சனி, 14 செப்டம்பர், 2019

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் -15


அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15.

திராவிடக் கழகத்தின் தலைவராக பெரியாரும், தளபதியாக அண்ணாவும் இருந்து கட்சியை வளர்த்தனர்.

இந்த நேரத்தில் பெரியார் மணியம்மை திருமணத்தினால் அண்ணா பெரியார் உறவு முறிந்தது.

தி.மு.கழகத்தை அண்ணா தொடங்கினார்.புதிதாக அமைக்கப்பட்ட தி.மு.கழகம் வளருமா என்று சந்தேகப்பட்டவர்கள், பலர்.

குறிப்பாக காங்கிரஸ்காரர்கள், எதிர்காலத்தில் தி.மு.கழகம் பலம் மிக்க ஒரு எதிர்ப்பு சக்தியாக விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

அதற்கு அண்ணாவின் பேச்சும் எழுத்தும்தான் காரணம் என்றால் மிகையல்ல்.!

குறிப்பாக அண்ணா பேசும் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடினர். எதுகை மோனையுடன் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள், மக்களை மயக்கின.

"தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்", "மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்தவர்" என்று புகழ் பெற்றார். .

சிறுவயதில் அண்ணாவுக்குப் படிப்பில் அதிக ஆர்வம் இல்லை. விளையாட்டில் அதிக நாட்டம் செலுத்தினார்.

அதன் விளைவாக, அண்ணா எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் தேறவில்லை. பிற்காலத்தில் பெரிய மேதையாகத் திகழ்ந்த அண்ணா, எஸ். எஸ்.எல்.சி. பரீட்சையை மூன்று முறை எழுத நேரிட்டது என்றால், நம்பமுடியவில்லை அல்லவா? எஸ்.எஸ்.எல்.சி. தேறியதும், பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார்.

கல்லூரியில் படிக்கும் போதே, பட்டிமன்றங்களில் பங்கு கொண்டார். அவருடைய பேச்சுத்திறமை அப்போதே வெளிப்பட்டது.

பி.ஏ.ஆனர்ஸ் (எம்.ஏ) பரீட்சையில் தேறினார். பட்டம் பெற்ற பிறகும் நூல்கள் படிப்பதை அண்ணா நிறுத்தவில்லை. இலக்கியங்கள், வரலாறுகள், புராணங்கள் அனைத்தையும் படித்தார். பேரறிஞராக உருவானார்.

அண்ணாவுக்கு 1930 ம் ஆண்டில் திருமணம் நடந்தது. . அதனால், வேலை தேடி அலைந்தார். பாரிமுனை அருகில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது.

ஆனால், சுதந்திர மனப்பான்மை உடைய அண்ணா, 4 மாதங்களுக்கு மேல் அந்த வேலையில் நீடிக்கவில்லை.

இந்த நேரத்தில், அரசியல் பக்கம் அவர் கவனம் திரும்பியது. நீதிக்கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

நீதிக்கட்சியின் பெரிய தலைவர்களுக்குத் தமிழில் நன்றாக பேசவராது. ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்.

அவர்களுடைய பேச்சை தமிழில் மொழி பெயர்ப்பார், அண்ணா. அவருடைய மொழிபெயர்ப்பின் அழகைக்கண்டு, தலைவர்கள் பிரமித்தனர்.

அண்ணாவின் புகழ் தமிழ்நாடெங்கும் பரவத் தொடங்கியது.

இந்நிலையில் திருப்பூரில் நடந்த இளைஞர் மாநாடு ஒன்றுக்கு, அண்ணா சென்றிருந்தார். அந்த மாநாட்டுக்குப் பெரியாரும் வந்திருந்தார்.

அந்த மாநாட்டில்தான் இருவரும் முதன் முதலாகச் சந்தித்துக் கொண்டனர்.

அண்ணா, பெரியாரின் சீடரானார். நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற "விடுதலை" பத்திரிகையின் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

அதில் அண்ணா எழுதிய கட்டுரைகள், அவர் புகழை மேலும் உயர்த்தின. 1944 ல் சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடந்தது.

நீதிக்கட்சி தலைவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுவதையும், ஆங்கிலேயர்களுடனேயே உறவாடி வருவதையும் வெள்ளையர்கள் கொடுத்த "சர்" "ராவ் பகதூர்" போன்ற பட்டங்களைப் பெருமையோடு சுமப்பதையும் கண்டு மனம் நொந்தார்.

ஆங்கிலேயர் கொடுத்தப் பட்டங்களைத் துறக்க வேண்டும் என்றார்.

பெயருக்குப்பின்னால் சாதிப் பெயர் போட்டுக்கொள்வதை நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கைச் சட்டம், சுயமரியாதை திருமணச் சட்டம், உலகத் தமிழ் மாநாடு என குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா.

வியாழன், 5 செப்டம்பர், 2019

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட் வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகிறேன்

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும்
 காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.

1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.

2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
நிற்கும்.

3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
 லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?

4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.

5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?

6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?

7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?

8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.

9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.

10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
---------------------------------------------
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...

பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...

ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் ...

"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ...

கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்...!

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!

உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!

ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...

புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ...

குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....

நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா....

நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.

ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..

20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...

சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...

இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .

சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...

ஹெல்மெட்_அணிவதால். ...
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..

கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது...

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே...

வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...

இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்....

இந்த பதிவை ஏற்றுக்கொள்பவர்கள்
முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..!

முதலுக்கே மோசம் வந்துவிட்டது.

முதலுக்கே மோசம் வந்துவிட்டது. இந்திய பொருளாதாரத்தின் ஆணி வேரான RBIன் பணத்தில் கை வைத்து விட்டார்கள். Surplus amount Transfer to Government என்ற பெயரில் 1.76லட்சம் கோடியை எடுக்கிறார்கள். இதை செய்யவிடாமல் தடுத்த RBI கவர்னர்கள் ரகுராம்ராஜன், உர்ஜித்பாட்டில்க்கு அழுத்தம் கொடுத்து விலக செய்தார்கள். அந்த இடத்தில் Finance அல்லது Economy பற்றி எந்த படிப்போ நிபுணத்துவமோ இல்லாத IAS அதிகாரி சக்திகந்தா தாசை கொண்டுவந்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.

இது RBIன் நம்பகத்தன்மையை குலைத்து மிகப்பெரும் பொருளாதார சீரழிவிற்கு அடிகோல போகிறது. இந்தப் பணத்தை இதற்கு முன்பும் எடுத்திருக்கிறார்கள். ஆனால் அவை உண்மையான  Surplus Amount. சாராசரியாக 50,000 கோடி அளவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுத்தார்கள். மன்மோகன்சிங் காலத்தில் இது சராசரியாக 20,000கோடி மட்டுமே. ஒவ்வொரு வருட Auditing முடிவிலும் இப்படி Surplus பணத்தை அரசுக்கு RBI கொடுப்பதுண்டு. ஆனால் ஒரு போதும் முதலுக்கே மோசமாகும் அளவிற்கு எடுத்ததில்லை.

இந்த பணம் மக்கள் பணம். பல ஆண்டுகளாக சேர்த்து வைக்கப்பட்ட மக்களின் பணம். இது தேசத்திற்கான இன்சுரன்ஸ். பெரும்போர் அல்லது இயற்கை பேரழிவு என்று இதை எடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இந்த அரசின் பொருளாதார தோல்வி மட்டும் இதற்கு காரணம் அல்ல. வரி விலக்கு என்ற பெயரில், வாராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை கார்பொரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்து நடந்த மிகப்பெரிய ஊழலின் எதிரொலி இது.

இதற்கு எதிராக இன்று மக்கள் குரல் கொடுக்காவிட்டால் நாளை இதை தொடர்ந்து செய்வார்கள். வங்கிகள் தங்கள் குறுகியகால டெபாசிட்டிற்கு துளி கூட வட்டி கொடுக்கப்போகாத நிலைக்கு தள்ளப்படும். ஏற்கனவே இது 4%க்கும் கீழாக சென்று வருகிறது. Repo Rateஐ குறைப்பதன் மூலம் FD, RD, PPF நீண்டகால முதலீட்டிற்கும் எந்த பெரிய பலனும் கிடைக்கப்போவதில்லை.

ஆன்மிகம், பக்தி கட்டுரைகளை கொஞ்ச காலம் படிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதாரத்தை  படிக்கத் தொடங்குங்கள். இல்லையென்றால் உங்கள் சேமிப்பும் கைக்காசும் களவாடப் படுவது தெரியாமல் போகக்கூடும். அதே போல பிள்ளைகளை Engineering படிக்க வைக்காமல் Economics, Commerce, Auditing, Accountancy படிக்கவையுங்கள். வீட்டிற்கொரு Engineer தேவையில்லை. ஆனால் பொருளாதாரம் தெரிந்தவர் வேண்டும். அது தான் நாட்டிற்கும், வீட்டிற்கும் உடனடி தேவை.

புதன், 4 செப்டம்பர், 2019

அன்புள்ள ஆசிரியப் பெருமக்களுக்கு, மனம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்.


அன்புள்ள ஆசிரியப் பெருமக்களுக்கு,
மனம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்.

இந்த நாளில் கல்விப் பணியில் அருந்தொண்டாற்றிய மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களை நினைவு கூற விரும்புகிறேன். நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புனே நகரில், பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட பின்தங்கிய, தாழ்த்தப்பட்டச் சமூக மக்களுக்கு கல்வி பயிற்றுவிக்க பூலே முயன்றார்.

பூலே கல்வி கற்க கல்லூரி சென்ற போதே, சிறு வணிகம் செய்துவந்த அவருடைய தந்தையிடம் பணியாற்றிய பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த கணக்காயர் "கல்வி கற்றால் அவன் கெட்டு விடுவான். அவனுக்கு உங்கள் தொழிலைக் கற்பியுங்கள்" என்று போதித்தார். அந்தச் சூழலில் தான் கல்வி கற்று முடித்தது மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கற்பிக்கவும் அவர் முனைந்த போது0அதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நூற்றாண்டுகள் கால வரலாற்றில் நடந்தது போலவே, அவருக்கு எதிராக செயலாற்றிடத் தூண்டியவர்கள் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும், செயலாற்றியவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

அவர் கல்வி கற்பிக்க வாடகை தரப்பட்டிருந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தளராமல் தன் கல்விப் பணியை பூலே தொடர்ந்தார். கல்விக் கூடத்திற்கு செல்லும் வழியில், அவர் மீதும் அவர் மனைவி மீதும் சாலையோரம் இருந்த சாணிகளும், குப்பைகளும் வீசப்பட்டன. இந்தப் பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வை பூலே கண்டுபிடித்தார். பையிலே மாற்று உடையை கொண்டு சென்று வழியில் அருவருப்பான பொருட்கள் வீசப்பட்டு அழுக்காகி விட்ட துணிகளை, வகுப்பறைக்குச் செல்லும் முன்பு மாற்றி, புதிய உடை அணிந்து சென்று கற்பித்தார்.

அந்தப் பொழுதில் அவரைப் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து, கௌரவித்தவர் அந்த மாகாணத்தின் வெள்ளைக்கார கவர்னர்.

இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் கல்வி சென்றடையும் நிலை ஏற்பட்டதற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. பல தியாகங்கள் இருக்கின்றன.

அந்தத் தியாகிகளை நினைவு கூர்ந்து, அருந்தொண்டாற்றும் உங்கள் ஒவ்வொருவரையும் இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன்.

நீங்கள் கற்பிப்பது கல்வியல்ல, ஒடுக்கப்பட்ட சமுதாயம் முன்னேறுவதற்கான போர்ப்பயிற்சி என்ற உணர்வோடு கற்பியுங்கள்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்? என்னென்ன தொழில்கள் இருக்காது ??


GOLDEN AGE COMING SOON?

2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?
என்னென்ன தொழில்கள் இருக்காது ??

நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!

1998ல தொடங்கின kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!
இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்!.

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்,  வாக்மேன், டிவிடி பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும்,  டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்ப LED பல்பு தான்.

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையைவிட திறமையா செயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லணும்னா... சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது... கமிஷனோட...! இல்லீங்களா..?

'Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே மிகப்பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது... என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து... யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...! வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்ல முடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம்தான்!!!!

ஆடிட்டர்கள் வேலையை clear tax.in,  taxman.com போன்ற இணையதளம்!,

டாக்டர்கள் வேலையை Ada app!, 

ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்!, 

கார் விற்பனையை carwale.com, cars24 இணையதளம் !

என சேவை இலவசமாக தருகின்றன.

UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.

நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில்  தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை.

இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்து கொள்ளலாம்.

 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை... கம்ப்யூட்டரே பாத்துக்கும். 'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!

2025ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.
2019 செப்டம்பர் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.

அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா... ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து... ஒரு மிஸ் கால்... இல்ல... SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா... அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும்.
10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும். 

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு  நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை,  நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான்.

எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா...? உங்க நினைப்பை மாத்திக்குங்க... இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்... குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??

*சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?*

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

*விவசாயம்:* இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும். விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு  மாத்திரை தான் உணவு. 

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது... 2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் Clinic_ வைக்கத் தேவையில்லாம, online-ல யே ஒரு op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .

மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.

கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்.

*சந்திக்க தயாராவோம். By எதிர்காலம்  நம் கையில் இல்லை.  கடந்த காலமும் நிகழ்காலமும், நம் கையிலா இருந்தது என்கிறீர்களா?*


நாம் மறந்து போன அந்தக் கால கிராமத்து வண்ணார்கள்..!


நாம் மறந்து  போன  அந்தக் கால கிராமத்து வண்ணார்கள்..!

அந்தக் காலத்தில் சில நாட்களுக்கு ஒருமுறை வண்ணார் வீடு வீடாக வந்து ‘அழுக்கு’ எடுத்துக்கொண்டு போவார்கள்.
 துணிகளையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி..

கழுதை மேல் சுமத்தி குளத்துக்கோ.. கால்வாய்க்கோ..
ஆற்றுக்கோ வெளுக்க எடுத்துக்கொண்டு போவார்கள்..

 சவக்காரம் போட்டு..
உவர் மண் போட்டு வெள்ளாவி வைத்து வெளுத்து.. வெள்ளைத் துணிகளுக்கு நீலம் முக்கி.. வெயிலில் காயப்போட்டு..

எல்லா ஜாதி மதத்துக்காரர் துணிகளையும் அள்ளிக் கட்டி கழுதைமேல் வைத்து வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போவார்கள்..

அதன் பின் அந்தந்த வீட்டுத் துணிகளை அவற்றில் தான் சோரங்கொட்டை சாற்றால் தயாரித்த..

‘வண்ணார் மை’யைக் கொண்டு போட்ட குறியைப் பார்த்து
(ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒவ்வொரு விதமாக குறியீடு போடுவதற்கே ஒரு தனி கோர்ஸ் நடத்தலாம்) தனித் தனியாக பிரித்து..
இஸ்திரி போட்டு.. கட்டி.. வீடுகளுக்குப் போய் கொடுப்பார்கள்..

அதிலும் சில துணிகள் வீடு மாறி போனாலும்..
முத்தம்மா இது கவுண்டர் சட்டை..
இது நம்ம தேவர் துணி என்று திருப்பி அனுப்புவதும் உண்டு..

இதற்குக் கூலியாக சில வீடுகளில் காசு கொடுப்பார்கள்.. சிலர் தானியம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரும் விளைச்சலில் இருந்து நெல்.. சோளம்..
பயறு வகைகளை கொடுப்பார்கள்..

அந்தக் காலத்தில் கொலைக் குற்றவாளிகள்.. கொலை செய்யப்பட்டவர்கள்..
விபத்தில் இறந்தவர்கள் போன்றவர்களை அடையாளம் காண..
அவர்கள் அணிந்திருக்கும் துணிகளில் இருந்த ‘வண்ணான் குறி’ பயன்பட்டது..

வீடுகளில் ‘வண்ணார் கணக்கு’ எழுதுவதற்கென்றே  பழைய நோட்டு ஒன்னு இருக்கும்..

வெள்ளாவி வைத்து வெளுத்த துணிகளுக்கு ஒரு தனி வாசனை உண்டு..

புது புத்தகங்களை உள் பக்கத்தில் முகர்ந்து பார்ப்பதில் கிடைக்கும் ரம்மியமான உணர்வு வெளுத்த துணியை உடுத்திருக்கும்போதும் கிடைக்கும்...

இப்போது அந்த வாசனையை இழந்துவிட்டோம்..

வீட்டில் சுக துக்கம் எது நடந்தாலும் முதல் ஆளாக இருப்பது நம் வண்ணார்கள் தான்..

சில திருமணங்கள் இவர்கள் பார்த்து தான் முடிந்திருக்கும்..

பல வருட பகையும் தீர்த்து வைக்கும்  நாட்டாமையும் இவர்கள் தான்..

அந்த வீட்டில் கொடுத்த திண்பன்டங்களை   இந்த வீட்டு குழந்தை பெரியோர்களுக்கு கொடுக்கும் பேருபகாரிகள்..

முக்கியமான விஷயம்..
எப்பேர்ப்பட்ட கோடீஸ்வர
குழந்தைக்கும் முதல் சோறே வண்ணாத்தி பாத்திர சோறு தான்..

இதையெல்லாம் தாண்டி..
முத்தாய்ப்பாக..
அந்தந்த ஊர் பெரியவர்கள் வண்டி பூட்டி கிளம்பும்போது..

அந்த வீட்டு வண்ணார் தான் தோளில் போடும் துண்டை பெரியவர் கையில் கொடுப்பார்..

வெளுக்க வைத்து   வெளுக்க வைத்து
வெள்ளை மனம் படைத்த மனிதர்+அவரிடம் துண்டு வாங்கி போட்டு சென்றால்  அதிர்ஷ்டம்..
காரிய ஜெயம் என்று ஏட்டில் எழுதாத நம்பிக்கை..!

மொத்தத்தில் நான் சுவாசித்த எனக்கு பிடித்த மறக்க முடியாத மாமனிதர்கள் உறவுகளே..!

திங்கள், 2 செப்டம்பர், 2019

‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு!


‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு!

தமிழகத்தில் பகுத்தறிவு அரசியலில் இருந்த விநாயகர் மற்ற இந்திய பகுதிகளைப் போலவே ஊர்வல அரசியலுக்கு வந்தது 1980களில்தான்.

பேஷ்வா பார்ப்பனர்களின் குடும்ப விழாவாக இருந்த விநாயக சதுர்த்தி அரசியல் வடிவம் எடுத்தது எப்படி?

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் மும்பை. உலக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நவநாகரீக இந்தியப் பெருநகரம். அந்த நகரையே திக்குமுக்காட வைக்கும் நிகழ்வொன்று ஆண்டுக்கு ஒருமுறை வரும். அப்போது ஆர்ப்பரிக்கும் கூட்டம் மும்பை வீதிகளில் வழிந்து நிற்கும். தீபாவளிக்குப் பிறகு இந்தியா முழுக்க கொண்டாடப்படும் ஒரு விழா என்றால் அது விநாயாகர் சதுர்த்திதான். கடந்த அரை நூற்றாண்டுகளில் இந்து அமைப்புகளால்  இந்தியா முழுக்க கொண்டு சேர்க்கப்பட்டுள்ள விநாயகர் ஊர்வலத்துக்கு ஆன்மீக ரீதியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதையும் தாண்டிய காரணம் ஒன்று உள்ளது. அது இந்துத்துவா அரசியல்.

நாடு முழுக்க இந்துத்துவா அரசியலை இந்துக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன்பேரில் அவர்களை ஒன்று திரட்டவும் அறிவிக்கப்படாத ரத யாத்திரையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் இதன் வரலாறு பால கங்காதர திலகருடனும், கடைசி இந்து அரசன் சிவாஜியுடனும் தொடங்குகிறது. விநாயகர் என்றால் மேலான தலைவர் என்று அர்த்தப்படுத்தப் படுகிறது. விநாயகர் அவதரித்த தினத்தை விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

ஒருமுறை சிவன் வெளியே சென்றிருந்த நேரம் பார்வதி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல் காக்க ஒருவரும் இல்லை என்பதால் தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிர் ஊட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளையாகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி நீராடச் சென்றுவிட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவனை உள்ளே செல்ல பிள்ளையார் அனுமதிக்கவில்லை. இதனால் கோபம்கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

நீராடி முடிந்ததும் பார்வதி வெளியே வந்து பிள்ளையார் தலை இல்லாமல் கிடந்த கோலத்தைக் கண்டு ஆவேசமும், கோபமும் கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரை சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் காளியாக உருமாறி தன் கண்ணில்பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார். காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன் தனது கணங்களை  (ஏவலாளிகளை) அழைத்து, வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையை வெட்டி வருமாறு பணித்தார். கணங்கள் வட திசையை நோக்கிச் சென்ற போது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச்சென்று சிவனிடம் கொடுத்தனர். சிவன் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் உடலில் பொருத்தி உயிரூட்டிவிட்டார்.

இதைக் கண்டு சாந்தமடைந்த பார்வதி அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டியணைத்துக் கொண்டார். சிவன் அந்தப் பிள்ளையாருக்கு கணேசன் என்று பெயர் சூட்டி, தனது கணங் களுக்குத் தலைவராக நியமித்தார் என நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடந்தது சுக்கிலபட்ச சதுர்த்தி அன்றாகும். அன்றிலிருந்து இத்தினம் விநாயகர் சதுர்த்தி என்றாகிவிட்டது. இது பிள்ளையாரின் அவதாரக் கதையாகும். விநாயகரின் தோற்றத் துக்கு இதுபோல பல கதைகள் இருக்கின்றன.

அதேபோல விநாயகர் சதுர்த்தி அன்று நடத்தப்படும் ஊர்வலங்களுக்கும் சில தோற்றக் கதைகள் உள்ளன. 16ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சிவாஜி, விநாயகர் சதுர்த்தியை பிரபலமாக்கினார். தங்களுடைய குலதெய்வமான கணபதிக்கு மக்கள் விழா எடுப்பதை மராட்டிய ஆட்சி அதிகாரத்திலிருந்த பேசுவாக்கள் (பார்ப்பனர்கள்) ஊக்கம் கொடுத்தனர். மராட்டிய ஆட்சி வீழ்ச்சியை சந்திக்கும்வரை விநாயகர் சதுர்த்தி விழாக்கள் அங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. இந்த நிலையில் பிரிட்டிசு ஆட்சிக்கு எதிராக பம்பாய் மாநகரில் விநாயகர் சதுர்த்தியை மீண்டும் பிரபலப்படுத்தத் தொடங்கினார் பலகங்காதர திலகர்.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்து தேசியவாதத்தை முன்னிறுத்தி அன்னி பெசண்டுடன் ஹோம்ரூல் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவரான பலகங்காதர திலகர் 1893ஆம் ஆண்டு முதல் பேசுவாக்களின் (பார்ப்பனர்) குடும்ப விழாவாக இருந்த விநாயகர் சதுர்த்தி விழாவை இந்துக்களின் விழாவாக் கினார். பிளேக் நோயைக் கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் நடவடிக்கை எடுத்தபோது பாலங்காதர திலகர் சொன்னவை மிக முக்கியமானது. பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளை கொல்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தது ஆங்கிலேய அரசு. ஆனால் பால கங்காதர திலகரோ எலிகள் விநாயகனின் வாகனம். அவற்றை அழிக்க ஆங்கிலேய அரசு முயற்சிப்பதாக் கூறி இந்துக்களைத் திரட்டினார். இந்துக்களும் திரண்டனர். ஆங்கிலேயரால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. விநாயகனைப் பயன்படுத்திய முதல் அரசியலும், அதற்குக் கிடைத்த முதல் வெற்றியும் அது. அதன்பிறகு விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மீண்டும் மும்பை முழுக்கத் நடைபெறத் தொடங்கியது. இந்து மதத்தின் அடிப்படையில் சிவாஜியும், பேசுவாக்களும் கொண்டாடிய சதுர்த்தியை இந்துத்துவத்தின் கூறுகளோடு திலகர் மறு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த விழாவின் அடிப்படையில் ஊர்வலத்தின் மூலம் இந்துக்களை ஒன்றுபடுத்தி, பிரிட்டிசாரை வீழ்த்தி இந்து ராசுட்டிராவை படைக்க விரும்பியிருந்தார் திலகர். அப்போ திருந்தே விநாயாகர் ஊர்வலம் அரசியலில் வலுவாகக் காலூன்றிவிட்டது. ஆகவே ஒருவகையில் விநாயகருக்கு முன்பே அவரது வாகனமான எலி விநாயகருக்கான அரசியலுக் குள் நுழைந்துவிட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு பம்பாய் மாநகரத்தில் இந்து மத உணர்வோடு மராட்டிய இன உணர்வையும் ஊட்டி வளர்க்க விநாயாகர் ஊர்வலங்கள் பயன்படுத்தப்பட்டன. 1960களின் மத்திய காலகட்டத்தில் மராட்டா மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்தோடு அரசியலில் அடியெடுத்த ஒரு இளைஞன் விநாயகர் ஊர்வலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். அந்த  இளைஞர் உருவாக்கிய அமைப்பு மராட்டாவின் மூலை முடுக்கெல்லாம் விநாயகன் ஊர்வலத்தை எடுத்துச் சென்றது. மராட்டாவை நிர்மாணித்த சிவாஜியின் ஆட்சியை மீண்டும் அமைக்க விரும்பிய அந்த இளைஞன் அதற்காக மிகத் தீவிரமாய் விநாயகர் ஊர்வலத்தை முன்னெடுத்தான்.

கணபதி பாபா மோரியா, கணபதி பாபா மோரியா என்று மும்பையில் அவர் முழக்க மிட்டார். அது மராட்டா எங்கும் எதிரொலித்தது. அந்த இளைஞர் பால் தாக்கரே. அந்த இயக்கம் சிவசேனா. விநாயகர் ஊர்வலங்களின் போதெல்லாம் கொலைகள், கலவரங்கள் அல்லது இறப்புகள் சாதாரண மாகிப் போனது. இசுலாமியர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறிவைத்து தாக்கப் பட்டனர். தமிழர்கள் வாழும் தாராவியும் தப்பியிருக்கவில்லை. எல்லாமும் நடந்துவந்தது. விநாயகர் சதுர்த்தி, சிவாஜி விழா, தசரா போன்ற சிவசேனாவின் முன்னெடுப்புகள் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தன. விநாயகர் ஊர்வலம் நடத்தியவர்கள் மராட்டா கோட்டையைப் பிடித்தனர்.

1995ஆம் ஆண்டில் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில்  வென்று சிவசேனா ஆட்சி யமைத்தது. அதே காலகட்டத்தில் விநாயகர் ஊர்வலங்கள் நாடு முழுவதும் கொண்டாட ஆரம்பமாகியிருந்தன. அதற்கு முன்பும் அது ஒரு இந்து பண்டிகையாக கோவில் சார்ந்து இருந்தாலும், வீதிகள் தோறும் விநாயகன் கொண்டுவரப்பட்டது 1990களில்தான். நாடு முழுவதும் அதே காலகட்டத்தில்தான் பாஜகவும் வளர்ந்து வந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்து சமயத்தில் ஆரம்பம் முதலே விநாயகர் இருந்திருக்கவில்லை. சங்ககால இலக்கியங்கள் எதிலும் விநாயகர் குறித்த குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் பக்தி இலக்கியங்களில் பல பெயர்களில் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் வருகிறது. ஆனால் சங்க இலக்கிய காலங்களில் பவுத்த, சமண மதங்களே கோலோச்சியிருந்தது. அவற்றின் அழிவின் மேல்தான் வைதீக மதங்களான சைவ, வைணவ மதங்கள் பக்தி இலக்கிய காலத்தில் தமிழகத்தில் பரவத் தொடங்கியிருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் அரச மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரின் நினைவாகப் பவுத்தர்கள் கடைபிடித்து வந்த வழிபாட்டை பிள்ளையார் ஆக்கிரமித்திருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. பவுத்தமும், தமிழும் என்ற நூலில் மயிலை சீனி வெங்கடசாமி அரச மர வழிபாட்டை வைதீக மதங்கள் சுவீகரித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அதேபோல் கி.பி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசனான நரசிம்ம வர்மன் இன்றைய மகாராஷ்டிராவில் உள்ள வாதாபி என்ற ஊரை வீழ்த்தியிருக்கிறார். நரசிம்ம வர்மனின் படைத்தளபதியாக இருந்தவரே சிறுதொண்டர். இவர்தான் வாதாபி வெற்றியின் நினைவாக அங்கிருந்து கணபதியைக் கொண்டுவந்து கணபதிச்சுரம் என்ற கோயில் எழுப்பியதாக திருஞானசம்பந்தர் பாடியிருப்பதாகக் கூறுகிறார் தெ.பொ. மீனாட்சி சுந்தரம். சோழர் காலத்தில் வந்தது; பல்லவர் காலத்தில் வந்தது; நாயக்கர் காலத்தில் வந்தது என்று பல பண்பாட்டு ஆய்வுகளை விநாயகர் குறித்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் விநாயகர் நிகழ்காலத்தில் இருக்கிறது.

பெரியார் காலத்திலிருந்தே பெரியார் முன்னெடுத்த இந்துமத எதிர்ப்பு பிரச்சாரங்களில் மற்ற கடவுள்களைக் காட்டிலும் பிள்ளை யாரை அதிகம் தாக்கினார். இராமன் தொடங்கி அனுமன் வரை பலர் குறித்தும் கட்டவிழ்ப்புகள் நிகழ பிள்ளையார் மட்டும்தான் உடைபட்டார். பெரியார் பிள்ளையாரை உடைக்க ஆரம்பித்ததற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளையார் குறித்து விமர்சிக்க ஆரம்பித் திருந்தார். எப்படி இந்துக்கள் எந்த விசயத்தைச் செய்யும் முன்பும் அல்லது மற்ற கடவுள்களை பூஜிக்கும் முன்பும் முதற்கடவுளாக விநாயகரைத் தொழுகிறார்களோ அதேபோலத்தான் பெரியாரும் தனது கடவுள் மறுப்பு பிரச்சாரத் திற்கும், சுயமரியாதை பிரச்சாரத்திற்கும் முதன்முதலில் கையிலெடுத்த கடவுள் விநாயகர்.

“கடவுள்களின் சங்கதி தெரியவேண்டு மானால் முதலில் முதற்கடவுளைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் நன்மையானதாகும். முதற்கடவுளின் சங்கதி இன்னமாதிரி என்று தெரிந்தால், மற்ற கடவுள்களின் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாக இருக்கலாம். ஒரு காரியத்தை ஆரம்பித்தால் முதலில் பிள்ளையார் காரியத்தைக் கவனிக்க வேண்டியது முறை என்று சொல்லப்படுவதால், நாமும் கடவுள்களின் கதையைப் பற்றி விளக்கப்போவதில் முதற் கடவுளைப் பற்றி ஆரம்பிக்க வேண்டியது முறையாகுமன்றோ! இல்லாவிட்டால்  அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக்காரியத்துக்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படும். அன்றியும், சமீபத்தில் பிள்ளையார் சதுர்த்தி ஒன்றும் வரப்போவதால் இந்த சமயம் பொருத்தமானதாகவும் இருக்கலாம். ஆதலால் தொடங்குதும்” என்றுதான் பிள்ளையாரை தமிழகத்து அரசியலுக்கு அழைத்து வந்தார் பெரியார்.

மேலும் விநாயகரின் உருவாக்கத்தை, அதுதொடர்பான புராணக்கதைகளைப் பேசி பகுத்தறிவு இயக்கத்தை வளர்த்தார் பெரியார். இதுதவிர தனது குடிஅரசு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் விநாயகர் உருவாக்கம் தொடர்பாக, விநாயகர் செயல்பாடு தொடர்பாக இருக்கும் புராணக் கதைகள் தொடர்பாக சிலவற்றை மேற்கோள்காட்டியிருப்பார். அப்படியான புராணக் கதைகளை பேசி, எழுதி பிரச்சாரம் செய்த பெரியார் ஒரு கட்டத்தில் பிள்ளையார் சிலைகளை உடைத்தும் விட்டார்.

இதற்கு இந்துத்துவா இயக்கங்களிட மிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் பெரியார், “பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டிய தில்லை, தயக்கப்பட வேண்டியதில்லை. பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மண் பிள்ளையாரை மக்கள் மண்பாண்ட தயாரிப் பாளர்களிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள். அதனுடன் கரைந்து பிள்ளையார் நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக கறைந்துவிடுவது இல்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவது இல்லையா? அதுபோன்ற செய்கைதான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண்ணாக்குவதும். நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை. தொடவில்லை. நாமாக வாங்கி உடைப்பதும் நமக்கு பிள்ளையார் கடவுள் அல்ல; வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது கடவுள் அல்ல; கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை” என்று 1953ஆம் ஆண்டு மே மாதத்தில் விடுதலை இதழில் எழுதினார் பெரியார். 

இப்படி தமிழகத்தில் பகுத்தறிவு அரசியலில் இருந்த விநாயகர் மற்ற இந்திய பகுதிகளைப் போலவே ஊர்வல அரசியலுக்கு வந்தது 1980களில்தான். தமிழகத்து மண்ணில் மதக் கலவரம் என்று  ஒன்றைப் பேச வேண்டுமானால் மண்டைக்காடு கலவரத்தைத் தொடாமல் செல்ல முடியாது. கன்னியாகுமரி யில் இருந்த கணிசமான கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களின் ஜாதியை ஒட்டிய இந்து மக்களுக்கும் இடையிலான தீவிர மதப்பற்று மதக் கலவரமாய் முடிந்திருந்தது.

1982ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலக செப வாரம் ஒருவாரம் அனைத்துக் கிறித்துவர் களாலும் ஒற்றுமையாகக் கொண்டாடப் பட்டது. அதன் இறுதி நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு திங்கள்நகர் வழியாக ஒரு ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தை வரவேற்கும் விதமாகக் கிறித்துவ வணிகர் ஒருவர் ஒளிரும் சிலுவை ஒன்றை திங்கள் நகரின் மையப்பகுதியில் உள்ள போக்குவரத்துக் காவலர் நிழற்குடை அமைந்திருக்கும் திடலில் அமைத்திருந்தார். அந்த ஊர்வலம் முடிந்த பிறகு சிலுவை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இந்து ஒருவர் அவ்விடத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலையை வைத்தார். வழிபாடு நடத்தவும் ஆரம்பித்தார். ஐந்து நாட்கள் கழித்து சிவராத்திரி அன்று காவல் துறையினர் சட்டம் ஒழுங்கைக் காரணம்காட்டி விநாயகர் சிலையை அகற்றினர். இந்துக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்துக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் காவலர்கள் 46 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் இறந்தனர். இந்தக் கலவரம் கல்லுக்கூட்டம், ஈத்தாமொழி, ராசாக்கமங்கலம், பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கும் தீவிரமாகப் பரவியது. இரண்டு வாரங்கள் கழித்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 2 பேர் கொல்லப்பட்டனர். கோவளத் தில் நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப் பட்டார். இந்தக் கலவரத்தில் தேவாலயங்கள், கோவில்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது சொத்துகள் அதிகமாக சேதமடைந்தன.

இக்கலவரத்தால் கடற்கரையோரம் இருந்த மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறுகளில் டீசல் முதலான நஞ்சு கலக்கப்பட்டது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன. மீனவக் கிராமங்கள் சூறையாடப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்வாக இந்தக் கலவரம் அமைந்திருந்தது.

1990களுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பாட்சா படத்திற்குப் பிறகு ரஜினி ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வாகிப்போனது விநாயகர் சதுர்த்தி. குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட சமூகத்தில் அமைப்பாய் திரண்ட எளிய மனிதர்களின் கூட்டு வழிபாடானது விநாயகர் சதுர்த்தி. இதன்பிறகு வீரா படத்தில் தொடங்கி, காலா படம் வரை ரஜினியின் படங்களில் விநாயகர் அவ்வப்போது தலை காட்டி வந்தார். இதுதவிர அஜித்தின் படங்களிலும் அதிகம் முக்கியத்துவம் பெறும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி முன்னிறுத்தப்பட்டது. இது இளைஞர்கள் மனதுக்கு இவ்விழாவை நெருக்கமாக்கியது. இதுமட்டுமில்லாமல் விநாயகரின் இருப்பு தமிழ் சினிமா எங்கும் பரவிக் கிடக்கிறது.

1990களுக்கு முன்பாகவே விநாயகர் பெருமைகள் குறித்த தனி பக்திப் படங்கள் வந்தபோதும் ஜனரஞ்சக படங்களில் அவ்வப்போது விநாயகர் வருவது தமிழர்களின் ஆழ்மனதில் அவருக்கான இடத்தை உறுதி செய்தது. இராமாயணம், மகாபாரதம் எப்படி எழுத, படிக்கத் தெரியாத மக்களிடம் கூட நாடகங்கள் வழியாகக் கொண்டுபோய் சேர்க்கப்பட்டதோ  அதேபோல விநாயகரும் நாடகங்கள் வழியாகக் கொண்டுபோய் சேர்க்கப்பட்டது. 1990களுக்குப் பிறகு வெளிவரத் தொடங்கிய விநாயகர் நாடகங்கள் இன்று வரையில் வார இறுதி நாட்களில் முக்கிய நேர ((Prime Time) நாடகங்களாக இருக்கின்றன. இந்த நாடகங்கள் விநாயகர் மீதான புனித பிம்பத்தைக் கட்டமைத்தது.

வட நாட்டில் சித்தி, புத்தி என இரண்டு மனைவிகளுடன் வலம்வந்த விநாயகர் சிலைகள் தமிழகத்தில் மட்டும் பிரம்மச்சாரியாக வலம் வந்தது. பிறகு சித்தி விநாயகர் கோவில்களும், புத்தி விநாயகர் கோவில்களும் தனித்தனியாக தமிழ்நாட்டுக்குள் நிறுவப்பட்டன. ஆனால் அது தமிழகக் கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாகத் தமிழகத்தில் நிறுவப்பட்ட விநாயகரின் பிரம்மச்சாரிய பிம்பம் வட நாட்டுக்குப் பயணித்து வருவதைக் காணமுடிகிறது. தமிழகத்தில் ராமரைக் கொண்டுபோய் சேர்ப்பதே இன்னும் கடினமாக இருக்கும்போது விநாயகர் எளிதாக சென்று சேர்ந்ததற்கு மிக முக்கியக் காரணம் விநாயகர் குறும்புக் கடவுளாகவும், குழந்தைக் கடவுளாகவும் முன்வைக்கப்பட்டதே.

குழந்தைகளுக்கான கேலிச்சித்திரங்களாக (Cartoon) விநாயகர் மாறிய பிறகு இந்துக் குடும்பங்களில் அசைக்க முடியாத உறுப் பினராகிவிட்டது. விநாயகரைச் சுற்றி வியாபார வளையம் பெருகியது மூலை முடுக்கெல்லாம் விநாயகர் கொண்டுபோய் சேர்க்கப்பட்டதற்கு மற்றொரு காரணம். மற்ற கடவுள்களைப் போல ஒரு கட்டுக்குள் அடங்குவதாக இல்லாத பிள்ளையார், அனுமனைப்போல கலைஞர் களின் கற்பனைக்கேற்ப பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்படுகிறது. மட்டைப்பந்து விளை யாடும் பிள்ளையார் முதல் கணினி பிள்ளையார் வரை இன்றைய சூழலுக்குப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்படுவதால் அனைவரும் கொண்டாடத் தொடங்கி யுள்ளனர்.

சாவிக் கொத்துகளில், சிறிய எண்முறைப் படங்களில் (Emoji) சிறு பொம்மைகளாக வலம் வரத்தொடங்கியிருக்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி சமயங்களில் சிலை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார மூலமாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் நாம் மற்றொன்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். 1990களுக்குப் பிறகு நாடு முழுவதும் சங் பரிவாரங்கள் விநாயகர் சதுர்த்தியை மக்களிடம் கொண்டு சேர்த்தன. அதில் தமிழகத்தில் பெரும்பங்கு வகித்தவர்கள் இந்து முன்னணியினர். மாநிலம் முழுக்க அநேக இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினர்.

குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கும் விநாயகர் சிலைகளைக் கொண்டு சேர்த்தனர். பெரும்பாலும் பட்டியலின இளைஞர்கள்தான் விநாயகர் சிலை ஊர்வலங்களை, சிலை கரைப்பை செய்கின்ற சூழல் உருவாகியிருக்கிறது. அதேநேரம் ஜாதி கடந்து மத மோதல் அல்லது பிரச்சினையாகவும் வளர்ந்து நிற்கிறது விநாயகர் சிலை ஊர்வலங்கள். இசுலாமிய பகுதிகளை விநாயகர் சிலை ஊர்வலங்கள் கடக்கும்போது காவல் துறையின் நிலைமை கவலைக்குரியதாக மாறுகிறது. புகைந்து கொண்டிருக்கும் புதர் போல எப்போது வேண்டுமானாலும் பற்றி எரியும் பிரச்சினையாகவே இது இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் தாண்டி சுற்றுச் சூழல் பிரச்சினையும் இதில் முக்கியமானதாக எழுந்துள்ளது. மும்பை மாநகரில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. கடல் வளம் பாதிக்கப்படுதலும், கரைந்தும் கரையாமலும் இருக்கும் சிலைகளை அப்புறுப்படுத்துவதும் மும்பை மாநகராட்சிக்குப் பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. அதை சரிசெய்ய மராட்டிய அரசும், அம்மாநில உயர் நீதிமன்றமும் கட்டுப்பாடுகளை விதிக்க முனைந்தபோது சிவசேனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த மாதம்கூட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து நீதிமன்றமும், அரசும் தலையிட வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.

பாஜக அரசுதான் என்றோ நீதிமன்றம் என்றோ சிவசேனா கட்டுப்படவிரும்பவில்லை. ஏறத்தாழ அனைத்து இந்துத்துவ அமைப்பு களின் நிலைப்பாடும் இந்த விவகாரத்தில் இதுதான். விநாயகர் சிலை வைக்கப்படுவதும், அதன் ஊர்வலமும் இந்துத்துவ அரசியலைப் பரப்புவதற்கும்,  இந்து மயமாக்குவதற்கும், இது இந்துக்களின் நாடு என்று முழங்குவதற்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இன்னொருபுறம் விநாயகர் சதுர்த்தி நடுத்தர வர்க்கத்தின் கலாச்சார விழாக்களில் ஒன்றாகி விட்டது. சுண்டலும், கொழுக்கட்டையும் விநாயகர் சதுர்த்தியின் பிரதானமான அடையாளமாகவும் இருக்கிறது. ஆனால் சுண்டலும், கொழுக்கட்டையும் மட்டுமே அதன் அடையாளமாக இருக்கப் போவதில்லை.
நன்றி: கீற்று.

ஜெ.மறைந்து 1000 நாட்கள் ஆகியும் விலகாத மர்மங்கள்.


ஜெ.மறைந்து 1000 நாட்கள் ஆகியும் விலகாத மர்மங்கள்.

தமிழ்நாட்டின் முன்னால் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மர்மமான முறையில் மறைந்து ஆயிரம் நாட்கள் கடந்துவிட்டது. ஆனாலும் அவர் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகாத நிலையிலேயே உள்ளது.

ஜெ. மறைந்த போது அவரது சிகிச்சை தொடங்கி, அடக்கம் வரை உள்ள அத்தனை சந்தேகங்களையும் ஆதாரங்களுடன் நக்கீரன் வெளிக் கொண்டு வந்தது. அதனால் அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமின்றி எதிர்கட்சி தலைவர்களும் ஜெ. மரணத்தில் மர்மம் உள்ளது என்றனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க ஆட்சி அமைக்கும்போது முதல் கையெழுத்து ஜெ. மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டுபிடிப்பதே என்று மேடைக்கு மேடை பேசி வந்தார்.

நக்கீரன் அட்டைப்படம் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ.பி.எஸ். ஜெ. மரணத்தில் மர்மம் உள்ளது என்று தர்மயுத்தம் தொடங்கினார். இப்படி பலரும் சந்தேகங்களை கிளப்பினார்கள். நீதியரசர் ஆறுமுகசாமி கமிசன் உண்மையை வெளிக் கொண்டு வரும் என்று எடப்பாடி அரசு சொன்னது.   ஆனால் 1000 நாட்கள் கடந்துவிட்டது.  என்ன உண்மை வெளிக் கொண்டு வந்தார்கள்? இப்படித்தான் அ.தி.மு.க வின் அடிமட்டத் தொண்டர்கள், ஜெ விசுவாசிகள் கேட்கிறார்கள்.

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் நெவளிநாதன் வெளி்ப்படையாகவே பேசினார்..

அம்மாவின் மரண முடிச்சு அவிழாவிட்டால்.... அதிமுக அழிந்து போகும் ! என்று தொடங்கியவர்.. தொடர்ந்து.. என்னை பொருத்தவரை அம்மா இறந்த பொழுது அதில் எந்த மர்மமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை, காரணம் அம்மா அவர்களின் அறிவு,  ஆற்றல் மீது எனக்கு இருந்த நம்பிக்கை.

எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க என்ற இந்த இயக்கமே இருக்காது என எல்லோரும் நம்பிய நிலையில் அனைத்தையும் பொய்யாக்கி எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு இந்த இயக்கத்தை இரும்பு கோட்டையாக  நிர்வகித்து அவர் தலைமையில் 7 முறை தேர்தலை சந்தித்து அதில் 4 முறை அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தியவர் அம்மா அவர்கள்.

இப்படி தான் தலைமையேற்ற கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தவர் தனக்கான சூழலையும் சரியாகத்தானே வைத்து இருப்பார் என என்னை போலவே நிறைய தொண்டர்கள் நம்பினோம் .  ஆனால் அடுத்த சில நாட்களில் கட்சியின் மூத்த தலைவர்களான முனுசாமி, ராஜ.கண்ணப்பன் உள்ளிட்ட தலைவர்களும் அம்மாவின் அண்ணன் மகள் தீபா போன்றவர்கள் எழுப்பிய சந்தேகங்கள், நக்கீரன் ஆதாரங்களுடன் எழுப்பிய சந்தேகங்கள் என்னைப் போன்ற தொண்டர்களை ஒரு குழப்ப நிலைக்கு கொண்டு சென்றது. அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்குமோ என்கிற எண்ணம் ஏற்பட தொடங்கியது .

இப்படி எல்லோரும் ஒரு சந்தேகத்தை சுமந்து நின்ற வேலையில் சந்தேகமே வேண்டாம் அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என கூறி ஓ.பி.எஸ் அம்மா சமாதியில் அமர்ந்தார். அதன் பிறகு உலக அளவில் அம்மாவின் மரணத்தில் ஏதோ சதி இருக்கிறது என எல்லோரும் உறுதியாக நம்ப தொடங்கிவிட்டனர்.  ஓபிஎஸ் -ன் கூற்று சரிதான் என்பதை போல் ஆட்சிக்கு தலைமை ஏற்று இருக்கும் இபிஎஸ் அவர்கள் ஓபிஎஸ் அவர்களின் இரண்டு முக்கிய கோரிக்கைகளையும் ஏற்று சசிகலா குடும்பத்தை வெளியேற்றி,  அம்மா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார். ஆறு மாதத்தில் அம்மா அவர்களின் மரணம் குறித்து முழு உண்மையும் தெரிந்து விடும் என உலமே நம்பிய நிலையில் இன்று ஆயிரம் நாட்கள் ஆகியும் எந்த மர்மமும் விலகவில்லை என்பது என்னை போன்ற லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது .

குறிப்பாக  அம்மாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் தற்போது அது குறித்து மறந்து விட்டாரோ என தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் அம்மாவின் மரணத்திற்கு நீதி கேட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று வாய் மூடி மவுனியாக இருப்பதை தொண்டர்கள் ரசிக்கவில்லை சந்தேகிக்கிறார்கள். இதில் விரைவில் ஒரு முடிவை சொல்லாவிட்டால் தொண்டர்களுக்கு இன்றைய தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும் அதன் தொடர்சியாக கட்சியும் கரைந்து விடும். எம்.ஜி.ஆரும், அம்மாவும் கட்டிக்காத்த இரும்பு கோட்டையில் ஓட்டை விழலாம்.

அம்மா அவர்கள் தன் மரணத்திற்கு பிறகும் இந்த கட்சி ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேண்டும் என விரும்பினார்.  ஆனால் அவரின் மரண மர்மமே இந்த கட்சியை அழித்து விடுமோ என பயமாக இருக்கிறது.

மாநிலத்தில் நம் ஆட்சி, மத்தியில் நமக்கு ஆதரவான ஆட்சி.. பிறகு ஏன் விசாரணை தாமதம்? இதன் உண்மை தன்மை வெளிவருவது யாருக்கு பிடிக்கவில்லை? யாரை பாதுகாக்க இந்த தாமதம்? இப்படி பல கேள்விகளை சுமந்தே என்னைப் போன்ற அ.தி.மு.க தொண்டர்கள் ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டியுள்ளது என்றார்.

ஜெ. வின் மரணத்தில் உள்ள சந்தேகங்க முடிச்சுகளை அவிழ்க்க ஆயிரம் நாட்கள் போதவில்லையா? அவிழ்த்தால் வேறு பூதங்கள் கிளம்பும் என்பதால் ஆட்சியாளர்கள் அவிழ்க்க நினைக்கவில்லையா? மாற்றுக்கட்சி ஆட்சி வந்தால் தான் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா? என்ற தொண்டர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் இடத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் எடப்பாடி – ஓ.பி.எஸ் தான் பதில் சொல்ல வேண்டும்.

முழுமுதற் கடவுள்* வினாயகனை வழிபடும் ஒவ்வொரு இந்துவும் இதை முறையாக படித்து பின்பற்றவும்


முழுமுதற் கடவுள் வினாயகனை வழிபடும் ஒவ்வொரு இந்துவும் இதை முறையாக படித்து பின்பற்றவும்


கணம் களுக்கு அதிபதி கணபதி. கணம் என்பது மக்கள் குழுக்கள்.

வினைகள் தீர்ப்பவர் வினாயகர். மக்களுக்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் அரச மரத்தடி சித்தர்கள் மருத்துவர்கள் புத்தர்கள்.

புத்தரின் 1008 பெயர்களில் இரண்டு இவை.

பார்ப்பானியம் என்பது மக்களுக்குள் வேறுபாடை உண்டுபன்னி ஏற்றதாழ்வை ஏற்படுத்தி ஆட்சி செய்துகொண்டிருந்த நேரத்தில்

புத்தர் அதை எதிர்த்து மக்களுக்குள் ஒற்றுமையை விதைத்தார் நல் போதனைகளை செய்தார் சங்கங்கள் அமைத்து உலகம் முழுவதும் தர்மத்தை போதித்தார்

அவரின் போதனையில் பேரரசனான அசோகர் ஆயுதங்களை தூக்கி எரிந்து போர்களை கைவிடுகிறார் அதைதான் நாம இப்போது ஆயுதபூஜை என்று கும்பிடுகிறோம் என்றும் சொல்லபடுகிறது

அசோகர் இறந்த பிறகு அவரது வாரிசை சூழ்ச்சியால் வீழ்த்தி பார்ப்பனன் அரசனாகிரான்

அவனது ஆட்சியில் புத்தர் சிலைகள் உடைக்கபட்டு புத்தரை கேவலபடுத்த யானைதலையை அதில்வைத்து கேலி செய்கிறார்கள்

புத்தர் சிலையை தண்ணீல் கொண்டு போட்டு அழிக்கிறார்கள்

இது வருடாவருடம் புத்த பூர்னிமா அன்று புத்தரை கேலிசெய்ய ஒரு நிகழ்வாக  செய்துவருகிறார்கள்

அப்படி இருந்தும் மக்கள் புத்தபூர்னிமாவை கொண்டாடுவதை கைவிடவில்லை

அதனால் இவர்கள் யானைதலை பொருத்திய புத்தர் சிலையை தண்ணீரில் போட்டு வரும் நிகழ்வை கேலி சம்பவத்திலிருந்து வணங்கும் கடவுள் சம்பவமாக்குகின்றனர்  கொண்டாட்டமாக்குகின்றனர் புத்தபூர்மா மக்களிடம் மறக்கடிக்கபட்டு புள்ளையார் சதூர்த்தி நினைவில் ஏறிவிட்டது என்று சொல்லபடுகிறது

புள்ளையார் பிறந்து மூனு நாளுக்கு பிறகு எதுக்கு தண்ணில போட்டு கொலை செய்யனும்னு யாரும் கேட்கபோறதில்லை

புள்ளையாரை கடவுள் என நம்பவைக்க புள்ளையாருக்கு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கதை கட்டபட்டது

பார்வதி தான் குளிப்பதை யாரும் பார்க்காமல் இருக்க காவலுக்காக தனது அழுக்கில் இருந்து புள்ளையாரை உருவாக்கியதாக ஒரு கதை அதில் சிவனை உள்ளேவிடமாட்டேன் என்றதால் புள்ளையார்தலையை வெட்டி விட்டதாகவும் பிறகு யானைதலையை வைத்து திரும்ப உயிர் கொடுத்ததாகவும் அந்த கதை வரும்

இதுல பார்வதி அழுக்கை எடுத்ததுக்கு பிறகு எதுக்கு குளிக்கனும்னல்லாம் கேள்வி கேக்க கூடாது முன்னாடியே பிறந்த முருகன் பின்னாடி அழுக்குருண்டையான புள்ளையாருக்கு எப்படி தம்பியாவான்னும் கேக்க கூடாது அப்புரம் சாமி கண்ண குத்திடும்

இன்னொரு கதை பார்வதி வயித்துக்குள்ள புள்ளையார் இருக்கும்போதே ஒரு மாய அரக்கன் வந்து குழந்தை தலையை கிள்ளி எரிந்ததாகவும் அதனால் யானைதலையை வைத்ததாகவும் ஒரு கதைவரும்

புத்தர்தான் புள்ளையாராக்கபட்டார் என்பதற்கு இன்னொரு விஷயம் போதிமரத்தடியில் ஞனம்பெற்ற புத்தன் என்பதால் புத்தன் சிலைகள் அரசமரத்தடியில் வைக்கபட்டது போதிமரம்னா அரசமரம் இப்போது புள்ளையார் சிலைகள் அரசமரத்தடியில் இருக்கின்றன

புளையார் சதுர்த்தி வட இந்தியாவில்தான் அதிகம் கொண்டாடபடும் அது புத்தர்களை கேலி செய்யும் நிகழ்வாக இருந்து பிறகு கடவுளாக்கபட்டு தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக மக்களை கலவரம் செய்யும் அரசியலுக்காக பெருமளவில் கொண்டாடபடுகிறது

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக தென்னிந்தியாவிலும் பரவிவருகிறது.