#யாருக்கான_வளர்ச்சி?
"ஒரு சென்டி மீட்டர் நிலம் கூட உங்களுக்கு கிடையாது. துப்பாக்கி முனையில் நிலம் கையகப்படுத்தப்படும்."
ஆகஸ்டு மாதம் தொடங்கி நான்கு வாரங்களாக அமேசான் எரிந்தது. ஒருவேளை அமேசான் காடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டால் என்ன ஆகும்? 20 சதவீத ஆக்ஸிஜன் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்படும். அது மட்டுமல்ல 90 முதல் 140 பில்லியன் கார்பன் அமேசான் காடுகளில் தக்க வைக்கப்பட்டுள்ளது.
காடுகள் அழிக்கப்பட்டால் கார்பன் மொத்தமும் வளிமண்டலத்தில் செலுத்தப்படும். நாம் பயன்படுத்தும் மருந்துகளில் சிலவற்றின் மூலப்பொருட்கள் அமேசானில் மட்டுமே கிடைக்கிறது. கேன்சர் நோயை குணப்படுத்தும் சில அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளின் மூலப்பொருட்கள் அமேசானில் உண்டு.
அமேசானில் இருக்கும் மருந்து செடிகளில் 5 சதவீதத்தை கூட இதுவரை ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை.
"ஒரு சென்டிமீட்டர் நிலம் கூட பழங்குடியின மக்களுக்கு தரமாட்டேன். ரோரய்மா மாநில மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் 2019இல் ராபோஸா பழங்குடியினர் நிலத்தை துப்பாக்கி முனையில் பறித்துக் கொள்வோம்" எனக் கூறியிருந்தார் பிரேசிலின் அதிபர் ஹையர் பொல்சனரோ.
பிரேசிலில் இருக்கும் அமேசான் காடுகளை நிமிடத்திற்கு மூன்று ஃபுட்பால் கிரவுண்ட் அளவிற்கு நெருப்பு அழித்தது. சுரங்கங்கள் தொடங்கவும், சோயா பீன்கள் நடவும் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறார். பழங்குடியினர் வெளியேற்றப்படுகிறார்கள். பழங்குடியின தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். பழங்குடியினர் இயற்கையின் அங்கமாக வாழ்ந்து வருபவர்கள்.
9 லட்சம் பழங்குடியினர் 250 இனக் குழுக்களாக வாழ்ந்து 50 மொழிகள் பேசி வருகிறார்கள். விரைவில் அனைத்தும் துடைத்தெறியப்படும் நிலை உருவாகியுள்ளது.
இவை அனைத்தும் ஹையர் பொல்சனரோ என்ற ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகார அதிபரால் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்று இயற்கையும், மண்ணின் மக்களுக்கும் எதிரான மனப்போக்கு பல நாடுகளிலாக வளர்ந்து வருகிறது.
ஒரு வித கோமாளித்தனமான குணம் உடைய இந்த சர்வாதிகாரிகள் மக்களையும் இயற்கையும் அழித்து வளர்ச்சியை உருவாக்குவதாக சொல்கிறார்கள். வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானதாக இருக்க வேண்டும். ஆனால், வளர்ச்சி என்பது ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமானதாக அவர்கள் கருதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக