ஞாயிறு, 31 மே, 2020

சக்கர_வியூகம்

#சக்கர_வியூகம்

சுற்றி சுற்றி வாலால் அடிப்பது #சாரைப்பாம்பு. அப்படியே சுழட்டி அடிப்பது #மலைப்பாம்பு. அது போல தான் இன்று இந்தியா சீனாவை மலைப்பாம்பு போல் சுற்றி இருக்கிறது. அதன் கோபம் அதிகமானால் அப்படியே இறுக்கி பிடித்து முறுக்கிவிடும். ஏனெனில் இன்று உலகமே இந்தியாவின் பின்னால்  மலைபாம்பாக அணிவகுத்து நிற்கிறது. 

#இராணுவ_ரீதியில்_இந்தியரசு

அதிகாரமிக்க அமைதியான  நாடு  உறுதியான ஆட்சி எதற்கும் வளைந்து கொடுக்காத தலைவர் ஊழல் இல்லாத ஆட்சி இவருக்கு பின்னால் கோடான கோடி மக்கள். இதுவே அவருடைய பலம்  அதுவே இந்தியாவின் பலம். அதுதான்
#மோடிசர்க்கார்.

இந்திய-சீன பிரச்சனைக்கு லடாக் காரணமென்று சீனா ஒரு தோற்றத்தை தருகிறது. ஆனால் அதுவல்ல உண்மை இதுவரையில் லடாக் சிக்கிம் திபெத் தபாங்  அருணாச்சல பிரதேசத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும்பிரச்சினை வரவில்லையா. இப்போது மட்டும் ஏன் இந்த அளவுக்கு இந்த பிரச்சினை பெரிதாக பேசப்படுகிறது. இங்குதான் இருக்கிறது சீனாவின் நரி தந்திரம். உலகத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை எப்படி தீர்க்க முடியாத பிரச்சினையோ. அதேபோல் இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சனையாக இருக்கும் என்று சீன எதிர்பார்த்தது. 

மேலும் அது பிரச்சினையாகவே இருக்கவேண்டுமென்று பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கும் சீனா இதுவரை உதவி வந்தது. ஆனால் மீண்டும் மோடி பிரதமராக வருவார் காஷ்மீர் பிரச்சனையை அசால்டாக முடிப்பார் என்று சீனாவும் சரி பாகிஸ்தானும் சரி கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. மிக சாதாரணமாக காஷ்மீர் பிரச்சினையை முடித்து வைத்து விட்டார். இந்த விஷயத்தில் சீனா அதிக அளவு எரிச்சல் அடைந்தது. 

மேலும் இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதையும் மீட்டெடுப்போம். அது இந்தியாவின் ஒன்றுபட்ட பகுதி என்றும்   கூடிய விரைவில் அது இந்தியாவுடன் இணைக்கப்படும் என்றும் அறிவித்தது. மேலும் கடந்த வாரத்திலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை கில்கிஸ்தான் பல்டிஸ்தன் பகுதிகளை இந்திய வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் இணைத்து கொண்டது. இதுவும் சீனாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது ஏன் எதற்காக சீனா இந்த அளவு கோபப்பட வேண்டும்.

சீனாவின் நீண்ட நாள் கனவு திட்டமான #One_Belt_One_Road (OBOR) ( சில்க்ரோடு) உலக நாடுகளை இணைக்கும் திட்டம்.இந்த சில்க் ரோடு ஆனது சீனாவில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக #குவத்தார் துறைமுகத்தை அடைகிறது. இது எந்தளவுக்கு முக்கியம் என்றால் அரபிக்கடல் வழியாக சில ஆயிரம் கிலோமீட்டரை தாண்டினால்  மேற்கு சீனாவில்  இருந்து பொருள்களை அரபிக்கடல்  வழியாக கொண்டு செல்லலாம். சீனாவில் இருந்து மிக எளிதாக ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு  இந்த வழியாக பொருள்களை கொண்டு செல்லலாம்.

 இல்லையெனில் பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து அதாவது சீனாவின் மேற்குப் பகுதியிலிருந்து ஒரு பொருளை  ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்ல பல்லாயிரம் கிலோமீட்டர் தரைவழியாக கடந்து பின் அவை தென்சீனக்கடல் பகுதியாக வெளியேறி  மலாக்கா ஜல சந்தியை கடந்து இந்திய பெருங்கடலை அடைந்து இந்தியா ஸ்ரீலங்கா மாலைதீவு போன்ற பல நாடுகளை கடந்து ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளை சென்றடைய வேண்டும். எனவே அதற்கு மாற்று பாதையாக இந்த பாதையை சீனா தேர்வு செய்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீண்டும் எடுத்துக்கொண்டால் இந்தியாவுடன் இணைத்துக் கொண்டால்  சீனாவின் நீண்டகால திட்டமான OBOR திட்டம் நாசமாகப் போய்விடும். இதுமட்டுமல்லாது அது முதலீடு செய்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் பணமும் வீணாகிவிடும். எனவே இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுப்பதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு சீனா எல்லையில் மிகப்பெரிய அளவில் சதிவலையில் இறங்கியுள்ளது. ஒரு பக்கம் பாகிஸ்தான் வழியாக தொல்லை தருகிறது இன்னொருபுறம் நேபாளம் வழியாக தொல்லை தருகிறது. 

.மேலும் கொரனா. பிரச்சினை காரணமாக சீனாவில் உள்ள  பன்னாட்டு கம்பெனிகள் சீனாவை விட்டு வெளியேறி இந்தியாவில் முதலீடு செய்ய இந்தியாவில் தொழில் தொடங்க முன்வருகின்றனர் .அவர்கள் மத்தியில் ஒரு பயத்தை உருவாக்க இத்தகைய செயல்களைச் செய்து வருகிறது. மேலும் சீனாவின் கனவு திட்டமான சில்க் ரோடு திட்டத்தை இந்தியா அனுமதிக்கவில்லை அதை நிராகரித்துவிட்டது. இதுவும் சீனாவுக்கு இந்தியாவின் மீது மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கியது

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று சீனாவை  சுற்றிலும் எதிரிகள் ஆனால் அவர்கள் அனைவரும் இந்தியாவின் நண்பர்கள். ஜப்பான் வியட்நாம் தைவான் மலேசியா பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா தாய்லாந்து தென் கொரியா ஆஸ்திரேலியா.

#வியட்நாம் 

வியட்நாம் உடன் சீனாவுக்கு எல்லை பிரச்சினை உள்ளது இதுமட்டுமல்லாது வியட்நாமின் சில தீவுகள் சீனா அதிரடியாக எடுத்துக்கொண்டது இதனால் சீனாவின் மீது தீராத கோபத்தில் வியட்நாம் இருக்கிறது.  இப்போது வியட்நாமில்  இருந்து இந்திய கடற்படை கண்காணித்து வருகிறது.

#இந்தோனேசியாவில் ஷாபாங் துறைமுகத்தில் இந்திய ராணுவத் தளம் செயல்படுகிறது. இங்கிருந்து சீனாவின் தென்சீனக் கடல் பகுதிய முழுவதையும் கண்காணிக்கலாம்.

#மாலத்தீவு 

மாலத்தீவில் இந்திய ராணுவத்தின் அதிக சக்தி வாய்ந்த திறன்மிக்க ரேடார்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய பெருங்கடலில் செல்லும் அனைத்து கப்பல்களையும் கண்காணிக்க முடியும் .இது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது

#செஷல்ஸ் தீவு

 அரபிக் கடலில் உள்ள செஷல்ஸ் தீவில் இந்திய ராணுவத்தின் கடற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது இதன்மூலம் அரபிக்கடலில் செல்லும் அனைத்து விதமான கப்பல்களையும் கண்காணிக்க முடியும். எனவே அரபிக்கடலும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஈரான் நாட்டில் உள்ள சபாஹர் துறைமுகம் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு  இந்திய ராணுவத்தின் கடற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இது இந்திய ராணுவத்தின் வலிமையை மேலும் அதிகரிக்கச் செய்யும்

#ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் பாதுகாப்பை இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவம்  இணைந்து மேற்கொண்டு  வருகிறது. ஆப்கானிஸ்தானத்தில் இருந்து சீனாவின் மேற்குப் பகுதியை முழுவதுமாக இந்திய ராணுவத்தால் கண்காணிக்க முடியும். இதன் மூலம் சீனாவின் மேற்கு பகுதி அனைத்தையும் இந்திய ராணுவத்தால் தாக்க முடியும்

#இஸ்ரேல்

சீனாவின்  மேற்கு பக்கத்தில் இருந்து இந்தியாவின் கட்டளைக்காக காத்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். இந்திய அரசு உத்தரவிட்டால் இந்தியாவுக்காக உடனடியாக களத்தில் இறங்கி தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் மிக ஆர்வமாக தயாராக உள்ளது.

#ஜப்பான்

 சீனா ஜப்பான் உடனான சில தீவுகளை சொந்தம் கொண்டாடி வருகிறது .இதன் மூலம் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. ஏற்கனவே ஜப்பான் சீனா இந்தியாவுக்கு எதிராக போரில்  இறங்கினால் உடனடியாக ஜப்பான்  தன் நாட்டில் போர் பிரகடனம் செய்து இந்தியாவுக்கு ஆதரவாக உடனடியாக போரில் இறங்கும் என்று அறிவித்தது.

#ஆஸ்திரேலியா 

ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் மிக நீண்டகாலமாக நட்பு கிடையாது ஆஸ்திரேலியாவுடன் பல விஷயங்களில் சீனா முட்டி கொண்டு தான் இருக்கின்றது எனவே ஆஸ்திரேலியாவும் சீனாவுக்கு எதிராக செயல்பட களத்தில் தயாராக இருக்கிறது

#அமெரிக்கா

எல்லா நாட்டுக்கும் மேலாக மாபெரும் மகுடமாக அமெரிக்கா இருக்கிறது எப்படா சான்ஸ் கிடைக்கும் சீனாவை போட்டு தாக்கலாம் என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது ஏனெனில் கொரனா  விஷயத்தில் சீனா செய்த நம்பிக்கை துரோகத்தை அமெரிக்காவால் ஜீரணிக்க முடியவில்லை .எனவே எப்படா சீனா களத்தில் இறங்கும் உடனடியாக இந்தியாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி சீனாவின் மீது மிகப்பெரிய தாக்குதல் தொடுக்க வேண்டும் என்ற மாபெரும் திட்டத்துடன் அமெரிக்கா தயாராக இருக்கிறது. தன் கடற்படையை ஜப்பானிலும் ஆஸ்திரேலியாவிலும் தென்சீனக் கடல் பகுதியிலும் தயாராக வைத்திருக்கிறது.

அமெரிக்கா இந்தியாவிற்கு நேச நாடுகளுக்கு இணையான அந்தஸ்தை வழங்கி உள்ளது. அதாவது நேச நாடுகள் என்பது NATO என்று அழைக்கப்படுகிறது இந்த  NATO வில்  உள்ள நாடுகளை ஏதாவது மற்ற நாடுகள் தாக்கினால் NATO படைகள் அந்த நாட்டிற்கு எதிராக களத்தில் இறங்கும்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருக்கு கூட இவ்வளவு எதிரிகள் கிடையாது ஆனால் இன்று சீனாவுக்கு ஒரு சில முட்டா பயல்  நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளுமே சீனாவுக்கு எதிர்திசையில் நிற்கின்றது. இது சீனாவுக்கு மிக நன்றாகவே தெரியும். எனவே எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் சீனா போர் என்ற களத்தில் இறங்காது. சீனாவின் வால் இன்று உலக நாடுகளின் கைகளில்  இல்லை . இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் #பிதாமகன்_மோடியின் கையில்.

எங்கே எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள் பொறுமை இன்னும் இருக்கிறது.

காஷ்மீர் விவகாரம் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என்று சீனா மற்றும் பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை வைத்தது.,, அதாவது Closed Door என்ற அடிப்படையில். ஆனால் உலக நாடுகளின் எதிர்ப்பால் இது தோல்வியில் முடிந்தது.

இப்போது இந்தியா இதே போன்ற  விசாரணையை  ஹாங்ஹாங், திபெத் தைவான் உய்குர் பிரச்சனையை மையமாக வைத்து  சீனாவிற்கு எதிராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தால் ஏறத்தாழ உலகிலுள்ள ஒரு சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும் இந்தியாவின் தீர்மானத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் .இது சீனாவின் மிகப்பெரிய தோல்வியை இதுவரை இல்லாத தோல்வியை கொடுக்க கூடியதாக இருக்கும். இந்திய இதை பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

#இந்தியாவை பகைத்தால் என்ன நடக்கும.

இந்தியாவுடன் பகையை வளர்த்தால் அவர்கள் தைவான், திபெத், ஹாங்காங் உய்குர் முஸ்லிம்கள் பிரச்சினையையும் கிளப்புவார்கள், ஏற்கனவே ஹாங்காங் பிரச்னையில் ஒரு தீப்பொறி கிடைக்காதா என்று ஏங்கி கிடக்கிறது உலகம்,, போராட்டகாரர்களும் இதையே எதிர்பார்க்கின்றனர் ,, 

இந்தியா ஒரு பேட்டி கொடுத்தால் உலகமே தீப்பிடித்து எரியும், ஏற்கனவே அமெரிக்கா சீனாவுடன் நீண்ட பகையாக உள்ளது.

உலக நாடுகளில் எந்த நாடும் சீனாவுடன் நட்பாக இல்லை,, நட்பாக இல்லா விட்டாலும் பரவாயில்லை அனைத்து நாடுகளும் சீனாவக்கு எதிரிகளாகவும் உள்ளன.. பாகிஸ்தானை மட்டும் நட்பு என்று பேசி கொண்டு அலைகிறீர்கள்,, இதனால்  என்ன லாபம். பாகிஸ்தானை சீன இன்னும் தொடர்ந்து ஆதரிப்பதால் சீனாவுக்கு பைசா பிரயோஜனம் கிடையாது 

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அனைத்து நாடுகளிடமும் நட்பாக உள்ளது ,,

அமெரிக்கா இஸ்ரேல் சொல்லை மீறாது,, இஸ்ரேல் இந்தியா சொல்லை மீறாது,
#மோடியின்_சொல்லை_உலகமே_மீறாது

ரஸ்யா இந்தியாவை  எதிர்க்க தயார் இல்லை, அதற்கு இந்தியாவை எதிர்க்க தேவையும் இல்லை,

ஜப்பான் சீனாவின் எதிரி, இந்தியாவின் மிக சிறந்த நண்பன்,,

பிரான்ஸ் இந்தியாவின் நண்பன்

மேலும் ஜெர்மன், பிரிட்டன் இந்த வல்லரசுகள் கண்டிப்பாக இந்தியாவின் நண்பர்கள்.

மேலும் கொஞ்சம்  பண பலத்தோடு இருக்கும் வளைகுடா நாடுகள் இந்தியாவை எதிர்க்கவே எதிர்க்காது, ஏனெனில் அவர்கள் பொருளாதாரமே இந்தியாவை நம்பி.

இந்தியாவை விழ்த்துவது இனி நடக்காத காரியம். இந்தியாவை பகைத்து கொண்டால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் கண்டு விடும் ,

இப்போது சீனாவின் பொருளாதாரம் மிகவும் கீழே வந்து கொண்டு இருக்கிறது . இந்த நிலையில் இந்தியாவை எதிர்த்தால் நமக்கு நல்லது அல்ல.

இன்றைய நிலையில் உலகில் எந்த நாடும் இந்தியாவை இன்று பகைத்து கொள்ளாது.

உதாரணமாக, சீனாவை டோக்லாம் சிக்கலில் மோடி அரசு எதிர்கொண்டது. பாகிஸ்தான் உட்பட எந்த நாடும் நமக்கு ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியா பின் வாங்கவில்லை வாங்கவும் மாட்டார்கள் .ஆனால் உலகத்தில் எந்த நாடும் சீனாவுக்கு  ஆதரவு தெரிவிக்கவில்லை அமைதி காத்தன.

அதே நேரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான், இஸ்ரேல் வெளிப்படையாக முழு ராணுவ  ஆதரவு தெரிவித்தது,,

இதே நிலை நீடித்தால்  இன்னும் கொஞ்ச நாளில் பாகிஸ்தானை 4 துண்டாக பிரித்து விடும் இந்தியா. இன்று பாகிஸ்தானில்  கேக்க ஆள் கிடையாது, துணைக்கும் யாரும் இல்லை.

நீங்கள்  (சீனா)நினைப்பது போல் இன்று இந்தியா உங்களை கண்டு பயப்படாது. ஏனென்றால் அங்குள்ள தலைமையின் பலம் அதிகம்.

இதை டோக்லாம் விஷயத்திலும், மசூத் அசார் விஷயத்திலும் உலகம் பார்த்து விட்டது

#ஆயுதங்களை காட்டி மிரட்டினால்

சீனா  உங்களிடம் ஆயுதங்கள் அதிகம் உள்ளன, அணு ஆயுதம் உள்ளது. நாங்கள் வல்லரசு, அதனால் இந்தியா எங்களிடம் பணிந்து தான் ஆகணும்  என்று நினைக்கலாம்,  ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ,

இப்போதுள்ள நிலையில் பரப்பரளவை வைத்து வல்லரசு என்பதை ஏற்று கொள்ள முடியாது, உங்களிடம் இருக்கும் அணைத்து ஆயுதங்களும் அவர்களிடமும் இருக்கிறது.

இன்னும் சொல்ல போனால் இந்தியாவிடம் சீனாவை விட நவீன ஆயுதங்கள் உள்ளன,, 

 சீனா அவர்கள் நாட்டில் தயாரித்த பழைய காயலான் கடை  ஆயுதங்களையே வைத்துள்ளனர்.
ஆனால் இந்திய உலகில் எங்கே நவீன ஆயுதங்கள் உள்ளதோ அங்கே எல்லாம் கொள்முதல் பண்ணி வைத்து இருக்கிறது. இதில் நாம் யோசிக்காத ஆயுதங்கள் கூட இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.

காரணம் பெரிய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்கிறது இந்தியா,, அதனால் பலவகையான ஆயுதங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

மேலும் இப்போது உள்ள நவீன உலகத்தில் இன்றைய சீன  ஆயுதங்கள் எதற்கும் பயன்படாது, 

சீனாவிடம்  அணு ஆயுதங்கள் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம்.  இந்தியாவிடம் அணு ஆயுதம் உள்ளது,, 

நீங்கள்  சீன 10 அணு குண்டு போட்டு இந்தியாவை அழிக்கலாம் என்று நினைத்தால்,  இந்தியா 15 அணு குண்டை போட்டு சீனாவை அழிக்கலாம் என்று நினைக்கத்தானே செய்வான்.  இது தானே இன்றைய நிலை,

இன்றைய உலகத்தில் எந்த நாடு, எப்போது, எந்த ஆயுதத்தை உபயோகிக்கிறார்கள் என்ற ராஜ தந்திரம் தான் வெற்றி பெரும்,, அது அந்த நாட்டின் ராஜா தந்திரத்தை பொறுத்தது,, கொடூரமான ஆயுதங்கள் எல்லோரிடமும் உள்ளன.

உலக வல்லரசுவான அமெரிக்காவே வட கொரியா என்ற சின்ன நாட்டிடம் பின் வாங்குகிறது ஏன் ? ஒரு அணுகுண்டு, ஒரே அணுகுண்டு போட்டால் போட்டது தானே. என்ன செய்ய முடியும் அதன் பிறகு வட கொரியாவை அழிக்கலாம் அது இரண்டாவது, இருந்தாலும் அமெரிக்காவில் பாதி அழிந்து விடுமே
இதுதான் இன்றைய உலகம், 

#ராஜாங்க_ரீதியிலான_நடவடிக்கைகள்

கொரனா  காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது மிகக் கடுமையான கோபத்தில் இருக்கின்றன. உலகிலுள்ள மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தை சீனாவிலிருந்து வெளியேற திட்டம் தீட்டி வருகின்றன. மேலும் சீனாவின் பல்வேறு நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை படிப்படியாக குறைக்கவும் உலகின் முன்னணி நிறுவனங்கள் திட்டம் தீட்டி வருகின்றன.  உலகின் பல முன்னணி நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறவும்  திட்டம் தீட்டி வருகின்றன. இவ்வாறு வெளியேறினால் சீனாவின் பொருளாதாரம் படு மோசமாக பாதிக்கப்படும். உள்நாட்டு உற்பத்தி தேக்கம் வேலைவாய்ப்பின்மை பொருளாதார மந்த நிலை மற்றும் சீன அரசின் வருமானம் மிக பெரும் அளவில் பாதிக்கப்படும். 

மேலும் உலக நாடுகள் சீனாவின் அடாவடித்தனம்  மற்றும் திமிரை குறைப்பதற்கும் அதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன

அமெரிக்க அரசு ஏற்கனவே சீனாவின் மீது அதிகப்படியான வரி மற்றும் பல வகையான பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இது  கொரனா காலத்திற்குப் பின் மேலும் அதிகரிக்க கூடும். மேலும் அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் சீனர்களை  வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கை எடுக்கக்கூடும். மேலும் சீன நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகள் படிப்படியாக குறைக்கப்படும்.

அதேபோன்று சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் விளக்கப்பட கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இது சீன அரசுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கக்கூடும். இதேபோல் இந்திய அரசும் சீன பொருட்களுக்கு மிகப்பெரிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடும். ஏற்கனவே இந்திய நிறுவனங்களின் சீன நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் முதலீடு செய்ய முடியாது என கடந்த மாதத்தில் மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இது மேலும் அதிகரிக்கக்கூடும் சீனாவின் இறக்குமதி படிப்படியாக இந்தியாவில் குறைக்கப்படும். இந்திய அரசு ஏற்கனவே உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது சீனாவின் உற்பத்தி துறையை ஏற்றுமதி துறையில் அதிக அளவில் பாதிக்கக்கூடும்.  இந்தியா அமெரிக்கா போன்ற உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சீனாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்கள் அதாவது சீனாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை போன்ற நிலையை விதிக்கக் கூடும்.

இது மிகப்பெரும் அளவில் சீனாவின் உற்பத்தியை பொருளாதாரத்தை பாதிக்கும் அதாவது இன்றைய சீனாவின் இந்த அடாவடித்தனதிற்கு அதன் மிக அதிகப்படியான வருமானமே முதல் காரணம். இதனால் சீனா தன்னுடைய வருவாயின் அதிக பகுதியை அதன் ராணுவத்திற்கு செலவழிக்கிறது. தன் ராணுவ பலத்தை அதிகரித்து அருகிலிருக்கும் சிறிய நாடுகளை மிரட்டுவது அடாவடியாக அவர்களின் தீவுகளை எடுத்துக்கொள்வது என்று சீனா செயல்படுத்தி வருகிறது.

எனவே ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் எரிவதை பிடுங்கி விட்டால் கொதிப்பது தானாக அடங்கிவிடும் என்று.  அது போல தான் சீனாவின் மிதமிஞ்சிய வருமானம் குறைய ஆரம்பித்து விட்டால் அதனுடைய ராணுவ பயன்பாட்டு செலவு மிகப்பெரும் அளவில் குறையலாம் ராணுவத்தின் அடாவடித்தனமும் குறையலாம் இதன்மூலம் அதன் அண்டை நாடுகளுடன் சுதந்திரமாகவும் சமாதானத்துடனும் செயல்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே சீனாவின் பொருளாதாரம் படு மோசமான நிலைமையை எட்டியுள்ளது. இதே நிலைமை நீடித்தால் சீன அரசு அதன் பல திட்டங்களை கைவிட கூடிய சூழ்நிலை ஏற்படும் மேலும் ஏற்கனவே சீனாவில் அடக்கு முறையான ஆட்சி நடைபெற்று வருகிறது சீன அரசுக்கு எதிராக மக்கள் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். அது எப்போது வேண்டுமானாலும் எரிமலையாக பொங்கலாம் .

ஏற்கனவே மேற்குப்புறம் உய்குர்  பிரச்சினை தென் மேற்கில் திபெத் பிரச்சினை தென்கிழக்கில் பூட்டான் பிரச்சனை மற்றும் அருணாச்சல பிரதேச பிரச்சனை அதற்கு சற்றுத்தள்ளி வியட்நாம் பிரச்சனை இன்னும் கொஞ்சம் தள்ளி தைவான் பிரச்சனை சற்று தூரத்தில் இந்தோனேசியா பிரச்சனை இன்னும் சற்று முன்னே கூப்பிடும் தூரத்தில் ஜப்பான் பிரச்சனை இங்கிட்டு வந்தா மலேசியாவுடன் தீவு பிரச்சனை இப்படி சீனாவுக்கு எங்கு சென்றாலும் பிரச்சனை பிரச்சனை பிரச்சனை. 

எனவே சீனாவின் ஆட்சியும் சீனாவின் பொருளாதாரமும் சீனாவின் வல்லரசு கனவும் சீனா நடந்து கொள்ளும் விதத்திலேயே உள்ளது. அதாவது சண்டையா - சமாதானமா நண்பனா- எதிரியா போர்க்களமா - அரசியல் களமா கேள்விகள் என்னிடம் பதிலோ சீனாவிடம் .

கடைசியாக சீனாவிடம் கூறுவது  ஒன்றே ஒன்றுதான் சப்பை மூக்கா  கூட்டம் சேத்தவனெல்லம்  ஜெயிக்க முடியாது டா அது எப்படின்னு கேக்குறியா. அதாவது  இந்தியாவில் சிவாஜி என்று ஒருவர் இருந்தார். நடிகர் சிவாஜி அல்ல மாவீரன் சத்ரபதி சிவாஜி அவரை பிடிக்க முகலாயப் பேரரசன் 30 ஆயிரம் படை வீரர்களுடன் வந்தான் எப்படியும் சிவாஜியை கொன்றே தீருவேன் என்றான். ஆனால் சிவாஜியின் படையோ வெறும் 3000 வீரர்கள் மட்டுமே இருவருக்குமிடையில் மிகக் கடுமையான போர் நடந்தது. இறுதியில் 30 ஆயிரம் வீரர்களைக் கொண்ட முகலாய பெரும்படை 3000 வீரர்கள் கொண்ட சிவாஜியின் படையிடம் தோல்வியுற்று துவம்சம் ஆனது.

1962 சீன போரின்போது இந்திய ராணுவ வீரன் தனி ஒருவனாக சீன ராணுவத்தை சேர்ந்த 300 வீரர்களை  48 மணி நேரமாகப் போராடி கொன்றார். இது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இந்திய ராணுவ வீரர்கள் அந்த அளவுக்கு திறமையான பலசாலிகள் நாட்டிற்காக பல தியாகங்களை செய்த மாவீரர்கள்.

#அதிகமா_ஆட்டம்_போட்ட_அரசனும் #அடாவடித்தனம்_செய்ற_அரசும்_நல்லா #வாழ்ந்ததா_சரித்திரமே_இல்ல

🍁சீறும் பாம்பை நம்பலாம்
 
🍁சிரிக்கும் பெண்ணை கூட நம்பலாம் 

🍁ஆனால் சிரிக்காத சீனாவை என்றுமே இந்திய நம்பக்கூடாது 

🍁இவன் விஷம்  தடவிய வாளுக்குச் சமம் 

🍁இவன் துருப்பிடித்த கத்திக்கு சமம்

🍁 துரோகத்தின் மொத்த உருவம் 

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.சீனா  விஷயத்தில் இந்தியா இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்

இன்றைய  இந்தியாவுடன் அனுசரித்துச் செல்வதே சீனாவுக்கு மிகப்பெரிய நன்மையை தரும். இல்லையெனில் விதியாடும் விளையாட்டில் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக சீனாவின் கதை மாறிவிடும். ஒரு நாட்டின் ராணுவ பலத்தை விட போர்முனையில் அது அமைத்த  வியூகமே  அதற்கு வெற்றியை தேடித்தரும்.

இதுதாண்டா எங்க தலைவரின் பாணி இதுதான் எங்கள் #மோடி_வியூகம்
                                      
 மஹாபாரத    #சக்கரவியூகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக