வெள்ளி, 3 ஏப்ரல், 2020

உலகம் சுகநிலை பெற வேண்டும். நோய் நெிடியில்லா நிலை வேண்டும்...

நீண்ட தகவல்தான். ஆனாலும் தயவுசெய்து முழுவதும் படிக்கவும். படித்தபின் நிற்க அதற்குத் தக. இத்தகவல் சும்மா மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ அல்ல. முதலில் நீங்கள் இந்த ஆலோசனைகளைக் கடைப்பிடித்து நடைமுறைப் படுத்துங்கள். பின்னர் மற்றவருக்குப் பகிருங்கள்.

*_ஒரு பொறுப்புள்ள மருத்துவர் அல்லது பொறுப்புள்ள மனிதன் என்ன சொல்லுவான்? 21 நாள் தனிமை வாழ்க்கை, சுயக்கட்டுப்பாடு ஒரு விசயமே அல்ல. இத்துடன் எதுவும் முடிந்து விடாது. நாம் 22ஆம் நாளிலும் அதன் பின்னரும் எப்படி வாழப் போகிறோம் என்பதே முக்கியம்._*

*_இனி என்ன நடக்கும்?_*

மக்கள் ஊரடங்கு முடிந்தவுடன் நடந்தாற்போல தேசியக்கொடியை எடுத்துக்கொண்டு ஊரையே அமளி துமளிப் படுதத்துவர். தேசபக்திப் பாடல்கள், வென்று விட்டோம் கொரோனாவை என்ற வெற்றுக் கூச்சல்கள்வேறு விண்ணைப் பிளக்கும். நாம் இந்தப் பெருந்தொற்றை முழுவதுமாகச் சமாளித்து விடவில்லை ஆனால் நமது தனிமனிதக் கூட்டு முயற்சிகளால் சிறிதளவு நோய்ப் பரவலைக் கட்டுப் படுத்தியுள்ளோம். அவ்வளவே.

*_அடுத்தநாளே மெத்தப் படித்த மேதாவிகள் எனக் கூறிக் கொள்ளும் நகர மக்கள் அலைகடலெனத் திரையரங்குகள், மால்கள், பேருந்து நிலையங்கள், பூங்கா, உணவகங்கள், எனக் கூட்டம் மிகுந்த இடங்கள் யாவற்றிலும் முட்டிமோதிக் கொண்டிருப்பர் 22ஆம் நாளன்று._*

*_அனைத்து சிறு, குறு, மற்றும் பெருவணிக நிலையங்கள் யாவும் வழக்கம்போல் செயலபட ஆரம்பத்துவிடும். 21நாள் மக்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் அதிகப் படியான சிஃப்ட் செய்து ஈடுசெய்ய முனைவர். இதுவே மீண்டும் நம்மைப் பின்தள்ளி நோய்த் தொற்று அதிகமாகப் பரவ ஏதுவாகும்._*

*_தங்கள் ஊர்களுக்குச் சென்ற ஊழியர்களும் நடுத்தர மக்களும் பேருந்துகளிலும், இரயிலிலும், லாரிகளிலும் பெருவாரியாகத் தாம் பணிபுரிந்த நகரங்களை நோக்கிக்கூட்டம்கூட்டமாகப் பயணிப்பர். இது எப்படியும் நோய் பரவ வகைசெய்தே தீரும்._*

*_அனைத்துப்பொதுப் போக்குவரத்துக்களும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் மக்களுக்குச் சுலபமாக நோய்த்தொற்று ஏற்பட வழிசெய்துவிடும்._*

*_22ஆம் நாள் என்ன நிகழும் என்பதைச் சரியாகச் சொல்கிறேன். ஒட்டு மொத்த இந்தியர்களும் நாம் இந்தப் பெருந்தொற்றுப் பேரிடரைப் பாதித் தூரமே கடந்துள்ளோம் என்பதை மறந்து அனைவரும் புற்றீசல்களைப்போல் நமது பழைய இயல்பு வாழ்க்கைக்குப் போக முயலுவோம் அல்லது போய்விடுவோம். பாதுகாப்புக் கவசங்களான முகமூடி, கை கழுவுதல், சானிடைசர் யாவற்றையும் தூக்கி எறிந்து விடுவோம். தத்தம் சுயச் சுகாதாரப் பழக்கம், கட்டுப்பாடு யாவற்றையும் மறந்தே விட்டுச் செயலபட்டுவிடுவோம். விளைவு தெரிந்ததே. மீண்டும் நாம் முதல் கட்டத்திற்கே போய்விடுவோம்._*

*_இதன் காரணமாக கொரொனா பரவலின் இரண்டாவது வீச்சுக்கு நம்மை நாமே ஆட்படுத்திக் கொள்வோம். நம்பாவிட்டால் 2009ல் பரவிய என்1ஹெச்1 பற்றிய புள்ளிவிவரங்களைப் பாருங்கள். அப்போதும் கட்டுப்பாட்டுக் காலம் முடிந்தவுடன் மக்களின் விபரீதச் செயலபாடுகளால் இரண்டாம் தொற்று ஏற்பட்டதை நாடறியும். நாமும் அறிவோம்._*

*_எனவே இந்த 21நாள் சுய தனிமைப் படுத்திக் கொண்ட தற்காப்பு முற்றிலும் வீணாக்கப் பட்டுவிடும். 22ஆம் நாள்முதல் மக்கள் எப்படிச் செயலபடவேண்டும் என்ற நலக்கல்வி கண்டிப்புடன் நடைமுறைப் படுத்தப் படாவிட்டால் அடுத்தடுத்த லாக்டவுன்கள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் பெருகும் இந்நிலை வேண்டாமென்றால் கண்டிப்பான சுயக் கட்டுப்பாடு நீண்ட நாட்களுக்குத் தேவை._*

*_என்ன செய்யவேண்டும்?_*

*_நாம் புத்திசாலித்தனமாக நடந்துக் கொள்ள வேண்டும். எப்படி? 22ஆம் நாளில் பார்ட்டி, பீச், கொண்டாட்டம், போன்ற கூட்டம் சேரும் எந்தச்செயலிலும் ஈடுபடக்கூடாது. கடந்த 21நாட்களும் எப்படி இருந்தோமோ அப்படியே நடைமுறைப் படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். இது முடிவல்ல. ஒரு பெரு முடிவின் ஆரம்பமே._*

*_இந்த எச்சரிக்கை மணியை ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டுவோம். அதற்காகவே இச்செய்தியைத் தமிழாக்கம் செய்து வழங்குகிறேன். படித்துப் படித்துணர்ந்து அதன்படி நடந்து நாட்டை நலமுறச் செய்வோம். பின்னர் எல்லோருக்கும்எடுத்துச் செல்வோம்._*

*_இப்பதிவை மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு அதிகாரப்பூர்வமான விண்ணப்பாகக் கொண்டு செல்ல முயற்சிப்போம். மேற்கூறிய அம்சங்கள் யாவற்றையும் வலியுறுத்தி அரசுகளின் அறிவிப்புக்கள் 20ஆம் நாளிலிருந்து வருமாறு வேண்டுவோம்._*

*_நாம் இந்த லாக்டவுன் படிப்படியாகக் குறைக்குமாறு அரசுகளைக் கேட்டுக் கொள்வோம்._*

*_உதாரணமாக, 22ஆம் நாள் முதல் அத்தியாவசியப் பணிகள் மட்டும் அதாவது வங்கிகள், மளிகை, குறைந்தபட்ச போக்குவரத்து வசதி என எல்லாமே ஒரு கட்டுக்குள் வரச்செய்யப் படவேண்டும்._*

*_அடுத்து வரும் வாரத்தில் முந்திய வாரத்தில் செய்யப்பட்ட கட்டுப்பாட்டுத் தளர்ச்சியின் செயல் விளைவுகளை ஆராய்ந்து மக்களை சமூக விலகல் கொள்கையைக் கடைப்பிடிக்க உத்தரவிடலாம்._*

*_திரையரங்குகள், மால்கள், பூங்கா, பீச், அனைத்து மத ஆலயங்கள் என மக்கள் கூடும் இடங்களைக் கடைசியாகத்தான் திறக்க உத்தரவிட வேண்டும்._*

*_நாம் இந்தக் கொடிய இக்கட்டான நிலையின் விபரீதங்களை உணர்ந்து ஒரேகுரலில் செயல்பட்டால் 130 கோடி இந்திய மக்களுக்கும் நன்மை பிறக்கும்._*

*_மருத்துவனாக இருப்பினும் நானும் இக்கொடிய நோயைக் கண்டு மிரண்டு கிடக்கும் ஒரு சாதாரண மனிதனே. அதேசமயம் சமுதாய மாற்றங்களை ஏற்படுத்த விரும்பும்ஒரு இந்தியன்._*

*_எல்லோருக்கும் எனது உண்மையான வேண்டுகோள்:_*

1. நாம் கொரோனா நோயை வென்று விட்டோம் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

2. இன்னும் 6மாதக் காலத்திற்காவது சமூக விலகலைக் கடைப் பிடிக்கவும்

3. காரணமின்றி இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்க வேண்டாம்.

4. தேவைகளைக் குறையுங்கள். உண்பது நாழி உடுப்பது முழமே என்பது மூத்தோர் சொல். தேவை இல்லையெனில் வெளியே செல்லும் அவசியமே ஏற்படாது.

5. முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும்.

6.அரசே அனுமதித்து இருப்பினும் காலை 6-00 முதல் 9-00 மணிவரை வெளியே செல்ல வேண்டாம்.

7. நான் பொறுப்பான இந்தியன். எனது நாடும் மக்களும் கோவிட்-19 பெருந்தொற்றை வென்றே தீர உறுதி எடுக்கிறேன் என எல்லோரும் சூளுரைக்க வேண்டும்.

8. இந்த 21நாட்கள் அடைப்பு மக்களைப் பயிற்றுவிக்கத்தானே ஒழிய, 22ஆம் நாள் முதல் யாவும்சரியாகிவிடும் என்று அர்த்தமல்ல. இதே நடைமுறைகளை எப்போதும் கடைப்பிடிப்போம்.

9. சீரான நெறிப்படுத்தப்பட்ட குப்பை மற்றும் கழிவுகள் அப்புறப்படுத்தல் முறைகளைக் கைக் கொள்வோம். அவற்றைத் தீயில்கொளுத்துவோம் அல்லது வீட்டுக் குப்பைகளைக் கம்போஸ்ட் உரமாக்கும் சாதனங்களைப் பயன் படுத்துவோம்.

10. வீட்டின் வாசலில் ஒரு வாளியில் தண்ணீர், சோப்பு / டிடர்ஜன்ட் கரைசல் வைக்கவும். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் கை கால் முகம் யாவும் சுத்தமாகக் கழுவிவிட்டு, உடைகளையும் டிடர்ஜன்ட்டில் ஊறவைத்துவிட்டுப் பின்னர் வீட்டிற்குள் செல்லும் பழக்கம் வலியுறுத்ப் பட்டு அனைவராலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

11. தற்போது கடைப்பிடித்து வரும் சுய சுத்தம், இல்லச் சுத்தம், மற்றும் சமூக விலகல் நடைமுறைகளை எப்போதும் நடைமுறைப் படுத்த உறுதி பூணுவோம்.

12. தன்னிறைவே இல்ல நிறைவு, தேச நிறைவு, உலக நிறைவு.


*_உலகம் சுகநிலை பெற வேண்டும். நோய் நெிடியில்லா நிலை வேண்டும்._*

*_நாடென்ன செய்தது எனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு..._*
*_நீயென்ன செய்தாய் அதற்கு என்று கேட்டால் நன்மை உனக்கு...._*

பழைய எம். ஜி. ஆர். படப்பாடல் தரும் போதனையை ஏற்று நல்வழியில் நடப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக