சனி, 25 ஜனவரி, 2020

இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா... மறைக்கப்பட்ட உண்மைகள்



இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா... மறைக்கப்பட்ட உண்மைகள்!

 ஒருவரின் உழைப்புக்கான அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்படுவது, தாய்க்கு குழந்தையின் உரிமை மறுக்கப்படுவதற்குச் சமம். நம் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையாவும், அப்படிப் பறிகொடுத்த தாயைப்போலதான் அதற்கான அங்கீகாரம் இழந்தவரானார். தேசியக்கொடி – நம் மாபெரும் கவுரவம். அதனால்தான் அதைக் காக்க உயிரைவிட்டான் சென்னிமலை என்னும் கிராமத்தில் பிறந்த நெசவாளி குமரன். 2018-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று, நிலவில் இந்திய மூவர்ணக் கொடியை நட மாபெரும் திட்டம் ஒன்றை தீட்டிவருகிறது இஸ்ரோ.

அந்தப் பெருமை வாய்ந்த கொடியை வடிவமைத்தவர் என்னும் பெருமை, இந்திய வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியது. இன்று அந்தப் பெருமைக்கு உரியவராக இருப்பவர், பிங்கலி வெங்கையா. ஆனால், இந்தப் பெருமையில் சுரையா என்ற பெண்ணுக்குத்தான் முக்கிய பங்கிருக்கிறது என்ற செய்தி கடந்த சில வருடங்களாக, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தெலங்கானாவைச் சேர்ந்த பாண்டுரங்க ரெட்டி என்பவர், இந்திய தேசியக் கொடியின் வரலாற்றை ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் திடுக்கிடும் தகவல்களே இதற்கு அடிப்படை.
   
''இந்திய தேசியக்கொடி ஒன்றும் ஒரு சில தினங்களில் வடிவமைக்கப்பட்டது அல்ல. பல்வேறு ஆண்டுகளாக, பல பரிணாமங்களைச் சந்தித்து உருவானதுதான் நம் மூவர்ணக் கொடி. ஆங்கிலேயே அரசாங்கத்தின் கொடியைப் புறக்கணித்து, தனி சுதேசிக் கொடி வேண்டுமென்று 1916ல் தொடங்கியது நம் தேசியக் கொடிக்கான முதல் புரட்சி. ஒவ்வோர் இடத்திலும் பல்வேறு கொடிகள் பயன்படுத்தப்பட்டாலும், 1921ல்தான் சிவப்பு, பச்சை நிறங்கள் கொண்ட நம் தேசியக்கொடி முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் பிங்கலி வெங்கையா, தேசியக்கொடிக்காக 30 வடிவமைப்புகளை காங்கிரஸிடம் கொடுத்துள்ளார். இந்தியாவிலுள்ள மதங்களைக் குறிப்பதாக இருந்த நிறங்களை, உணர்வுகளின் குறியீடாக மாற்றி, காந்தி அறிவுறுத்திய அமைப்பில் கொடியை உருவாக்கியுள்ளார் வெங்கையா. உண்மையில் காந்தி மற்றும் லால் ஹன்ஸ்ராஜ் ஆகியோரின் ஆலோசனையை அவர் செயல்படுத்த மட்டுமே செய்தார் வெங்கையா" என்று கூறுகிறார் பாண்டுரங்கன் ரெட்டி.

''காங்கிரஸின் வரலாற்றைப் 870 பக்க புத்தகமாக எழுதியுள்ள மூத்த காங்கிரஸ்காரர் பட்டாபி சீதராமையா, தனது புத்தகத்தில் ஓர் இடத்தில்கூட, வெங்கையாவின் பெயரைக் குறிப்பிடவில்லை. 1957-ம் ஆண்டு இந்திய சுதந்திரப் போரின் நூற்றாண்டு விழா புத்தகத்தை எழுதிய தாராசந்தும், வெங்கையாவின் பெயரைக் குறிப்பிடவில்லை'' என்றெல்லாம் குறிப்பிடுகிறார் பாண்டுரங்க ரெட்டி. .

''ராஜ்ஜியத்தின் இறுதி நாட்கள் என்ற பெயரில், டிரெவர் ராயல் என்ற ஆங்கில வரலாற்று ஆசிரியர், நம் தேசியக்கொடியை வடிவமைத்தவர் பற்றிய குறிப்பொன்றை தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்தக் குறிப்பில், இன்று நம் கொடியிலிருக்கும் அசோகச் சக்கரம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சுரையா தயாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்மணியால் வடிவமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
   
ஆம்! இந்திய தேசியக்கொடியின் வடிவமைப்பில் ஒரு பெண்ணுக்குமா பெரும் பங்கிருக்கிறது. இந்தியாவின் சுதந்திரம் உறுதியான சமயம், ‘சுதந்திர இந்தியாவின்’ கொடியை அறிமுகப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டனர். அந்தச் சமயம் இருந்த கொடியில், இன்றைய அசோக சக்கரத்துக்குப் பதிலாக காந்தியின் ராட்டையே இருந்தது. அப்போது பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஐ.சி.எஸ் அதிகாரி பத்ருதின் தியாப்ஜி, ஒரு கட்சியின் கொடி தேசிய கொடியாக வேண்டாமென்று ஆலோசனை கூற, பிரதமர்  நேருவும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால், அதற்குப் பதில் அசோகச் சக்கரத்தை வைத்து கொடியை வடிவமைத்துள்ளார் பத்ருதுனின் மனைவி சுரையா.

ஆனால்,  காந்தி அதற்கு உடனடியாக ஒப்புதல் தரவில்லை. 'அசோகரின் சக்கரம் இந்து - இஸ்லாம் ஒற்றுமையைக் குறிப்பதால் அதுவே சரியாக இருக்கும்' என்று கூறியதால், சுரையாவின் வடிவமைப்பை அவர் அரை மனதோடு ஏற்றுக்கொண்டதாகவும் அந்தப் புத்தகத்தில் டிரெவர் எழுதியிருக்கிறார்'' என்று பாண்டுரங்க ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தன்று நேருவின் காரில் பறந்த தேசியக் கொடியை வடிவமைத்தது சுரையாதான் என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சுரையாவின் பங்கு இத்தனை ஆண்டுகளாக மறைக்கப்பட்டுள்ளது. சுரையாவுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சுரையா காங்கிரஸை சேர்ந்தவராக இருந்திருந்தால் அவரது பெயரும் வரலாற்றில் இடம்பெற்றிருக்குமோ என்னவோ!

பெண் என்பதால் அவருக்கான அங்கீகாரம் மறுக்கப்படவில்லை என்பதாகச் சொல்லலாம். ஆனால், பெண்ணாக இருந்ததால்தானோ என்னவோ அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பெண் என்பவளுக்குத்தான் எல்லாம் கடமை என்ற கட்டத்துக்குள் வந்துவிடுகிறதே. இன்டீரியர் டிசைனர், குக், நியூட்ரிஷியன் போன்ற துறைகளில் சாதிப்பவர்கள் பலர். ஆனால் அதையெல்லாம் குடும்பத் தலைவியாய்ச் செய்பவளுக்கு ஏது அங்கீகாரம்? அது அவள் கடமை தானே? அவளும் அங்கீகாரத்தை எதிர்பார்க்காத, கடமையைச் செவ்வன செய்யத் தெரிந்தவளாகவே வாழ்ந்துபழகிவிட்டாள்.

ஆனால் பெண்களே, எதுவும் கடமை மட்டுமாக முடிந்துவிடாது. உங்கள் மகனின் வெற்றியில், நீங்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து போட்டுக்கொடுத்த காபிக்கும் பங்கிருக்கிறது. நீங்கள் பெருமையைத் தேடிப்போக வேண்டாம். ஆனால் உங்களுக்கான  அங்கீகாரத்தை யாருக்காகவும், எதற்காகவும் இழக்காதீர்கள். உங்கள் உழைப்பிற்கான பலனை நீங்கள் அனுபவித்தே தீரவேண்டும். இல்லையேல், சுரையாவைப் போல் மறக்கப்பட்டவர்களாகி விடுவீர்கள்! உங்கள் வெற்றிக்கு கைதட்டல்கள் தர இங்கு யாரும் இல்லாவிட்டாலும், காலம் இருக்கிறது. அது நிச்சயம் பதில் சொல்லும்... இன்று சுரையாவுக்கு கூறியதுபோல!

வெள்ளி, 24 ஜனவரி, 2020

ஆர் எஸ் எஸ் என்ற பிரமாண்டம்

ஆர் எஸ் எஸ் என்ற பிரமாண்டம்

குடியரசுத் தலைவர்
பிரதமர்
உள்துறை அமைச்சர்
மத்திய அமைச்சர்கள்
துணைக் குடியரசுத் தலைவர்
பாராளுமன்ற சபாநாயகர்
மற்றும்

18 முதலமைச்சர்கள்
29 கவர்னர்கள்
417 எம்பிக்கள்
1600 க்கும் மேற்பட்ட எம் எல் ஏ கள்
1 லட்சம் கிளைகள்
15 கோடி தன்னார்வத்தொண்டர்கள்
2 லட்சம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள்
5 லட்சம் ஆசிரியர்கள்
1 கோடி மாணவர்கள்
42 கல்லூரிகள்
13 உயர் கல்வி நிறுவனங்கள்
3 ஆராய்ச்சி நிறுவனங்கள்
120 படுக்கை வசதி கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழுநோயாளிகளுக்கான ராஜமுந்திரி ஆஸ்பத்திரி
2 கோடி பாரதீய மஜ்தூர் சங்கத்தின் உறுப்பினர்கள் (தொழிற்சங்கம்)
1 கோடி ABVP செயலாளர்கள் (மாணவர் அமைப்பு)
15 கோடி பிஜேபி உறுப்பினர்கள்
16000 பள்ளிகளை நடத்தும் வித்யா பாரதி.
1200 ப்ரகாஷன் சமூகம் (புத்தக வெளியீட்டு அமைப்புகள்)
9000 முழுநேர ஊழியர்கள்
7 லட்சம் மூத்த வீரர்கள் அமைப்புகள்
1 கோடி விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் (உலகம் முழுவதுமாக)
30 லட்சம் பஜ்ரங்தள் இந்துத்துவ தொண்டர்கள்
1.5 லட்சம் அலுவலகங்கள்
18 மாநிலங்களில் ஆட்சி
303 பாராளுமன்ற உறுப்பினர்கள்
64 மாநிலங்களவை உறுப்பினர்கள்
1460க்கும் மேற்பட்ட இயக்குநர்கள்

வன்வாசி கல்யாண் ஆஸ்ரம்
வன்பந்து பரிஷத்
சம்ஸ்கார் பாரதி ( பண்பாட்டு அமைப்பு )
விஞ்ஞான் பாரதி ( அறிவியல் அமைப்பு )
லகு உத்யோக் பாரதி ( சிறுதொழில் அமைப்பு )
சேவா சஹ்யோக் ( நமக்கு நாமே தொண்டு செய்யும் அமைப்பு )
சேவா இண்டர்நேஷனல் ( உலகளவில் தொண்டுசெய்யும் அமைப்பு )
ராஷ்ட்ரிய சேவா சமிதி ( தேசிய அளவில் தொண்டு செய்யும் அமைப்பு )
ஆரோக்ய பாரதி
துர்கா வாஹினி
சாமாஜிக் சம்ரஸ்தா மஞ்ச் ( சமுதாய ஒருங்கிணைவு மேடை )
ஆர்கனேஸர்
பாஞ்ச்யஜன்ய
ஷ்ரீராம்ஜன்ம பூமி மந்திர் நிர்மாண் ன்யாஸ் ( ஷ்ரீ ராம் ஜன்ம பூமி கோயில் கட்டும் அமைப்பு )
தீன் தயாள் சோத் சன்ஸ்தான் ( தீன் தயாள் ஆய்வு மையம்)
பாரதீய விச்சார் சாதனா ( இந்திய கருத்தியல் அமைப்பு)
பாரத் விகாஸ் பரிஷத் ( இந்திய வளர்ச்சி அமைப்பு)
ஜம்மூ காஷ்மீர் ஸ்டடி சர்க்கிள்
த்ருஸ்டி சன்ஸ்தான் ( கண்பார்வை நிறுவனம்)
ஹிந்து ஹெல்ப்லைன்
ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம்
#ஹிந்து முன்னணி
அகில் பாரதிய சாஹித்ய பரிஷத் ( அகில் இந்திய இலக்கிய அமைப்பு )
பாரதிய கிஸான் சங்கம் ( இந்திய விவசாய சங்கம்)
விவேகானந்த கேந்த்ர
தருண் பாரத் ( இளைஞர் அமைப்பு )
அகில் பாரதிய க்ராஹக் பஞ்சாயத் ( அகில இந்திய வாடிக்கையாளர் சேவை மையம் )
ஹிந்துஸ்தான் சமாச்சார் ( ஹிந்துஸ்தான் செய்தித்தாள்)
விஷ்வ சன்வாத் கேந்த்ர ( உலக கலந்துரையாடல் மையம்)
ஜன கல்யாண் ரக்த பேடீ ( இரத்த தான அமைப்பு
இதிகாஸ் ஸங்கலன் சமிதி ( இதிகாஸ ஒருங்கிணைப்பு மையம்)
ஸ்த்ரீ சக்தி ஜாக்ரண் ( பெண் சக்தி விழிப்புணர்வு மையம் )
ஏகல் வித்யாலய் ( பள்ளிகள்)
தர்ம ஜாகரண் ( மத விழிப்புணர்வு மையம்)
பாரத் பாரதி
சாவர்க்கர் அத்யாஸன் ( சாவர்கள் பயிற்சி மையம்)
ஷிவாஜி அத்யாஸன் ( ஷிவாஜி பயிற்சி மையம்)
பதித் பாவன் சங்கடன்
ஹிந்து ஏக்தா ( ஹிந்து ஒற்றுமை அமைப்பு)
இன்னும் இதுபோன்ற பற்பல அமைப்புகள்

இவையெல்லாம் சேர்ந்த்துதான் ஆர் எஸ் எஸ். காங்கிரஸோ கம்யூனிஸ்ட்டோ அவ்வளவு சீக்கிரமாக இதன் வேரை அசைக்கக்கூட முடியாது. 92 ஆண்டுகளாக வளர்ந்திருக்கும் இந்த ஆர் எஸ் எஸ் அடுத்த 1000 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்யும்.
என கணிக்கப்பட்டுள்ளது.

*ஆர்எஸ்எஸ் என்ற பிரம்மாண்டத்தை எதிர்த்து எதிரிகள் குரைப்பது, சூரியனை பார்த்து நாய் குரைப்பதை போன்றது. ஆகவே எந்த குரைப்பிர்க்கும் அவர்கள் பதில் தர மாட்டார்கள்.*

இது ஒரு  இந்துத்துவ வெறியனின் பதிவு .இவற்றை எளிதில் மறுப்பதற்கில்லை??

 இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்ட ஆலமர கட்டமைப்பைக் கொண்ட.

 இந்த இந்துத்துவ சித்தாந்தத்தை நாம் எதிர்க்க நம் கையில் இருப்பது நமது திருமறைக் குர்ஆனும் ,நபிகள் பெருமானார் காட்டித்தந்த வழிமுறைகளாகும்.
 மேலும் இவர்களது கொடூர ஆட்சியினை நாம் வெறும் போராட்டம் நடத்தி கலைவதன் முலம்  மட்டும் அப்புற படுத்தஇயலாது...

 இன்றைக்கு நாம் மோடியை, அமித்சாவை எதிர்த்துப் போராடலாம். ஆனால் அவர்கள் சென்ற பின்னாலும் ஆயிரம் மோடிக் களையும்,ஆயிரம் அமித் ஷா க்களையும். இந்த சித்தாந்தம் உற்பத்தி செய்யும் .ஆக நாம் வேரறுக்க வேண்டியது. இந்த இந்துத்துவ சித்தாந்தத்தை தான். அதற்கேற்ப நம் எதிர்கால செயல்திட்டங்களை அமைக்க வேண்டும் இல்லாவிடில்??? மேம்போக்கான போராட்டங்களின் மூலம் இவர்களை வெற்றி கொள்ள இயலாது இவர்களை வெற்றிகொள்ள வல்ல இறைவன் நமக்கு காட்டித்தந்த திருமறைக் குர்ஆனும் நபிகள் நாயகம் காட்டித்தந்த வழிமுறைகளையும் நாம் கை கொள்வோமானால் இறுதி வெற்றி "இன்ஷா அல்லா".நமக்கே

தயவுசெய்து அனைவரும் இந்த பதிவை அனைத்து குழுக்களுக்கும் பகிர்வு செய்யவும்.

வியாழன், 23 ஜனவரி, 2020

யார் பெரியார்


#யார்_பெரியார்?

ஆரியத்தின் சூழ்ச்சியினால்
அடிமாடாய் கிடந்த நம்மை
வீரியத்துடன் நிமிர்ந்தெழச் செய்த
வேங்கையவர் நம் பெரியார்!

மூச்சு நிற்கும் நாள்வரையில்
மூத்திரச் சட்டியுடன் சுற்றிவந்து
சூத்திரப் பட்டம் போக
சுழன்றடித்த சூறாவளி நம் பெரியார்!
________________________________________

"பெரியாரை" பற்றி தெரியாதவர்களுக்கு சில செய்திகள்.

தந்தை பெரியார்,

 - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி.

அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே.

95 வயதிலும் மூத்திரப் பையை தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் "பெரியார்". அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான்.

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவிப்பார்.
''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்து வைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். "ணா", "லை" என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன் தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார்? என்று கேட்ட போது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 1942 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரது சேகரிப்பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

* 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்த போது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்! அந்த பெரிய மனிதருக்கு இருந்த நேர்மை பணிவு கூட இங்கே விசத்தை கக்க வரும் நபர்களுக்கு தெரியாது. ஒரு சதவீதம் கூட கிடையாது.

* 95 வது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!
_______

பெரியார் என்ன செய்து கிழித்து விட்டார் என்று கேட்கும் நன்றி மறந்த ஜாதீய அடிமையே..

நன்றாகக் கேள்;  கல்வி மறுக்கப்பட்ட நாங்கள் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதற்கு காரணம் இடஒதுக்கீடு! அதை பெற்றுத் தந்தது பெரியாரின் இடைவிடாத போராட்டம்.

அவரவர் சாதித் தொழிலையே பள்ளிகளில் கற்க வேண்டுமென குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டுவந்த போது, மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் செய்தவர் பெரியார் அதனாலேயே குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அவரவர் சாதித் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டியதிருந்திருக்கும். மருத்துவராகவோ பொறியாளராகவோ உயர் அதிகாரியாகவோ வர வாய்ப்பு
எந்த  சாதியினருக்கும்
 இருந்திருக்காது.

பெரியாரின் உழைப்பை மறந்த நன்றிகெட்ட பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே! இனியாவது உணர்ந்துகொள்...கடவுள் மறுப்பு கொள்கையை பெரியார் கொண்டிருந்தாலும்,
அனைவரும் கோவிலுக்குள் செல்வதற்காகவும், அர்சகராக ஆவதற்கும் போராடியவர் பெரியார்.  சுயமரியாதைக்காகவும், சாதி இழிவு நீங்கவும், தீண்டாமை நீங்கவும், சாதி மதவெறி ஒழியவும் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார். அந்த பெரும் பணியை மறந்த சிறியார்கள் இல்லை நாங்கள்!

ஏ நன்றி கெட்ட பார்ப்பனீய அடிமை தமிழனே! அவரால் உயர்வடைந்து விட்டு  இன்று கேட்பாய் பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று!

நால்வர்ணத்தை கடைபிடித்த, சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மனுநீதியின்படி ஆட்சி செய்த பார்பன அடிமைத் தமிழ் அரசர்கள், திருக்குறளை - வள்ளுவரைப் போற்றவில்லை, திருக்குறள் மாநாடு நடத்தி தமிழ்நாடெங்கும் திருக்குறளைக் கொண்டாட வைத்தவர் பெரியார்!

அந்த பெரியாரை மறந்த பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே! இன்று தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்று வஞ்சமாக கூக்குரலிடும் அயோக்கியர்களே, உன் கையிலிருக்கும் வேதம் காட்டுமிராண்டித் தனமானது.
அதை தவிர தமிழில் வேறு என்ன வேதம் இது  போல் உள்ளது? #தமிழை_காட்டுமிராண்டி_மொழியாக்கியதே உன் வேதங்கள் தானே.
இதை என்று உணர போகிறாய்?

பதில் கிடைக்குமா... ஜாதீய அடிமைகளே...?
___

"மருத்துவமனையில், 'கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 'காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்' என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்.

மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை இழந்தாவது "உயிர் வாழ" சம்மதிக்கிறோம்.

அப்படியிருக்க, ஒரு வல்லபக் கூட்டம் நம்மை ஏமாற்றி , அடிமையாக்கி, தங்களுக்கு பணி செய்ய வைக்கும் தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் வழியில் உனக்காக வந்தால்..

இதற்கு... இவ்வளவு யோசனை?, எதிர்ப்பு?, தயக்கம்?.
இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில் தான் மறையும்? - என்று கேட்கிறோம் . என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்?" - பெரியார்!!
____

பெரியார் என்னும் சகாப்தம்;

90-வது வயதில்  _  180 கூட்டம்.
91-வது வயதில்  _  150 கூட்டம்.
93-வது வயதில்  _  249 கூட்டம்.
94-வது வயதில்  _  229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்.

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ?

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா?

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ?

கடவுள் உண்டு, நாத்திகம் பேசுவோர் நாக்கு முட நாக்கு என்றவர் வள்ளலார். இருப்பினும் வள்ளலாரின் சாதி மத வெறி  சாடும் பாடல்களை தன் பத்திரிகையில் வெளியிட்டவர் பெரியார்.

பக்தி இல்லையேல் நட்டம் இல்லை, ஆனால், ஒழுக்கம் இல்லையேல் எல்லாம் பாழ் என்றவரே பெரியார்.

தமிழ் இனத்திற்காக சாதி ஒழிப்புக்காக சமய சந்நியாசிகள் உடன் பிரச்சாரம் செய்தார்.
____

நான் சொல்வதை கேட்டால் தான்
உனக்கு சொர்க்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம்
என்று கூறும் கடவுள்கள்,
சாமியார்களுக்கிடையில்...

நான் தலைவன், நான் தவறே செய்தாலும், எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து - உன் அறிவு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள், இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன "ஒரே தலைவர்" பெரியார் மட்டுமே!

பெரியாருக்கு நிகராக  எவராவது  உண்டா?
____

பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று கேட்கும் தற்குறிகளுக்கு,

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் (அவாள் தவிர எல்லா சாதினருக்குமே) போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை...

1. ஆதிதிராவிடர்கள், மற்ற பல சாதினரும் பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து செல்லக் கூடாது.

2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.

3. தங்க நகைகள் அணியக் கூடாது.

4. மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.

5. ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6. சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

7. திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

8. பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

9. குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.

10. பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

11. மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.

12. உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.

13. பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை செய்த சாதிகள்- மக்கள் பல.

14. நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
இவைக்கு காரணம் யார்?
நீ அடிமையாக இருக்கும் உயர்ஜாதி பார்பனீயக்  தலைமையும், புராண ஆசாரங்களே.

பதில் சொல்லுங்கள்!

#பகிருங்கள்

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

அப்பாக்கள்

அப்பாக்கள்...
       
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.
ஆனால் , ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.

அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.

கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சுமைகள் அதிகமானவை . அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا

ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் இருக்கும்  தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.

தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.ا

தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும்.

வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.

விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.

இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.

தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை , அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள்?

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?

எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?

அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?

எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?

முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..

வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...

நரம்பு தெரியும் கைகளில் ...

நரை விழுந்த மீசைகளில் ...

அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.

தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?

ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?

மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?

இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

வீரம், துணிச்சல்,
விடாமுயற்சி,
நம்பிக்கை, உழைப்பு..
இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் , யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

ஒரு இளைஞனோ ,  யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதே”

“ஒன்றுக்கும் யோசிக்காதே”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதே”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.

அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.

தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.

அப்பாக்கள் :

➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்

➡பிள்ளைகளின் அச்சாணிகள்

➡பிள்ளைகளின் சூரியன்கள்

➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்

➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்

➡பிள்ளைகளின்
நம்பிக்கைகள்

அப்பா:
தூய்மையான
அன்பு,

போலியற்ற
அக்கறை,

நேர்மையான வழிகாட்டல்,

நியாயமான
சிந்தனை,

நேசிக்கத்தக்க உபசரிப்பு,

மாறுதலில்லா நம்பிக்கை,

காயங்களற்ற
வார்த்தை, 

கம்பீரமான
அறிவுரை,

கலங்கமில்லா
சிரிப்பு,

உண்மையான
அழுகை,

என அத்தனையும் உளமகிழ்ந்து

செய்து வளர்த்தவர்.

தோழனுக்கு தோழனாய்
தோள் கொடுப்பவர் அப்பா

-----------------------------------------

சனி, 18 ஜனவரி, 2020

IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.

வீரம் என்பது சாதியில் இல்லை


16 காளைகளை அடக்கி இந்த ஆண்டின் தலைசிறந்த ஜல்லிக்கட்டு வீரன் என்ற பெயருடன் மாருதி கார் உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் தனது சொந்த கிராமத்திற்குள் நுழைந்தான்
அந்த இளைஞன்!

உற்சாகமாக வரவேற்றனர் மக்கள். ஆனாலும் பழமை சிந்தனை மாறாத ஆதிக்க குணம் கொண்ட சிலர் முகத்தை சுளித்துக்கொண்டு அந்த இளைஞனின் சாதியை (சலவை தொழிலாளி) குறிப்பிட்டு இவனுக்கெல்லாம் முதல் பரிசு கிடைச்சிருக்காக்கும் என்று ஏளனமாக பேசிக்கொண்டது காதில் விழுந்தது!

அந்த முணுமுணுப்பையெல்லாம்  பொருட்படுத்தாமல் பலத்த உற்சாகத்துடன் வெற்றி வீரன் பிரபாகரனை ஊர் நடுவில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பெருமிதத்துடன் மேடையேற்றி கவுரவித்தது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI

வீரம் என்பது
சாதியில் இல்லை!

விளையாட்டுத் திறன்
பணத்தில் இல்லை!

எத்தனை பொருத்தமான வார்த்தை!

புதுக்கோட்டை மாவட்டம் ( 14 - 01- 1974) உதயமான நாள். "Pudukkottai Day".


 புதுக்கோட்டை மாவட்டம் ( 14 - 01- 1974) உதயமான நாள். "Pudukkottai Day".

மாட்சிமை தாங்கிய பிரகதாம்பாள் தாஸ் H.H தொண்டைமான் மன்னர்கள் புதிய கோட்டை கொத்தளங்களுடன் கூடிய புதிய நகரை நிர்மாணித்து அதற்கு "புதுக்கோட்டை " என பெயரிட்டு 1686- 1948 வரை இன்றைய இந்தியாவை போன்று தனி நாணயம், தனி கொடி என தனி நாடாக கோலோச்சினர்.

அன்றைய இந்தியாவிலேயே முதன்முதலாக பேருந்துகள் , மகிழுந்து போன்றவை அறிமுகப்படுத்தியவர்கள் எங்களது மாட்சிமை தாங்கிய மாமன்னர்கள் தான்.

இன்றைய தமிழகத்திலேயே முதல் நூற்றாண்டு கண்ட நகராட்சியும் எங்களது புதுக்கோட்டை தான்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 3-3-1948 வரை தனி சமஸ்தானமாக கோலோச்சி வந்த எமது சமஸ்தானத்தை அன்றைய சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் உயர்திரு.சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அன்றைய கால கட்டத்தில் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மாட்சிமை தாங்கிய மாமன்னர் பிரகதாம்பாள் தாஸ் H.H இராஜகோபால தொண்டைமான் அவர்கள் இந்தியாவுடன் இணைத்திட இசைவு தெரிவித்தார்.

அதன்படி எண்ணிலடங்கா சொத்துக்களையும் அன்றைய சமஸ்தானம் கருவூலத்தில் இருந்த ₹72 இலட்சம் பணத்துடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை 3- 3- 1948ம் ஆண்டு இந்தியாவுடன் இணைத்தார்.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானம் அன்றைய சென்னை மாகாணத்தின் திருச்சி ஜில்லாவின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்து 14- 01- 1974ம் ஆண்டு தமிழகத்தின் 15-வது மாவட்டமாக "புதுக்கோட்டை "மாவட்டம் உதயமானது.

அன்றைய தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின்  வேண்டுகோளுக்கினங்க சமஸ்தானத்தின் புதிய அரண்மனையை புதிய மாவட்டத்தின் ஆட்சி தலைவர் அலுவலகம் அமைத்திட தமிழக அரசிடம் ஒப்படைத்தார் எங்களது மாமன்னர்.  இன்றைய இந்தியாவிலேயே அதிக நிலப்பரப்பில் (99.99 ஏக்கர்) அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரகம் எங்களது புதுக்கோட்டை மட்டும்தான்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பெருமாளும், உலகிலேயே வடக்கு திசை பார்த்து தனி சன்னதியில் வீற்றிருக்கும் பைரவர், தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கோத்பவர்  (திருமயம்)

2) தென் இந்தியாவிலேயே மிகப்பெரிய சிவன் சிலையும் (நக்கீரமங்கலம்),

 3)உலகிலேயே முதன்முதலாக சாம்பிராணி போட்ட தலம் ( தீயத்தூர்)

இவ்வளவு பெருமை மிகுந்த எமது புதுக்கோட்டை மாவட்டம் உதயமான நாள் இன்று.

எனது மாவட்டத்தின் பெருமை எனது பெருமை.

I Love Pudukkottai

வெள்ளி, 17 ஜனவரி, 2020

யாருக்கான_வளர்ச்சி?


#யாருக்கான_வளர்ச்சி?

"ஒரு சென்டி மீட்டர் நிலம் கூட உங்களுக்கு கிடையாது. துப்பாக்கி முனையில் நிலம் கையகப்படுத்தப்படும்."

ஆகஸ்டு மாதம் தொடங்கி நான்கு வாரங்களாக அமேசான் எரிந்தது. ஒருவேளை அமேசான் காடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டால் என்ன ஆகும்? 20 சதவீத ஆக்ஸிஜன் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்படும். அது மட்டுமல்ல 90 முதல் 140 பில்லியன் கார்பன் அமேசான் காடுகளில் தக்க வைக்கப்பட்டுள்ளது.

காடுகள் அழிக்கப்பட்டால் கார்பன் மொத்தமும் வளிமண்டலத்தில் செலுத்தப்படும். நாம் பயன்படுத்தும் மருந்துகளில் சிலவற்றின் மூலப்பொருட்கள் அமேசானில் மட்டுமே கிடைக்கிறது. கேன்சர் நோயை குணப்படுத்தும் சில அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளின் மூலப்பொருட்கள் அமேசானில் உண்டு.

அமேசானில் இருக்கும் மருந்து செடிகளில் 5 சதவீதத்தை கூட இதுவரை ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை.

"ஒரு சென்டிமீட்டர் நிலம் கூட பழங்குடியின மக்களுக்கு தரமாட்டேன். ரோரய்மா மாநில மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் 2019இல் ராபோஸா பழங்குடியினர் நிலத்தை துப்பாக்கி முனையில் பறித்துக் கொள்வோம்" எனக் கூறியிருந்தார் பிரேசிலின் அதிபர் ஹையர் பொல்சனரோ.

பிரேசிலில் இருக்கும் அமேசான் காடுகளை நிமிடத்திற்கு மூன்று ஃபுட்பால் கிரவுண்ட் அளவிற்கு நெருப்பு அழித்தது. சுரங்கங்கள் தொடங்கவும், சோயா பீன்கள் நடவும் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறார். பழங்குடியினர் வெளியேற்றப்படுகிறார்கள். பழங்குடியின தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். பழங்குடியினர் இயற்கையின் அங்கமாக வாழ்ந்து வருபவர்கள்.

9 லட்சம் பழங்குடியினர் 250 இனக் குழுக்களாக வாழ்ந்து 50 மொழிகள் பேசி வருகிறார்கள். விரைவில் அனைத்தும் துடைத்தெறியப்படும் நிலை உருவாகியுள்ளது.

இவை அனைத்தும் ஹையர் பொல்சனரோ என்ற ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகார அதிபரால் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்று இயற்கையும், மண்ணின் மக்களுக்கும் எதிரான மனப்போக்கு பல நாடுகளிலாக வளர்ந்து வருகிறது.

ஒரு வித கோமாளித்தனமான குணம் உடைய இந்த சர்வாதிகாரிகள் மக்களையும் இயற்கையும் அழித்து வளர்ச்சியை உருவாக்குவதாக சொல்கிறார்கள். வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானதாக இருக்க வேண்டும். ஆனால், வளர்ச்சி என்பது ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமானதாக அவர்கள் கருதுகிறார்கள்.

1971ம் ஆண்டு ஜனவரி 23 & 24ல் திராவிட கழகம் சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு

1971ம் ஆண்டு ஜனவரி 23 & 24ல் திராவிட கழகம் சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடந்தது, எப்பொழுதும் போல அப்பொழுதும் மூட நம்பிக்கையினை ஒழிப்பதாக சொன்னார்கள்

மூட நம்பிக்கை ஒழிப்பு என தீ மிதித்தல், கரகம், பால்குடம், அலகு குத்துதல் போன்றவற்றை கிண்டல் செய்தனர்

அவர்களுக்கு தெரிந்த சீர்திருத்தமே கிண்டல் செய்வது ஒன்றுதான், அது ஒன்றுதான் சீர்திருத்தம்

கூட்டத்தில் உச்சமாக ராவண லீலாவில் ராவணன் உருவினை எரிப்பது போல ராமலீலா என சொல்லி ராமன் படத்தை எரித்தார்கள்

இது பெரும் சர்ச்சையானது காவல்துறை வந்து இது மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என சொல்லி மாநாட்டை கலைந்து போக சொன்னது

எப்பொழுதுமே பின்னால் இருந்து ஆடும் கருணாநிதி இங்கும் ஆடினார், காவல்துறை அவர் கட்டுபாட்டில் இருந்ததால் நடக்கும் காட்சிகளை உலகம் காண அனுமதித்தார், அதில் அவருக்கு ஒரு சந்தோஷம்

இந்து மக்கள் கண்ணீர் வடிக்க ராமனின் திருவுருவம் கொளுத்தபட்டது , திமுகவில் மட்டுமல்ல தமிழகம் முழுக்க இது சலசலப்பினை ஏற்படுத்தியது

இன்றிருக்கும் இந்து பலமான இந்தியாவெனில் அன்றே ராம்சாமியின் தாடியினை இழுத்து போட்டு சாத்தியிருப்பார்கள், ஆனால் அன்று இந்துக்களுக்கு யாருமில்லை, ஒரு அமைப்பும் பலமாயில்லை

உச்சமாக செய்ய கூடா செயலை செய்தனர் திமுகவினர், மாநில அரசும் கருணாநிதியும் தங்களுக்கு சாதகம் என கருதி அந்த படுபாதகத்தை அரங்கேற்றினர்

ராமன் சீதையின் படம் செருப்பால் அடிக்கபட்டு கொளுத்தபட்டது, அனுமனுக்கும் வெற்றிலை மாலை சாற்றபடுவது செருப்பு மாலை சாற்றபட்டு அவமானபடுத்தபட்டது

அதர்மத்தின் உச்ச காட்சிகள் அவை

முதல் நாள் காட்சிகளை அனுமதித்த விளைவு பெரும் அதர்வுகளை ஏற்படுத்திற்று, இன்றிருப்பது போல வாட்சப் , சமூக தளம், நியூஸ் மீடியா என எதுவுமில்லா காலமது என்பதால் மறுநாளே செய்தி பரவிற்று

தேர்தல் வரவிருக்கும் நிலையில் யாரோ செருப்பு வீசியதாகவும் அந்த ஆத்திரத்திலே இவை எல்லாம் நடந்ததாகவும் கதை திருப்பபட்டது

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி ஓய்ந்தது திக கோஷ்டி. நல்லோரின் கண்ணீரும் ராமபக்தரின் கண்ணீரும் ஆறாய் ஓடின‌

இந்துக்களுக்கு யாரும் இல்லை, எந்த பத்திரிகையுமில்லை ஊடகமுமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அதை செய்ய யாரும் தயாராக இல்லை

மத்தியிலும் பலமில்லை மாநிலத்திலும் திராவிட ஆட்சி என எல்லோரும் அஞ்சிய நேரமது

சோ ராமசாமி இந்த இடத்தில்தான் துக்ளக்கை தொடங்கினார், அதற்கு விளம்பரமுமில்லை ஒன்றுமில்லை. தன்னை யார் என்ன செய்யமுடியும் என இருமாப்பின் உச்சத்தில் இருந்தார் கருணாநிதி

அடுத்த தேர்தலிலும் 1971 மார்ச் மாதம் திமுக வென்றது, அங்குதான் பிடித்தது சனி. சில வெற்றிகள் ஒரு பெரும் தோல்விக்கு அடித்தளமாகும்

அந்த வெற்றிக்கு பின்பே ராமசந்திரன் கருணாநிதி பிளவு தொடங்கி அடுத்த 4 ஆண்டுகளில் ஆட்சியினை இழந்தார் கருணாநிதி அதன் பின் எழுவது சிரமாய் இருந்தது

ராமர் படத்தை அடித்த ராம்சாமியும் மணியம்மையும் காலமாயினர், வீரமணி ராமர் கோவிலை காண இன்னும் உயிரோடு இருக்கின்றார் என்பது அவருக்கான தண்டனை

ராமனை செருப்பால் அடித்த வலியில் உருவான துக்ளக்கின் காலுக்கு கருணாநிதி வரவும் ஒரு காலம் இருந்தது

அடுத்த 20 ஆண்டுகளில் சோவின் ஆலோசனைக்காக காத்திருந்தார் கருணாநிதி

அதுமட்டுமா? ராமர் படத்தை செருப்பால் அடித்து எரித்ததை ரசித்து அனுமதித்த கருணாநிதி பின்பு ராமனுக்காக கோவில்கட்ட கட்சி நடத்திய பாஜகவிடம் தாராளமாய் போய் சேர்ந்தார்

இருவருக்குமே வெட்கமில்லை என்பது வேறுவிஷயம்

இன்று திமுகவினர் ஆயிரம் சொல்லலாம், என்னவும் தற்காத்து அவர்கள் பேசலாம்

செய்யகூடாத படுபாதகமான காரியத்தை , புனிதமான ராமன் படத்தை கொளுத்தி செருப்பால் அடித்து அழிச்சாட்டியம் செய்தபின் அவர்கள் வீழ்ச்சி தொடங்கிற்று

ராம்சாமியும் மணியம்மையும் கொஞ்ச நாளில் செத்தனர்

தன்னை அசைக்க யாருமில்லை என துரியோதனன் பாணியில் இருந்த கருணாநிதி ராம்சந்திரன் எனும் பெரும் எதிரியினை பெற்றார் கூடவே இந்திராவின் மிசா

மிசாவில் மாறனும் ஸ்டாலினும் பட்டபாடுகள் கருணாநிதியினை கலங்க வைத்தன‌

அதன் பின் கருணாநிதி பட்டபாடுகளை எல்லாம் வரலாறு அறியும், அவ்வளவு சிரமம் அவ்வளவு வீழ்ச்சி
பார்ப்பண ஜெயலலிதா திராவிட கழக வாரிசாக தொடர்ந்து அரியணையில் அமரும்பொழுதே மனதால் செத்தார் கருணாநிதி

அதன்பின் கருணாநிதி ராமனின் பக்கம் அதிகம் செல்லவில்லை மெல்ல ஒதுங்கினார்

பின் கொஞ்சகாலம் டெல்லியில் பங்குபெற்றிருந்தபொழுது ராமர்பாலம் தொடர்பாக பழையதை மறந்து மறுபடி கலாய்த்தார்

அந்தோ பரிதாபம் ஸ்பெக்ட்ரம் வழக்கும், ஈழசிக்கலும் அவருக்கு பெரும் வீழ்ச்சியினை கொடுத்தன, அத்தோடு பதவிக்கே வரமுடியாமல் விடைபெற்றார் கருணாநிதி

காலம் பொல்லாதது, ஆண்டவனின் கண்கள் கடுமையானவை

அயோக்கியன் எவனும் சும்மா அழிந்ததில்லை, அவன் ஆடி தீர்த்துவிட்டுத்தான் அழிந்து ஒழிந்து போவான் என்பது தெய்வத்தின் நியதி.

இன்று ராம்சாமியின் வாரிசான வீரமணி அயோத்தி ராமர்கோவிலை கண்ணார பார்க்க வேண்டிய நிலை

கருணாநிதியின்ன் வாரிசுகள் இந்துமதம் பெரும் எழுச்சி பெறுவதை அச்சத்தோடும் தயக்கத்தோடும் பார்த்து கொண்டிருக்கின்றன‌

மாபெரும் ராஜதந்திரி என சொல்லபட்ட கருணாநிதியின் மகன் எடபபடி பழனிச்சாமி எனும் சாமானியனிடம் முகத்தில் குத்து வாங்கி மல்லாக்க கிடக்கின்றார்

எந்த சேலத்தில் ராமர்படம் எரிக்கபட்டபொழுது முதல்வராய் கருணாநிதி இருந்தாரோ, அதே நாற்காலியில் இன்று அமர்ந்திருப்பவர் சேலத்துக்காரர், அவரிடம் தோற்று ஓடிகொண்டிருப்பவர் கருணாநிதியின் மகன்

ராமன்படத்தை ராம்சாமி அடித்தபொழுது மவுனம் காத்த இந்திராவின் வாரிசுகள் படாதபாடு படுகின்ன்றன‌

அன்று அமைதிகாத்த தமிழக காங்கிரஸ் இங்கு சுருங்கி போயிற்று

ராமரை இம்மண்ணில் இருந்து அகற்ற நினைத்தவரே அழிந்துபோயினரே தவிர இம்மண் மீண்டெழுந்தது, அயோத்தியில் கட்டபடும் ஆலயம் இங்கும் எதிரொலிக்கும் அதில் திராவிடம் கருகும்

அன்று ராமன்படத்துக்கு வைக்கபட்ட தீ, வைத்தவர் தலைக்கே திரும்பும்

தர்மம் தன் காட்சிகளை மிக சரியாக நடத்திகொண்டிருக்கின்றது

இன்னும் சிந்தித்து பாருங்கள், ஆயிரமாயிரம் விஷயம் உங்களுக்கு விளங்கும்

தெய்வம் எல்லாவற்றையும் நாடகமாக நடத்தி நன்மை கொடுக்கும், ராமன் படம் அடிக்கபட்ட ஆத்திரத்தில்தான் சோ துக்ளக்கினை தொடங்கினார், அதன் பின்பே அவர் அறியபட்டார்

ஒரு பலமும் இல்லாத அந்த சாமான்யனுக்கு தெய்வபலம் மட்டும் இருந்தது அது காட்சிகளை நடத்தியது, கடைசிவரை திமுகவுக்கு மிகபெரும் சவாலை தொடுத்தார் சோ. திமுக அதில் திணறியது

இன்றும் அந்த தீபம் திராவிட இருட்டினை விரட்டிகொண்டிருக்கின்றது

1971 சம்பவம் சாதாரணம் அல்ல‌

மனிதனை வைத்து தெய்வம் ஆடும், தெய்வங்களை வைத்து மனிதர் ஆடினால் என்னாகும் எனபதை உலகுக்கு சொன்ன பெரும் சம்பவம் அது, பகவான் ராம்சாமி என்பவர் மூலம் ஆடிய நாடகம் அது

தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாளே (சுறவம்) என்று சொன்னவர்கள் யாரெல்லாம் தெரியுமா தமிழா உமக்கு?

சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாள் (திருவள்ளுவர் ஆண்டு 2048 தொடக்கம்), பொங்கல் நாள், தமிழர் திருநாள்.

தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாளே (சுறவம்) என்று சொன்னவர்கள் யாரெல்லாம் தெரியுமா தமிழா உமக்கு?

01. மறைமலை அடிகளார் (1921)
02. 500 தமிழறிஞர்கள் (1921)
03. தேவநேயப் பாவாணர்
04. பெருஞ்சித்திரனார்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)
20.பேராசிரியர் கா.நமசிவாயர்
21. பெரியார்
22. தமிழக அரசாணை (1971,2008)

மலையகத்தில்

01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்


வியாழன், 9 ஜனவரி, 2020

#நாடகக்_காதல்....


#நாடகக்_காதல்....

நான் தீண்டத் தகாதவன் என்றேன்.

நான் தீண்டத் தகுந்தவள்தான்
தீண்டு என்றாள்...

நான் தொட்டால் தீட்டு என்றேன்.

மாதம் மூன்று நாட்கள் 'தீ்ட்டின்' எரிச்சலில் இருந்து முந்நூறுநாள்
விடுபடவேண்டும் என்றாள்.

என் வர்ணம் வேற என்றேன்.

புதுவர்ணத்தில் குழந்தை
பிறக்கும் வா என்றாள்.

நான் தேங்கா சிரட்டையில்
நீர் அருந்துபவன் என்றேன் :

அட 'ஆர்கானிக்' வழிமுறை என
கண்சிமிட்டினாள்.

நான் பறை வாசிப்பவன் என்றேன்:

ஹம் .. எப்போதும் உற்சாகமாய்
இருப்பவன்னு சொல்லு, என்னால் பத்து பிள்ளைக்குமேல் பெறமுடியாது என்றாள்.

நான் சேரியில் வசிப்பவன் என்றேன்:

உலகமே புறந்தள்ளினாலும்
தனித்து வாழ பழகியவன் என்று
சொல் என்றாள். 

நான் அடிமை என்றேன்:

நானே உனது திறவுகோல்
ஆடை களைந்து கொல் என்றாள்.

இதுபாவம் என்றார்களே என்றேன் :

ஓரினச் சேர்க்கையாளர்களை துதிப்பவர்களின் பேச்சை
புறந்தள்ளி எனை புணர்ந்து'கொல்' என்றாள்.

தீண்டத் தகுந்தவனும்
தீண்டத் தகுந்தவளும்.

                            ........🖤💙❤️......

புதன், 8 ஜனவரி, 2020

*திரெளபதிக்கு மட்டும்* *ஐந்து* *கணவன்மார்* *வாய்த்த மர்மம் என்ன?*

*திரெளபதிக்கு மட்டும்* *ஐந்து* *கணவன்மார்* *வாய்த்த மர்மம் என்ன?*
 *மகாபாரதத்தில்* அனைவரது சர்ச்சையைக் கிளப்பிவிட்ட விடயம் இது. அண்ணன் தம்பிமார் ஐவர்க்கு ஒரு மனைவியா? அப்படியானால், எவ்வாறு சண்டையில்லாது வாழ்க்கையைக் கூறுபோட்டார்கள்? எல்லோருமே எப்படி ஏகமனதாக ஏற்றுக் கொடண்டார்கள்?
மகாபாரதத்தில் அனைவரது சர்ச்சையைக் கிளப்பிவிட்ட விடயம் இது. அண்ணன் தம்பிமார் ஐவர்க்கு ஒரு மனைவியா? அப்படியானால், எவ்வாறு சண்டையில்லாது வாழ்க்கையைக் கூறுபோட்டார்கள்? எல்லோருமே எப்படி ஏகமனதாக ஏற்றுக் கொடண்டார்கள்?

தமிழர் பண்பாடு ஒருவனுக்கொருத்தி என்பதுதான். ஆனால் திரெளபதை ஐவருக்கொருத்தியான மர்மம் இன்றும் பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

உண்மையில் நடந்ததுதான் என்ன? பாஞ்சால தேசத்தின் மன்னன் துருபதன். தனது மகள் திரெளபதிக்கு திருமணம் நடத்தி வைப்பதற்காக சுயம் வரத்தில் ஒரு போட்டியையும் வைத்தார்.

பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சால தேசத்தில் நடைபெற இருந்த சுயம்வரத்திற்குச் சென்றனர். அப்போது தான் வியாசக முனிவர் ஒரு வரலாற்று உண்மையை விபரித்தார். முனிவர் ஒருவருக்கு அழகிய பெண் இருந்தாள், அவளுக்கோ திருமணம் நடைபெறக் காலதாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. அப்பெண்ணோ “தனக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டும்” என்று பரமசிவனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.

பரமசிவனும் அவள் முன்பு தோன்றினார். “பெண்ணே!, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே!, நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.

பரமசிவன் பதிலேதும் கூறாமல் நின்றார். அப் பெண்மணியோ, தான் வேண்டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூறலானாள். இவ்வாறு அவள் ஐந்து தடவைகள் “நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்டினாள்.

ஐந்தாம் முறையாக அப்பெண் கூறிய பின்பு பரமசிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்பிய வண்ணமே நற்குணங்கள் நிறைந்த ஐந்து கணவர்களைப் பெறுவாயாக” என்று வரமருளினார்.

“நான் ஒருவரைத்தான் மணக்க விரும்புகிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்டுமென அருளிச் செய்தீர்களே” என்று அப்பெண்மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.

“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அருளிவிட்டேன், அடுத்த பிறவியில் நீ இந்த வரத்தின் படி கணவர்களைப் பெறுவாய்” என்று கூறி, பரமசிவன் மறைந்தார். பரமசிவனால் வரம்பெற்ற அப்பெண்தான் துருபதன் புத்திரியான திரெளபதையாவாள் என்று கூறிமுடித்தார் வியாசக முனிவர்.

திரெளபதியை சுயம்வரத்தில் மணக்க துருபதன் ஒரு போட்டி வைத்திருந்தான். சுழலும் சக்கரத்தின் நடுவில் உயரத்தில் ஒரு மீன் இருக்கும். கீழே உள்ள நிழலை நோக்கியபடியே மேலே சுற்றும் மீனைக் குறிபார்த்து அம்பினால் எய்து வீழ்த்த வேண்டும் அதுதான் நிபந்தனை.

இப்போட்டியைக் கண்டு களிக்கவும் அதில் பங்குபற்றி திரெளபதியை மனைவியாக அடைய ஆவல் கொண்ட மன்னர்களும் கூடியிருந்தனர். அக் கூட்டத்தில் துரியோதனன், கர்ணன் இவர்களுடன் அந்தணர் வேடத்தில் இருந்த பாண்டவர்களும் இருந்தார்கள்.

போட்டி விறுவிறுப்பாக ஆரம்பமானது. பல நாட்டு மன்னர்கள் வில்லில் நானேற்ற முடியாதவர்களாகத் தோற்றுப் போயினர். துரியோதனன் போன்றோரும் வில்லின் வேகத்தால் கீழே விழுந்தனர். கர்ணன் தன்னுடைய திறமையால் நானேற்றி மேலே சுழல்கின்ற மீனை வீழ்த்தி விடலாம் என்று உற்சாகத்துடன் எழுந்தான்.

சபையிலே ஒரே உற்சாகம் “நிச்சயம் கர்ணன் வெற்றிபெற்று திரெளபதியை மணந்துகொள்வான்” என்று பேசிக் கொண்டதும் திரெளபதியின் செவிப்பறையிலும் முட்டிமோதியது. கர்ணன் வில்லைத் தொட்டு வளைக்கும் நேரத்தில் திரெளபதி தன் தோழியிடம் உரக்கக் கூறினாள்.

“ஒரு தேரோட்டியின் மகன் இந்தப் போட்டியில் வென்றால் நான் அவனை மணந்து கொள்ள மாட்டேன்” என்றாள். வில்லை வளைக்க முயன்ற கர்ணனின் காதுகளில் அவை இடி ஓசையாக ஒலித்தது.

அக்கினி மின்னல் அவன் உணர்வுகளை ஊடுருவிற்று. அவமானமும், வெறுப்பும் கர்ணனைப் புடைசூழ, வில்லை கீழே வைத்துவிட்டு தனது இருக்கையை நோக்கி நகர்ந்தான்.

அந்தணர் வேடத்தில் இருந்த அர்ச்சுனன் சுயம்வரத்தில் வென்று திரெளபதியை மணக்கும் தகுதி பெற்றான். துருபத மன்னனின் ஆசியுடன் பெரியோர்களின் வாழ்த்துக்களுடனும் அர்ச்சுனன் திரெளபதியையும் அழைத்துக் கொண்டு தருமர், பீமன், நகுல, சகாதேவனுடனும் இல்லம் வந்தடைந்தனர்.

வாயிலில் நின்ற வண்ணம் “தாயே!, நாங்கள் மாங்கனி ஒன்றை கொண்டு வந்திருக்கின்றோம்” என்று பாண்டவர்கள் கூற குந்திதேவியும் இல்லத்துள்ளே இருந்தவாறே “அவ்வாறாயின் ஐவரும் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று மொழிந்தாள்.

“அர்ச்சுனா போட்டியில் வெற்றி பெற்ற நீயே திரெளபதியை மணக்க வேண்டும் தாய் கூறியதை நீ தவறாக எடைபோட வேண்டாம்” என்றுரைத்தார்கள் சுகோதரர்கள். “வியாசக முனிவர் நமக்கு உரைத்தப்படி தாயின் வாக்கு பொய்ப்பதற்கில்லை எனவே ஐவருமே மணந்து கொள்வோம்” என்றான் அர்ச்சுனன்.

பின்பு திரெளபதியின் முடிவை அறிய விழைந்த போது, தாய் குந்திமாதேவியின் வாக்கை தெய்வ வாக்காகச் சிரமேற்று ஐவரையும் மணக்க இசைந்தாள் திரெளபதி. பாண்டவர்களின் மனப் போராட்டத்தைப் போக்க வியாசகர் அங்கு வந்தார். பாண்டவர்கள் தேவகுமாரர்கள் என்றும் திரெளபதி லட்சுமியின் அம்சம் பெற்றவள் என்றும் கூறினார். மேலும் பரமசிவனிடம் பெற்ற வரமே இது என விளக்கமளித்தார்.

பாண்டவர்கள் ஐவரும் திரெளபதியை மணந்து கொண்டதும் தங்களுக்குள் ஒரு விதிமுறையை வகுத்துக் கொண்டார்கள். ஒரு வருடம் ஒருவரோடு திரெளபதி மனைவியாக வாழவேண்டும். அவ்வாறு அவர்கள் வாழும் ஓராண்டு காலமும் மற்ற நான்கு பாண்டவர்களும் அவர்களைப் பார்க்கக் கூடாது. இவ் விதியை மீறிப்பார்த்தால் அவர்களைப் பார்த்தவர் ஓராண்டு கானகத்தில் வசிக்க வேண்டும்.

5 கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி எப்படிப் பத்தினியருள் ஒருவராக ஆனாள்?


5 கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.
5 கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து
தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.

இன்றைக்கும் கணவனைப் பிரிந்த மனைவியரும் சரி, இல்வாழ்க்கை நன்கு அமைய வேண்டுபவரும் சரி. திரெளபதி அம்மன் கோவிலில் “தீ மிதி” என்னும் பூக்குழியில் இறங்கித் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்வதைப் பார்க்க முடியும்.

************************************************
ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு ஏற்கெனவே சந்தேகம். இந்தப் பெண்மணி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். என்று. அதுவும் இப்போது கிருஷ்ணர் வேறு வந்திருக்கிறார்.

திரெளபதிக்கு அண்ணன் முறை. அவர் முன்னால். பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் ஒருவாறு ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள்.

பீமனுக்குக் கோபம் வந்தது. என்றாலும் தனிமைக்காகப் பொறுமையுடன் இருந்து, தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து,. ‘கிருஷ்ணா, உனக்கே இது நியாயமா? இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி, என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும்? நீயானால் சிரிக்கிறாய்! திரெளபதியும் சிரிக்கிறாளே!’ என்று கேட்டான்.

கிருஷ்ணர் சொன்னார்: ‘பீமா, நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வருந்த ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், கேள்!

இன்றிரவு திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் அல்லவா?” என்று கேட்டார். ‘ஆம், பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் உதயத்தில் திரும்பி வருவாள்.’ என பீமன் சொல்ல, ‘அப்போது திரெளபதி எப்படி இருப்பாள்?’ என்று கிருஷ்ணர் கேட்க, பீமனோ, ‘புடம் போடப் பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.’ என்று சொல்கிறான்.

‘பீமா, இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார்.’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும், கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி, தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்கத் தடுக்கிறார், பரந்தாமன்.

‘அங்கே பார்!’ என்கிறார். என்ன ஆச்சரியம்! தீக்குள் திரெளபதியா தெரிந்தாள்? சாட்சாத் அந்த அகிலாண்டேஸ்வரி, சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி, அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். அவளைத் தீயும் சுடுமோ? அவளே தீ, அவளே, நீர், அவளே வாயு, அவளே ஆகாயம், அவளே நிலம். சகலமும் அவளே அல்லவா? திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைக்கிறார் அந்த வாசுதேவன்.

‘பீமா, நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி ஆவாள். அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ,

அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே! நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள்.

உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ, அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே! இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப் படும் காட்சி. இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய்.’ என்கிறார்.


இவள் நவீன பாஞ்சாலி ரஜோ வர்மா!

(பஞ்ச பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி பாண்டவர்கள் ஒவ்வொருவருடனும் உறவு வைத்துக்கொள்ள முன்பு தீக்குளிக்த்துவிட்டு தான் போகின்றவா. ஆனால் இந்த நவீன் பாஞ்சாலி ஐந்து பேருடன் உறவு கொண்டாலும் தண்ணீரில் கூட குளிப்பதில்லையாம். வேறு ஒன்றுமில்லை குளித்து பழக்கமில்லையப்பா )

ரஜோ வர்மா சரி, அதென்ன நவீன பாஞ்சாலி?

21 வயதாகும் ரஜோ வர்மா, ஐந்து சகோதரர்களை ஒன்றாக மணந்து கொண்டதோடு, அவர்களுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவர்களும் ஒற்றுமையா இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் அந்த அம்மணியை நவீன பாஞ்சாலி என்று அழைப்பதில் என்ன தவறு?

அவர்கள் வசிக்கும் கிராமம் டேராடூன் அருகில் உள்ளது. வசதி உள்ளவரகள் சென்று பார்த்துவிட்டு வரலாம்.

ஒரே ஒரு கஷ்டம், அவளுக்கு ஒரு ஆண் மகவு உள்ளது. அந்த ஐந்து பேரில் அந்தக் குழந்தைக்கு தந்தை யார் என்பது மட்டும் அவளுக்குத் தெரியாது. ஒரு இரவுக்கு ஒரு சகோதரன் என்ற கணக்கில் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த கிராமத்திற்கு அது ஒன்றும் புதிதில்லை. கணவனின் சகோதரனையும் மணந்து கொள்வது அக்கிராமத்தில் வழக்கத்தில் உள்ளதாம்


வெள்ளி, 3 ஜனவரி, 2020

உலகளவில் பசி பட்டினி நிறைந்த நாடுகளின் பட்டியலில் 102வது இடத்தைப் பெற்றுள்ளது.


உலகளவில் பசி பட்டினி நிறைந்த நாடுகளின் பட்டியலில் 102வது இடத்தைப் பெற்றுள்ளது.

சந்திரனுக்கு சாட்லைட் அனுப்பிய நம் நாடு,

👎இந்த ஆய்வின்படி ஒவ்வொரு நாட்டுக்கும் 100 புள்ளிகள் வழங்கப்படும். இதில் இந்தியா 30.3 மதிப்பெண் பெற்று 102வது இடத்தை பிடித்துள்ளது

👎நம்மை சுற்றி இருக்கும் பிற நாடுகளான பாகிஸ்தான் 94 இடத்திலும், பங்களாதேஷ் 88 இடத்திலும், நேபால் 73 வது இடத்திலும், இலங்கை 66 ஆவது இடத்திலும் முன்னேறிய நிலையில் காணப்படுகின்றன.

👎மேலும், தென் ஆப்பிரிக்கா 59 வது இடத்திலும், பிரேசில் 18 ஆம் இடத்திலும், ரஷ்யா 22ஆம் இடத்திலும் உள்ளன.

👎வருடா வருடம் இந்த பட்டியலில் இந்தியா பின்னோக்கி செல்கிறது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

👎2015ஆம் ஆண்டில் 93 இடத்தில் இருந்த இந்தியா தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது.

👎2014ஆம் வருடம் 77 நாடுகளில் ஆய்வு செய்ததில் இந்தியா 55 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

👎இந்த ஆய்வில் 39 சதவீத வீடுகளுக்கு சுகாதாரமற்ற நிலையில் இருப்பது அறியப்பட்டுள்ளது.

👎இப்பொழுதும் திறந்தவெளியில் கழிப்பிடங்கள் உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

ஒருபுறம் சந்திராயன் மற்றொருபுறம் பசியும் பட்டினியும் வளர்ந்து வருகிறது.

ஏற்கனவே 100க்கு 34 குழந்தைகள் தாயின் கர்ப்பப் பையிலேயே இறந்து போகிறது. 9 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதிலேயே வயதுக்குள்ளேயே ஆரோக்கிய குறைபாடால் இறந்து போகிறார்கள். இந்தியாவில் 19 கோடிப்பேர் இரவு பசியுடன் படுக்கைக்கு செல்கிறார்கள். தற்போது ஆய்வு முடிவு மோசமாக வந்திருப்பது மேலும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்குவதாக இருக்கிறது.

விவசாயிகளிடமிருந்து அரிசி கொள்முதல் செய்யப்பட்டு பொது விநியோகத் திட்டம் மூலம் பொது மக்களுக்கு உணவு கொடுப்பதே மேலும் விரிவு படுத்துவது அத்யாவசியமாகிறது. ஆனால், அதை மையப்படுத்தி ஒற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்று பயனாளிகளை சுருக்குவது ஆபத்தாக முடியும்.