வியாழன், 30 ஏப்ரல், 2020

கொரோனா லாக்டவுன்.. உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடைய வாய்ப்பு.. ஐ.நா. அமைப்பு.



கொரோனா லாக்டவுன்.. உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடைய வாய்ப்பு.. ஐ.நா. அமைப்பு.

வாஷிங்டன்: கொரோனாவால் உலகம் முழுவதும் அமலில் உள்ள ஊடங்கு உத்தரவு மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்தால், கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்படும். இதனால் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்படும் என ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பபட்டுள்ளது. இதன் காரணமாக எல்லோருக்கும் வீட்டுக்குள்ளே முடங்கி கிடப்பதால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. அத்துடன் அதிக அளவலான உறவுகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் திட்டமிடாத வகையில் பெண்கள் வழக்கத்தை விட அதிக அளவில் கர்ப்பம் தரிக்கும் சூழல் உள்ளதாகவும் ஐநா மக்கள் நிதி கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் நாடாலியா கனெம் கூறியுள்ளார்,
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பது தடைப்பட்டு இருக்கிறது. இதனால் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 4.7 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஊரடங்கு இப்படியே ஆறு மாதங்கள் வரை நீடித்தால், உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் சூழ்நிலை ஏற்படலாம்.

பல பெண்கள் குடும்பகட்டுப்பாடு செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள். அத்துடன் திட்டமிடப்படாத கர்ப்பத்தால் சிரமத்தை சந்திக்கும் நிலையும் நேரிடலாம். இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முன்பு இல்லாத வகையில் அதிவேகமாக அதிகரிக்கக்கூடும். நோய் தொற்றானது ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து உள்ளது.

ஊரடங்கினால் பாலின அடிப்படையிலான வன்முறையானது 3.1 கோடி அளவுக்கு அதிகரிக்கக்கூடும். பெண்கள் திட்டமிடும் திறன் மற்றும் ஆரோக்கியத்தை இழக்க நேரிடும். ஒவ்வொரு 3 மாதத்திற்கும் 1.5 கோடி பாலின அடிப்படையிலான வழக்குகள் உலகம் முழுவதும் அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.


ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

குடும்ப வன்முறை புகார்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் என மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.

குடும்ப வன்முறை புகார்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் என மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இப்புகார் தொடர்பான அவசர உதவிக்கு சார்பு நீதிபதி/ செயலரின் வாட்ஸ் அப் எண்- 9488237478, அவசர உதவி தொலைபேசி எண்- 9486229149 (ஓஎஸ்சி), பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி எண்- 9942656138, குழந்தை பாதுகாப்பு அதிகாரியின் தொலைபேசி எண்களில் (8300009991, 8300071495, 8300006625) தொடர்பு கொள்ளலாம்.

இந்த எண்களில் பெயர், வயது, பாலினம் மற்றும் குறைகள், வன்முறைக்கு ஆட்படுதல் அல்லது மற்றவரால் துன்புறுத்தப்படுதல் போன்ற புகாரையும், சம்பந்தப்பட்ட எதிரி, அவரது பெயர், வயது, பாலினம் ஆகிய தகவல்களை அனுப்ப வேண்டும்.

இந்தப் புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆன்லைனில் குடும்ப ஆலோசனை வழங்கப்படும்".

இப்புகார் தொடர்பான அவசர உதவிக்கு சார்பு நீதிபதி/ செயலரின் வாட்ஸ் அப் எண்- 9488237478, அவசர உதவி தொலைபேசி எண்- 9486229149 (ஓஎஸ்சி), பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி எண்- 9942656138, குழந்தை பாதுகாப்பு அதிகாரியின் தொலைபேசி எண்களில் (8300009991, 8300071495, 8300006625) தொடர்பு கொள்ளலாம்.

இந்த எண்களில் பெயர், வயது, பாலினம் மற்றும் குறைகள், வன்முறைக்கு ஆட்படுதல் அல்லது மற்றவரால் துன்புறுத்தப்படுதல் போன்ற புகாரையும், சம்பந்தப்பட்ட எதிரி, அவரது பெயர், வயது, பாலினம் ஆகிய தகவல்களை அனுப்ப வேண்டும்.

இந்தப் புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆன்லைனில் குடும்ப ஆலோசனை வழங்கப்படும்".

இவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி அறிவித்துள்ளார்.

MUST READ AND MUST FORWARD MESSAGE

MUST READ AND MUST FORWARD MESSAGE

கரோனா ஊரடங்கில் இணைய பயன்பாடு அபிரிமிதமாக அதிகரித்துள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் செல்போனே கதி என்று பொது மக்கள் இருப்பதும் Work From Home ல் பலர் தங்கள் கணினியை அலுவலக கட்டமைப்பை தாண்டி வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இதையே சைபர் குற்றவாளிகள் தங்கள் வசம் ஆக்கி கொள்ள முயற்சித்து வருகிறார்கள் என உலக சுகாதார நிறுவனமும் இன்டர் போலும் இந்திய அரசின் உள்துறை அமைச்சகமும் எச்சரித்துள்ளன.

செய்ய வேண்டியவை

• கரோனா குறித்த தகவல்களை அதிகம் படிக்க நாம் விரும்புவதால் COVID-19 என்ற பெயரில் பல போலி இணைய லிங்குகள் உலாவி வருகின்றன.இதை கிளிக் செய்து நீங்கள் சென்றால் உங்கள் செல்போனில் இருந்து தகவல்கள் திருடப்படலாம்
• வாட்ஸ் ஆப்பில் வரும் கரோனா குறித்த PDF,Word Document,Image போன்றவற்றை தேவையில்லாமல் கிளிக் செய்து மாட்டி கொள்ளாதீர்கள்
• கரோனா வைரஸ் மேப் என்று பல போலி இணையதளங்கள் மூலம் நமது செல்போனின் பாஸ் வேர்ட்,கிரெடிட் கார்ட் எண்கள்,பயனாளர் பெயர் போன்ற தகவல்களை திருடி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது
• Spymax,Corona Live 1.1 போன்ற செயலிகள் போன்றவற்றை டவுன்லோட் செய்ய வேண்டாம்
• வீட்டுக்குள்ளையே முடங்கி இருப்பதால் மாஸ்க் வேண்டுமா என்று ஆன்லைன் வர்த்தகம் செய்ய பல புதிய போலி இணையதளங்கள் உலவலாம். பிரபல ஆன்லைன் வர்த்தக இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
• நீங்கள் பண பரிமாற்றம் செய்யும்  இணையதளம் https:// என்று இருந்தால் பாதுகாப்பனது. (S means Secure) .வெறும் http:// என்று இருந்தால் போலி என்று அர்த்தம்.
• ZOOM போன்ற செயலிகளை கொண்டு காணொளி குழு அரட்டை,மீட்டிங் போன்றவற்றை செய்ய வேண்டாம். தகவல் பாதுகாப்பு இல்லை 
• கரோனா க்கு நிதி திரட்டுகிறோம் என்று வரும் வாட்ஸ் அப் லிங்க்கை ஒரு முறைக்கு நூறு முறை பரிசோதித்து பண பரிமாற்றம் செய்யுங்கள்.. கூடுமான வரை இதை தவிர்ப்பதே நல்லது
• PM CARES FUND,CM FUND போன்றவற்றிற்கும் போலி லிங்குகள் உலாவி வருகின்றன.அரசின் இணையதளமான www.mygov.in  சென்று அதிகார பூர்வ தகவல்களை நீங்கள் பெற்று கொள்ளலாம்.
• கரோனா குறித்த அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் வேண்டுமெனில் Message +91 90131 51515 on WhatsApp
• அரசு மூன்று மாத நிதி சலுகைகளை அறிவித்துள்ளதால் இ எம் ஐ இல்லாத லோன் தருகிறோம் OTP எண்ணை கொடுங்கள் என்றோ , CVV எண், டெபிட்,கிரெடிட் கார்டு அட்டை எண்ணை கொடுங்கள் என்றோ உங்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பு கொள்ளலாம்... கவனம்
• பொது வெளியில் உள்ள இலவச Wi-Fiஐ பயன்படுத்துவதை தவிருங்கள்
• வாட்ஸ் அப், முக நூலில் Saree Challenge,Couple Challenge, Mummy Challenge என்று பெண்கள் போட்டோ பதிவிடுவதை தவிருங்கள். உங்கள் போட்டோகளை திருடி அதை உருமாற்றி தவறாக பயன்படுத்தும் கும்பல் செயல்படுவதாக அரசு எச்சரித்துள்ளது
• அரசின் Aarogya Setu செயலியை தவிர்த்து தற்போதைக்கு கரோனா குறித்த வேறு எந்த செயலியையோ,லிங்க்கயோ டவுன்லோட் செய்யாமல் இருப்பதே நலம்.
• Charity Fund கொடுக்கும் முன் பல தடவை நாம் செய்ய இருக்கும் பண பரிமாற்ற இணையதளம் Secure தானா என்று சோதித்து கொள்ளவும்
• மொபைல் போன் மற்றும் லேப் டாப்பில் சரியான ஆன்டி வைரஸ் மென்பொருள் இல்லையென்றால் நிறுவி கொள்ளவும்
• பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றி கொள்ளவும்.கரோனா நேரத்திலாவது மாற்ற வேண்டியது அவசியம்.
• Phishing,Vishing மின் அஞ்சல்களை தவிர்க்கவும்
• Trusted Apps மட்டுமே டவுன்லோட் செய்யவும் ‘
• E-Wallet ல் உங்கள் கார்டு எண்களையோ வங்கி கணக்கு எண்களையோ சேமித்து வைக்க வேண்டாம்
• வங்கி கணக்கில் இலவச பணம் செலுத்துகிறோம் என்று பலர் உங்களை ஏமாத்த போன் செய்து OTP,CVV கேக்க வாய்ப்புண்டு. கவனம்.பணம் போனால் திரும்ப பெறுவது மிகுந்த சிரமம் 
• ஆஸ்பத்திரி செலவுக்கு எனக்கு பணம் தேவை என்று பெண் குரலில் பேசி உங்களை லாவகமாக ஏமாற்றலாம். உதவும் முன் யாருக்கு உதவுகிறோம் என்பதை தெரியாமல் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டாம்
• Free NETFLIX,AMAZON தருகிறோம்..இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று மெசேஜ் வந்தால் ஏமாற வேண்டாம்
• புகார் இருந்தால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவிடலாம். Helpline எண் 155260


‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’...



‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’...


*கற்பனையில் கூட இப்படி ஒரு சூழல் வருமென்று நாம் யாரும் நினைத்திருக்க முடியாது.*

*சார்த்தர் எழுதிய ‘மீள முடியுமா?’ என்ற நூலில் ஒரு வரி வருகிறது -*

 *‘நரகம் என்பது - மற்றவர்கள் தான்...*’

*பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சொந்த நாட்டின் மக்கள் அகதிகள் போல நடந்தே ஊருக்குத் திரும்புகிறார்கள். வழியில் பசியால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்து போகிறார்கள்.*

*பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரிய இடப்பெயர்வு. உலகத்தையே தலைகீழாகக் கவிழ்த்தியது போல மாற்றங்கள் நிகழ்கின்றன.*

*இன்னும் நாம் கற்பனையே செய்ய முடியாத அரசியல் மாற்றங்கள் உலகில் நிகழப்போகின்றன.*

*இந்த க‌ஷ்டகாலத்திலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.*

 *நாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன.*

 *கங்கை நதி குடிநீராக மாறுகிறது... சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது... மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது... இந்த ஏப்ரல் மாத இரவில் சென்னை லேசாகக் குளிர்கிறது...*

*தீவிரமான நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நண்பர் ‘கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது‘ என்கிறார். ‘நீங்கள் எல்லாருமே திருடர்கள். எனவே யாரும் என்னைப் பார்க்க வராதீர்கள்’ என்று கடவுளே தன் வழிபாட்டுத்தலங்களைப் பூட்டச் சொல்லிவிட்டார் என்கிறார் ஒரு முதியவர்.*

*இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது.*

 *விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் நாம் செய்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது.*

 *வல்லரசுகளே தடுமாறுகின்றன. தனித்திருப்பதைத் தவிர தப்பிக்கும் வழிகள் இல்லை.*

*இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை.*

*முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது.*

 *கவனித்துப் பார்த்தால் நம் இயல்புக்குப் பொருந்தாத எல்லாம் விடை பெறுகின்றன.*

*மண்டபங்கள் வரும் வரை நம் திருமணங்கள் வீட்டில் நடந்தன. இப்போது திருமணங்கள் எந்த புரோகிதமும் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டன. கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அத்தனை டெஸ்ட்டுகள், ஸ்கேன்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் என்று வலியுறுத்தும் மருத்துவர்கள் இப்போது அதெல்லாம் தேவையில்லை. வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். தொற்றுக்காகத் தவிர்க்கப்படுகிறது என்றாலும் தவிர்க்கப்படுவதால் ஒன்றும் ஆகாது என்ற உண்மையும் அதில் இருக்கிறது.*

*கிராமத்திலிருந்து வந்தவர்கள் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்கள்.*

 *‘மகன் வெளிநாட்டில் இருக்கிறான்’ என்று ஒருமாதம் முன்புவரை பெருமையாக இருந்த இந்த விஷயம் இப்போது பெருமையாக இல்லை.*

 *மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தீவிரமாகப் பேசிய வாய்கள் அனைத்தையும் மாஸ்க் மூடிவிட்டது. மதம் பற்றிப் பேசியவர்கள் மலேரியா மாத்திரை குறித்தும் கபசுரக் குடிநீர் குறித்தும் பேசுகிறார்கள்.*

*துறை சார்ந்து அறம் தவறியவர்களாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும்தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.*

*தேசத்தைக் காப்பதாக எப்போதும் பேசும் அரசியல்வாதிகள் அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.*

*நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் கொடுத்தது செய்தியாகிறது.*

 *என்ன சம்பளம் என்று தெரியாத துப்புறவுத் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பு மணி அடிக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது. ‘யாரு?’ ‘குப்பை’. சமூக இடைவெளி மட்டும் எப்போதும் போல அப்படியேதான் இருக்கிறது.*

*ஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை.*

 *உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது? நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். பிரிட்டிஷ் பிரதமராக... ஹாலிவுட் நடிகராக... மருத்துவராகக் கூட இருங்கள். எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.*

*மதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன. பிரான்ஸில் 92 வயது மூதாட்டி நான் நன்றாக வாழ்ந்து விட்டேன்.போதும், அவரை வாழவையுங்கள் என்று தனக்குக் கொடுத்த வெண்டிலேட்டரை முப்பது வயது இளைஞருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு நோயுடன் வீடு திரும்புகிறார். கண்கள் கலங்குகின்றன.*

 *வெண்டிலேட்டர் இல்லாத தேசத்தில் சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக எத்தனை அணு ஆயுதங்கள் யுத்த விமானங்கள்.*

*கைகளைச் சோப்புப் போட்டுக் கை கழுவுங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நைஜீரியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த லாகோஸ் நகரில் ஒருமுறை சோப்பு போட்டுக் கைகழுவுவதுகூட ஆடம்பரம் என்கிறது செய்தி.*

*1,400 கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார்.*

*65 வயதுக் கணவர் வலியால் துடிக்கும் தன் மனைவியை சைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.*

*ஒரு தாய் நல்லதங்காள் போல தன் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசுகிறாள்.*

*இவையெல்லாம் வெறும் காட்சிகள் அல்ல. வரும் ஆண்டுகளுக்கான குறியீடுகள்....,*

*பெரும்பாலான நாடுகள் மூத்த குடிமக்களை கைவிட்டு விட்டது. உடல் நலம் சரியில்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு அரசுகள் வந்துவிட்டது என்றால் இனி என்ன நடக்கும்.*

*அழுத்தம் தாளாமல் குக்கர் வெடிப்பது போல பல நாடுகளில் புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறது ஓர் ஆங்கிலக் கட்டுரை. திருக்குறளின் 56ஆவது அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.*

*“உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக உரிய நேரத்துக்குள் கையாளாமல் விட்டால் நாட்டில் பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படும்.*

 *பஞ்சாபில் ஆயிரக்கணக்கான டன் கோதுமை அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. அறுவடை செய்ய வேண்டுமெனில் பிகாரில் இருந்து தொழிலாளர்கள் வர வேண்டும். அறுவடை செய்ததை நிரப்ப மேற்கு வங்கத்தில் கோணிப்பை தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும். கோதுமை மூட்டைகளை நாடு எங்கும் கொண்டு செல்ல டிரக்குகள் வேண்டும். ஒரு டிரக் டிரைவர் நூறு ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும். எங்கெல்லாம் இறங்குவார்? தொற்று இருந்தால் என்ன நடக்கும்?*

*‘ஒன்றை ஒன்று வெகுவாகச் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்புவதுதான் எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்’ என்கிறார் இந்தியக் குடிமையியல் அதிகாரி ஒருவர்.*

*‘உங்கள் வாழ்வில் நித்தியமானது மரணம் ஒன்றுதான். அதற்கு தயாராகாமல் நீங்கள் எதெதற்கோ தயாராகிறீர்களே ஏன்?’ என்று புத்தர் கேட்டதையே நோம் சாம்ஸ்கி ’பல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்?’ என்று கேட்கிறார்.*

*இந்தக் கிருமியின் வளர்ச்சியைப் பற்றி உலகின் நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் யோசிக்காததன் காரணம் பல துறைகள் தனியார்வசம் போனதுதான் என்கிறது புள்ளிவிவரம்.*

 *வாழ்வாதாரங்கள் இழந்து எல்லைகளில் நுழைகிற அகதிகளைக் கொன்று கொண்டிருந்தோம். இன்று எல்லைகள் அனைத்தும் கேலிக்குரியவனாகி விட்டன. அமெரிக்காவுக்கு வியட்நாம் மருந்து அனுப்புகிறது.*

*கதவில் இருக்கலாம். கைப்பிடியில் இருக்கலாம். செய்தித் தாளில் இருக்கலாம். பால் பாக்கெட்டில் இருக்கலாம். தும்மினால் மூன்று மணி நேரம் காற்றில் இருக்கலாம். ஒருமுறை இதன் சுற்று முடிந்தாலும் ஆறு மாதங்களில் இதன் மறு சுற்று ஆரம்பிக்கலாம். வதந்திகளும் செய்திகளும் கிருமியைவிட வேகமாகப் பரவுகின்றன.*

 *தொலைக்காட்சிக்கு நாள் முழுக்க பிரேக்கிங் நியூஸ். திகில் படத்துக்கான இசையுடன் மனிதர்கள் இறந்த செய்திகள்.*

*நல்ல வேளையாக இது பறவைகள் மூலம் பரவவில்லை. பறவைகள் மூலம் பரவினால் மனித குலம் பிழைத்திருப்பது கடினம் என்கிறார் ஒரு மருத்துவர்.*

 *இப்போது வௌவால் மூலமும் பரவும் என்கிறார்கள். அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி பழங்குடியினருக்கும் தொற்று பரவிவிட்டது என்கிறது ஒரு செய்தி.*

*மருந்தில்லா கிருமிக்குப் பயந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பயத்தில் இருக்கிறது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வீட்டில் இருக்க வேண்டும்.*

 *சீன அரசு எல்லாமே தந்தது. வீட்டுக்குள் இருந்தார்கள். இங்கு கூட்டம் கூட்டமாக வெளியில் வருகிறார்களே ஏன்? கிருமியை விடவும் பசியும் வேலையின்மையும் கொடுமையானது....*

 *கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றிய சீனாவில் டிசம்பரில் தொடங்கிய ஊரடங்கை ஏப்ரலில் தான் தளர்த்தினார்கள்.*

*கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் நம் தேசத்தில் இந்தத் தொற்று கட்டுக்குள் வர எத்தனை மாதங்கள் ஆகும்?*

*ஒரு நாள்., பிறகு 21., பிறகு 19., பிறகு?*

*இது தொடரும்...நிலையில் என்னென்ன நூல்கள் படிக்கலாம், என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்று சமூக ஊடகங்களில் வருகிற பொழுதுபோக்குத் திட்டங்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போகும்.*

*முதல் வாரத்தில் கணவர்கள் படும் அவஸ்தைகள் குறித்து வந்த மீம்ஸ்கள் இப்போது குறைந்து விட்டன. குடும்ப வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் குறித்த செய்திகள் அதிகம் வரத் தொடங்குகின்றன.*

*அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது.*

 *‘ஆட்கள் வேலை செய்கிறார்கள். மாற்றுப் பாதையில் செல்க’ என்ற அறிவிப்பு சாலையில் இருப்பதைப்போல ‘இயற்கை வேலை செய்கிறது. நாம் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.*

*பரிணாம விதிகளில் பொருந்திப் பிழைத்திருக்கும் விதமாக வரும் ஆண்டுகளில் எல்லாமே மாறப்போகிறது என்பது மட்டும் சூசகமாகத் தெரிகிறது.*

*அச்சு ஊடகங்கள் விடை பெறலாம். மக்கள் கூடுகிற வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இன்னும் பல மாதங்களுக்கு மூடி இருக்கும் நிலை வரலாம்.*

*இதெல்லாம் முடிவுக்கு வரும்போது முதல் இரண்டு இடங்களுக்கு மக்கள் ஆர்வமாகத் திரும்புவார்கள்.*

 *ஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் மனித இடைவெளி சாத்தியம்.*

 *மூன்றாவதான திரையரங்கு என்னாகும்? யாருமே காப்பாற்ற முடியாது என்ற நிலையில் பயத்துடன் இருந்தவர்களுக்கு அனைவரையும் காப்பாற்றும் நாயகர்களின் படங்கள் என்ன பொருள் தரும்? இணைய தளங்கள் வழியாக இத்தனை வாரங்கள் படங்கள் பார்த்துப் பழகியவர்கள் திரையரங்குக்குத் திரும்புவார்களா?*

*இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து உடனே வெளியேறுங்கள்’ என்று ஒரு அறிவிப்பு வரும். அதற்கு இணையான சூழல்தான் இப்போதும்.*

*முரண் என்னவெனில் அத்தியாவசியத்தோடு வீட்டுக்குள் இருங்கள் என்பதுதான்.*

*அன்றாட வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை இயற்கை முன் மொழிந்துவிட்டது. தொழில்நுட்பம் அதை வழிமொழியப்போகிறது.*

*சமீப வருடங்களில் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிராக மினிமலிஸம் என்ற ஒரு கருத்து உலகம் முழுக்கப் பரவி வருகிறது.*

 *‘கடந்த ஒரு வருடத்தில் எதை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அது உங்களுக்கு எப்போதும் பயன்படாது. எனவே, அதைத் தூக்கி எறியுங்கள். பொருட்களைத் துடைக்க, பொருட்களை ஒழுங்கு செய்ய என்று உங்கள் ஆயுளை பொருட்களிடம் செலவழிக்காதீர்கள்’ என்பதுதான் அந்தக் கோட்பாடு. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்தான்.*

*இந்த மாதத்தில் எங்கள் வீட்டில் ஒரு பிறந்தநாள் வந்தது. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி கொண்டாட்டமாக நடத்துவது சாத்தியமில்லை என்பதால் குழந்தைகள் வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்தார்கள். கேக் இல்லை. கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்துச் சொன்னோம். முந்தைய பிறந்தநாட்கள் எல்லாம் நிழற்படங்களாக ஹார்டு டிரைவில் இருக்கின்றன. இந்தப் பிறந்தநாள் முழு வாழ்க்கைக்கும் மனத்தில் இருக்கும்.*

*பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன.*

*குப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் கீரையும், மிளகு ரசமும் வந்துவிட்டது. நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.*

*இத்தனை நாளும் பணத்தின் பின்னால், அதிகாரத்தின் பின்னால் பெருமைகளின் பின்னால் நீங்கள் ஓடிக்கொண்டிருந்தால் உங்கள் சக்கரங்களை நிறுத்துங்கள்.*

 *உங்கள் அருகில் ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்கள் ஓட்டம் இவர்களுக்காகத்தான் எனில் அவர்களின் உண்மையான தேவை என்ன?*

*எதிர்மறை உணர்வுகளும், பயமும், அவ நம்பிக்கையும் சூழ்ந்த இந்தக் கடினமான நாட்கள் சீக்கிரமே முடிந்துவிடும்.*

*இது போல பல நூறு தொற்றுக்களைப் பார்த்த மனிதகுலம் ஆரோக்கியமாக மீண்டு எழுந்து வரும்.*

 *இது மாதிரியான தனிமை உங்கள் வாழ் நாளில் திரும்பவரப் போவதில்லை. எனவே தனித்திருங்கள். பல வருடங்கள் கழித்து இதையெல்லாம் நம் சந்ததியினருக்கு ஒரு கதையாகச் சொல்ல முடியும்.*

*தொற்று தொடங்கிய முதல் வாரத்தில் எதிர்வீட்டில் ஒன்று நடந்தது. ஆண்டன் செகவ் பார்த்திருந்தால் ‘பால் பாக்கெட்’ என்று ஒரு சிறுகதை எழுதி இருப்பார். பக்கத்து ஃப்ளாட்காரர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கதவில் இருக்கும் பால் பாக்கெட்டை கைபடாமல் ஒரு குச்சியின் உதவியால் எடுத்து எப்படி மஞ்சளும் உப்பும் கலந்த வாளியில் போட்டார் என்பதுதான் கதை.*

 *இதுபோல என் எதிர் வீட்டு பெண்மணி இரண்டாவது மாடியிலிருந்து தக்காளி வாங்கிய கதையும் இருக்கிறது.*

*‘கடுமையான நெருக்கடிக்குள்தான் காமெடி இருக்கிறது’ என்று சாப்ளின் சொல்லுவார்.*

*நெருக்கடி மிகுந்த இந்த நாட்களை மன அழுத்தமில்லாமல் எளிதாகக் கடந்து வருவோம். இந்தச் சூழலில் நமக்குத்தேவை நம்பிக்கை.*

*சக மனிதனுக்கு நம்பிக்கையையும் நம்மால் முடிந்ததையும் கொடுப்போம்.*

*ஸ்பார்டகஸ் நாடகத்தில் ...*
*‘மண்ணிலிருந்து வந்தேன். மண்ணுக்கே திரும்புகிறேன்’*

*என்று ஒரு வரிவரும். அதன் வெவ்வேறு அர்த்தங்களை யோசித்துப் பார்க்கிறேன்.*

 *‘நமக்கான உணவை நாமே உருவாக்கும் அளவுக்கு ஒரு தற்சார்புப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் போதும். எத்தகைய வீழ்ச்சியில் இருந்தும் நம்மால் மீண்டு எழுந்துவிட முடியும் என்கிற நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.*

*இந்தப் பேரிடரை முன்வைத்து  மரபு சார்ந்த வாழ்வை, விவசாயத்தை, மரபு சார்ந்த மருத்துவத்தை நாம் புதுப்பிக்க வேண்டும். நம் கலாச்சாரம் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.*

*தனித்திருப்போம். கைகளைக் கழுவிக்கொண்டே இருப்போம். ஏனெனில் நம் கைகளில் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கிறதோ இல்லையோ பல வருடங்களாக நாம் கொன்ற இயற்கையின் ரத்தம் கறையாக இருக்கிறது.*

வியாழன், 16 ஏப்ரல், 2020

அது என்ன ஹெலிகாப்டர் மணி..?


ஹெலிகாப்டர் ஷாட் தெரியும்.. அது என்னபா ஹெலிகாப்டர் மணி..?

அமெரிக்கா இந்த ஆண்டு இறுதியில் செய்யத்திட்டமிட்டுள்ளதாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகளுக்கிடையில் "ஹெலிகாப்டர் மணி" எனப்படும் சொல் மிகப் பிரபலமாக நிதி சார்ந்த செய்திகளில் வலம் வருகிறது.

ஹெலிகாப்டர் மணியின் அர்த்தம் என்ன என்பதைத் தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.


ஹெலிகாப்டர் மணி (பணம்) என்றால் என்ன?
இந்த ஒரு சொல் பொருளாதார வல்லுனரான மில்டன் ஃப்ரீட்மென் என்பவரால் முதலில் உபயோகிக்கப்பட்டது. திடீரென ஹெலிகாப்டரிலிருந்து யாராவது பணத்தை வானத்திலிருந்து கீழே வீசினால் எப்படியிருக்குமோ அதைக் குறிக்கும் வகையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இது பொதுவாக வழக்கத்திற்கு மாறான மதிப்பிட முடியாத அளவிற்கு பணத்தை அச்சடித்து அதனை மக்களிடம் புழக்கத்தில் விட்டு அதன் மூலம் மங்கியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியைக் குறிக்கும். மந்தமான சூழலில் அவ்வாறு செய்வது பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிக்கும் எனக் கருதப்படுகிறது.


ஏன் இந்த ஹெலிகாப்டர் பணம் குறித்த கருத்து தற்போது முக்கியத்துவம் பெறுகிறது?
வளர்ச்சியடைந்த உலக சந்தைகள் குறிப்பாக ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் தங்கள் பொருளாதாரத்தை மிகவும் தளர்வான கொள்கைகள் மற்றும் வட்டிவிகிதங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஊக்குவிக்க படாதபாடு பட்டுவருகின்றன.

இதன் காரணமாக ஜப்பானில் தொடங்கி பிற உலக நிதிச் சந்தைகள் தங்களுடைய மத்திய வங்கிகள் மூலம் இந்த ஹெலிகாப்டர் பணக் கொள்கையை பின்பற்றத் திட்டமிட்டு தேவையை அதிகரிக்கவும் பணவீக்கத்தை உருவாக்கவும் முயன்று வருகின்றன.


பணவீக்கத்தை அதிகரிக்கவேண்டுமா? ஏங்க?
பணவீக்கக் குறைவு அல்லது விலைவாசி வீழ்ச்சி பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கக் கூடியது. எனவே விலைவாசி குறையும்போது நுகர்வோர் அல்லது வர்த்தகர்கள் தாம் வாங்கும் பொருள் மேலும் விலை குறையும் எனக் கருதி செலவு செய்யத் தயங்குவர்.

ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதனை தற்போது அனுபவித்து வருகின்றன. எனவே ஜப்பான் வங்கியும் ஐரோப்பிய மத்திய வங்கியும் இந்த நிலையை மாற்ற பல்வேறு உக்திகளைக் கையாண்டு வருகின்றன.

அப்ப பணத்தை அச்சடித்து விட்டு பணவீக்கத்தை உருவாக்க வேண்டியதுதானே?
பண்ணலாம். ஆனால் அதற்கே உண்டான மிகக் கடுமையான விளைவுகளைக் கொண்டது. இது கட்டுக்கடங்காத நிலையை ஒரு அரசிற்கு தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்யும். ஏனென்றால் பணவீக்கம் ஏற்பட்டால், அங்கே வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போக்கும் அதனால் கடன் மீதான செலவுகளும் அதிகரிக்கும்.. எனவே பணம் அதன் மதிப்பினை இழந்து வர்த்தகம் நிலைகுலைய நேரிடும்.


புள்ளிகளைத் தளர்த்துவதும் ஹெலிகாப்டர் பண முறையும் ஒன்றா?
குவான்டிடேடிவ் ஈசிங் அல்லது நிதிப் புள்ளிகளைத் தளர்த்தும் முறை மூலம் பணத்தை அச்சடித்து அதன் மூலம் அரசின் பத்திரங்களை வாங்குவதாகும். பெரும்பாலும் அரசின் நிதி நெருக்கடிகளை சரிக்கட்ட பணத்தை இவ்வாறு அச்சடித்தாலும் இதனை ஒரு ஹெலிகாப்டர் பண முறையாக அனைவரும் ஏற்பதில்லை.

இந்த முறையில் மத்திய வங்கி சில சொத்துக்களை வாங்கினாலும் அரசு அதற்குரிய தொகையை திருப்பிச் செலுத்தக் கடமை பட்டுள்ளது. எனினும் சில வல்லுனர்கள் ஹெலிகாப்டர் பணக் கொள்கையை ஜப்பான் போன்ற பணத்தொய்வுகளோடு போராடிவரும் நாடுகளின் கொள்கைகளோடு ஒப்பிடுகின்றனர்.

நன்றி குட்ரிட்டன்ஸ்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

புதன், 15 ஏப்ரல், 2020

லாக்டவுன்!!!*


லாக்டவுன்!!!*

ஆஸ்தான நடிகர்களின் அலப்பரை படங்கள் இல்லை, 1000 ரூபாய் டிக்கெட்டும் இல்லை, 300 ரூபாய் பாப்கார்னும் இல்லை

அன்பு ரசிகனின் காசை பறித்து சுகம்காணும் ஆண்டு விடுமுறையில் வரும் ஐபில் கிரிக்கெட் இல்லை, விளம்பர சப்தமும் டிவியில் இல்லை.

200 ரூபாய் பொருளை 2000த்திற்கு விற்கும் மால்கள் இல்லை

1000 ரூபாய்க்கு  ஸ்பெஷல் தாலி என்று தாலியறுக்கும் ஹைடெக் ஹோட்டல்கள் இல்லை

கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் கார்பரேட் மருத்துவமனைகள் எதுவும் இல்லை..

குடும்பங்களின் கூட்டை பிரிக்கும் டாஸ்மாக் மது பானங்கள் இல்லை

அழகு, கவர்ச்சி, அலங்காரம் என்று காசு பறிக்கும் அழகு நிலையங்கள் இல்லை

20000 ரூபாய்க்கு அந்தமான், 40000 ரூபாய்க்கு சிங்கப்பூர் என்கிற சுற்றுலா கொள்ளைகள் இல்லை

100 ரூபாய்க்கு சாதா, 300 கொடுத்தால் ஸ்பெஷல் சாதா வழி எனும் கோயில்களின் வாசல்கள் பக்தர்களுக்கு திறந்திருக்கவில்லை

பல லட்ச மண்டபம்,  பலப்பல லட்சம் பந்தி என்கிற தடபுடல் கல்யாண கலாட்டாக்கள் சுத்தமாய் இல்லை

பக்கத்து கடைக்கும் கோடிகள் மதிப்புள்ள காரில் போகும் திடீர்ப்பணக்காரர்கள் இம்சை அறவே இல்லை

மாலை நேர டீ, ரோட்டோர பஜ்ஜி, உறக்கம் வராத இரவுகளில் நடைப்பயணம் எதுவும் கொஞ்ச நாட்களாய் இல்லை.

பரபர வாழ்க்கையில்லை, பேருந்துகள், இரயில்கள் இல்லை, கூட்டமும் இல்லை, தேவையற்ற ஒலி மாசுமில்லை, சுற்று சூழல் பாதிப்புமில்லை, அன்றாட வேலைகளுமில்லை, அலுவலக விதிகளும் இல்லை.

ஆயினும்...

மக்கள் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், கிடைத்ததை வைத்து நேரத்தை ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!!!

இந்தியாவில் கொரோனா வைரஸை ஒழிக்கும் போராட்டத்தில் ஓய்வில்லாமல் 4 பெண் போராளிகள் உழைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸை ஒழிக்கும் போராட்டத்தில் ஓய்வில்லாமல் 4 பெண் போராளிகள் உழைத்து வருகிறார்கள்.

யார் அவர்கள்?

உலகம் முழுவதும் கொரோனை ஒழிக்க ஓய்வில்லாமல் சுகாதாரப் பணியாளர்களும் மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களும் சட்டம் ஒழுங்கை சரி செய்ய போலீஸாரும், நிர்வாகக் காரணங்களுக்காக மாவட்ட நிர்வாகமும், தூய்மை பணிகளுக்காக தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவை மொத்தமாக விரட்ட டாக்டர்க, ஐஏஎஸ் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் சிங்கம் போல் சோர்வின்றி பணியாற்றி வருகிறார்கள்.

 அவர்கள் யார் என்பதை பார்ப்போம்.

முதலில் அவர்களது அயராத உழைப்பிற்கு சல்யூட்.

போராளி1முதலில் *ப்ரீத்தி* சுதனை பற்றி பார்ப்போம். இவர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் செயலாளராக இருந்து வருகிறார். நோயை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கைகள் செயல்படுத்தும் குழுவில் இவர் முக்கிய நபராவார். இவர் 1983-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் பொருளாதாரத்தில் எம். பில் படித்துள்ளார். இவர் வாஷிங்டன்னில் உள்ள உலக வங்கியிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இவர் செயலாளராக உள்ள அமைச்சகம்தான் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான சவால்களை எதிர்க் கொள்ளும் முக்கிய அமைச்சகமாகும். இவர் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் பணியாற்றி வருகிறார். அது போல் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே துறை ரீதியில் பாலமாக இருந்து வருகிறார். வழக்கமாக கொரோனா குறித்த அப்டேட்டுகள் குறித்து தினந்தோறும் மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அது போல் பிரதமர் அலுவலகமோ மத்திய அமைச்சகமோ கொரோனா குறித்த தகவல்களை பெற வேண்டுமானால் முதலில் நாடுவது இவரைத்தான். எனவே இவர் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா குறித்த அனைத்து தகவல்களையும் எப்போது கேட்டாலும் அளிக்கும் அளவுக்கு தயார் நிலையில் இருப்பார்.

வுகான் மாகாணத்திலிருந்து 645 இந்திய மாணவர்களை மீட்டு தாயகம் கொண்டு வந்து சேர்த்தில் பெரும் பங்காற்றியுள்ளார்

போராளி 2 - அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது *நிவேதிதா குப்தாவை*. இவர் சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி பிரிவில் தொற்றுநோய் துறையின் தலைவராக உள்ளார். இந்தியாவில் கொரோனாவுக்கான சோதனை மற்றும் சிகிச்சை முறைகளை வகுப்பதுதான் இவரது முக்கிய பொறுப்பாகும். கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸால் பாதிக்கப்பட்டபோது நோயை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார். இவர் லேடி ஹார்டிஞ்ச் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். நாடு முழுவதும் கோவிட் 19 கண்டறியும் திறன்களை அதிகரிப்பதில் டாக்டர் குப்தா முக்கிய நபராவார். இவர் வெறும் 2 மாதங்களில் 130 -க்கும் மேற்பட்ட அரசு பரிசோதனைக் கூடங்களையும் 52 தனியார் பரிசோதனைக் கூடங்களை கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளித்தார். கடந்த ஆண்டு கேரளாவில் இரவு பகல் பாராமல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றி வந்தார். இத்தனைக்கு அந்த வைரஸ் கொரோனாவை போல் தொற்று நோய் அல்ல. இவர் மூலக்கூறு மருத்துவத்தில் பிஎச்டி முடித்துள்ளார். 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகம் நெட்வொர்க் தேசத்தின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் எல்லா பகுதிகளிலும் வைரஸைக் கண்டறியும் திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் டெங்கு, சிக்குன்குன்யா, ஜப்பான் என்செபாலிட்டீஸ், இன்ப்ளூயன்சா, ருபெல்லா, மீசல்ஸ் ஆகிய வைரஸ் நோய்கள் குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார்.

#போராளி 3 - அடுத்து நாம் பார்ப்பது *ரேணுஸ்வரூப்*. இவர் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள பயோ தொழில்நுட்பத்துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் அவுட்ஸ்டான்டிங் சையின்டிஸ்ட் என்பதை குறிக்கும் "எச்" பிரிவை வைத்துள்ளார். அந்த துறையின் செயலாளராக அனுமதிக்கப்பட்ட ஏப்ரல் 2018 வரை வைத்திருந்தார். இவர் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். கோவிட் 19 நோய்க்கான குறைந்த விலையிலான சோதனை கருவிகள் , வென்டிலேட்டர்களை உருவாக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் திறன்களை அதிகரித்து வருவதில் மும்முரமாக செயல்படுகிறார். இவர் ஜெனிட்டிக்ஸ் மற்றும் பிளாண்ட் பிரீடிங்கில் பிஎச்டி படித்துள்ளார். அறிவியல் துறையில் பெண்களை வளர்ச்சியை மேம்படுத்தியதில் ஸ்வரூப் பெயர் பெற்றவர். அறிவியலில் பெண்கள் டாஸ்க் போர்சின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த குழுதான் பிரதமருக்கு விஞ்ஞான ரீதியிலான ஆலோசனைகளை வழங்கும்.

#போராளி 4தற்போது 4 ஆவது சிங்க பெண்ணான *பிரியா* ஆப்ரகாம், இவர்தான் தற்போது நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுகிறார். அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் புனேவின் தேசிய வைரஸாலஜி நிறுவனத்தின் தலைவராவார். ஆரம்பத்தில் கோவிட் 19-க்கான ஒரே சோதனை மையமாக செயல்பட்டது இந்த மையம்தான். நாளுக்கு நாள் கோவிட் 19 நோயாளிகள் அதிகரித்த போது கோவிட் 19 நோயாளிகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யும் நேரத்தை 12 முதல் 14 மணி நேரமாக குறைத்து இந்த மையம் சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை புனே பரிசோதனை நிறுவனம்தான் முதலில் உறுதி செய்தது. ஆரம்பத்தில் இந்த மையம்தான் ரத்த மாதிரி சோதனை நடவடிக்கைகளை அதிகரித்தது. ஆனால் பின்னர் கொரோனா வைரஸ் பரிசோதனை கூடங்களை இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் அதிகரித்தது. பிரியா ஆப்ரகாமின் தலைமையின் கீழ் புதிதாக தொடங்கப்பட்ட கோவிட் 19 பரிசோதனை கூடங்களில் ஏற்படும் பிரச்சினைகள் களையப்படுகின்றன. புனே மையத்தில் செய்யப்பட்ட சாதனைகள், கொரோனா பாதிப்பு இருப்போரை கண்டறிதலில் இந்த நிறுவனத்திற்கு பெரும் பங்கு உண்டு என்றால் அது கடின உழைப்பு, குழுவினரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்துவிடாது. இவர் வேலூர் மாவட்டம் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் மருத்துவ மைக்ரோபயாலஜியின் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் அதே கல்லூயில் பிஎச்டியும் படித்தார். அவர் சிஎம்சியில் உள்ள வைரஸ் தொற்று துறையின் தலைவராக இருந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு எச்ஐவி, ஹெப்டைட்டீஸ் 2014-ஆம் ஆண்டு ஹெப்படைட்டீஸ் பி ஆகியவற்றை கட்டுப்படுத்த உலக சுகாதார மையத்தின் நெறிமுறைகளை பின்பற்றினார். தேசிய ஹெப்படைட்டீஸ் சோதனைக்கு நெறிமுறைகளை வகுக்க மியான்மரில்ஆலோசகராக இருந்தார்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

உலகை ஆளும் வைரஸ் மாவீரன் அலெக்சாண்டரையே ஆட்கொண்ட வைரஸ்


உலகை ஆளும் வைரஸ்  மாவீரன் அலெக்சாண்டரையே ஆட்கொண்ட வைரஸ்

மனிதனின் கண்ணுக்கு புலப்படாத, உயிரில்லாத ஒரு விடயம் இந்த உலகையே தன்  கைக்குள் வைத்து ஆட்டிப்படைக்கிறது. வரலாறுகளில் வருகின்ற மாவீரன் அலக்ஸ்சாண்டார் இந்த உலகையே தன் ஆக்கிரமிம்ப்புக்குள் வைத்துக்கொண்டு, தன்னை வெற்றிகொள்ள யாரும் இல்லை என்ற மமதையில் சுற்றிக்கொண்டிருந்த போது. அந்த பல பொருந்திய வீரனை அழித்த பெருமை இந்த வைரஸையே சாரும், அவன் அழியாமல் இருந்திருந்தால் இன்றைய உலக வரைப்படத்தில் இருக்கும் நாடுகளின் பல பெயர்கள் இருந்திருக்க வாய்ப்பே கிடையாது.

மனிதர்களுக்கும் இந்த கிருமிகளுக்கும் இடையிலான முடியாப்போர் ஆதிகாலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது, உலகில் இருக்கும் எல்லா உயிர்களையும் தாக்கும் திறமை இதற்குள்ளது என்றாலும் இது இந்த உலகில் தாக்கிய உயிரினங்களில் மனித உயிர்களே அதிகம். இயற்கை அனர்த்தம், யுத்தம், அரசியல் சதிகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பல கோடிகளை தாண்டினாலும், இந்த கிருமிகளால் ஏற்பட்ட மனித இழப்புகள் அவற்றை விட பல மடங்கு அதிகம்.

எகிப்துவில் இருக்கும் மம்மிகளை ஆராய்ச்சு செய்த நிறுவனங்கள் அந்த உடல்களில் (Variola) வெரியோல என்று சொல்லக்கூடிய ஒரு கிருமி தாக்கி இருப்பதன் ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளார்கள், இது 18 ஆம் நூற்றாண்டில் சுமார் 50 லட்சம் மக்களை வருடத்திற்கு கொன்றொழித்த "பெரிய அம்மை" என்று நாம் அழைக்கும் கிருமித் தாக்குதல் தான். 10 வருடங்களுக்கு பின்பு தான் இந்த பெரிய அம்மைக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதோடு, தடுப்பூசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. சுமார் பல லட்சம் உயிரிகளை 1970 முதல் 1990 வரை பாதுகாத்த இந்த தடுப்பூசிகள் ஒரு சில மக்கள் இயக்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கான போராட்டங்கள் மூலம் நிறுத்தப்பட்டதால் இன்று வரை அது உலகின் எதோ ஒரு மூலையில் மனிதர்களை கொலை செய்துகொண்டுதான் இருக்கிறது.

வைரஸ் என்று பேசும் போது "HIV" தவிர்க்க முடியாத ஒன்று, என்னதான் இந்த உலகம் தொழில்நுற்ப உலகில் வேகமாக வளர்ச்சியடைந்தாலும் இந்த வைரஸுக்கு எதிரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 273 நபர்களை கொலை செய்து கொண்டிருப்பதும் ஒரு வைரஸ் தான் என்பதை நாம் அடிக்கடி மறப்பதுண்டு.

பொதுவாக வைரஸ் தாக்குதல்கள் எல்லாமே ஆபிரிக்க நாடுகளில் இருந்து தான் ஆரம்பமாகிறது, இதற்குப்பின்னால் அமெரிக்காவின் சதி இருக்கலாம் என்ற ஒரு பாரிய சந்தேகம் கூட உலகில் இன்று வரை இருந்துகொண்டிருக்கிறது. வர்த்தகத்தில் வளர்ந்து வரும் மருத்துவ துறையில் அதிக இலாபத்தை ஈட்டுவதற்காக புதிய நோய்களை உருவாக்கி, அதன் பின் மருந்துகளை சந்தைக்கு கொண்டுவந்து அதனை விற்று இலாபகமாக்குவதற்கே இந்த நோய்கள் உருவாக்கப்ப்டுத்துவதாக பொதுவான சந்தேகம் ஒன்றும் இருக்கிறது. இவற்றையெல்லாம் தென் ஆபிரிக்கவை சேர்ந்த பிரதி ஜனாதிபதி தபோ எம்பாக்கி வெளிப்படையாக தெரிவித்ததும் வரலாற்றில் அப்படியே எழுதப்பட்டு இருக்கிறது. "

HIV வைரஸ் அமெரிக்காவின் CIA பிரிவினரால் உலகத்தின் ஜனத்தொகையை கட்டுப்படுத்த நடத்தப்படும் உயிரியல் யுத்தம்" என்று சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்ற கென்யாவை சேர்ந்த வென்கேரி மதாய் உலக அரங்கில் சொல்லியதும் அப்படியே காலப்போக்கில் காணாமல் போய்விட்டது.

இப்படி மனிதர்களை அழித்த வைரஸ்களின் வரிசையில் வருவது தான் இபோலா, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் தான் உலகிலேயே மிகப்பெரிய ஆட்கொல்லி என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லுகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நபர் வெறும் சில மாதங்களே வாழ்வர் என்றும், இதுவும் ஆப்பிரிக்காவில் கொங்கோ என்ற பிரதேசத்தில் தான் முதலில் பரவி இருக்கிறது. 1976 ஆம் ஆண்டில் இவர்ந்து சுமார் 20 முறை இந்த வைரஸ் ஆப்பிரிக்காவை தாக்கி இருக்கிறது. இதனால் கானா, கென்யா, எத்தியோப்பியா, கொங்கோ, உகாண்டா போன்ற நாடுகளில் இருந்த அரசுகள் ஆட்டம் கண்டம் இருக்கின்றன ஆனால் நைஜீரியா மட்டும் இந்த வைரஸ்சினை கட்டுப்பாட்டில் வைத்து சாதித்து காட்டியது.

அதன் பின் வெளியான இன்னொரு வைரஸ் தான் கிகா காடுகளில் இருந்து வெளியாகிய "கிகா வைரஸ்". குரங்குகளில் இருந்து கொசுக்களுக்கும், கொசுக்களில் இருந்து மனிதர்களுக்கும் பரவிய இந்த நோய் 1950 ஆன் ஆண்டில் இருந்து 10 வருடத்திற்கொரு முறை உலகை தாக்கிக்கொண்டே இருக்கிறது. 2007 மற்றும் 2013 ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் மனிதர்களை பிரேசில் மற்றும் தென் அமெரிக்காவைவில் தாக்கியது. இதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் ADS எனப்படும் கொசுக்களின் இருந்து பரவுவதால், அந்த கொசுக்களை அழித்து மனிதர்களை இந்த வைரஸில் இருந்து பாதுகாத்தது விஞ்ஞான உலகம்.

அடுத்து Influenza Virus, 1918 முதலாம் உலகப் போர் நடைப்பெற்ற காலத்தில் முழு ஐரோப்பாவையும் ஆட்டிப்படைத்தது. 50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதோடு, அதில் 5 கோடி மக்களை காவு கொண்டது. உலக மொத்த சனத்தொகையில் சுமார் 3%தை இந்த வைரஸ் தாக்கியது.

2013ல் ஆப்பிரிக்கா, அமெரிக்க, என 47 நாடுகளை தாக்கியது Yellow Fever. 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதோடு 60,000 மனிதர்கள் தன உயிரை இந்த வைரஸினால் இழந்தார்கள். தற்போது உகண்டாவில் மிக வேகமாக இந்த வைரஸ் இன்றும் பரவி வருகிறது.

இந்த பட்டியலில் தான் நம் ஊர் மக்களை தாக்கும் டெங்கு வைரஸும் வருகிறது, 800 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கில் இருந்து நுளம்புகளுக்கு பரவிய இந்த வைரஸ், காலப்போக்கில் நுளம்புகளில் இருந்து மனிதர்களுக்கு பரவ ஆரம்பித்தது. இப்படி பல வைரஸ் தாக்குதல்கள் இந்த உலகில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தன் யுத்தத்தை மக்களோடு தொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. அதிக உயிரிழப்புக்கள் வரும் போது அது பேசும் பொருளாக மாறி மறைந்துவிடுகிறது.

இப்படியான ஒரு வைரஸ் தான் இந்த கொரோனா வைரஸ், "யார் வல்லரசு?" என்ற சண்டையில் அமெரிக்காவோடு எப்போதும் முட்டிக்கொண்டிருக்கும் ஒரு நாடுதான் சீனா. அமெரிக்காவைப் போன்று உயிரியல் ஆயுதம் ஒன்றை சீனாவும் செய்ய முயற்சிப்பதாக பல செய்திகள் காலம் நெடுகிலும் கசிந்துவந்ததை நாம் அறிவோம். அப்படியான ஒரு உயிரியல் யுத்தம் செய்வதற்கான ஆயுதத்தை வுஹான் என்ற பிரதேசத்தில் தயாரித்து வந்ததாகவும், அதில் ஏற்பட்ட கோளாறு ஒன்றினால் இந்த வைரஸ் அவர்களது நாட்டையே தாக்கிவிட்டதாகவும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த டேனி ஸோஹம் விஞ்ஞானி தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தினாலும் "இந்த இஸ்ரேல் விஞ்ஞானியின் கருத்துக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறது" என்று சீனா கூறி இருக்கிறது.

எது எவ்வாறு இருந்தாலும் அமெரிக்காவோடு போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்துவந்த சீனா தேசத்துக்கு இது மிகப்பெரிய இழப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 6 நாட்களில் 1000 கட்டிகளை கொண்ட 25000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் மிகப்பெரிய ஒரு வைத்தியசாலையை சீனா கட்டியது மட்டுமல்லாமல், மிக வேகமாக வைரஸ் தாக்குதலில் இருந்து வெளியாகி வருவது சந்தோசமான விடயமும் கூட. எப்படியானாலும் இந்த கொரோனா வைரஸுக்கான மருந்தினை கண்டுபிடிக்க 6 மாதம் எடுக்கலாம் என்று ரஷ்யா நாடு  சொல்லி இருப்பது வேதனையளிக்கிறது.

சுமார் 2 வருடங்களுக்கு முன்னால் பில் கேட்ஸ் ஒரு மருத்துவ கருத்தரங்களில் இவ்வாறான வைரஸ் ஒன்று உலகை தாக்கும் என்றும், அது முதல் 6 மாதத்தில் சுமார் 3 கோடி மக்களை காவு கொள்ளும் என்றும், அது 3ஆம் உலக யுத்தத்திற்கு ஒரு காரணமாய் அமையும் என்றும் கூறியது உலக அரங்கில் ஞாபகப்படுத்தப்படும் ஒரு உரையாக இருக்கிறது.

இந்த வைரஸ் தாக்கும் அத்தனை உயிர்களுக்கும் வாழ்க்கை என்ற ஒன்று உள்ளது, அவற்றுக்காக கவலைப்படுவோம். குறிப்பாக பாதிக்கப்படும் மனிதர்களுக்காக்க பிரார்த்தனை செய்வோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் அத்தனை போரையும், மற்றும் எங்களையும் இறைவன் இவ்வாறான வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பானாக.

இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த நேரு இந்தியாவுக்கு செய்த தியாகங்கள்.

இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த நேரு இந்தியாவுக்கு செய்த தியாகங்கள்.

அடப்பாவி கைலாயத்தையே புல் பூண்டு முளைக்காத இடம்முன்னு சீனாவிற்கு விட்டு கொடுத்தியே
அந்த பாவத்திற்கு தாண்டாத உன் பரம்பரையே அழிஞ்சு.

1) ஓமன் நாட்டு சுல்தானாக இருந்த சையது பின் தைமூர் 1950 ல் குவாதார் துறைமுகத்தை இந்தியாவிற்க்க கொடுக்க முன்வந்தார். நேரு வேண்டாமென்று மறுத்துவிட்டார் அதை அந்த சுல்தான் பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டார்.

பாகிஸ்தான் சீனாவுக்கு தானமாக கொடுத்துவிட்டது. தற்போது சீனா அவ்விடத்தில் இராணுவ கப்பல்ப்படை தளத்தை ஏற்படுத்தி தெற்காசிய நாடுகளை கண்காணிக்கிறது.

2) தற்போதைய தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தை நேரு பாகிஸ்தானுக்கு தாரைவார்க்க முன்வந்தார். ஆனால் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் நேருவோடு தெரிவிக்காமலேயே ஹைதரபாத்தை மீட்டு இந்தியோவோடு இணைத்தார்.

3 )1947ல் இந்தியா சுதந்திரம் அடைநதபோது நேபாள் பிரதம மந்திரியாக இருந்த பிரசாத் கொய்ராலா மீண்டும் நேப்பாளத்தை இந்தியாவோடு இணைக்க முன்வந்தார. ஆனால் நேரு ஏற்கவில்லை. இவ்வி்தம் நேப்பாளத்தை இழந்தோம்.

4) இன்று பாகிஸ்தானிடம் இருக்கும் இந்திய எல்லையை ஒட்டிய பலூசிஸ்தான் 1947ல் அதன் பிரதமர் அகமது பலோச் அகிரிமென்டின் படி இந்தியாவோடு இணைக்க முன்வந்தார்.

நேரு அதை பாதுகாக்க நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மெத்தனமாக இருந்ததால் பாகிஸ்தான் படையெடுத்து பலூசிஸ்தானை தன் நாட்டோடு இணைத்துக்கொண்டது.இங்ஙனம் பலூசிஸ்தானை இழந்தோம்.

5) கிபி 1950ல் அமெரிக்கா இந்தியாவை ஐக்கிய நாட்டு சபையின் நிரந்தர உறப்பினராக நியமிக்க முன்வந்தது. ஆனால் நேரு ரஷ்யாவோடு கொண்ட நெருக்கத்தால் இதை நிராகரித்தார்.

6) 1955ல் இந்தியாவை ரஷியா, யுஎன் செக்யூரிட்டி கவுன்சில் நிரந்தர உறுப்பினராக நியமிக்க முன்வந்தது. இதையையும் நேரு நிராகரித்தார்.

7) நேரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வேலி யின் 11000 சதுர கிலோமீட்டர் இடத்தை பர்மாவுக்கு தானமாக அளித்தார்.

8 ) நேரு கோக்கோ பனித்தீவை பர்மாவுக்கு தானமாக கொடுத்தார். பர்மா அதை சீனாவிடம் ஒப்படைத்தது. தற்போது இவ்விடத்தில் சீனா பிரம்மாண்டமான இராணுவதளம் அமைத்து இந்தியாவை கண்காணி்க்கிறது.

9) 1962ல் சைனா கிழக்கு இநதியா மீது படையெடுத்து 40000 க்கிற்க்கும் மேலான அஸ்ஸாம், மணிப்பூர்,திரிபுரா, அருணாசல பிரதேசம், மிசோரம், நாலாந்து பிரதேச பொதுமக்கள் சீனாவால் கொல்லப்பட்டனர்.

நேரு நமது இராணுவ படைகளை அனுப்பி அவர்களை பாதுகாக்கவில்லை. அதனால் அம்மக்கள் மொத்தமாக தேசத்தை நம்பாமல் தங்களை பாதுக்க போடோ, உல்பா போன்ற தனி இராணுவ அமைப்புகளை ஏறபடுத்தினர்.

அந்த அமைப்புகளை தடை செய்து தீவிரவாத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்பினரை நமது இராணுவம் மூலமே அழித்தார் நேரு. வடகிழக்கு மாநிலங்களில் இன்றுவரை நிலவும் ஒருவித பதற்றத்திற்க்கு அன்று அடித்தளமிட்டவர் நேரு.

10) 1962ல் சைனா இந்தியா மீது படையெடுத்து இமையமலையை கைலாயம், மானசோரவர் உட்பட பல பகுதிகளை அவர்களுக்காக்கிக் கொண்டதோடு. கிட்டத்தட்ட தமிழக மொத்த நிலப்பரப்பு அளவு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

அவையெல்லாம் புல் பூண்டு கூட முளைக்காத ஒன்றுக்கும் உதவாத நிலம் போனால் போகட்டும் என்று பாராளுமன்றத்திலேயே அறிவித்தார்.

11)நேருவின் மகள் இந்திரா தமிழகத்தின் கசசத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார்.

இவ்வளவு தான் என்றில்லை. இன்னும் ஏகப்பட்ட படுபாதகங்களை எல்லாம் இவர்கள் செய்துவிட்டு இன்று நரேந்திர மோடி நாட்டை விற்க்கிறார் என்று நேரு வாரிசு ராகுல் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் பேசி வருகிறார் இளவரசர் ராகுல்.

 மக்களின் மறதி மற்றும் கடந்த கால அவலங்களை நினைவில் கொள்ளாமல்/தெரிந்து கொள்ளாமல் இருப்பதே ராகுலின் இதுப்போன்ற தைரியமாக பொய் பேசும் துணிச்சலுக்கு காரணம்.

திங்கள், 13 ஏப்ரல், 2020

இதோ இரட்சகர் பிறந்தார்!


இதோ இரட்சகர் பிறந்தார்!

இந்திய குடியரசு தந்தை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129-வது பிறந்தநாள் இன்று (14-ஏப்ரல்) !

ஜெய்பீம்...
   அனைவருக்கும் வணக்கம். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129-வது பிறந்தநாள்  நல்வாழ்த்துக்கள்!

 ஏப்ரல் 14-ம் தேதி என்றாலே இந்தியர்கள் நமக்கு ஒரு உற்சாகமான நாள்.
"உயிர் கொடுத்தது தாய்; மனிதன் என்கிற பெருமைமிகு உணர்வைக்கொடுத்தது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்!"
இந்த நாளை  அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கின்றோம்.
கொரோனா கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் மனிதகுலம்  போராடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நாமும் கொரானாவுக்கெதிராக யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த தொற்றுநோய் பரவாமல் தடுப்பதில் நாம் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

நம் இரட்சகரான பாபாசாகேப்பின் 129 - வது பிறந்தநாளில் அவரின் தியாகத்தையும் மனிதகுலத்திற்கு அவர் ஆற்றியுள்ள பணிகளையும் நினைவுக்கூர்ந்து நம் நன்றியை செலுத்தும் வகையில் 14.04.2020 அன்று  நம் வீட்டில் மெழுகுவர்த்திகள் மற்றும் எண்ணெய் விளக்குகளை ஏற்றி ஒளிமயமாக்குவோம்.
மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் மற்றும் நடைமுறையிலுள்ள எந்த தடை உத்தரவுகளையும் மீறாமல்
இதை பின்பற்றுவதன் மூலம், இருளில் இருந்த நம்மை மீட்டு நம் வாழ்வில் ஒளியேற்றிய அந்த தியாகத்தலைவரின் ஆளுமை மற்றும் அறிவை போற்றும் வகையில்  நம் நன்றியைக் காட்ட இது மிகச்சிறந்த வழியாக இருக்கும்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ஆளுமைகளையும், அறிவாற்றலையும், அனைத்து மக்களின் மேம்பாட்டிற்காகவும் அவர் ஆற்றியுள்ள அரும்பணிகளை நாம் மட்டுமின்றி நம் குழந்தைகளுக்கும் அந்த செய்திகளை கொண்டு செல்ல வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை அண்ணலின் பிறந்தநாளை KNOWLEDGE DAY - ஆக அனுசரித்து விழா எடுக்கிறது; கனடா நாட்டில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை  "Dr. B.R. Ambedkar Day of Equality - டாக்டர் அம்பேத்கர் சமத்துவ தினமாக" அங்கீகரித்து விழா எடுக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தலைவர் முதல் அனைத்து இந்திய மக்களும் இந்த நாளை கொண்டாடி இந்த மாபெரும் தலைவருக்கு தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.

உலகில் வேறு எந்த தலைவருக்கும் இத்தகைய பெருமையும் சிறப்பும் நாம் கேள்விப்பட்டு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.
உலகம் இவரை இந்தளவிற்கு கொண்டாடுவதற்கான காரணம் இவர் ஒருவரின் பிறப்பு பலக்கோடி மக்களின் அடிமைச்சங்கிலியை உடைத்து, தலைமுறை தலைமுறையாக தங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த இழிவு நீங்கி தாங்களும் மனிதர்கள் என்கிற உணர்வை பெற்றிருக்கின்றனர் என்பது தான்.
 
  "மனித இனத்தின் மாண்பை மீட்க போராடிய உலக புரட்சியாளர்களில் முதன்மையானவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். பலக்கோடி மக்களின் இழிவை போக்கியுள்ளது இந்த உயர்ந்த மனிதரின் பிறப்பு.
சமத்துவம் என்கிற கோட்பாட்டை கொண்டிராத இந்த தேசம் இவர் எழுதிய அரசியல் சாசனம் மூலம் தான் "ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்" ஆகிய உயரிய தத்துவங்கள் மீது எழும்பி நிற்கின்றது.  உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என பெருமை பெறுகின்றது; இன்று தேசம் உலகளவில் வல்லரசாக உயர்ந்து நிற்கிறது!
 இந்த தேசத்தின் சாபக்கேடான சாதியத்தையும் அதன் செல்லக்குழந்தையான தீண்டாமையையும் கருவறுக்க பிறந்த சமத்துவ தலைவர் இவர்"

இந்திய மக்கள் அனைவருக்குமான அவரது பணிகள் சில...

1. குடியரசின் ஆணிவேரான வாக்குரிமை :
பட்டதாரிகளுக்கும், பட்டா உள்ளவர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று இருந்த நிலையை மாற்றி... வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பதை உறுதி படுத்தினார்.  இந்தியாவை உண்மையான ஜனநாயக குடியரசாக உருமாற்றினார்.

2. சட்டத்தின் முன் அனைவரும் சமம்: சாதிக்கு ஒரு நீதி  வகுப்புக்கொரு சட்டம் என இருந்த மனுஸ்மிருதியை தீயிட்டு கொளுத்திய இவரே, "ஒரு மனிதன்-ஒரு வாக்கு-ஒரு மதிப்பு" என்று இந்திய வரலாற்றில் முதன்முதலாக சட்டம் இயற்றினார். இந்தியர்கள் அனைவரும் "இது என் நாடு; நானும் அனைத்து உரிமைகளையும் பெற்றவன்; நானும் இந்நாட்டை ஆட்சி செய்யமுடியும்" என்கிற உணர்வை பாபாசாகேப் வரைந்தளித்துள்ள நம் அரசியல் சாசனம் தருகின்றது. இத்தகைய சுதந்திர உணர்வை இந்திய அரசியல் சாசனம் வருவதற்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் அனுபவித்திருப்பார்களா?

3. இட ஒதுக்கீடு : சமத்துவமற்ற சாதிய சமூகத்தில் அனைத்து மக்களும் சமத்துவம் பெற... கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றி இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பலன் பெற செய்தார். குறிப்பாக காலங்காலமாக பிறப்பின் அடிப்படையில் அனைத்து வாழ்வாதாரங்களும் மறுக்கப்பட்ட OBC, SC & ST பிரிவினர் அதன் மூலம் அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் பெற வழிவகை செய்துள்ளார். இத்தகைய ஒரு நிலைமை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வரைந்தளித்த இந்த அரசியல் சாசனம் வருவதற்கு முன்பிருந்த நம் முன்னோர்கள் பெற்றிருந்தனரா?

4. பெண் உரிமை : ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, ஆணுக்கு சமமான ஊதியம்,  பல்வேறு குழுக்களில் மகளிர்க்கான பிரதிநிதித்துவம்  என பல சட்டங்களை இயற்றினார்.  பின்னாளில்... பெண் மறுமணம், பெண் வாரிசு உரிமை, விவாகரத்து உரிமை மற்றும் அதில் வாழ்வாதாரம் பெறும் உரிமை, சொத்துரிமை ஆக பெண் உரிமைக்கான முழுமையான சட்டத்தை அவர் கொண்டு வந்தபோது (Hindu code bill) அதனை அன்றைய பிற்போக்குவாதிகள் ஏற்காததால்... தன்னுடைய இந்திய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அப்பழுக்கற்ற அரசியல் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். பெண்களுக்கு இன்று கிடைத்திருக்கிற சமத்துவம், சுதந்திரம், முன்னேற்றம் இவற்றிற்கான காரணகர்த்தா டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தானே? அந்த மனித தெய்வத்தை எத்தனை பெண்கள் நினைத்துப்பார்க்கின்றனர்?

5. தொழிலாளர் நலம் : எட்டு மணி நேர வேலை, முத்தரப்பு பேச்சுவார்த்தை, அகவிலைப்படி, போனஸ், மருத்துவ காப்பீடு, வேலைவாய்ப்பு மையம், தொழிற்சங்க அங்கீகார உரிமை போன்றவைகளை சட்டமாக்கினார். இந்த உரிமைகள் பெற்றுத்தந்த அந்த மாபெரும் தலைவரை எத்தனை தொழிற்சங்கங்கள் நன்றியுடன் கொண்டாடுகின்றன?

6. பொருளாதாரம் : ரிசர்வ் வங்கி தோற்றுவிக்க காரணமாக இருந்தார், இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய ருபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து... புதியதாக அச்சடிக்கவேண்டும் என்பதை முன் மொழிந்தார். நோபல் பரிசுப்பெற்ற திரு.அம்ரித்யாசென் தம் "பொருளாதார தந்தை டாக்டர் அம்பேத்கர்" என போற்றி புகழ்ந்தார். அமெரிக்காவில் பொருளாதாரத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆசியர் என்கிற பெருமைக்குரியவர் பாபாசாகேப் அவர்களே!

7. தேசிய ஆணையங்கள் : தேர்தல் ஆணையம், மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், தேசிய நதிநீர் ஆணையம், மின்சார ஆணையம் அமைந்திட திட்டம் தந்து சட்டம் இயற்றிட்ட திறமையான தீர்க்கதரிசி இவர் என்பது எத்தனைப்பேர் அறிவர்?

8. நதி நீர் இணைப்பு : நதிகள் தேசியமயம், நதி நீர் இணைப்பு ஆகிய திட்டங்களை முன் வைத்தார். அணைகள் மற்றும் பல்நோக்கு திட்டங்களை (பக்ராநங்கல், ஹீராகுட், தாமோதர் பள்ளதாக்கு) தோற்றுவித்தவர். இன்று நதிநீர் இணைப்பு, நீர்மேலாண்மை பேசும் எத்தனைப்பேருக்கு இவை தெரியும்?

9. தேசிய கொடியில் 'தம்ம சக்கரத்தை' இடம்பெற செய்ததன் மூலம் உலக அளவில் இந்தியா அகிம்சை தேசம் என்கிற நல்லெண்ணத்தை விதைத்த "மகத் சத்தியாகிரக" வீரர் இவர்.

10. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் ஆசியர்; குறுகிய காலத்தில் (ஆறு வருடங்கள்) MA, MSc, Ph.D, D.Sc, Bar-at-Law-Law & Course in Sanskrit என உலகின் மூன்று முன்ணணி பல்கலை கழகங்களில் பட்டங்கள் பெற்ற உலகின் உன்னத கல்வியாளர். D.Litt மற்றும் LL.D ஆகிய கௌரவ டாக்டர் பட்டங்களை உலகின் சிறந்த பல்கலைகழகங்கள் அவருக்களித்து பெருமை அடைந்திருக்கின்றன.

11."மக்கள் கல்வி கழகம்" என்ற பெயரில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி ஏழை எளியோருக்கு கல்விசெல்வம் தந்த தன்னிகரில்லா தேசிய தலைவர்.

12. தொழிலாளர் பெயரில் இந்தியாவில் முதன் முதலில் "சுதந்திர தொழிலாளர் கட்சியை" தோற்றுவித்து உழைக்கும் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்கள் நடத்திய உத்தமர்.

13. பல அறிவுப்பூர்வமான புத்தகங்கள் எழுதிய பேரறிவாளர். நான்கு வார/மாத இதழ்களின் ஆசிரியர்.

14. இலண்டனில் நடந்த மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் கலந்துக்கொண்ட இந்தியாவின் ஒப்பற்ற தேசிய தலைவர். இந்தியாவின் பிரச்சனைக்கு தீர்வு இந்த மூவரின் கைகளில் தான் உள்ளது என பிரிட்டிஷாரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்: காந்தி ஜி, முகமது அலி ஜின்னா மற்றும்  டாக்டர் அம்பேத்கர்.

15.The greatest Indian- னாக "Out Look" magazine, "CNN-IBN" & "History Channel" ஆகிய ஊடகங்கள் மூலம் மக்களாலும் அறிஞர்களாலும் தெரிவு செய்யப்பட்டவர்.
16. உலகின் ஆறு முன்ணணி அறிவாளிகளில் ஒருவராக பெருமைப்படுத்தப்படுபவர்.
17. இருநூற்றைம்பது ஆண்டுகளில் மனிதகுலத்திற்கு சிறப்பான பணியாற்றியவர்களில் முதன்மையானவராக  அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.

சிறந்த கல்வியாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் மீட்பராக, சிறந்த எழுத்தாளராக, பொருளாதார நிபுணராக, சட்டமேதையாக, பேராசிரியராக, இந்திய அரசியல் அமைப்பு சட்ட சிற்பியாக, பல்நோக்கு திட்டம் வகுத்த பொறியியல் வல்லுனராக, மனிதகுலத்தின் மிகப்பெரிய மனித உரிமை போராளியாக, பெண்ணுரிமை சிந்தனையாளராக, புத்தமத்தை இந்தியாவில் புனரமைத்த போதிசத்துவராக, "புத்தமும் அவர் தம்மமும்" வழங்கிய மெய்ஞானியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தன்னிகரில்லா தேசிய தலைவராக என பன்முக ஆளுமைக்கொண்ட மாமனிதர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள்.
இத்தகைய பெரும் சிறப்புக்களை பெற்ற பெருமகனார் உலகில் எவர் உளர்?
மக்கள் அனைவருக்குமான அந்த சமத்துவ தலைவரை வெறும் "தலித் தலைவர்" என சுருக்க நினைக்கும் சிறுமதியினர் என்றைக்கு அறியாமையிலிருந்து வெளிவந்து தங்களுக்கு ஒளி தரும் இந்த அப்பழுக்கற்ற சூரியனை உணரப்போகிறார்கள்.

இந்த பொன்னான நாளில் இந்திய குடியரசு தந்தை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.
HAPPY Dr.Babasaheb Ambedkar Jayanthi!
LONG LIVE HIS GLORIOUS LEGACY!
Jai Bhim. Jai Bharat!
ஜெய் பீம்.

அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?


அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்.
– டாக்டர் அம்பேத்கர்.

”அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டால், பெருவாரியான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்பதாகத்தான்


இருக்கும். ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது. காரல் மார்க்சுக்கும் அம்பேத்கருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் தங்கள் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நூலகங்களில் செலவழித்தவர்கள். மனித சமூகத்தின் மேம்பாடு குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே தங்கள் குழந்தைகளை வறுமையின் காரணமாக பலி கொடுத்தவர்கள். அம்பேத்கர் வெறுமனே சட்ட மேதையோ, தலித் தலைவரோ மட்டும் அல்ல. அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், சட்டம், பொருளாதாரம் என மனித அறிவு சாதித்த துறைகளில் பெரும்பாலானவை குறித்த விரிவான வாசிப்பும் அறிதலும் கொண்டவர். அவருடைய டாக்டர் பட்ட ஆய்வு, ரூபாய் குறித்தது என்பதும் ரிசர்வ் வங்கியை உருவாக்கியதில் முக்கியமான பங்கு அம்பேத்கருடையது என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?.

ஆனால் அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார். முன்பே சொன்னதுபோல் காரல் மார்க்ஸுக்கும் அம்பேத்கருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, வரலாறு குறித்த புதிய பார்வைகளை உருவாக்கியது மனித குல வரலாற்றை வர்க்கங்களின் வரலாறாக வாசித்து, மக்கள் முன் அளித்தவர் மார்க்ஸ். இந்தியாவின் வரலாறு எப்படி பெளத்தத்துக்கும் பார்ப்பனியத்துக்குமான போராட்டமாக இருந்தது, சாதி என்ற காரணி எப்படி இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தது என்று விரிவாக ஆராய்ந்தவர் அம்பேத்கர்.


அவர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது, பெளத்தத்தைத் தழுவுவது என்று எடுத்த முடிவு உணர்ச்சிவசப்பட்ட முடிவு அல்ல. பல ஆண்டுகாலமாக வரலாற்றை ஆராய்ந்தபிறகே அவர் அப்படியான முடிவுக்கு வந்தார். பிரெஞ்சுப்புரட்சி மானுடச் சமூகத்துக்கு அளித்த நவீன சிந்தனைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அளவுகோலைக்கொண்டு இந்து மதத்தைப் பரிசோதித்தார். ''உலகில் உள்ள எல்லா மதங்களும் ‘இறைவன் மனிதனைப் படைத்தார்’ என்று சொல்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டும்தான் இறைவன் ஒரு மனிதனை முகத்தில் இருந்தும் இன்னொரு மனிதனைக் காலில் இருந்தும் படைத்தார்’ என்று சொல்கிறது” என்று தன் விமர்சனத்தை முன்வைத்தார். இந்து மதத்தில் உள்ள சாதியமைப்பு பிரமிட் முக்கோண அமைப்பில் இருக்கிறது என்று சொன்ன அம்பேத்கர், ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதியமைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்வதைக் கண்டுபிடித்துச் சொன்னார். ''இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிக்காரனும் இன்னொரு சாதிக்காரனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்பது போன்ற விதிமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது” என்றார்.

“இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு வர்ணமும் பல மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு போலத்தான். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குச் செல்வதற்கு என்று எந்தப் படிகளும் கிடையாது” என்றார். அதனாலேயே “ஓர் ஆதிக்கச்சாதியில் பிறப்பவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவைக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டியாவதற்கான வாய்ப்பைத்தான் கொண்டிருக்கிறான்” என்றார். இத்தகைய இழிநிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?




''மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா? சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாயமாய் இருக்கலாம். ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்த அளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் முதல் இரண்டு விஷயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லாமலே நடத்தினால் என்ன ஆகும்? பிறப்பு, கல்வி, குடும்பப் பெயர், தொழில்-வணிகத் தொடர்புகள், பரம்பரைச் சொத்து ஆகியவை சாதகமாக உள்ளவர்களே வாழ்க்கைப் போட்டியில் தேர்வு பெறுவார்கள்” என்றார்.

எனவே கல்வி, அரசியல் அதிகாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் காலங்காலமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்க வேண்டும் என்றார். அதனாலேயே இட ஒதுக்கீட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையையும் முன்வைத்தார். ஆனால் அதே சமகாலத்தில் வாழ்ந்த காந்தி என்ற இன்னொரு ஆளுமையை எதிர்க்க வேண்டிய வரலாற்று அவசியம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. பூனா ஒப்பந்தம் நிறைவேறியது. அதற்குப் பிறகு இறுதிவரை அம்பேத்கர் காந்தியைக் கடுமையாக விமர்சித்தார். காந்தி மிகப்பெரிய புனித பிம்பமாக நிலைத்து நின்ற காலத்தில் அம்பேத்கர் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஏனென்றால் அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதாக இருந்தால்,  ''அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்”




தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கு அம்பேத்கர் நம்பிய சில வழிகள் கல்வி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், சமவாய்ப்புகளை உருவாக்குதல், மதமாற்றம் ஆகியன. அவர் ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்று சொன்னதில் உள்ள கல்வி என்பது வெறுமனே பொருளாதார ரீதியாக உயர்வதற்கான, வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் கல்வி மட்டுமில்லை. அரசியல் கல்வியை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். “ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான்” என்றார். இந்தியச் சாதியமைப்பின் மிகப்பெரிய பலமே அது கருத்தியல் வன்முறையைக் கொண்டிருப்பதுதான். நேரடியான வன்முறையைக் கொண்டு சாதி நிறுவப்படவில்லை. “தான் இழிவானவன், அடிமை” என்பதை அவர்களே ஒப்புக்கொள்ள வைப்பதில்தான் சாதியின் தந்திரம் அடங்கியிருக்கிறது.

பெண்களும் இப்படித்தான். “ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்” என்பதைப் பெரும்பாலான பெண்களே ஒப்புக்கொள்வதில்லை. இந்த வகையில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றுதான். இதை உணர்ந்துகொண்ட அம்பேத்கர் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், விதவைத் திருமண மறுப்பு, குழந்தைத் திருமணம் ஆகிய பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் சாதி, தீண்டாமை ஆகியவற்றுக்கு உள்ள உறவு குறித்தும் விரிவாக ஆராய்ந்து எழுதினார். நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது அம்பேத்கர் கொண்டுவந்த ‘இந்து சட்ட மசோதா’வில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸில் இருந்த சனாதனிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா நிறைவேறாமல் போனது. அம்பேத்கரும் பதவி விலகினார். பதவி விலகியபோது அம்பேத்கர் ஆற்றிய உரை, அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.

அம்பேத்கர் ‘ஜனநாயகம்’ என்ற அம்சத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியலில் மட்டும் ஜனநாயகம் இருந்தால் போதாது, சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். சுருக்கமாகச் சொன்னால் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.

அம்பேத்கரை நினைவு கூர்வது என்பது நம் மனசாட்சியை நாமே பரிசீலிப்பதுதான்.கட்டுரை- சுகுணாதிவாகர்.
நன்றி விகடன்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

8 மணி நேர வேலை, தாமோதர் அணை: வெளிச்சத்துக்கு வராத அம்பேத்கரின் பணிகள் - சிறப்புக் கட்டுரை


8 மணி நேர வேலை, தாமோதர் அணை: வெளிச்சத்துக்கு வராத அம்பேத்கரின் பணிகள் - சிறப்புக் கட்டுரை-ஆதவன் தீட்சண்யா
சமூக செயற்பாட்டாளர்.

தலித்துகளின் விடுதலைக்குப் பாடுபட்டவர், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தவர். இவை இரண்டும்தான் அதிகம் அறியப்பட்ட அம்பேத்கரின் இரண்டு பக்கங்கள். இவை அம்பேத்கரின் முக்கியமான பங்களிப்புகள் என்பதில் ஐயமில்லை.

ஆனால், அவரது பணிகளும், வாழ்வும் மேலும் பல பரிமாணங்களை கொண்டவை. அமைச்சராக இருந்து பிரம்மாண்ட நீராதாரத் திட்டங்களை வகுத்தது, நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக இன்றும் பொருந்தும் கருத்துகளை வலியுறுத்தியது முதல் எட்டு மணி நேர வேலை உரிமை இந்தியாவில் அமலாகக் காரணமாக இருந்தது வரை பரந்த சமூகம் பலன்பெற அவர் செய்தவை பல. அவரது பிறந்த நாளை ஒட்டி அந்தப் பணிகளைப் பற்றிய ஒரு பார்வை.

அம்பேத்கர்
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை, அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கு அம்பேத்கரின், அம்பேத்கரியத்தின் பங்களிப்பு என்ன?

சாதியோ பொருளாதார நிலையோ ஒருவரின் கற்கும் ஆர்வத்தையும் அறிவார்ந்த சாதனைகளையும் தடுத்துவிட முடியாது என்கிற மிகப்பெரும் நம்பிக்கையே அவரது வாழ்க்கை நமக்குத் தரும் முதற் பெரும் செய்தி. தனித்த திறமைகளையும் கல்வியறிவையும் சுயநலத்திற்காக அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடவும் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்காக சிந்திக்கவும் அர்ப்பணிப்பது என்பது இதேயளவுக்கு போற்றத்தக்க மற்றுமொரு செய்தி.

Image copyright AADAVAN DEETCHANYA ஆதவன் தீட்சன்யா
Image caption ஆதவன் தீட்சன்யா
கல்வியாளராக, பொருளாதார நிபுணராக, தத்துவவாதியாக, வரலாற்றாளராக, அரசியல் செயற்பாட்டாளராக, தொழிலாளர்- பாசனம்- மின்சாரத்துறை அமைச்சராக, சட்ட அமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் தாக்கம் செலுத்தியவை.

வயது வந்தோர் அனைவருக்கும் இன்றுள்ள வாக்குரிமை அவர் எழுப்பிய கோரிக்கையே. நிர்வாகத்துறையை ஜனநாயகப்படுத்த அவர் பட்டியல் சாதியினருக்கு கோரிய பிரதிநிதித்துவம் தான் அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. பின்னாளில் பிற்படுத்தப்பட்டோரும் பெண்களும் அத்தகைய பிரதிநிதித்துவத்தைப் பெறவும் இதுவே வழிகோலியது.

அரசுப் பணியாளர்களை தேர்வு செய்வதில் நீடித்துவந்த பிராமண ஏகபோகத்தையும் சாய்மானங்களையும் முடிவுக்கு கொண்டுவர அவர் வைத்த முன்மொழிவிலிருந்தே பின்னாளில் அரசுப் பணியாளர் தேர்வாணையங்களும் வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகங்களும். மத்திய மாநில அரசுகளுக்கென தனித்தனி நிர்வாக அதிகாரிகள் தொகுப்புகளும் உருவாகின.

எட்டு மணி நேர வேலை

இன்றைக்கு மாநில குரூப்1, குரூப்2 என்று அதிகாரிகள் தேர்வாவதற்கு அவரே அடிப்படை. தொழிலாளர் துறை அமைச்சர் என்கிற முறையில் 1942 நவம்பர் 27 ஆம் நாள் அவர் கூட்டிய ஏழாவது இந்திய தொழிலாளர் மாநாட்டில்தான் வேலைநாள் என்பது எட்டுமணி நேரம் என்கிற மகத்தான முடிவினை அறிவித்தார் அம்பேத்கர்.

தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம், அகவிலைப்படி அறிமுகம், ஆழ்துளைச் சுரங்கங்களில் பெண் தொழிலாளர்களை பணி செய்ய வைப்பதற்கு தடை, மகப்பேறு விடுப்பு என தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல்வேறு உரிமைகள் அவர் வழியாக வந்தவையே.

பொதுநிதி, வங்கித்துறை சீர்திருத்தங்கள் பற்றிய சமீபத்திய விவாதங்களில் அம்பேத்கரின் வழிகாட்டுதல் போற்றப்படுகிறது. ரிசர்வ் வங்கி உருவாக்கம் அவரது சிந்தனைக்குழந்தை தான் எனப்படுகிறது. இன்சூரன்ஸ் அரசுடைமையாக்கம், மத்திய மின்தொகுப்பு, சுரங்கங்கள் மீதான அரசுரிமை, தொழில் மயமாக்கம் என்று தேசிய கட்டுமானத்தில் அவரது பங்களிப்பு எல்லையற்று விரிகிறது.

தண்ணீர் உரிமை
அம்பேத்கர் தன் சிறுவயதில் தந்தையைக் காணச்சென்ற வழியில், தீண்டாமைக்கு இலக்கான காரணத்தினால், தாகத்தில் தவித்த அவரது வாய்க்கு யாரும் தண்ணீர் தர மறுத்த ஒரு நிகழ்வு நடந்தது. இதையடுத்து, மாடுகளும் எருமைகளும் புரண்டு கலக்கிய குட்டையில் தண்ணீர் குடிக்க நேர்ந்த கொடிய அனுபவம் அவருக்கு நேர்ந்தது.

அவர் படித்து பாரிஸ்டராகி திரும்பிய பின்னும்கூட அலுவலகத்தில் பொதுப் பயன்பாட்டுக்கென வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து நீரெடுத்துக் குடிக்க முடியாமல் தடுக்கப்பட்டவர் அவர்.

Image copyright INDRANIL MUKHERJEE அம்பேத்கர்
அலுவலகத்தின் கடைநிலைப் பணியாளர் முகந்து தரும்வரை தாகத்தோடு காத்திருந்தவர்.

சவுதார் குளத்தில் நீரருந்தும் உரிமைக்காக தனது மக்களோடு உண்ணாவிரதமிருந்து ஊர்வலம் நடத்தி கடும் தாக்குதலுக்கும் ஆளானவர். அருகாமையிலிருந்த நீர்நிலைகளைப் பயன்படுத்துவதற்கு சாதியவாதிகள் விதித்த தடை காரணமாக, அவர் தான் நடத்திய பல மாநாடுகளில் பங்கெடுத்தவர்களுக்கு விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றும் அவலத்திற்கு ஆளானவர்.

ஆனாலும் அவருக்கென அதிகாரம் கிட்டியபோது, அதை அவர் தனக்கும் தன் மக்களுக்கும் தண்ணீர் தர மறுத்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை. மாறாக, ஓர் அடிப்படை ஆதாரவளமான நீர் குடிமக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கும் பாசனத்திற்கும் நாட்டை வளப்படுத்துவதற்கும் தடையின்றி கிடைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்தார்.

இந்த நோக்கத்தில்தான் அவர் அமெரிக்காவின் டென்னஸி ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டத்தைக் கொண்டுவந்தார். வெள்ளப் பெருக்கினால் வங்காளம், பீகார் மாநிலங்களில் தொடர்ந்து கடும் சேதாரங்களை உருவாக்கிவந்த தாமோதர் ஆற்றின் குறுக்கே பேரணையும் நீர்மின் உற்பத்திக்கூடமும் கட்டப்பட்டன.

அம்பேத்கர் விரும்பிய தலித் முனைவோர் வளர்ச்சியே என் நோக்கம்- மோடி
"புத்தகம்": மதம், சாதி குறித்த அம்பேத்கர் எழுத்துகளின் புதிய தொகுப்பு
இப்பெருந்திட்டத்தில் தீண்டப்படாத சாதியைச் சார்ந்த மற்றொருவரும் சர்வதேச அளவில் மதிப்பார்ந்த இடத்தைப் பெற்றிருந்த இயற்பியலாளருமான மேக்நாட் சாகாவும் அம்பேத்கருடன் இணைந்திருந்தார். தாமோதர் போலவே மகாநதி, சோன் நதி பள்ளத்தாக்கு திட்டங்களும் அம்பேத்கரின் கொடைகளே.

ரயில் தடங்களைப் போலவே நதிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்- அதாவது நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்கிற அம்பேத்கரது யோசனை, நதிநீர் பகிர்வுக்காக மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்ளும் இந்நாளில் அருந்தீர்வாக நினைவுகூரப்படுகிறது. நாட்டின் நீர் மேலாண்மைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்தும் விதிமாக தேசிய நீர் ஆணையம் Ambedkar's Contribution to Water Resources Development என்கிற ஆவணத்தை 1993ல் வெளியிட்டது.

அம்பேத்கரை கொண்டாடுவதாக காட்டிக்கொள்வதன் மூலம் தலித்துகளிடையே செல்வாக்கு பெறமுடியும் என்கிற மலிவான உத்தியுடன் களமிறங்கியுள்ள பா.ஜ.க அரசு, அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாளை (14.04.2016) தேசிய தண்ணீர் தினம் என்று கொண்டாடுவதாகவும் இந்த ஆவணத்தையும் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளதாகவும் பீற்றிக்கொண்டது.

Image copyright SAJJAD HUSSAIN அம்பேத்கர்
இந்தியாவின் முதலாவது முன்னோடி ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் என்கிற பெருமைக்குரிய தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம். அது அம்பேத்கரால் உருவாக்கப்பட்டது என்கிற அடிப்படைத்தகவலைக்கூட அத்திட்டக் கழகத்தின் தற்போதைய தலைவரோ அங்குள்ள தொழிலாளர்களோ அறிந்திருக்கவில்லை. அங்குள்ள நூலகத்தில்கூட இதுதொடர்பான பதிவுகள் ஏதும் இடம் பெற்றிருக்கவில்லை என்பதை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முசாபர்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான ஏ.கே.பிஸ்வாஸ் நேரடி அனுபவத்திலிருந்து எழுதியிருக்கிறார்.

இதுதான் களநிலவரம் பற்றிய துல்லியமானதோர் உதாரணம். அம்பேத்கரை, தலித்துகளின் இடஒதுக்கீட்டுக்காகப் போராடியவர் அல்லது அரசியல் சாசனத்தை எழுதியவர் என்கிற சுருக்கப்பட்ட பிம்பமே வெகுமக்களுக்குள் பதியவைக்கப்பட்டுள்ளது. தேச உருவாக்கத்திற்கும் குடிமக்களின் நல்வாழ்விற்கும் அம்பேத்கர் ஆற்றிய பணிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆனால் காலம் அவரது பன்முக ஆளுமையை தேடித்தேடி முன்னிறுத்துகிறது.

தமிழக அளவில் பெரியாரியம் அவ்வப்போது அம்பேத்கரியத்தின் எதிர்நிலையில் வைத்து விவாதிக்கப்படும் போக்கு உருவாகிறதே. உண்மையில் அம்பேத்கரின் காலத்தில் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இடையில் இருந்த உறவு எப்படிப்பட்டது? அவர்களிருவரின் பணிகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தனவா, துணையாக இருந்தனவா?

'ஜல்கவோன் என்னும் இடத்தில் 29.5.1929 அன்று மத்திய மாகாணங்கள் - பேரார் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையை "பம்பாயில் சுயமரியாதை முழக்கம்' என்னும் தலைப்பில் "குடி அரசு' (16.6.1929) வெளியிட்டது. அம்பேத்கர் நிறுவிய "சமாஜ் சமதா சங்' (சமுதாய சமத்துவச் சங்கம்) மராத்தியிலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமைஉரையின் மிகச் செறிவான சுருக்கம், ஆங்கிலத்திலும் தமிழிலும் மேற்சொன்ன ஏடுகளில் வெளியிடப்பட்டன. அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், "முதல் மகாராட்டிர சுயமரியாதை மாநாடு' என்று வர்ணித்தது.

காந்தியின் மதம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
அதே ஆண்டுத் தொடக்கத்தில்தான் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமாஜ் சமதா சங்கின் முதல் மாநாட்டிற்கு, "தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின் பிரபல தலைவர் ஈ.வெ. ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன'' என்னும் செய்திக் குறிப்பிலிருந்து, பெரியாரும் அம்பேத்கரும் அதற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றோ, இருவருக்கும் தொடர்பு இருந்தது என்றோ ஊகிக்கலாம் ("ரிவோல்ட்', 29.9.1929). - தோழர் எஸ்.வி. ராஜதுரையின் இந்தக் குறிப்பு பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இருந்த தோழமையை உணர்த்துகிறது.


Video caption கம்யூனிசமா? ஜனநாயகமா? அம்பேத்கர் பிபிசிக்கு அளித்த பேட்டி
அம்பேத்கர் /பெரியார் பெயரை நொடிக்கு நூறுமுறை பஜனை போல உச்சரித்துக்கொண்டு அவர்களது நோக்கங்களுக்கு எதிராக செயல்பட்ட/ செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற எவரொருவரை விடவும் பெரியாரும் அம்பேத்கரும் கருத்தியல் ரீதியாக வெகுவாக ஒன்றி செயல்பட்டனர். அம்பேத்கர் 'சாதியொழிப்பு' என்கிற தனது ஆவணத்தை பெரியாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். பெரியார் அதை தமிழில் வெளியிட்டு பரவலாக்கியிருக்கிறார்.

சாதியத்திற்கும் இந்துமதத்திற்கும் எதிராக நடத்தப்பட வேண்டிய சமரசமற்றப் போராட்டங்களை ஆளுக்கொரு முனையிலிருந்து முன்னெடுத்த பெரியாரும் அம்பேத்கரும் தம்மளவில் எதிரெதிரானவர்கள் அல்ல. அவ்வாறு நிறுத்துகிறவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கலாம். அவற்றை பின்தொடர்ந்து நாம் நேரத்தை விரயமாக்க வேண்டியதில்லை.

சோசலிசம் குறித்து அம்பேத்கருக்கு இருந்த கருத்துகள் என்ன? அந்தக் கருத்துகள் உருவாகி வந்த பின்புலம் என்ன? குறிப்பான நிகழ்வுகள் ஏதும் சொல்ல முடியுமா?

அயல்நாடுகளில் படிக்கச் சென்றபோது பேபியன் சோசலிஸ்டுகளுடன் ஏற்பட்ட தொடர்புகளாலும் அவர்களது கருத்தியல் செல்வாக்கினாலும் தான் அம்பேத்கர் சோசலிசம் பேசினார் என்று சிலர் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஏற்றத்தாழ்வு, புறக்கணிப்பு, அவமானம் என சாதியத்தின் கொடுமைகளை எல்லா நிலைகளிலும் இடையறாது சந்தித்தேயாக வேண்டிய அவலத்திற்குள் தள்ளப்பட்ட ஒரு தலித் என்கிற வகையில் அவற்றுக்கெதிரானவராகவும் சமத்துவத்தைக் கோருகிறவராகவும் அவர் தன்னியல்பாகவே இருப்பது தவிர்க்க முடியாதது.

அம்பேத்கர்
சமத்துவம் என்பதன் கோட்பாட்டு விளக்கத்தை வேண்டுமானால் அவர் தாமதமாக - வெளியுலகத் தொடர்புகள் மூலமாக அறிந்திருக்கலாம். ஆனால் சமத்துவம் என்பதை அவர் தனது அகவயமானத் தேவையாக உணர்ந்து அதைத் தேடியடைவதிலேயே முழு வாழ்நாளையும் அர்ப்பணித்திருக்கிறார். இந்த நிறைவேறாத கனவை செயல்பூர்வமாக மாற்றிக்காட்டுவதில் அவர் காட்டிய உழைப்பும் விடாப்பிடியான ஈடுபாடும்தான் பிறரிடமிருந்து அவரை தனித்தொளிரச் செய்கிறது.

1917ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தியாவில் சாதிகள் என்கிற ஆய்வுக்கட்டுரையிலேயே வர்க்கம் பற்றி அவரது குறிப்புகளை காணமுடிகிறது. நாடு திரும்பி அவர் தனது அரசியல் செயற்பாடுகளை தொடங்கிய காலந்தொட்டே தொழிலாளர்களை அணி திரட்டுவதில் அக்கறை காட்டி வந்திருக்கிறார்.

பம்பாய் நூற்பாலைகளில் நிலவிய தீண்டாமைகளைக் காணும் அவர், சாதியானது தொழிலை மட்டுமல்லாது தொழிலாளர்களையும் பிரித்துவைக்கிறது என்றும் தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணிதிரட்டுவதில் சாதி பெரும் தடையாக இருக்கிறது என்றும் தெளிவுபடுத்தினார்.

சாதிகளைக் கடந்து உழைக்கும் மக்களை திரட்ட வேண்டும் என்கிற திட்டத்தோடுதான் 1936 ஆகஸ்டில் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.

1938 பிப்ரவரியில் மன்மத் நகரில் ரயில்வேயில் பணியாற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மாநாட்டுக்கு தலைமை வகித்து அவர் ஆற்றிய உரை இன்றைக்கும் பல்வேறு அம்சங்களில் பொருத்தப்பாடு கொண்டது. 'என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று - பிராமணியம், இரண்டு- முதலாளித்துவம்' என்று அறிவித்தோடு சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதன் எதிர்மறைதான் பிராமணீயம் என்று நிறுவுவார். '...நமது இலக்கு இந்த கூலி அடிமைத்தனம் என்னும் கருத்தோட்டத்திலிருந்து விடுபட்டு விடுதலைக் கோட்பாட்டை அடைவதாக இருக்கவேண்டும்...

Image copyright KEYSTONE அம்பேத்கர்
Image caption மனைவியுடன் அம்பேத்கர்
அதாவது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய இலக்குகளை நோக்கி தொழிற்சங்க இயக்கத்தை வழிநடத்த வேண்டும். சமுதாயத்தைப் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும். இந்தப் புனர் நிர்மாணமே தொழிலாளி வர்க்கத்தின் முதற்கடமையாகும்...' என்று அறைகூவல் விடுக்கிறார். புனர் நிர்மாணம் என்பதற்கு பதிலாக புரட்சி என்கிற நேரடிச் சொல்லை ஒருவேளை அவர் பயன்படுத்தியிருப்பாரேயானால் அவரை கம்யூனிஸ்ட் என்று பலரும் சொல்லியிருக்கக்கூடும்.

என்னைப் பொறுத்தவரை, இந்த முழக்கம் 'இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத் தவிர எதுவுமில்லை, அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு' என்பதற்கு இணையானதே. 'இந்தியாவும் பொதுவுடைமைக்கான முற்படு தேவைகளும்' என்கிற பொதுத்தலைப்பின் கீழ் அவர் எழுதியுள்ள கட்டுரைகளை வாசிக்கிற எவரும் இம்முடிவுக்கே வரமுடியும்.

மார்க்சீயம் முன்வைத்த விஞ்ஞான சோசலிசத்துடன் தொடர்பில்லாத பல வகைமைகள் சோசலிசத்தில் உண்டு. அம்பேத்கரின் சோசலிசம் அரசு சோசலிசம் எனப்படுகிறது. அவர் பங்கு வகித்த பல்வேறு அமைப்புகளின் கொள்கைகளில் சோசலிசத்தின் மீதான தனது பிடிப்பை கூறிவந்த அவர் 1946 ஜூன் 17 அன்று அரசமைப்பு அவையில் ஆற்றிய உரையில் அதை மறுவுறுதி செய்கிறார்.

'இந்த நாட்டில் சமூக, பொருளாதார நீதி இருக்கும்படி செய்வதற்குத் தொழில்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும், நிலம் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்மானம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்த்திருக்க வேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் நீதியில் நம்பிக்கை கொள்ளும் எந்தவொரு எதிர்கால அரசாங்கமும், அதன் பொருளாதாரம் ஒரு சோசலிசப் பொருளாதாரமாக இருந்தாலன்றி, அந்த நீதியை எவ்வாறு செயல்படுத்தும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை....'.

Image copyright DIBYANGSHU SARKAR அம்பேத்கர்
சோசலிசத்தின் மீது அம்பேத்கருக்கு இருந்த சீரான நம்பிக்கை கம்யூனிஸ்ட்டுகளின் மீது அதேரீதியில் இல்லாமல் போனதற்கு பல நியாயமான காரணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அதை அவர் பகையுணர்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை. பல்வேறு மக்கள் பிரச்னைகளில் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து போராடியிருக்கிறார். அதேவேளையில் சாதியத்தைப் புரிந்துகொள்வதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருந்த பார்வைக்குறைபாட்டை கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ், பிரிட்டிஷ் ஆட்சி அமைத்த பல்வேறு குழுக்களை பலரும் புறக்கணித்த நிலையில் அம்பேத்கர் அவற்றிடம் கோரிக்கை சாசனங்களை அளித்தது தொடர்பாக கம்யூனிஸ்ட்டுகளுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருந்தபோதிலும் அம்பேத்கர் முன்வைத்த தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை, தனி செட்டில்மென்ட் போன்ற கோரிக்கைகளை ஆதரித்திருக்கிறார்கள். இதுபற்றி 'ஆறு கோடி தீண்டாதார்' என்கிற தலைப்பில் பி.டி.ரணதிவே எழுதி 1945ல் வெளியான பிரசுரம் அப்போதே தமிழிலும் வெளிவந்துள்ளது.

பொருளாதாரம் என்கிற அடிக்கட்டுமானத்தை மாற்றினால் சாதி என்கிற மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்கிற கம்யூனிஸ்டுகளின் வாதத்தை அவர் மறுத்தார். அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா என்று துல்லியமாக பிரித்தறிய முடியாதபடிக்கு சாதி இருப்பதை சுட்டிக்காட்டினார். ஒரு வாதத்திற்காக, சாதி மேற்கட்டுமானம் தான் என்றே ஒப்புக்கொண்டாலும் மேலேயுள்ள அதை தகர்க்காமல் அடிக்கட்டுமானத்தை தகர்க்கமுடியாது என்று விளங்கப்படுத்தினார். இவரது இந்த விளக்கத்தை சரியென ஏற்றுக்கொள்வதற்கு கம்யூனிஸ்டுகளுக்கு குறிப்பிட்ட காலம் தேவைப்பட்டிருக்கிறது.

சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்தே நடத்தவேண்டுமென்கிற நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். சாதியம் ஒழிக்கப்படக் கூடாதென்பதல்ல, பொருளாதாரக் கட்டமைப்பு மாறினால் சாதியும் ஒழிந்துவிடும் என்கிற யாந்திரீகமான - பிழையான பார்வைதான் எங்களை தடுத்துவிட்டது என்று பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்துகொண்டு கம்யூனிஸ்டுகள் களத்திற்கு வந்திருக்கிறார்கள்.

அம்பேத்கர்
தொழிலாளிகளில் ஒருபகுதியினரை சாதியடிப்படையில் அம்பேத்கர் பிரிக்கிறார் என்று கம்யூனிஸ்ட்டுகளும், தலித் தொழிலாளர்களை - அவர்கள் மீதான தீண்டாமைகளைக் களையாமலே - தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்கிற வலைக்குள் இழுத்துப் போட்டுக்கொள்ள கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிப்பதாக அம்பேத்கரும் பரஸ்பர குமைச்சல் இருந்திருக்கிறது. இருதரப்பினரும் தத்தமது ஆதரவு தளத்தை தக்கவைக்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே இதை பார்க்கவேண்டியுள்ளது.

கம்யூனிஸ்ட்டுகள் மீது அம்பேத்கர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தருணங்கள் எல்லாமே தேர்தல் காலங்கள் என்கிற ஒத்திசைவைக் கொண்டுள்ளது தற்செயலானதல்ல. தேர்தலுக்கு முன்னும் பின்னும் அவர் கம்யூனிஸ்ட்டுகளுடன் போராட்டக்களத்தில் இணைந்து நின்றிருக்கிறார். ( பார்க்க- Bridging the Unholy Truth - Anand Teltumbde). ஆனால் இந்த காலப்பின்னணியை கவனத்தில் கொள்ளாமல், கம்யூனிஸ்டுகளிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அம்பேத்கர் சொல்லியிருக்கிறார், கவனம் கவனம் என்று சிலர் கதறுகிறார்கள்.

அதே அம்பேத்கர் இந்துத்வவாதிகளிடம் எந்த ஒட்டுறவும் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று விடுத்த எச்சரிக்கையை இவர்கள் எங்கும் பேசுவதில்லை. தலித்துகள் வலதுசாரி முகாம்களுக்குள் இழுக்கப்படுவது பற்றியும் கவலையுமில்லை. சாதியத்தை அதன் எல்லாக் கொடூரங்களோடும் மீட்டமைப்பதற்காக தலித்துகள்மீது கொடிய அடக்குமுறைகளை ஏவிவரும் இந்துத்வ பா.ஜ.க. பெரும்பாலான ரிசர்வ் தொகுதிகளை கைப்பற்றியுள்ளது பற்றியும் கலவையில்லை. 'ராம்'விலாஸ் பஸ்வான், உதித் 'ராம்'ராஜ், 'ராம்'தாஸ் அதாவாலே ஆகிய 'தலித்ராம்கள்', தலித்துகள்மீது எவ்வளவு கொடிய ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் முணுமுணுப்பின்றி பா.ஜ.க.வுடன் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது பற்றி இவர்களுக்கு எவ்வித கூச்சமும் கிடையாது.

தலித்துகளை சப்ஜெக்டாகவும் பிராஜக்டாகவும் மாற்றி கொள்ளையடிக்கும் தொண்டு நிறுவனங்கள் என்கிற ஃபண்டு நிறுவனங்களால் தலித் அணிதிரட்சி சிதறடிக்கப்படுவது பற்றியும்கூட இவர்களுக்கு கவலையில்லை. இவர்களது ஒரே கவலை கம்யூனிஸ்டுகளிடம் தலித்துகள் போய்விடக்கூடாது என்பதுதான். போராட்டப் பாதையை விடுத்து, அம்பேத்கர் உருவாக்கிக் கொடுத்த அரசியல் சாசனத்தைப் பற்றி நின்று நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிற போக்கானது, அதிகாரத்தை எப்படியாவது யாருடனாவது பகிர்ந்துகொண்டு அதை நியாயப்படுத்திக் கொள்வதற்காக தூய தலித்தியம் பேசிக்கொண்டு தனிமைப்பட்டு காலந்தள்ளுவது என்கிற தற்கால நிலைக்குத் தாழ்ந்துள்ளது.

அதேவேளையில் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமைகளை அடைவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற அம்பேத்கரின் வழிகாட்டுதலை உள்வாங்கியவர்கள் களத்தில் இருக்கிறார்கள். சாதியொழிப்புக்கான போராட்டத்தை தலித்துகள் மட்டும் தனித்து நடத்திவிட முடியாது என்கிற தெளிவு அவர்களுக்கிருக்கிறது. ஆகவே, அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளையும் பெரியாரிஸ்டுகளையும், சாதியத்தைத் துறந்து வாழப் போராடுகிறவர்களையும் தமது தோழமைச்சக்திகளாக கருதுகிறார்கள். அதுபோதுமானது.
Thanks BBC Tamil.
Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

*மகாத்மா* *ஜோதிபா* *புலே* அவர்களின் பிறந்தநாள் இன்று..!


*மகாத்மா* *ஜோதிபா* *புலே* அவர்களின் பிறந்தநாள் இன்று..!

நவீன இந்தியாவின் முதற் *சமூக* *சீர்திருத்தவாதி* என்றால் அது மராத்திய மண்ணில் உதித்த மகாத்மா  ஜோதிபா புலே தான்.சாதி ஒழிப்பு,தீண்டாமை எதிர்ப்பு என்பனவற்றைத் தாண்டி பெண் விடுதலைக்கும் அவர்தம் கல்விக்கும்  இவர் ஆற்றிய சேவை அளப்பரியது.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் தாம் குருவாக ஏற்ற மூவரில் கவுதம புத்தர்,கபிர் போன்றோர்களுக்கு அடுத்து மகாத்மா ஜோதிபா புலேவும் அடக்கம்.பகுஜன் சமாஜ் கட்சியை *மான்யவர்* *கான்ஷீராம்* அவர்கள் தோற்றுவித்த போது,அவர் தம் கட்சியின் ஐந்து முன்னோடிகளில் முதன்மையானவராக மகாத்மா ஜோதிபா புலேவையே குறிப்பிட்டார்.

 *பிற்படுத்தப்பட்ட* *சமூகத்தில்* (OBC) பிறந்த இவர் உயர்தட்டு மக்களுக்கு அடிமையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்களை தாம் அடிமையாக இருக்கிறோம் என்பதை முதன் முதலில் உணரச் செய்தவர்.

இத்தகு பெருமைகட்கு உரிய மகாத்மா ஜோதிபா புலேவின் நினைவைப் போற்றும் விதமாக உத்தர பிரதேசத்தை ஆண்ட பெகன்ஜி மாயாவதி அவர்கள் தன் ஆட்சிக் காலத்தில் அவர் நினைவைப் போற்றும் விதத்தில் அமைத்த கல்விக் கூடங்கள்,நினைவிடங்கள் மற்றும் திட்டப் பணிகள் ஆகியவை குறித்த தகவல் பின்வருமாறு:

1.மகாத்மா ஜோதிபா புலே பல்கலைக்கழகம்(07.07.1997)
2.மகாத்மா ஜோதிபா புலே அரசு துப்புரவு ஆசிரமப் பள்ளி,லக்னோ(14.04.1997)
3. மகாத்மா ஜோதிபா புலே திறந்தவெளி பன்னோக்கு அரங்கம்,லக்னோ(1995)
4. மகாத்மா ஜோதிபா புலே விளையாட்டரங்கம்,எட்வா(1995)
5. மகாத்மா ஜோதிபா புலே நகர் மாவட்டம் உருவாக்கம்(06.04.1997)
6. மகாத்மா ஜோதிபா புலே சிலை நிறுவுதல்,சுட்மல்பூர் சவுராகா,சகரன்பூர்(01.05.1997)
7. மகாத்மா ஜோதிபா புலே சிலை நிறுவுதல், மகாத்மா ஜோதிபா புலே நகர்(06.05.1997)
8. மகாத்மா ஜோதிபா புலே சிலை நிறுவுதல்,காகேல்ஹேரி,சகரன்பூர்(11.04.1997)
9.மகாத்மா ஜோதிபா புலே பூங்கா,கோம்தி நகர்,லக்னோ(04.04.2008)
10.மகாத்மா ஜோதிபா புலே சிலைகளை லக்னோவின் முதன்மைச் சாலை சந்திப்புகளில் நிறுவும் பணி (2008).

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதம்_பகுஜன் வரலாற்று மாதம்
 *ஜெய்பீம்* .!

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

முன்னடி_எடுத்துவைத்த_ஒடிசா

விஜயபாஸ்கர் மாதிரி வருமா?
பீலா ராஜேஷ் மாதிரி வருமா?
என்றெல்லாம் பிதற்றி திரியும் சாதிய லாபிகளும், நட்டநடுநிலைநக்கிகளும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

~~~~~~~~~~~~

இந்தியாவில் கேரளாவில் தொடங்கி மகாராஷ்டிராவை உலுக்கி தமிழகத்தைக் கவ்வியிருக்கிறது கொரோனா.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நிலவரப்படி 621 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. பரவலின் வேகம் படிப்படியாகத் தீவிரமாகலாம். மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் கடைகளில் குவிகிறார்கள்.

#முன்னடி_எடுத்துவைத்த_ஒடிசா

2019 டிசம்பரிலேயே `கொரோனா வைரஸ், உலகை துவம்சம் செய்யப் போகிறது’ என்று சில மருத்துவர்கள் கணித்துவிட்டார்கள். பிப்ரவரி இறுதியில் இந்தியாவுக்குள் அந்த வைரஸின் தாக்கம் உணரப்பட்டு விட்டது. பெரும்பாலும் எல்லா மாநிலங்களுமே பதற்றத்துடன் என்ன செய்வது எனக் குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில், எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் இந்தப் பேரிடரை எதிர்கொள்ள முன்னடி எடுத்து வைத்தது ஒரு மாநிலம்.

அது ஒடிசா.

ஏப்ரல் 6-ம் தேதி நிலவரப்படி, அங்கு 40 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். 2,210 பேர் பரிசோதிக்கப் பட்டுள்ளார்கள்.

ஒரு பேரிடரை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை, பிற மாநிலங்கள் ஒடிசாவைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.

புயல், பெருவெள்ளம் போன்ற பல இடர்களை வெற்றிகரமாகக் கடந்த மாநிலம் அது. கொரோனா என்ற மருத்துவப் பேரிடர் வரப்போகிறது என உணர்ந்ததும், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் `மக்கள் நலன்’ என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து நின்றார்கள். அதுவே அங்கு பாதிப்பின் வேகத்தைக் குறைத்திருக்கிறது.

மார்ச் 13ஆம் தேதி...கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரவையைக் கூட்டி பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.

அதே நாளில் ஒடிசா சட்டமன்றத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கும் பிற சட்டமன்ற உறுப்பினர்களும் கைகளை கிருமிநாசினியால் கழுவி, தங்கள் மாநில மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வைத் தொடங்கி வைத்துவிட்டார்கள். அன்றைய தினமே பேரிடர் சட்டமும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

#தடுக்கப்பட்ட_வதந்திகள்

செயல்திட்டங்கள் அடுத்தடுத்து வகுக்கப்பட்டன. யாருக்காகவும் யாரும் காத்திருக்கவில்லை. அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட்டார்கள். கொரோனாவைவிட ஆபத்தானது மற்றும் வேகமாகப் பரவக்கூடியது வதந்தி. எங்கே செய்திகள் முடக்கப்படுகின்றனவோ அங்கே வதந்திகள் பிறக்கும். வதந்திகளைத் தடுத்து கொரோனா குறித்த தகவல்களை வெளிப்படையாக வழங்கவும் ஒருங்கிணைக்கவும் ஒடிசா திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் எழுத்தாளருமான ‘மைண்ட் ட்ரீ ’ சுப்ரதோ பாக்ஷி, அரசு தலைமைச் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். கொரோனா குறித்து எல்லா துறைகளிடமிருந்தும் தகவல்களைப் பெற்று தினமும் மாலை 4.30 மணிக்கு ஊடகங்களிடம் இவர் பேசுவார். இதன்மூலம் மக்கள் அன்றாடம் உறுதிசெய்யப்பட்ட தகவல்களை அறிந்துகொள்கிறார்கள்.

#தனிமை_தரும்_ரொக்கப்_பரிசு

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலமே கொரோனா உள்ளே நுழைகிறது. அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதுதான் பெரும் சவால். பல நாடுகளும் கோட்டைவிட்டது அங்குதான். அதற்கோர் அருமையான திட்டம் தீட்டியது ஒடிசா அரசு. ஒரு ஆப் மற்றும் இணையதளம் தொடங்கப்பட்டன. `வெளிநாடு களிலிருந்து ஒடிசாவுக்குள் நுழைபவர்கள், 24 மணி நேரத்துக்குள் இந்த ஆப் அல்லது இணையதளத்தில் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துகொண்டு, 14 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பரிசாக 15-வது நாள், 15,000 ரூபாய் அவர்களுக்கு ஊக்கத்தொகையாகத் தரப்படும்’ என அறிவிக்கப்பட்டது. அவர்களைக் கண்காணிக்கவும் கவுன்சலிங் தரவும் 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள் உருவாக்கப்பட்டன.

அந்தத் திட்டத்தை அறிவித்ததுடன் கையாட்டிவிட்டுச் சென்றுவிடவில்லை முதல்வர் நவீன் பட்நாயக்.

‘என் சகோதரி அமெரிக்காவி லிருந்து ஒடிசா திரும்பியிருக்கிறார்’ என ‘ஆப்’பில் பதிவுசெய்தார். பூரி சமஸ்தானத்தின் ராஜா, ‘நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன்’ எனப் பதிவுசெய்தார். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, ‘இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் லண்டன் சென்று வந்தேன்’ எனப் பதிவுசெய்தார். முதல்வரும் அதிகாரிகளுமே பதற்றத்துடன் பதிவுசெய்கிறார்கள் என்றால், மக்கள் சும்மா இருப்பார்களா?

♦ 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வேறு.

பிப்ரவரி முதல் வெளிநாடு சென்று வந்த ஐந்தாயிரம் பேர் தங்களைப் பதிவுசெய்து தனிமைப்படுத்திக்கொண்டார்கள்.

வெளிநாடு சென்று திரும்பிய அந்த ஐந்தாயிரம் பேரில் 70 சதவிகிதம் பேர் குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்கள், எட்டு நகரங்களைச் சேர்ந்தவர்கள். மார்ச் 21-ம் தேதி, பிரதமர் ஒரு நாள் ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாகவே அந்த ஐந்து மாவட்டங்களையும் எட்டு நகரங்களையும் முழுமையாக முடக்கியது ஒடிசா அரசு. பிறகு மக்களை பதற்றத்தில் ஆழ்த்தாமல், பேருந்து நிலையங்களில் மக்களை கும்பலாகத் தவிக்க விடாமல் படிப்படியாக மூன்று கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தியது.

#நன்மை_பயக்கும்_நான்கு_மாதங்கள்

♦ 95 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்பத்தில் ஒரு நபருக்கு ஐந்து கிலோ வீதம், நான்கு மாதங்களுக்குத் தேவையான அரிசி வழங்கப்பட்டது.

♦ ஐம்பது லட்சம் பேருக்கு நான்கு மாதங்களுக்கான முதியோர் உதவித்தொகை வீடு தேடிச் சென்றது.

♦ எண்பதாயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு தலா 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப் பட்டது.

♦ 22 லட்சம் கட்டடத் தொழிலாளர் களுக்கு தலா 1,500 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

♦ மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை ஊக்குவிக்க, நான்கு மாதச் சம்பளம் முன்பணமாக வழங்கப்பட்டது.

இவ்வளவு ஏன்?

♦ தெருக்களில் காகங்கள், நாய்கள், கால்நடைகள், குரங்குகள்கூட தவிக்கக் கூடாது என, அவற்றுக்கு 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உணவிட்டு வருகிறார்கள்.

#ஒடிசா_மாடல்

மார்ச் 13-ல் முதல்வர் பேரிடர் சட்டத்தை அமல்படுத்தியபோது ஒடிசாவில் ஒரு கொரோனா நோயாளிகூட இல்லை.

மார்ச் 16-ம் தேதிதான் முதல் நோயாளி அடையாளம் காணப்படுகிறார்.

 'கொரோனா என்கிற கொள்ளை நோய் பரவலாம்; பரவாமலும் தடுக்கப்படலாம். ஆனால், சாத்தியமுள்ள எல்லா தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துவிட வேண்டும்’ என்கிற தெளிந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

'இது பெரும்பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது’ என்ற எதிர்பார்ப்பிலும், ‘நோய் பரவலைத் தடுத்து பாதிப்புகளைக் குறைத்துவிட முடியும்’ என்ற நம்பிக்கையிலும் தான் ஓர் அரசு செயல்பட வேண்டும். அதை ஒடிசா அரசு சிறப்பாகச் செய்தது.

#மடமடவென_உருபெறும்_மருத்துவமனைகள்!

ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்காமல் தனி மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.

முதற்கட்டமாக, புவனேஷ்வரில் ஆயிரம் படுக்கைகளைக்கொண்ட மருத்துவமனை தொடங்கப்பட்டது.

மொத்தம் உள்ள 30 மாவட்டங்களிலும் இப்படியான மருத்துவமனைகள் தொடங்குவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தனியார் மருத்துவமனை களுடன் இணைந்தும் மருத்துவமனைகளைத் திறக்கிறார்கள். ‘அரசு கொரோனா - தனியார் சிறப்பு மருத்துவமனை’ என பலகை வைக்கிறார்கள்.

ஒடிசாவில் சுமார் 7,500 கிராமப் பஞ்சாயத்துகள் இருக்கின்றன. எல்லா பஞ்சாயத்துகளிலும் 100 படுக்கைகள்கொண்ட கள மருத்துவ முகாம்கள் தயாராக இருக்கின்றன. பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், அரசு நிறுவனக் கட்டடங்கள், திருமண மண்டபங்களில் இந்த முகாம்களை அமைத்திருக்கிறார்கள். அவற்றை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நிர்வகிக்கிறார்கள். ஊராட்சி நிதியிலிருந்து உணவு வழங்கப்படுகிறது.

ஒடிசாவில் தங்கியிருக்கும் 25,000 பிற மாநில மக்களையும் கவனத்தில்கொண்டு அவர்களுக்காகவும் திட்டங்கள் தீட்டியிருக்கிறார்கள். அதேபோல வெளிமாநிலங்களில் இருக்கும் ஒடிசா மாநில மக்களின் குறை தீர்க்கவும் மாநிலவாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒடிசாவின் கொரோனா தடுப்பு மக்கள் மீட்புப் பணிகளில் முதல் வரிசையில் நிற்பது இரண்டு தமிழர்கள் என்பது நமக்குப் பெருமை. இருவரும் மதுரைக்காரர்கள். ஒருவர், முதல்வரின் வலதுகரமாக இயங்கும் தனிச்செயலர் வி.கார்த்திகேய பாண்டியன். மற்றொருவர், முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன்.

 Balakrishnan R IAS அவர்களுக்கு
வாழ்த்துகளும் பாராட்டுகளும் 💕💕💕

புயல், பெருவெள்ளம் என, பல பேரிடர்களைப் பார்த்த மாநிலம் ஒடிசா. இதனாலேயே அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு மட்டுமல்ல... மக்களுக்கும் அந்த அனுபவமும் விழிப்புணர்வும் இருக்கின்றன. தவிர, ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் `மக்கள் சேவை’ என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து நிற்பது 20 ஆண்டுகளில் ஒடிசாவுக்குக் கிடைத்த வரம்.

‘கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்’ என்றான் பாரதி. ஒரு மக்கள் நல அரசு, எந்தச்சூழலிலும் தம் மக்களை உணவுக்காகக் கையேந்தவிடக் கூடாது; வாழ்வாதாரத்துக்காக தெருவில் நிறுத்தக் கூடாது. குறிப்பாக, தன்மானம் காக்க வேண்டும். அதை வழிநடத்தும் முதல்வர் நவீன் பட்நாயக் உலகத்துக்கான முன்மாதிரி!

நன்றி: விகடன்

39 மனைவிகள்.! 94 குழந்தைகள்.! மொத்தம் 181 பேருடன் ஒரே வீட்டில் வாழும் இந்தியர்.! அசைக்க முடியாத சாதனை.


39 மனைவிகள்.! 94 குழந்தைகள்.! மொத்தம் 181 பேருடன் ஒரே வீட்டில் வாழும் இந்தியர்.! அசைக்க முடியாத சாதனை.

இந்நிலையில், 39 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்திவருகிறார். இந்தியாவின் மிசோராம்மை சேர்ந்த இந்த சியோனா சானா என்ற நபர்.39 பெண்களை திருமணம் செய்துகொண்ட சியோனா சானாவிற்கு மொத்தம் 94 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் சிலருக்கு திருமணம் முடிந்துள்ளநிலையில் 14 மருமகள்கள் உள்ளனர். ஒரு பெண்ணை காட்டியே சமாளிக்க முடியாத இந்த காலகட்டத்தில் 39 பெண்கள் .
அதுமட்டும் இல்லாமல், 34 பேரக்குழந்தைகள் என மொத்தம் சியோனா சானவை சேர்த்து 181 பேர் ஒரே வீட்டில் வசித்துவருகின்றனர். மேலும் ஒரு தொழிற்சாலை போல் இயங்கும் இந்த குடும்பத்தில், ஒருநாளைக்கு சுமார் 50 கிலோ வரை சமையலுக்கு அரிசி பயன்படுத்துகிறார்களாம்.
39 மனைவிகள்.! 94 குழந்தைகள்.! மொத்தம் 181 பேருடன் ஒரே வீட்டில் வாழும் இந்தியர்.! அசைக்க முடியாத சாதனை.

வரமா? சாபமா? இந்த 21 நாட்கள்..

வரமா? சாபமா? இந்த 21 நாட்கள்..

நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

🌹அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை,

🌻காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம்.

💐சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை.

 🥀பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளை கண்களால் பார்க்க முடிகிறது.

 🕊️அடிதடி வெட்டு குத்து குறைந்து இருக்கிறது.

🦚 மதுக்கடை மூடிக் கிடைக்கிறது.

🌺நகைக் கடைகள் பூட்டியே இருக்கிறது.

 🦋ஜவுளிக்கடை விளம்பரங்களே செய்வதில்லை.

🌲 நிரம்பி வடியும் மாநகரப் பேருந்துகள் இல்லை.

 🦜படியில் தொங்கிப் பயணம் செய்ய யாரும் இல்லை.

🦚தெருவெல்லாம் சுத்தமாய் கிடக்கிறது. சாக்கடைகள் தூர்வாரப் பட்டுக்கொண்டே இருக்கிறது.

🌻அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைக்கிறார்கள்.

🌿அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை. 

🌳எது வேண்டும் என்றாலும் வீட்டிலேயே சமைத்து உண்கிறோம்.

🎄தேவை இல்லாமல் எதையும் வீணடிப்பது இல்லை.

🙊காவல் துறையை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

💐மருத்துவரை தெய்வமாய் பார்க்க முடிந்திருக்கிறது.

🥀செவிலியரை சகோதரியாய் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.

🌷சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறோம்.

🌼சுத்தமாக இருக்கப் பழகி இருக்கிறோம்.

🦇சிட்டு்குருவி சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன.

 🦜பறவைகள் சப்தம் பலமாய் கேட்க முடிகிறது.

🌞பொழுது சாயும் போது எந்த இரைச்சலும் இல்லை.

🐣நீ எப்படி வருவயோ என்ற பயம் உன் குடும்பத்திற்கு இல்லை.

🙈போதை தேடி யாரும் செல்வதே இல்லை.

🍁 சிகரெட் தீர்ந்தும் தேடி அலைய மனமில்லை.

🐔தெருவில் எட்சில் துப்ப யோசிக்கிறோம்.

 🐥வெளிநாட்டில் இருந்து வந்ததை வெளியில் சொல்ல யோசிக்கிறோம்.

🐻அகந்தை அழிந்து போய் இருக்கிறது. தான் என்ற கர்வம் தளர்ந்து போய் விட்டது.

🐒சிறுவயது நியாபகங்களை அசை போட துவங்கி இருக்கிறோம்.

🌴தொட்டதிற்கு எல்லாம் மருத்துவமனை போவதை நிறுத்தி இருக்கிறோம்.

😂சிரிக்க கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

 😌சிந்திக்க பழகி இருக்கிறோம்.

 😛மற்றவர்கள் வழி புரிந்து இருக்கிறது

🤩மனது நோகாமல் பேச பழகி இருக்கிறோம்.

😁இது மட்டும் போதாது, அப்பாவோடு மனம் விட்டுப் பேசுங்கள்.

 🙂அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குங்கள்.

 😅பிள்ளைகளின் தேவை அறிந்து சொல்லிக் கொடுங்கள்.

👥பிரிந்த நண்பர்களின் நம்பர்களை தேடி எடுங்கள்.

 🙏மன்னிப்பு கேட்க நினைத்தவர்களிடம் கேட்டு விடுங்கள்.

🤝யாரையாவது மன்னிக்க நினைத்தால் மன்னித்தும் விடுங்கள்.

🙂ஒருவேளை இந்த 21 நாட்களோடு உலகம் அழிந்து போவதாய் இருந்தால் உறவுகளை எப்படி நேசித்து இருப்பீர்களோஅப்படி நேசித்து பாருங்கள்.

 🌱பக்கத்து வீட்டுக்காரரிடம் பகை தெரியாது.

🌿எதிர் வீட்டுகாரரின் ஏமாற்றம் புலப்படாது. எல்லோரும் நிம்மதியாக இருக்கட்டும் என்று மனம் நினைக்கும்.

🍀 வஞ்சம் தோன்றாது. வாழ வேண்டும் என்ற ஆசை நீண்டு இருக்கும் .

🌳வாழ்ந்து காட்ட வாய்ப்பு கிடைத்தது என்று மனம் சொல்லும்.

🙏மீண்டும் தொடங்குங்கள் எங்கு எந்த தவறை செய்தீர்களோ, அதை திருத்திக் கொள்ளுங்கள்.

😍வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாக உள்ளதென்று புலம்பாதிருங்கள், வீடே இல்லாதவர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள்.

😒நீங்கள் யாரென்பதை உங்களுக்கே உணர்த்துவதற்காக ஒரு வைரஸ் தேவைப்பட்டு இருக்கிறது.

👨‍👨‍👦‍👦உங்களை யாரும் தனித்து நிற்கச் சொல்லவில்லை.

 👩‍👩‍👧‍👧தற்காத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.

 🥰வாழ நினைத்தால் வாழ்ந்து காட்டுங்கள்.

 😂வாழ்க்கை எல்லோருக்கும் ரிஸ்டார்ட் ஆப்ஷன்யை கொடுப்பதில்லை.

🙂இப்போ சொல்லுங்க இது வரமா? சாபமா?

 😆நிச்சயமாக வரம் தான் வாழ்ந்து தான் பார்ப்போமே.....
🙏🙏🙏


Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.