முழுமுதற் கடவுள் வினாயகனை வழிபடும் ஒவ்வொரு இந்துவும் இதை முறையாக படித்து பின்பற்றவும்
கணம் களுக்கு அதிபதி கணபதி. கணம் என்பது மக்கள் குழுக்கள்.
வினைகள் தீர்ப்பவர் வினாயகர். மக்களுக்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் அரச மரத்தடி சித்தர்கள் மருத்துவர்கள் புத்தர்கள்.
புத்தரின் 1008 பெயர்களில் இரண்டு இவை.
பார்ப்பானியம் என்பது மக்களுக்குள் வேறுபாடை உண்டுபன்னி ஏற்றதாழ்வை ஏற்படுத்தி ஆட்சி செய்துகொண்டிருந்த நேரத்தில்
புத்தர் அதை எதிர்த்து மக்களுக்குள் ஒற்றுமையை விதைத்தார் நல் போதனைகளை செய்தார் சங்கங்கள் அமைத்து உலகம் முழுவதும் தர்மத்தை போதித்தார்
அவரின் போதனையில் பேரரசனான அசோகர் ஆயுதங்களை தூக்கி எரிந்து போர்களை கைவிடுகிறார் அதைதான் நாம இப்போது ஆயுதபூஜை என்று கும்பிடுகிறோம் என்றும் சொல்லபடுகிறது
அசோகர் இறந்த பிறகு அவரது வாரிசை சூழ்ச்சியால் வீழ்த்தி பார்ப்பனன் அரசனாகிரான்
அவனது ஆட்சியில் புத்தர் சிலைகள் உடைக்கபட்டு புத்தரை கேவலபடுத்த யானைதலையை அதில்வைத்து கேலி செய்கிறார்கள்
புத்தர் சிலையை தண்ணீல் கொண்டு போட்டு அழிக்கிறார்கள்
இது வருடாவருடம் புத்த பூர்னிமா அன்று புத்தரை கேலிசெய்ய ஒரு நிகழ்வாக செய்துவருகிறார்கள்
அப்படி இருந்தும் மக்கள் புத்தபூர்னிமாவை கொண்டாடுவதை கைவிடவில்லை
அதனால் இவர்கள் யானைதலை பொருத்திய புத்தர் சிலையை தண்ணீரில் போட்டு வரும் நிகழ்வை கேலி சம்பவத்திலிருந்து வணங்கும் கடவுள் சம்பவமாக்குகின்றனர் கொண்டாட்டமாக்குகின்றனர் புத்தபூர்மா மக்களிடம் மறக்கடிக்கபட்டு புள்ளையார் சதூர்த்தி நினைவில் ஏறிவிட்டது என்று சொல்லபடுகிறது
புள்ளையார் பிறந்து மூனு நாளுக்கு பிறகு எதுக்கு தண்ணில போட்டு கொலை செய்யனும்னு யாரும் கேட்கபோறதில்லை
புள்ளையாரை கடவுள் என நம்பவைக்க புள்ளையாருக்கு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கதை கட்டபட்டது
பார்வதி தான் குளிப்பதை யாரும் பார்க்காமல் இருக்க காவலுக்காக தனது அழுக்கில் இருந்து புள்ளையாரை உருவாக்கியதாக ஒரு கதை அதில் சிவனை உள்ளேவிடமாட்டேன் என்றதால் புள்ளையார்தலையை வெட்டி விட்டதாகவும் பிறகு யானைதலையை வைத்து திரும்ப உயிர் கொடுத்ததாகவும் அந்த கதை வரும்
இதுல பார்வதி அழுக்கை எடுத்ததுக்கு பிறகு எதுக்கு குளிக்கனும்னல்லாம் கேள்வி கேக்க கூடாது முன்னாடியே பிறந்த முருகன் பின்னாடி அழுக்குருண்டையான புள்ளையாருக்கு எப்படி தம்பியாவான்னும் கேக்க கூடாது அப்புரம் சாமி கண்ண குத்திடும்
இன்னொரு கதை பார்வதி வயித்துக்குள்ள புள்ளையார் இருக்கும்போதே ஒரு மாய அரக்கன் வந்து குழந்தை தலையை கிள்ளி எரிந்ததாகவும் அதனால் யானைதலையை வைத்ததாகவும் ஒரு கதைவரும்
புத்தர்தான் புள்ளையாராக்கபட்டார் என்பதற்கு இன்னொரு விஷயம் போதிமரத்தடியில் ஞனம்பெற்ற புத்தன் என்பதால் புத்தன் சிலைகள் அரசமரத்தடியில் வைக்கபட்டது போதிமரம்னா அரசமரம் இப்போது புள்ளையார் சிலைகள் அரசமரத்தடியில் இருக்கின்றன
புளையார் சதுர்த்தி வட இந்தியாவில்தான் அதிகம் கொண்டாடபடும் அது புத்தர்களை கேலி செய்யும் நிகழ்வாக இருந்து பிறகு கடவுளாக்கபட்டு தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக மக்களை கலவரம் செய்யும் அரசியலுக்காக பெருமளவில் கொண்டாடபடுகிறது
கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக தென்னிந்தியாவிலும் பரவிவருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக