ஜான் கீட்ஸின்
மொழி பெயர்ப்பு கவிதை
John Keats; 31 October 1795 – 23 February 1821) was an English Romantic poet.
ஜான் கீட்ஸ் உலகப் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் . இவர் இரண்டாம் தலை முறை ரொமான்டிக் கவிஞர்களில் மிக முக்கியமானவர் ஆவார். மகா கவி ஷெல்லியின் சம காலத்தவர் .சொற் சித்திரங்களில் கவிதையை தீட்டும் மகா கலைஞன் .ஐம்புலன்களுக்கும் கவிதையை கொண்டு சென்று சேர்ப்பதில் கீட்ஸைப்போல் இன்னொரு கவிஞன் பிறந்ததில்லை. கலையின் செய் நேர்த்தியில் ஸேக்ஸ்பியரைப்போல முழுமையை முத்தமிட்ட கலைஞன். இவன் தான் .இவன் வாழ்க்கையில் கண்டதெல்லாம் வெறுமை விரக்தி சூன்யம் மட்டுமே. கவிதைகள் எழுதியது மொத்தமே ஆறு ஆண்டுகள் தான். அதாவது அவனுடைய இருபதாவதுத வயதிலேயே மகா கவிதைகளை வார்க்க தொடங்கி விட்டான் . இவன் மட்டும் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் ஸேக்ஸ்பியர் எப்படி நாடகத்தில் உச்சம் தொட்டாரோ அவ்வாறு கவிதை உலகின் உச்சம் தொட்டிருப்பான். அழகினை மொத்ததமாக கவிதைகளில் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட கவிஞன் கீட்ஸ் என்றால் அது மிகையில்லை. மகாகவிகளை காலம் ஏன் அத்தனை இளமையிலே காவு வாங்கி விடுகிறது என்பது இன்னும் உலகத்தில் புரியாத புதிர் தான்( ஷெல்லி . பைரன் பாரதி கீட்ஸ் உட்பட ) மருத்துவக்கல்æரி மாணவரான கீட்ஸை காச நோய் இருபது வயதுகளிலேயே தாக்கும் என்று யாரும் கனவு கூட காணவில்லை ( கீட்ஸின் காதலி Brawne ப்ரவ்னி உட்பட ) , கீட்ஸ் தன் கடைசி காலங்களில் தன் காதலியை பார்க்க கூட முடியாமல் துயரத்தில் அவளுக்கு எழுதிய கடிதங்கள் கல்லையும் கரைத்து விடும் I cannot exist without you – I am forgetful of every thing but seeing you again
நீயின்றி என்னால் உயிர்த்திருத்தலை நினைக்கவே முடியாது அனைத்தையும் மறந்து விட்டேன் உன்னைத் தவிர உன்னை காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் என் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது ஆனால் உன்னை காணாமலே இவ்வுலகை விட்டு நான் போய்விடுவேன் என்று எனக்குள் ஏதோ சொல்லிக் கொண்டேயிருக்கிறது. ) கீட்ஸ் சொன்னது சரி தான் அவர் தன் காதலியை கடைசி முறையாகக் கூட காணவே முடியவில்லை . சொந்த நாட்டையும் கூட.. காணமுடியவில்லை ,மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ரோம் தேசம் சென்றவர் அங்கேயே காலமாகி விட்டார். அவரின் மரணச் செய்தி நாற்பது நாட்கள் சென்ற பிறகு தான் பிரிட்டன் வந்து சேர்கிறது. கீட்ஸின் நினைவாக காதலி ப்ரவ்னி 12 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் துக்கமிருந்தாள். பிறகு திருமணம் செய்து ãன்று குழந்தைகளுக்கு தாயானாள். அதன் பின்பு நாற்பது வருடங்கள் வாழ்ந்து மரித்துப் போனாள். ஆனால் மொத்தம் 25 ஆண்டுகளே இப்புவியில் வாழ்ந்த கீட்ஸைத்தான் இவ்வுலகம் மகா கவிஞனாககொண்டாடுகிறது.
கவிதைச்சூழல்
To Sleep, துயிலுக்கு ஒரு பாட்டு
இப் பாடலில் துயிலை மரணத்தின் குறியீடாகப் பார்க்கிறார்
உறங்குவது போலும் சாக்காடு என்று வள்ளுவரே கூறியது தான்கருத்து .ஆனால் கவிஞர் அதை ஒரு இரகசியக் காதலி போல ஆத்மார்த்தமான தோழன் போல இரணத்திலிருந்து மீட்க வந்த மீட்பர் போல கொண்டாடி தீர்க்கிறார். ஐம்புலன்களின் வழியாகவும் ஊடுருவி உறக்கத்திற்கு ஒரு உருவகம் தருகிறார். துயரமான தனது வாழ்வில் வெளிச்சம் என்பது துன்பமாகவும் இருள் என்பது இன்பமாகவும் துயிலே அமைதியின் திறவு கோலாகவும் கவிஞர் கண்டு கொள்கிறார். இந்த வரிசையில் கீட்ஸின் கவிதைகள் சிலவற்றை மொழியாக்கம் செய்யலாம் என்று நினைக்கிறேன். வாசித்து விட்டு தங்கள் கருத்துக்களை பகிரவும்.
இனி கவிதை
துயிலுக்கு ஒரு பாட்டு
ஓ துயிலே !!!!
பிரேதம் போல் கிடக்கும்
அசைவற்ற நள்ளிரவை
நறுமணம் பூசி பாதுகாப்பவனே
மறதியில் புதையுண்ட
எங்கள் இதயங்களை மீட்க
வெளிச்சத்தில் மாசுபட்ட
எங்கள் விழிகளை காக்க
உன் மென்மையான விரல்களால்
எங்களின் இமைக்கதவுகளை
நீ நேர்த்தியாய் தாளிடுவதை
நான் ரசிக்கிறேன்
ஓ மென் துயிலே !
உன்னை நோக்கித்தானே
எங்கள் விழிகள் பிரார்த்திக்கொண்டிருக்கின்றன
ஆதியந்தமாய் உன்னோடு இணையத்தானே
இங்கே மௌனத்தில் இறைஞ்சிக்கொண்டிருக்கின்றன
அதற்குள் என்ன அவசரம் சொல் ?
உன் பிரார்த்தனையின் கதவுகளை
நீயே தாளிட்டுவிடுவாயோ ?
சரி அதுவேதான் உன் ஆனந்தமென்றால்
அப்படியே ஆகட்டும்
அல்லது
பிரார்தனை முடியட்டுமா ?
மயக்கத்தில் குழறும் விழிகளை
ஆமென்னாவது சொல்ல விடுவாயா?
அடடா கண நேரம்
அதற்குள் என் படுக்கையைச்சுற்றி
ஏன் இத்தனை கஞ்சா இலைகளை
என் படுக்கையை சுற்றி தூவுகிறாய்
ஓ
அதை சுற்றி போதை தரும்
பெரும் தலாட்டுக்களை
ஏன் ஒலிக்கவிடுகிறாய் ?
ஓ ஒப்பற்ற தோழா !
உடனே என்னை காத்து விடு
இந்த இரவு மட்டும் விடிந்து விட்டால்
விடியல் என் தலையணையைச்சுற்றி
எண்ணற்ற துயரங்களை àவியிருக்கும்
இந்த நள்ளிரவிற்குள் ஒரு கருப்பு மச்சம் போல்
ஒளிந்திருக்கும் சுயநினைவு
சுயநினைவிலிருந்து
பேருறு எடுக்கும் மனசாட்சி
அப்பப்பா அவைகள் தாங்காத சுமைகள் என்பதை அறிவாயோ நீ ?
ஓ.. என் நேசனே |
சாவியை தாட்பாளில் இட்டு
சப்தம் வராமல் திருகவும்
பிறகு என் ஆன்மாவை
அந்த அலங்காரப் பெட்டிக்குள் வைத்து
அரக்கு முத்திரையிட்டு பூட்டவும|
மூலம் : ஜான் கீட்ஸ்
மொழியாக்கம் தங்கேஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக