்...

இந்தியா முழுவதும் நாங்கள் விபத்தில்லா நான்கு வழி சாலை கண்டோம்..

சர்வசிக்ச அபியான் மூலம் நாங்கள் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி கற்றோம்.

பிரதான்மந்திரி கிராம்சடக் யோஜனா மூலம் நாங்கள் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கண்டோம் ..

உங்கள் ஆட்சியில்தான்  வங்கிவீட்டு கடன் வட்டி குறைந்து வீடு நாங்கள்  கட்டினோம்..

வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்ப்பட்டு  வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த வாகனங்கள் வாங்கினோம்..

விறகுஅடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய நாங்கள் உங்கள் ஆட்சியில்தான் பெரும் செல்வாந்தர்கள் மட்டுமே பயன்படுத்திய கேஸ் (சமையல் எரிவாயு ) தாராளமாக வாங்கினோம்..

உங்கள் ஆட்சியில் தான் அதிகப்படியாக  இருளில் இருந்த எங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது ..

உங்கள் ஆட்சியில்தான் போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான
தேசிய
நெடுஞ்சாலைகள் கிடைத்தது .
அதில் தமிழகத்தில்
NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி
NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை 
NH 208 மதுரை to கொல்லம்
 NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம்
NH 206 ...NH 67 திருச்சி to  ராமேஸ்வரம் 
NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to தின்டுக்கல்  மற்றும்
NH 45B ஆகியவை  கன்டோம்.

உங்கள் ஆட்சியில்தான் தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைய கண்டோம் ..

உங்கள் ஆட்சியில்தான்4.5 ஆண்டுகள் உயராத விலைவாசி கண்டோம்

உங்கள் ஆட்சியில்தான் உயராத பெட்ரோலிய பொருட்கள் கண்டோம் ...
petrol 36/- rs per litre rate.

உங்கள் ஆட்சியில்தான் செல்வந்தர்கள் மட்டுமே 3000O/- 0YT 3மாதம் 15000/- 6மாதம் கழித்து கிடைத்த  தொலைபேசி இனைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்கள் நாங்கள் பெற்றோம்...
வனிகத்தை அதன் மூலம் பெருக்கினோம்..

உங்கள் ஆட்சியில்தான் 250/- ரூபாயும் 2ரூபாயும் செலுத்தி செல்லுலார் தொலைபேசி சாமானிய மக்கள் நாங்கள் பெற்றோம்..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது..

அய்யா உங்கள் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி  பொக்ரான் அனுகுண்டு வெடித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்தீர்கள்,..

அய்யா உங்கள் ஆட்சியில் நீங்கள்தான் மேதை விஞ்ஞானி திரு.அப்துல்கலாமை ஜானதிபதியாக்கினீர்கள்,.

அய்யா உங்கள் ஆட்சியில் தான் பணிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றிவாகை சூடினீர்கள்..

ஐயா உங்கள் ஆட்சியில் தான் சுற்றுலா கூட போகமுடியாத ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில்(ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை  அடக்கி சுற்றுலா சுலபமாக்கினீர்கள்..

அய்யா உங்கள் ஆட்சியில் தான் வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடான் கொடுக்கும் நிலை உருவாக்கினீர்கள்..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணா கர்நாடக மாநிலதலைநகர் பெங்களூரை சிலிகான்vally யாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி  மென்பொருள் உற்பத்தியை தன்னிரைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறையை போக்கினீர்கள்..

அய்யா உங்கள் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது ..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

அய்யா உங்கள் ஆட்சியில்தான் இமாச்சல் மாநிலத்தில் (மண்டி) முதல் பெரிய சுரங்கப்பாதை
9KM அமைக்கப்பட்டு போக்குவரத்து சுலமாக்கப்பட்டது.

அய்யா உங்கள் ஆட்சியில்தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள்..
கடல் பாலங்கள் கொண்ட  கொங்கன் ரயில்வே மங்களூர்to மும்பை பாதை அமைக்கப்பட்டது ..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது,..

அய்யா உங்கள் ஆட்சியில்தான்  வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது,.

அய்யா உங்கள் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக ஆக்கப்பட்டது...

நாட்டுமக்களுக்காக திருமணமே செய்து கொள்ளாத உங்களின் இன்னும் பல சாதனைகள் சொல்லி கொண்டேபோகலாம்.

.சுதந்திர இந்தியாவின் சிற்பியான உங்களுக்கு ..
உங்களுக்கு ஒரு பாரதரத்னா போதாது ..
இருக்கும் அனைத்து விருதுகள் கொடுத்தால் கூட எங்கள்ஆசை அடங்காது...

நீங்கள் மறைந்தாலும் தங்களது சாதனைகள்  மறையாது...

புதன், 15 ஆகஸ்ட், 2018

சுதந்திரத்திற்கு முன்பே Dr. அம்பேத்கர் இந்தியாவிற்கு ஆற்றிய அளப்பரிய பணி.


இந்திய சுதந்திரம் என்பது 'சமூக சுதந்திரம் அல்ல (Not social liberty), மாறாக ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்டது ( Transfer of power from British to Brahmin). ஆனால், சுதந்திரத்திற்கு முன்பே  Dr. அம்பேத்கர் இந்தியாவிற்கு ஆற்றிய அளப்பரிய பணி.

1. டாக்டர் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வரவில்லை. கிறித்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வந்த மனு என்பவன்தான், பிறப்பின் அடிப்படையில் அவரவர் குலத்தொழிலை அவரவர்தான் மேற்கொள்ள வேண்டும் என்றான். இதுவே மனு தர்மம். மனு தான் முதன்முதலில் இடஒதுக்கீடைக் கட்டமைத்தான். ஆனால் அம்பேத்கரால்தான் இன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செய்தார் என்பதைத் தெரிந்து வைத்திருப்பவர்கள், ஏழை பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு, பிராமண பெண்களுக்கு இடஒதுக்கீடு என மேலும் விரிவுபடுத்த முயன்ற போது, “பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக (Other Backward Class) என்று OBC Reservation-யைக் கொண்டு வர அரசமைப்புச் சட்டத்தில் உறுப்பு 340தனை சேர்த்தார் அம்பேத்கர்.
உறுப்பு 340ன் படி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்நிலையைக் கண்டறிய ஆணையம் அமைக்க வேண்டும் என கூறுகிறது. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகியும், அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த ஆணையமும் அமைக்கவில்லை என பிரதமர் நேருவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
அதன் பின்னர்தான் 1953ஆம் ஆண்டு காகாகலேல்கர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மேம்பாட்டிற்கு குழு அமைக்கப்பட்டது, அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பின்பு மண்டல் கமிசன் அறிக்கைப்படி OBC  இடஒதுக்கீட்டை BSP நிறுவனத்தலைவர் கன்சிராம் அவர்களின் வற்புறுத்தலின் பேரால்  வி. பி. சிங் அமல்படுத்தினார்.

2. அம்பேத்கரால்தான் திறமைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என்று இன்று குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்கு முன்பு, ஒரு வேலையில் சேரவேண்டும் என்றால் சிபாரிசு வேண்டும். ஏற்கனவே உயர்பதவியில் வகித்தவர்கள் பிராமணர்கள். எனவே சிபாரிசின் பேரில் பிராமண இளைஞர்களுக்கே வேலை கிடைத்தது.
ஆனால் படித்தவர்கள் பதிவு செய்து வேலை கிடைக்க “தேசிய வேலைவாய்ப்பு நிறுவனம் (National Employment Agency)” கொண்டு வந்தவர் டாக்டர் அம்பேத்கர். இதுவே பின்னாளில் Employment Exchange ஆனது.

3. இந்தியாவின் கருவூலம் எனப்படும் ரிசர்வ் வங்கியை டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்டதிட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பின்படி ஹில்டன்-யங் தலைமையிலான ராயல் கமிஷன் ஆன் இந்தியன் கரன்சி அண்ட் பைனான்ஸ் என்னும் குழு நிறுவியது. குழுவிலிருந்த ஒவ்வொருவரின் கையிலும்  அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரையான “ரூபாய் சிக்கல்கள்-தீர்வுகள்” இருந்தது.

4. 1923ல் டாக்டர் அம்பேத்கரின் “பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதியின் பரிமாணம்” என்ற ஆய்வின் அடிப்படையிலேயே இந்தியாவின் நிதி ஆணைக்குழு Finance Commission தோற்றுவிக்கப்பட்டது.

5. சைமன் குழுவிடம் 1928-லேயே வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்திப்பெற்றார் டாக்டர் அம்பேத்கர்.இப்போது உள்ளதுபோல் பெண்கள் உட்பட பெரும்பான்மை மக்களுக்கு அப்போது வாக்குரிமை கிடையாது.

6. விவசாயிகளிடமிருந்து வரி வசூலிக்க பின்பற்றப்பட்ட வன்முறை வடிவிலான கோட்டி முறையை (Khoti) ஒழிக்க மசோதாவை முன்மொழிந்தார்டாக்டர் அம்பேத்கர். ஆனால் காங்கிரசுஅதை எதிர்த்தது.
எனவே சனவரி 12, 1938-ல் 20,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்துப் போராடினார் டாக்டர் அம்பேத்கர். இதுவே சுதந்திரப் போராட்டத்தில் நடந்த மிகப்பெரிய விவசாயப் போராட்டம். கோட்டி முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 95 சதவிகிதத்திற்கும் மேல் பிற்படுத்தப்பட்டவர்களே.

7. தாய்மார்கள் அதிகம் குழந்தை பெறுவதால் வரும் உடல்நலக்குறையைப் போக்க குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் என்றார்.

8. மது அருந்தி வரும் கணவனுக்கு உணவளிக்காதே என்றார்.1940ல் மதுவையும், பிற போதைப் பொருட்களையும் அரசு தடை செய்ய வேண்டும் என்பதற்காக அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை கொள்கைகளில்(Directive Principle of state policy) உறுப்பு 47யைச் சேர்த்தார்.

9. பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் விடுமுறையுடன் கூடிய ஓய்வு வேண்டும் என்று மும்பை சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தார் 1942-ல். ஆனால் இந்திய அரசு அந்த மசோதாவை 1961-ல்தான் நிறைவேற்றியது.

10. 1942-ல் தொழிற்சாலை சட்டத்தில் 14 மணி நேரமிருந்த பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்தார்.

11. ஆபத்தான பணிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வேலை செய்வதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தார்.

12. தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தைக் கொண்டு வந்தார்.

13. முதன்முறையாக தொழிற்சாலை சட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் கிடைக்க சட்டம் கொண்டு வந்தார்.

14. இரண்டாம் உலகப்போருக்குப்பின், நாட்டின் மறுகட்டமைப்பு மிகப்பெரும் சவாலாக இருந்தது. அதற்காக நிறுவப்பட்டதே மறுகட்டமைப்பு குழு மன்றம் (Reconstruction committee council). அம்பேத்கர் அம்மன்றத்தின் உறுப்பினர். அதன் மூலம் பாசனம் மற்றும் மின்சார கொள்கைக்கான குழுவுக்கு தலைவராய் இருந்தபோது அவர் முயற்சியால் கொண்டுவரப்பட்டதுதான் கீழ்காண்பவை.

1944ல் மத்திய நீர்வழி மற்றும் பாசன ஆணையத்தைத் தோற்றுவித்தார். அதுவே தற்போதைய மத்திய நீர் ஆணையம் (Central Water Commission).

மத்திய மின்சார தொழில்நுட்ப வாரியத்தை (Central Technical Power Board) தோற்றுவித்தார். அதுவே பின்னாளில் தேசிய மின்சார இணைப்பு ஒழுங்குமுறை கழகம் (National Power Grid Corporation).

 15. 1946-ல் நவம்பர் 26ஆம் தேதி, அம்பேத்கர் ஒரு புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார். அதில் சட்டம் மூலம் அனைவரும் சமம், ஆனால் இது சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சாத்தியமா? என்ற சந்தேகத்தை எழுப்பினார். அதன் பிறகு நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அமைக்கப்பட்டதுதான் – இந்திய திட்டக் குழு (Planning Commission of India).

16. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் (Damodhar Valley Project), கிராகுட் அணைத் திட்டம் (Hirakud Project), சோன் பள்ளத்தாக்கு திட்டம்(Sone Valley Project) ஆகியவை எல்லாம் அம்பேத்கரின் முதன்மை பங்களிப்பில் உருவானதே.

மேற்கண்டவை அனைத்தும் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து மக்களின் நலனுக்காகவே செய்தார்.

1209ல் கட்டப்பட்ட உலகின் பழமையான பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் கடந்த நூற்றாண்டில் மக்களுக்கு உழைத்த மாமேதை யார்? என்ற வாக்கெடுப்பில் முதல் இடத்தை பிடித்தவர் டாக்டர் அம்பேத்கர். அவர் நவீன இந்தியாவின் சிற்பியாக இருக்கிறார்.

ஐ.நா, டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை சர்வதேச சமூகநீதி நாளாகக் கொண்டாடுகிறது.

ஆனால் நம்மைப் பொறுத்தவரை அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.

அதனால் தான்...

இன்று இட ஒதுக்கீடு மற்றும் திறமைப்பற்றி வாய் கிழிய விதண்டாவாதம் செய்யும் எவரும் இந்திய தேசியத்தை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான அம்பேத்கர் திறமையையும் அறிவையும் ஏற்றுக் கொள்ளாமல் அவரை சாதியோடு சேர்த்து மட்டுமே பார்ப்போம் என்று அடம்பிடிக்கிறார்கள்.
சாதியும் மதமும்தான் அளவுகோல் என்றால் நமக்கு அயோக்கியர்களே தலைவர்களாக வாய்ப்பார்கள். #Jai bhim.