புதன், 27 மே, 2020

"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய் 7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது

"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க
 ரூபாய் 7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. எந்த தொழிலுக்கும் விண்ணப்பிக்கலாம். பேப்பர் விண்ணப்ப படிவம் இல்லை. இண்டர்நெட் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான SC/ST மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர்.

தேவையான ஆவணங்கள்:
1. குடும்ப அட்டை
2. வாக்காளர் அட்டை
3. ஆதார் அட்டை
4. ஒரு புகைப்படம்
5. சாதி சான்று
6. வருமான சான்று ( குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு
     மிகாமல் இருக்க வேண்டும்)
7. கல்வி சான்று
8. ஓட்டுநர் உரிமம். பேட்ஜ் அவசியம் (இது வாகன கடனுக்கு மட்டும்
    தேவை)
9. கொட்டேஷன்
10. திட்ட அறிக்கை

மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் அப்லோடு செய்ய வேண்டும்.

எனவே தகுதியுள்ள அனைத்து SC/ST மக்களும் விண்ணப்பித்து கடைசிவரை முயற்சி செய்து பலனை அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கீழுள்ள  தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
http://application.tahdco.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக