வியாழன், 2 ஏப்ரல், 2020

கொடையாளன்..கொரானா


கொடையாளன்..கொரானா..

மனித திட்டம் 1.
ஏப்ரல் ஒன்று முதல் NPR கணக்கெடுப்பு.

கொரோனா திட்டம் 1.  இப்போதைக்கு NPR கிடையாது.

மனித திட்டம் 2.
ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு.

கொரோனா திட்டம் 2.
ஒன்று முதல் ஒன்பது வரை ஆல்பாஸ்.

மனித திட்டம் 3.
எவர் சொல்வதை யும் கேட்காமல் சட்டமன்றம் மார்ச் 31 வரை.

கொரோனா திட்டம் 3.
சட்டமன்றம் மார்ச் 26 வரை மட்டுமே.

மனித திட்டம் 4.
ஊதிய உயர்வு கேட்டு போராடிய மருத்துவர் செவிலியர்க்கு தீர்ப்பு யாதெனில் சம்பளம் காணாது எனில் வேறு வேலைக்கு செல்லுங்கள்.

கொரோனா திட்டம் 4.
மருத்துவர் செவிலியர் நம்மை காக்கும் மனித தெய்வங்கள்.

மனித திட்டம் 5.
இவர் அவரை தொட்டால் தீட்டு.

கொரோனா திட்டம் 5.
எவர் எவரை தொட்டாலும் தீட்டு. சமத்துவம்.

மனித திட்டம் 6.
இறைவனை வழிபட கோவிலுக்கு செல்லாதவன் பாவி.

கொரோனா திட்டம் 6.
கோவிலுக்கு செல்வபனுக்கு அடி உதை.

மனித திட்டம் 7.
துப்புறவு பணியாளர்கள்.

கொரோனா திட்டம் 7.
இனி தூய்மை பணியாளர்கள்.

மனித திட்டம் 8.
காவிரியில் தண்ணீர் தரமாட்டேன்.

கொரோனா திட்டம் 8.
மாநில எல்லைகளை மூடு. எவரும் வரக்கூடாது. தண்ணீர் வரலாம்.

மனித திட்டம் 9.
வீட்டிற்கே வராமல் இரவும் பகலும் உழைப்பதே முன்னேற வழி.

கொரோனா திட்டம் 9.
21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது மட்டுமே உயிர் வாழ ஒரே வழி.

மனித திட்டம் 10.
பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது தவறல்ல.

கொரோனா திட்டம் 10.
பொதுத்துறை ஊழியர்களின் அயராத உழைப்பை தேசம் காண்கிறது.

மனித திட்டம் 11.
புரட்சி வரட்டும் அப்ப நான் வருகிறேன்.

கொரோனா திட்டம் 11.
வெளியே வந்தாலே அடி உழும்..

மனித திட்டம் 12.
டாஸ்மாக் பூட்டவே இயலாது.

கொரோனா திட்டம் 12.
ஏப்ரல் 14 வரை டாஸ்மாக் பூட்டப்படும்.

இன்னும் இன்னும் எத்தனையோ அள்ளித் தந்த கொடையாளன்..

#கொரானா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக