திங்கள், 29 ஜூலை, 2019

வேங்கை மகன் வேட்டையாட காடிருக்குமா..?


வேங்கை மகன் வேட்டையாட காடிருக்குமா..?

(உலகப் புலிகள் நாள் சிறப்புக் கட்டுரை)
- கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

*புலிகளைக் காக்க ஜூலை 29 'உலக புலிகள் நாள் ' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஏனெனில், உலகிலேயே புலிகள் அதிகம் வாழும் நாடு இந்தியா; இந்தியாவின் தேசிய விலங்கு புலி.*
தமிழும் புலியும்!
புலிகளுக்கும், தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தமிழ் இலக்கியங்களிலும் புலிகள் இடம்பெற்றுள்ளன. புலியை முறத்தால் துரத்திய பெண் வீரத்தமிழச்சியாகப் பார்க்கப்பட்டாள். புராணக்கதைகளில் ஐயப்பன் புலிப்பால் குடித்து, புலி வாகனத்தில் செல்வார். புலியோடு சண்டையிட்டவர்களுக்கு புலிக்குத்தி கல் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் தேவனூர்புதூர், தென்சேரிமலை எஸ்.குமாரபாளையம், சின்னமுத்தூர், ஏற்காடு நங்கவள்ளி, ஓசூர் பைரமங்கலம், தூத்துக்குடியில் வெள்ளாளன்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் அத்தகு புடைச்சிற்பங்கள் அல்லது நடுகற்கள் கிடைத்துள்ளன.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திரையில் புலியை அடக்கும் போதும், ’புலி.. புலி.. புலி.. புலி..’என்று விஜய் பாடும் போதும், ’வேங்கைமவன் ஒத்தையில நிக்கான் மொத்தமா வாங்கலே..’ என்று ரஜினிகாந்த் வசனம் பேசும்போதும், ரசிகர்கள் திரையைப் பார்த்து உற்சாகம் அடைவதற்கு, புலி வீரமிக்க விலங்கு என்ற உணர்வு நம் ஆழ்மனதில் இருப்பதுதான் காரணம். புலியின் கம்பீரமும், உறுமலும் அதற்கென தனித்துவத்தை உருவாக்கி வைத்துள்ளது. நீ என்ன பெரிய புலியா என்று நம்மைக் கேட்க வைக்கிறது. நம் கிராமங்களில் இன்னமும் புலி வேடமிட்டு வீரநடனம் ஆடுவது கிராமியக்கலையின் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது.
புலியே காட்டின் பொருள்
சூழலியல் அடிப்படையிலும் முக்கியத்துவம் பெற்றது புலி. உணவுச்சங்கிலியின் உச்சத்தில் இருக்கும், ஊனுண்ணியான புலியின் உணவாக மான், காட்டெருது, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் இருக்கின்றன. புற்கள், செடி, கொடி, இலைதழைகளை தாவர உண்ணிகள் உண்கின்றன. தாவரங்கள் உயிர்வாழ நிலவளம், நீர்வளம் அவசியம். ஆக, ஒரு புலி வாழும் காட்டைத்தான் சூழலியல் சமநிலை உள்ள நல்ல காடு என்று தீர்மானிக்கிறோம். காட்டின் வளத்தை அளவிடும் குறியீடுதான் புலிகளின் எண்ணிக்கை.
பெங்கால் புலி (Bengal Tiger), சைபீரியப்புலி (Siberian Tiger), மலேயப்புலி (Malayan Tiger), தென்சீனப்புலி (South Chinese Tiger), இந்தோ சீனாப்புலி (Indo – Chinese Tiger), இந்தோனேசியாவின் சுமத்ரா புலி (Sumatra Tiger) என ஐந்து வகைப் புலிகள் இந்தியாவில் இருக்கின்றன. மன்னர்கள், ஜமீன்கள், ஆங்கிலேயர்கள், நடிகர்கள், சட்டவிரோதகடத்தல்காரர்கள் அத்தனை பேரும் இந்தியப் புலிகளை வேட்டையாடியிருக்கிறார்கள். இதனால் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தன.
புலிக் காப்பகங்கள்
இந்தியாவில் புலிகளைக் காத்திட 1972இல் அறிவிக்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத்திட்டம் (Project Tiger) 01.04.1973 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக புலிகள் வாழிடம் 40145.30 சதுர கிலோ மீட்டர், புலிகள் வெளிநடமாடுமிடம் 32603.72 சதுர கிலோ மீட்டர், என மொத்தம் 72749.02 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஐம்பது புலிகள் காப்பகங்கள் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, அம்பாசமுத்திரம் தாலுகாவில் கேரளா எல்லை வரையுள்ள, 1988இல் அறிவிக்கப்பட்ட, ”களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்” 895 ச.கி.மீ. புலிகளின் வாழ்விடமாகவும், 706.54 ச.கி.மீ. புலிகள் நடமாடுமிடமாகவும், மொத்தம் 1601.54 சதுரகிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், உதகமண்டலம் தாலுகாவிலுள்ள, 2007இல் அறிவிக்கப்பட்ட, “முதுமலை புலிகள் காப்பகம்” கேரளா, கர்நாடகா வனங்களை எல்லையாகக் கொண்டு, 321 ச.கி.மீ. புலிகளின் வாழ்விடமாகவும், 367.59 ச.கி.மீ. புலிகள் நடமாடுமிடமாகவும், மொத்தம் 688.59 சதுரகிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டம், இந்திரா காந்தி தேசிய உயிரியல் பூங்கா பகுதியில், கேரளா எல்லைவரையுள்ள, 2007இல் அறிவிக்கப்பட்ட, ஆனைமலை புலிகள் காப்பகம் 958.59 ச.கி.மீ. புலிகளின் வாழ்விடமாகவும், 521.28 ச.கி.மீ. புலிகள் நடமாடுமிடமாகவும், மொத்தம் 1479.87 சதுரகிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், 2013இல் அறிவிக்கப்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கோவை, நீலகிரி மாவட்டங்களையும், கர்நாடகா மலைகளையும் எல்லையாகக் கொண்டு, 793.49 ச.கி.மீ. புலிகளின் வாழ்விடமாகவும், 614.91 ச.கி.மீ. புலிகள் நடமாடுமிடமாகவும், மொத்தம் 1408.40 சதுரகிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
புலிகள் வாழ்விடமாக கண்டறியப்பட்ட, விருதுநகர், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய, மேகமலை – திருவில்லிபுத்தூர் புலிகள் காப்பகம் 2014இல் தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் (NTCA) முதன்மை ஒப்புதலைப் பெற்று மத்திய அரசின் அறிவிப்பிற்காக காத்திருக்கிறது.
நூறாண்டுகளுக்கு முன்பு சென்னை வண்டலூர் வனத்தில் கூட புலிகள் இருந்திருக்கின்றன. இப்போது உயிரியல் பூங்கா கூண்டுக்குள்தான் பார்க்க முடியும்.
புலிவேட்டை
புலிகளின் தோல், எலும்பு, பற்கள், நகம் என ஒவ்வொரு உறுப்பும் மருத்துவக் குணங்கள் கொண்டதாக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதற்காக சட்டவிரோதமாக புலிவேட்டை நடக்கிறது. இரை உணவுகளைக் கொன்று, அதன் மீது நஞ்சு தடவியும் புலிகளைக் கொல்கிறார்கள்.
கடந்த 2012 முதல் 2018 வரை 657 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு (NTCA) கூறுகிறது. அதில் 35 புலிகள் விபத்து உள்ளிட்ட காரணங்களாலும், 138 புலிகள் வேட்டையிலும் கொல்லப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் விபத்து உள்ளிட்ட காரணத்தால் 4 புலிகளும், வேட்டையால் 10 புலிகளும் கொல்லப்பட்டுள்ளன. மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், அசாம், சட்டீஸ்கர் கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேச மாநிலங்களில் அதிகளவு சட்டவிரோத வேட்டையில் புலிகள் கொல்லப்பட்டுள்ளன.
மனிதன் – புலி எதிர்கொள்ளல் சம்பவங்கள் உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அடிக்கடி நடக்கின்றன. அங்கே புலிகளைக் கொல்வதும் அதிகரித்து விட்டன.
2016ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் தும்மனட்டி பகுதியில் புலி தாக்கி, ஒரு பெண் உயிரிழந்தார். பொதுமக்களால் வனத்துறை வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. மக்களின் கோபம் தணிக்க அங்கே புலி சுட்டுக்கொல்லப்பட்டது.
ஆட்கொல்லிப் புலி-தேவை தெளிவான பார்வை
ஆட்கொல்லி புலி குறித்த சரியான பார்வை நம்மிடம் இல்லை. அதனால்தான் மும்பை உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலோடு நம்மால் ஒரு புலியைக் கொல்ல முடிகிறது.
ஆட்கொல்லி புலியா (man-eaters) என்பதை கண்டறிய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் விதிமுறைகளை வகுத்துள்ளது. நேரடியாக பார்ப்பது, கேமராவில் படம் பிடிப்பது, புலனாய்வு தகவல்கள் சேகரிப்பது, ஆய்வு செய்வது, எதுவும் இல்லாமல் ஆவ்னி (அப்புலிக்கு வைக்கப்பட்ட பெயர்) புலியைப் போன்று வேட்டைக்காரர்கள் மூலமாக சுட்டுக்கொல்வது வஞ்சம் தீர்ப்பதாகத்தான் கருதவேண்டியுள்ளது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010 நவம்பர் 21 முதல் 24 வரை நடந்த ஆசிய நாடுகளின் கூட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரகடனத்தில் (St. Petersburg Declaration), ஆசியாவின் அடையாளமாகத் திகழும் புலிகள் ஒரு லட்சத்தில் இருந்து 3500 ஆக சுருங்கி விட்டன. அதனால் 2020க்குள் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த வேண்டுமென தீர்மானமாக அறிவித்தார்கள். இந்தியா, வங்கதேசம், பூடான், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், ரஷ்யா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் அப்பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
இந்தியாவில் அதிகரிக்கும் புலிகள்
உலக புலிகள் மீட்புக்கான செயல்திட்டம் Global Tiger Recovery Programme (GTRP) உருவாக்கப்பட்டது. அம்மாநாட்டில்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 உலகப் புலிகள் நாள் (Global Tiger Day) கடைப்பிடிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக புலிகள் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுக்கப்பட்டன. புலிகள் காப்பகம் 18 மாநிலங்களில் இருந்தாலும், குஜராத், நாகலாந்து, மணிப்பூர், ஒடிசா காடுகளிலும், இந்திய எல்லையான நேபாளம், வங்கதேசம், பூடான் எல்லையோர காடுகளிலும் 2018ஆம் ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. புலிகளின் எச்சம், கால்தடம், மரங்களில் ஏற்படுத்தும் நகக்கீறல்கள் மூலம் புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன. மனிதனின் கைரேகைகள் போல, புலிகளின் உடலிலுள்ள கோடுகளும் வேறுபடுகின்றன. அதனை தானியங்கி கேமராக்கள் மூலமாக துல்லியமாக கணக்கிடுகிறார்கள்
இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில இந்திய அளவில் புலிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு முன்னர் 2006, 2010, 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பை மேற்கொண்டுவரும் மத்திய அரசும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளைத் தணிக்க, புலிகளின் பொருளாதார மதிப்பு பற்றிய கணக்கெடுப்பையும் மேற்கொண்டுள்ளன. பரப்பளவு, மாதிரி அளவீட்டின் தாக்கம் மற்றும் கேமரா கண்காணிப்பு அளவுகளில் மேற்கொள்ளப்பட்டும் இந்தப் புலிகள் கணக்கெடுப்புப் பணியானது உலகின் மிகப்பெரிய வனவிலங்கு கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் 2006ஆம் ஆண்டு 1411, 2010ஆம் ஆண்டில் 1706, 2014ஆம் ஆண்டில் 2266 என புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 20.01.2015இல் அறிவித்தது. தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தராகண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் புலிகள் பெருகி வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தின் வடபகுதியில் எண்ணிக்கை குறைந்துள்ளன. தமிழ்நாட்டில் 2006இல் 76, 2010இல் 163, 2014இல் 229 என புலிகள் அதிகரித்திருக்கின்றன.
2018 ஆம் ஆண்டில் நடந்த அகில இந்தியப் புலிகளுக்கான கணக்கெடுப்புக்கான அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்கில் இன்று (ஜூலை 29) வெளியிட்டார். அதன்படி, இந்தியாவில் தற்போது 2,977 புலிகள் இருக்கின்றன. இது 2014ஆம் ஆண்டில் இருந்த எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகமாகும்.  புலிகளுக்கான பாதுகாப்பு இடங்கள் 2015ஆம் ஆண்டில் 692லிருந்து 2018ஆம் ஆண்டில் 860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2014இல் 229 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, 2018இல் 264ஆக உயர்ந்துள்ளன. கிட்டத்தட்ட 3,000 புலிகளைக் கொண்டுள்ள இந்தியா புலிகளுக்கான உலகின் மிகப் பெரிய, பாதுகாப்பான வாழ்விடமாகத் திகழ்வதாக நரேந்திர மோடி தெரிவித்தார். இது ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கத் தக்கதாக அமைந்திருக்கிறது.
காடுகளின் தாங்கு திறன்
புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உணவு, நீர், வாழிடம், உயிர்ச்சூழல், கண்காணிப்பு, விழிப்புணர்வு, வேட்டைத்தடுப்பு, இடம்பெயர்வு இப்படி பல காரணிகள் உண்டு. புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில் அவற்றின் உணவிற்காக இரை விலங்குகள், இரை விலங்குகளுக்குத் தேவையான தாவரங்கள், தாவரங்களுக்குத் தேவையான நீர், நிலவளம் வேண்டும். நம் காடுகளின் தாங்கும்திறன் குறைந்து வருகிறது. காடுகளின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் புவி வெப்பமயமாக்கல், பருவநிலை மாற்றங்களின் விளைவுகளையும் எதிர்கொண்டு அரசு இதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.
புலிகள் பாதுகாப்பிற்காக செயல்படும் அதேஅரசுதான், இன்னொரு புறம் பெருநிறுவனங்களின் வளர்ச்சித்திட்டங்களுக்கு தாமதமின்றி அனுமதி கொடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுகிறது.
மத்தியப்பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா வனப்பகுதிகளில் கனிமவளங்களைச் சுரண்டும் சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மலைக்குன்றுகள் உடைக்கப்படுகின்றன, குவாரிகள், மணற்கொள்ளைகள் நடக்கின்றன. சத்தியமங்கலம் காப்பக பகுதியில் காவலர் பயிற்சி மையம் செயல்படுகிறது; துப்பாக்கிச்சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. களக்காடு புலிகள் காப்பகத்தில் தனியார் எஸ்டேட்களும், தோட்டங்களும் இருக்கின்றன. முதுமலை புலிகள் காப்பகத்தில் உதகமண்டலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. ஆனைமலை காப்பகத்தில் சாலைப்போக்குவரத்து இருக்கின்றது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் வனஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளன.
பழங்குடியினரோடு கை கோர்க்க வேண்டும்
உல்லாச விடுதிகள், வனவீடுகள், கல்லூரிகள், ஆயுர்வேதமையங்கள், ஆன்மீகத்தளங்கள், தொழில்நிறுவனங்கள் வரைமுறையின்றி பெருகி வருகின்றன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளும், ரயில்வே தண்டவாளங்களும் அமைக்கப்படுகின்றன என்று இந்திய தலைமைக் கணக்காளரின் (CAG) அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது.
இயற்கையைக் காத்தால், இயற்கை நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கையில்தான் நம் முன்னோர்கள் இயற்கையை இறையுணர்வுடன் வழிபட்டனர். பல்லுயிர்ச்சூழலோடு ஒன்றி வாழ்ந்தார்கள். பழங்குடிகளின் குலதெய்வப் பெயர்கள், விலங்குகளின் பெயர்களாகவே இருக்கின்றன.
மலைவாழ் மக்களின், பழங்குடி மக்களின் ஒப்புதலோடு, ஒத்துழைப்போடு திட்டங்கள் செயல்படுத்தும் போது வெற்றிகரமாக அமையும். வனங்களை விட்டு பழங்குடிகளை வெளியேற்றிவிட்டு, வேட்டைதடுப்பு காவலர்களை நியமித்து, அவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிர்வாக அமைப்பினால், எப்படி புலிகளைக் காக்க முடியும், காடுகளைக் காக்க முடியும்?
புலி பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திலும் பழங்குடிகளை வெளியேற்ற வேண்டும், மறுகுடியமர்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து தவறாமல் இடம் பிடிக்கிறது. அதே வேளையில் சூழலியல் சுற்றுலாவை ஊக்கப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் புலிகள் காக்கப்பட்டால், நதிகளின் தாய்மடியாகிய காடுகள் பாதுகாக்கப்படும்; ஆறு மாநில தாகம் தீர்க்கும் நீரூற்றான, மேற்குத் தொடர்ச்சி மலைகள் காக்கப்படும்; சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்கும், தஞ்சைக்கும், திருச்சிக்கும் காவிரி வரும், தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். மனிதனும் வாழ்வான், காட்டுயிர்களும் வாழும். வேங்கை மகனும் காட்டுக்குள்ளேயே வேட்டையாடுவான்.

நன்றி :minnambalam

செவ்வாய், 23 ஜூலை, 2019

தென்காசிக்கு பதிலாக,சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டுதான் தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.

தென்காசிக்கு பதிலாக,சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டுதான் தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.

நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்திலிருந்து ஒரு பகுதியை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் அது மாவட்டத்தின் மேற்கு கோடியில் உள்ள தென்காசியை தலைமையிடமாக கொண்டு செயல்படுமானால் அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மிகுந்த அதிர்ச்சுக்குரியது வேதனைக்குரியது.

குற்றாலம் என்னும் சுற்றுலா தலத்தை தவிர தென்காசியில் சொல்லி கொள்ளும் படி வேறு ஒன்றும் இல்லை.

தென்காசியை விட சங்கரன்கோவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம். குறிப்பாக மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நகரம். குருவிகுளம் தாலுகாவிலுள்ள அப்பநேரி போன்ற (கோவில்பட்டி அருகிலுள்ள) கிராம மக்கள் தென்காசி செல்ல வேண்டுமானால் சுமார் 80 கி.மீ பயணிக்க வேண்டும். சிவகிரி தாலுகா மக்கள் தென்காசியை அடையும் தூரத்தைவிட சங்கரன்கோவில் நகரை எளிதில் சென்றைடைய முடியும்.
1 ஆலங்குளம்
2 வி.கே.புதூர்
3 தென்காசி
4 செங்கோட்டை
5 கடையநல்லூர்
6 சிவகிரி
7 குருவிகுளம்
8 மேலநீலிதநல்லூர்
9 சங்கரன்கோவில் ஆகிய ஒன்பது தாலுகாவிலுள்ள மக்களும் அதிக பட்சம் 45 கி.மீட்டரில் வந்தடையும் மாவட்ட தலைநகராக சங்கரன்கோவில் இருக்கிறது.

தென்தமிழகத்தில் அதிகளவில் கைத்தறி மற்றும் பவர்லூம் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவது சங்கரன்கோவிலில்.

சங்கரன்கோவிலை சுற்று வட்டாரத்தில் அதிகளவு பூ பயிரிடப்பட்டு பெரிய வர்த்தகம் நடைபெறுகிறது. இங்குள்ள பூமார்கெட் மூலமாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கேரளா மற்றும் திருவனந்தபுரம் வழியாக வெளிநாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இங்கு 25க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளது.

தென் தமிழகத்தில் புகழ் பெற்ற வத்தல் மார்கெட் இரண்டு,  ஒன்று விருதுநகர் இன்னொன்று சங்கரன்கோவில்.

 மிகப்பெரிய எழுமிச்சை வர்த்தகம் நடைபெறும் புளியங்குடி எழுமிச்சை மார்கெட் சங்கரன்கோவிலுக்கு மிக அருகில் 16 கி.மீட்டரில்.

மிகப்பெறும் நூற்பாலைகள் மற்றும் ஜவுளி வர்த்தகங்கள் இயங்கி வருகிறது.

 இருநூறுக்கும் மேற்பட்ட கடைகளின் மூலமாக பெரும் காய்கறி வர்த்தகம் நடைபெறுகிறது.

 இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவன் மற்றும் ஒன்டிவீரன் பிறந்து , வருடந்தோறும் ஜெயந்தி விழா கொண்டாடப்படும் வரலாற்று சிறப்புமிக்க இடம் நெற்கட்டும்செவல் இருப்பது சங்கரன்கோவில் பகுதியில்.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மக்கள் கூடும் உலக புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா நடைபெறும் சங்கரநாராயணர் திருக்கோயில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஊர் சங்கரன்கோவில்.

சங்கரன்கோவில் அதிமுகவின்
 எஃகுகோட்டை

1991 முதல் இன்று வரை தொடர்ந்து 28 வருடங்களாக சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து  சட்டமன்றத்திற்கு அனுப்பபடும் எம்எல்ஏக்கள் அதிமுகவினர் மட்டுமே.

முன்னாள் அமைச்சர் சொ.கருப்பசாமி தொடர்ந்து நான்கு முறை

வி. கோபாலகிருஷ்ணன் ஒருமுறை

முத்துச்செல்வி ஒருமுறை

தற்போது இன்றைய அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வரை.

தகுதிபடைத்த சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டுதான் தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.

தாமிரபரணி படுகொலை ஜுலை 23.


தாமிரபரணி படுகொலை ஜுலை 23.

ரத்த சரித்திரம் - தாமிரபரணி படுகொலை  ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது, கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 போராளிகளை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற ஜுலை 23 தாமிரபரணி நினைவு தினம். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன் ...சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். 1930ல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும். 1948ம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரை தொடர்ந்தது. மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக சுமார் 5000க்கும் அதிகமான தோட்டத்தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். தேயிலை, காஃபி, ஏலம், மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. 1968ம் ஆண்டில் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், 1978ம் ஆண்டில் தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு தினமும் காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கொடுக்க வேண்டும் என்றும், 1988ம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் மாஞ்சோலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தது. 1998ம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர். இந்நிலையில் தென்காசி பாரளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமியிடம் மாஞ்சோலைப் பகுதி மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்தனர். ஆண்டாண்டு காலமாக கொத்தடிமை போல நடத்தப்படும், தொழிலாளர்களின் பரிதாப நிலையயை கேட்டறிந்த டாக்டர். கிருஷ்ணசாமி தேர்தல் முடிந்தவுடன் இதற்கொரு முடிவு கட்டுவோம் என்று உறுதியளித்தார். தேர்தல் முடிவுற்ற பின்பு மாஞ்சோலை பகுதி தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் புதிய தமிழகம் கட்சியினால் முன்வைக்கப்பட்டது. அதனை பிபிடிசி நிர்வாகம் 20.08.98க்கு முன்பாக நிறைவேற்றித்தர வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. பிபிடிசி நிர்வாகம், புதிய தமிழகம் கட்சியின், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் விளைவாக தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள். தங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தோள் கொடுக்க மாஞ்சோலை பகுதி மக்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்)., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கத்தையும் கலைத்து புதிய தமிழகம் தொழிற்சங்கம் என்ற ஒரே குடையின் கீழ் அணி திரண்டனர். 03.09.1998ல் எஸ்டேட் நுழைவாயிலை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஊத்து எஸ்டேட்டில் இருந்து தேயிலைத் தூள் ஏற்றிச் சென்ற தனியார் லாரி மறிக்கப்பட்டது. மறுநாள் 04.09.1998 எஸ்டேட் நிர்வாகத்தினரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். ஆனால் அதன்பிறகு மாஞ்சோலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து தாக்கினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து இழுத்துச் சென்றனர். 127தொழிலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சுமார் 6 மாத கால போராட்டத்திற்கு பின்பு ஜனவரி 1999 முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினார்கள். ஆனால், எஸ்டேட் நிர்வாகமோ தற்காலிகத் தொழிலாளர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைநிறுத்ததில் ஈடுபட்ட உங்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது? என கேள்வியெழுப்பியது. பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பல்வேறு சங்கடங்களை உண்டாக்கியது. தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது. இதனால் கொதித்தெழுந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 07.06.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரின் வீட்டை முற்றுகை இட்டனர். சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர். 451 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். தளராமல் மறுநாளும் 08.06.1999 முற்றுகையிட்ட 198 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 198 பெண்கள் உட்பட 653 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆளும் தி.மு.க. அரசோ தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 47 நாட்களாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 653 தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம், லட்சோப லட்சம் மக்கள் தன்னெழுச்சியாக புதிய தமிழகம் என்ற கட்சியின் பின்னால் அணி திரள்வதை சகித்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம் காவல்துறையின் மூலமாக கலவரத்தை கட்டவிழ்த்து விட திட்டமிட்டது. பேரணியை வழிநடத்திவந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர். தலைவர்களின் உயிருக்கும் குறைவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள். உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல் துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை. இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர். நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது. இப்படுகொலை நடந்த சில் நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது. சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா, அப்போதைய டி.ஜி.பி.குமாரசாமி, ஐ.ஜி. விபாகர் ஷர்மா ஆகியோர் இந்தப் படுகொலையை மூடி மறைக்கத் துணை போனார்கள். அரச பயங்கரவாதத்தை, படுகொலையை கட்டவிழ்த்து விட்ட கலெக்டர் தனவேல், கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்ற ஒன்றை ஒப்புக்கு அமைத்தது திமுக அரசு. பதினோரு மாத விசாரணைக்குப் பின்பு 27.06.2000 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நீதிபதி மோகன், ”பேரணிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர். நீரில் மூழ்கியதால் ஏற்ப்பட்ட இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்து தான்” என்று மனசாட்சியின்றி, மனிதாபிமானமின்றி அறிவித்தார். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மோகன் கமிசன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்த போது அந்த அறிக்கையை சட்டசபையிலேயே கிழித்தெறிந்து போர்குரல் எழுப்பினார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி. தனது கணவர் மாரியப்பன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக கைக்குழந்தையுடன் போராடிய ரத்தினமேரி அவரது பச்சிளம் குழந்தை விக்னேஷ் உடன் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது இன்னமும் நம் கண்களில் நிழலாடுகின்றது. நீதி கேட்டுப் போராடியவர்கள்???... 

சனி, 20 ஜூலை, 2019

வட இந்தியர்களின் கர்வத்தை தவிடுபொடியாக்கிய தமிழர்..1,265 கோடி சம்பளம் வாங்கும் முதல் இந்தியர்!


வட இந்தியர்களின் கர்வத்தை தவிடுபொடியாக்கிய தமிழர்..1,265 கோடி சம்பளம் வாங்கும் முதல் இந்தியர்!

ஹிந்தி தெரியாது, ஆனால் 1265 கோடி சம்பளம் வாங்கி, ஹிந்தி முக்கியம் என்று கூறும் மத்திய அரசுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார் ஒரு தமிழன்.

இன்று யாராவது ஒரு லட்சம் ரூபாய் மாத சம்பளம் வாங்கினால் வாயை பிளந்து பார்ப்போம்.

ஆனால், ஒருவர் ஆண்டுக்கு 1265 கோடி சம்பளம் வாங்குகிறார். அதுவும் அவர் தமிழன் என்பது தான் முக்கியமான ஒன்று.

அவரின் பெயர் தான் சுந்தர் பிச்சை. அவரது அப்பா ரகுநாத பிச்சை, அம்மா லட்சுமி. மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், படித்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.

அதன்பின்னர் கோரக்பூர் ஐ.ஐ.டியில் உயர் படிப்பை முடித்து கடந்த 2004-ம் ஆண்டு தான் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இவரது திறமையை பார்த்த கூகுள் நிறுவனம், சி.இ.ஓ. பதவியை வழங்கி சிறப்பித்தது.

கூகுள் மற்றும் யூடியூப் போன்றவற்றில் எப்படி எல்லாம் விளம்பரம் செய்து வருமானத்தை பெருக்கலாம் என்று புதிய ஐடியாக்களை கொடுத்து, நிறுவனத்தின் வருமானத்தை உயர்த்தினார்.

அதனால் அவரது சம்பளத்தை உயர்த்தி கொடுத்தது கூகுள் நிறுவனம். கடந்த 2015-ல் அவரது சொத்து மதிப்பு 4150 கோடி ரூபாயாக இருந்தது.

அதன்பிறகு 2016-ம் ஆண்டு அவருக்கு ஆண்டு சம்பளமாக 1265 கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் வழங்கியது.

இப்படிப்பட்ட மிகப்பெரிய இடத்தில் இருக்கும் சுந்தர் பிச்சை, அவர் படித்த கோரக்பூர் ஐ.ஐ.டிக்கு சென்று உரையாற்றிய போது, அவரிடம் மாணவர்கள் ஹிந்தியில் கேள்வி கேட்டுள்ளனர்.

அப்போது, தனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர வேறு எதுவும் தெரியாது. இந்த இரண்டு மொழிகளில் கேளுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அங்குள்ள மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதன் மூலம், ஹிந்தி தேசிய மொழி என்று பிரச்சாரம் செய்யும் சிலருக்கு அவர் சாட்டையடி கொடுத்துள்ளார்.

#படித்தேன் பகிர்ந்தேன்

"புத்தர் - அசோகர் - சுற்றுச் சூழல்."


"புத்தர் - அசோகர் - சுற்றுச் சூழல்."
-------------------------------------------------------
    உலகச் சுற்றுச் சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து முதன் முதலில் அறிவுறுத்தியவர் புத்தர் ஆவார்.

ஆறாண்டு காலம் தீவிரமான மானுடவியல் ஆய்வில் ஈடுபட்ட புத்தர், பல்வேறு முரண்கள் குறித்தும் தம் கவனத்தைச் செலுத்தினார். அதில் ஒன்று சுற்றுச்சூழலின் ஆதாரமான மரங்கள் குறித்ததாகும்.

வெயில், மழை, குளிர், காற்று, நோய் போன்றவற்றிற்குத் தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ள, புத்தர் மரங்களையும், செடி கொடிகளையும் ஆய்வு செய்து மருத்துவ முறைகளையும் உருவாக்கினார்.

அப்படியான ஆய்வு முறைகளில் ஈடுபட்ட போது, பல்வேறு மரங்களின் அடியில் தங்கி, தன்மூச்சுக்காற்றை ஆய்வு செய்தார். இறுதியாக பகலிலும், இரவிலும் தூயக் காற்றை வெளியிடும் அரச மரத்தடியைக் கண்டுணர்ந்து தன் இறுதி காலம் வரை அம்மரத்தையே பயன்படுத்தினார். புத்தரை அரசர் என்றும் அழைப்பதால் அம்மரத்திற்கும் அரச மரம் எனப் பெயராயிற்று.


அசோக மன்னர் மாபெரும் கலிங்கப் போருக்குப் பின் புத்த நெறியைத் தழுவினார் எனப் படித்திருப்போம். ஆனால், ஏன் தழுவினார், எப்படித் தழுவினார் எனத் தெரியாது.

கலிங்கப் போரில் ஏறத்தாழ ஒரு லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர்; ஒன்றரை லட்சம் வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்; ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்தனர்.

அசோக மன்னர் பிணங்களுக்கும், உடல் உறுப்புகளை இழந்து துடிக்கும் சதைப் பிண்டங்களுக்கும் நடுவே நடந்து வருகிறார். பிள்ளைகளை இழந்த தாய்மார்களும், கணவனை இழந்தப் பெண்டிரும் கதறி அழுகின்றார்கள்.

அவர்களின் சாபக் குமுறல்களைக் கேட்டவாறே இரத்த வாடையோடும், பிணவாடையோடும் மனம் விம்ம நடந்து வருகிறான் அசோகன். அவனது உள்ளம் துடிக்கின்றது; உயிரும் துடிக்கின்றது.

அப்படியே போர்க்களம் கடந்து , அடர்ந்து செழித்த வனத்தின் நடுவே நடந்து, அங்கே  அமைந்துள்ள ஒரு புத்தத் துறவியின் குடிலை வந்து அடைகின்றான்.

தியானத்திலிருக்கும் துறவியின் பாதம் அருகே மண்டியிட்டு அசோகன் அமர்ந்து இருப்பதைக் கண்ட, துறவியின் சீடர்கள் அதிர்ச்சியடைந்து, திகைத்தவாறு நிற்கின்றனர்.

அசோகன் முறையிடுகின்றான்: "லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று விட்டேன். என் நாசியில் வீசும் இரத்த வாடை என் மனதைச் சிதைக்கின்றது. என் பாவம் போக்க வழி சொல்லுங்கள்" என்கின்றான்.

"உன் வாள்முனையை விட, உன் வாய் முனைக்கு வலிமை அதிகம் அசோகா.. உயிர்களை எடுப்பவன் அரசன் அல்ல. உயிர்களைக் காப்பவனே அரசன். " என்று துறவி கூறுகின்றார்.

"அசோகா.... எத்தனை உயிர்களைக் கொன்றாயோ, எத்தனை உயிர்களை வதைத்தாயோ, அதற்கு மூன்று மடங்கு மரங்களை, நீ ஆளும் தேசம் முழுவதும் உயிர்ப்பித்து உருவாக்கு. அவை எண்ணிலடங்கா உயிர்களை உருவாக்கி, எண்ணிலடங்கா உயிர்களுக்கு அடைக்கலமாகும். இதுவே உன் பாவத்தை நீர்க்கச் செய்யும் " என்று துறவி அறிவுறுத்துகிறார்.

அவரது சொல்லுக்கிணங்க நாடு முழுவதும் பயனுறு மரங்களை நட்டு எண்ணிலடங்கா உயிர்கள் உவக்க, உவக்க அரசாட்சி செய்தான்.


புத்தரின் நினைவாக தம்மக் கருத்துகள் நாடு முழுவதும் பரப்பப்படுவதை சுட்டும் விதமாக தம்மநெறி சக்கரம் சுழலுவது போன்ற ஒரு கல் தூணை நட்டு, 'சக்கரவர்த்தி' எனும் பெயர் பெற்றான்.

இன்றும் உலகம் முழுவதும் தம்மச் சக்கரம் சுழன்று கொண்டே இருப்பதற்குச் சான்றாய், உயிர்களை உயிர்ப்பிக்கும் நிலையும், காக்கும் நிலையும் தொடர்கின்றன.

உலகச் சுற்றுச்சூழலின் அவசியம் குறித்து முதலில் அறிவுறுத்தியவர் புத்தரும், புத்த தம்மமுமே.

                       

வெள்ளி, 19 ஜூலை, 2019

33 ஆண்டு கால கனவு நனவாகிறது தென்காசி தனி மாவட்ட அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி




33 ஆண்டு கால கனவு நனவாகிறது தென்காசி தனி மாவட்ட அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

  தென்காசி பகுதி மக்களின் 33 ஆண்டு கால கோரிக்கையான தனி மாவட்ட கோரிக்கை நிறைவேறியுள்ளது. ‘மக்களின் குரலை’ ஏற்றுக் கொண்டு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனி மாவட்டமாக்கப்படும் என்று அறிவித்ததை பொதுமக்களும் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். நெல்லை மாவட்டம் என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டம் 1790ம் ஆணடு செப்டம்பர் 1ம் தேதி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்ெபனியால் உருவாக்கப்பட்டது. அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைந்து இருந்தன.

சுதந்திரத்திற்கு பிறகு 1986ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தினை பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போதே தென்காசியையும் பிரித்து தனி மாவட்டமாக்கும்படி மக்கள் கோரினர். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக வலுப்பெற்ற கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. தமிழகத்தின் தென்பகுதியில் 6 ஆயிரத்து 823 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நெல்லை மாவட்டம் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30 லட்சத்து 72 ஆயிரத்து 880 பேர் வசிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் இதுவரை தென்காசி, கடையநல்லூர், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம், சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் , நான்குனேரி உள்ளிட்ட 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய தொகுதிகள் நெல்லை மக்களவை தொகுதியிலும், தென்காசி கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய நான்கு தொகுதிகளுடன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாளையம், வில்லிபுத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகளும் சேர்ந்து தென்காசி மக்களவை தொகுதியாக இடம் பெற்றுள்ளது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், செங்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, சிவகிரி, நான்குனேரி, ராதாபுரம், வீரகேரளம்புதூர், ஆலங்குளம், கடையநல்லூர், திசையன்விளை, திருவேங்கடம், மானூர், சேரன்மகாதேவி ஆகிய 16 தாலுகாக்கள் உள்ளன.

நெல்லை மாவட்டம் இப்படி பரந்து விரிந்து கிடப்பதால் மாவட்டத்தின் எல்லையில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகளுக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக மாவட்ட எல்லையான புளியரை கோட்டை வாசலில் இருந்து நெல்லைக்கு சுமார் 80 கிலோமீட்டரும், சிவகிரியிலிருந்து நெல்லைக்கு சுமார் 95 கிலோமீட்டரும் மக்கள் பயணிக்க வேண்டியுள்ளது. மருத்துவ மேல்சிகிச்சைக்காக நெல்லைக்கு வர வேண்டும் என்றால் மிகவும் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே பிற்கால பாண்டிய மன்னர்களில் ஒருவரான பராக்கிரம பாண்டியரின் ஆட்சி தலைநகராக விளங்கிய தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 33 ஆண்டுகளாக செவிமடுக்கப்படாமலே இருந்து வந்தது. பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக கருப்பசாமி பாண்டியன்,  சரத்குமார்,  அமைச்சர் ராஜலட்சுமி, செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் முதல்வரை சந்திக்கும்போதெல்லாம் முதல் கோரிக்கையாக இதனையே விடுத்து வந்தனர். மிகச் சமீபத்திய கோரிக்கையான கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் கோரிக்கை கூட நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் தென்காசி தனி மாவட்ட கோரிக்கை 33 ஆண்டுகளாக காலம் தாழ்த்தப்பட்ேட வந்தது.

 தனி மாவட்டத்திற்கான அனைத்து தகுதிகளும் இருந்தும் ஏதோ காகிதத்தில் சில கணக்குகளை எழுதி வருவாய் கோட்டம் இல்லை, மக்கள்தொகை இல்லை,  வருவாய் கிராமங்கள் போதுமானதாக இல்லை என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சாக்குபோக்கு சொல்லி தனி மாவட்ட கோரிக்கை தள்ளி வைக்கப்பட்டு வந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தென்காசியில் அதிமுக சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியனின் கோரிக்கையை ஏற்று தனி மாவட்ட கோரிக்கையை பரிசீலிப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இரண்டே வாரத்தில் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானிய கோரிக்கையின் போது தனி மாவட்ட கோரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

3 வருவாய் கோட்டங்கள், 16 தாலுகாக்கள் என சிவகிரி முதல் திசையன்விளை வரை பரந்து விரிந்து காணப்பட்ட நெல்லை மாவட்டத்தில் அதன் பரந்த நிலப்பரப்பு காரணமாகவே பல்வேறு வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க முடியாத சூழல் நிலவியது.  மாவட்ட பிரிவினை மூலம் நெல்லை மட்டும் அல்ல புதிய மாவட்டமும் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தமிழக வரலாற்றில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக அருகாமையில் உள்ள தூத்துக்குடி, அதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.  தற்போது தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் தலைநகரமான தென்காசியின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.  குறிப்பாக கலெக்டர் அலுவலகம்,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்,  மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள்,  பொதுப்பணித்துறை,  நெடுஞ்சாலைத் துறை,  மின்சார வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளின் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகங்கள்,  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,  மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம்,  சிறைத்துறை அலுவலகங்கள்,  பள்ளிக்கல்வித்துறை, கல்லூரிக் கல்வித்துறை அலுவலகங்கள் உள்ளிட்டவை தென்காசியில் புதிதாக அமைக்கப்படும். இதுதவிர இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியான இம்மாவட்டம் தமிழக சுற்றுலாத்துறையில் மேலும் சிறப்பிடம் பெற்று வளரும்.

புதிய திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கும் பார்வையிடுவதற்கும் ஆய்வு செய்வதற்கும், வளர்ச்சி திட்டங்களை தீட்டுவதற்கும் அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும்.  புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலம் இன்னும் சிறப்படைய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். தென்காசி தனி மாவட்ட அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக அமைப்பினர், பொதுநல அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், பல்வேறு சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நெல்லை பெரிய மாவட்டமாக உள்ளதாலும், நிர்வாக வசதிக்காக தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக்க வேண்டும் என ‘தினகரன்’ நாளிதழ் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்களின் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தது. கடந்த ஜன.27ம் தேதி ‘மக்களின் குரல்’ பகுதியில்  அரை பக்க கட்டுரை வெளியிடப்பட்டது. ‘தினகரன்’ நாளிதழ் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது தனி மாவட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும்

தென்காசி தனி மாவட்ட அறிவிப்பு வெளியானது குறித்து செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ கூறியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தோம். சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சட்டமன்றத்திலும் குரல் கொடுத்தேன். சமீபத்தில் தென்காசிக்கு வருகை தந்த முதல்வர், தனி மாவட்ட கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக அறிவித்திருந்தார்.

வெகுசீக்கிரத்திலேயே தற்போது சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது 110 விதியின் கீழ் தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகளை, அது எவ்வளவு பெரிய வாக்குறுதியாக இருந்தாலும் நிறைவேற்றும் என்பதற்கு தனி மாவட்ட அறிவிப்பு ஒரு எடுத்துக்காட்டாகும், என்றார்.

தொடர் போராட்டத்துக்கு வெற்றி

வாஞ்சி இயக்க நிறுவனர் ராமநாதன் கூறுகையில், 1986ம் ஆண்டு எம்ஜிஆர் நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கியபோதில் இருந்து தனி மாவட்ட கோரிக்கை விடுத்து வருகிறோம். மிகவும் காலம் தாழ்த்தப்பட்ட அறிவிப்பாக இருந்தாலும், இதனை வரவேற்கிறோம். 33 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை மாவட்டக் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தி வந்தோம். இதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து அவரது கவனத்தை ஈர்க்கும் விதமாக அவரது தொகுதியில் போட்டியிட்டேன். தனி மாவட்ட அறிவிப்புடன் நின்றுவிடாமல் தனி அலுவலரை நியமித்து மாவட்ட பிரிவினைக்கான பணிகள், புதிய மாவட்டத்தின் எல்லைகள் இடம்பெற வேண்டிய தொகுதிகள், தாலுகாக்கள், வருவாய் கிராமங்கள் ஆகியவற்றை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

எவை, எவை?

தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய தொகுதிகள் தென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் என தெரிகிறது. இதேபோல தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, சிவகிரி, வீ.கே.புதூர், ஆலங்குளம் சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய தாலுகாக்கள் சேர்க்கப்படும் என தெரிகிறது.

சங்கரன்கோவில் தனி கோட்டம்

நெல்லை மாவட்டத்தில் தற்போது நெல்லை, சேரன்மகாதேவி, தென்காசி என 3 கோட்டங்கள் உள்ளன. தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்படும் போது தென்காசி கோட்டம் மட்டுமே அதனுடன் இடம் பெறும். எனவே நிர்வாக வசதிக்காக நெல்லை கோட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி ஆகிய தாலுகாக்களை பிரித்து சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு தனி கோட்டம் உருவாக்கப்படும் என வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விரைவில்  தனி அலுவலர்

தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் எத்தனை கிராமங்கள், பிர்காக்கள், தாலுகாக்கள், கோட்டங்கள் இடம் பெறும் என்பது குறித்து இனி தான் முடிவு செய்யப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார். அதற்கு பிறகே தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் எங்கு கட்டலாம், அதற்கு தகுந்த இடங்கள், கையகப்படுத்த வேண்டிய நிலங்கள் குறித்து தனி அலுவலர் அரசுக்கு பரிந்துரைப்பார்.
நன்றி தினகரன்.

வியாழன், 18 ஜூலை, 2019

நடிகர் சூர்யாவின் 10 கேள்விகள்


நடிகர் சூர்யாவின் 10 கேள்விகள்;
========================

1.முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?

2.மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா?

3.நாட்டில் 1848  பள்ளிகள் மூடப்படப்போகிறதே இதற்கு பதில் என்ன?

4.கல்வியில் சிறந்த நாடுகளில் 8ம் வகுப்பு வரை எந்த தேர்வும் இல்லை என்கிற நிலையில் 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது எப்படிச் சிறந்த கல்வியாகும்?

5.நுழைவு தேர்வு, பொதுத் தேர்வு, தகுதி தேர்வு, நீட் தேர்வு என்று மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதிக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது?

6.ஒரு லட்சத்து 80 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது?

7.ஐம்பது ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும், கோச்சிங் செண்டர்கள் அதிகரிப்பதும்தான் புதிய கல்வி கொள்கையா?

8.சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரேயொரு ஆசிரியர் அமைப்பும், ஒரேயொரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம்?

9.விதவிதமான கல்வி முறைகளை வைத்துக் கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படிச் சரியாகும்?

10.எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் ஏன் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன்?

ஞாயிறு, 7 ஜூலை, 2019

ராகுல் காந்தியின் ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விஷயங்கள்..

ராகுல் காந்தியின் ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விஷயங்கள்..

தேர்தல் ஆணையம்,
நீதிமன்றம்,
பத்திரிகை,
தொலைக்காட்சிகள்
நடுநிலையாக இல்லை என்பதும்,

அவற்றை எப்படி பிஜேபி கடந்த ஐந்தாண்டுகளில் சிதைத்தது என்பதும்

அவர் குறிப்பிட்டுள்ள கவலைக்குரிய விஷயங்கள்!

EVM, EC இவ்விரண்டின் முழுமையான ஒத்துழைப்புடன்
பிஜேபி தேசமெங்கும் பல்லாயிரக்கணக்கான தில்லுமுல்லுகளை வஞ்சகமாக செய்தே
தேர்தலில் வென்றது!
அவற்றை  ஈடு செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தன் சொந்த தொகுதிகளில்கூட  வெற்றிக்கு உண்மையாக, எச்சரிக்கையாக உழைக்கவே இல்லை என்ற அலட்சியந்தான் காங்கிரஸின் படுதோல்விக்கு அடித்தள காரணம்!

"ஒரு கட்டத்தில் தனித்து விடப்பட்டேன்" என்றும்,

*ஒற்றை ஆளாய் பிஜேபியின் குண்டர்களையும்,

அதன் பணபலத்தையும்,

மதவெறி அரசியலையும்,

நடுநிலை தவறிய தேர்தல் ஆணையம்,

நீதிமன்றம்,

மீடியா

போன்றவற்றை எதிர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்" என்றும்

சகிக்கவே இயலா வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்!

அவர் கூறியுள்ள அனைத்துமே மறுக்கவே முடியாத உண்மை!

காங்கிரசில் இருந்துக்கொண்டு,
பதவி சுகம் அனுபவித்துக்கொண்டே காங்கிரஸ் வெற்றிக்கு சிறிதும் உழைக்காமல் இருந்த மூத்த தலைவர்களால் இன்று தேசம் மற்றுமோர் ஐந்தாண்டுகளுக்கு
RSS ன் நிர்வாகத்திற்குள் சிக்கிக்கொண்டது!

இன்றைய தலைமுறை, ஒரு சிறந்த இளைய  தலைவரை,
நேர்மையான மனிதரை தேசம் இழந்துவிட்டது!

இன்றைய
இந்த அவல நிலைக்கு
இதுதான் அடிப்படை காரணம்:

தேசம் சுதந்திரமடைந்த அந்த நொடியிலிருந்தே  காங்கிரஸ் கட்சியிலும், நேருவின் ஆட்சியிலும்...

RSS தனது நெடுங்காலத் திட்டமிட்டே... 
ஏராளமான இந்துத்துவாவினர்களை வஞ்சகத் தந்திரமாகத் திணித்து விட்டது!

அதுவே...
இந்திராவின் ஆளுமையிலும் திணிப்புக்கள் தொடர்ந்தது!

இன்றும் திணிப்புக்கள் தொடர்கிறது!

தேசமக்களால் சட்டென அடையாளமே தெரிந்துக்கொள்ளவே முடியாத அளவுக்கு...

காங்கிரஸ் உட்பட அனைத்து
தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிலும் ஆன்மீக இயக்கங்களிலும் கோடிக்கணக்கான
RSS பயங்கரவாத *கைக்கூலிகள் இன்று  திணிக்கப்பட்டு விட்டனர்!

ஹிட்லர் முஸோலினிகளைவிட
கேவலமான கொடூரர்களான
இன்றைய RSS ன் தலைமை நிர்வாகிகள் நரேந்திர மோடி,
அமித் ஷா இவர்களால் தினந்தோரும், அயோக்கியத்தனங்களில் வெகுசிறப்பாக பயிற்சியளிக்கப்படுகின்றனர்... இந்த கூலிப்படையினர்!

அநியாய அட்டூழியக் கொலைகள் புரிவதில் இன்பம்காணும்
படுபயங்கரமான இன்னொரு இஸ்ரேலியர் கூட்டம்... RSS!

நீதி வழுவாத வெகுசில நீதிபதிகளால் நேர்மையாக அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வாய்மையான தீர்ப்புக்களால்...
தேசத்தில் இன்று மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியுங்கூட வெகுவிரைவில் உருக்குலைந்துப்
போய்விடும் அபாயம் இருக்கு!

மாபெரும் புரட்சியை நோக்கி...
அதிவேகமாகச் சென்றுக்கொண்டிருக்கிறது...
உலகிலேயே மிகப்பெரிய நம் குடியரசு தேசம்!

சனி, 6 ஜூலை, 2019

பட்ஜெட் 2019 சிறப்பு பார்வை:


பட்ஜெட் 2019 சிறப்பு பார்வை:

1. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படும்.

2. கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

3. நாடு முழுவதும் பயணம் செய்ய ஓருங்கிணைந்த கட்டண முறையில் பயண அட்டை வழங்கப்படும்.

4. ரயில்வே திட்டங்களை மேம்படுத்த 2030 ம் ஆண்டில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

5. ரயில், பஸ் என அனைத்திற்கும் ஒரே பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும்.

6. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு

7. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி

8. வர்த்தகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்

9. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி முதலீடு

10. ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

11. ஒரே நாடு ஒரே மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்.

12. பிரதம மந்திரி கர்மயோகி திட்டம் அமல்படுத்தப்படும்.

13. சில்லறை, வணிகம், விமானத்துறை உள்ளிட்டவற்றில் கூடுதல் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்.

14. என்ஆர்ஐ முதலீடுகளுக்கு விதிகள் தளர்த்தப்படும்.

15. தொழில் துவங்குவதற்கான கொள்கைகள் மேலும் தளர்த்தப்படும்.

16. முதலீடுகளுக்கான விண்ணப்பங்கள் மேலும் எளிமையாக்கப்படும்.

17. 2022 ம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்.

18. பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிளாஸ்டிக்கை பயன்படுத்தி 33,000 கி.மீ., தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்படும்.

19. 2022 க்குள் 1.95 கோடி வீடுகள் ஏழைகளுக்கு கட்டித்தரப்படும்

20. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.80,250 கோடியில் 1,25,000 கி.மீ., சாலைகள் மேற்படுத்தப்படும்.

21. விவசாய துறைக்கு மண்டலம் வாரியாக முன்னுரிமை வழங்கப்படும்.

செய்தி தொகுப்பு
அ.சா.அலாவுதீன்.
மூத்த நிருபர்
கீழை நியூஸ்

22. நாடு முழுவதும் 75,000 பேரை தேர்வு செய்து தொழில் பயிற்சி வழங்கப்படும்.

23. 10,000 விவசாய உற்பத்தியாளர் சங்கம் உருவாக்கப்படும்.

24. 2024 ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர்

25. நீர் மேலாண்மைக்கு தனித்திட்டங்கள் கொண்டு வரப்படும்.

26. வரும் அக்டோபர் மாதம் காந்தி பிறந்தநாளுக்கும் தூய்மை இந்தியா திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

27. மாணவர்களின் திறனை மேற்படுத்தவும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்படும்.

28. புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.

29. இளைஞர்களுக்கு காந்தி பீடியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

30. சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள் ரயில் பாதைகளுடன் இணைக்கப்படும்.

31. தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்

32. சர்வதேச வேலைவாய்ப்புக்களை பெறும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

33. புதிதாக உருவாகும் தொழில்களுக்கென பிரத்யேக டிவி சேனல்

34. சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோக்கள்

35. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி முதலீடு

36. வீட்டு வாடகை ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வரப்படும்

37. காப்பீட்டு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி

38. விண்வெளி வர்த்தக வாய்ப்புக்களை பயன்படுத்த இஸ்ரோவின் கீழ் புதிய நிறுவனம் அமைக்கப்படும்.

39. ஊடகம் மற்றும் வான்வழி சேவைகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கப்படும்.

வெள்ளி, 5 ஜூலை, 2019

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ்........... தொடர்பான பிரச்சினை..


அவசியம் படியுங்கள்...பகிர்வு செய்தி

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்களுக்காக #ஐஏஎஸ், #ஐபிஎஸ்........... தொடர்பான பிரச்சினை.....

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான தேர்வு எந்த மொழியில் நடந்தது...?

1950 முதல் 1965 வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடந்தது

அப்போது தேர்வு எழுதியவர்கள் யார்?

உயர் சாதிக்காரர்கள் (பிராமணர்கள்) மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர்.... அதனால் அவர்கள் மட்டுமே தேர்வு எழுதி, வெற்றி பெற்று பதவிகளை அடைந்தனர்....




இட ஒதுக்கீடு அப்போது இருந்ததா?

பெரியாரின் முயற்சிகளால் முதல் சட்டத்திருத்தம் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே இருந்தது,

ஆனால் அவர்கள் கல்வியறிவே இல்லாதவர்களாக, அதற்கும் மேலாக ஆங்கிலம் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் இருந்தார்கள்.....எனவே அந்த இட ஒதுக்கீடு பிராமணர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை...





1965 ல் என்ன நடந்தது?



ஐஏஎஸ் தேர்வு இனி மேல் இந்தியில் மட்டுமே நடக்கும் என்று அறிவித்தார்கள்...

அதன் விளைவு என்ன?

இந்தி மொழி பேசுபவர்களைத் தவிர யாரும் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியாது.

இந்தி பேசும் மாநிலங்களில் பிராமணர்கள் தவிர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் யாரும் படிப்பதற்கான சூழல் இல்லை.

பிற மாநிலங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் யாருக்கும் இந்தி தெரியாது. அதனால் பிராமணர்களுக்கு போட்டியே இல்லாமல் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது....




1965 ல் மத்திய அரசு அப்படி ஒரு முடிவு எடுத்த போது. மாநிலங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதனால் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு இல்லை....

ஆனால் மெட்ராஸ் என்ற பெயரில் தமிழ்நாடு என்று​ ஒரு மாநிலம் இருந்தது.  அண்ணா என்ற தலைவர் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து, போராட்டம் நடத்தி மாநிலத்தை ஸ்தம்பிக்கவைத்தார்...... மத்திய அரசு அடி பணிந்தது....

தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடக்கத் தொடங்கின....





ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு எழுதுபவர்கள் எந்த வகுப்பினர்?

பெரும்பாலும் பிராமணர்களே....

பிறகு என்ன நடந்தது?

அண்ணாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த கலைஞர் ஐஏஎஸ் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்...


அவருக்கு ஆதரவாக காமராஜர் காங்கிரஸ் கட்சி சார்பில் "மாநில மொழிகளிலும்  ஐஏஎஸ் தேர்வு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, இந்திரா காந்தி காலத்தில் நாடாளுமன்றத்திலும் அதே தீர்மானம் நிறைவேற்ற செய்தார்....



அதன் விளைவு என்னவாக இருந்தது?

1974 ம் ஆண்டு கோத்தாரி அவர்கள் தலைமையில் ஐஏஎஸ் தேர்வில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பான கமிட்டி உருவாக்கப்பட்டு. அந்த கமிட்டி 1978 ல்  "மாநில மொழிகளிலும் ஐஏஎஸ் தேர்வுகளை நடத்த வேண்டும்" என்ற பரிந்துரையை சமர்ப்பித்தது.


அதன் விளைவாக 1979 ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் தேர்வுகளை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இருக்கும் எல்லா மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிப்பு வந்தது.




நல்ல விசயம் நடந்திருக்கே!!! அப்படின்னா தமிழ் வழியில் படித்தவர்களும் ஐஏஎஸ் ஆகலாம் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கே!!!!! மகிழ்ச்சி.....



ரொம்ப சந்தோஷபட வேண்டாம், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது..... இப்போது வரை சரி செய்யப்படவில்லை.....

என்ன சிக்கல் அது?




ஐஏஎஸ் தேர்வில் விடைகளை தமிழில் எழுதலாம், ஆனால் கேள்விகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருக்கும்.



அப்படி என்றால் கேள்வி புரியாமல் எப்படி தமிழில் பதில் எழுதுவது?



நிச்சயம் முடியாது!!!! அது தான் தேர்வு நடத்துபவர்களுக்கு வேண்டும். இதற்கே ஆச்சர்யப்பட்டால் எப்படி.....


ஐஏஎஸ் தேர்வில் மெயின் (main) தேர்வுகள் மட்டுமே தமிழில் விடை எழுத முடியும்.


ஆனால் அதற்கு முன்பு பிரிலிமினரி (preliminary) தேர்வு என்பது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் மெயின் தேர்வு.....



அப்படி என்றால் ஐஏஎஸ் தேர்வு தமிழில் எழுதலாம் என்று மக்கள் நம்புவது?



Preliminary தேர்வு தமிழில் நடக்குமா, மெயின் தேர்வு கேள்விகள் தமிழில் இருக்குமா என்றா மக்கள் கேள்வி கேட்பார்கள்...... அது தேர்வு எழுதுபவர்களின் பிரச்சினை.



உதாரணமாக காவிரிக்கு குறுக்கே அணை கட்ட போறாங்கன்னு சொன்னா முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் வருத்தப்படுவாங்களா? இல்ல தாமிரபரணி பாசன விவசாயிகள் வருத்தப்படுவாங்களா? நகரத்துல வசிப்பவர்களுக்கு இதெல்லாம் பெரிதாக படாது, ஆனால் ஏதோ உணர்வு மட்டும் இருக்கும்ல,

 அது மாதிரி ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவு வந்து, அதுல தமிழில் எழுதி பாசானால், அவர் புரோட்டா மாவு பிசைந்து ஐஏஎஸ் ஆனார், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் படிப்பார், ஆடு மேய்த்து ஐஏஎஸ் ஆனார் என்று பத்திரிக்கையில் செய்தியை பார்த்துவிட்டு தமிழனாக பெருமைப்பட்டு உணர்வை வெளிப்படுத்துவோம்..... அவ்வளவுதான்....




அப்புறம், இது போல

இந்த தேர்வில் வேறு என்ன பிரச்சனை இருக்கிறது??



70 வருசமா இட ஒதுக்கீடுனால இந்த நாடு முன்னேறாமல் போச்சு, இட ஒதுக்கீட்டால திறமையானவர்கள் அடிபட்டு போய்விடுகிறார்கள்....மெரிட் தான் முக்கியம் அப்படின்னு நம்ம நாட்டுல அடிக்கடி பேச்சு அடிபடும். அது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேச வைக்கும் உத்தி....


அப்படின்னா??????




ஐஏஎஸ் தேர்வில் இடஒதுக்கீடு ஒதுக்கீடு என்பது 1990 ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிசன் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் வழங்கிய பிறகுதான் 1994 முதல் தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது..



அப்படின்னா பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆரம்பித்து 24 வருடங்கள் தான் ஆகுதா?

ஆமா, ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே 70 ஆண்டுகளா இட ஒதுக்கீடுனால நாடு சீரழிந்து போயிடுச்சுன்னு பேசுவாங்க..... அதான் வேடிக்கை.



ஆனால் இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவிகிதம், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் மேல் சாதியினர் பாதிக்கப்படமாட்டாங்களா?


இது மூன்றையும் கூட்டினால் 49.5 சதவிகிதம் வருகிறது.


மீதமுள்ள 50.5 சதவிகிதத்தில் பிற சாதியினர் வராதவாறு, ஐஏஎஸ் தேர்வை நடத்தும் யுபிஎஸ்சி பார்த்துக் கொள்ளும்...

அப்படி என்றால்????????



மேல் சாதியினருக்கு அறிவிக்கப்படாத 50.5 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறது என்பது தான் உண்மை.



அது எப்படிங்க சொல்றீங்க?



மத்திய பணியாளர் நல அமைச்சக ஆண்டறிக்கை DoPT (2017-18) படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட மத்திய அரசு Group A பணிகளில் 13.02 சதவிகிதம்​ பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்​ 13.38 சதவிகிதம் பேரும், பழங்குடியினர் 5.92 சதவிகிதம் பேர் மட்டுமே உள்ளனர். இப்போ இது மூன்றையும் கூட்டினால் எவ்வளவு சதவிகிதம் வருகிறது....

மொத்தம் 32.32 சதவிகிதம் மட்டுமே வருகிறது....



அப்படின்னா உயர்சாதிக்கு நான் சொன்னது 50.05 சதவிகித இடஒதுக்கீடு என்பது தவறு,


அரசு அறிக்கை படி 68 சதவிகிதம் இட ஒதுக்கீடு அனுபவிக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் நமக்கு இன்னொரு கணக்கு சொல்வார்கள் அதாவது பிற்படுத்தப்பட்டவர்கள் 21 சதவிகிதமும், தாழ்த்தப்பட்ட மக்கள் 17 சதவிகிதமும், பழங்குடியினர் 8 சதவிகிதம் இருக்கிறது என்று...... அது எப்படி என்றால் Group, B, C, D என்று எல்லா பணிகளையும் சேர்த்து சொல்வார்கள்...அப்படி பார்த்தாலும் 46 சதவிகிதம் பேர் மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள். உயர்சாதியினர் 54 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள்...


அப்படி பார்த்தாலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர் பதவிக்கு வரத்தானே செய்கிறார்கள்?



அதான் மேல இருக்கிறவங்க பிரச்சனை. அதை தடுப்பதற்காகத்தான்  நிர்வாக சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று சொல்வார்கள்....





நிர்வாக சீர்திருத்தம் என்பது நல்ல விசயம் தானே, அதை வச்சு எப்படி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை உயர் பதவிக்கு வராமல் செய்ய முடியும்?

அதாவது பணியாளர் அமைச்சக ஆண்டறிக்கையை படித்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் சராசரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியில் சேரும் போது அவர்களுடைய வயது 28. அப்படியென்றால் பணியில் சேரும் பெரும்பாலானவர்கள் 29, 30, 31, 32.... வயதுக்கு மேற்பட்டவர்கள்....... நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த கமிட்டிகள்

1. Y.K. Alagh Committee  (2001) - 26 வயது
2. P.C. Hota committee (2004) - 27 வயது
3. Administrative Reforms Commission (2008) - 28 வயது
4. B.S. Baswan committee (2016) - 29 வயது

இந்த நான்கு கமிட்டிகளும் ஐஏஎஸ் தேர்வு எழுத பரிந்துரை செய்த உச்ச வயது வரம்பை பார்த்தால் புரிகிறதா? இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் வருவதை தடுக்க முடியும்...



அப்படி என்றால் நடைமுறைக்கு இந்த பரிந்துரைகள் வந்துவிடுமா?

அங்கே தான் அவர்களுக்கு சிக்கல், அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு இருந்தால் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழ்நிலை இருப்பதால் இதை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்..




 இது தவிர இந்த பஸ்வான் கமிட்டி இன்னொரு பரிந்துரையும் வழங்கியுள்ளது..... அதாவது தமிழ் மொழி போன்ற மாநில மொழிகளில் தேர்வு நடத்தும் முறையை நீக்க வேண்டும் என்பது....

அடக்கொடுமையே, அப்படி என்றால் இந்தி தவிர பிற மொழி பேசும் மாணவர்கள் எதிர்காலம்?




நீங்கள் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்று​ யோசித்தால் சரியாக​ இருக்கும்....

அப்படி என்றால் பாஜக செய்வது மட்டுமே தவறு என்று சொல்கிறீர்களா?

நிச்சயம் இல்லை, மத்தியில் ஆண்ட  எல்லா அரசுகளும் இதனை செய்ய முயற்சிப்பார்கள்.......


 காரணம் ஒவ்வொரு துறையில

ும் Secretary பொறுப்பில் அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் உயர் சாதியினர் மட்டுமே இருப்பதால் இந்த பிரச்சனை..... ஐஏஎஸ் அதிகாரிகள்​ அரசியல் தலமைகளுக்கு ஆலோசனை வழங்குவது போல் தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆலோசனை வழங்குவது ஆர்எஸ்எஸ்.


ஆர்எஸ்எஸ் ஆலோசனையில் உருவான "நிதி அயோக்"  Strategy for New India என்ற தலைப்பில் தற்போது ஐஏஎஸ்​ தேர்வுக்கான வயது வரம்பை 27 ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது.

ஓ அப்படி என்றால் OBC, SC, ST மாணவர்கள் பதவிக்கு வருவதை தடுக்க இவ்வளவு வேலை நடக்கிறதா?




ஆமாம், இந்த ஆண்டு முதல் Secretary பொறுப்பில் பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதிலாக Lateral entry முறையில் தனியார் துறையில் 15 ஆண்டு அனுபவம் வாய்ந்த உயர் பதவியில் இருப்பவர்களை நியமிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

தனியார் துறையில் திறமையானவர்கள் இருப்பதால் அவர்களை உயர் பொறுப்புக்கு​தேர்வு செய்வது நல்லது தானே?



அங்கே தான் பிரச்சனையே, யுபிஎஸ்சி நடத்தும் தேர்வு மூலம் ஐஏஎஸ் பணிகளை நிரப்பினால் இட ஒதுக்கீடு முறையில் பணி வழங்க வேண்டும்.


ஆனால் Lateral entry மூலம் பணி வழங்கினால் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து விட முடியும்.  இதன் மூலம் உயர் பதவிகளுக்கு BC, SC, ST வகுப்பினர் வராமல் செய்ய முடியும்.



அப்படி என்றால் நாம் என்னதான் செய்வது?

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு மக்களும், அவர்களுக்கான அரசியல் தலைவர்களும் ஐஏஎஸ் தேர்வு என்பதை ஏதோ ஒரு தேர்வு அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும், அவர்களின் வாக்கு வங்கி என்னவென்று யோசிக்காமல் நாட்டின் உயர் பொறுப்புகளுக்கு அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களும் சரியான விகிதத்தில் வந்தால் தான் சமூக நீதியை நிலை நாட்ட முடியும்.



 உயர் சாதியைச் சேர்ந்த யாரோ எடுக்கும் முடிவுகளால் தான் இங்கே பெரும்பான்மையான மக்கள் பாதிப்படைகிறார்கள். நேர்மை, மெரிட், நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி வருகிறார்கள். இந்த சதிகளை முறியடிக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.... அதற்கு மிக முக்கியம் இந்த பிரச்சனை பற்றிய புரிதல்...... அதற்கு தான் இந்த பதிவு....

புதன், 3 ஜூலை, 2019

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் நமது ரூபாய்க்கும் ஏன் இந்த வித்தியாசம்...?


இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் நமது ரூபாய்க்கும் ஏன் இந்த வித்தியாசம்...?

ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.! எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.!


ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்... என்ன,... அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும்.

சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் - அமெரிக்காவையும் இந்தியாவையும்! அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,... நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக் கொண்டு பழகியுள்ளோம்!

கணக்கிடுவதற்காக, சில கற்பனை உதாரண மதிப்புக்களை / எண்களை எடுத்துக்கொள்வோம்:

துவக்கத்தில், அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் சமமாக, 1 கிலோ (1000 கிராம்) தங்கம், கையிருப்புள்ளதாக வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது:
அமெரிக்கா, மொத்தம் ஆயிரம் டாலர் மதிப்புக்கு, 1 டாலர் நோட்டுக்கள் 1000 அச்சடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது (தங்கம் இருப்பைக் கணக்கில் கொண்டால்), 1 கிராம் தங்கம் 1 டாலருக்கு சமம்! சரியா!

இந்தியாவும், அதே போல், ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு இணையாக 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது.! அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு ரூபாய் மதிப்பு!

இப்பொழுது பார்த்தீர்களானால், ஒரு அமெரிக்க டாலரும் கூட, ஒரு இந்திய ரூபாய்க்கு சரி நிகர் மதிப்பே! ஒரு அமெரிக்க டாலர் = ஒரு இந்திய ரூபாய் மட்டுமே!


இப்பொழுது,

அமெரிக்க அரசாங்கம் ஆயிரம் ஒரு டாலர் நோட்டுக்களை புழக்கத்தில் இறக்கி, அதிலிருந்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20 சதவீதம் வரியாக இலக்கு வைக்கிறது. அதன் மூலமாக, 200 டாலர்கள் வரியாக திரும்பப் பெறுகிறது.

இந்த 200 டாலர்களை வைத்து, இன்னமும் ஒரு 200 கிராம்கள் தங்கத்தை வாங்கி, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 200 ஒரு டாலர் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது! ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன! ஆயினும், ஒரு கிராம் தங்கம் = ஒரு டாலர் மட்டுமே!

இந்த பொருளாதாரம், இதே போன்று விரிவடைந்து, மேலும் தங்கம்-மேலும் டாலர் நோட்டுக்கள், என, எவ்வளவு வளரும் பொழுதும், ஒரு கிராம் தங்கம் ஒரு டாலருக்கு நிகராகவே இருக்கும் - இலக்கு வைத்த வரிவிகிதம் முழுமையாக வசூலாகும்வரை!.

இப்பொழுது, இந்தியாவுக்கு வருவோம்.!

இந்திய அரசும் அமெரிக்கா போலவே 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, அதிலிருந்து 20% வரியாக வசூலாக இலக்கு வைக்கும். ஆனால், அசல் வரிவசூலோ,.. வெறும் 50 ரூபாய்கள் மட்டுமே (என்று வைத்துக்கொள்வோம்!).!! அதாவது, புழக்கத்தில் விட்ட 2000 ரூபாய்களில், வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை செய்யப்பட்டது! மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது! இதுதான் கருப்புப்பணம்.!

இந்த 750 ரூபாய்கள், சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும் கூட, இது அரசின் வரவு செலவுக் கணக்குகளில் பதிவாவதில்லை.! ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட!).! இந்த கணக்கில் வராத 750 ரூபாய்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைதான், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, இணைப் பொருளாதாரம் என்பது!

சரி. இப்பொழுது, அரசு, தனக்கு கிடைத்த வரிப்பணம் 50 ரூபாய்களை வைத்து, மேலும் ஒரு 50 கிராம் தங்கம் மட்டுமே வாங்கி கையிருப்பை உயர்த்த முடியும்! தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும்! இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இந்திய ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே! (ரூ.250 + ரூ.50). ஆனால், அசலாக அரசு அச்சடித்து வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து, மொத்தம் 1050 ரூபாய்கள் கணக்கில் இருந்திருக்க வேண்டும்!

எது எப்படி இருந்தாலும், அரசு, மேலும் நோட்டுக்களை அச்சடித்து சந்தையில் வெளியிட்டே ஆகவேண்டும் - காரணம், ஏற்கெனவே வெளியிட்ட 750 ரூபாய்கள் அதிகாரபூர்வமாக கணக்கில் வராமல் "காணாமல் போய்விட்டதல்லவா"? எனவே, அரசு அந்த விடுபட்ட 750 ரூபாய்களை அச்சடித்து வெளிவிட முடிவெடுக்கிறது!

இப்பொழுது வருகிறார் கண்கொத்திப்பாம்பு IMF ! "நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது.! உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும்!" என்கிறார் அவர்! ஆனால், இந்திய அரசோ, நோட்டு அச்சடித்தே தீரவேண்டும் என்று ஆடம் பிடிக்கும் பொழுது, IMF சொல்லும்: "உன் ரூபாயின் மதிப்பை, நிகராக நீயே குறைத்துவிட்டு, மேலும் நோட்டுக்களை அச்சடித்துக்கொள்!", என்று! அரசுக்கு வேறு வழி கிடையாது! காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை! அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை! அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இந்திய அரசு! இப்பொழுது, மொத்தம் 1800 ரூபாய்கள் அச்சடித்து புழக்கத்தில் உள்ளது 1000 + 50 + 750) - ஆனால், அரசின் வசம், வெறும் 1050 கிராம் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது!

ஆக,.. இப்பொழுது, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.1 இல் இருந்து, ரூ.1.71 என ஆகி விட்டது! (1800 ஐ 1050ஆல் வகுத்தால் = 1.71)

அதாவது, மேற்சொன்ன அமெரிக்க டாலரை ஒப்பிடும் பொழுது, 1 டாலருக்கு சமமாக இருந்த இந்திய ரூபாய், இப்பொழுது ரூ.1.71 என வீழ்ச்சி அடைந்துவிட்டது! $1 = Rs.1.71 !

இதேபோல், நோட்டுக்களை, சந்தைத் தேவைக்கு ஏற்றாற்போல் அடித்து வெளிவிட வெளிவிட, ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது! ஆனால், கையிருப்பு தங்கம் மட்டும், வெளிவந்த நோட்டுக்களுக்கு சமமாக கூடுவதே இல்லை!

இதனால்தான், ... இன்று, ஒரு அமெரிக்க டாலர் = Rs. 67.80 என வந்து நிற்கிறது!

இந்திய அரசும் 100 % இலக்கு வைத்த வரிகளை வசூலித்திருக்குமானால், நம் இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு கேவலமாக சரிந்திருக்கவே சரிந்திருக்காது!

இப்பொழுது, உங்களுக்கு வரிகளின் முக்கியத்துவமும், பொதுமக்களுக்கு அதனால் (மறைமுகமாக) கிடைக்கும் பலன்களும் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்! நிலையான வலுவான ரூபாயில், வீடு, நிலம், பொருட்களின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்!

இந்த ஒற்றைக் காரணத்தால், அமெரிக்கா, உலகின் மிகப் பணக்கார நாடாக அறியப்படுகிறது! காரணம், அங்கு கிட்டத்தட்ட 95% குடிமக்கள் வரி செலுத்துகின்றனர்!

ஆனால், இந்தியாவில்? யாராலாவது, ஊகிக்க முடியுமா?
percentage of taxpayers in India என்று கூகிள் செய்து தேடிப்பாருங்கள்!
நல்ல இந்தியக் குடிமகன் தலையை வெட்கத்தில் தொங்கவிட்டுக் கொள்வான்!

ஆம்.! வெறும் 1% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் வரி செலுத்துபவர்கள்!

நாம், நம் நாட்டில் அமெரிக்காவுக்கு இணையான சமூகப் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், சுத்தம், சுகாதாரம், வெட்டில்லாத மின்சாரம், பகல்போல ஒளிமயமான இரவு, உயர்தர வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம்! அங்கு இருக்கும் அவற்றை சிலாகித்து புகழ்ந்து பெருமூச்சு விடுகிறோம். ஆனால்,...

அவர்கள் போல, ஒட்டுமொத்த சமூகமாக வரி செலுத்துகிறோமா? கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா? நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா? என்று யோசித்தால்,... கசப்பான விடை, "இல்லை" என்பதே ஆகும்!
-----------------------
இந்த ஆய்வுக் கட்டுரையை
படிக்கும் உங்களுக்கு, கறுப்புப் பணம், எப்படி உருவாகி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும், என்று எடுத்துக் காட்டவே...

Special Thanks to : நாணயம் விகடன்

திங்கள், 1 ஜூலை, 2019

ஒரு மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்களையும் தூர்வார 16 கோடிதான் செலவு.

அரசுக்கு ஓர் ஆலோசனை: ஒரு மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்களையும் தூர்வார 16 கோடிதான் செலவு.
##########@##########

ஒரு ஜேசிபி மெசினின் விலை 30 லட்சம்....
40 மெசின்களின் விலை 12 கோடி ரூபாய்.
அதில் ஒரு மெசினில் வேலை செய்பவருக்கு ஊதியம் மாதம் 20 ஆயிரம்.
ஒரு மாதம் இரண்டு ஷிப்டில் வேலை செய்ய இரண்டுபேர் வீதம் 40 மெசினுக்கு 16 லட்சம்.

மாதத்திற்கு.. டீசல் விலை மாதம் 10 லட்சம் தோரயமாக.
ஆகமொத்தம் மாதம் 26 லட்சம்...

இதை வைத்து 10 நாட்களில் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களை சுத்தம் செய்து விடலாம்....

32 மாவட்டத்தில் ஒரு வருடத்தில் அனைத்தையுமே சுத்தம் செய்து விடலாம்.

ஆக வருட செலவு 3.5 கோடி.
மெசின்களின் செலவுடன் சேர்த்து 16 கோடி.

இதே கணக்கின் படி ஒரு மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்களையும் தூர்வார 16 கோடிதான் செலவு.

ஆக மொத்தமாக ஒரு வருடத்திற்கு 50 கோடி ஒதுக்கி, அதை சரியாக கண்காணித்து... இந்த வேலையை செய்தால் அடுத்த வருடத்திற்கான நீரைத் தேக்கிவைக்கலாம். விவசாயத்தையும் செழிக்கவைக்கலாம்.!

இப்படி செய்தாலே மக்களிடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம்.

இதை விடுத்து அரசியல்வாதிகள் ஏன் ஒரு தேர்தலுக்கு இவ்வளவு கோடி செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
இவ்வளவு இலவசம் கொடுக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
எதற்காக முந்நூறு கோடியில் சினிமா எடுக்கிறார்கள் என்பது புரியவில்லை.
இதை ஏன் எந்த ஊடகமும் முக்கியத்துவம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறதும் புரியவில்லை.

நம்மில் கூட ஓரிருவர் தவிர பேசுவதுமில்லை. இதற்கான காரியங்களில் முயல்வதும் இல்லை.
தேவைகளை பற்றிய தெளிவுகள் தெரிந்து பேச ஆரம்பிப்போம்.
அடுத்தவரை எல்லாம் குறைகூறுவதை நிறுத்திவிட்டு நாம் பேசுவோம்.
அரசியலும் சினிமாவும் பேசுவது போலவாவது அத்தியாவசியம் குறித்தும் பேசுவோம்.

நமக்கு நம்மூரிலேயே வாழத் தெரியாவிட்டால்...
அசலூரில் போய் அரசாளவா போகிறோம்;
அடிமை வேலைதானே செய்ய போகிறோம்!

அருமையான இந்த செய்தியை அவரவர் நட்பு பல குழுவிற்கு பகிர்ந்து பலரையும் சென்றடைய செய்தால் நிச்சயம் நல்லதே நடக்கம்