புதன், 30 மே, 2018

ரஜினியின் தெள்ளத் தெளிவான பேட்டி.



ரஜினியின் தெள்ளத் தெளிவான பேட்டி.

ரஜினி - துப்பாக்கிச் சூடு நடத்தியது தவறு.

கேள்வி – விஷமிகள் கலவரம் செய்ததாக முதல்வர் கூறியிருக்கிறாரே

ரஜினி – விஷமிகள் ஊடுருவியுள்ளார்கள்.

கேள்வி – துப்பாக்கிச் சூடு நடத்தியது ?

ரஜினி – அதைத்தான் தவறு என்று சொல்லி விட்டேனே.

கேள்வி – அப்போ விஷமிகள் ஊடுருவியது ?

ரஜினி – அதை தடுக்க வேண்டும்.

கேள்வி – ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியா ?

ரஜினி – ஸ்டெர்லைட் ஆலையை ஒரு போதும் திறக்கவே கூடாது.

கேள்வி – அப்போ தொழில் வளர்ச்சி ?

ரஜினி – ஆலையை ஒரு போதும் மூடவே கூடாது.

கேள்வி – போராட்டம் நடத்தியதால்தானே ஸ்டெர்லைட் மூடப்பட்டது

ரஜினி – எப்போதும் போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கக் கூடாது.

கேள்வி – மக்கள் தங்கள் பிரச்சினைக்கு போராடித்தானே ஆக வேண்டும் –

ரஜினி – எப்போதும் போராடினால் தமிழகத்துக்கு முதலீடு வராது.

கேள்வி – பிறகு எப்படித்தான் பிரச்சனைக்கு தீர்வு காண்பது.

ரஜினி – போராட்டம் நடத்தாமல் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்.

கேள்வி – அது எப்படி வலியுறுத்துவது ?

ரஜினி – பாபாவிடம் வேண்ட வேண்டும்.

கேள்வி – வேண்டியும் வழங்கலன்னா ?

ரஜினி – வழங்கும் வரை வேண்ட வேண்டும்.

கேள்வி - துப்பாக்கிச் சூட்டுக்கு காவல் துறைதானே காரணம் ?

ரஜினி – சுட்டது காவல்துறையாக இருந்தாலும் குண்டு துப்பாக்கியில் இருந்துதானே வந்தது ?

கேள்வி - அப்போ போலீஸ் சுடலையா ?

ரஜினி – அதை கண்டுபிடிக்கத்தான் போலீஸ் இருக்கே.  சட்டம் இருக்கே.

கேள்வி – சுட்டதே போலீஸ்தானே ?

ரஜினி – அதை போலீஸ்தான் கண்டுபிடிக்கணும்.

கேள்வி – சார் குழப்பமாக இருக்கு.  

ரஜினி – எனக்கு மட்டும் தெளிவாவா இருக்கு ?

கேள்வி – முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமா ?

ரஜினி – அவர் எதுக்கு ராஜினாமா செய்யணும் ?

கேள்வி – அவர்தானே உள்துறை அமைச்சர்.

ரஜினி – அப்போ அவர் உள்ளதானே இருப்பார்.
வெளியில நடந்ததுக்கு  அவர் எப்படி ராஜினாமா பண்ணுவார் ?

கேள்வி – தூத்துக்குடி மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா ?

ரஜினி – காலா படம் 7ம் தேதி ரிலீஸ் ஆகுது.  தமிழ்நாட்டுக்கு பல செய்திகளை சொல்லிருக்கேன்.  ஸ்டெர்லைட் பத்தி கூட சொல்லிருக்கேன். பாத்தீங்கன்னா உங்க வாழ்கே சந்த்தோஷமா இருக்கும்.  கவலையெல்லாம் மறந்துடுவீங்க.

மக்கள் – நாங்க தமிழ் ராக்கர்ஸ்லயே பாத்துக்கறோம். மூடினு போய்யா

செவ்வாய், 29 மே, 2018

சிறப்புக் கட்டுரை: ஊடகங்களின் பண தர்மம்!



சிறப்புக் கட்டுரை: ஊடகங்களின் பண தர்மம்!

பா.சிவராமன்

நெட்வொர்க் 18 தொலைக்காட்சி தொழிலதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குழுமம் 15 மொழிகளில் நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சி சேனல்களையும் CNBC போன்ற வணிகச் செய்தி சேனல்களையும் நடத்துகிறது. ஆங்கிலச் செய்திச் சேனல் CNN-IBNகூட இப்போது நெட்வொர்க் 18இன் பிடியில்.

கோப்ராபோஸ்ட்டின் நிருபர் புஷ்ப் ஷர்மாவின் அடுத்த ‘ஸ்டிங் பேரம்’ நெட்வொர்க் 18இன் நிர்வாகத் துணைத் தலைவர்கள் ப்ரியங்கா தத்தா மற்றும் ஜாய் சக்கரவர்த்தி ஆகியோருடன் மும்பையில். நிருபர் இந்துத்துவப் பிரச்சாரத்தின் தேவையை விளக்கி எதிர்க்கட்சிகளின் பேரைக் கெடுக்கும் பிரச்சாரத்திலும் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை விளக்கியவுடன், "முற்றிலும் சரி (absolutely)" என்று ஆமோதிக்கிறார் ப்ரியங்கா.

நெட்வொர்க் 18இன் திரைப்பட சேனல்களின் தொகுப்பு Viacom 18. இந்தத் தொகுப்பில் 44 சேனல்கள் உள்ளன. இந்த சேனல்களின் வழியாக இந்துத்துவா பிரச்சாரத்தை விளம்பரமாகக் காட்டுவது குறித்து Viacom 18இன் விளம்பரம் மற்றும் தனியார் நிகழ்ச்சி வழங்குதல் (Sponsorship) பிரிவின் தேசியத் துணைத் தலைவர் தீபக் லுத்ராவுடன் நிருபர் உரையாடுகிறார்.

Viacom 18இன் 44 சேனல்களிலும் பிரச்சாரம் செய்ய உடன்பாடு ஏற்படுகிறது. டிஜிட்டல் மீடியா வாயிலாகவும் சமூக வலைதளங்களின் வாயிலாகவும்கூட இந்துத்துவப் பிரச்சாரம் செய்யலாம் என ஆலோசனை வழங்குகிறார் தீபக் லுத்ரா.

நெட்வொர்க் 18 உயர் அதிகாரி பரோமா, உங்களது அமைப்பு சாதகமான பணி ஏதேனும் செய்திருந்தால் அது பற்றி கூறுங்களேன் என்று சொன்னதற்கு எமது அரசியல் எதிரிகளை பாகிஸ்தான் ஏஜென்ட்டுகள் எனக் காட்டுவோம் என நிருபர் கூறுகிறார். அதை பரோமாவும் ஆமோதிக்கிறார்.

அடுத்து E TVயின் விற்பனைப் பிரிவு சீனியர் மேனேஜர் அயன் பட்டாச்சார்யாவை கோப்ராபோஸ்ட் நிருபர் சந்திக்கிறார் (நெட்வொர்க் 18 அம்பானியின் கைக்கு மாறியவுடன் ஈ டிவி குரூப்பையும் வாங்கிவிட்டது). இந்துத்துவப் பிரச்சாரம் குறித்து விளக்கியவுடன் உத்தரப் பிரதேசத் தேர்தலில் இதைத்தான் செய்தோம் என்று பீற்றிக்கொள்கிறார் பட்டாச்சார்யா.

அடுத்து நெட்வொர்க் 18இன் தேசிய மார்க்கெட்டிங் தலைவர் ஹர்ஷ் வர்தன். “என்னையே வலுவான இந்து ஆதரவாளராக எடுத்துக்கொள்ளுங்கள்” என்ற பீடிகையோடு திட்டத்துக்கு முழு உடன்பாடு தெரிவிக்கிறார்.

நாட்டில் முதல் செல்வந்தரான அம்பானியின் கடல் போல் விரிந்த மிகப் பெரும் மீடியா நெட்வொர்க் இந்துத்துவா பிரச்சாரத்துக்குத் தயார்!


அம்பானிக்கு பிர்லா சளைத்தவரா?

ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியாவின் (HT மீடியா) எக்ஸிகியூடிவ் டைரக்டர் மற்றும் சேர் பர்சன் ஷோபனா பாட்டியா. இவர் 2006 முதல் 2012 வரை காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தவர். தொழிலதிபர் கே.கே.பிர்லாவின் உறவினர்.

இந்தியாவில் டைம்ஸ் குரூப்புக்கு அடுத்தபடியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப்பைவிடப் பெரிய மீடியா சாம்ராஜ்ஜியம் இது.

இது ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஹிந்துஸ்தான் என்ற இந்தி தினசரி, இந்தியில் காதம்பனி மற்றும் நந்தன் போன்ற பத்திரிகைகள் ஆகியவற்றை வெளியிடுவதுடன் ஃபீவர் 104 FM ரேடியோ நெட்ஒர்க்கையும் நடத்துகிறது. அமெரிக்க வால் ஸ்ட்ரீட் ஜர்னலுடன் இணைந்து மின்ட் எனும் பொருளாதாரச் செய்தி இணையதளத்தையும் நடத்துகிறது.

கோப்ராபோஸ்டின் நிருபர் பட்னாவில் இந்துஸ்தான் தினசரியின் மேனேஜர் ஷைலஜா சின்ஹாவைச் சந்தித்து தமது இந்துத்துவப் பிரச்சாரம் பற்றி விளக்குகிறார். ஷைலஜா இந்துஸ்தான் பத்திரிகையால் அதைச் செய்ய முடியும். ஆனால், அதை BP பிராண்டு ப்ரோமோஷன் என்றுதான் நாங்கள் அழைப்போம்; அது பூடகமான விளம்பர யுக்தி என்று விளக்குகிறார். அது விளம்பரமாக இல்லாமல் பத்திரிகையின் உள்ளடக்கமாகவே தென்படும் என்று உறுதியளிக்கிறார்.

கோப்ராபோஸ்ட் நிருபரிடம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா லிமிடெட் துணைத் தலைவர் அவனீஷ் பன்சல் ரகசிய கேமரா முன்பு நடத்திய உரையாடலை ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன்பு கண்டோம்.

அடுத்து நிருபரின் ஸ்டிங்கில் HT மீடியா குரூப்பின் பெங்களூரு ஃபீவர் 104 FM ரேடியோ நிலைய இயக்குநர் சௌரப் மிஸ்ரா சிக்கினார். உங்கள் ரேடியோவில் இந்துத்துவப் பிரச்சாரம் செய்வீர்களா என்று கேட்டபோது ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரச்சாரத்தை ஏற்கனவே செய்வதாகவும் அதே அலைவரிசையில் இந்துத்துவா பிரச்சாரமும் செய்வதாகவும் ஒப்புக்கொண்டார். கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் பெயரைக் கெடுக்கப் பணிபுரிவதாகவும் ஒப்புக்கொள்கிறார்.

விலைவாசி உயர்வு, ஊழல்கள், பயங்கரவாதம், ஐடி தொழில் நெருக்கடி, விவசாயிகள் நெருக்கடி ஆகிய பிரச்சினைகளில் காங்கிரஸ் மீது தாக்குதல் தொடுக்கலாம் என அவரே ஆலோசனை வழங்குகிறார்.


டைம்ஸ் குரூப்பின் ரேடியோ மிர்ச்சியும் தயார்

இதற்கிடையே நிருபர் டைம்ஸ் குரூப்பைச் சேர்ந்த ரேடியோ மிர்ச்சி பட்னா நிலையத் தலைமை அதிகாரி பிரபு ஜாவைச் சந்தித்துத் தன் இந்துத்துவப் பிரச்சாரத் திட்டத்தை விளக்குகிறார். நானும் ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்தவன்தான் என்று கூறி இத்திட்டத்தை வரவேற்கிறார் ஜா.

இந்துத் தீவிரவாதம் தலைதூக்கும் மங்களூரில் டைம்ஸ் குரூப்பின் ரேடியோ மிர்ச்சி அக்கவுன்ட்ஸ் பிரிவுத் தலைவர் ஆரோன் டி'மெல்லோவும் முழு ஒத்துழைப்பு நல்குவதாக வாக்களிக்கிறார்.

ரெட் FM, பீவர் 104 FM ஆகியவற்றை அடுத்து முக்கிய FM நிறுவனமான ரேடியோ மிர்ச்சியும், அதோடு ரேடியோ ஒன் மற்றும் Big FM ஆகியனவும் 2019 தேர்தலுக்காக இந்துத்துவப் பிரச்சாரத்துக்குத் தயாராகின்றன.


நியூ இண்டியன் எக்ஸ்பிரஸுக்கு 7 கோடி, தினமணிக்கு 3 கோடி!

நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் தென்மாநிலங்கள் அனைத்திலும் பதிப்புகளைக் கொண்ட பத்திரிகை. இண்டியன் எக்ஸ்பிரஸ் குரூப்பின் அங்கம். தினமணியும் இவர்களது பத்திரிகைதான். கோப்ராபோஸ்டின் நிருபர் மாறுபட்ட அடையாளத்துடன் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸின் மார்க்கெட்டிங் இலாகாவின் தலைமை மேனேஜர் மகேஷ் பாபுவைச் சந்திக்கிறார்.

ரூ. 10 கோடிக்கு (நியூ இண்டியன் எஸ்பிரஸில் ரூ.7 கோடிக்கும் தினமணியில் ரூ 3 கோடிக்கும்) இந்துத்துவப் பிரச்சாரம் செய்வதற்கும் ராகுல் காந்தி பெயரைக் குறிப்பிடாது பப்பு என்று கேலி செய்து அவரது இமேஜைக் கெடுக்கவும் டீல் முடிவாகிறது.

பணம் என்றால் மீடியாவின் பெருந்தலைகளும் வாய் பிளக்கும் காட்சிகளைக் கோப்ராபோஸ்ட் வீடியோக்களில் காணுங்கள்!



நம் மாநிலத்தில் உள்ள ஆறுகளும் அவற்றை சீரழிக்கும் தொழிற்சாலைகள் பற்றி :



நம் மாநிலத்தில் உள்ள ஆறுகளும் அவற்றை சீரழிக்கும் தொழிற்சாலைகள் பற்றி :

தாமிரபரணி : மதுரா கோட்ஸ், சன் காகித ஆலை , சங்கர் சிமெண்ட் , கோலா , ஸ்பிக் உரத் தொழிற்சாலை, தாரங்கதாரா , டாக் ஆலை, கன நீர் ஆலை, அனல் மின் நிலையம் ஆகியவற்ற்றுக்கு ஆதாரமாக இருக்கிறது. இதன் கழிவுகள் ஆற்றைச் சீரழிக்கிறது.

நொய்யல் : திருப்பூர் நகரின் சலவை சாயப்பட்டறை முதலாளிகள் ஆலைக் கழிவுகள் முழுவதையும் நொய்யல் ஆற்றில் திறந்து விடுகிறார். கழிவு நீரில் உள்ள சல்ஃபர், சோடியம், காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் தண்ணீர் ஆகியவை காரணமாக விவசாயத்துக்கோ குடிநீருக்கோ பயன்படுத்த முடியாத அளவுக்கு தண்ணீர் நஞ்சாக்கப்பட்டு விட்டது.

பவானி : சவுத் இண்டியா விஸ்கோஸ் ஆலை ( தற்போது மூடப்பட்டது) 400 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து பயன்படுத்திவிட்டு அதே அளவு நீரை கழிவாக விட்டது. யுனைடட் ப்ளீச்சர்ஸ், டேன் இண்டியா , டி.டி.கே அட்டைத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள் தங்கள் கழிவை கொட்டின.

கொடகனாறு : திண்டுக்கல் ஒட்டியுள்ள இந்த ஆற்றின் படுகையில் 80 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் கழிவு நீய்ர் ஆற்றில் விடப்படுகிறது.

பாலாறு : பாலாற்றுப் படுகையில் 100 சிறிய , பெரிய தோல் தொழிறசாலைகளில் வெளியேற்றப்படும் கழிவு நீராகும். அன்றாடம் 450 லட்சத்தில் இருந்து 500 லட்சம் லிட்டர் கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன். ஒரு நாளைக்கு 110 லட்சம் கிலோ தோல் பதனிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

- தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா ? புத்தகத்தில்

***********************************************

காவிரி : கெம்ப்ளாஸ்ட் , மேட்டூர் அனல் மின் நிலையம் , ஈரோட்டு சாயக் கழிவு , பெல் , சேஷசாயி பேப்பர் மில் , டி.என்.பி.எல் மற்றும் கரூரில் உள்ள தொழிற்சாலைகள் காவிரி ஆற்று நீரை கெடுத்தவை.

திங்கள், 28 மே, 2018

ஸ்டெர்லைட் ஆலை எதனால் எதிர்க்கப்படுகிறது..?



#ஸ்டெர்லைட் ஆலை எதனால் எதிர்க்கப்படுகிறது..?

நமக்கு வாய்த்த தகுதியற்ற அறிவுகெட்ட முட்டாள்கள் அல்லது எல்லாம் தெரிஞ்ச மக்கள் விரோத கொடூர கயவர்களான பணவெறி அரசியல்வாதிகள்... 'ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தந்தவன் நீதான்... அடிக்கல் நாட்டியவள் நீதான்... திறந்து வச்சவன் நீதான்... ' என்றெல்லாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். இதனால் ஒரு பயனும் மக்களுக்கு இல்லை.

ஆகவே, பிரச்சனையின் ஆணிவேர் பற்றி பேசுவோம். ஸ்டெர்லைட்டில் இரண்டே இரண்டு விஷயங்கள் இல்லை என்றால் மகாராஷ்டிரா மக்கள் ஆதரவே அன்று ஸ்டெர்லைட்டுக்கு கிடைத்திருக்கும். ஆனால்... அந்த 2 விஷயத்தில்தான்... அனைவரையும் ஸ்டெர்லைட் ஏமாற்றியதால்... எதிர்ப்பு வலுவடைகிறது. அவை என்ன..?

அந்த 2 முக்கிய அம்சங்கள்:
1-சல்ஃபர்-டை-ஆக்ஸைடு (SO2)
2-அர்செனிக் (As)

SO2 ஓர் ஆபத்தான நச்சுவாயு. காற்றில் 10 லட்சத்தில் 5 பங்குக்கு மேலே என்ற அளவில் இவ்வாயு காற்றில் கலந்து இருந்தால் அக்காற்று மாசுபாடு அடைந்து விட்டது என்று பொருள். இந்த அளவில் இவ்வாயு மூச்சுத்திணறல், நுரையீரல் நோய், குமட்டல், வாந்தி, தோல் எரிச்சல், கண் எரிச்சல் ஆகியனவும் அதிகளவில் எனில் இறப்புக்கும் வழிவகுக்கும்.

As அதிபயங்கரமான நச்சுத்தனிமம். நிலம் & நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு காரணம். 10 கோடியில் 1 பங்குக்கு மேலே என்ற அளவில் இத்தனிமம் நீரில் / நிலத்தில் கலந்து இருந்தால் அந்த நீரும் நிலமும் மாசுபாடு அடைந்து விட்டது என்று பொருள். இந்நிலையில் மாசுபட்ட நிலத்தடி நீரை உட்கொண்டால் சிறுநீரக மண்டலம் உட்பட பல இடங்களில் கேன்சர் வரும். அந்த நிலத்தில் வளரும் தாவங்களிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தும். அந்த தாவரங்களை உட்கொள்ளும் போதும் செரிமான மண்டலத்தில் கேன்சர் வரும்.

ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மை உற்பத்தி பொருள் காப்பர்(Cu). தாமிரம்.

காப்பர் உற்பத்தி செய்யும்போது, அதன் தாதுப்பொருளில் உள்ள கந்தகம் எரிந்து நிறைய  நிறையை SO2 கழிவாக வெளியாகிறது. இந்த நச்சுவாயுவை அப்படியே வானில் வெளியாக்கினால் மரணம் என்பதால், காப்பர் ஸ்மல்டர் ஆலைகளில் அவற்றுக்கு எவ்விதத்திலும் பயனற்ற சல்பியூரிக் ஆசிட் (கந்தக அமிலம்) உற்பத்தி பிளாண்ட் ஒன்றை ஓட்டியாக வேண்டும். இதில்... அந்த கந்தக ஆக்ஸைடை (SO2) கேட்டலிஸ்ட் மூலம் SO3 ஆக்கி, HSO3 ஆக்கி, H2SO4 என்ற கந்தக அமிலமாக மாற்றப்படுகிறது.

ஸ்டர்லைட்டில் ஒரு நாளைக்கு சுமார் 3300 டன் என்ற மிதமிஞ்சி உற்பத்தியாகும் இந்த அமிலத்தை அதே அளவுக்கு வாங்குவோர் இல்லாததால்... அதை ஸ்டோர் பண்ணி வைக்க டேங்கில் இடம் இயலாதபோது... அப்படியே வாய்க்காலில் எல்லாம் திறந்து விட முடியாதே. அமிலம் ஆயிற்றே. என்ன செய்யலாம்..?பக்கத்தில், உள்ள ஸ்பிக் கந்தகஅமில உற்பத்தியை நிறுத்த சொல்லிவிட்டு... இலவசமாகவே லாரி டேங்கர்கள் மூலம் கொண்டு போயி தரலாம். (நான் அங்கே பணியாற்றிய வருஷங்களில் அப்படித்தான் டேங்கர்களில் ஆசிட் கொண்டு வந்து தந்தார்கள். எங்கள் சல்பியுரிக் ஆசிட் பிலாண்டை ஷட் டவுன் பண்ணி நிறுத்திட்டு அவங்க ஆசிடை வாங்கி எங்களின்  டேங்குகளில் சேமித்துக்கொண்டோம்.)

சரி, ஸ்பிக்கிலும் இலவசமாக தந்து அவர்களின் டாங்கிகளும் நிரம்பி விட்டது. இனி என்ன செய்ய..?

ம்ம்ம்... இப்படி ஸ்டெர்லைட் கந்தக அமிலம் சேமிப்பு டாங்கிகள் நிரம்பி விட்டால் வேறு வழியின்றி காப்பர் உற்பத்தியை நிறுத்தவோ குறைக்கவோ வேண்டும். ஆனால், காப்பர் டிமான்ட் மார்க்கெட்டில் இருக்கே. செமை இலாபமாச்சே. காப்பர் உற்பத்தியை குறைக்கவே கூடாதே. வேறு என்ன செய்யலாம்..?

நைசா... ராவோடு ராவாய் தம் ஊழியர்களை மட்டும் பிரீதிங் அபாரடஸ் போட்டுக்கொள்ள சொல்லிட்டு, SO2வை வானில் திறந்துவிட்டு வென்ட் பண்ணிடலாம். சல்பியுரிக் அமிலமாக மாற்ற தேவை இல்லை. அப்படியெனில்... மக்கள் சாவார்களே..? லண்டனில் இருக்கும் ஓனருக்கு தூத்துக்குடி மக்கள் செத்தால் என்ன... வாழ்ந்தால் என்ன..?

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், SO2 எமிஷனுக்கு நிர்ணயித்து இருக்கும் அளவு... 'பெர்மனன்ட் எக்ஸ்பொஷர் லிமிட்'(PEL) நிரந்தர தாக்குப்பிடிப்பு அளவு:5ppm. (காற்றில் 10 லட்சத்தில் 5 பங்கு)

இதுவே, ஸ்டெர்லைட் வென்ட் பண்ணினால், 75ppm அளவுக்கு இந்த நச்சுவாயு அடர்த்தி எனில், அங்கே, 1 மணி நேரம் மட்டுமே மக்கள் தாக்குப்பிடித்து இருக்கலாம் என்பதுதான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கும் PEL.

ஆனால்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் SO2 நச்சுவாயு வெளியாகும் அளவுபற்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அரசுத்துறை அறிக்கை யாதெனில்...
1000ppmக்கும் மேலே..! 😢

//
The readings of the sulphur di-oxide analyser linked to the PCB’s Care Air Centre at Guindy here suggested that the emission was in the range of 504.5 to 1123.6 ppm (parts per million) during those occasions as against 477.53 ppm prescribed by the Union ministry of environment and forests.

https://timesofindia.indiatimes.com/city/chennai/Sulphur-dioxide-emission-from-Sterlite-high-says-government/articleshow/19470029.cms
//

அப்படி எனில்... ஒரு நிமிஷம் கூட மக்கள் வாழத்தகுதியற்ற ஊர்... தூத்துக்குடி..!

ஆகவே, இந்த ரிப்போர்ட் வந்த 2013ம் ஆண்டே... அந்த ஸ்டெர்லைட்டின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு, ஆலையை நிறுத்தி ஊழியர்களை வெளியேற்றி கேட்டைபூட்டி சீலிட்டு... உரிமையாளரை கோர்ட்டுக்கு இழுத்து பல்லாயிரம் கோடி நஷ்ட ஈடு வாங்கி...உயிர் விட்ட,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தந்திருக்க வேண்டாமா அரசு..?!

சரி, இப்போது ஆர்செனிக் பற்றி பார்ப்போம். அது இதைவிட மாபெரும் கொடுமை..!

SO2 பிரிந்த பிறகு... மீதமுள்ள காப்பர் தாதுவில் ஆர்செனிக் கலந்து இருக்கும். காப்பரை அதிலிருந்து பிரித்து தனியே எடுத்த பின்னர், ஆர்செனிக் என்ற திண்மப்பொருள் சகதி போல (ஸ்லட்ஜ்) ஆக பிரிந்து தனித்துவிடுகிறது. இதை என்ன செய்வது..? நீரிலும் விட முடியாது. நிலத்திலும் விட முடியாது. திண்மம் என்பதால்... சல்பர் டை ஆக்சைடை காற்றில் திறந்து விட்டது போல...  திறந்து விடவும் வாய்ப்பில்லை.

இதை ஸ்டெர்லைட் என்ன செய்ய வேண்டும் எனில்... அதன் ஆலை வளாகத்தின் உள்ளேயே... சூரிய ஒளி, மழை நீர், காற்று ஏதும் படாதவாறு சீலிடப்பட்ட  மிகப்பிரம்மாண்ட  மெடல் டாங்கிகளில்  எவ்வித லீக் ஆவதுக்கும்  வாய்ப்பே இன்றி, நிலமட்டத்தில் இருந்து சற்று உயர்த்தி வைத்து அடிக்கடி யாதொரு கசிவும் இருக்கிறாதா என்று பரிசோதித்து பாதுகாத்து பரிசோதித்து பாதுகாத்து  பரிசோதித்து பாதுகாத்துவைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஆனால்... ஸ்டெர்லைட் என்ன பண்ணுகிறது... தெப்பக்குளம் போல கட்டி தேக்கி வைக்கிறது. அதற்கு... 'Cake Pond' என்று பெயரும் இட்டு..!

அடப்பாவிகளா..!

இங்கே மழை பெய்தால் அந்த தெப்பம் நிறைந்து ஆர்செனிக் வழிந்து ஓடுமாம்... எங்கே...? நிலத்தில்தான்..! இப்படித்தான் தூத்துக்குடி நிலத்தடி நீரில் ஆர்செனிக் கலந்துள்ளது.

மழை விட்டபின்னர்... நீர் பூமியில் உறிஞ்சிய பின்னர்... நிலத்தின் மீது எஞ்சி இருக்கும் அந்த ஆர்செனிக் சகதியை எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி எதோ வயல் சகதியை மம்பட்டியால் வெட்டி எடுத்து போடுவது போல ட்ரக்கில் போட்டு தெப்பத்தில் கொண்டு போய் கொட்டுவார்களாம். அந்த ட்ரக் டயரில் ஒட்டிய ஆர்செனிக் கழிவு, ட்ரக் வேலை முடிந்து ஆலையை விட்டு வெளியே போனவுடன்... சக்தி காய்ந்து... தூத்துக்குடி ஊரெங்கும் தூவிச்செல்லும்தானே..? இப்படித்தான் ஆர்செனிக் ஊர் முழுக்க பரவுகிறது. அப்புறம் அதில் வேலை செய்தவர்களின் உடலில் உடையில் செருப்பில் ஒட்டி இருக்கும் ஆர்செனிக் அவர்களின் வீடுகளுக்கும் செல்லும். வீட்டில் உள்ள குழந்தை கையை கீழே வைத்து வாயில் வைத்தால்... முடிந்தது... குழந்தைக்கும் கேன்சர்..!

(மேற்படி தகவல், ஸ்டெர்லைட்டில் வேலை பார்த்துவிட்டு பின்னர் என்னோடு எனது நிறுவனத்தில் பணியாற்ற வந்த தோழர் சொன்னவை)

இதெல்லாம் விட... படத்தில் உள்ள அந்த 30 வருஷ கால பழைய ஆர்செனிக் குளத்தின் அடியில் போடப்பட்ட தளத்தில் இத்தனை வருஷத்தில் எத்தனை எத்தனையோ விரிசல்கள் விட்டு பூமிக்குள்ளும் ஆர்செனிக் சென்று கொண்டு நிலத்தடி நீரில் கலந்து கொண்டே இருக்குமே..!

நிலத்தடி நீரில் இந்த ஆர்சனிக் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா..? 10 கோடியில் ஒரு பங்குக்கு கீழே இருக்க வேண்டும்.(10ppb)
ஆனால்...
நீரி (NEERI-National Environmental Engineering Research Institute) என்ற  நீர்/நிலம் தொடர்பான
அரசு நிறுவனம், ஸ்டெர்லைட் அமைந்துள்ள தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் எடுத்த பல்வேறு சேம்பிள்
மாதிரிகளில்  ஆர்செனிக் கலப்பு பற்றி அளித்த ஆய்வுச்சோதனை முடிவுகள் அதிர்ச்சிகரமாக உள்ளது.
ஆம்... பத்து லட்சத்தில் 100... 200....300 பங்குகள் என்ற அளவில் ஆர்செனிக் உள்ளன..!

ஆனால்... இந்திய சட்டம் என்ன சொல்கிறது..?

50 க்கும் மேற்பட்ட மில்லிகிராம் / கிலோகிராம் ஆர்செனிக்  கொண்ட மண் வகைகளை இந்திய அபாயகரமான கழிவு விதிகள், 2008 இன் கீழ் அபாயகரமான கழிவுகளாக கருதப்பட வேண்டும் என்கிறது. எனில், அம்மண்ணில் மக்கள் வாழவே கூடாது... அந்த அபாயகரமான கழிவை மிதிக்கவே கூடாது, எனில் அப்புறம் எப்படி அதில் வீடுகட்டி வாழ்வது..!

//
https://www.thenewsminute.com/article/sterlite-here-s-proof-data-how-smelter-likely-cause-water-pollution-79055
//

மேற்படி... சுட்டியில் நீங்கள் நீரி ரிப்போர்ட்டை காணலாம். இந்த நீரி ரிப்போர்ட் 2005 ஆம் ஆண்டு சமர்ப்பித்தவை. அது வழக்காகி இறுதியில் உச்ச நீதி மன்றம் போயி... ஜஸ்ட் லைக் தட் 100 கோடி அபராதம் கட்ட சொல்லிட்டு பிலாண்டை ஓட்டிக்க சொல்லிருச்சு உச்ச நீதி மன்றம்..!

ஆக... அது முடிந்து... 13 வருஷம் ஓடியாச்சு. ஏகப்பட்ட மழை பெய்து ஏகப்பட்ட முறை கேக் பான்ட் நிரம்பி ஓடி... ஆர்செனிக் சகதி ஒட்டிய ட்ரக் ஊரு முழுக்க பலமுறை ஓடி... இப்போதெல்லாம்... ஆர்செனிக் அளவை சோதனை போட்டால்... ஆய்வாளருக்கே கேன்சர் வந்துவிடும்..!

இதன்பிறகும்... அரசியல்வாதிகள் அந்த தனியார் கம்பெனியை இயங்க அனுமதித்தால்... அவனுங்கலாம் மனிதகுலவிரோதிகள்..! இந்நாட்டில் வாழவே யோக்யதை இல்லாதவர்கள்... நம்மை ஆளுகிறார்கள்...! ச்சே... நம்மை விட உலகில் இழிந்தநிலையில் வாழும் மக்கள் வேறு யார் இருக்க முடியும்..?!

ஞாயிறு, 27 மே, 2018

மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை!


#ஜூனியர்விகடன்

#மிஸ்டர்கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை!

கழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன” என்றார்.

‘‘அவை என்ன?”

‘‘போர்க்களத்தில்தான் பதுங்கு குழிக்குள் படுத்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படித்தான் தூத்துக்குடியில் வேனில் ஏறிப் படுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஊர்ந்து போய் சுட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு இடுப்புக்கு மேலேயே குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. போலீஸ் நண்பர் ஒருவர். ‘Center Mass பற்றி விசாரியுங்கள்’ என க்ளூ கொடுத்தார். அதுபற்றி விசாரித்தேன். தூத்துக்குடியில் துப்பாக்கிகளைக் கையாண்டவர்களுக்கு ‘ஆபரேஷன் Center Mass’ தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

‘‘அது என்ன Center Mass?’’

‘‘துப்பாக்கியால் சுடும் பயிற்சி அளிக்கும்போது துப்பாக்கியின் வகைகள், ரேஞ்ச், தோட்டாக்கள் பற்றியெல்லாம் பாடங்கள் நடத்தப்படும். அதில், Center Mass பற்றியும் விளக்குவார்கள். கலவரத்தை அடக்குவதற்காகச் சுட வேண்டுமென்றால், காலில்தான் சுடுவார்கள். ஆனால், Center Mass என்பது வேறுவகைத் தாக்குதல். அதாவது, தோட்டாக்களுக்குச் சேதாரம் இல்லாமல் உயிரை எடுக்கும் தாக்குதல் இது. எங்கு சுட்டால் இலக்கு தவறாதோ, உயிர் உடனே போகுமோ, அங்கே சுடுவது. வயிற்றுக்கு மேலே இருக்கும் உடல்பகுதிதான் அகலமானது. உயிர் காக்கும் உறுப்புகள் இங்கேதான் உள்ளன. இந்த இடங்களைக் குறிவைத்துச் சுடுவதைத்தான், Center Mass எனப் பயிற்சியில் குறிப்பிடுவார்கள். அதாவது, உடலின் மத்தியில் அகன்று இருக்கும் பகுதியில் சுடுவது. துப்பாக்கி சுடும் பயிற்சியில் இதற்காக வைக்கப்படும் மனித உருவங்களில், தலையிலும் மார்பிலும் சுட வைப்பார்கள். தூத்துக்குடியில் பலரும் இந்த இடங்களில் குண்டு பாய்ந்தே இறந்துள்ளனர். ‘இப்படித்தான் சுட வேண்டுமென அவர்களுக்கு உத்தரவு போயுள்ளது’ என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.’’

‘‘இப்போதுகூடத் துப்பாக்கிச்சூடு பற்றித் தனக்குத் தெரியாது என்ற தொனியிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறாரே?”

‘‘எடப்பாடி சொல்வதில் ஓர் உள்ளர்த்தம் உள்ளது. 100 நாள்கள் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தபோது, ஒவ்வொரு நாளும் முதல்வருக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் போலீஸ் உயரதிகாரிகள் முதல்வரைச் சந்தித்து, ‘தூத்துக்குடியில் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. விரைந்து முடிவெடுங்கள்’ என்றனர். அவரோ, ‘இதில் நான் முடிவெடுக்க ஒன்றும் இல்லை. தலைமைச் செயலாளரிடம் பேசி, நீங்களே முடிவெடுங்கள்’ என்று சொல்லிவிட்டார். மத்திய உள்துறை அமைச்சகம் பல விஷயங்களை நேரடியாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனைத் தொடர்புகொண்டுதான் தெரிவிக்கிறது. அவர், அந்தத் தகவலை முதல்வரிடம் சம்பிரதாயத்துக்குத் தெரிவித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறார். இதனால்தான், முதல்வர் இதிலிருந்து கழன்றுகொண்டார். அந்த அடிப்படையில்தான் முதல்வர், ‘எனக்குத் துப்பாக்கிச்சூடு பற்றி எதுவும் தெரியாது’ என்று குறிப்பிட்டார்.’’

‘‘போலீஸ் தரப்பில் எங்கு ஓட்டை விழுந்தது?”

‘‘அண்மையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். அதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதுமிருந்து ஊழியர்களை ரகசியமாகத் திரட்டினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்தனர். இதை எப்படியோ மோப்பம் பிடித்தார், தமிழகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கவனிக்கும் உளவுப்பிரிவு ஐ.ஜி-யான ஈஸ்வரமூர்த்தி. அவரே உட்கார்ந்து ஸ்கெட்ச் போட்டு, போராட்டக்காரர்கள் கிளம்பும் இடத்திலேயே அவர்களுக்கு ‘செக்’ வைத்து வரவிடாமல் தடுத்தார். கடைசியில் சில ஆயிரம் பேர்தான் சென்னைக்கு வரமுடிந்தது. அவர்களைச் சென்னை போலீஸ் ஈஸியாகக் கையாண்டது. அதுவே, கூட்டம் ஒரு லட்சத்தைத் தாண்டியிருந்தால், சென்னை போலீஸ் தடுமாறிப்போயிருக்கும். அதற்குக் காரணமான ஈஸ்வரமூர்த்தி இப்போது ஹைதராபாத் போலீஸ் அகடமியில் சிறப்புப் பயிற்சிக்காகச் சென்றுவிட்டார். ‘அவர் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது’ என்கிறார்கள். மார்ச் மாத இறுதியில் தூத்துக்குடியில் கடையடைப்பு நடந்தபோது, ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது எதிர்பாராத கூட்டம் கூடியது. அதைப்பார்த்த மத்திய உளவுத்துறையினர், சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரனிடம் போய், ‘100-வது நாள் போராட்டத்தில் கூட்டம் லட்சத்தைத் தாண்டலாம்’ என எச்சரித்தார்களாம். ஆனால், எஸ்.பி அலட்சியம் காட்டினார் என்கிறார்கள்.’’

‘‘போராட்டம் இந்த அளவுக்குக் கோரமான முடிவுக்குப் போக என்ன காரணம்?”

சில கார்ப்பரேட் நிறுவனங்கள் சேர்ந்து, ‘இந்தப் போராட்டங்களை விரைவில் முடியுங்கள்’ என்று மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளார் களாம். ‘இதுபோன்ற போராட்டங்கள் நீடித்தால், அடுத்து வரப்போகும் திட்டங்களுக்கு இதைவிட எதிர்ப்பு எழும். அதனால், போராடும் மக்களுக்கும் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இப்போதே மரண பயத்தைக் காட்டிவிட வேண்டும்’ என்பது மத்திய உள்துறையின் உத்தரவாம். ‘அதன்பிறகுதான் துப்பாக்கிச்சூடுக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன’ என்கிறார்கள். போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் யார், தேவாலயங்களில் முக்கிய ஸ்தானத்தில் இருப்பவர்கள் யார், யாரைச் சுட்டுக்கொன்றால் போராட்டத்தை ஒடுக்க முடியும் என்ற விவரங்கள் துல்லியமாக எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் சிலர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.’’

‘‘உண்மையில் தூத்துக்குடியில் உயிர்ப்பலிகள் எத்தனை?’’

‘‘அதிகாரப்பூர்வ கணக்கு இப்போதுவரை 13 என்று சொல்லப்படுகிறது. ஆனால், உள்விவரங்களை அறிந்தவர்கள் அது இரண்டு மடங்கைத் தாண்டும் என்கிறார்கள். ‘கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் தாக்கப் பட்டுச் சிலர் உயிரிழந்துள்ளனர். அந்தச் சடலங்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்போது தூத்துக்குடியில் யாராவது காணாமல் போய்விட்டதாகப் புகார் வந்தால், அப்படி புகார் செய்ய வருபவர்களை உடனடியாகப் பாளையங்கோட்டையில் போய்ப் பார்க்குமாறு அனுப்புகிறது தூத்துக்குடி போலீஸ்’ என நமக்கு நெருக்கமான சோர்ஸ் ஒருவர் சொன்னார். போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது திரேஸ்புரம் பகுதி மக்கள் சிலர் கூட்டமாக  போலீஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த இடத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த போலீஸார், உடனடியாக வாகனத்தில் ஏறித் தப்ப முயன்றுள்ளனர். அந்த வாகனத்தைப் பொதுமக்கள் மறித்துள்ளனர். ஆனால், அவர்களை அந்த வேனை வைத்தே ஏற்றிக் காயப்படுத்தியுள்ளது போலீஸ். அப்படி அடிபட்டவர்கள் சிலரை அள்ளிக் கொண்டுபோய் மருத்துவமனையில் போட்டுள்ளனர். ஆனால், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் யாரையும் அங்கே போலீஸ் நெருங்கவிடவில்லை. அதனால், அவர்களில் இறந்தவர்கள் யார், காயமடைந்த வர்கள் யார் என்ற விவரமும் வெளியாகவில்லை. அதுபோல, திரேஸ்புரம் பகுதியில் ஒவ்வொரு வீடாக நுழைந்து போலீஸ் தாக்குதல் நடத்துகிறது. வெளியில் வீடு பூட்டியிருந்தாலும், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஆட்கள் இருக்கிறார்களா என்று சோதனையிடும் போலீஸ், அந்த வீட்டைச் சூறையாடிவிட்டுத்தான் வருகிறது.”

‘‘கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளிலும் கடும் கெடுபிடிகள் காட்டப்படுவதற்கு என்ன காரணம்?’’

‘‘முதன்மைக் காரணம், இந்தப் போராட்டம் அந்தப் பகுதிகளுக்குப் பரவிவிடக்கூடாது. சாதி, மத அடிப்படையில் இறுக்கமான கட்டமைப்பைக் கொண்ட அந்த மாவட்டங்களில் சாதிய ரீதியாகவும், மத அடிப்படையிலும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு கிடைத்துவிடக் கூடாது. அதுபோல, சாகர்மாலா திட்டத்துக்கு இப்போதே கன்னியாகுமரியில் எதிர்ப்புக் கிளம்பிப் பிரச்னையாகிக்கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டக்காரர்களுக்கும் இந்தக் கலவரத்தைச் சாக்காக வைத்தே உயிர் பயத்தைக் காட்டிவிட வேண்டும் என்பதுதான் போலீஸின் திட்டம்” என்றபடி கழுகார் பறந்தார்.

காடுவெட்டி குருவுக்கு திருமாவளவன் புகழாரம்!

காடுவெட்டி குருவுக்கு திருமாவளவன் புகழாரம்!

கோப்புப்படம் சென்னை: அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கும் அப்பால், காடுவெட்டி குரு எம்மோடு பணியாற்றியது என்றும் நினைவுகூரத்தக்கதாகும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 
உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காடுவெட்டி குரு, நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காடுவெட்டி குருவின் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: 

'வன்னியர் சங்கத் தலைவரும் பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி குரு உடல் நலிவுற்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம். 

மறைந்த அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில்
எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

தமிழ் பாதுகாப்பு இயக்கம் செயல்பட்ட காலத்திலும் 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போதும் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 

2011 - தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் வாக்குகளே காரணம் என்று நெகிழ்வோடு தெரிவித்து நன்றி பாராட்டினார்.

அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கும் அப்பால் அவர் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேர்தல் களங்களில் எம்மோடு நல்லிணக்கமாக பணியாற்றியது என்றும் நினைவுகூரத்தக்கதாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார்
உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

மானசீகன்


மானசீகன்

நேற்று காடுவெட்டி குரு மறைந்த போது தோழர்.திருமாவளவன் மிகுந்த கண்ணியத்தோடு இரங்கல் தெரிவித்திருந்தார். அந்த  இரங்கலில் அவருடைய  அரசியல் முதிர்ச்சி தென்பட்டது.

திருமாவின் 90 கள் காலகட்டத்து பேச்சை நான் ரசித்ததில்லை.ஆனால் ஒருவகையில் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எதிர்வினைதான் அது.அகிம்சையை தன் தாரக மந்திரமாகக் கொண்ட காந்தி'வன்முறையை பிரயோகிப்பதற்கான தார்மீக நியாயம் யாருக்காவது உண்டென்றால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே அது இருப்பதாக நான் கருதுகிறேன் ' என்று பேசியிருக்கிறார். அந்த  அளவுகோலில்தான் நான் ஆரம்ப கால திருமாவளவனை மதிப்பிடுகிறேன்.

ஆனால் 2000 க்குப் பிறகு அவர் மிகச் சிறந்த தலைவராக பரிணாமம் பெற்றிருக்கிறார்.நடுநிலை கொண்ட வன்னியர் சமூகத்துப் பெருமக்கள் கூட  தம் மன ஆழத்தில் அவர் மீது மரியாதை வைத்திருக்கின்றனர்.அவர் சாதிப்பெருமிதத்திற்கு எதிராக 'சாதி ஒழிப்பு ' என்ற  ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். திராவிட  இயக்கங்கள் இதனை பொதுத்தளத்தில் பேசுவது வேறு. ஆனால் தான் சார்ந்த சமூகத்திற்காக களப்பணியாற்றி அவர்களை அரசியல் விழிப்புணர்வு  அடையச் செய்து கொண்டே இதனைப் பேசுவது என்பது மிக முக்கியமானது.ஒரு வகையில் கடினமானதும் கூட.தனக்குக் கூடும் கூட்டத்தை தானே கலைப்பதற்கு நிகரானது அது.ஆனால் அவருக்கான கூட்டம் கலைவதேயில்லை.2016 ல் அவர் பிறந்த தின கவியரங்கத்திற்கு கவிமாமணிஅப்துல் காதர் தலைமையில் சென்றிருந்தேன் .காமராஜர் அரங்கத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.அந்த நிகழ்வில்தான் 'மக்கள் நலக் கூட்டணி' உறுதி செய்யப்பட்டது.அங்கு வைகோ பேசுகிற போது'வன்னியர் சமூகத்து இளைஞர்கள் அப்பாவிகள்.உழைக்கும் மக்கள்.அவர்களை சில தலைவர்கள் வழிகெடுக்கின்றனர்' என்று குறிப்பிட்டார்.அரங்கத்தில் பலத்த கை தட்டல்.அது நல்லிணக்கத்தின் குரல் என்பது மட்டும் அல்ல;பொறுமையும்,அறிவும் கொண்ட ஒரு தேர்ந்த வாத்தியாருக்குக்  கிடைத்த வெற்றி.வைகோவின் நல்லிணக்க உரையைப் புரிந்து கொள்கிற சூழலை திருமா தன் தொண்டர்களிடம் உருவாக்கியிருக்கிறார்.திராவிட  இயக்கத் தலைவர்களின் மனநிலை உயர்ந்ததாக இருந்தாலும் நடைமுறையில் அக்கட்சிகளின் குறுநிலமன்னர்களாகிய மாவட்டச் செயலாளர்கள் சாதி ஒழிப்பை சாத்தியமாக்கவில்லை.சமூக நீதி இடைச்சாதிகளோடு நின்று விட்டது. ஆனால் திருமா, பெரியார், அம்பேத்கர் இருவரையும் உள்வாங்கிக் கொண்டு இதனை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

காடுவெட்டி குரு பேசும் போது அவர் முன்னால் நின்றிருக்கிற கூட்டம் எப்படி வெறுமனே ரசிகக் குஞ்சுகளாக ஆர்ப்பரிக்கிறதோ அதே நிலைதான் திருமாவிற்கும்.ஆனால் முரட்டுத்தனமான பிள்ளைகளுக்கு கற்றுத் தர வந்திருக்கிற பொறுமை மிகுந்த வாத்தியாரைப் போல திருமா நடந்து கொள்கிறார்.

அவரை உற்றுக் கவனித்தால் தெரியும். இந்துத்துவத்தோடு துளியளவும் சமரசம் செய்து கொண்டதில்லை. திராவிட, பொதுவுடைமை மற்றும் இஸ்லாமிய  இயக்கங்களோடு நல்லுறவு வைத்திருந்தாலும் தன் தனித்தன்மையை சிறிதளவும் விட்டுக் கொடுக்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் பயணம் கத்தி மீது நடப்பதல்ல;ரேசர் மீது நடப்பது.

பறையர்களின் உரிமைக் குரலாகக் கிளம்பிய திருமாவளவன் இன்றைக்கு ஒடுக்கப்பட்டோரின் ஒரே நம்பிக்கையாக  உருமாறியிருக்கிறார்.தன் மக்களுக்கான  அதிகாரப் பங்கீட்டைப் பேசுகிற  அதே நேரத்தில் பிற சமூகத்தவர்களோடு பேண வேண்டிய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வருகிறார். அவருடைய சமீபகால பேச்சுக்கள் இடைசாதி மக்களின் மனசாட்சியோடு உறவாடி வருகின்றன. சில  ஆண்டுகளுக்கு முன்னால் உசிலம்பட்டியில் ஏராளமான தேவர்கள் நிறைந்திருந்த கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தார்.அவர் பேசி முடித்த பின் ஒரு பெரியவர் சொன்னார் 'இது பேச்சு; இது மாதிரி ஒரு தலைவன் இப்ப  எந்த சாதிக்கும் இல்லப்பா'.இது திருமாவளவனின் அரசியல் பரிமாணத்திற்குக் காலம் அளித்த மாபெரும்  விருது.

அவர் மட்டும் சில தருணங்களில் பொறுமையாக இல்லாமலிருந்திருந்தால் தமிழகத்தின் அமைதி கெட்டிருக்கும்.ஆனால் இக்கட்டான தருணங்களில்  அவர் மேற்கொண்ட பொறுமை பலரைத் தோலுரித்து அவரது புகழை மேலெழ வைத்திருக்கிறது.

தற்போதிருக்கும் இஸ்லாமிய  இயக்கங்களின் எந்தத் தலைவர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால்  இஸ்லாமியர்களின் பேரன்பைப் பெற்ற பெருந்தலைவராக திருமாதான் இருக்கிறார். கலைஞருக்குப் பிறகு இஸ்லாமியர்கள் வேறு யாரையும் இந்த  அளவிற்கு நேசித்ததில்லை.ஆனால் அந்த  உறவையும் அவர் தேர்தல் கண்ணோட்டமாக மட்டுமே சுருக்கி விடாமல் பரந்த பார்வையோடு கையாண்டு வருகிறார்.சமீபத்தில் பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களுக்கும்,பறையர்களுக்கும் இடையே  கலவரம் நிகழ்ந்த போது திருமா அங்கே சென்றார். பள்ளிவாசலில் அமர்ந்து இஸ்லாமியர்களோடு பேசினார். பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார். ஒரு இஸ்லாமியத் தலைவரைக் குறிப்பிட்டு அடுத்த தடவை வருகிற போது அவரோடு வருகிறேன் என்றிருக்கிறார்.அதற்கு அவர்கள் ' அவர் மீதெல்லாம் உங்கள் மீதிருப்பது  போல் எங்களுக்கு மரியாதை கிடையாது 'என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றனர்.திருமா அப்படிப்பட்ட  உயரத்தைத் தொட்டிருக்கிறார்.

அவருடைய  அரசியல்  உத்திகளை நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும். அதில் தெரியும் நிதானம், தொலைநோக்கு,பிடி கொடுக்காத  இலாவகம், யாரையும் பகைத்துக் கொள்ளாத தெளிவு அனைத்துமே கலைஞரின் குணாதிசயங்கள்.தமிழகத்தில் கலைஞருக்குப் பிறகு தேர்ந்த  அரசியல்வாதி திருமாதான்.நடைமுறைச் சாத்தியங்களின் எல்லைகளை மிகச் சரியாக உணர்ந்து பயணித்தாலும் அதற்காகத் தன் கனவுகளை ஒரு போதும் கை விடாதவர்.

அவர் செயல்பாடுகளையும்,சிந்தனைகளையும் புரிந்து கொண்டு அவரளவிற்கு முன்னே நகர்ந்து ஓடி வருகிறவர்கள் அங்கு குறைவாகவே இருக்கின்றனர்.ஆனால் பல்லாண்டு கால சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு இப்போது கோபத்தை மட்டுமே ஒரே ஆயுதமாகக் கொண்டு முன்னேறத் துடிக்கும் ஒரு சமூகத்திற்கு இப்படி  ஒரு தலைவன் வாய்த்திருப்பது மிகப்பெரிய வரம்.என்றோ ஒரு நாள் அந்த சமூகம் பக்குவத்தோடு எழுந்து நிற்கும் போது கண்டிப்பாக வரலாறு 'திருமா திருமா' என்றே முழங்கும்.

தமிழகத்தில் இந்துத்துவத்திற்கான மிகப்பெரிய முட்டுக்கட்டை அவர்தான். கிருஷ்ணசாமியைப் போல் அவர் ஆகியிருந்தால் இன்று மோடியின் செல்லப் பிள்ளையாக இருந்திருப்பார்.ஆனால் தன் அரசியலில் இருந்து விலகாத பயணமே அவருக்கான மரியாதையாக  உடனிருக்கிறது.

திராவிடம், காந்தியம், பொதுவுடைமை போன்ற  மாபெரும் தத்துவங்கள் தமிழகத்தில் மகத்தான தலைவர்களை உருவாக்கியிருக்கிறது.ஆனால் சுயம்புவாக ஒரு தலைவன் முளைத்து இந்த மூன்றோடு அம்பேத்கரியத்தையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறான்.தலித்தியத்தில் தொடங்கிய அவர் பயணம் திராவிடத்தை உள்வாங்கிக் கொண்ட இடதுசாரி தமிழ்தேசியமாகப் பரிணமித்திருக்கிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னுதாரணமே இல்லாத மாபெரும் சாதனை இது.

தலைவர்கள் இல்லாத வெற்றிடம் என்று அரிதாரம் பூசியவர்கள் வலை வீசுகிறார்கள்.வரலாறு நம் மீது பூசி விட்ட சாதிச் சேற்றிலிருந்து எழுந்து வந்து பாருங்கள்.இதோ நம் காலத்திற்கான ஒரு தலைவன் உருவாகி நிற்கிறான்.
Mohammed Rafeek R

சனி, 26 மே, 2018

உலகிலேயே அதிகசம்பளம் வாங்கும் அதிபர் இவர்கள் தானாம், அப்போ மோடி?

உலகிலேயே அதிகசம்பளம் வாங்கும் அதிபர் இவர்கள் தானாம், அப்போ மோடி?

பல நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கும்பிரதமர் மோடி மற்றும் மோடி அரசின் மீது தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இதர மாநில கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை தெரியும்.
  • இந்நிலையில் முன்னணி நாடுகளின் தலைவர்களின் சம்பள அளவுகள் பற்றித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் மோடி பெற்று இருக்கும் இடம் தான்.
1. லீ ஹெய்சன் லாங்
சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ ஹெய்சன் லாங் அவர்கள் தான் இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் வருடத்திற்குச் சுமார் 1.6 மில்லியன் டாலர் பெற்று வருகிறார்.
2. டொனால்டு டிரம்ப்
சிங்கப்பூர் பிரதமரை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சுமார் 4,00,000 டாலர்சம்பளத்துடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
3. ஜஸ்டின் ட்ரூடோ
தமிழர்களுக்குப் பிடித்தமான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2,60,000 டாலர் சம்பளத்துடன் 3வது இடத்தைப் பெற்றுள்ளார்.
4. ஏஞ்சலா மெர்கல்
ஜெர்மனி நாட்டின் அதிபராக மட்டும் அல்லாமல் உலகின் சக்திவாய்ந்த பெண்ணாக இருக்கும் ஏஞ்சலா மெர்கல் 2,42,000 டாலர் சம்பளம் பெறுகிறார்.
5. இம்மானுவல் மேக்ரோன்
இப்பட்டியலில் 5வது இடத்தில் பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவல் மேக்ரோன் 2,20,656 டாலர்சம்பளத்துடன் இடம்பெற்றுள்ளார்.
6. ரெசெப் தயிப் எர்டோகன்
துருக்கி நாட்டின் அதிபரான ரெசெப் தயிப் எர்டோகன் இப்பட்டியலில் 2,04,360 டாலர்சம்பளத்துடன் 6வது இடத்தைப் பெற்றுள்ளார்.
7. தெரசா மே
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து வந்த பின்பு தன் நாட்டின் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் முக்கியமான பணியில் இருக்கும் பிரிட்டன் நாட்டின் பிரதமர் தெரசா மே 1,49,440 டாலர் அளவிலான சம்பளம் மட்டுமே பெற்றுள்ளார்.
8. விளாடிமிர் புடின்
பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவுக்குக் கடுமையான போட்டி கொடுக்கும் ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் பன்முகத் திறமை கொண்டவரான இவர் 1,12,000 டாலர்சம்பளத்துடன் 8வது இடத்தில் உள்ளார்.
9. நரேந்திர மோடி
முன்னணி நாடுகளின் தலைவர்களின் சம்பள அளவுகளைப் பார்த்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிற தலைவர்களைக் காட்டிலும் மிகவும் குறைவான அளவிலான சம்பளத்தையே பெறுகிறார்.மோடி வருடத்திற்குச் சுமார் 30,000 டாலர் அளவிலான சம்பளத்தைப் பெற்று வருகிறார்.
10. ஜி ஜிங்பிங்
மோடிக்கு அடுத்ததாக டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தைச் சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருடத்திற்கு22,000 டாலர் அளவிலான சம்பளத்தை மட்டுமே பெறுகிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து ...


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து ...

சலூன் கடை ஒன்றில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதுவும் குறளுக்கு உரை தந்த கலைஞர் டி.வியில். “யப்பா அந்த சத்தத்தை குறைப்பா. முடியல!”, சலிப்புடன் ஒருவர் சொல்ல ஒலியை மியூட் செய்தார் கடைக்காரார். சிறிது நேரத்திற்கு அந்த இடமே மயான அமைதியுடன் ஒடுங்கியது. உடனே “எழவு வீடு மாதிரி இருக்கு. சத்தத்த கூட்டு” என்றபடியே மீண்டும் தமிழ் வர்ணனை கேட்க ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட தமிழ் வர்ணனையில் கிரிக்கெட் பார்ப்பவர்கள் பெரும்பாலானவர்களின் மனநிலை இதுதான். அந்த மொழியோடு ஒட்ட முடியவில்லை. வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு பார்க்கிறார்கள்.

மொழியே தெரியாமல் இருந்தாலும் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் இருந்த சிறு ஒட்டுதல் கூட தமிழில் ஏன் இல்லை என பலரும் கேட்கிறார்கள். காரணம் தமிழ் கிரிக்கெட் வருணணையில் இருப்பது ஆங்கிலம் கலந்த பார்ப்பன மொழி.

“அரவுண்ட த விக்கெட்ல(around the wicket) போட்டுண்டுருக்காரு, அல்ட்ரா எட்ஜ்(ultra edge) நன்னா காமிக்கர்து, சிக்சர் போயிடுத்து, 4 வந்துடுத்து, பிரண்ட் ஃபூட்(front foot) வந்து ஆடுறச்சே நன்னா…., அவா ஜெயிச்சிருவானு கிளியரா தெரிஞ்சுண்டுருக்கு..”

ஹேமங் பதானி, கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த், பத்ரிநாத், லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் என முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர்கள் என்ற பெயரில் ஒரு அக்கிரஹாரத்தையே களமிறக்கியிருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிறுவனம். வர்ணனை என்ற பெயரில் பார்பனத் தமிழைக் கொண்டு கிரிக்கெட் ரசிகர்களின் காதுகளை கர்ண கொடூரமாக பதம் பார்க்கிறது மேற்படி கூட்டணி. ஆர்.ஜே.பாலாஜியே பரவாயில்லை எனும் நினைக்கும் அளவுக்கு நம்மை தாக்குகிறார்கள்.

“என்ன மாமா ஆத்துல அத்திம்பேர் சௌக்கியமா இருக்காளா?” என்று ஐ.பி.எல் வர்ணனையில் இன்னும் பேசப்படவில்லை. அதையும் கூடிய சீக்கிரமே எதிர்பார்க்கலாம். இதை தவிர பந்து உஸ்ஸ்ஸ்-னு போகுது, மூக்கு மேல ராஜா என இவர்கள் அடிக்கும் மொக்கை வர்ணனைகள் கேட்பவர்களை எரிச்சலூட்டுகின்றன.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

பொதுவில் நாம் எந்த வட்டார வழக்கு பேசினாலும் ஒரு மேடையில் பலர் முன்னிலையில் பேசும்போது நாம் அனைவருக்குமான பொதுத் தமிழ் மொழியில் தான் பேச ஆரம்பிப்போம். அது இயல்பு. ஆனால் பல லட்சம் பார்வையாளர்கள் பார்க்கும் ஒரு கிரிக்கெட் போட்டியில் அக்கிரஹாரத்து மொழியை எந்த கூச்சமும் இன்றி பயன்படுத்துகிறார்கள். கிரிக்கெட் விளையாடுபவர்கள் முதல் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வரை அனைவரும் ‘அவா’- க்களாக இருப்பதால் கிரிக்கெட் சங்க தாழ்வாரங்கள் இயல்பாக அக்கிரஹாரங்களாகவே அவர்களுக்கு காட்சியளிக்கின்றன. அதனால் அக்கிரஹாரத்து மொழியும் அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது.

சிவராமகிருஷ்ண ‘ஐயர்’

இப்பார்ப்பன மாமக்களின் வர்ணனைகளைவிட சிறுநகரங்களில் ஊள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனை சிறப்பானதாக இருக்கிறது. “முன் சென்று தடுத்து ஆடினார் (front foot defence)” “மட்டையாளரை ஏமாற்றி காப்பாளரிடம் தஞ்சம் புகுந்தது”. “பந்து எல்லைகோட்டை தாண்டியது. நான்கு ஓட்டங்கள்” என இவ் வர்ணனைகள் சிறப்பானதாக இருக்கும். இவை சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் போன்றவர்களின் வானொலி கிரிக்கெட் வர்ணனைகளை பிரதியெடுத்து பேசப்படுபவை. நீங்கள் தஞ்சை, திருநெல்வேலி என வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றாலும் ஒரே மாதிரியான வர்ணனைகளை பார்க்க முடியும்.

பார்ப்பன மொழி என்பதையும் தாண்டி கடந்த 10-ஆம்(10-5-2018) தேதி நடைபெற்ற டெல்லி vs  ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள் இப்பார்ப்பன முன்னாள் வீரர்கள். காரணம் டெல்லி அணியில் விளையாடும் ஸ்ரேயஸ் ஐயர் என்ற வீரர். அவர் பெயரின் பின்னொட்டை பார்த்ததும் வர்ணனையில் இருந்த லஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

“……ஸ்ரேயஸ் ஐயர்…..நானும் ஐயர் தான். என் பெயர் சிவராமகிருஷ்ண ஐயர்” என்ற பல லட்சம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேரடி வர்ணனையில் தன் சாதியை தெரிவிக்கிறார்.

அபினவ் முகுந்த்.

நேற்று(17-05-2018) நடைபெற்ற ஹைதராபாத் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் தான் ஒரு மாத்வா பிராமின் என வர்ணனையில் தெரிவித்தார் அபினவ் முகுந்த என்ற கிரிக்கெட் வீரர்.

சக வர்ணனையாளரான முத்து என்பவர் ” எந்த அணி ஜெயிக்கப் போகிறது. ஹைதராபாத்தா இல்லை பெங்களூரா? பிரியாணியா இல்லை பிசிபெல்லா பாத்தா?  என்ற கேட்டபோது  “பிசிபெல்லாபாத்துதான், அக்சுவலி நான் மாத்வா பிராமின்” என்று சம்பந்தமில்லாமல் தனது சாதியை குறிப்பிட்டார் அந்த கிரிக்கெட் வீரர்/வர்ணனையாளர்.

சாதி வெறியனாக இருந்தாலும் அடுத்தவர்களிடம் சாதி பெயர் கேட்பது நாகரிகமற்றதாக கருதப்படுகிறது. ஆனால் எந்த நாகரிகமும் இல்லாமல் ஐயர் என்பதை ஏதோ முனைவர் பட்டம் போல பெருமைமிகு அடையாளமாக கூறி அற்ப சந்தோசமடைவதை பார்ப்பனத் திமிர் என்று தான் அழைக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் நடந்த போட்டி ஒன்றில் ஒரு வீரர்  பந்து பிடிப்பதை தவற விட்டுவிட்டார். அப்போது ஶ்ரீகாந்தின் வர்ணனை.“ விட்டுடான்… ஐயோ…நாராயணா,வாசுதேவா…” என்று பார்த்தசாரதி கோவில் தெரு மாமாக்களை நினைவுபடுத்தினார்.” ஓ மை காட்” என்று ஆங்கிலத்தில் கூறுவதை நாராயணா வாசுதேவா என்று தமிழ்படுத்தியிருக்கிறார் திருவாளர் ஶ்ரீகாந்த். விட்டால் ஆங்கில வழக்கை சுதேசிப்படுத்தியிருப்பதாக நம்மிடம் படுத்தினாலும் படுத்துவார்கள். சிவராமகிருஷ்ண ‘ஐயரி’-ன் மேற்படி கூற்றுக்கு ஒரு ‘ஐயங்காரரி’-ன் எதிர்வினையாகவும் இதை பார்க்கலாம். சைவ-வைணவ, ஐயர்-ஐயங்கார் சண்டை அங்கேயும் தொடர்கிறது போலும்.

ஐ.பி.எல் போன்ற போட்டிகளில் சாதி வெறியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். சாதி வெறிக்கு இடமளித்ததற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்பதோடு இப்பார்ப்பன வெறியர்களை தங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

பொதுவில் தமிழகத்தில் பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்துகொள்வது இழிவானது நாகரிகமற்றது என்று கருதப்படுகிறது. அதனால் தான் சாதிவெறி கட்சி நடத்தினாலும் கொங்கு ஈஸ்வரனுக்கும், ராமதாஸ்களும் தமது பெயரில் சாதி பின்னொட்டை சேர்க்காமல் இருக்கிறார்கள். இந்த சூழலில் சாதி வெறியர்களோ – சாதி அபிமானம் கொண்டவர்களோ, பொது இடங்களில் தமது சாதியை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கப்பதற்கு சிரமப்படுகிறார்கள்.

ஆடுறதுக்கு அமெரிக்கா, பாடுறதுக்கு பார்த்தசாரதி தெருவா?

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் சாதி பெயரை இன்னும் பயன்படுத்துகிறார்கள். (ஸ்ரேயஸ் ஐயரும் தமிழக கிரிக்கெட் வீரர் அல்ல). தமிழகத்தில் மதிக்கப்பட வேண்டுமானால் சாதி பெயரை துறக்க வேண்டியிருக்கிறது. இவர்களைப் பொறுத்த வரை இது எவ்வளவு பெரிய அநீதி! இச்சூழலில் அமித் மிஸ்ராக்கள், இசாந்த் சர்மாக்களை மட்டுமே பார்த்த இடத்தில் ஐயர் என்ற பெயரை பார்த்தால்? தன்னை அறியாமல் குதூகலம் அடைகிறார்       லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன ஐயர். இந்த குதூகலத்தை அபபடியே திருப்பிப் போட்டால் அது தான் பார்ப்பனர்கள் தமிழகத்தின் மீதும் திராவிட இயக்கத்தின் மீது காட்டும் வெறுப்பு. அவாளது சாதி பெருமிதத்தை அவர்களே மறைக்கும்படி பெரியாரின் மண் செய்து விட்டதைத்தான் கலிகாலம் முத்திடுத்து என்று புலம்புகிறார்களோ என்னமோ!

இதுவே தம்மை நட்டநடு சென்டராகவும், தாராளமயத்தை ஆதரிக்கும் லிபரலாகவும் இருக்க நேர்ந்தால் என்ன நடக்கும்? உள்ளூர இருக்கும் திராவிட இயக்கத்தின் மீதான் காழ்ப்பு இன்னும் பலமடங்காக துள்ளி எழுகிறது. அதற்கு சரியான சான்று சமீபத்திய ந.ந.சென்டரும், ஆல்பர்ப்பஸ் அங்கிளுமான எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் என்பவர். இந்துத்துவாவையும் எதிர்க்கிறேன், திராவிடம் – பெரியாரையும் எதிர்க்கிறேன் என்று இந்த பெரியவாள் அடித்து விடும் வார்த்தைகளால் தமிழ் ஃபேஸ்புக்கே வெட்கித் தலை குனிகிறது. காலஞ்சென்ற சுந்தர ராமசாமியின் தயவால் காலச்சுவடில் கருத்துபதேசம் பண்ணின பெரியவாள் இன்றைக்கு டி.வி.விவாதம் மற்றும் ஃபேஸ்புக்கில் பலரையும் படுத்தி எடுக்கிறார். அவாள் யாராக இருந்தாலும் விவாதத்திற்கு கூப்பிட்டே ஆக வேண்டும் என்று தமிழ் சேனல்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உத்திரவு போட்டிருப்பதால் இந்த அடிமுட்டாள் பிரைம் டைம்மில் மனுதர்மத்தையே  மாத்திப் போட்டு பேசுகிறார்.

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஐ.பி.எல் வர்ணனையில் சாதி பெயரை தெரிவித்தது ஒரு உதாரணம் தான். சாதி பெயர் கேட்கப்படாத ஐ.டி அலுவலகங்களிலும் இதை பார்க்க முடியும். அங்கு ஒரு தேவர் மற்றொரு தேவரையோ, நாடார் நாடாரையோ கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் பார்ப்பனர்களுக்கு அக்கவலையில்லை.காரணம் அவர்களின் பார்ப்பன மொழி, பண்பாடு. அனைத்திலும் மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட அதிகம் மெனக்கெடுகிறார்கள்.

பார்ப்பன மொழியை மீறி வேறு சில உபாயங்களையும் வைத்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அணு குண்டு வெடித்தவர்களாயிற்றே!  ஐ.டி நிறுவன டீமில் புதிதாக சேருபவர்களில் ‘அவா’க்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்கு ஒரு கையேடே வைத்திருக்கிறார்கள்.

பொதுவாக பேசிகொண்டிருக்கும் இடத்தில் “கொஞ்ச நாளா நான் சந்தியாவந்தனமே பண்றதில்லை”

“என்ன பாஸ் இன்னிக்கு லேட்.”

“வீட்டுல ஆவணி அவிட்டம்”

“உங்களுக்குமா எங்களுக்கும் ஆவணி அவிட்டம்”…… புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள், புதிய மனுதர்மக் கூட்டணிகள் உருவாகி விடும். இல்லையென்றால் கட்டிப்பிடிக்கும் “ஹக்” கலையின் மூலம் உள்ளே நெளியும் பூணூலை பாசத்தோடு அடையாளம் காண்பார்கள். பிறகு என்ன, அவா, இவா, ஆத்துல, காயத்ரி மந்திரம், தோப்பனார், அத்திம்பேர் என்று அவாளது கலைக்களஞ்சியம் கொஞ்சி விளையாடும். இந்த அவாள் மொழி பேசினால்தான் நாகரிகம் என்று சிலபல சூத்திரர்களும், பஞ்சமர்களும் முயற்சி செய்யும் சோகம் தனிக் கதை. தொலைக்காட்சிகளிலும், சினிமா உலகிலும் கூட இந்த பார்ப்பனியமயமாகும் தமிழின் அவலத்தைக் கேட்கலாம்.

கிரிக்கெட்டில் ஐ.பி.எல். என்ற 20-20 வடிவம் ஒரு நவீன வடிவம் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல ஐ.டி. வேலையும் அதன் வாழ்க்கையும் நவீனம் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டு நவீனத்திலும் தொடர்பு மொழி என்னவோ பழைய பார்ப்பன பஞ்சாங்கங்கள்தான்.

****

சில நாட்களுக்கு முன்னர் வினவு தளத்தில் வெளிவந்த “காஷ்மீர் மன்னர்கள் ஆய் போன கதை” என்ற கட்டுரையில் கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாமல் காஷ்மீர் மன்னர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிய கதை குறிப்பிடப்பட்டிருந்தது. அது மன்னர் காலம். அதே போன்ற ஒரு கதை நாம் வாழும் காலத்திலும் நடந்திருக்கிறது. அந்த சம்பவத்தை கீழே படியுங்கள்.

நவம்பர்-23,2000-ஆம் ஆண்டில் ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தான் அந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் நடந்தது.

ஆனால் இங்கு மன்னர் ஆடவில்லை. மன்னரின் புதல்வரான இளவரசர் கிரிக்கெட் ஆடினார். ஏழு நிமிடங்கள் களத்தில் நின்று ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆகினார். இளவரசருக்கு அன்று மூட் சரியில்லாததால் அவுட் ஆனதை ஏற்றுக் கொண்டு பெவிலியனுக்கு நடையை கட்டினார். இல்லையெனில் காஷ்மீர் மன்னரின் நிலை தான். எதிர் அணியின் நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

அந்த இளவரசர் வேறு யாரும் இல்லை. ஹிமாச்சல் பிரதேச பா.ஜ.க. எம்.பி. மற்றும் முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் தான். மன்னர் அன்றைய ஹிமாச்சல் பிரதேச முதல்வர் பிரேம் குமார் துமால்.

இப்போட்டி நடைபெற்றதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி இளவரசர் அனுராக் தாகூர் ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பின்னர் தேர்வு குழுவின் தலைவராகவும் ஆனார்.

பிறகு என்ன? இதுவரை ரோட்டு ஓரத்தில் ‘ஒன்பிச் கேட்ச்’ கில்லி கிரிக்கெட் கூட விளையாடியிராத தன்னை ஹிமாச்சல் பிரதேச ரஞ்சி அணிக்கு தானே தேர்வு செய்து கொண்டார். பிறகு தன்னை கேப்டனாகவும் அறிவித்துக் கொண்டார். விளையாடவும் செய்திருக்கிறார். அந்த ஆட்டம் எப்படி நடந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். நிச்சயமாக காஷ்மீர் மன்னரைவிட மட்டமாக இருந்திருக்கும்.

மாநில முதல்வரின் மகன் கிரிக்கெட் சங்க தலைவராகி, பின்னர் தேர்வுக் குழுவில் தன்னைத்தானே நியமித்துக் கொண்டு,  தன்னைத் தானே தேர்வு செய்து அதுவும் கேப்டனாகி கிரிக்கெட் விளையாடி டக் அவுட் ஆகியிருக்கிறார்.

விசயம் அதோடு முடியவில்லை. அந்த ஒரு மேட்சில் டக் ஆவுட் ஆனதை தகுதியாக கொண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற அந்தஸ்தில் தேசிய அளவில் ஜூனியர் கிரிக்கெட் தேர்வு குழு தலைவரானார். கிரிக்கெட்டின் தேர்வுக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தான் இடம்பெற முடியும் என்பது விதி. இளவரசர் கிரிக்கெட் விளையாடியதன் நோக்கமே இதற்குதான். பின்னர் அதை கொண்டு படிப்படியாக பி.சி.சி.ஐ. தலைவராகவும் உயர்ந்தார்.

தன் மீதான வழக்கை தானே விசாரிக்கும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி; தன் மீதான குற்றத்திற்கு தானே விசாரணை கமிசன் அமைக்கும் தமிழக ஆளுநர்; தன்னை தானே ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யும் பா.ஜ.க. எம்.பி.

மேற்கண்ட மூவரும் பா.ஜ.க-வினர் அல்லது பா.ஜ.க. எடுபிடிகள் என்பது ஒரு யதேச்சையான ஒற்றுமை இல்லை. மேற்கண்ட செயலுக்காக இவர்கள் கடுகளவுக்கேணும் கூச்சமோ நாணமோ அடைவதில்லை. பா.ஜ.க.வினரின் டிசைனே அப்படித்தான்.

வேத காலத்தில் இணையம் இருந்தது, சேது பாலத்தில் குரங்கு போட்ட பாலம் இருக்கிறது, ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் அந்தக் காலத்து லைவ் ஒளிபரப்பு, அர்ஜுனன் பயன்படுத்திய பிரம்மாஸ்திரம் நைட்ரஜன் குண்டுக்கு இணையானது, பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்ட ஜோசியம் குறித்த படிப்பு அறிவியல் துறையின் கீழ் வருவது………… இன்னபிற கூத்துக்கள் நடைபெறும் நாட்டில் கிரிக்கெட்டில் மட்டும் விளையாட்டா இருக்கும்!

மற்ற நாடுகளில் ஆடப்படும் ஜென்டில்மேன் கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் முற்றிலும் வேறுபட்டது. ஆம். இதன் பெயர் மனுதர்ம கிரிக்கெட்!

ஸ்டெர்லைடின் உற்பத்திப் பொருட்களும்... அதற்கு அரசியல்வாதிகளின் 30% கமிஷன் கேல்குலேஷனும்



ஸ்டெர்லைடின் உற்பத்திப் பொருட்களும்... அதற்கு அரசியல்வாதிகளின் 30% கமிஷன் கேல்குலேஷனும்..!

கக்கூஸ் கட்ட வாசலில் 20 குழி மணல், 50 செங்கல் கொட்டினாலே.. எங்கேந்தோ மூக்கு வேத்து... கழுகு மாதிரி ஓடி வருவாங்க..நம்ம ஊர் அரசியல்வாதிகள்..!

ஸ்டெர்லைட்டில் கோடிகளில் பணம்.. மெட்ரிக் டன்களில் உற்பத்தி..! விட்டா வைப்பாங்க..? ஆளாளுக்குப் படை எடுத்து .. கொடுத்து கொடுத்தே கர்ணன் மாதிர கை சிவந்தாராம் இந்த ஆலையின் ஓனருங்க...அப்பவும் மாளல்லை..! பிரய்யோஜனமும் இல்லை.
_____________________________

உண்மையானத் தமிழன்னா இதை ஒரு வார்த்தை விடாம படிக்கணும்.

சமீபத்தில் டேனியல் ஞானராஜ்னு ஒரு மகராசன் ரொம்ப அக்கறையோடு தூத்துக்குடி நிலவரங்களை எழுதிட்டு வாரார். அவரும் அவர் குடும்பமும் நல்லாயிருக்கணும்!

இன்று தூத்துக்குடியில் நடந்த துயரமான சம்பவம் நம் சமுதாயத்தில் வாழும் மக்களின் அறியாமையை அரசியல்வாதிகளும், கிறிஸ்துவ மிஷனரிகளும், அரசியல் சார்ந்து ஆதாயம் தேடுபவர்களும் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

விவாதத்திற்குள் செல்லும் முன் ஸ்டெர்லைட் பற்றி அடிப்படையாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விசயங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் ஒரு காப்பர் ஸ்மெல்ட்டர், ஒரு ரிஃபைனரி, ஒரு ஸல்ஃபியூரிக் ஆசிட் பிளான்ட், ஒரு ஃபாஸ்ஃபோரிக் ஆசிட் பிளான்ட், மற்றும் ஒரு காப்பர் ராடு பிளான்ட் ஆகியவை உள்ளன.

காப்பர் ராடு உற்பத்தி செய்ய காப்பர் கேத்தோடு தான் மூலப்பொருள். பித்தளை, வெண்கலம் மற்றும் அலாய் ஸ்டீல் செய்யவும் காப்பர் கேத்தோடு உபயோகப்படுகிறது. இவை பெரும்பாலும் கட்டுமானப் பொருட்களுக்கும், நாட்டின் இராணுவத் தளவாடங்களுக்கும் உபயோகிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப் பயன்படுத்துவது உலகத்தரம் வாய்ந்த “A” கிரேடு கேத்தோடு ஆகும்.

காப்பர் தயாரிப்பின் உப பொருட்களாக
1) ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்,
2) சல்ஃப்யூரிக் ஆசிட்,
3) ஹைட்ரோ-ஃப்ளூரோ-சிலிசிக் ஆசிட்,
4) ஃபெர்ரோ சாண்ட் மற்றும்
5) ஃபாஸ்போ-ஜிப்பசம்,
இவை அனைத்தும் உற்பத்தி செய்யப் படுகின்றன.

இவற்றில் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

1) ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்.

இதில் ஃபாஸ்ஃபோரிக் ஆசிட், உரங்கள் தயாரிக்கவும், விலங்குகளுக்குத் தீவனம் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப் படுகின்றன. இது சல்ஃப்யூரிக் ஆசிட் மற்றும் ராக் ஃபாஸ்ஃபேட்டின் வேதியல் மாற்றத்தால் தயாரிக்கப்படுகிறது. இதன் செய்முறை மட்டும் கட்டுமான அமைப்பு இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்கு 2,30,000 மெட்ரிக் டன் அளவு இந்த ஃபாஸ்ஃபரிக் ஆசிட் தயாரிக்கப் படுகிறது. இவை டேங்கர் லாரிகள் மூலமாக இந்தியா முழுவதும் மற்றும் அயல்நாடுகளுக்கும் சப்ளை செய்யப் படுகிறது.

2) சல்ஃப்யூரிக் ஆசிட்.

காப்பர் ஸ்மெல்ட்டிங் செய்யும் போது சல்ஃபர் டை-ஆக்ஸைடு வாயு உருவாகிறது. அதுவே வேதியல் மாற்றமடைந்து சல்ஃப்யூரிக் ஆசிடாக உரு மாறுகிறது. இதில் பெரும்பகுதி, ஃபாஸ்ஃபோரிக் ஆசிட் தயாரிக்க உள்ளுக்குள்ளேயே உபயோகப்படுத்தப் படுகிறது. ஒரு சிறு பகுதியே வெளிச் சந்தைக்குச் செல்கிறது.

வெளிச்சந்தையில் விற்கப்படுவது உரங்கள் தயாரிக்கவும், எண்ணை சுத்திகரிப்பிலும், காகித தயாரிப்பிலும், டிட்டர்ஜென்ட் சோப் தயாரிப்பிலும், ஸ்டீல் தயாரிப்பிலும் உபயோகப்படுத்தப் படுகின்றன.

இது ஆண்டுக்கு 12,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

3) ஹைட்ரோ-ஃப்ளூரோ-சிலிசிக் ஆசிட்.

ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்டை ஆவியாக்கி குளிர வைப்பதில் உருவாவது தான் இது. பெரும்பாலும் இது தண்ணீரை சுத்தப் படுத்த உதவுகிறது. தண்ணீரில் க்ளோரின் கலப்பது போலத்தான் இதுவும். இது ஆண்டுக்கு 10,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப் படுகிறது.

4) ஃபெர்ரோ சாண்ட்.

காப்பர் உற்பத்தி செய்ய பைரோ-மெட்டலர்ஜிக்கல் ப்ராஸஸ் பயன்படுத்தும் போது இந்த ஃபெர்ரோ சாண்ட் கிடைக்கிறது. இது ஆற்று மணலுக்கு ஒரு மாற்றுப் பொருள். கட்டுமானத்திற்கும், சாலை அமைக்கவும் இந்த மணல் உபயோகப் படுத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு 6,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

5) ஃபாஸ்ஃபோ ஜிப்சம்.

தூத்துக்குடியில் உற்பத்தி ஆகும் இது, உலகின் மற்ற இடங்களில் கிடைப்பதை விட தரம் உயர்ந்தது. இது சிமென்ட் உற்பத்தியிலும், செங்கல் மற்றும் பிளாஸ்ட்டர் ஆஃப் பாரிஸ் உற்பத்தியிலும் உபயோகப் படுத்தப்படுகிறது. எண்ணை வித்துக்கள் விளைய வைப்பதற்கு முன் மண்ணைப் பதப்படுத்தவும் இது பயன்படுகிறது. இது ஆண்டுக்கு 10,00,000 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

பின்பு காப்பர் ராடு. இது தான் ஸ்டெர்லைட்டின் முதலும் முக்கியமானதுமான உற்பத்திப் பொருள். இது தொலைத்தொடர்பு வசதிகளுக்கும், மின்சாரக் கடத்தியாகவும், டிரான்ஸ்ஃபார்மர்களிலும், மின்காந்த கடத்திகளிலும் உபயோகிக்கப்படுகின்றன.

இந்தியாவில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் அளவு காப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஸ்டெர்லைட்டின் பங்கு 30% மேல், அதாவது தோராயமாக 50,000 மெட்ரிக் டன்.

நிற்க...!!!

இப்போது விவாதத்திற்கு வருவோம்.

இந்தக் காப்பரையோ, அல்லது காப்பர் உற்பத்தியின் போது கிடைக்கும் உப பொருட்களையோ, அல்லது அந்த உப பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் மற்ற பொருட்களையோ நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தாமல் இருக்கிறோமா?

அதாவது உரங்கள், தீவனம், எண்ணை, காகிதம், டிட்டர்ஜென்ட் சோப்பு, ஸ்ட்டீல், க்ளோரின், கட்டுமானப் பொருட்கள், சாலை, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ், எண்ணை வித்துக்கள், மின்சாரம் மற்றும் மின்கடத்திகள்.

இதில் எங்கு இருந்து வருகிறது கேன்சர்? மேற்சொல்லப்பட்ட ஆசிடுகள் நம் தோலில் நேரடியாகப் பட்டால் கண்டிப்பாகக் காயமோ அரிப்போ ஏற்படும். நாம் பள்ளியில் படிக்கும் போது சயின்ஸ் லாப்-இல் ஏற்படுமே, அது போலத் தான். அதுவும் உள்ளே வேலை பார்ப்பவர்களுக்கு. இவ்வளவு பெரிய நிறுவனம் கண்டிப்பாக அதற்கான பயிற்சிகள் அனைத்தும் தொழிலாளர்களுக்குக் கொடுத்திருப்பார்கள்.

இந்த ஆசிடுகள் எதுவும், யூனியன் கார்பைடு கேஸ் போல் அல்லாமல், காற்றில் கலந்து வேதிவினை புரிபவை அல்ல.

இவற்றில் ஸல்ஃப்யூரிக் ஆசிட்டுக்கு மட்டும் உள்ள குணாதிசயம் என்னவென்றால், அது திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சிக் கொள்ளும் என்பது மட்டுமே. உற்பத்தி செய்த உடனே அதைச் சேமித்து வைக்க முடியாது. அதனால் காற்றின் ஈரப்பதத்தை அது உறிஞ்சிக் கொள்ளலாம். தூத்துக்குடியில் மழை பெய்யாமல் இருக்க இது ஒரு காரணமாக இருக்கலாம்.


மற்றபடி கேன்சர் என்பதெல்லாம் கட்டுக்கதை.

இவ்வளவு பொருட்களை இத்தனை லட்சம் டன் கொள்ளளவு உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தின் வருட வியாபாரம் எவ்வளவு இருக்கும் என்று தோராயமாக உங்கள் மனதில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 22,000 கோடி இவர்களுடைய ஒரு வருட வியாபாரம். தோராயமாக 8,000 கோடி இதனுடைய மொத்த லாபம். ஒரு 5000 கோடி நிகர லாபமாக இருக்கலாம். கடந்த 5 வருடங்களில் 300 கோடி ரூபாயை மாசுக் கட்டுப்பாட்டிற்கு மட்டும் செலவழித்து இருக்கிறார்கள்.

உலக காப்பர் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 3.5%, இதை அதிகப் படுத்தத்தான் ஸ்டெர்லைட் 3300 கோடியில் விரிவாக்கம் செய்யலாம் என்று தீர்மானித்தது. இதன் மூலம் இப்போது இருக்கும் 5000 நேரடி வேலைவாய்ப்பு 9000-த்திற்கும், மறைமுக வேலைவாய்ப்பு 20,000-இல் இருந்து 29,000-த்திற்கும் உயரும் என்பது இந்த நிறுவனத்தின் கணிப்பு.

இங்குதான் நம்முடைய அரசியல்வாதிகள் உள்ளே வருகிறார்கள்.

இவ்வளவு வியாபாரம் நடக்கிறதே, இவ்வளவு லாபம் கிடைக்கிறதே, இன்னும் விரிவாக்கத்திற்கு கோடி கோடியாய் பணம் இருக்கிறதே, இதில் நமக்கு என்ன கிடைக்கும் என்பது தான் இவர்களுடைய குறிக்கோள். நம்முடைய அரசியல்வாதிகளுக்குத்தான் 30% கமிஷன் கொடுக்க வேண்டுமே. இந்தத் தொல்லையினால் சில நிறுவனங்கள் ஆந்திராவில் தொழில் தொடங்கச் சென்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சும்மா போய்க் கேட்டால் இந்த நிறுவனங்கள் பணம் கொடுக்க மாட்டார்கள் என்பதால், பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, கேன்சர் போன்ற வியாதிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களைத் தூண்டிவிட்டு, ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த அறியாமையில் போனதுதான், ஒரு பெண் உட்பட இன்று போன 11 உயிர்களும். இதில் காவல்துறையையோ, மாவட்ட ஆட்சியாளரையோ சொல்லிக் குற்றமில்லை.

நம் அப்பாவி மக்கள் தங்கள் அறியாமையினால் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து பிண அரசியலும் செய்து, தங்களுக்குத் தேவையானதையும் நிறைவேற்றிக் கொண்டு, நமக்காக நீலிக் கண்ணீரும் வடிப்பார்கள்.

நமது மக்கள் அறியாமையில் இருந்து வெளிவந்து சமூகத்தை அனுக வேண்டும். போராட்டத்தால் எல்லாவற்றிலும் ஜெயிக்க முடியாது. இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர்கள் குடும்பத்தினர் இனிவரும் காலங்களை எதிர்கொள்ள மன வலிமையைத் தருமாறு கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

எல்லா இழப்பையும் பணத்தால் ஈடு செய்ய முடியும் என்ற தமிழக அரசின் எண்ணத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உங்கள் சுவர்களில் பகிர்ந்து புரியாத மக்களுக்கு கொஞ்சம் விழிப்புணர்வு கொடுத்து உதவுங்கள்.

நன்றி - ஆனந்தன் அமிர்தன் ஜி பதிவு

சீமானின் சொத்து மதிப்பு விபரம் :


சீமானின் சொத்து மதிப்பு விபரம் :

1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர் ,
2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்,
3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்,
4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம் ,
5.ஆவடியில் 6ஏக்கர் நிலம் ,
6.பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள் ,
7.சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி!
8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில் ,
9.விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும்டிரஸ்டி பெயரில் சர்ச்,
10.மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம் ,
11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்
12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு .
13. நெல்லை குமரிமாவட்ட நாடார் முக்கிய சங்கத்தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
15.பழனி அருகே தென்னந்தோப்பு
16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை , மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு அமௌன்ட்.

ஒரு சாதாரண எளிய பிள்ளையின் சொத்து இவ்வளவு தான்

கடைசிய அரணையூரில் ஆறு கோடி 6000 சதுர அடியில் சின்னதா ஒரு வீடு.
Thanks whatsapp.

பரவும் நிபா வைரஸால் தொடரும் உயிரிழப்பு.,அச்சத்தின் உச்சத்தில் மக்கள் .,உயிரை காக்க வந்ததே தீர்வு ..!

பரவும் நிபா வைரஸால் தொடரும் உயிரிழப்பு.,அச்சத்தின் உச்சத்தில் மக்கள் .,உயிரை காக்க வந்ததே தீர்வு ..!



பரவும் நிபா வைரஸால் தொடரும் உயிரிழப்பு.,அச்சத்தின் உச்சத்தில் மக்கள் .,உயிரை காக்க வந்ததே தீர்வு ..!

கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இதனால 10-ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 மேலும் இந்த நிபா வைரஸ் வவ்வால்கள் மூலமே பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிய வந்துள்ளது. 
          
அதுமட்டுமின்றி தமிழக-கேரள எல்லையில் கோவை மாவட்டம் இருப்பதால்,தமிழகத்திற்கு  நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக பாதிக்கப்படும் மனிதர்கள் மற்றும் விலங்குகளை காப்பாற்ற இதுவரை எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கமுடியாமல் தவித்து வருகின்றனர். 
   
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் குதிரைகள் மூலம் பரவிய ஹென்றா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு மருந்தான எம் 102.4  மருந்தை நிபாவிற்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது  என கண்டுபிடிக்கப்பட்டு  உலக சுகாதார அமைப்பின் அறிவுரையின்படி இந்த மருந்தை பெற ஆஸ்திரேலியா உதவியை இந்திய அரசு நாடியது. 
மேலும் தற்போது நிபா வைரஸ் சிகிச்சைக்கான மருந்து கேரளா வந்து உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் வைரஸ் பாதிப்புக்கு தேவையான உதவியை செய்யுமாறு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அரசு உதவியை கோரியது.

பா.ஜ.க நான்கு ஆண்டு ஆட்சி.


பா.ஜ.க  நான்கு ஆண்டு ஆட்சி.

கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......

1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 2000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை  குழா்படிகள்-______________________________________
(அதிக நண்பர்களைக்
கொண்டவர்கள் பகிர்ந்தால்
தகவல் பலரை சென்றடைய உதவும்.

சர்வாதிகாரத்தின் விதைகளைச் சுமந்த மனம்!



சிறப்புக் கட்டுரை: சர்வாதிகாரத்தின் விதைகளைச் சுமந்த மனம்!


தூத்துக்குடியில் காவல் துறையினரால் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழகமே கொதி நிலையில் இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்துக்கு வெளியிலும் இதன் அதிர்வுகள் உணரப்படுகின்றன. பக்கத்திலிருக்கும் பெங்களூருவிலிருந்து லண்டன்வரை இந்தப் படுகொலைகளுக்கான எதிர்ப்புக் குரல்கள் கேட்கின்றன. ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா குழுமத்தின் பங்குகள் சரிந்திருக்கின்றன.

இந்தப் போராட்டம், காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு, மரணங்கள், இவற்றின் எதிரொலியாக எழும் போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. துப்பாக்கிச் சூட்டுக்கும் உயிரிழப்புக்கும் பதில் சொல்ல வேண்டியது மாநில அரசின் கடமை. முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்துச் சில பதில்களைச் சொல்லிவருகிறார். முதல்வரைக் கேட்காமலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்ற செய்திகள் வருகின்றன. போராட்டம், போராட்டக்காரர்களின் செயல்பாடுகள், காவல் துறையினரின் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பழனிசாமி தன்னால் முடிந்தவரை பேசிப்பார்க்கிறார். ஆனால், சிறு குழந்தைகள்கூட அவர் பேச்சைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள். தங்களை நியாயப்படுத்திக்கொள்வதற்கான வாதங்களை முன்வைப்பார்கள். ஆனால், இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை. முதல்வரையும் ஒரு சில அமைச்சர்களையும் தவிரக் கட்சியோ, கட்சியின் ஆதரவாளர்களோ பொது வெளியில் இது குறித்துப் பேசுவதில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுகவினரைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

ஆனால், தமிழக ஆளுங்கட்சிக்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு வருகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அவற்றின் ஆதரவாளர்களும் ‘நடுநிலை’ அறிவுஜீவிகளும் காவல் துறையின் நடவடிக்கைகளை ஆவேசமாக ஆதரித்துப் பேசுகிறார்கள். முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையின் செயல்பாடுகளை அவரே வெட்கப்படக்கூடிய அளவுக்கு இவர்கள் ஆதரிக்கிறார்கள்.

தமிழக ஆளுங்கட்சிக்குப் பின்னால் இருந்து இயக்கும் சக்தி எது என்பதற்கான இன்னுமொரு சான்று என்று இதைக் கடந்துவிட முடியாது. தமிழக அரசோடு நேரடியாகச் சம்பந்தப்படாத ஆளுநர் விவகாரத்தின்போதும் இவர்கள் இப்படித்தான் களமிறங்கினார்கள். ஆளுநரே மன்னிப்புக் கேட்டுவிட்ட ஒரு விவகாரத்திலும் இவர்கள் ஆளுநருக்கு ஆதரவாகப் பேசியதுடன், ஆளுநரைக் கேள்வி எழுப்பியவர்களைத் தரங்கெட்ட முறையில் விமர்சித்தார்கள்.

தமிழகத்திலிருந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிமாநிலங்களில் நீட் தேர்வை எழுத வேண்டிய நிலை வந்தபோதும் இவர்கள் சிபிஎஸ்இ அமைப்புக்கு வக்காலத்து வாங்கினார்கள். வைரமுத்து - ஆண்டாள் சர்ச்சையில் அறிவார்த்தமான முறையில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இவர்கள் இடையில் புகுந்து தங்கள் இழிமொழியால் குட்டையைக் குழப்பி விவாதத்தைக் கொன்று புதைத்தார்கள். மாட்டிறைச்சி உண்டதாகக் கூறிச் சிலர் கொல்லப்பட்டபோதும் இவர்கள் கொல்லப்பட்ட உயிர்களுக்காக அனுதாபம் தெரிவிக்கவில்லை. பசுப் பாதுகாப்பின் மேன்மை பற்றி மட்டுமே பேசினார்கள்.

இவர்களுக்கு ஏன் இந்த வேலை?

இந்துத்துவ ஆதரவாளர்களும் ‘நடுநிலை’ அறிவுஜீவிகளும் ஏன் இப்படி எல்லாவற்றுக்கும் அழைக்காமலேயே வந்து நிற்கிறார்கள்? பத்மாவதி பட சர்ச்சை, உத்தரப் பிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் பலர் இறந்தது, கத்துவா பாலியல் வன்முறை, உனா பாலியல் வன்முறை ஆகிய விவகாரங்களில் அவர்கள் ஆஜரானதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அனைத்திலுமே இந்துத்துவ அமைப்புகள் அல்லது ஆட்சிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழக ஆளுநரையும் தமிழகக் காவல் துறையையும் வலிந்து வந்து நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இவர்களுக்கு என்ன வந்தது?

அரசு அதிகாரம், காவல் துறை, ராணுவம், இந்து மதம் ஆகியவற்றின் பிரதிநிதிகளாக இவர்கள் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அரசு, காவல் துறை முதலானவை மக்களுக்காகவே இருக்கின்றன என்னும் அடிப்படையான அம்சத்தை இவர்கள் தலைகீழாக மாற்றுகிறார்கள். இந்த அமைப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்களுக்கோ, அவர்களுடைய பிரச்சினைகள், உணர்வுகள் ஆகியவற்றுக்கோ இவர்கள் கொடுப்பதில்லை. மையம், மைய நீரோட்டம், அரசு, அதிகாரம், அந்த அதிகாரத்தைச் செலுத்தும் அமைப்புகள் ஆகியவையே இவர்களுக்கு முக்கியம். இவர்களைப் பொறுத்தவரை அமைப்புகளுக்காகத்தான் மக்கள்; மக்களுக்காக அமைப்புகள் அல்ல. அமைப்புகளே, அதிலும் அதிகாரம் சார்ந்த அமைப்புகளே பாதுகாக்கப்பட வேண்டியவை. மக்கள் அந்த அமைப்புகளால் கையாளப்பட வேண்டிய இரண்டாம் நிலையிலான இருப்பு.

தூத்துக்குடியில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறக்கிறார்கள். காஷ்மீரில் சுடப்பட்ட குண்டுகளால் மக்களுக்குக் கண் பார்வை பறிபோகிறது. காஷ்மீரில் ஒரு சிறுமி பலரால் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டாள். மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கருதப்படும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையெல்லாம் கேட்கும்போது யாருக்கும் இயல்பாக உடனடியாகப் பதைப்பும் கவலையும் ஏற்படும். ஆனால், இந்துத்துவ இயக்க ஆதரவாளர்களும் ‘நடுநிலை’ அறிவுஜீவிகளும் உடனடியாக அமைப்புக்கான நியாயங்களைப் பேசத் தொடங்குவார்கள். “தூத்துக்குடியில் பல உயிர்கள் பலியானது துரதிருஷ்டவசமானதுதான், ஆனால்…” என்று நீட்டி முழக்குவார்கள். கிறிஸ்தவ அமைப்புகள் கலவரத்தைத் தூண்டிவிட்டன என்பார்கள். இடதுசாரி இயக்கங்கள், பிரிவினைவாத அமைப்புகள் கலவரத்தைத் தூண்டிவிட்டார்கள் என்பார்கள். போராட்டக் குழுவினருக்குள் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்பார்கள்.

சமூக விரோதிகளாகவே இருந்தாலும் அவர்களை மார்பைப் பார்த்துக் குறிவைத்துச் சுடும் உரிமையை இவர்கள் போற்றிக் கொண்டாடும் சட்டம் கொடுக்கவில்லை என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள். சீருடை அணியாத காவலர்கள் சிறிதும் பதற்றமின்றிப் பொறுமையாகக் குறிபார்த்துச் சுடுவதைப் பார்க்கும்போது காவல் துறையினரின் நோக்கமும் போக்கும் தெளிவாகப் புரிகின்றன. ஆனால், இந்தக் காட்சியைப் பார்த்த பிறகும் சமூக விரோதிகள், விஷமிகள் ஊடுருவிட்டார்கள் என்ற பல்லவியையே இவர்கள் பாடிக்கொண்டிருப்பார்கள். 17 வயதுப் பெண்ணை வாயில் சுட்டதற்கும் “கூட்டத்தில் கலந்துவிட்ட விஷமி”களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று யோசிக்க மாட்டார்கள். சுற்றுச்சூழல் சார்ந்த கவலைகளை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள். முழுக்க முழுக்க அரசாங்கமாகவே மாறி அரசாங்கமாகவே சிந்திக்கும் இவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களைவிடவும் அபாயகரமானவர்கள்.

நிலைப்பாடுகளும் நிஜங்களும்



இவர்கள் உண்மைகளைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. நிலைப்பாடுகள்தான் முக்கியம். நிஜங்கள் அல்ல என்பதே இவர்கள் அணுகுமுறை. வேதாந்தா நிறுவனத்திடமிருந்து அதிக நன்கொடை பெற்றது பாஜக என்னும் தகவலை ஒருவர் வெளியிட்டால் இவர்கள் உடனடியாக, “பா.சிதம்பரம்” உள்ளிட்ட பலர் ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றார்கள் என்பதற்கான “தகவலை” போட்டோ ஷாப் உபயத்தில் வெளியிடுவார்கள். அற்பத்தனமான இந்த வேலைகள் இன்றைய தகவல் பெருக்க யுகத்தில் சட்டென்று பல்லிளித்துவிடுவதையும் இவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில், தகவல்களைப் பரிசோதிக்காமல் பலர் இதை நம்புவார்கள், பரப்புவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அப்படி நம்ப விரும்புபவர்கள் அத்தகைய செய்திகளை மூன்று வேளையும் உணவுக்குப் பதிலாக விழுங்கித் திருப்தி அடைவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஜிஎஸ்டிக்கு எதிராக யாரோ எழுதிய வசனத்தை ஒரு நடிகர் பேசியதும் அவர் கிறிஸ்தவர் என்னும் தகவலைப் பேருண்மையாக முன்னிறுத்துவார்கள். வரி கட்டுபவர்கள் அனைவருக்கும் ஜிஎஸ்டிக்கு எதிராகப் பேச உரிமை உண்டு என்னும் எளிய உண்மைகூடத் தங்கள் மூளையை அண்டவிட மாட்டார்கள்.

அறநிலையத் துறை தொடர்பான தகவல்கள், அணைக்கட்டுகள் தொடர்பான தகவல்கள், தூத்துக்குடி துறைமுகம் தொடர்பான தகவல்கள் ஆகிய பல விஷயங்களிலும் ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சேர்ந்த எஸ்.குருமூர்த்தி உள்ளிட்டோர் பதிவிடும் “தகவல்”களில் உள்ள பிழைகள் சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்தப்பட்டன. ஆனாலும் அவர்கள் அசருவதில்லை. தொடர்ந்து பொய்ச் செய்திகளையும் பாதி உண்மைகளையும் பரப்பிவருகிறார்கள். அவர்களுடைய ஆதரவாளர்கள் அவற்றை அப்படியே பலருக்கும் அனுப்பி ஜென்ம சாபல்யம் அடைகிறார்கள்.



சுற்றுச்சூழல் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்படுவதே இல்லை. வேதாந்தா போன்ற நிறுவனங்கள் உலகின் பல பகுதிகளிலும் எதிர்ப்பைச் சந்தித்துவருகின்றன என்பதும், இவற்றை எதிர்ப்பதை ஒரு குறிப்பிட்ட கட்சியை எதிர்ப்பதாகப் பொருள்கொள்ள முடியாது என்பதையும் இவர்கள் யோசிப்பதே இல்லை. நாளைக்கு அரச அமைப்பு இந்த நிறுவனத்தை மூட முடிவுசெய்தால் அப்போது இவர்கள் சூழலுக்காகப் பரிந்து பேசுவார்கள். அல்லது அந்நிய சதி வென்றுவிட்டது என்பார்கள்.

இவர்களுடைய நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பவை பிரச்சினைகளோ, அவற்றின் நிஜமாக காரணங்களோ அல்ல. அரசின், அதிகாரத்தின் குரல்தான் முக்கியம். அதிலும் அது பாஜகவால் பிரதிநிதித்துவம் செய்யப்படும்போது அந்த அமைப்பு கடவுளுக்கு நிகரானதாக மாறிவிடுகிறது. இதை எதிர்ப்பது தெய்வ நிந்தனையாகிவிடுகிறது.

காங்கிரஸ் அல்லது வேறு கட்சியின் ஆட்சியில் காவல் துறை வன்முறை நடந்தால் இவர்கள் இப்படியே எதிர்வினை ஆற்ற மாட்டார்கள் என்பது உண்மைதான். அதிலும் அந்த வன்முறை இந்துத்துவ இயக்கங்களுக்கு எதிராக நிகழ்ந்தால் கேட்கவே வேண்டாம். ஆனால், தேசம், அதிகாரம், சட்டத்தின் ஆட்சி, இந்துக்களின் “நலன்”, இந்துக் குறியீடுகள், “அந்நியச் சதி”க்கு எதிரான நடவடிக்கை ஆகிய விஷயங்களை இவர்கள் முழுக்க முழுக்கச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். தேசிய உணர்வையும் தேசியக் குறியீடுகளையும் ஏகபோக உரிமை கொண்டாடும் வேட்கை இதில் பிரதிபலிக்கிறது.



கரிசனம் அல்ல, பதிலடியே முக்கியம்

முஸ்லிம் சிறுமி ஒருத்தி வன்புணர்வு செய்யப்பட்டார் என்றதும், மூன்று மாதங்களுக்கு முன்பு அல்லது இரு ஆண்டுகளுக்கு முன்பு வன்புணர்வு செய்யப்பட்ட இந்துச் சிறுமியின் நினைவு இவர்களுக்கு வந்துவிடும். அந்தச் சிறுமிக்காக இவர்கள் அப்போது குரல் கொடுத்ததில்லை. இப்போது பாதிக்கப்பட்டது முஸ்லில் சிறுமி என்றதும், உடனடியாக, இந்துச் சிறுமியின் துயரத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவார்கள். ஸ்வாதி கொலையின்போது அவருடைய சாதியைக் குறிப்பிட்டு நீதி கோரிய இவர்கள், ஆணவக் கொலைகள் நடந்தபோது அதற்குப் பின்னால் இருக்கும் சாதி உணர்வைப் பற்றிப் பேசியதில்லை. காதல் விவகாரங்களால் அன்றாடம் சிதைக்கப்படும் பெண் முகங்களும் உயிர்களும் எந்தச் சாதியைச் சேர்ந்தவை என்று பார்த்ததில்லை.

எத்தகைய வன்முறையையும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நின்று பார்க்கும் பழக்கம் இவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. அரசு அதிகார அமைப்புகளின் தரப்பிலிருந்து மட்டுமே அனைத்தையும் பார்க்கும் அதிகார மனம் இப்படித்தான் செயல்படும். இந்த மனம்தான் சர்வாதிகாரிகளை உருவாக்குகிறது. இந்த மனம்தான் சர்வாதிகாரத்துக்கான மனநிலையை வளர்க்கிறது. இந்த மனம்தான் சர்வாதிகார அட்டூழியங்களை நியாயப்படுத்துகிறது. நேரடி சர்வாதிகாரத்தைக் காட்டிலும் அபாயகரமானது மக்களிடையே பரவிவரும் இந்த அரச மனம்தான். இத்தகைய மனம் மிகத் தெளிவான மொழியில் பேசுகிறது. நியாயத்தைப் பேசும் பாவனையில் சகல ஊடகங்களிலும் ஊடுருவி இருக்கிறது. பல பொய்த் தகவல்களை நிஜம்போன்ற ஆதாரமாக முன்வைக்கிறது.

இந்த மனம்தான் நமது காலத்தின் மிகத் தீவிரமான அபாயம். ஏனென்றால், இந்த மனம்தான் அதிகாரத்தையும் காவல் துறை முதலான அமைப்புகளையும் கேள்விக்கு அப்பாற்பட்ட சக்திகளாகக் கட்டமைத்து வருகிறது. ‘கேள்விக்கு அப்பாற்பட்ட’ என்னும் பார்வையில்தான் சர்வாதிகாரத்துக்கான சகல வித்துக்களும் சத்துக்களும் புதைந்திருக்கின்றன.
 நன்றி மின்னம்பலம் .