16 காளைகளை அடக்கி இந்த ஆண்டின் தலைசிறந்த ஜல்லிக்கட்டு வீரன் என்ற பெயருடன் மாருதி கார் உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் தனது சொந்த கிராமத்திற்குள் நுழைந்தான்
அந்த இளைஞன்!
உற்சாகமாக வரவேற்றனர் மக்கள். ஆனாலும் பழமை சிந்தனை மாறாத ஆதிக்க குணம் கொண்ட சிலர் முகத்தை சுளித்துக்கொண்டு அந்த இளைஞனின் சாதியை (சலவை தொழிலாளி) குறிப்பிட்டு இவனுக்கெல்லாம் முதல் பரிசு கிடைச்சிருக்காக்கும் என்று ஏளனமாக பேசிக்கொண்டது காதில் விழுந்தது!
அந்த முணுமுணுப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் பலத்த உற்சாகத்துடன் வெற்றி வீரன் பிரபாகரனை ஊர் நடுவில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பெருமிதத்துடன் மேடையேற்றி கவுரவித்தது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI
வீரம் என்பது
சாதியில் இல்லை!
விளையாட்டுத் திறன்
பணத்தில் இல்லை!
எத்தனை பொருத்தமான வார்த்தை!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக