செவ்வாய், 31 ஜூலை, 2018

நன்றி மறப்பது நன்றன்று....... அப்படி என்னதான் செய்தார் கலைஞர்...???


நன்றி மறப்பது நன்றன்று.......
அப்படி என்னதான் செய்தார் கலைஞர்...???

இந்தியாவிலேயே முதன்முறையாக...

■பேருந்துகளை அரசுடைமை ஆக்கியவர்.

■விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியவர்.

■மாணவர்களுக்கு சத்துணவில் முட்டையும் இலவச பேருந்து பயணச் சீட்டும் வழங்கியவர்.

■முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கியவர்.

■மாநில முதல்வர்கள் சுதந்திரத்தன்று கொடியேற்ற உரிமை பெற்றுத் தந்தவர்.

■அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக் கழகம் அமைத்தவர்.

■சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று சட்டம் இயற்றியவர்.

■சீர் மரபினர் & மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடப்பங்கீடு வழங்கியவர்.

■குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைவாசிகளுக்காக அடுக்கு மாடி வீடுகள் அமைத்து அவர்களை குடியேற்றினார்.

■தாழ்த்தப்பட்டோருக்கும், மீனவர்களுக்கும் இலவச அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தந்தார்.

■இந்தியாவிலேயே முதல் முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச் சீர்திருத்தி அமைத்தார்.

■பணியாற்றும் பொழுது இறக்க நேரிடும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ. 10,000 (தற்போது ஒரு இலட்சம்) உதவித் தொகை வழங்கும் முறையைத் தொடங்கி வைத்தார்.

■தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வரதராசன் அவர்களை உயர்நீதிமன்ற நீதிபதியாக்கினார். பின்னர் அவர் உச்சநீதிமன்ற நீதியரசரும் ஆனார். உச்சநீதி மன்றத்தில் நீதியரசரான முதல் தாழ்த்தப்பட்டவர் அவரே.

■தனியார் பேருந்துகளை நாட்டுடமை ஆக்கி சேர, சோழ, பாண்டியன், பல்லவன்-திருவள்ளுவர் ஆகியோர பெயர்களால் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்.

■மாணவர்களுக்கு +2 வரை இலவசப் பேருந்துப் பயணச் சலுகை வழங்கினார். பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி முகாம் தொடங்கினார்.

■மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்சாவை ஒழித்து, அவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்ஷா வழங்கினார்.

■ஏழையர்க்குக் கண்ணொளி வழங்கும் திட்டம் செயல்படுத்தினார்.

■தொழுநோய் மற்றும் இரவலர்க்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தார்.

■ஆதரவற்ற குழந்தைகளைக் காத்திடக் கருணை இல்லம் அமைத்தார்.

■தமிழ்நாட்டில் மே முதல் நாளைத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என அறிவித்தார்.

■தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5 % தனி இட ஒதுக்கீடு வழங்கினார்.

■கல்வித் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புத் தேர்வுகளை (Compound system) நடைமுறைப்படுத்தினார்.

■மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கினார்.

■பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் கொண்டு வந்தார்.

■மாநில சுயாட்சி குறித்து ஆராய்ந்திட இராஜமன்னார் குழு அமைத்தார்.

■கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார்.

■தியாகி வ.உ.சிதம்பரனார் சிறையில் மெய்நோக இழுத்த செக்கினைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்து அதை நினைவுச் சின்னமாக்கினார்.

■விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவது போல் மொழிப்போர் தியாகிகளுக்கும் ஒய்வூதியம் வழங்கினார்.

■விடுதலைப் போராட்ட வீரர் இறந்துவிட்டால், அவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என ஆணையிட்டார்

■ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட ஒரு சிற்றூரைத் தேர்ந்தெடுத்து, அதில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்தினார்.

■சாதி, சமயப் பூசல்களை மறந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்திட நாடெங்கும் சமத்துவபுரம் திறந்து அவற்றிற்க்குப் பெரியார் நினைவு சமத்துவபுரம் எனப் பெயரிட்டார்.

■நாட்டு மக்களிடையே கூட்டுறவு, தற்சார்பு உணர்வுகளை வளர்த்திட நமக்கு நாமே திட்டம் கொண்டு வந்தார்.

■தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி அதனைத் தில்லிக்கு அனுப்பினார்.

■பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலங்காக்கத் தனித்துறை (அமைச்சகம்) ஏற்படுத்தினார்.

■சமூக சீர்த்திருத்தத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தினார்.

■இடைத்தரகர்களின் தலையீடு இன்றி உற்பத்தியாளரும், நுகர்வோரும் நேரடித் தொடர்பு கொள்ளும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கினார்.

■கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார்.

■பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களிலிருந்து வரும் 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச தொழிற் கல்வி வழங்கினார்.

■மெட்ராஸ் என்ற பெயரை ”சென்னை” என மாற்றினார்.

■உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு மகளிருக்கு இட ஒதுக்கீடு

■அரசு அலுவலர்கள், அரசின் நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு செய்தார்.

■நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட சிற்றுந்து (மினிபஸ்) திட்டம் கொண்டு வந்தார்.

■தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் (1969) ‘வங்கிகளை நாட்டுடமை’ ஆக்கிட யோசனை கூறினார்.  (இதன் அடிப்படையில்தான் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் 14 தனியார் வங்கிகளை நாட்டுடமை ஆக்கினார்.

■பன்னாட்டு மூலதனத்தை தமிழ்நாட்டுக்குக் கவர்ந்திட இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பூங்கா என்னும் கணினி மென்பொருள் பூங்காவினை அமைத்தார்.

■அரசு ஊழியர்களைப் பழிவாங்குவதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரகசியக் குறிப்பேடு முறையை ஒழித்தார்.

■தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக மாநில திட்டக்குழுவை அமைத்தார்.

■எட்டாம் வகுப்பு வரைபடித்த ஏழை இளம் பெண்களுக்கு அரசின் சார்பில் ரூ.5,000/- (அதன்பின்  ரூ.10,000/-) திருமண நிதி உதவித் திட்டம் வகுத்தார்.

■ஏழை எளியோருக்கான பன்முனை மருத்துவப் பரிசோதனைத் திட்டமான வருமுன் காப்போம் திட்டத்தை அறிவித்தார்.

■சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி அலுவலகம் கட்ட ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

■தமிழகத்தை இந்தியாவின் டெட்ராய்ட் ஆக மாற்ற கார் உற்பத்தி தொழிற்கூடங்கள் தொடங்க அனுமதித்தார்.

■உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்.

■தமிழ்விசைப் பலகையை தரப்படுத்துவதற்காக தமிழ் இணைய மாநாட்டை நடத்தினார்.

■சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு செய்தார்.

■தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார்.

■தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார்.

■கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கச் செய்தார்.

■பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் அதே மேடையில் தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்த 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் அறவே ரத்து, சத்துணவில் வாரம் இரு முறை முட்டைகளை வழங்கல் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்து, அதற்கான கோப்புகளில் மக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டார்.

■தந்தை பெரியார் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணியாக தகுதியுள்ள அனைத்து சாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகராக உத்தரவு பிறப்பித்தார்.

■எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது.

■கண்ணகி சிலை திறப்பு.

■இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கல்.

■நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம்.

■பனைத் தொழிலாளர் நலனுக்குத் தனி வாரியம்.

■தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்.

■நுழைவுத் தேர்வு ரத்து

■மருத்துவம் பொறியியல் கல்விக் கட்டணம் குறைப்பு.

■மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறுதல்.

■பின்தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்க மானியம்.

■சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம்.

■அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம்.

■சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

■அரசு ஊழியர்களுக்கு எதிரான டெஸ்மா சட்டம் ரத்து.

■அரசுப் பணியில் சேர வயது வரம்பு நீட்டிப்பு.

■இளைஞர் சுய உதவி குழு அமைத்தல்.

■சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டுவருதல்.

■கிராமங்களில் அமைதி ஏற்பட கோவில்களில் வழிபடும் இடங்களில் ஏற்றத் தாழ்வு அகன்றிட முக்கியப் பிரமுகர்களுக்கு, பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது.

தலைவர் கலைஞர் குறித்த 95 அரிய தகவல்கள் ...


தலைவர் கலைஞர் குறித்த 95 அரிய தகவல்கள் ...

1.நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.

2.கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.

3.கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.

4.கருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து.  எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார்.
கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.

5.முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.


6.நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.

7.தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.

8. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.

9.மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி.

10.கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.


11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.

12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி,மலைக்கள்ளன் .

13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.

14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.

15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.


16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.

19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.

20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.


21. கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.

22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார்.

23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.

திராவிட பிரிவினைவாதமும் திராவிட ஜனசங்கமும்
’தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?': சங்கரமடம் கேள்வி

24. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.

25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.

26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.

29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.


31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.

32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட  கருணாநிதி  தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.

34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.

35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது.  சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார்.  தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட  சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.

37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.

38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.

40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.

41. 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.  தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.

42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.

44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.

கருணாநிதிக்கு ஆ. ராசா உருக்கமான கடிதம்
ஓராண்டிற்குப் பிறகு தி.மு.க. தலைமையகத்திற்கு வந்த கருணாநிதி

46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, "கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?" என்றவர் கருணாநிதி.

47. கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.

48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.

49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.

50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.


51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் "உடன்பிறப்பே" என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் "உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று பேசவும் துவங்கினார்.

52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த "உடன்பிறப்பே" என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.

53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.

54. `சங்கத்தமிழ்', `தொல்காப்பிய உரை', `இனியவை இருபது', `கலைஞரின் கவிதை மழை',உட்பட 150-க்கும் மேலான நூல்களை கருணாநிதி எழுதியிருக்கிறார்.

55. உடன்பிறப்புகளுக்கு இவர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.

57. 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில்  எழுதினார் கருணாநிதி.

58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது 'பராசக்தி` திரைப்படம்தான்.  இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.

59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.

60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு"  என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.


61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.

62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.

63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. "அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்" என்றார்.

64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.

65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.

68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.

69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.

70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.


71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.

72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.

75. கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. "அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்" என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.

76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், "வணக்கம், தலைவர் இல்லம்" என்ற குரல் ஒலிக்கும்.

77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.

78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.

79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.


81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.

82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.

83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.

திமுக நாளேடான முரசொலி இணையதளத்தை ஊடுருவிய மர்ம நபர்
2017: தமிழ்நாட்டின் கலக்கல் அமைச்சர்கள்

84. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.

85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.

86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.

87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.

88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.

89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.

90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.


91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ' அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று துண்டு சீட்டு  எழுதி கொடுத்தார் கருணாநிதி.

92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 - ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.

93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே" என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.

94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி" என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்" என்றார்.

95. ”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” - இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.


செவ்வாய், 24 ஜூலை, 2018

ஸ்காலர்ஷிப்



'ஸ்காலர்ஷிப்'

உதவித்தொகை எனப்படும்
இந்த வார்த்தை தற்போது நமக்கு சாதாரணமாக தெரியலாம்...

ஆனால் இந்த வார்த்தைக்கு அர்த்தம்
உதவித்தொகை அல்ல
'அறிஞர்களுக்கு வழங்கப்படும் பெருமைக்குரியத் தொகை'

பாராளுமன்றத்தில்
"பட்டியல் மாணவர்களுக்கு
'ஸ்காலர்ஷிப்' வழங்கப்பட வேண்டும்"
என்று பாபாசாகேப் அம்பேத்கர்
கூறியபோது 430க்கு மேற்பட்ட
உறுப்பினர்கள் சிரித்தனர்.

"அம்பேத்கர் அவர்களே 'ஸ்காலர்ஷிப்' என்பது அறிஞர்களுக்கு அளிக்கப்படும் தொகை. அதை முப்பது மதிப்பெண் முப்பத்தைந்து மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு வழங்க சொல்கிறீர்கள்"
என்று கொக்கரித்தனர்.

அதற்கு அமைதியாக எழுந்து இப்படி பதிலளித்தார்
"மதிப்பிற்குரிய உறுப்பினர்களே
என் மக்கள் அறிஞர்களாக ஆகாமல் ஆவதற்கே நீங்கள் தான் காரணம்.
இத்தனை ஆண்டுகளாக என் மக்களுக்கான உரிமைகளை தடுத்து வந்தததற்கான அளிக்கப்பட வேண்டிய இழப்பீடுத் தொகை.
என் மக்கள் அறிஞர்களாக அளிக்கப்பட வேண்டியத் தொகை.
அது என் மக்களின் பணம்"
என்று சொன்னதும் மொத்த பாராளுமன்றமும் அமைதி ஆனது.
மீண்டும் அமைதியாக அமர்ந்தார்.

ஒரு பெயரில் கூட நமக்கு சிறு இழிவு கூட
வந்துவிடக் கூடாது என்று எப்படி உழைத்துள்ளார்.

யாராவது அதை உதவித்தொகை என்று சொன்னால்
"அது உதவித்தொகை இல்லை. அது என் பணம்"
என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள்....
ஜெய்பீம்!!!

வெள்ளி, 20 ஜூலை, 2018

தலைவர் பிரபாகரன் உலகின் மூத்த குடிகளான தமிழர்களுக்கு காலம் தந்த கொடை...


"தலைவர் பிரபாகரன் உலகின் மூத்த குடிகளான தமிழர்களுக்கு காலம் தந்த கொடை"-

தமிழினத்தின் வரலாற்றுப் பரப்புக்கால எல்லை மிக நீண்டது. அதனைத் தோற்றக்காலம், கழகக் காலம், கழகம் மருவிய காலம், பிற்காலம், தற்காலம் என வகைப்படுத்தியுள்ளனர். இந்த வரலாற்றுக் கால எல்லையில் தமிழர்க்கு நேர்ந்திருக்கின்ற நிகழ்வுகள், ஈட்டங்கள் இழப்புக்கள் பற்பல.

தமிழர்களின் தோற்றம் வரலாற்றுக் காலத்திற்கும் முந்தியது என அறிஞர் குறிப்பிடுகின்றனர். சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூவேந்தர் குடியின் வரலாறுகள் கழகக் காலத்திற்கு உட்பட்டவையாகவே காட்டப்படுகின்றன. இந்தக் காலத்திலேயே தமிழினத்தின் ஏற்றங்களும் படிப்படியான தாழ்ச்சிகளும் நிகழ்ந்து விட்டன. கி.மு.10 ஆம் நூற்றாண்டு அளவில் ஆரியர் புகவு தமிழினத்தின் சிதைவுகளுக்கு மூலக்காரணியாக அமைந்துள்ளது. கழகக் காலத்திற்குப் பிறகு தமிழர்களின் அரிய கருவூலங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டன, மறைக்கப்பட்டன. பண்பாட்டுச் சிதைவு, மொழிச் சிதைவு ஏற்படுத்தப்பட்டுத் தனித்தன்மை பொருந்திய இறையாண்மையுந் தமிழரிடமிருந்து பறிபோகியது.

அனைத்தையும் தமிழன் வந்தேறிகளிடத்தும் இனமாறிகளிடத்தும் இழக்கலானான். தமிழ்க்கலை, தமிழிசை, தமிழ்ப்பண்பாடு, தமிழ் மருத்துவம், தமிழ்க் கணக்கியல், கட்டடக்கலை, வானியலறிவு, மண்ணியலறிவு, உளவியலறிவு, தற்காப்புக்கலை முதலானவற்றை இவற்றுள் அடக்கலாம். தொடக்கத்தில் இவற்றைக் காத்துவந்த மன்னாதி மன்னரின் கொடிவழியினர் பெண்ணின்ப வேட்கையாலும் தன்னாதிக்க வெறியாலும் இனத்தையும் மொழியையும் மண்ணையும் சீரழிக்க வந்த பகைகளிடத்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து மண்டியிட்டு அடிமைப்பட்டுப் போயினர்.

தமிழினம் என்ற ஓர் இனம் இருக்கின்றதா என்று கேள்வி கேட்கும் அளவுக்குத் தமிழினம், தமிழினத்திற்குரிய அடையாளங்களோடு வாழாமற் பிற இனப் பண்பாட்டுத் தாக்கத்திற்கு ஆட்பட்டுத் தன்னை முற்றிலுமாக இழந்து கொண்டிருந்த வேளையில்தான் தென்றிசையில் ஒரு விடிவெள்ளி முளைத்தது.
கி.பி 1027 ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இராசேந்திரசோழன் பல்லாயிரக் கணக்கான தீவுக் கூட்டங்களையும் தென்கிழக்காசிய நாடுகளையும் தன் கையகப்படுத்தியிருந்தான் என்று வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. இருப்பினும் ஒரு பயனும் இல்லாமல் ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டுமே அது இருக்கின்றது. இன்று தமிழனுக்கு நாடு இல்லை, உலகின் மூத்த இனம், மூத்த மொழிக்குச் சொந்த இனம் நாடிழந்து நாதியற்றுக் கிடக்கின்றது. நாடு வேண்டுமென்று குரல் கொடுத்த அரசியலார் பலரும் பல்வேறு நயப்புக்களாலும் சூழ்ச்சிகளாலும் அரசியல் விரகுகளாலும் கொண்ட கொள்கைகளையெல்லாம் கைநெகிழ்த்து விட்டனர்.

தமிழினத்தை இன்று அழுத்திக்கொண்டிருக்கின்ற ஆதிக்கம் பெரும் பூதம் போன்றது. அதை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமெனில் எண்ணிப்பார்க்க முடியாத அளவு தன்னம்பிக்கையும் மனத்துணிவும் தமிழ்த் தலைமுறைக்கு வந்தாகல் வேண்டும்.

‘ பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் என்கிறார் வள்ளுவர். ‘
யானை உருவத்தால் மிகப் பெரியது, கூரிய தந்தங்களை உடையது, ஆனால் புலி தாக்கினால் அது பயந்து ஓடும். எனவே வலிமையான ஒன்றை எதிர்க்க வேண்டுமெனிற் புலியைப் போன்ற துணிச்சல் வேண்டும் என்கிறார் வள்ளுவர். ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை’ என்கிறான் பாரதி. அத்தகு துணிச்சல் தமிழனுக்கு வந்தாக வேண்டும். ஆனால் தமிழனின் நிலைமையோ பன்னூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அடிமைப்பட்டு மரபணு அடிப்படையிற் கோழைமைத் தன்மையதாக மாறி இருக்கிறது. அஞ்சி நடுங்குவது, தனக்குள்ளே அடித்துக் கொள்வது, தன் பெருமை போற்றாமல் மாற்றான் பெருமை போற்றுவது இதுதான் தமிழனின் தற்கால நிலைமை.

இவற்றை மாற்றியமைக்க வேண்டுமானால் தமிழனுக்கு மரபணு மாற்றஞ் செய்யப்பெறுதல் வேண்டும். இத்தகு மரபணு மாற்றத்தைத் தமிழீழத் தமிழனுக்குச் செய்தவர் தான் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள். அஞ்சி அஞ்சிச் சாகும் நிலை மாறித் திரும்பி எதிர்க்கும் மன வலிமையையும் வல்லமையையும் தந்த விடுதலைத் தந்தைதான் பிரபாகரன். நான் தலைவர் பிரபாகரனைத் தமிழினத்தின் ஒட்டுமொத்த விடுதலைத் தந்தையாகப் பார்க்கிறேன். இன்று தமிழினத்தை அடிமை கொண்டிருக்கும் வல்லாண்மைகளை எதிர்த்து வெருட்ட வேண்டுமானால்,
1. ஆத வலிமை (ஆத்ம பலம்) பெற்றிருக்க வேண்டும்.

2. நுணுகிய போர்த்திறம் பெற்றிருக்க வேண்டும்.

3. சூழ்ச்சிகளை வெல்லும் நுண்ணறிவு பெற்றிருக்க வேண்டும்.

4. எதிர்ச் சூழல்களுக்குட் சிக்காமல் அவற்றைத் தகர்த்தெறிந்து ஏற்புடைய சூழல்களை உருவாக்க வேண்டும்.

5. நிறைந்த அரசியல் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

6. அடிப்படையில் தமிழ்த் தேசிய உணர்வு பெற்றிருக்க வேண்டும்.

7. எந்தப் புகழ், ஆசை வலைக்குள்ளும் சிக்காமல் தன்னிலும் மேலான மொழியையும் இனத்தையும் நாட்டையும் நேசிக்க வேண்டும்.

8. உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் ஆழ்ந்த தண்ணறிவு (நிதானம்) பெற்றிருக்க வேண்டும்.

9. அறத்தின் பால் நிற்பதோடு, விருப்பு வெறுப்பு அற்றிருக்க வேண்டும்.
10. எந்த வேளையிலும் விழிப்பாக இருக்க வேண்டும்.

11. எவரிடத்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவற்றை ஒருங்கே ஒட்டுமொத்தமாகக் கொண்டிருக்கும் தனிப்பெருந் தலைவர்தான் பிரபாகரன். இந்திய உளவுப்படைத் தலைவரிடம் பிரபாகரன் கூறிய கருத்துக்களே இதற்கு ஏற்புடைய சான்றாகும்.
“நீங்கள் பலரையும் வென்றிருக்கலாம், அடிமைப்படுத்தியிருக்கலாம். ஆனால் என்னிடம் தான் தோற்கப் போகிறீர்கள். ஏனெனில் நான் உயிரின் மீது ஆசை இல்லாதவன். சொத்துச் சுகங்களின் மீது ஆசை இல்லாதவன். எவனுக்கு உயிரின் மீது ஆசை இருக்கிறதோ சொத்துச் சுகங்களின் மீது ஆசை இருக்கிறதோ அவன் மற்றவர்களுக்கு விலை போவான். மற்றவர்களால் விலைக்கு வாங்கப்படுவான், என்று கூறியதோடல்லாமற் சொல்லியபடியே இந்தியப் படையைப் பின்னங்கால் பிட்டத்தில் இடிபடத் தோற்று ஓடச் செய்தார். இயக்கத்தின் மீதும் தமிழ் மண்ணின் மீதும் தமிழீழ மக்களின் மீதும் அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது.
தமிழ் மக்களின் உரிமையை மீட்டெடுத்துத் தமிழீழ மண்ணை விடுதலை பெற்ற மண்ணாக விடுவிப்பதே அவரின் உயிர்க்கொள்கை. இந்தக் கொள்கைக்கு முரணான எந்தச் சூழலையும் அவர் ஏற்றதில்லை.

இந்தியப்படை தமிழீழ மண்ணை வலிந்து பிடித்து இறுகல் நிலையை ஏற்படுத்திய காலத்தில் இச்சூழலைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகக் கருவிகளை ஒப்படைத்து விடலாம் என்று பொறுப்பாளர் ஒருவர் கருத்துக் கூறியிருக்கிறார். ‘போராட்டத்தை நிறுத்திக் கருவிகளை ஒப்படைத்து விட்டால் தமிழ் மக்களின் உரிமைகள் என்னாவது’ என்று தலைவர் கேட்க, ‘அதனை இந்தியா பார்த்துக் கொள்ளுமாம்’ என்று பொறுப்பாளர் விடையிறுத்திருக்கிறார். இதனைக் கேட்ட தலைவர் ‘நான் இறந்த பின் இந்த இயக்கத்தைச் சில்லறையாகவோ ஒட்டுமொத்தமாகவோ விலைபேசி விற்றுவிடுங்கள்’ என்று கடிந்து இம்மியளவுகூடக் கொள்கை பிறழா மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சூரியக்கதிர் நடவடிக்கையின் போது தலைவர் எடுத்த முடிவு மிகச் சிறப்புக்குரியது. காலத்தை எண்ணிப் பார்த்ததும் எதிரிகளின் முகத்திற் கரியைப் பூசியதும் உலகத்தையே வியக்க வைத்தன. எதிரி எதிர்பார்க்காத தாக்குதலை எதிர்பாராத நேரத்திற் தந்துவிடு என்பது பிரபாகரனால் வழங்கப்பட்ட போர் உத்தி. அன்று புலிகளை இழிவுபடுத்திப் பேசிய மேதாவிகளெல்லாம் இன்று மூச்சுப் பேச்சில்லாமல் இருக்கின்றனர். தொடர்ந்தாற் போல, ஓயாத அலைகள்-1, ஓயாத அலைகள்-2, ஓயாத அலைகள்-3 தலைவர் பிரபாகரனின் மிக நுட்பமான போர்த்திறத்தை உலகுக்கு வெளிக்காட்டி உலகத் தமிழரின் தலைகளை நிமிர்த்தியவை.

கருவி ஏந்திய போரில் மட்டுமன்றி அறிவாண்மையைப் பயன்படுத்தும் அரசியற் போரிலும் தலைவர் மன்னாதி மன்னரையெல்லாம் நிலைகுலையச் செய்து வருகின்றார்.

2003 ஆம் ஆண்டு அவரைப் பார்த்து உரையாடும் வாய்ப்பு மலேசிய ஊடகவியலாளர் ஒருவருக்கு கிட்டியது. அதன்போது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்  கூறிய பதில்கள்.
"நான் ஏன் இந்தப் படையுடையை உடுத்திக் கொண்டு இங்கு வந்திருக்கிறேன் தெரியுமா? உலகத்தில் எல்லாத் தமிழரும் எல்லா உடைகளையும் அணிந்திருக்கின்றனர். அவர்கள் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால் தான் நான் அணிந்திருக்கிறேன். தமிழர்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டும். வலிமையோடு இருக்க வேண்டும். சிறுசிறு பொருளியற் கூட்டுறவுத் திட்டங்களின் வழி தங்கள் பொருளியல் வலுவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசிய உணர்வோடு வாழ வேண்டும். ஆரியர்கள் தமிழர்களை அரக்கர்கள் என்றும் அசுரர்கள் என்றும் பழித்து எழுதியிருக்கின்றனர். புராணத்தில் அசுரர்களைக் கருப்பர்களாகவும் தடித்த மீசை உடையவர்களாகவும் காட்டியுள்ளனர். யார் அப்படி இருக்கிறார்கள். நாம் தானே. தமிழர் கொண்டாட வேண்டிய விழா பொங்கலே. இவ்வாறு பல அரிய தகவல்களை அந்த ஊடகவியலாளருக்கு கூறியிருந்தார்.

அவருடைய பேச்சும் குரலும் மென்மையானவையாகவும் அன்புமயப்பட்டவையாகவும் இருந்தன.
கைகள் மென்மையாகப் பூப்போன்றிருந்தன. ஆனால் அவருடைய உள்ளமும் உணர்வும் அசைக்க முடியாத உறுதி வாய்ந்திருந்தன. அவரின் விழிகள் ஒளியுமிழ்கின்றனவாகவும் கூரியனவாகவும் இருந்தன. தமிழனுக்குக் கிடைத்த அத்தவமகனைச் சந்தித்து உரையாடியது கழிபேருவகையையும் பெருமையினையும்  அளித்ததாக அந்த ஊடகவியலாளர் நினைவு கூறியிருந்தார்.

ஆம் அவர் காலத்தால் தமிழருக்கு அளிக்கப்பட்ட தனிப்பெருங்கொடை. அப்பெருங் கொடையை உலகத் தமிழினம் கண்ணேபோற் பொன்னேபோற் போற்றிப் பாதுகாக்கவேண்டும். புலிகளின் வேட்கையினை வெற்றி பெறச்செய்ய அனைத்தாலும் உதவவேண்டும்.
தமிழர்  அடையாளம்

அச்சத்தை உடைத்த சிறுத்தைகள்..




அச்சத்தை உடைத்த சிறுத்தைகள்..
...........................
நேற்று இரவு 11மணிக்கு மேல் இருக்கும்.ஊடகவியலாளர் நண்பர் ஒருவர் என்னோடு தொலைபேசி ஊடாக பேசினார்.
“ அண்ணே திருவண்ணாமலையில்
இந்த 8 வழிச்சாலைக்கு எதிரான சிறுத்தைகளின் போராட்டம் பெரிய வெற்றி.
கூட்டம் மிக பிரமாண்டமாக இருக்குதுண்ணே.
எடப்பாடிய மிரட்டிடீங்க.
நல்ல மக்கள் கூட்டம்.
பாமக கருத்து கேட்க போறேன்னு ஏமாத்துறாங்க.
திமுக 8 வழிச்சாலையை
எதிர்க்கவில்லைன்னு சொல்லிட்டாங்க.
தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் இவ்வளவு துணிச்சலா மக்களை திரட்டி போராடுனது இல்ல.
இந்த கூட்டத்த பார்த்தாவது எடப்பாடி,” மக்களே நிலங்கள தாமாக முன்வந்து தாராங்கன்னு”
பொய் சொல்றத நிறுத்தனும்.
இதுல எனக்கு வருத்தம் இவ்வளவு பெருங்ககூட்டத்த மீடியாக்கள் சரியா லைவ்வோ, செய்தியோ பண்ணல. வெட்கமா இருக்குண்ணே”
என்றார்.

அந்த நண்பர் தலைவரின் தனிப்பேட்டி வேறு கேட்டார்.

இது தான் இன்றைய தமிழக அரசியலின் கள நடைமுறை.
8 வழிச்சாலை கூடாது என்பது மக்கள் கருத்து.
ஏனென்னறால், திருவண்ணாமலையில் கூடிய கூட்டம் வெறும் சிறுத்தைகள் மட்டுமல்ல.
வெகு மக்களும் கூடிய கூட்டம்.
துண்டறிக்கை கொடுத்தாலே கைது என்கிற அச்சத்தை சிறுத்தைகளின் இந்த போராட்டம் உடைத்திருக்கிறது.
போராட்டம் என்றாலே கைது என்கிற பேரச்சத்தை எழுச்சித்தமிழரின் நெருப்பு உரைவீச்சு தீக்கிரையாக்கியிருக்கிறது.

தமிழகத்தில்
 நிலவி வந்த
‘அச்ச அமைதியை’ஒவ்வொரு முறையும் சிறுத்தைகளே உடைத்திருக்கிறோம்.
உதாரணத்திற்கு, 
ஜெயலலிதா ஆட்சியின் போது
புலிகளை ஆதரித்து பேசியதற்காக,
‘தடா’’பொடா’என்று தலைவர்கள் வைகோ, நெடுமாறன், சுபவீ என்று கைது செய்யப்பட்ட சூழலில் அடுத்த கைது திருமாவளவன் தான் என்று ஊடகங்கள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த சூழலில்,
புலியின் குகையான கிளிநொச்சிக்கே போய்,
புலித்தலைவனையும் சந்தித்து
தாயகம் திரும்பியவர் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே.
அப்போது ஜெயலலிதா,
விமான நிலையத்திலேயே எழுச்சித்தமிழரை கைது செய்யப்போகிறார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெறியிட்டன.
அத்தனை அச்சத்தையும் தவிடு பொடியாக்கினார் எழுச்சித்தமிழர்.
“விடுதலைப்புலிகளை தொடர்ந்து ஆதரிப்பேன்.முடிந்தால் கைது செய்து பார்” என்று முழங்கினார்.
அதே போல, கலைஞரின் ஆட்சியின் போது,விடுதலைப்புலிகள் படமோ, மேதகு பிரபாகரன் அவர்களது படம் போட்ட பேனர் சுவரொட்டிகள் போட்டால் போலீசார் அந்த சுவரொட்டிகளை கிழித்து வழக்கு போட ஆரம்பித்தார்கள்.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக என்( வன்னி அரசு)
மீது கூட பொய் வழக்கு போட்டார்கள்.
இந்த சூழலில் தான், சென்னையில்
கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்தி அப்போது நிலவி வந்த பெரும் அச்சத்தை உடைத்தெரிந்தார்.
“யார் அமைதி காத்தாலும் சிறுத்தைகள் அமைதி காக்க மாட்டோம்” என்று அரசுகளுக்கு எச்சரித்தார் எழுச்சித்தமிழர்.

அதே எச்சரிக்கையை தான்
 இன்று எடப்பாடி அரசுக்கு
சிறுத்தைகள் விடுக்கிறோம்.
அதே அச்சத்தைத்தான்
சிறுத்தைகள் உடைக்கிறோம்.

அது அரளிக்காய் தான்
அது நஞ்சுக்காய் தான்
என்று தெரிந்த பிறகும்
நஞ்சா இல்லையான்னு
மக்களிடம் கருத்து கேட்கிற
‘ஏமாற்றுதாஸ்’களுக்கு மத்தியில்
களத்தில் நிற்கும் போராளியாய்
எழுச்சித்தமிழர்
தமிழக மக்கள் முன்
நிமிர்ந்து நிற்கிறார்.

சேலத்தில் 20 ம் தேதி வெள்ளிக்கிழமை
இந்த 8 வழிச்சாலைக்கு
எதிராக கூடி
அச்சத்தை
இன்னும் உடைப்போம்....
                       - வன்னி அரசு

மோடியின் 42 முறை வெளிநாட்டு பணச்செலவு ரூ 1,483 கோடி..!


மோடியின் 42 முறை வெளிநாட்டு பணச்செலவு ரூ 1,483 கோடி..!

பிரதமர் நநேரந்திர மோடியின் பிரதமராக பதவியேற்றதிலிருந்து கடந்த 4 ஆண்டுகளில் 42 முறை வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த பயணத்தில் 84 நாடுகளை சுற்றியிருக்கிறார். இதன் பயணச்செலவு மட்டும் ரூ 1 484 கோடி என நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி முதல், 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி வரையிலான காலத்தில், பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விமானத்தை பராமரிக்க மொத்தம் ரூ.1,088.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதேகாலக்கட்டத்தில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின்போது பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு ரூ.387.26 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2016-17ஆம் ஆண்டில் 18 நாடுகளுக்கும், 2017-18ஆம் ஆண்டில் 19 நாடுகளுக்கும் மோடி சென்றுள்ளார். பிரதமர் மோடியின் பயணத்துக்காக கடந்த 2014-15ஆம் ஆண்டில் தனியார் விமானங்களுக்கு ரூ.93.76 கோடியும், 2015-16ஆம் ஆண்டில் ரூ.117 கோடியும், 2016-17ஆம்  ஆண்டில் ரூ.76.27 கோடியும், 2017-18ஆம் ஆண்டில் ரூ.99.32 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.  மோடி பிரதமராக  கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல் 42 முறை மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 84 வெளிநாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். கடந்த 2015-16ஆம் ஆண்டில் அதிகப்பட்சமாக 24 நாடுகளை மோடி சுற்றியிருக்கிறார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பயணத்தின் இரு நாடுகளுக்கிடையே இருக்கும் நேரடி ஹாட்லைன் உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி ஆட்சியில் அம்பானிகளுக்கு கொண்டாட்டம்…!


மோடி ஆட்சியில் அம்பானிகளுக்கு கொண்டாட்டம்…!

புதுதில்லி;
மோடி அரசு வந்தபிறகு அம்பானி சகோதரர்களுக்கு தாராளமாக வழங்கிய வெகுமதி
களின் பட்டியலில் கடைசியாக வந்திருப்பது ஜியோ இன்ஸ்டிட் யூட் துவங்குவதற்கு முன்பே வழங்கப்பட்டுள்ள சிறப்புத்தகுதி. அடிப்படை விதிகளை மீறி வங்கி கடன்களை திருப்பி செலு
த்துவதில் சலுகை, ரபேல் விமான ஒப்பந்தத்தில் பங்குதாரர், ஜியோ பேமென்ட்ஸ் வங்கிக்கு வழங்கிய ஒத்துழைப்பு போன்ற வை ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு பாஜக அரசிடமிருந்து கிடைத்த சலுகைகளில் சில. பண மதிப்பு நீக்கத்துக்கு முன்னதாக நடந்த இலவச ஜியோ சிம் வினியோகத் திட்டத்தின் மூலம் ஆதாயமடைந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயுடன் இணைந்து ஜியோ பேமென்ட்ஸ் வங்கி நடைமுறைக்கு வந்தது நவம்பர் 10ஆம் தேதி. இதற்கு மூன்று நாட்கள் முன்னதாகத் தான் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ரிலையன்ஸ் ஜியோவின் பிரீபெய்டு வாலட் அமைப்பான ஜியோ மணியும் இதே காலத்தில் வெளிவந்தது. ஜியோ வாடிக்
கையாளர்களுக்கு எஸ்பிஐயின் நவீன வடிவிலான பணபரிமாற்றத்துக்கு உதவும் ஏற்பாடே ஜியோ மேமென்ட் வங்கி. சிறிது காலமாக திரைமறைவில் நடந்த வற்றின் பலனாக ரிலையன்ஸ் பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி வர்த்தக உடன்பாடுகளை செய்துகொள்ள பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்தியாவும் பிரான்சும் செய்துகொண்ட ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் பகுதியாக ரிலையன்ஸுக்கு கிடைத்தது 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம். மொத்தம் 36 போர் விமானங்கள் வாங்க 60ஆயிரம் கோடி ரூபாய் இந்தியா செலவு செய்ய உள்ளது. அதில் பாதி தொகையை அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெற்றுள்ளது. இந்திய பாதுகாப்பு வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தத்தை பெற்றுள்ள தனி
யார் நிறுவனமாக ரிலையன்ஸ் உள்ளது.

மூடப்படும் நிலையில் உள்ள பிரான்சின் தாசூத் நிறுவனத்துடன் இந்தியா இந்த ஒப்பந்
தத்தை மேற்கொண்டுள்ளது. இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட 10 நாட்க
ளில் தாசூத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் இணைந்து தாசூத் -ரிலையன்ஸ் ஏரோஸ்
பேஸ் என்கிற கூட்டு நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தன.ஒப்பந்தத்தின் பாதி தொகைக்கு
ரிய கட்டுமானங்கள் தாசூத்தின் இந்தியப் பங்காளி என்கிற முறையில் ரிலையன்ஸ் விட்டுக்கொடுக்கும். நாக்பூரில் ரிலையன்ஸுக்கு சொந்தமான இடத்தில் இந்த கட்டுமானப்பணி
கள் துவங்கி உள்ளன. ரபேல் ஒப்பந்தத்தின் துவக்கத்தில் பொதுத்துறை நிறுவனமான
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குதாரராக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த நிறு
வனத்தை கைகழுவிவிட்டு ரிலையன்ஸை பங்காளியாக்கி உள்ளது மோடி அரசு.

முகேஷ் அம்பானியின் நிறுவனம் 16 ஆயிரத்து 10 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்து
வதற்கு 2015இல் பொதுத்துறை வங்கிகள் 16 வருட கால அவகாசம் வழங்கியுள்ளன. கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை அதிகரித்த தால் பொதுத்துறை வங்கிகள் திணறி வருவதாக கூறி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆந்திர கடற்கரையை
யும் குஜராத்தையும் இணைக்கும் 1386 கிலேமீட்டர் எரிவாயு குழாய் பதிக்கும் ரிலையன்ஸ் கேஸ் இன் பிராஸ்ட்ரக்சர் (ஆர்ஜிடிஐஎன்) நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கிகள் இந்த சலுகையை வழங்கியுள்ளன.

மோடி ஆட்சியில் அம்பானிகளுக்கு கொண்டாட்டம்...!

சென்னை வாசிகள் காலரை தூக்கி விட்டுக்கொண்டு படிக்கவும்


சென்னை வாசிகள் காலரை தூக்கி விட்டுக்கொண்டு படிக்கவும்...

சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும்
இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று ”நான்
சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5
லட்சம் பணம் வேண்டும்” என்று” தன் தந்தையிடம்
கேட்டான்.

அதற்கு அவர்,”இன்னும் உனக்குத்
திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன
அவசரம்?” என்றார்.

இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில்
வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60
லட்சம் தேவைப்படும். தினம் தினம்
விலை ஏறி கொண்டே போகிறது என்றான்.

யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால்
நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க
வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க
ஆரம்பித்து இருகின்றோம்.திடிரென்று 5 லட்சம்
கேட்டால் எப்படி? என்றார்.

நமது விவாசய நிலத்தில்
ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய
கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில்
சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் அவன் ”5
லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள
தொகைக்கு என்ன பண்ணுவாய்?” என்று கேட்க,
மகன்,

அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக்
கடனை மாதத் தவனை முறையில் 20
வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான்.
வீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300
வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.சகல
வசிதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான்
அவன். அவர் முகம் மாறியது.

ஆனால் மகன்
ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று,
வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.வீடு வாங்கிய
பின்பு அப்பாவைச் சென்னைக்கு வாருங்கள்
என்றான்.

அவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த
ஆசையோடு வந்து சேந்தார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல
இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர்,
இப்படி ஒரு வீட்டைப் பார்த்து அசந்து நின்றார்.

உள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப்
பார்த்து, ”இதை வாங்கவா நமக்குச் சோறு போட்ட
நிலத்தை விற்கச் சொன்னாய்?” என்றார்

”இது எல்லாம்
உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான்.
என்னோட லைப் சென்னையில்தான். இனிமேல்
நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்
தான் வர போறேன். இங்கே தனி வீடு எல்லாம்
வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில்
பணம் வேண்டும். பேசாம தூங்குங்க!
வந்தது அசதியா இருக்கும்” என்றான்.

மனம்
கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும்
அன்று உறங்கிவிட்டார்.

மாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார்.
மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன.

கீழ இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள்
சிறு குழந்தைகளைப் பூங்காவில் விளயாட
வைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார்.
அவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப்
பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்.

பக்கத்தில்
வந்த செக்யூரிட்டி,” அய்யா நீங்க சரவணன் சார்
அப்பாவா?” என்றான்.

ஆமாம் என்றார்.

”சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார்
டி சாப்பிடலாம்” என்றான்.

சரி என்று நகரும் போது, “ஏனப்பா இங்கே யாரும்
ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா?
எல்லாம் வீடும் பூட்டியிருக்கு? சில வீடுகளின்
கதவு அடைத்திருக்கு?”
அது எல்லாம் அப்படிதான் அய்யா. எல்லோருக்கும்
நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட்
வரைக்கும். பல வீட்ல கணவன்
மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க.
அவுங்க சின்னப் பசங்களை பக்கதுல இருக்க
ஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதல
வராங்களோ அவுங்க
கூட்டிட்டு வருவாங்க. பெத்த
புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப்
போவார்கள்!”

”ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் இங்க
வந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா?”

”அதுவா இவங்க இருக்கிற பிஸியில,
பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா?
அதனால ஒன்னு அவங்க சொந்த
ஊர்லயே இருப்பாங்க! அல்லது இவங்க
அவங்களை முதியோர் இல்லத்தில
சேர்த்து விட்டுருவாங்க!”

இதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர்
நின்று கொண்டு இருக்க அவன்
தொடர்ந்து சொன்னான், “

இதோ போறாரே சேகர்சார், அவர் உங்க
வீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர்
தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான்
கூட்டிகிட்டு வர்றாரு!.

திகைத்துப் போனார்
பெரியவர்.
தான் மகனிடம் எதுவும் கேட்காமல் ஒரு வாரம்
பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள்
மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார்.

”என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே?
இன்னக்கி வேலை இல்லையா?”

“இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன்..
எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ்
பண்ணலாம்னு!”

”ஓஹோ, சரி சரி! எங்கே உங்கள் மனைவி?”
”அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12
மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப்
பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான்
வேலைக்கு போயிருவேன். அவ
வீட்டு வேலையையெல்லாம்
முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல
விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”

”அப்போ நீங்க ரெண்டு பேரும்
பேசிக்கவே மாட்டிங்களா?”

”சண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம்
அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10
மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா.
அப்போ ஒரே தூக்கம் தான். அன்று சாய்ந்திரம்
எதாவது ஹோட்டலுக்குப் போய்
சாப்பிட்டு விட்டு வருவோம்”

”எதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படனும்?”

”அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்”
அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்

அதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு.
இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும்
அப்படீன்னு சொல்லுங்க!” என்றார்.

அதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில்
அறைந்தது போல இருந்தது.

அடுத்த நாள் தான் மகனிடம் நான்
ஊருக்கு போறேன் என்றார் பெரியவர்.

”என்ன
அப்பா இவ்வளவு அவசரம்?
என்று கேட்டவனுக்கு அவர் பதில் உரைத்தார்:

”ஒன்னும் இல்லை. படிச்சா நல்லா இருக்கலாம்
என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான்
படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன்
வாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள
அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே!.

இனிமே உனக்கு கல்யாணம் பண்ண,
அவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும்
சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும்.
கடைசியா படிப்பு உன்னை ஒரு கடன்
காரனாகத்தான் ஆக்கும். இது தெருந்திருந்தால்
உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன்.
விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன்
படிப்பைத் தவிர வேறு எதற்கும் கடன்
வாங்கவில்லை. இனிமே உன் வாழ்கைக்கையில்
நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு!

மீண்டும் திரும்பி வருவாய் என்று நம்பிகையுடன்
கிளம்புகிறேன்” என்று தனது கிராமத்திற்குப்
புறப்பட்டுச் சென்றார்
அவர்.

அவருக்கு எப்படித் தெரியும் இந்த
சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது.

எக்ஸிட் கிடையாதுஎன்று!!!!!!!!!!!!

(குறிப்பு; இது சென்னைவாசிகளுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரைவிட்டு பிழைப்பு தேடி ஓடி உலகின் எங்கெங்கோ மாட்டிக்கொண்ட அனைவருக்கும் பொருந்ததும்.

வெள்ளி, 13 ஜூலை, 2018

வாழ்க மனிதம்

வாழ்க மனிதம்...

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார் ...

"யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார்.

நான் சந்தித்த அந்த நபர் –
காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.
நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும்.
ஆனால், அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக --அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில்-- கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்
என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்...?

அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.

கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்க வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் தானே...?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது.

சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலை களைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக
கேட்கிறேன்,அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?

அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள்போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.

இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள்
யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.

நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.
ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப்போன்ற 3000 சக மனிதர்கள் நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக் கொண்டார்.

முழுவதும் படித்த நண்பர்கள் தயவுசெய்து
மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

முன்னாள் அமைச்சர் நேர்மையின் சிகரம் திரு.கக்கன் பிறந்த நாள் (9.7.2018)

Rajagopal N Girija.

இவர்களுக்காக இதை பகிர்ந்து கொள்வோம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும்
நிம்மதி கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்!

நீங்கள் மனிதனாக இருந்தால் தயவு செய்து பகிருங்கள்....

வாழ்க மனிதம்!

சனி, 7 ஜூலை, 2018

இரட்டை மலை சீனிவாசன் பிறந்ததினம் ஜூலை 07.


  இரட்டை மலை சீனிவாசன் பிறந்ததினம் ஜூலை 07.

" சென்னை மைலாப்பூர் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் “பிராமணர் தெரு, பறையர் உள்ளே வரக்கூடாது”- என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்றவும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண்டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுனரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்!  "

தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோரின் முதல் பட்டதாரி தாத்தா இரட்டைமலை சீனிவாசன்! -வாழ்க்கைக் குறிப்பு!

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரிட்டிஷ் நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார். ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் கைக்குலுக்கினர். இரட்டைமலை சீனிவாசன் மட்டும் கைகலக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டு விட்டார். திகைத்து நின்ற மன்னர், ‘ஏன்’?- என்று காரணம் கேட்டார். அப்போது “நான், எங்கள் நாட்டில் ஒரு தீண்டத்தகாதவன்; என்னை நீங்கள் தீண்டக்கூடாது; நான் பறையன்; இந்தியாவில் தீண்டப்படாத சமுதாயத்திலிருந்து வந்தவன்” – என்று கூறினார். தாம் அணிந்திருந்த கோட்டில், ‘இராவ் சாகிப் இரட்டை மலை சீனிவாசன், பறையன்; தீண்டப்படாதவன்’ என்று எழுதி மாட்டிக் கொண்டிருந்தார். மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கை குலுக்க முனைந்தபோது, சீனிவாசன் மறுத்து, தன்னைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார். ஆனால், மன்னரோ அவரை அருகே அழைத்து, கை குலுக்கினார்.

அப்போது மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் “உங்கள் நாட்டில் இப்படிப்பட்டவர்கள் யாராவது கீழே விழுந்துவிட்டால் கூடத் தூக்கிவிட மாட்டார்களா? அவர்கள் சாதியின் பெயரால் அப்படியே கிடக்கத்தான் வேண்டுமா?”-என்று விழி பிதுங்க வினாத் தொடுத்தார். “ஆமாம்; உங்கள் ஆட்சியிலே, இந்தியாவிலே இது தான் நடைபெறுகிறது” என்று பதில் மொழி பகன்றார். மேலும், இந்த வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் பேசுகிறபோது, “தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் தீண்டாமைக் கொடுமை ஒழியும். சட்டமன்றத்திலும், ஆதிதிராவிடர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்” -என்று வலியுறுத்தினார்.

செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்னும் சிற்றூரில் 07.07.1859 ஆம் நாள், இரட்டைமலை-ஆதி அம்மையார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ‘இரட்டைமலை சீனிவாசன்’!  அவரது குடும்பம் செங்கற்பட்டு மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பல துன்பங்கள் அடைந்தது. அதனால், தஞ்சை மாவட்டத்திற்கு பிழைக்கச் சென்றது. அங்கேயும் தாழ்த்தப்பட்டவர்கள் வயலில் அடிமை வேலை செய்ய வேண்டும் - முழங்காலுக்கு கீழே வேட்டி உடுத்தக் கூடாது-செருப்புப் போடக் கூடாது-சட்டை அணியக் கூடாது-உயர்ந்த வகை உணவு உண்ணக் கூடாது-என்று மிருகத்தை விடக் கேவலமாக நடத்தப்பட்டனர்; ஒடுக்கப்பட்டனர்; மேலாதிக்கத்தினரால் மிதிக்கப்பட்டனர்.

திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பட்டினியும், பசியும், வறுமையும் கூடவே விரட்டியது. ஆனாலும், பெற்றோருடைய விடா முயற்சியாலும், கல்வி மீது கொண்டிருந்த பேரார்வத்தாலும் தஞ்சையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். குடும்பத்தின் வறுமையினையும் தாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். தமிழகத்திலேயே தாழ்த்தப்பட்டோரின் முதல் பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றார்.

நீலகிரியில் கிழக்கிந்தியக் கம்பெனியில் 1882 ஆம் ஆண்டு எழுத்தர் பணியில் சேர்ந்தார். ரெங்கநாயகி என்பவரை 1888 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஒரு மனிதன் சமுதாயச் சிந்தனையாளராக-சீர்திருத்தவாதியாக-போராட்டக்காரராக-உருவாக அந்த மனிதன் இளமையில் பட்டத் துன்பங்களும், அடைந்த அவமானங்களும், அனுபவித்தக் கொடுமைகளும் காரணமாக அமைகின்றன. இரட்டைமலை சீனிவாசன் தான் பள்ளி, கல்லூரி வாழ்க்கையின்போது அடைந்த துன்பங்களும், சாதிக் கொடுமைகளும் நாளடைவில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் விடுதலைக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டின.

இரட்டைமலை சீனிவாசன் 1891 ஆம் ஆண்டு ‘பறையன் மகாஜன சபை’ எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்டோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வைசிராயிடமும், ஆளுநரிடமும் முறையீடு செய்தார்.
இரட்டைமலை சீனிவாசன் 1904 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கு நேட்டால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது காந்தியடிகள் அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் ‘மோ.க.காந்தி’ என்று தமிழில் கையெழுத்து இடக்காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் என்பது வரலாற்றுப் பதிவு! தென்னாப்பிரிக்காவல் 1920 ஆம் ஆண்டுவரை பணி புரிந்தார்.

இரட்டைமலை சீனிவாசன் 1923 முதல் 1938 வரை சட்டமன்ற நியமன உறுப்பினராகச் செயல்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றவர்களுக்குச் சமமாகப் பொதுச் சாலைகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், பொது இடங்களிலும், கட்டிடங்களிலும் நுழையவும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் கூடிய சட்ட நிர்ணய சபையில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார்.
தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்க ‘தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகம்’ எனும் அமைப்பை உருவாக்கினார். சென்னை மாகாணம் தழுவிய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க அதிகமான விடுதிகளும், கல்வி உதவிப் பணமும், மற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆரம்பக் கல்வி, இலவசமாகவும் கட்டாயமாகவும் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டுமெனில், தனிப் பள்ளிகள் திறக்கப்பட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை முன்வைத்து முனைப்போடு செயல்பட்டார்.

இரட்டைமலை சீனிவாசன் 1893 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ‘பறையன்’ என்ற தமிழ் மாத இதழை வெளியிட்டார். அவ்விதழ் பின்னர் வார இதழாக வெளிவந்தது.

‘பறையன்’ வார இதழ் ஒன்றை திறனாய்விற்காக ‘சுதேசமித்திரன்’ இதழுக்கு அனுப்பி வைத்தார். அப்போது, சுதேசமித்திரனின் ஆசிரியராக இருந்த சி.ஆர். நரசிம்மன் (பார்ப்பனர்), ‘பறையன்’ இதழைக் கையில் தொடவும் கூசினார். மை, தொட்டு எழுதும் கட்டைப் பேனாவைக் கையில் பிடித்துக் கொண்டு குச்சியால் அவ்விதழைப் புரட்டுவதுபோல் புரட்டிப் பார்த்தாராம்! அச்செய்தி, ஓர் உண்மையைத் தாங்கி நிற்கிறது. ஆம், ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ – என்போர் மட்டும் தீண்டத்தகாதவர்கள் அல்ல; அவர்கள் நடத்தும் ‘செய்தி இதழும்’ கூட தீண்டத் தகாதது’ – என்ற பாதகமான நிலை படித்தோர் மத்தியிலும், அன்று இருந்தது என்பதை அறிய முடிகிறது. இதன்மூலம், உயர் சாதியினரின் தீண்டாமைத் தீயை ‘சுதேசமித்திரன்’ கூட, ஊதிப் பெருக்கியிருக்கிறதே தவிர, ஒடுக்கப்பட்டவர்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை அணைக்க முன்வரவில்லை என்றே கருத முடிகிறது.

பறையன் இதழ் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாக விளங்கியுள்ளது. பார்ப்பனியத்தை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும், ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்துள்ளது.
சென்னை விக்டோரியா மண்டபத்தில் 07-10-1895- ஆம் நாள் ஓர் மாநாட்டைக் கூட்டினார். அம்மாநாட்டின் மூலம், அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும் அம்மாநாட்டில், “நாங்கள் கணக்கிட முடியாத ஆண்டுகளாக கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானது. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாக வாழ சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் இனிமேலும் குறுக்கிட்டால் நாங்கள் இனிமேலும் சகித்துக் கொள்ளமாட்டோம். நாங்கள் எந்த விதமான கொடுமைகளையும் ஏற்க மாட்டோம்”-என்ற சூளுரையை நாடு அதிரும்படி வெளியிட்டார் இரட்டைமலை சீனிவாசன்!

மேலும், அரசியல் உரிமைகளை அனுபவிக்கவும், சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் பெற்றிடவும், அரசாங்க அலுவலகங்களில் இடம் பெறவும், விமானம், கடற்படை, இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றிடவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வேண்டும் என முழக்கமிட்டார்.

சென்னை மைலாப்பூர் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் “பிராமணர் தெரு, பறையர் உள்ளே வரக்கூடாது”- என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்றவும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண்டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுனரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்! இவை, அன்று பரபரப்பு ஊட்டிய வரலாற்று நிகழ்ச்சிகள்.

கிருஷ்ணா மாவட்டத்தில் 28.04.1894 ஆம் நாள், தமது தலைமையில் நிலப் போராட்டத்தை இரட்டை மலை சீனிவாசன் துவக்கினார். இப்போராட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய அரசு நிலம் அளித்தது. இந்நிலத்திற்கு ‘பஞ்சமி’ நிலம் என்ற பெயரும் வைத்தது!

‘தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பயில அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் வயதை ஏனைய, வேறு சாதியினர் வயதுடன் ஒப்பிடக்கூடாது; வறுமை, ஏழ்மை ஆகிய காரணங்களால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள், குறிப்பிட்ட வயதில் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத காரணத்தால், வயது வரம்பை தளர்த்திட வேண்டும்’– என்றெல்லாம் இரட்டைமலை சீனிவாசன் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

தீண்டாமையை அடியோடு ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தார். தீண்டாமைக் கொடுமை புரிபவர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, தண்டனை அளித்து அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று கடுமையாக சட்டமன்றத்தில் பேசினார்.

சிறையிலும் சாதிப் பாகுபாடு நிலவியதை கண்டித்ததுடன், குற்றவாளிகளில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்.
தமிழக சட்டமன்ற மேலவையில், “பல ஏழை மக்களின் உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும்” – என்ற தீர்மானத்தை இரட்டைமலை சீனிவாசன் கொண்டுவந்தார். மேலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், விழா நாள்களிலும், அரசு விடுமுறையின் போதும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்தார். ஏழை எளிய மக்கள் மதுவுக்கு அடிமையாகி, தங்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனரே என மனம் வருந்தினார். இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரும்பாடுபட்டார்.

ஆதிதிராவிடர் கோயில்களில் ஏனைய சாதியைச் சேர்ந்தவர்கள் உள்ளே செல்லலாம். ஆனால், சாதி இந்துக்களின் கோயில்களில் ஆதிதிராவிடரை அனுமதிக்காமல் இருப்பது அநீதி அல்லவா? மண் சுமந்து கோயிலைக் கட்டும் சாதி மக்கள் கோயிலுக்குள் செல்ல தடைவிதிப்பது கொடுமையல்லவா? பார்ப்பனர்கள், வருமானம் பெற அனைத்துக் கோயில்களையும் கைப்பற்றிக் கொண்டது கண்டனத்துக்குரியதல்லவா? என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன்! மற்ற சாதி மக்கள் எப்படி சுதந்திரமாகக் கோயிலுக்குள் செல்கின்றார்களோ, அதைப் போல் ஒடுக்கப்பட்ட மக்களும் செல்ல உரிமை வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுத்தார்.

இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கொண்டு வந்த தனித் தொகுதி முறையை காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார். எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.

“தனித்தொகுதி என்பது தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் அளிக்கப்படவில்லை. இந்தியக் கிருத்தவர், அய்ரோப்பியர், முஸ்லீம்கள், சீக்கியர் ஆகியோர் அனைவருக்கும் அளித்துள்ளனர். ஏன் காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் பிரித்து இந்த நிலையை எடுத்துள்ளார் என்பது விசித்திரமாக இருக்கிறது”- என்றார் டாக்டர் அப்பேத்கர்.

இறுதியில் காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டி, காந்தியடிகள் விருப்பத்துக்கு விட்டுவிட்டார் அப்பேத்கர். அது பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ‘இராவ்சாகிப்’, ‘திவான் பதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது.

இரட்டை மலை சீனிவாசனின் பணியைப் பாராட்டி திரு.வி.க. அவர்கள், ‘திராவிடமணி’ எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

கொத்தடிமைகளாக வாழ்ந்த மக்களை சுதந்திர மக்களாக்கியவர்!-மூடப் பழக்கங்களில் மூழ்கிப் போனவர்களைச் சிந்திக்கும் மனிதர்களாகச் செதுக்கியவர்! – இருண்ட உலகில் பயணம் செய்தவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்! ஊமைச் சமுதாய மக்களைப் பேச வைத்தவர்! – உரிமைகளைப் பெற வைத்தவர்!- ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், தத்தளித்துக் கிடந்த மக்களின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர்! தான் உறங்காமல், உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பி உசிப்பியவர்! தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிய ‘உத்தமர் தாத்தா’! அப்பெரியவர் இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 ஆம் நாள் தனது எண்பத்தி ஆறாம் வயதில் இயற்கை எய்தினார்.

- எழுத்தாளர்: பி.தயாளன் (நன்றி : கீற்று)

புதன், 4 ஜூலை, 2018

உடைந்தது ஜெயலலிதா பற்றிய மற்றொரு இரகசியம்.. அதிர வைக்கும் உண்மை...

உடைந்தது ஜெயலலிதா பற்றிய மற்றொரு இரகசியம்.. அதிர வைக்கும் உண்மை...


அதேபோல் 1995ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற ஆளுநர் சென்னாரெட்டி அங்குள்ள மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்கு அழைத்து ஆட்சியை பற்றிய பல விஷயங்களை கேட்டறிந்தார்.
இதனால் எரிச்சலடைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆளுநர் அரசின் செயல்பாடுகளை தலையிடுவதாக அப்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
ஆளுநர் தமிழக சுயாட்சியில் தலையிடுவதாக கூறி திமுகவினரும், மு.க ஸ்டாலினும் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினர். இதனால் ஸ்டாலின் கைது செய்து பின்னர் விடுதலையானார்.
இனி ஆளுனரை அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் நடந்து கொண்டால் 7 ஆண்டு சிறை என ஆளுநர் மாளிகை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா பற்றிய ஒரு சுவாரஷ்ய தகவலை வெளியிட்டுள்ளார் திராவிட கழக தலைவர் கி.வீரமணி.

செவ்வாய், 3 ஜூலை, 2018

வங்கிகள் மறைக்கும் ரகசியங்கள் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!

வங்கிகள் மறைக்கும் ரகசியங்கள் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!

பல்வேறு சிக்கலில் இருந்து நீங்கள் எளிதாகத் தப்பித்து கொள்ளலாம்.
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், கடன் வழங்குவோர் தாங்கள் விளம்பரப்படுத்திய வட்டிவிகிதத்திலேயே தரவேண்டிய அவசியம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சதவீதத்தினருக்கும் மட்டும் அறிவித்த வட்டிவிகித்தில் கடன் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்கு அதிகமான விகிதத்தில் வங்கிகள் தந்துவிடலாம்.
#நீங்கள் செலுத்தும் பணத்திற்கு வங்கிகணக்கு மதிப்பானதா?.2
சில வங்கிகள், தாங்கள் பிடித்தம் செய்யும் மாதாந்திர கட்டணத்திற்கு ஈடாக இலவச பயணக் காப்பீடு போன்ற சலுகைகளை வழங்கும். இந்தச் சலுகைகளை முழுமையாக நீங்கள் பயன்படுத்தும் வரை, நீங்கள் செலுத்தும் பணத்திற்கு உங்கள் வங்கிகணக்கு மதிப்பே இல்லை.
#நீங்கள் அட்டையைத் தேய்த்தால் அவர்களுக்குப் பணம்.3
உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் செலவழிக்கும் போது, விற்பனையாளர்களிடம் இருந்து அந்தப் பணபரிமாற்றத்தை செய்யக் கட்டணம் வசூலிக்கப்படும். அதில் பெரும் பகுதி வங்கிகளுக்கே செல்லும். என்னதான் நீங்கள் உங்கள் பணத்தைச் செலவழித்தாலும், வங்கிகளும் அதனால் பலனடையும்.
#கடனே வாங்காதது நல்லதல்ல.4
வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்க விரும்பினால், உங்களின் அனைத்து பணபரிமாற்ற வரலாற்றையும் பரிசோதிப்பர். நீங்கள் கடன்/ கிரெடிட் அட்டையைப் பயன்படுத்தவில்லை என்றால், உங்களின் திருப்பிச் செலுத்தும் திறன் அவர்களுக்குத் தெரியாது. எனவே கடனே வாங்காதது நல்லதல்ல.
#பணபரிமாற்றத்தின் வரிசையை மாற்றுதல்.5
நீங்கள் ஒரு நாளில் பொருட்கள் வாங்கி, செய்யும் பணபரிமாற்றத்தின் வரிசையை அதிகத் தொகையில் இருந்து சிறிய தொகை வரை வரிசைப்படுத்துவர். இதன் மூலம், முதல் சில பரிமாற்றங்களிலேயே பணம்எடுக்கும் எல்லையை (Over draft) கடந்து விட்டால் பிறவற்றுக்குக் கட்டணம் செலுத்த நேரிடும். இதன் மூலம் வங்கிகளுக்கு அதிகத் தொகை கிடைக்கும்.