ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமம்
ஒரு கிலோ தாமிரம் (செம்பு) விலை : ரூபாய். 385
ஒரு ஆண்டில் தூத்துக்குடியில் வெட்டி எடுக்கப்படும் தாமிரத்தின் அளவு: 4 லட்சம் டன் (40 கோடி கிலோ)
ஒரு ஆண்டில் தமிழ்நாட்டு இயற்கை வளம் தூத்துக்குடியில் மட்டும் சுரண்டப்படும் மதிப்பு 15,400 கோடி ரூபாய்.
இது இந்தியாவின் ஒட்டு மொத தாமிரம் உற்பத்தியில் 36% தூத்துக்குடியில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.
பாஜக / காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் நன்கொடை கொடுக்கும் பெரு நிறுவனங்களின் பட்டியலில் வேதாந்தா குழுமம் (ஸ்டெர்லைட்) இருந்து வருகிறது.
வேதாந்தாவின் தலைமை அலுவலகம் லண்டனில் உள்ளது. இதன் உரிமையாளர் அனில் அகர்வால் பூனே மார்வாடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
அரசு நிறுவனமான பாரத் அலுமினியம் கார்பொரேஷனை கையகப்படுத்தி இந்துஸ்தான் அலுமியம் என பெயர் வைத்து அலுமினிய சுரங்கம் அமைத்து லாபம் ஈட்டி வருகிறார்.
ஆஸ்திரேலியா, ஜாம்பியா என பல நாடுகளில் சுரங்கம் அமைத்து தொழில் செய்து வரும் வேதாந்தா குழுமம் , தமிழ்நாடு - தமிழ் ஈழம் இடையே உள்ள மன்னார் வளைகுடாவில் மாபெரும் இயற்கை எரிவாயு குழாய்களை கடலுக்கு இடையே துளையிட்டு எடுக்க முயற்சித்த "காரின் இந்தியா" எனும் நிறுவனத்தை வாங்கியுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து இவர்களை விரட்டவில்லை என்றால் , தமிழர் கடலில் உள்ள இயற்க்கை எரிவாயு உறிஞ்சும் இவர்களின் திட்டம் மீண்டும் வரும்.
20 வருடமாக இருந்த இந்த ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை சூடுபிடிக்க காரணம்,
வேதாந்தா குழுமத்திற்கு கொடுத்த சுரங்க லைசன்ஸ் காலாவதி ஆகிறது. அதை புதுப்பிக்கும் போது தற்போது ஆண்டுக்கு எடுக்கும் 4 லட்சம் டன் தாமிரத்தை இருமடங்காக எடுக்க திட்டமிட்டு அனுமதி பெற முயற்சிக்கிறது வேதாந்தா குழுமம். ஏற்கனவே ரசாயன வாயு வெளியேற்ற விபத்திற்காக 100 கோடி அபராதம் பெற்ற இந்த நிறுவனம் பாதுகாப்பு குறைபாடுகள், மாவட்டம் முழுக்க நிலத்தடி நீர் மாசுபாடு, தோல் பிரச்சனைகள், புற்று நோய் உருவாக காரணமாகும் மாசுகளை வெளியேற்றி வருகிறது. ஏற்கனவே பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் தூத்துக்குடி மக்கள் இனி இரு மடங்கு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக