செவ்வாய், 16 ஜூன், 2020

சீனாவால் இந்தியாவை ஆக்கிரமிக்க முடியுமா ??முடியாதா ?? வாருங்கள் பார்ப்போம்.

சீனாவால் இந்தியாவை ஆக்கிரமிக்க முடியுமா ??முடியாதா ?? வாருங்கள் பார்ப்போம்.

சீனா தனது முப்படைகளை கொண்டு இந்தியாவின் மேல் தாக்குதல் நடத்த முடியுமா ? அவ்வாறு தாக்குதல் நடத்தினால் யாருக்கு வெற்றி கிடைக்கும். 

#சீன_இராணுவம்_தாக்குதல்_நடத்தினால் : 

சீனா 2.3 மில்லியன் இராணுவ வீரர்களை கொண்டுள்ளது.இந்தியா 1.3 மில்லியன் இராணுவ வீரர்களை கொண்டுள்ளது.போர்கள் என்று வந்தால் எதிர்த்து தாக்குதல் நடத்தும் வீரர்களே முன்னிலையில் இருப்பர்.அதாவது ஒரு இந்திய வீரர் தன்னை எதிர்த்து தாக்க வரும் மூன்று சீன வீரர்களை சாமாளிக்கும் வல்லமை பெற்றிருக்கிறார் சாதாரண நிலப்பகுதில் சண்டை நடைபெறும்போது இந்த ratio 1:3..போர் மலைப்பகுதியில் நடைபெறும்போது இந்தியாவிற்க்கு கூடுதல் பலம்.நம்முடைய ஒரு வீரர் சீனாவின் 5 வீரர்களை சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார் 1:5. இந்திய சீன எல்லைகள் பெரும்பாலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.மலைப்பகுதிகளில் சண்டையிட சீனாவை விட இந்திய வீரர்களுக்கே அதிகம் பலம் உள்ளது.ஆகையால் தரைப்படையிலும் வெற்றி நமதே.

#சீனா_கடல்_வழியாக_தாக்கினால் :

இந்தியாவிடம் ஏழு முக்கிய மிகப்பெரிய கடற்ப்படை தளங்கள் உள்ளன.மற்றும் பல சிறு கடற்ப்படை தளங்கள் உள்ளன.இவற்றை தாக்க வேண்டுமானால் குறைந்தது 5 கேரியர் போர் குழுக்கள் தேவை.ஆனால் தற்போது சீனாவிடம் ஒரே ஒரு கேரியர் போர் குழுக்கள் தான் செயல்பாட்டில் உள்ளது.சீனா அதிக அளவு நீர்மூழ்கி கப்பல்களை படையில் வைத்திருந்தாலும் இந்தியாவின் ஒவ்வொரு துறைமுகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது இயலாத காரியம்...சீனாவின் வர்த்தகம் 80–90% பெரும்பாலும் இந்திய பெருங்கடல் வழியாகத்தான் நடை பெறுகிறது. சீனாவின் கடற்ப்படை தளத்தை தாக்க வேண்டிய அவசியமில்லை.சீனாவின் வர்த்தக கப்பல்களை நாம் நம் கடற்ப்பகுதியில் தடுத்து நிறுத்தினாலே போதும் சீனாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும்.இந்திய பெருங்கடலில் இந்திய கடற்ப்படை போல் வலிமையான கடற்ப்படை இல்லை என்பதே உண்மை.கடற் பரப்பிலும் நமக்கு வெற்றியே.

#சீனா_வான்_வழியாகத்_தாக்கினால் : 

இந்த 21-ம் நூற்றாண்டில் விமானங்களின் எண்ணிக்கை என்பது முக்கியமல்ல.அதை இயக்கும் விமானிகளின் அனுபவம் மற்றும் அவர்கள் கையாளும் அதிநவீன தொழில்நுட்பங்களை பொறுத்தே போரின் வெற்றி தோல்வி அமையும். நாம் ஏற்க்கனவே இரண்டு முக்கிய போர்களில் (1965,1971) நாம் நம் விமானப்படையை பயன்படுத்தி வென்றுள்ளோம் மற்றும் நம் விமானப்படை விமானிகள் வருடந்தோறும் உலகிலேயே தலைசிறந்த விமானிகளுடன் போட்டி போட்டு கூட்டுப்பயிற்ச்சியில் ஈடுபட்டு மிகத் திறமைசாலிகளாக உள்ளனர்.ஆனால் சீனாவின் விமானிகளோ அப்படி இல்லை.அவர்கள் வெளி நாட்டு போர் விமானிகளுடன் அவ்வளவாக பயிற்ச்சியில் ஈடுபட்டது இல்லை.நம்மிடம் சுகோய் -30 போர் விமானங்கள் உள்ளன.இவை F-22 போர் விமானத்தை கூட இந்திய எல்லையில் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றது. (நான் நம் வான் பரப்பை சீனாவிடம் இருந்து பாதுகாப்பது பற்றித்தான் இங்கே கூறியுள்ளேன்,எதிரி நாட்டு எல்லைக்குள் சென்று விமானங்களை தாக்கும் விமானங்களில் su-30 விட அதிநவீன விமானங்கள் உலகில் உள்ளன.இருந்தாலும் நாம் சளைத்தவர்கள் அல்ல). சீனா விமானப்படையின் முதுகெலும்பு J10. ஒற்றை என்ஜின் கொண்டது.பெரும்பான்மை போர் விமானங்கள் 3rd Generation மட்டுமே. காட்சிக்கு மட்டுமே உகந்தது.மேலும் ஒரு நாட்டு எல்லைக்குள் வந்து தாக்கும் அளவுக்கு சீன விமானப்படை வலிமை வாய்ந்தது அல்ல.சீனாவின் கடற்ப்படை விமானமான J-15 ஐ விட இந்தியா வைத்திருக்கும் மிக்-29k மிக வலிமை வாய்ந்தது,சீனாவின் 80 % போர் விமானம் போர் புரிய தகுதி அற்றவை. போர் களத்தில் தாக்கு பிடிக்காது என ஜப்பான் கூறியுள்ளது
இப்படி பார்த்தால் மீண்டும் வான் பரப்பிலும் நமக்கு வெற்றியே.

ஆக சீன பாதுகாப்பு படையோடு இந்திய பாதுகாப்புப்படையை குறைத்து ஒப்பிட்டு பார்காதீர்கள். வெறும் எண்ணிக்கை அல்ல, எண்ணம் தான் பலம்.போரில் வெறும் எண்ணிக்கையை மட்டுமே வைத்து வெற்றி பெற முடியாது. போரை வழிநடத்தும் இந்திய கமாண்டர்கள் எடுக்கும் ராஜ தந்திர முடிவுகளும்,போரில் ஈடுபடும் இந்திய இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வும்,இந்திய மக்கள் நம் இராணுவத்திற்கு பக்கபலமாக நின்று ஆதரவளிக்கும் அளவையும் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். 

உலகில் எண்ணிக்கை பொறுத்து போரில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுவதில்லை என்பதற்கு பல வரலாற்று போர்கள் சான்றாக உள்ளன. உதாரணமாக இஸ்ரேல் எதிர்கொண்ட ஆறு நாள்
போரைக் கூட சொல்லலாம்.

1962 ஆம் ஆண்டு நடந்த போரில் சீனா வெற்றி பெற்று இருக்கலாம்.அதற்க்கு காரணம் பல கூறப்பட்டாலும், நம்மிடம் படையை வழிநடத்தும் கம்மண்டர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்ற காரணமும் சொல்லப்படுவதுண்டு.ஆனால் தற்போது அப்படி இல்லை. 1962 நடந்த போரில் சீன-இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை 8:1 ஆக இருந்தது.அப்படி இருந்தும் நம் வீரர்கள் சீனாவிடம் சரணடை மறுத்து தன் தாய் நாட்டிற்க்காக தனது இறுதி மூச்சு உள்ளவரை போரிட்டு வீரமரணம் அடைந்தனர்.

இந்திய வீரர்கள் பாகிஸ்தான் போன்று சரணடைந்ததில்லை. சீனாவுடன் சரணடைந்து மண்டியிடுவதை விட நேருக்கு நேர் போரிட்டு வீரமரணம் அடைந்த அந்த தியாக உள்ளங்களின் தியாகத்தை கொச்சை படுத்துபவர்கள் இந்தியர்களே இல்லை. 

1967 இல் மீண்டும் இந்திய சீன இராணுவ வீரர்கள் போரில் எதிரெதிரே சந்தித்த போது கூட நம் வீரர்கள் 300 சீன வீரர்களை கொன்று குவித்தனர்,நம் பக்கம் நாம், பாரதத்தாயின் 75 மகன்களை இழந்தோம். சீன மீடியாவும்,சீன இராணுவமும் இந்தியாவிற்க்கு 1962 ஐ நியாபகப்படுத்தி சுட்டிக்காட்டுகின்றனர்.ஆனால் இங்குள்ள சில மீடியாக்கள் ஏன் 1967 ஐ சீனாவிற்க்கு சுட்டிக்காட்ட மறந்தனர்.ஆனால் இந்திய அரசு இந்தியாவின் தற்போதைய பலத்தை பாருங்கள் என்று சீனாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்தது.இந்திய பெருங்கடல் வழியாக நம்மை நோட்டமிட வந்த சீனாவின் 13 நீர்மூழ்கி கப்பல்களை நாம் நம்முடைய உளவு செயற்கை கோள்களால் கண்டுபிடித்துள்ளோம்.கண்டுபிடித்து மட்டுமல்லாமல் அவைகளை நம்முடைய உளவு விமானமான P-8i Poseidon மற்றும் சில போர்க்கப்பல்கள் உதவியுடன், சீன நீர் மூழ்கி கப்பல்கள் இந்திய எல்லையில் நுழைகிறதா என்று தொடர்ந்து நோட்டமிட்டன.இவ்வளவு வளர்ந்திருக்கிறோம் நாம் இப்போது. 

1967 இல் எங்கள் நாட்டு பிரதமர் இந்திரா காந்தியால் நீங்கள் வாங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறோம்.வெற்றி நமதே.

மேலே நம் பலத்தை பற்றி சிறிதளவே குறிப்பிட்டுள்ளேன்.இதற்கே சீனா தாங்காது. 

இப்படி இந்திய தனி ஒரு ஆளாகவே சீனாவை சமாளிக்கும் வல்லமை பொருந்திய நிலையில், நம் நட்பு நாடுகள் நம் உதவிக்கு வந்தால் சீனாவின் நிலை என்னவாகும் ??? 
#ஜெய்ஹிந்த்.

பிஎஃப் சந்தாதாரர்களுக்கு நல்ல செய்தி – எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கும் வசதி..!

பிஎஃப் சந்தாதாரர்களுக்கு நல்ல செய்தி – எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கும் வசதி..!

பிஎஃப் சந்தாதாரர்கள் தீர்வுகாணும் விதமாக எந்த இடத்திலும் விண்ணப்பிக்கும் வசதியை வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கியுள்ளது.

பிஎஃப்
கொரோனா ஊரடங்கில் மக்கள் வீட்டுக்குலேயே இருந்ததால் அனைவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அரசு தரப்பிலிருந்தும் பல சலுகைகள் வழங்கப்பட்டன. மேலும் பணியாளர்கள் தங்களின் பிஎஃப் சேமிப்பு பணத்தை பயன்படுத்த மத்திய அரசு வழிவகையை செய்தது.

அதாவது தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவித்தது.

வருங்கால வைப்பு நிதி
தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக எந்த இடத்திலும் பிஎஃப் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கியுள்ளது. அதாவது எந்த ஒரு மண்டலத்திலும் சந்தாதாரர்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஎஃப் பணம் ஓய்வூதியம் என அனைத்திற்கும் இணையவழி கோரிக்கைகளுக்கு இந்த புதிய வசதி மூலம் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி எஃப் அலுவலகங்களில் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இதுவரையில் 80,000 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலை நாளிலும் ரூ.270 கோடி அளவுக்கு பிஎஃப் நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 14 ஜூன், 2020

மீண்டும் உலகை ஆளப்போகும் நம் தமிழினம்!!!.

மீண்டும் உலகை ஆளப்போகும் நம் தமிழினம்!!!.

கோவை E S I  மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி?

 *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.

 இதுபோல்  ஒருநாளைக்கு  2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. 

நாட்டு மருந்து கடைகள் எல்லான்.மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே,? நிலவேம்பு கிடைக்கலையேன்னு யாரும் கவலைப்பட வேண்டாம்.!!!

 இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும்.

 அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி  பிதுங்கி நிற்கிறது. 

அத்தகைய இந்த கொரோனா மாயாவி  போல் எத்தனை  புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும்  மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை. 

மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக  சேர்த்தால் தான் முழுமையான  பலன் கிடைக்கும்....*

*இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு எல்லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும்.

 மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது  இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்....*

  *அதனால் நாட்டுமருந்து கடைகள் நிறைய மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையேன்னு கவலைப்படாதீங்க

 உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்...*

     *தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டியும் ஒரு  மருத்துவமனைக்கு சமானம்.இந்த அஞ்சறைப் பெட்டியை அஞ்சறைப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை  தீர்மானித்தவர் தமிழ் மக்களின் ஆதிமூல முதல் குரு, சித்தர்களின் தலைவர் அகத்தியர்!!!அப்படி அவர் தீர்மானித்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு  சேர்த்து உண்டால் என்ன பலன்? என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது...*

                *இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள். 

உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி  கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்....*

       *இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம்.என்ன வேணாலும் பண்ணலாம். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு....*

  *இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்...*

     *இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த  அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய்  சேர்ந்தால் அதன்மூலம் 2, 3 வாரங்களில் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்....*

         *மீண்டும் உலகத்தை ஆளப்போகும் தமிழ் இனம் நாம் தான் !!! 

சனி, 13 ஜூன், 2020

தீண்டாமைக்கு எதிரான மனவிளையாட்டு

தீண்டாமைக்கு எதிரான  மனவிளையாட்டு 

இந்தியாவில் 'இந்து பட்டியில் சாதியில்' பிறந்த ஒருவர் தீண்டாமையை வாழ்க்கையில் எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. எனினும் அவ்வாறான தீண்டாமையிலிருந்து தப்புவதற்கு நமது மக்கள் பல்வேறு மன தந்திரங்களை கையாளுகின்றனர். 

இதனை மனோதத்துவத்தில் defence mechanism என்று சொல்லுவார்கள். 

தீண்டாமையை முற்றிலும் அடியோடு் அழிக்க, அனைவரும் சமத்துவம் எனும் நிலையை அடைய 'எது வழி' என்று பாபாசாகேபின் வழியில் அறிந்து கொள்ளாத வரை இவ்வாறான மனவிளையாட்டுகள் (defence mechanism) மூலம் தீண்டாமையிலிருந்து தப்ப முயல்வது இயல்பே.அவற்றை ஒவ்வொன்றாக காணுவோம். 

1. *தீவிர இந்துவாக இருப்பது*

இவ்வகையில் வருவோர் மிக அதிகமாக இந்து தன்மையுடன் தங்களை வெளிப்படுத்தி கொள்வதன் மூலம் இந்த இழிவிலிருந்து தப்பி விடலாம் என்று என்னுகின்றனர். 

இவர்கள் மத அடையாளங்களை தீவிரமாக வெளிப்படுத்துகின்றனர். பெரிய விபூதி வைத்து கொள்வது, வருடத்திற்கு நான்கு ஐந்து முறை திருப்பதி் போன்ற இடங்களுக்கு பயணிப்பது இவர்கள் வழக்கமாகும். இதில் குறிப்பிட தகுந்த விடயம் அவர்கள் திருப்பதி் செல்வதோ அல்லது வேறு வகையான மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும் படி அவர்கள் பார்த்து கொள்கின்றனர் என்பதாகும்.

2. *சைவ உணவுக்கு மாறுவது*

மாட்டிறைச்சியை இழிவாக இந்துக்கள் கருதுவது மாட்டிறைச்சி மோசமானது என்பதனால் அல்ல. மாறாக அதனை பட்டியல் சாதியினர் உண்கின்றனர் என்பதற்காக தான். தவறு மாட்டின் மேல் அல்ல. 

ஆனால் இதனை எதிர் நிலையில் புரிந்து கொள்ளும் சிலர் நாம் முற்றிலும் சைவமாக மாறிவிட்டால் சமூக மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கின்றனர்.
உண்மையில் நீங்கள் சோறு சாப்பிடுவதை நிறுத்தினால் கூட இந்துக்கள் நீங்கள் இந்துவாக உள்ளவரை உங்களை மதிக்க மாட்டார்கள் (காரணம் கடைசியில்).

3. *சாதியை முற்றிலும் மறைத்து கொள்வதில் வெற்றி பெற்றவர்கள்*

பலர் இதில் வெற்றி கண்டுள்ளனர். முற்றிலும் தங்கள் சாதியை மறைத்து கொண்டு பொது சமூகத்தில் வாழ்கின்றனர். பொது சமூகத்தினர் தலித் மக்களை இழிவாக பேசும் போது வேறு வழியின்றி இவர்களும் அவர்களுக்கு ஜால்ரா அடித்து 'ஆமா, ஆமா அவுங்க எல்லாம் ஒரு மாதி்ரி' என்று சொல்ல வேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளோர் இவர்கள் 

4. *சாதியை மறைப்பதில் தோல்வி அடைந்தோர்*  

இவர்கள் தான் என்ன சாதி என்று மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைத்து கொள்பவர்கள்.ஆனால் உண்மையில் இவர்களை சுற்றி உள்ளோர் இவர் யார் என்று அறிந்து அதற்குரிய எதிர்வினையை ஆற்றி கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் பரிதாபமாக இவ்வறான நமது மக்கள் இது குறித்து விழிப்புணர்வு அற்று பரிதாப நிலையில் இருப்பார்கள்.

5. *கல்வி , பொருளாதாரம் தங்களுக்கு மதிப்பை பெற்று தரும் என்று நம்புவோர்* 

டாக்டர்.அம்பேட்கர் கல்வி ஒன்றே இழிவு நீங்க வழி என்று சொன்னதாக இந்துக்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் நோக்கம் அவரின் 'இந்து மதத்திலிருந்து வெளியேறுவது' என்ற கருத்தியலை மறைப்பது.

இந்த பிரச்சாரத்தை நம்பியோர் கல்வியும் ,பொருளாதாரமும் ஒரு நாள் நமக்கு சம மரியாதை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் காலத்தை ஓட்டுகின்றனர். ஆனால் உண்மையில் நம்மை இழிவுக்கு உள்ளாக்கும் இந்துக்கள் அனைவரும் மெத்த கல்வி கற்றவர்களும் அல்ல , அம்பானி குடும்பமும் அல்ல.

6. *நாம நம்ம வேலையை பார்ப்போம்*

இந்த வகையினர் தீண்டாமை இருந்தால் இருந்துவிட்டு் போகட்டும் நாம் நமது வேலை பார்ப்போம் என்று ஜாலியாக இருப்போர். இது உடலி்ல் உள்ள தொழு தோயை பற்றி கவலைபடாமல் ஜாலியாக இருக்கும் நோயாளியை போன்றது.

7. *அரசியல் அதிகாரம் சம மரியாதை பெற்று தரும் என்று நம்புவோர்*

இந்தியாவில் SC பிரிவினர் 16.6% உள்ளனர். இவர்கள் ஓரணியில் இல்லாமல் உட்சாதி் உணர்வோடு பிரிந்தும் உள்ளனர்.சிலர் தங்களை ஆண்ட பரம்பரை என்றும் சொல்லி கொள்கின்றனர். இவ்வாறான சிறுபாண்மையினர் அரசியலில் எந்த அளவு சாதிக்க இயலும் என்பது எண்ணிக்கை அடிப்படையில் விவாதத்துக்கு உரியது.

எனினும் நமக்கான அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கான போராட்டம் அவசியம் தேவை.அதற்கான நமது இயக்கங்கள் தலைவர்கள், வளர்த்து எடுக்கப்பட வேண்டியோர். இது வேறு விடயம். 

ஆனால் இங்கே புரிதலில் குழப்பம் யாதெனில் அரசியல் அதிகாரம் தீண்டாமையை ஒழிக்குமா? இல்லையா? என்பது தான். இதற்கான பதில் ஒழிக்காது என்பதே.

எளிமையாக சொன்னால் தீண்டாமை என்பது பண்பாட்டு் பிரச்சினை,அரசியல் பிரச்சினை அல்ல. எந்தவிதமான அரசியல் பிரதிநிதித்துவமும் அற்ற இசுலாமியர்கள்,கிறித்துவர்கள் சம மதிப்பை இந்தியாவில் பெறுகின்றனர். ஆனால் தனித்தொகுதிகளின் பயனால் எப்போதும் 15% MLA/MP களை  கொண்டிருக்கும் நாம் சம மதிப்பை பெற இயலவில்லை என்பது கவனிக்க தக்கது.
நான்கு முறை முதல்வராக இருந்த அன்னை மாயாவதியின் உத்திர பிரதேசம் இன்றும் வன்கொடுமைகளில் முன்னனியில் உள்ளது.

இங்கே இந்த கருத்து அரசியல் அதிகாரம் நமக்கு வேண்டாம் என்பதாக புரிந்து கொள்ளதக்கதல்ல. அது நிச்சயம் வேண்டும். ஆனால் அது தீண்டாமையை ஒழிக்குமா ? என்றால் இல்லை என்பதை தான் நாம் புரிந்து்கொள்ள வேண்டும்.

(மீண்டும் கூறுகிறேன்,
இது அரசியல் அதிகாரம் நமக்கு தேவையில்லை என்று புரிந்து கொள்ளதக்கதல்ல)

8. *நாங்க SC இல்லை' பிரிவினர்*: 

இது மிகவும் முக்கியமான ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய பிரிவாகும். இந்த பிரிவில் உள்ளோர் SC என்பதன் பின் உள்ள இழிவை முற்றிலும் நீக்க வேண்டும் என்ற ஆசையற்றோர்.

அதாவது தீண்டாமைக்கான நிரந்திர தீர்வு குறித்து அக்கறையற்றோர். 

மாறாக தங்களை SC அல்ல என்று சொல்லி கொள்வதன் மூலம் இந்த இழிவிலிருந்து தப்பிவிடலாம் என்று கருதுகின்றனர். 

மேலும் இவர்களின் மனதந்திரம் வேறு சிலரை தீண்டதகாதவர்களாக காட்டுவதன் மூலம் தாங்கள் தப்பிவிடலாம் என்றும் தப்புக்கணக்கு போடுகிறது. அதாவது பட்டியில் சாதியில் உள்ள வேறு சாதியைவிட தங்களை உயர்வாக காட்டி கொள்வதன் மூலம் தப்ப எண்ணுவது. (நாங்க இல்ல , அவுங்க தான்) 

இங்கே முக்கியமானது இவர்கள் தீண்டாமையை ஒழிக்க பாடுபடவில்லை என்பதும் வேறு ஒரு சாதியை பலி கொடுத்து தாங்கள் தப்பிவிடலாம் என்றும் தப்பு கணக்கு போடுகின்றனர் என்பதுமாகும். 

SC யின் பின் உள்ள இழிவை முற்றிலும் நீக்குவது தான் நியாயமானது என்பது புரியாமல் தாங்கள் SC அல்ல என்று நிறுபிக்க முயல்பவர்கள். இந்த பிரிவினர் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டு கொள்கின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து. 

ஏனெனில் ஏதோ ஒருவகையில் SC பிரிவிலிருந்து இவர்கள் அமானுசிய முறையில் நீக்கப்பட்டுவிட்டால் இட ஒதுக்கீடும் கிடைக்காது, வன் கொடுமை சட்ட பாதுகாப்பும் கிடைக்காது. அதனால் பெருமளவு வன்முறையை இவர்கள் சந்திக்க நேரிடும். மேலும் சாதியை சொல்லி (டேய் *** பயலே) திட்டினால் ஒரு வழக்கு கூட தொடுக்க இயலாது.

9. *Inter caste சாதி மறுப்பு திருமணத்தில் பிறந்தோர்*

இந்த பிரிவினரும் மேற்சொன்ன பிரிவினரும் 'ஒத்த அடிப்படை' கருத்தாக்கத்தில் உள்ளோர் தான். 

அதாவது நாங்க SC இல்ல என்று ஏதாவது ஒரு வகையில் நிறுவ முயல்பவர்கள். 

"எங்க அப்பாவோட ஒன்றுவிட்ட மாமா சாதி மறுப்பு திருமணம் செய்தவர் மேலும் என் அம்மாவின் அப்பாவின் அப்பா திருமணம் செய்தது ஒரு முதலியார் "

இவ்வாறான ஏதாவது ஒரு கதையை சொல்லி தங்களின் ரத்தம் SC ரத்தம் இல்லை என்று சொல்லி தப்ப முனைபவர்கள்.

ஆனால் வரலாறு முழுவதும் சாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டே தான் உள்ளது என்பதும் அதனால் சாதியோ அல்லது தீண்டாமையோ ஒரு போதும் ஒழியவில்லை/குறையவில்லை என்பதும் இவர்களுக்கு புரிவதில்லை

********

ஆகவே மக்களே
நீங்கள் மேற்கண்ட எந்த பிரிவில் இருந்தாலும் உங்களால் தீண்டாமையலிருந்து தப்ப இயலாது என்பதே உண்மை. 

இந்துக்கள் உங்களை கண்டறிந்து உங்களுக்கு தர வேண்டிய மரியாதையை தான் தருவார்கள்.

ஏனெனில் இந்துகளுக்கு நீங்கள் வேண்டும். அதாவது SC என்பதன் பின் ஒரு இழிவு இருந்தால் தான் அவர்கள் உயர் சாதியாக ஆக முடியும். அதற்காக அவர்கள் உழைப்பார்கள். 

ஒரு வேளை அந்த இழிவு இல்லை எனில் அவர்களின் உயர்சாதி பெருமை சரிந்துவிடும், அது அவர்களுக்கு ஆபத்தானது.

அதனால் ஒவ்வொரு இந்துவின் கடமை  இந்த சாதி்வேறுபாட்டை கட்டிக் காப்பாற்றுவது ஆகும். அவர்கள் தீண்டாமையை கடைபிடிப்பது நம்மை இழிவு படுத்த மட்டுமல்ல. *மாறாக அவர்களின் உயர் நிலையை உறுதிபடுத்த கொள்ளவும்தான்* 

ஆகவே தீண்டாமையிலிருந்து விடுபடுவது என்பது எப்படியாவது SC பட்டியிலில் இருந்து வெளியேறுவதோ அல்லது தங்களை மறைத்து கொள்வதோ அல்ல.

மாறாக SC என்பதன் மீதுள்ள இழிவை இந்து மதத்திலிருந்து முற்றிலும் வெளியேறுவதன் மூலம் துடைத்து கொள்வதாகும். 

அது சனாதன முறைகளில் இருந்து *பாபாசாகேபின் வழியில் வெளியேறி பூர்வீக பௌத்த* கலாச்சாரத்தை மீண்டும் கட்டமைத்து அதன் வழியே நாங்கள் இந்து தீண்டதகாதோர் அல்ல, வேறு மதத்தை சார்ந்தோர். நாங்கள் பெருமைக்குரிய புத்திஸ்டுகள் என்று முழுங்குவதே ஆகும்.

புதன், 10 ஜூன், 2020

தீண்டாமைக்கு எதிரான மனவிளையாட்டு:

வெள்ளி, 5 ஜூன், 2020

ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....

🔰இன்று முதல், உங்கள் ஊர் 🔰 🇮🇳

🔴 சிகப்பில் இருந்தாலும் சரி 🔴

🟠 ஆரஞ்சில் இருந்தாலும் சரி 🟠

🟢 பச்சையில் இருந்தாலும் சரி 🟢

🏢கடைகள் திறந்தாலும் சரி.

 🏢திறக்கப்படாவிட்டாலும் சரி.

🔔ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி.

 🔕தளராவிட்டாலும் சரி.

🚷ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி.

🚸தடுக்காவிட்டாலும் சரி.

📢அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி.

 📣போடாவிட்டாலும் சரி.

🔈மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி.

 🔇பேசாவிட்டாலும் சரி.

👨‍👩‍👦‍👦ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.

🌐இது ஒரு #Pandemic - உலகளாவிய கிருமி பரவல்.

⚠️நீண்ட காலம் இருக்கும், பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்

💅அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு விசயமே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்.

👨‍👩‍👧‍👧👨‍👨‍👧‍👦கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்.

🚶‍♂️🚶‍♀️லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்இறங்கவும்...

📍லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்.

🤦‍♂️🤦‍♀️பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்.

🤦‍♂️🤦‍♀️அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்.

வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்.

🤦‍♂️🤦‍♀️🧏‍♂️🧏‍♀️கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்.

♦️எங்கும் எச்சில் துப்பாதீர்கள்..

♦️கைக் குட்டை சிறிய துண்டு வைத்து தும்முங்கள் இருமுங்கள்..

♦️வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்.

♦️கும்பல் கூடுவதை தவிருங்கள்.

♦️முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்.

♦️அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்.

♦️ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்.

♦️தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம்.🙏

♦️திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்.

♦️வாய்ப்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய் வாழ்த்து அன்பளிப்பு அனுப்பலாம்.

♦️பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும்.

 ♦️அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்.

♦️முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்..

♦️வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு ஜாக்கிரதையாக செல்லவும்...

♦️கிளினிக் மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லாமல் செல்ல வேண்டாம்....

♦️ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....

♦️வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி, நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி...

♦️ அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்...!!! 

வியாழன், 4 ஜூன், 2020

திருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..! தாராளமாக மக்கள் பார்க்கலாம்! நீதிமன்றம் கொடுத்த அனுமதி!

திருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..! தாராளமாக மக்கள் பார்க்கலாம்! நீதிமன்றம் கொடுத்த அனுமதி!

சசிகலா புஷ்பா அதிமுக கட்சியில் ராஜ்யசபா எம்பியாக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து அந்த கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் தற்போது இணைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பாவின் ஒருசில அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா இம்மாதிரியான புகைப்படங்கள் என்னுடைய பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவே பரப்பப்பட்டு வருகிறது. ஒரு சிலர் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் தான் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபகாலமாகவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தொடர்ந்த இந்த வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சஹாய் எண்ட்லா அவர்கள் வெளியிட்டிருக்கிறார். அதாவது மாண்புமிகு நீதிபதி வெளியிட்டுள்ள அந்த தீர்ப்பில், மனுதாரர் சசிகலா புஷ்பாவின் அந்தரங்கம் என்பது எது? மக்கள் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என்று அறியக் கூடிய உரிமை பொதுமக்களுக்கு உண்டு என்பதை அலசி ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது. 

மக்களின் பிரதிநிதியாக கருதப்படும் அவர் யாரை சந்திக்கிறார் என்று மக்கள் அறிந்து கொள்வது என்பது நியாயம்தான். தன் கட்சியோடு சம்பந்தப்படாத மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஆண் ஒருவருடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சந்தித்து பழகக்கூடியதைப்பற்றி அறிந்து கொள்வதற்கான முழு உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது என்று நீதிபதி கூறியிருக்கிறார். இந்த சந்திப்பு பொது நலனுக்காக என்று கூறவும் முடியாது அதே சமயத்தில் பொதுநலனுக்காகத்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்றும் சசிகலா தரப்பு வாதிடவும் இல்லை. 

ஆகையால் பேஸ்புக், யூட்யூபில் வெளிவந்திருக்கும் புகைப்படங்களை நீக்குவதற்காக தொடரப்பட்ட வழக்கில் இந்த புகைப்படங்களை நீக்கவோ அல்லது பார்ப்பதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளையோ விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் புகைப்படத்தை நீக்குவதற்கான உத்தரவையும் ஃபேஸ்புக் , கூகுள் மற்றும் யூட்யூப் ஆகிய நிறுவனத்திற்கு வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். ஆகையால் இது குறித்து தொடரப்பட்ட சசிகலாவின் வழக்கு நீதிபதிகள் தள்ளுபடி செய்யப்பட்டது மேலும் பேஸ்புக் நிறுவனத்திற்கு இரண்டு லட்சமும் யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு தலா ஒரு லட்சமும் அபராதம் அளிக்குமாறு சசிகலா புஷ்பா இருக்கு உத்தரவிட்டுள்ளனர்.