பிஎஃப் சந்தாதாரர்களுக்கு நல்ல செய்தி – எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கும் வசதி..!
பிஎஃப் சந்தாதாரர்கள் தீர்வுகாணும் விதமாக எந்த இடத்திலும் விண்ணப்பிக்கும் வசதியை வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கியுள்ளது.
பிஎஃப்
கொரோனா ஊரடங்கில் மக்கள் வீட்டுக்குலேயே இருந்ததால் அனைவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அரசு தரப்பிலிருந்தும் பல சலுகைகள் வழங்கப்பட்டன. மேலும் பணியாளர்கள் தங்களின் பிஎஃப் சேமிப்பு பணத்தை பயன்படுத்த மத்திய அரசு வழிவகையை செய்தது.
அதாவது தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவித்தது.
வருங்கால வைப்பு நிதி
தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக எந்த இடத்திலும் பிஎஃப் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கியுள்ளது. அதாவது எந்த ஒரு மண்டலத்திலும் சந்தாதாரர்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஎஃப் பணம் ஓய்வூதியம் என அனைத்திற்கும் இணையவழி கோரிக்கைகளுக்கு இந்த புதிய வசதி மூலம் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி எஃப் அலுவலகங்களில் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இதுவரையில் 80,000 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலை நாளிலும் ரூ.270 கோடி அளவுக்கு பிஎஃப் நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக